Loading

அவனின் இதழ் முத்தத்தை தடுக்க கூட முடியாமல் சில உணர்வுகளின் பிடியால் தத்தளித்த தியாவிற்கு முடியாமல் கண்களும் கலங்கி விட,

 

பல மாதங்கள் இடைவெளியில் தன்னவளின் நெருக்கத்தில் தன்னை தொலைத்து அவள் இதழில் கவி எழுதி கொண்டிருந்தவன், தன் இதழில் சூடான நீர் படவும் தான் பெண்ணவள் அழுகை புரிந்து விலக, அடுத்த நொடி அவனை பார்க்காமல் அவள் வெளியே ஓடி விட்டாள்.

 

போகும் பெண்ணவளை கண்டு ஒரு பெருமூச்சு விட்டு உணர்வுகளை அடக்கி கொண்டவன் ‘நான் ஏதோ அவள ரேப் பண்ணின மாதிரி அழுத்துட்டு போறா.. அவ தான மறுக்க மறுக்க என் உதட்ட கடிச்சா.. ச்ச’ என்று படுக்கையிலே கை குத்தி கொண்டவனுக்கு உணர்வுகளை தணிக்க முதுகில் காயத்தால் தண்ணீரில் கூட நிற்க முடியாத நிலை, கடுப்புடனே படுக்கையில் சாய்ந்தவனுக்கு துக்கம் வேறு வர மறுக்க, புரண்டு கூட படுக்க முடியாத அவலநிலை வேறு அவனை மேலும் எரிச்சல் படுத்த, பின் எழுந்து அமர்ந்து புத்தகத்தை வாசிக்க தொடங்கி விட்டான்.

****

 

காலையில் தியா மற்றும் ருத்ரன் தங்களுக்கு கொடுத்த பணியை காண சென்றிருக்க, ரேயனோ விடியும் வேலையில் தான் நித்திரைக்கு சென்றிருந்தான்.

 

நேத்து நடந்த நிகழ்வின் காரணமாக தியாவும் அவன் எழும்பும் முன்னே சென்று விட வேண்டுமென்று வழக்கத்துக்கு முன்னதாகவே வெளியே சென்று விட்டாள்.

 

ரயில் நிலையத்தில் அவன் கூறிய பணியை முடித்துவிட்டு ஆர்யாவிற்கு அழைத்தவள் “என்னடா அப்பாயின்ட் என்னாச்சு”

 

“அதெல்லாம் சிறப்பா முடிஞ்சுது.. நீ உடனே வந்தா கூட போகலாம்”

 

“சரிடா.. இன்னைக்கு விட்டா ரொம்ப கஷ்டம்.. சோ எல்லாத்தையும் எடுத்துட்டு நேரா ஹாஸ்பிட்டல் வந்துரு..” என்றதும் அவனும் தேவையானதை எடுத்து கொண்டு கிளம்பிருக்க, பெண்ணவளும் ஒரு பெரிய மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள்.

 

பின் சகோதரன் வந்ததும் மூளை நிபுணரை சந்திக்க எண்ணி அவரின் அறைக்குள் சென்று அமர, பின் ஆர்யாவிடமிருந்த பரிசோதனை பதிவு அனைத்தையும் வாங்கி மருத்துவரிடம் கொடுக்க,

 

அவரும் அதனை ஆராய்ந்துவிட்டு “ரெண்டரை வருஷமா அந்த ஸ்டேஜ்ல எந்த மாற்றமும் இல்ல.. ரைட்டா?” என்றதுக்கு தியா “எஸ் டாக்டர்.. வேற எதுவும் தீர்வுயிருக்கா டாக்டர்” என்றவளின் குரல் வேதனையாகவே ஒலிக்க,

 

மருத்துவரோ “எதாயிருந்தாலும் நான் முழுசா செக் பண்ணிட்டு சொல்லுறேன்.. கண்டிப்பா சரி பண்ணிடலாம்.. ஆனாலும் நீங்க சில விஷயம் புரிய வைக்கணும் முயற்சிய விடவே கூடாது அதுல ஏதோ ஒன்னு மூளைய அடையும் நேரம் கண்டிப்பா சரி ஆயிடும்” என்று மேலும் சில விஷயங்களை கூற,

 

இருவரும் கேட்டு விட்டு விடை பெற்று ஆர்யாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

