Loading

அத்தியாயம்-39

 

“மத்த ரெண்டைக் காட்டிலும் இது ரொம்ப ஈசியா இருக்கு” என்று மதியிடமிருந்து வாங்கிய தாளைப் படித்த இளநகை கூற, 

 

தானும் அவளருகே சென்று பார்த்த துருவன், “ஏ ஆமாடி.. ஆனா இதுபடி நாம போகும்போது கஷ்டமா இருக்கும்னு நினைக்குறேன். க்ளூ ஈஸினுலாம் இந்த ப்ரைட்நெஸ் மண்டையன நம்பிட முடியாது” என்றான்.

 

“ம்ம்.. உண்மை தான் துருவ்..” என்று இளநகை கூற, 

 

“பிணியறியா விருட்சம்

ஒன்றே கொண்ட சிகரத்து,

ஊடுறுவு பாதை சேர,

கோடுகளைக் கண்டறிக.

ஒளியுள்ள பாதைதனை

ஒலிகொண்டு அறிந்திடவே,

பார்கரன் துணை புரிய,

அடுத்த துப்பு கிட்டிடுமே!” என்று துருவன் வாசித்தான்.

 

“பிணியற்ற விருட்சம்னா ஆலிவ் ட்ரீஸ். ஆலிவ் க்ரீன் பத்தி தெரிஞ்சுக்க போகும்போது இந்த ஆலிவ் ட்ரீஸ் பற்றிக் கண்ணுல பட்டுப் படிச்சிருக்கேன்” என்று ப்ரியா கூற, 

 

மனைவி தோளைச் சுற்றி கரம் போட்ட விஷ், “பாரேன்! அறிவாளி பொண்டாட்டி” என்றான்.

 

“ஹலோ.. போதும்” என்ற இளநகை, “ஓகே க்ளூக்கு வருவோம்.. சிகரம்னா..” என்று முடிக்கும் முன், 

 

“மலை” என்று துருவன் கூறினான்.

 

அவனைக் கண்டு சிரித்தவள், “கரெக்ட்.. அப்ப ஆலிவ் ட்ரீ மட்டுமே இருக்கக்கூடிய மலையோடு ஊடுறு பாதை..” என்று அவள் முடிக்கும்முன், 

 

“குகை” என்று மதி மற்றும் அகர்ணன் ஒன்றுபோலக் கூறி தங்கள் கைகளைத் தட்டி ‘ஹை-ஃபை’ போட்டுக் கொண்டனர்.

 

“வாரேவா! கலுக்குறீங்க” என்று குதூகலம் அடைந்த இளநகை, “அந்தக் குகைய ஏதோ கோடுகள் வச்சு கண்டுபிடிக்கனும் போல.. ஒலி வச்சு ஒளிய கண்டுபிடிக்கனும்னா என்னது?” என்று யோசித்தாள்.

 

கைத்தட்டி அனைவரையும் அழைத்த அகநகை, கைகளைச் சுருக்கி, தன் சட்டையைத் தொட்டுக்காட்டி காதில் கரம் குவித்து கேட்பதைப் போல் செய்தாள்.

 

“கம்மியான சட்டைக்குக் காது கேட்காதா? என்ன எழவுடி இது?” என்று ஜான்விகா அவள் சைகை வைத்துத் தான் புரிந்து கொண்டதைக் கேட்க, 

 

தன் தலையில் அடித்துக் கொண்ட அகநகை, காதில் கேட்பது போல் கைவைத்து கைகளில் அலைகள்போல் அபிநயம் பிடித்தாள்.

 

“சவுண்ட் ரிஃப்லக்ஷனா?” என்று இம்முறை ஜான்வி சரியாகக் கூறிட, 

 

ஆமென்று தலையாட்டிய அகநகை, ‘சிறிய’ என்பதுபோல் சைகை செய்து வானவில் போல் காற்றில் வரைந்து காட்டினாள்‌.

 

“எஸ்! ஐ காட் இட்..” என்ற இளநகை, “லைட் கலர்ஸ் சவுண்ட நல்லா ரிஃப்லக்ட் பண்ணும். அப்ப குகைல லைட் கலர் இருக்குற இடத்தைச் சத்தம் வச்சு கண்டுபிடிச்சு போகனும்” என்று கூற, 

 

“யூ ஆர் ஸோ டாலென்டேன் இளா. சூப்பர்” என்று துருவன் கூறினான்.

