Loading

அத்தியாயம் 20

 

“ரொம்ப நல்ல மனசும்மா உனக்கு. அடேய் குடும்பத்தோட சிக்கனமா இருப்பீகளோ? ஒன்னுமே சொல்லாம வேடிக்க பாக்க” மூர்த்தி ப்ரகலத்தனிடம் கேக்க. 

 

“பசிக்குதுன்னு சொல்ற பிள்ளைட்ட கணக்கு பாத்துட்டுருக்க, அவளுக்கு வயித்துல ஒட்டுமா எரும” என ப்ரகலத்தன் டென்ஷனாக. 

 

“ஓஹோ! இது வேற? நடத்து நடத்து” என அவன் நகர போக, “அண்ணா பிரெட் பஜ்ஜி சூடா” என ஆறு திருப்பி சொல்ல. 

 

“ஞாபகம் இருக்கு மேடம், கண்டிப்பா சூடாவே வாங்கிட்டு வரேன். அவன் ஆறுனத தந்தாலும் நா உள்ள போய் சுட வச்சு எடுத்துட்டு வந்துறேன் ஓகே வா?” என்க. 

 

“சூப்பர்ண்ணா” என்றாள் தம்ஸ் அப் காட்டி. “தலையெழுத்து” என தலையிலடித்துக் கொண்டு சென்றான் அகத்தியன். 

 

சிரித்துக்கொண்டு திரும்பியவள் ப்ரகலத்தனிடம், “அப்புறம்” என்க. 

 

“நீ தான் சொல்லணும், உண்மையாவே உனக்கு சாரி செமையா இருக்கு, அதான் கொஞ்சம் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன்” என்றான் கடைசி வார்த்தையை சொல்லும் போது வாய்ஸ் உள் சென்று விட்டிருந்தது. 

 

“அக்ஷுவலி அது நீங்க என்ன பண்ணீங்கன்னு எனக்கு பீல்/ரியலைஸ் ஆகல. சோ ரொம்ப ஒன்னும் நீங்க பீல் பண்ணிக்க வேணாம். நா உங்ககிட்ட சொல்ல வந்த விஷயமே வேற” ௭ன அவன் அதை பற்றி பேசுவது ஒரு மாறியாக இருக்க பேச்சை மாற்றினாள். 

 

“வேற என்ன?”.

 

“இன்னைக்கு லஞ்ச்ல உங்கள பாக்க டிபார்ட்மெண்ட் விட்டு வெளியே வந்தேனா திடீர்னு ஆறெழில் ஒரு நிமிஷம்ன்னு ஒரு சத்தம், யாருடான்னு திரும்பி பாத்தா, எங்க டிபார்ட்மெண்ட் பைனல் இயர் பசங்க ரெண்டு பேரு நின்னாங்க. சொல்லுங்க சீனியர்ன்னு கேட்டேன், ஐ ஆம் பிரதாப்ன்னு கைய நீட்டினான், ஓகேன்னு சொல்லி நானும் ஹாண்ட் ஷேக்   பண்னேன். நெர்வெஸ் ஆன மாறி, அங்கேயும் இங்கேயும் பாக்குறான், தலைய சொறியுறான், எனக்கு ஓரளவு புரிஞ்சது, எத்தன படத்துல பார்த்துருப்போம். எனக்கும் கொஞ்சம் பயமாயிருச்சு, என்ன பண்ணனும், எப்படி ரியாக்ட் பண்ணனும்னு கன்ஃப்யூஸ் ஆயிட்டேன்” என இவள் நவ ரசத்தையும் பிழிந்து சொல்ல, கன்னத்தை தாங்கி, சிரித்தவாறு கதை கேட்டான் ப்ரலத்தன்.

 

“அப்றம் திரும்பி கூட வந்தவன பாக்க, அவன் ‘சொல்லுடா சீக்கிரம்’னு சொல்ல, ‘கொஞ்சம் டென்சனா இருக்குடா’ன்னு இவன் சொல்ல, சுத்தம் கிடைச்ச லஞ்ச ஹவர இவனுங்க கெடுத்துடுவானுங்க போலயேன்னு தோணுச்சா, சீக்கிரம் சொல்லுங்க சீனியர், நா முக்கியமா ஏரோ பிளாக் வர போனுன்னு சொன்னனா, பின்னாடி உள்ளவன்ட்ட அவேன் பின்னாடி ஒளிச்சு வச்சிருந்த ஒரு பொக்கேயே வாங்கி, என்ட கொடுத்து, ஐ வாண்ட் டு  மேரி யூன்னு சொல்லிட்டான். என்னடா இது இப்டி சொல்லிட்டானே, இப்ப இதுக்கு நா என்ன பதில் எப்டி சொல்றதுன்னு முழிச்சு நின்னா, எனக்கு உன் சிட்ச்சுவேஷன் புரியுது. ஒன்னும் அவசரமில்ல டைம் எடுத்துக்கோ நாளைக்கு கூட சொல்லுனு சொல்லிட்டு போயிட்டான். எப்டியோ போயிட்டான்னு…..” ௭ன இவள் முடிக்கும் முன். 