 

பெண்ணவள் சோர்வாக கையிலுள்ள பரிசோதனைகள் பதிவை சோஃபாவில் போட்டுவிட்டு கண் மூடி சாய்ந்து அமர்ந்தவள் “டேய் ஒரு காபி கிடைக்குமா”

 

“ஃபைவ் மினிட்ஸ்டி” என்று எழும்பி காபி போட்டு வந்து அவனிடம் கொடுத்து பேசி கொண்டிருந்தவன் வேலை விஷயமாக அழைப்பு வரவும் எழுந்து தள்ளி சென்று பேச தொடங்கி விட,

 

தியாவும் காபி குடித்து முடித்து மறுபடியும் கண்களை மூடி சாய்ந்து கொண்டே கைகளை மட்டும் மூடி திறந்து சிந்தனையில் இருந்தாள்.

 

சில நிமிடம் கழித்து “மச்சி..” என்று தன் மேல் கைவைத்த ருத்ரனின் அழைப்பில் பதறி கண் முழித்தவளுக்கு மூச்சு வேறு வாங்க,

 

சட்டென்று தன் அருகில் பரிசோதனை பதிவுகள் வைத்தயிடத்தை பார்க்க அது இல்லையென்றதும் சுற்றி பார்வை சுழலவிட்ட பிறகே பெண்ணவளுக்கு நிம்மதி பிறக்க மூச்சும் சிராகியது.

 

அவன் செயலில் விச்சிரத்தை உணர்ந்து ருத்ரன் “ஏய்.. நான் இங்க இருக்கேன்டி சுத்தி என்ன பாக்குற” என்றதை கேட்டு மூச்சு இழுத்துவிட்டு கொண்டு “டேய் குரங்கு கதவ தட்டிட்டு வர மாட்ட.. இப்படி தான் பக்குன்னு வந்து நிப்பியா பதறுதுல” என்க,

 

அவளை மார்க்கமாக பார்த்தவன் “ஏன் பதறுது..” என்றதும் திணறிய தியா சமாளிக்கும் பொருட்டு “கேஸ் பத்தி எதாவது சிக்குதான்னு யோசனையில இருந்தேன்.. சடனா நீ கூப்பிடவும் பதறாதா” என்று கூறி கொண்டிருக்கும் போதே ருத்ரனுக்கான காப்பியுடன் வந்த ஆர்யன் கண்களை மூடி திறந்து தியாவை சமாதானபடுத்தி “இந்தாங்க மாம்ஸ் காபி”

 

“என்னடா.. நான் வருவேன் உன் பட்சி சொல்லுச்சோ காபி கொடுக்குற” என்றதில் புன்னகைத்தவன்

 

“இல்ல மாம்ஸ்.. நீங்க கேட்கிட்ட வரும் போதே பாத்துட்டன்.. அதான் காபி போட்டேன்” என்று தியாவின் அருகில் அமர்ந்து கொண்டான்.

 

அவன் கொடுத்ததை குடித்தவன் “ஆமா தியா.. நீ எதுக்கு இங்க வந்த” என்றதில் ஆர்யன் “என்ன மாம்ஸ் தம்பி வீட்டுக்கு காரணம் சொல்லிட்டு தான் வரணுமா”

 

“அதில்லடா கேஸ் விஷயமா போனா.. அதான் கேட்டேன்” என்றதில் நொந்த தியா ‘இவன் கண்ணுல நம்ம மாட்டினதுக்கே இந்த கேள்வி கேக்குறான்.. அவன் பாத்துருந்தா நொங்கு எடுப்பான்.. இதுல இந்த பக்கி வேற அவன்கிட்ட ஓதுமே’ என்று எண்ணிவிட்டு “ரேயன் சொன்ன வேலைய ரயில் ஸ்டேஷன்ல முடிச்சிட்டேன்.. வருர வழில இவன் வீடா அதான் பாத்துட்டு போக வந்தேன்.. நீ எதுக்கு வந்த”

 

“உன் வண்டி பாத்து தான் வந்தேன்” என்று எழுந்தவன் “எனக்கு வேலை இருக்கு.. நான் கிளம்புறேன்..” என்று விடை பெற்று விட்டதும் தலையில் கைவைத்து அமர்ந்த தியா “டேய் கிரதகா கதவ லாக் பண்ணி தொலடா” என்றவளின் பாவனையில் கிலுக்கென்று சிரித்தவன், கதவை பூட்டிவிட்டு அவளருகில் அமர்ந்து “என்னடி அள்ளு விட்ருச்சோ” என்க,

