
அத்தியாயம் 13
அபர்ஜித்தின் இந்த அதிரடியை பர்விதா எதிர்பார்க்கவில்லை.
காரில் வரும்போது கத்தினாள், கோபப்பட்டாள், திட்டினாள், அவனைப் பிடித்து உலுக்கினாள், ஏன் அடித்தும் பார்த்தாள், எதற்கும் அவன் அலட்டிக் கொண்டது போல் தெரியவில்லை.
ஒரே வேகத்தில் அவனது பீச் ஹவுஸிங் பின் கொண்டு வந்து காரை நிறுத்தி இருந்தான்.
கார் நின்றதும் இறங்கி ஓடி விடலாம் என்று பர்விதா கார் கதவை திறக்க போக, மின்னல் வேகத்தில் காரில் இருந்து இறங்கி, பின் சீட்டில் ஏறிக்கொண்டு சாவியினால் மொத்த கதவையும் லாக் செய்து கொண்டான்.
அவனை சரமாரியாக அடிக்க துவங்கியவள் “விடுங்க.. கதவ திறந்து விடுங்க.. எதுக்கு இப்டி பண்றீங்க.. மனுஷனா நீங்க..உங்கள பொறுத்த வரைக்கும் நீங்க நினைச்சது நடக்கும் இல்ல…” என்றவாறு அவனை அடிக்க
“ஏய் ச்சூ..!” என்று அவன் சத்தம் போட அவள் அடிப்பதை நிறுத்த, அவளை முறைத்தவன் கண நேரத்தில் அவள் போட்டிருந்த குட்டி கை டீ ஷர்டை கழுத்து வழியாக கழட்டி எடுத்தவன், தன் கையில் சுருட்டி வைத்துக் கொண்டான்.
அவனது செயலை அனுமானித்து, அவள் தன்னை தற்காத்துக் கொள்ளும் முன்பே பெண்ணவளின் மேலாடை அவன் வசம் சென்று இருந்தது.
அவனது செயலில் திகைத்து விழித்தவள், உடனே இரு கைகளால் தன் மார்பின் குறுக்கே வைத்து மறைத்து கொண்டவள்
“என்ன பண்றீங்க?..பொறுக்கி மாதிரி பண்ணாதீங்க.. ப்ளீஸ் ட்ரெஸ குடுங்க..” என்று கேட்டவாறு அவன் கையில் இருந்த தனது ஆடையை வாங்க முற்பட
“ஹா.. டார்ச்சர் பண்றேன்.. கடைசியா உன்ன சந்திச்சப்போ என்ன சொன்னேன்.. உன்ன எதுவும் பண்ண மாட்டேன்.. காலேஜ் வா..அப்டி இல்லன்னா என் டார்ச்சர் தொடரும்னு சொன்னேன்.. என் வார்த்தைய பத்தி நீ கவலை படலல..
…நான் வக்கீல என்றதால நேரத்துக்கு ஏத்த மாதிரி பேசுவேன்னு நினைச்சியா?.. உன் விஷயத்துல ஒரே வார்த்த தான்.. என்ன அவாய்ட் பண்ணதுக்கு பனிஷ்மென்ட்.. வன் ஹவர் இப்படியே இரு…”என்று அவளுக்கு துணியை கொடுக்காமல் அவன் போக்கு காட்ட,
அவன் முன்னாடி அந்த நிலையில் இருப்பது அவளுக்கு அசௌகரியமாகவும் சங்கடமாகவும் இருந்தது. ஒரு புறம் கூச்சம் நெட்டி தள்ளினாலும், அவனது இந்த அதிகப்படியான உரிமை ஏதோ போன்று இருந்தது .
“பனிஷ் பண்ணனும்னா பொண்ணோட துணிய கழட்டுவீங்களா?.. இது எவ்ளவு கீழ் தமான செயல் தெரியுமா?