 

ப்ரகலத்தன் “நீ ஏன் டக்குன்னு அவனுக்கு பதில் சொல்லல, நீ தான் என்ன லவ் பண்றேன்னு சொல்லுவியே, வந்த அன்னைக்கே ௭ன் பிரண்ட்ஸ், உன் பிரண்ட்ஸ், ஏன்., ஆண்ட்டிக்கிட்ட கூட சொல்லுவ அவன்ட்ட சொல்ல மாட்டியா? அது ௭ன்ன? என்ன பதில் சொல்றதுன்னு யோசிச்சேங்குற” என்றான் அவன் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு. 

 

“சாரி ப்ரஸிடெண்ட் நிஜமாலுமே டக்குன்னு  எதுவும் ரியாக்ட் பண்ண வரல. நா என்ன பண்ண. நாளைக்கு வந்து கேட்டா சொல்லிடுறேன் சரியா” என்றாள் அவன் நாடி பிடித்து திருப்பி தன்னைப் பார்க்க வைத்து.

 

“நா உன்ட்ட இத எக்ஸ்பெக்ட் பண்ணல, சொல்லுறதுனா அந்த டைமே சொல்லிட்டு போயிருக்கணும், இன்னும் இதுல என்ன நாளைக்கு சொல்றது, போ எழில்” என அவன் எழுந்து விட. 

 

“என்ன ப்ரெசிடெண்ட், சின்ன விஷயம் இதுக்கு இப்டி கோபப்படுறீங்க”. 

 

“கிளம்பு சீக்கிரம் லேட் ஆயிட்டு” என்றான் உட்காராமல் எங்கோ பார்த்துக் கொண்டு. அந்நேரம் ஸ்னாக்ஸ் கொண்டு வந்து வைத்தான் மூர்த்தி. 

 

“கேன்டீன பூட்டணுமாம், சீக்கிரம் முடிங்க சிஸ்டர்” என சொல்லிக் கொண்டிருக்க, மற்ற வானரங்களும் வந்துவிட, அதற்கு மேல் அவர்களால் அதைப் பற்றி பேச முடியாமல் போக, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

 

அவன் மூர்த்தியிடம் ஏதோ பேசியவாறே கேன்டீன் வாசல் வரை சென்று நின்றுகொண்டான். எல்லாம் முடித்து கிளம்பும் வரையிலும் அவள் அவனையே பார்க்க, அவன் கண்டு கொள்ளாமலேயிருக்க, “இவங்களும் லவ்வ சொல்ல மாட்டாங்க, வேற யாராது சொன்னாலும் கோபம் மட்டும் வந்துரும்” என தானும் முறுக்கிக் கொண்டாள். 

 

மனதினுள் திட்டிக்கொண்டே தான் வீடுவரைச் சென்றாள். இதற்கிடையில் காலையில் எடுத்த போட்டோவை வைரத்தை விட்டு வாங்கி வர சொல்லி இருப்பதை வீடு செல்லும் வழியில் லட்சு சொல்ல, அவள் ‘ம்’ என்றாளே தவிர மனதில் பதிந்ததா என்றாள் இல்லை.

 

இவர்களை அனுப்பி விட்டு கிளம்பிய பசங்களும், வைரத்துடன் போட்டோ ஸ்டுடியோ சென்றனர். முதலில் கொடுக்க யோசித்த ஸ்டூடியோகாரரும், இவர்களின், “சரி சார், அப்ப அவங்களயே வந்து வாங்கிக்க சொல்லிடுறோம், நீங்க யோசிக்கிறதும் நியாயம் தான்” என்ற பதிலிலும், ப்ரகலத்தனின் அப்பா தெரிந்தவர் என்பதற்காகவுமே கொடுத்தனுப்பினார்.

 

அதில் ஆறெழில் போட்டோவை பார்த்து கொஞ்சம் மனம் இறங்கினான். அவள் தனியாக நின்ற போட்டோவை தனியாக எடுத்து வைத்துக் கொண்டான். 

 

மற்றதை வைரத்திடம் ஒப்படைத்தவன், “அவளோட தனி போட்டோவ ஸ்டூடியோவிலேயே தரலயாம்னு சொல்லிடு, ஏதாது உளறுன” என விரல் நீட்டி மிரட்டியே அனுப்பினான். 