 

தற்போது அனைவருமே “ஹலோ.. போதும்” என்று அவர்களை வம்பு செய்ய, 

 

அதில் ஏனோ ஆண் பெண் இருவருக்கும் வெட்கம் தொற்றிக் கொண்டது.

 

ஒருவரை ஒருவர் கடைக்கண்ணில் பார்த்துச் சிரித்துக் கொள்ள, 

 

“சரிசரி அடுத்தென்ன இருக்கு?” என்று ஜான்விகா கேட்டாள்.

 

“ம்ம்.. அடுத்து பார்கரன் துணை கொண்டு துப்பு அறிக..‌ அதாவது சூரியனை வச்சு க்ளூவ கண்டுபிடிக்கனுமாம்” என்று இளநகைக் கூற, 

 

“சரி மதி.. முதல்ல உன் டெடிபேர கூப்பிடு. அந்த மலைக்கு வழி கேட்போம்” என்று விஷ்வேஷ் கூறினான்.

 

சரியென்று தானும் தனது கரடியை அழைத்த மதி அம்மலைக்கான வழியைக் கேட்க, கரடியும் அவர்களுக்கு வழிகாட்டி முன் சென்றது.

 

அனைவரும் முன்னே நடக்க, இளநகை மற்றும் துருவன் மட்டும் பின்தங்கி நடந்தனர். 

 

கையில் உள்ள காகிதத்தைக் கொண்டு அவர்களுக்கிடையே பேச்சு வார்த்தைகள் சாதாரணமாய் போக, அவ்வப்போது பேச்சினூடே வேறு பக்கமும் அவர்கள் பேச்சு வட்டம் சென்று மீண்டது.

 

அதில் ஏதோ தோன்ற, “துருவ்.. அ.. அன்னிக்கு காட்ஸ் விளையாடும்போது உங்கள எல்லாரும் கலாய்ச்சாங்களே.. நிஜமாவே நீங்க லவ் பண்றீங்களா?” என்று இளநகை வினவ, 

 

ஆடவன் திடுக்கிட்டுப் போனான். இப்படி அவள் திடீரென்று இக்கேள்வியைக் கேட்கக் கூடுமென்று அவன் நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை.

 

‘இல்லை அது பொய்’ என்று அவளிடமே தனது காதல் இல்லையென்று கூறவும் மனம் வரவில்லை, ஆமென்று கூறினால், தன்னை வேறொருவரின் மணாளன் என்ற எண்ணத்தில் நிறுத்திடுவாளோ என்ற பயத்தில் ஆமென்றும் கூற இயலவில்லை!

 

அவனது திருதிரு விழியைக் கண்டு என்ன நினைத்தாளோ? அவனை சங்கடப்படுத்தக் கூடாதென்ற முனைப்போடு, “சரி அதை விடுங்க. லவ் பத்தி உங்க ஒப்பீனியன் என்ன?” என்று அவள் கேட்க, 

 

அவளைக் காதலாய் பார்த்தான்.

 

பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களும் தனக்கு வரப்போகும் பெண்ணிடம் சில எதிர்ப்பார்ப்புகள் வைத்திருப்பர். அதில் ஒன்று, தான் கூறாமல் தன்னை அவள் புரிந்துகொள்ள வேண்டும் என்பது.. அது எல்லா முறையும் நடந்திடாது என்றாலும் அவை நடக்கும்போது எழும் உவகைக்குதான் இணையேயில்லை. தனக்கு பதில் கூற விருப்பமில்லை என்பதை புரிந்துக் கொண்டு அவளே வேறு விடயத்திற்கு சென்றது அவனுக்குச் சற்று நிம்மதியாகவும் சந்தோஷமாகவுமிருந்தது. மானசீகமாக தன் மனையாளுக்கு அன்பு நன்றிகளைக் கூறிக் கொண்டான்.

 

“ஹலோ.. என்ன துருவ்.. ட்ரீம்ஸா?” என்று அவள் கையசைக்க, 

 

அதில் சிரித்தவன், “என்ன நினைக்குறீங்கனா என்ன சொல்ல?” என்றான்.