“ஏய் என்னடி கீழ்த்தனமான செயல்.. மத்த பொண்ணுங்கள டார்ச்சர் பண்றதுக்கு இப்டி பண்ணுனாதான் தப்பு.. நீ என் பொண்டாட்டி உன்ன இந்த மாதிரி பண்றது தப்பு இல்ல…”
“யாருக்கு யார் பொண்டாட்டி.. தாலி கட்டினீங்களா என்ன…?”
“இப்ப என்ன தாலி கட்டணும் அவ்வளவுதானே.. கட்டிடா போச்சு…” என்று அவன் சொல்ல அவளுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
” உங்களுக்கு எல்லாமே விளையாட்ட போச்சு இல்ல…”
“ஹேய்.. நான் விளையாடலாம் இல்ல.. உண்மையா தான் சொல்றேன்.. தாலி கட்டுறேன்.. அதுக்கு முன்னாடி வன் ஹவர் நீ என்னோட டார்ச்சர அணுபவி, இப்டியே இரு…” என்று சொன்னவன் அவளது டி-ஷர்டை தனது ஷர்டினுள் போட்டுக்கொண்டு, சீட்டில் நன்றாக சாய்ந்து அமர்ந்து அவளை உற்றுப் பார்க்க ஆரம்பித்தான்.
அவனிடமிருந்து தனது துணியை வாங்க முடியாது என்பது புரிந்து போக, அவனுக்கு தன் முன் அழகுகளைக் காட்டாமல் முதுகை காட்டியபடி திரும்பி அமர்ந்து கொண்டாள் பர்விதா.
அவள் தன்னை தவிர்த்த ஆத்திரத்தில், கிறுக்குத்தனமாக ஏதோ செய்தவனுக்கு அதுவே வினையாக போனது. அவளை மேலாடை இன்றி வெறும் உள்ளாடையுடன் பார்க்கும்போது உள்ளுக்குள் என்னென்னவோ செய்தது .
சாதாரணமாக அவள் இதழ்களை பார்த்தாலே அவனுக்கு பித்துக் கூடிப் போகும். இப்போது சொல்லவும் வேண்டுமா?. கண்கள் சிவந்து, மூச்சு தாறு மாறாக ஏறி இறங்க, உடலின் உஷ்ணம் கூடி, அவனை வாட்ட, கீழ் உதட்டை கடித்த படி அவளை வெறித்துப் பார்த்தான்.
அவனையே அவனால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. சீட்டை பற்றி இருந்த அவன் ஒற்றை கை அத்தனை அழுத்தம் கொடுத்தது அதில். முற்றும் துறந்த முனிவனையே பித்துக் கொள்ளச் செய்யுமாம் பெண் உடல்.
காதலித்த பெண்ணின் கவர்ச்சி வடிவம், காதல் முத்தி போய், மூளை மழுங்கி திரிபவனை சும்மா விடுமா என்ன?
அவள் பளிங்கு முதுகில் இருக்கும் பழுப்பு நிற பூனை முடியின் நீளம் முதல், ஏசி குளிரிலும் பயத்தில் துளிர்த்த வியர்வை முத்துக்கள், பருவ செழிப்பில் பளபளத்தாலும் அதற்கு திருஷ்டி பொட்டு வைத்தது போன்று அங்காங்கே இருத்த கருப்பு மச்சமும் என்று இன்ச் இன்சாக அளந்தது அவன் லேசர் விழிகள் .
‘அச்சோ! இவள டார்ச்சர் பண்றேன்னு சொல்லிட்டு, டார்ச்சர் அனுபவிக்கிறது நான் தான்…’ என்று மனதோடு புலம்பினாலும் பார்வை என்னவோ அவள் முதுகிலே தான் இருந்தது.
பர்விதாவிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தாலும், அவனது செயலில் கூச்சம், வெட்கம், நாணம் என்று அத்தனையும் வந்து தொலைத்தது.