 

“திருடுறது நீங்க, நா பயப்பட வேண்டியிருக்கு, நேரம் தான்” என்று விட்டு, எல்லோரும் அவரவர் வீடு திரும்பினர்.

 

ஆறு வீட்டுக்கு சென்ற பின்னும் ஏனோ தானோவென சுற்றிவர, இப்பொழுதெல்லாம் அதிக கவனம் அவள் மீது வைத்திருக்கும் ஜெயந்தி, “இன்னைக்கு என்ன?” என்பது போல் அவளையே தான் கவனித்து வந்தார். 

 

பின் சாப்பாட்டை முடித்து படுக்க செல்கையில், “கதவுலா நல்லா பூட்டிருக்கானு செக் பண்ணியா எழில்” பெட்டை சரி செய்துகொண்டே ஜெயந்தி விசாரிக்க, “தெரியலம்மா நீ போய் பூட்டிட்டு வா” என்று விட்டு திரும்பி படுத்துக்கொண்டாள். 

 

“வர வர ரொம்ப ஏத்தம் கூடிட்டே போகுது, செமத்தியா கொடுத்தா தான் சரிப்பட்டு வருவன்னு நினைக்கிறேன்” என திட்டியவாறே சென்று பூட்டியிருந்த கதவை ஒருமுறை சரிபார்த்து விட்டு வந்தார். 

 

வந்து படுத்த பின்னும் அவள் உளத்திக் கொண்டே வர, “என்ன தான்டி பிரச்சன, இன்னைக்கும் காலேஜ்ல ஏதாவது ஏழரைய இழுத்துட்டு வந்துருக்கியா?” என்க. 

 

“பாசமாவே பேச மாட்டியாம்மா, எப்பயும் இப்டி எறிஞ்சு எறிஞ்சு விழுற, பின்ன எப்டி உன்கிட்ட ஒரு விஷயத்த சொல்ல, கேட்க வரமுடியும். உன்கிட்ட சொல்லிட்டு தான எல்லாமே செய்றேன், அப்பயும் இப்டி இருக்க” என சொல்லி முடிக்கும் முன் கண்ணீர் வந்து விட்டிருந்தது. 

 

எழுந்தமர்ந்தவர், “சரி சொல்லு, என்ன சொல்லணும்?” என்க. 

 

கண்ணை தொடைத்தவள், “இன்னைக்கு காலேஜ்ல என் டிபார்ட்மெண்ட் சீனியர் ஒருத்தன் என்ட்ட ப்ரொபோஸ் பண்ணுனான், நா என்ன செய்யன்னு முழிக்குறதுல, நாளைக்கு உன் பதில்ல சொன்னா போதும்னு சொல்லிட்டு போயிட்டான்”. 

 

“இதெல்லாம் வயசு பொண்ணுங்க வாழ்க்கையில சகஜம் தான், நாம தான் கண்டுக்காம போயிடணும், நாளைக்கும் வந்து நின்னா, இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது, எங்க அம்மா ஒத்துக்க மாட்டாங்கன்னு சொல்லிடு. அதையும் மீறி வந்தா உன் டிபார்ட்மெண்ட் தான உன் ஃபேக்கல்டி அல்லது ஹெச்.ஓ.டி., கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடு. என்ன வர சொன்னா நா பேசிக்கிறேன், இதுக்கு ஏன் இப்டி குழம்பிட்டு கெடக்க, பேசாம தூங்கு” என படுக்கப் போக, 

 

“நா சொல்லியே முடிக்கல” ௭ன்றாள் முறைப்புடன், 

“இன்னுமென்ன?” ௭ன்றார் ஜெயந்தி. 

 

“இத நா பிரஸிடெண்ட போய் சொன்னேன். அவங்க என்னன்னா, நீ ஏன் அவன்கிட்ட உடனே முடியாதுன்னு சொல்லலன்னு கோவிச்சுட்டு போயிட்டாங்க. நா என்ன செய்ய நீ சொல்லு?” என நிறுத்த, முறைத்த ஜெயந்தி, `

“போடி வேலைய பாத்துட்டு” என படுத்துக்கொண்டார். 

 

“ஏதாவது பதில் சொல்லிட்டு படுமா, நீயும் இப்டி பண்ணுனா நா ௭ன்ன பண்ண?” என இவள் மேலும் மேலும் நச்சரிக்க. 

 

“இம்சை பண்ணாத எழில், உனக்கு தான் உன் பிரச்சனைய சொல்றதுக்கு அம்மாவுக்கு முந்தின ஆள் இருக்கே, பின்ன என்ன? நீங்களே பேசித் தீர்த்துக்கோங்க” என அவர், அவர் பங்குக்கு முறுக்கிக் கொள்ள. 