 

“ஒரு புத்தகம் எழுத்தாளரோட ஒரு கருத்துல தான் உருவாகும். ஆனா வாசகர்களோட கற்பனையில் அது வெவ்வேறு வண்ணம் பெற்று மாறுபடும். அப்படிதான் இந்தக் காதலும்… என்னைக் கேட்டா நான் டோபமைன், வாஸ்ப்ரஸின், ஆக்ஸிடோஸின்னு ஹார்மோன்ஸை தான் கைக்காட்டுவேன்” என்று அவள் முடிக்கும் முன், 

 

“ஏன்? ஏன்? காதலுக்கு உணர்வு சுரப்பிகளை மட்டுமா காரணம்னு சொல்லுவ? யூ திங்க் இட்ஸ் ஆல் பிகாஸ் ஆஃப் ஹார்மோன்ஸ் வன்லி?” என்றான்.

 

“ஹ்ம்.. எனக்குக் காதல் கத்தரிக்காயெல்லாம் தோன்றியதில்லை. ஒரு விஷயத்தைப் பத்தி யோசிச்சா தானே நம்பிக்கை இருக்கு இல்லைனு சொல்ல முடியும். காதலே இல்லையானுலாம் இல்லை.. எனக்குக் காதல் இருக்கு.. காதலரும் இருக்கு” என்று அவள் கூற, 

 

அவன் அழகான புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.

 

“என்னப்பா? ஷாக் ஆக மாட்றீங்க?” என்று அவள் கூற, 

 

“என்ன? மெடிகல் ஃபீல்ட் தானே உன் லவ்?” என்று புன்னகையுடன் கேட்டான்.

 

“வாரேவா.. எப்படி துருவ்..” என்றவள், “ஆமா.. அதுதான் என்னோட லவ்..‌ ரத்தம், கத்தி, நரம்பு, சுரபி இதெல்லாம் பார்த்துப் படித்து என்னோட தாட்ஸும் அதுகூடவே பயணிக்குது போல.. அதனால லவ் பத்தி எதும் ஃபீல் பண்ணதில்ல.. அப்படியே லவ்வுக்கானதா எதாவது கேள்விப்பட்டாக்கூட அதுவும் எனக்கு என்னோட மெடிகல் ஃபீல்ட் கூடயும், அதன்மீதான என்னோட ஈடுபாடு கூடவும் தான் கனெக்ட் ஆகும்” என்று அமைதியாய் கூறிக் கொண்டே வந்து அவ்விடத்தில் ஆர்வத்துடன் அவனைத் தன் புறம் திருப்பினாள்.

 

“ஆனா என்னோட ஃபிரெண்டு தாரி.. அவ லவ் பண்றா.. அவ சின்ன சின்ன விஷயத்தை ஃபீல் பண்ணி சொல்லும்போது, ச்ச நமக்கேன் இப்படி தோனலை? நாமளும் இப்படிலாம் ஃபீல் பண்ணுவோமானு எக்ஸைட் ஆயிருக்கேன்.. ஐ ஃபெல்ட் சம்திங் இன்டிரஸ்டிங் இன் இட், த்ரூ ஹர்” என்று கூறியவள், “உங்க பாயின்ட் கேட்க வந்துட்டு என்னோட பாயின்ட்ஸ சொல்லிக்கிட்டு இருக்கேன் பாருங்க” என்று கூற, 

 

அதில் இன்னும் அழகாய் சிரித்துக் கொண்டான்.

 

“காதல்.. அது ஒரு ஃபீல்.. காலம் காலமா சொல்றது இதுதான்.. எப்பேர்பட்ட முரடனையும் ரசிக்க வைக்கும் இந்தக் காதல்.. சாதாரணமா ரொம்ப கற்பனை தூக்கலா இருக்கும் காதல் கவிதைய பார்த்தா சிரிப்பா இருக்கும். ஆனா அதுவே லவ் பண்றவங்க கண்ணோட்டத்துல ரொம்ப அழகா இருக்கும். அது கவிதை மேல காதலோடவும் இருக்கலாம், காதலன்/காதலி மேல உள்ள காதலோடவும் தெரியலாம். நமக்குனு வரும்வரை கிரிஞ்சா தெரிஞ்சதுகூட கவித்துவமா தெரியும்.