சாதாரணமாக இருக்கும்போதே சும்மா விடமாட்டான். இப்போது அவள் இருக்கும் கோலத்திற்கு அவளது கற்பு காப்பாற்றப்படும் என்றால், அது அவள் என்றோ செய்த புண்ணியமாக தான் இருக்க வேண்டும் .
கதவுகள் அடைக்கப்பட்ட காரில் அவனும் அவளும் மட்டும். அவனது ஆளுமையை பற்றி அவளுக்கு நன்கு தெரியுமே. தன்னை ஏதேனும் செய்து விடுவானோ என்று இதயம் அதிவேகமாக துடித்துக் கொண்டிருந்தது.
“ப்ளீஸ் ட்ரெஸ தாங்க.. வேற ஏதாவது டார்ச்சர் பண்ணலாம் இல்ல.. இது மாதிரி பண்ணாதீங்க.. என்னால இப்டி இருக்கிறதெல்லாம் முடியாது…” என்று அவள் அழுது விடும் குரலில் கேட்க
அவனிடம் இருந்து பதிலாக அவளுக்கு வந்தது என்னவோ “ஒன்னு.. ரெண்டு.. மூணு.. என்று அவன் எண்ணும் ஒலி தான்.எதை எண்ணுகின்றான் என்று அவள் கழுத்தை மட்டும் திருப்பி பார்க்க,
அவன் ஒற்றை விரலால், அவளைத் தொட்டாமல், அவள் மச்சத்தை கணக்கெடுத்துக் கொண்டிருந்தான். அவனது செயலில் அவன் புறமாக வெடுக்கென்று திரும்பியவள்
“என்ன, என்ன நிலைமையில வச்சிட்டு நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க…” என்று கோபமாக திட்ட
“ஹேய் நான் இன்னும் எண்ணி முடிக்கல.. மூணு மச்சத்துக்கு மேல முதுகுலயே இருக்கு.. அந்த பட்டி மறைக்கிற இடத்துல ஏதாவது இருக்கா என்ன.. சரியா கணக்கு எடுக்கணும் இல்ல திரும்பு…” என்று அவன் பச்சையாக பேச
அவள் அவனை முறைத்துப் பார்க்க, அவன் கண்களோ கீழே இறங்கியது. அவள் கை மறைத்து இருக்கும் பாகத்தை, பசி கொண்ட வேங்கையாக தாப வேட்கையில் பார்த்து உஷ்ண பெருமூச்சை இழுத்து விட்டவன்.
“நீ அந்த பக்கமாவே திரும்பி இருந்திருக்கலாம்.. கண்ணுக்கு தெரிஞ்ச அந்த மச்சங்கள விட, நீ பொத்தி வச்சிருக்கிற கண்ணுக்கு தெரியாத இந்த ரெண்டு மச்சத்தையும் பாக்கணும்னு ஆசையா இருக்கு…” என்று அவன் கொச்சையாக பேச
அவன் பேச்சில் காதும் உடலும் கூச, தன்மானத்தை விடுத்து காதை பொத்திக் கொள்ள முடியாத அவல நிலையில் இருந்தவள், என்ன செய்வதென்று புரியாமல், மங்கை அவளின் மானத்தை சீண்டி, குறும்பு செய்யும் மாய கண்ணனின் நெஞ்சிலேயே தஞ்சமானாள்.
தன்னை அவனிடம் இருந்து மறைத்துக் கொள்ள, அவன் மார்பிலேயே தஞ்சம் அடைய, தலைவனுக்கோ தாறுமாறாக எகிறியது இதயத்துடிப்பு.
“ஹேய்.. எ..என்.. என்னடி பண்ற.. எந்திரு…” என்று தன் கரகரத்த குரலில் சொல்ல
“ம்ஹூம் என் டீஷர்ட குடுங்க…” என்று அவள் கெஞ்ச
“ஐயோ கொல்றாளே!.. எனக்கு என்னவோ பண்ணுது டி ..எந்திரி…” என்று அவன் கைகள் நடுங்க ஆழ்ந்த குரலில் சொல்ல
“முடியாது.. டீ சர்ட் கொடுங்க..” என்று அவள் கேட்க அதற்கு மேலும் சும்மா இருக்க அவன் ஒன்றும் சித்தன் இல்லையே. காதல் பித்தன் ஆயிற்றே அவளை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டான்.