 

“நீயும், அப்பாவும் எப்பவாது சண்டை போட்டு ஒருத்தர ஒருத்தர் சமாதானம் ஆகுறத பாத்துருந்தேன்னா எனக்கே தெரிஞ்சுருக்கும். நீங்க ரெண்டு பேரும் பேசியே பாக்றது அதிசயமான விஷயமா இருக்கும் இந்த வீட்ல, அப்றம் எங்க எனக்கு இதெல்லாம் தெரியப்போகுது” என எரிச்சலில் புலம்பி விட்டு எழிலும் படுத்துவிட. 

 

ஜெயந்திக்கு நிஜமாகவே இந்த இடத்தில் ஒரு அம்மாவாக எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என புரியாததால் மட்டுமே படுத்துவிட்டார். 

 

‘பெண்ணை கட்டி கொடுத்திருந்தால் மாப்ள மனசு கோணாம நடந்துக்கோன்னு சொல்லலாம். இதே ப்ரண்ட்டா இருந்தா கூட உன் பிரண்டு தான அட்ஜஸ்ட் பண்ணி போயேன்னு சொல்லலாம், புதுசா ஒருத்தன் பொண்ணு பின்னாடி வாறான்னு ஃபீல் பண்றதா?, இல்ல இவன் தான் பொண்ண கட்டிக்கப்போறான்னு பிக்ஸ் பண்ணினவன் தான சாரி சொல்லி காம்ப்ரமைஸ் ஆயிடுன்னு சொல்றதா? இல்ல இது தான் நல்ல சான்ஸ் லவ்வு கவ்வ ௭ல்லாம் விட்டு தொலைச்சிட்டு படிப்ப மட்டும் பாருன்னு சொல்றதா? இப்படி பல குழப்பத்தில் மாட்டிக்கொண்டார். 

 

குழப்பி விட்டவளோ ஹாயாக தூங்கிவிட, திரும்பி அவளை பார்த்தவர் இவ இவளையும், ப்ரபலத்தனையும், என்னையும் அவ அப்பாவுமா இருக்குற ஸ்தானத்துல வச்சு பாக்குற அளவுக்கு என் பொண்ணு வந்துட்டாளா?’ என சுய ஆலோசனையில் இறங்கி பின்னிரவுக்கே கண்ணயர்ந்தார்.

 

மறுநாள் சீக்கிரமே காலேஜ் வந்துவிட்டாள் ஆறெழில், ப்ரகலத்தனும் வந்திருந்தான். திரும்பிப் பார்த்தாள், ‘நேத்து மூஞ்ச திருப்பிட்டு போனாங்கள்ள இப்ப நாமளும் போவோம். என்ன செய்றாங்கன்னு பாப்போம்?’ என நினைத்துக் கொண்டே அவன் அமர்ந்திருந்த மரத்தைத் தாண்டி சென்றாள். 

 

எந்த ரியாக்சனும் அவனிடம் இல்லை. ‘ஒருவேள நம்மள கவனிக்கலயோ?’ என நினைத்துக்கொண்டு அவன் அமர்ந்திருந்த மரத்தைச் சுற்றிக் கொண்டு மறுபடியும் அவனை கிராஸ் செய்து சென்றாள். குனிந்து எழுதியவன், எழுதிக் கொண்டே இருந்தானே தவிர இவளைக் கண்டு கொள்ளவில்லை. 

 

‘ச்ச அப்டி குனிஞ்சிக் கடந்து அந்த புக்குல என்னத்த தான் தேடுறாங்களோ தெரியல, டைம் ஆயிடுச்சே நேத்து சண்ட போட்டு அனுப்புனவல இன்னும் காணுமேன்னு அக்கற கொஞ்சமாது இருக்கா, சரியான லூசு ப்ரெசிடெண்ட்’ என மரத்துக்குப் பின் நின்று திட்டிவிட்டு, முடிவாக ‘இதுதான் லாஸ்ட், இந்த டைமு நம்மள கூப்பிட்டு நிறுத்தலன்னா, விறுவிறுன்னு கிளாஸ்க்கு போயிடுவோம்’ என முடிவு எடுத்துக் கொண்டு, இந்த முறை கொஞ்சம் நெருங்கி அவனை கிராஸ்  செய்து போக, அவனைத் தாண்ட போகையில், அவள் கை பிடித்து இழுத்தான், அவன் மேலேயே சென்று பேக்கோடு  விழுந்தாள். 

 

பின் அவனே அவளைப் பிடித்து பக்கத்தில் அமர வைக்க, குனிந்து கொண்டே அருகில் அமர்ந்தாள்.

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
23
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்