அவனின் தலையில் ரெண்டு தட்டிய தியா “ஏன்டா.. என் உசுரு ஊசலாடுறது உனக்கு சிரிப்பா இருக்கா.. கொஞ்ச நேரத்துல என் உசுரு போயிடுச்சுடா” என்றவளின் உணர்வு புரிந்து கையை பற்றி கொண்டவன் “ரூம்ல கால் பேசும் போதே மாம்ஸ் வந்தத பாத்துட்டன்.. அவர் ஸ்டெப்ஸ் ஏறி வருறதுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சிட்டன்.. சரி விடு எப்படியும் வெளிய தெரிய தான போகுது..

 

நீயே அதுக்கு உண்மைய சொல்லிட வேண்டி தான எதுக்கு கண்ணாம்மூச்சி ஆடி ரிஸ்க் எடுக்குற” என்றதை கேட்டு கலவரமாக இருந்த தியாவின் கண்கள் கலங்கி “இல்ல ஆர்யா எனக்கு குற்றயுணர்வா இருக்குடா.. என் தப்ப யாரும் கண்டுபிடிக்கிற முன்னாடியே சரி செய்து நிறுத்த நினைக்கிறேன்.. என்னால எல்லாருக்கும் கஷ்டம் தான்ல” என்றவள் தம்பியிடம் அன்னையின் மடி தேடி சாய்ந்து கொள்ள,

 

அவளின் வேதனை புரிந்து தலையை வருடிவிட்ட ஆர்யா “ப்ச் என்ன தியா பேசுற.. நான் ஏற்கனவே சொன்னேன்ல.. நீ இந்த தப்ப அறிஞ்சி பண்ணலடி தேவையில்லாம உனக்கு நீயே குற்றம் சுமத்திக்காத.. எல்லாம் சரியாகும் நான் இருக்கேன்ல தூங்கு” என்று தமக்கையின் தலையை தொடர்ந்து வருட,

 

நேற்று தன்னவனின் உணர்வுகளை சீண்டியதில் இரவு உறங்காது இருந்தவள், தம்பியின் அரவணை ப்பில் உறங்கி விட, உறங்கும் தமக்கையை வேதனையாக பார்த்த ஆர்யா எழும்ப மனமில்லாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

****

அன்றைய இரவு போல் வந்து தூங்கி கொண்டிருந்த ரேயன் அருகில் தான் சேகரித்த ஆதாரத்தை வைத்துவிட்டு தூங்கி கொண்டிருந்தவனின் தலையை வருடிவிட்டு சென்று விட்டாள்.

 

மறுநாள் காலையில் கண் முழிக்கும் போது தன் அருகில் இருந்ததை கண்டு அவள் தான் தன்னை காணாது வைத்துவிட்டு சென்றிருக்கிறாள் என்று புரிய, காலை கடன்களை முடித்துவிட்டு கீழே உணவருந்த வந்தவன்,

 

சாப்பிட்டு கொண்டிருக்கும் ருத்ரன் அருகில் அமர்ந்து “சொன்ன வேலை முடிஞ்சிதா மச்சி”

 

“போயிட்டு இருக்கு மச்சி.. இன்னைக்கு நைட் மொத்த அப்டேட் கொடுக்குறேன்” என்றவனை கண்டு புருவம் உயர்த்தியவன் “உன் ப்ரெண்ட் இப்போ இல்லையோ அதிசயமா மச்சின்னு கூப்பிடுற” என்றதில் போலியாக முறைத்து புன்னகைத்த ருத்ரன் “ஆமா இல்ல.. அவ மார்னிங்கே யாழிசை குழந்தையோட ஆர்யா வீட்டுக்கு போயிட்டா கூட நிஷாகுட்டியும் போயிருக்கா” என்றதை கேட்டு,

 

அன்று நிகழ்ந்த நினைவில் தன்னை விலக முயற்சிகிறாள் என்பதை சரியாக கணித்த ரேயன் அமைதியாக உண்பதில் கவனம் செலுத்த,

 