அவனது உறுதியான கரங்களால், எலும்புகள் உடையும் அளவிற்கு அவன் இருக்கி பிடித்த பின்னர் தான், அவள் செய்த மடத்தனம் புத்தியில் உரைக்க, தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது பர்விதாவிற்கு .
அவள் சுதாரித்து அவன் மார்பில் இருந்து விலகும் முன்பே, அவள் முகத்தை நிமிர்த்தி இதழ் முத்தத்தை பதித்திருந்தான்.
முத்தப்போட்டி வைத்தால் முதலிடம் அபர்ஜித்திற்கு தானே. அவளின் மொத்த நீர் சக்தியையும் உதட்டு வழி உறிஞ்சி கொண்டிருந்தான்.
எத்தனை முறை தான் திமிறுவது, போராடுவது, இவனுக்கு என்ன தான் வேண்டும். இன்றோடு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்து விட்டாளோ என்னவோ!. எந்த எதிர்ப்பும் காட்டவில்லை பர்விதா.
அவன் ஒரு கை அவள் வெற்று இடையில் இருக்க, மற்ற கையோ கழுத்தில் இருந்தது. நான்கு விரல்களும் அவள் பக்கவாட்டு கழுத்தில் இருக்க, அவன் பெருவிரல் மட்டும் அவள் கன்னத்தை வருடிக் கொண்டு இருந்தது.
கறவை மாட்டில் பால் கறக்க வேண்டும் என்றால் மடியை தடவி கொடுப்பார்களாம். இவனுக்கும் அந்த வித்தை தெரியும் போல, இரண்டு கைகளும் அதைத்தான் செய்து கொண்டிருந்தது.
அவள் அமைதியை, அவனது ஆளுகையில் அவள் அடங்கிப் போய் விட்டாள் என்றுதான் நினைத்தான். சாதாரணமாக முத்தமிடுவது என்றாலே அவன் கைகள் சும்மா இருக்காது. இப்போது உள்ளாடையுடன் மட்டும் இருப்பவளை விட்டு வைப்பானா என்ன?.
அழுத்தி, தடவி, அவள் உடலின் வெப்பத்தை அவன் உள்ளங்கைக்கு கடத்திக் கொண்டிருந்தான். முழு விருந்தே கண்முன் இருக்க முத்ததுடன் நிற்பாட்டுவானா என்ன. அவள் இதழை விடுத்து கழுத்தில் முகத்தை புதைத்துக் கொண்டான்.
மூக்கால் உரசி, ஆழ்ந்து நுகர்ந்து, அவள் வாசத்தை தன் மூச்சுக் குழாய்க்குள் பதுக்கிக் கொண்டான்.
இதுவரையும் அவள் மார்பின் குறுக்கே வைத்திருந்த, இரண்டு கைகளையும் மென்மையாக விளக்கியவன், கழுத்திலிருந்து மெது மெதுவாக குட்டி குட்டி முத்தங்கள் வைத்து கீழே இறங்கினான். அவளது உள்ளாடை மறைத்த இடத்தை தவிர்த்து மற்ற இடங்கள் யாவும் அவன் இதழின் ஈரம் கொண்டு முலாம் பூசினான்.
அவன் செயலில் மின்சாரம் உடலில் ஓடி மறைய, உடல் தூக்கி வாரி போட்டது பர்விதாவிற்கு.
உடலில் பொங்கிய உணர்வுகளை தாங்கிக் கொள்ள முடியாமல், பற்களால் தன் இதழைக் கடித்து, இரு கைகளையும் இரு பொத்தி இருந்தவளுக்கு, கண்களில் கண்ணீர் திரண்டது.