 

உருவம்.. ஒருத்தர பாக்குறோம்.. உருவக்கேலி செய்றோம்.. ஆனா உண்மைலயே நமக்குச் சொந்தமான ஒருத்தரா இருந்தா அப்படி செய்யத் தோன்றுமா? அழகு அப்படிங்குறது நம்ம ரசிக்குற விதத்துல தான் இருக்கு. நான் காதலிக்குறவ ஒல்லி பெல்லிக்கு நடுவுல குண்டா இருந்தாலும், ஃபேர் அன்ட் லவ்லீக்கு நடுவுல டஸ்கி டோன்ல இருந்தாலும், கேசவர்தினிக்கு நடுவுல முடி கம்மியா இருந்தாலும், மீன் விழியாலுக்கு நடுவுல, கண்ணைத் தேடி கண்டுபிடிக்குற போலக் குட்டியா இருந்தாலும், மொத்தத்துல அழகான ராட்ஷசிக்கு நடுவுல அவ சுமாரானவளா இருந்தாலும் அவ பேரழகியா தான் தெரிவா.

 

ஒரு பொண்ணை காரணமே இல்லாம புடிச்சு போயிட்டா, அடுத்து அவ செய்யுற எல்லாமே நம்மைக் காதலில் விழ வைச்ச காரணங்களா தான் தெரியும். அவ தப்பு பண்ணா உரிமையா தட்டி கேட்க வைக்கும், சண்டை போட வைக்கும், சமாதானம் செய்ய வைக்கும். காதல் அதட்டவும் வைக்கும் அடிபணியவும் வைக்கும். மொத்தத்துல காதல் செய்யாததை செய்ய வைக்கும், செஞ்சதை மறக்க வைக்கும், பார்க்காதத ரசிக்க வைக்கும், ரசித்தத சுகிக்க வைக்கும். இல்லாத அத்தனை மாயத்தையும் இந்தக் காதல் நடத்தி குடுக்கும்.. காதலும் ஒரு அழகான மாயாஜாலம் தான்.. இட்ஸ் டிவைன்” என்று அவள் கண்களைப் பார்த்து உணர்ந்து கூறினான்.

 

காதலைப் பற்றிக் கேட்டவளுக்கு, அவள்மீதான தன் காதல் கொடுத்த உணர்வுகளை ஒப்பித்துக் கொண்டிருந்தவன் விழிகள் அவள் விழிவிட்டு துளியும் நகராது நிற்க, அதில் கட்டுண்டவள் மனம் ‘என்ன ஏதோ எனக்காகவே பேசுற போல இருக்கு’ என்று கேட்டு அவளை அதிரவும் வைத்தது, பிரம்மிக்கவும் வைத்தது.

 

“க..காதல்ல இவ்வளவு உணர்வு இருக்கா?” என்று தானும் அவன் கண்களைப் பார்த்தபடி அவள் கேட்க, 

 

“வாழ்ந்து பாருடி.. அப்பதான் புரியும்.. அது விளக்கங்களுக்குள் சிக்காத ஒரு மாயாஜாலம்” என்றான்.

 

சில நிமிடங்கள் பார்வை மட்டும் தீண்டிய ஓரடி இடைவெளியில் ஒருவர் பார்வையில் மற்றவர் மூழ்கி நின்றிட, சுற்றியிருந்த சூழல் அவர்கள் விழிக்கு காணலாய் மாறி மறைந்து போனது.. அமைதியானக் காடும், ஒருவரை ஒருவர் தழுவிய பார்வையும், அவள் விழிகளின் வியப்பும், அவன் விழிகளின் காதலும் மட்டும்தான், அங்கு இருவரின் அகமும் புறமும் தீண்டிக் கொண்டிருந்தது.

 

“எப்பா சாமிகளா.. மலை வந்துடுச்சு.. வரீங்களா இல்லையா?” என்று கூட்டமாய் அவர்களை விட்டுச் சற்று முன்ப சென்றிருந்த கூட்டம் கத்திக் கேட்க,

 

அதில் நிலை மீண்டவன் அவள் கையிலிருந்த காகிதத்தை வாங்கி பார்த்துக் கொண்டே முன் நகர்ந்தான்.

 

அதே இடத்தில் அவனைப் பார்த்தபடியே பாவை உறைந்து நிற்க, சிந்தை அவன் சிறப்பாய்க் கூறிய காதல் வார்த்தைகளில் தேங்கி நின்றது.

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்