ருத்ரனோ “நேத்து கூட நீ கொடுத்த வேலைய முடிச்சிட்டு ஆர்யா கூட இருந்தவ நைட் எல்லாரும் தூங்குன நேரம் வந்திருக்கா.. ஏனோ அவ முகம் கூட சரியேயில்ல.. என்னன்னு கேட்டா சொல்ல மாட்டா..” என்றவன் ரேயனை பார்த்து “உங்களுக்குள்ள எதுவும் பிராப்ளமா”

 

“எங்களுக்குள்ள தான் ஏற்கனவே பிராப்ளம் இருக்கே.. புதுசா என்ன கேக்குற”

 

“நான் பழச கேக்கல.. இப்போ ரெண்டு நாளா தான் அவ சுத்தமா சரியில்ல அதான் கேக்குறேன்” என்றதை கேட்டு ருத்ரனை அழுத்தமாக பார்த்தவன் சாப்பிடுவதில் கவனம் செலுத்த, அவனும் எதுவும் கேட்காமல் சாப்பிட்டு முடித்து தனக்காக பணியை நோக்கி சென்றான்.

*****

ஆர்யா வீட்டியில் இரு குழந்தைகளின் சத்தம் நிறைந்திருக்க, கூடவே அவர்களை ரசித்து சிரிக்கும் இரு பெண்களின் சத்தமும் இணைந்தே இருந்தது.

 

தமக்கையின் சிரிப்பை கண்டு நிம்மதியடைந்தவன் யாழிசையின் புன்னகையை ரசிக்கவும் தவறவில்லை.

 

இதை பெண்ணவளும் உணர்ந்தாலும் அவனின் பார்வை உள்ளுக்குள் ரசித்து கண்டும் காணாது போல் இருந்து கொண்டாள்.

 

ஆம் ரசிக்கிறாள் அவனின் பார்வை ரசிக்கிறாள், அவனின் பேச்சை ரசிக்கிறாள் அவனின் செயலை ரசிக்கிறாள், அவனின் பக்குவத்தை ரசிக்கிறாள் இவ்வளவு ஏன் அவனையே முழுதாக ரசிக்கிறாள் தனக்கே உரிமை என்ற எண்ணம் வருமளவு ரசிக்கிறாள்.

 

ஒருவரை பிடிக்க பல காலங்கள் பழகியிருக்க அவசியம் இல்லை, ஒரு மணிநேரம் பேச்சே அவர்களை பிடிக்க போதுமானது தான், அதே போல் ஆர்யனை கண்ட நாளில் வந்த மதிப்பு அவனுடன் கழித்த நாட்களில் ஈர்ப்பாக மாறியிருக்க,

 

அதை காதலாக மாற்ற பெண்ணவளுக்கு ஏதோ தயக்கம் அது அவனின் குறையால் அல்ல, அவளின் குறையால் வந்த தாழ்வு மனப்பான்மை ஆனாலும், அவனை முழுதாக அவள் மனம் தேடுகிறது.

 

இவளின் தயக்கம் தேவையில்லாத ஆணி என்று அவளின் ரசனைக்குறியவன் புரிய வைப்பானா? என்று பொறுத்து பார்க்கலாம்.

****

 

இரு குழந்தைகளின் மழலையில் லயித்திருந்த இரு பெண்களுக்கும் பழசாறு கொடுத்து ஆர்யா, தானும் அமர்ந்து குடித்தான்.

 

அவன் கொடுத்ததை குடித்த யாழிசைக்கு குமட்டி கொண்டு வர வாயை பொத்தி கொண்டு பெண்ணவள் ஓட,

 

அதை கண்டு தியா “ஏன்டா ஜுஸ் ஒன்னும் அவ்வளவு கேவலமா இல்லையே” என்றதை கேட்டு தமைக்கை முறைத்துவிட்டு சோர்வாக வரும் பெண்ணவளை அணைக்க பற பறக்கும் கைகளை கட்டுப்படுத்தி “ஏன்டி சும்மா பேசிட்டு இருக்காம.. அவளுக்கு ஹெல்ப் பண்ணலாம்ல..” என்க,

 

தம்பியின் செயலிலும் பேச்சிலும் புரியாமல் விழித்தவள் “அவளுக்கு லைசென்ஸ் போட்ட நீ இருக்கும் போது.. நான் எதுக்குடா இத பண்ணனும்” என்றதில் மெல்ல அமர்ந்த யாழிசையின் முகம் கலவரமாக ஆர்யன் முகமோ சோர்ந்துவிட்டது,