இன்ப சுகத்தில் இமை மூடி கிடந்தவன் கன்னத்தில் விழுந்த அவள் கண்ணீர் துளிகள் சுட கண்களைத் திறந்தான்.
அவன் அவள் விழிகளை பார்க்க “இந்த கார் போதுமா?.. இல்ல உங்க பீச் ஹவுஸ் ரூமுக்கு போகணுமா?..” என்று கேட்க
“என்ன சொல்ற…?” என்று அவன் புரியாமல் கேட்க
“உங்களுக்கு தேவ என் உடம்பு தானே.. ஒரு நாலு தடவ.. என் கூட…” என்று உதடு மடித்தவள் “நாலு தடவ என்னோட படுத்து எழும்பிட்டிங்கன்னா.. என்மேல இருக்கிற உங்களோட ஆச, வெறி அடங்கிருமில்ல.. அதுக்கப்புறம் என்ன தொந்தரவு பண்ண மாட்டீங்களே…!” என்று கேட்க
“பர்வி…!” என்று கோபமாக அடிக்கவே கை ஓங்கி விட்டான். அவளிடம் எந்த ஒரு எதிர்வினையும் இல்லை. அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“என்ன கோபம் வருதா?.. என்ன பாக்கும்போதெல்லாம் கிஸ் பண்றீங்க.. அங்க இங்க தொடுறீங்க.. இதெல்லாம் காதல்ல வருமா?.. எனக்கு புரியல…” என்று அவள் கேட்க,
அவளது கேள்வியிலும் நியாயம் இருந்தது. அவன்தான் அவன் மனதை அவளுக்கு உணர்த்த முற்படவே இல்லையே. அவளை தன் உரிமை உரிமை என்று சொன்னானே ஒழிய, அவன் அவளது உரிமை என்று உணர வைக்க தவறிவிட்டான்.
“தப்புதான் பர்வி.. ஆனா நீ சொல்ற மாதிரி உன் மேல இருக்குறது வெறி எல்லாம் கிடையாது. நான் தான் முன்னாடியே சொன்னேனே டி.. உன்னை பாத்தாலே ஐம் லூசிங் மை செல்ஃப்-கண்ட்ரோல்…” என்று சொல்ல
இதழ் வளைத்து கேலியாக புன்னகைத்தாள் பர்விதா.
“நீ என்ன நம்பல இல்ல…” என்று கேட்க
“நம்பும்படி நீங்க நடந்து கொள்ளல…”
“சரி சொல்லு.. என் காதல் மேல உனக்கு நம்பிக்கை வரணும்னா நான் என்ன பண்ணனும்…?” என்று கேட்க
“முதல்ல என் ட்ரெஸ குடுங்க…” என்று தலையை குனிந்தவாறு கேட்க, அவனும் அவளது டி-ஷர்ட்டை கொடுக்க, அதை அணிந்து கொண்டவள், கண்களை அழுத்தி துடைத்துவிட்டு,
“அடுத்த ஆறு மாசத்துக்கு, நீங்க சொல்ற மாதிரி நான் காலேஜ் வாரேன், தூரத்துல இருந்து மட்டும் நீங்க என்ன பாக்கலாம்.. என்கிட்ட வரக்கூடாது, என்கிட்ட பேசக்கூடாது.. என்மேல உங்க நிழல் கூட படக்கூடாது.. ஆறு மாசம் உங்களால அந்த மாதிரி இருக்க முடிஞ்சதுன்னா, ..
…நீங்க சொல்ற மாதிரி என் உடம்பு மேல உங்களுக்கு ஆசை இல்ல.. என் மனசு தான் உங்களுக்கு முக்கியம்னு நான் நம்புறேன்.. நான் உங்க கூட வாழனும்னு தா
ன் நீங்க ஆசைப்படுறீங்கனு புரிஞ்சுக்கிறேன்…” என்று அவள் நிபந்தனைகளை விதித்துக் கொண்டு செல்ல, மயக்கம் வராத குறை தான் அபர்ஜித்திற்கு.