 

அதிலே ஏதோ சரியில்ல என்பதை உணர்ந்த தியா கையிலிருந்த குழந்தையுடன் நிஷாவை அழைத்து சென்று அறையில் விட்டவள் “நிஷா குட்டி.. பாப்பா கூட விளையாட்டிட்டு இரு” என்றுவிட்டு, அவர்களின் எதிரே அமர்ந்தவள் “உங்க ரெண்டு பேர் பார்வையுமே ஏதோ இருக்குன்னு சொல்லுது.. என்னாச்சி” என்றதுக்கு இருவருமே அமைதி காக்க,

 

“அடேய் யாராவது வாய் திறந்து சொல்லி தொலைங்க இருக்கிற பிராப்ளம்ல எதாவது வில்லங்கத்த கொடுத்து தொலையாதீங்க” என்றதும் அவள் அருகில் அமர்ந்த யாழிசை “அண்ணி..” என்று அவள் கையை பற்றி கொண்டவள்,

 

தியாவின் வீட்டியில் அனைவரிடம் ஒன்றும் போதே பாட்டி தான் “புருஷன் அக்கா அண்ணின்னு சொல்லணும்” என்று சொல்லி கொடுத்து பழகி விட்டிருக்க, அவளும் அதையே இப்போது வரை பின் பற்றினாள்.

 

தன்னை அழுத்தமாக பார்க்கும் தியாவிடம் “அண்ணி ஆரி மேல எந்த தப்பும் இல்ல..”

 

“அப்போ நீ என்ன தப்பு பண்ணின” என்றதுக்கு ஆர்யாவோ “அவ காரணம் இல்ல.. நான் சொல்லி தான் அப்படி பண்ணினா” என்றதில் கடுப்பான தியா “யார் என்ன பண்ணிங்கன்னு சொல்லி தொலைங்கடா” என்றதில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள,

 

ஆர்யா பெண்ணவளை கண் காட்டி கூறும்படி செய்கை செய்ய, தியாவின் கோவம் பற்றி அறிந்து பயத்தில் மூச்சை இழுத்துவிட்டு கொண்ட யாழிசை தானே தன் கழுத்தில் கட்டிய தாலியின் ரகசியத்தை கூறினாள்.

 

அதில் இருவரையும் உருத்துவிழித்த தியா எழுந்து விட, அவள் கையை பற்றிய யாழிசை “அண்ணி..” என்று அழைக்க,

 

அவளிடம் அர்த்தப்பார்வை வீசியவள் “அண்ணியா” என்று நக்கலாக சிரித்துவிட்டு குழந்தைகள் இருந்த அறைக்குள் சென்று கதவை அடைத்து சாத்திவிட, அவளை பார்த்திருந்த யாழிசைக்கு தான் உள்ளம் வெதும்பியது.

 

அவளின் உணர்வுகள் புரிந்து தயக்கத்தை விடுத்து ஆர்யன் கைப்பற்றி ஆறுதல் அளிக்க மறுநொடி அவனின் தோலில் சாய்ந்து அழுதுவிட்டாள்.

 

அதில் பெண்ணவளின் கன்னத்தை கையில் ஏந்திய ஆர்யன் கண்ணீரை துடைத்துவிட்டு “யாழிசை.. ஏற்கனேவே டையடாயிருப்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதடா” என்று நெற்றியில் இதழ் பதிக்க,

 

அதை கண்மூடி பெற்று கொண்ட பாவையோ “அண்..ணி.. என்கி..ட்ட” என்றவளுக்கு வார்த்தைகள் தடுமாற, பெண்ணவளை தன் மார்பில் புதைத்தவன் “ஒன்னும் இல்லடி.. அவ சரியாயிடுவா நான் பேசுறேன்.. நீ ரெஸ்ட் எடு வா” என்று அழைக்க,

 

அவள் அசையாததில் பெண்ணவளை கையில் ஏந்தி அறைக்குள் அழைத்து சென்று படுக்கையில் கிடத்தியவன், அவள் தலையை வருடிவிட்டு தூங்க வைத்தான்.

 

தொடரும்…

 

– ஆனந்த மீரா 😍😍

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்