Loading

மெல்லினம் 38

இரவு வீட்டிற்கு வந்த கதிருக்கு, திறந்திருந்த வீடு குழப்பத்தை கொடுத்தது.

மாலை தான் ராகேஷ் அழைத்து விவரத்தை கூறியிருந்தான். அவனும் முல்லை வந்ததை கூறவில்லை. வீட்டில் யாரும் இருக்கமாட்டார்கள் என நினைத்து வந்தவனிற்கு, யார் இருக்கிறார்கள் என்றே குழப்பமே.

எப்போதும் வீட்டின் ஒரு சாவி அவனிடம் இருக்கும்.

கேட்டினை திறந்து, காரினை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தவனின் நாசிகளை, உணவின் மனம் நிறைக்க சட்டென நினைவு வந்தவனாக, வெளி வாசல் லைட்டை போட்டு முல்லையின் வண்டி நிற்கிறதா, என எட்டி பார்க்க அவன் எதிர்பார்த்தது போல் அவளின் வண்டி நின்றிருந்தது.

“வந்துட்டாளா!” என்றவனின் இதயம் துள்ளி குதிக்க, அவளை காண வேண்டி அவன் மனம் உந்தி தள்ள, முகம் கொள்ளா சிரிப்புடன் சத்தம் காட்டாமல், மெதுவாக சமையலறையினை எட்டி பார்த்து அவளை கண்களில் நிறைந்து கொண்டவன், அவன் வந்த தடம் தெரியாது மெல்ல மேலேறி சென்று விட்டான்.

கதிர் வருவதற்குள் சமைத்து முடிக்க வேண்டும், என்ற பரபரப்பில் இருந்தவளிற்கு மற்றதில் கவனம் செல்லவில்லை.

“ஐ…வந்துட்டா, அப்போ அத்வியும் வந்திருப்பானே” என கூறியவனுக்கு, அத்வி அங்கே இருப்பதற்கான அறிகுறி இல்லாது போக, சீதாவிற்கு அழைத்து விட்டான்.

அவள் எடுத்ததும் அத்வி அங்கே இருக்கிறானா, என கேட்டு உறுதி செய்தவன், அவனிடம் இரண்டு வார்த்தைகளை பேசி விட்டு, உடை மாற்றி வந்தவனிற்கு கட்டிலின் ஓரத்தில் இருந்த டேபிளில் ஏதுவோ மின்னி அவனது கவனத்தை ஈர்க்க..! அருகில் சென்று அதனை எடுத்து பார்த்தவனிற்கு, ஓடி சென்று முல்லையை மூச்சு முட்ட இறுக்கி அணைக்கும் வேகம் எழ, தன்னை கட்டுப்படுத்தி கொண்டு அச்சிலைக்கு, ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தவனின் கண்களின் ஓரம் இரு கண்ணீர் துளி.

அவன் எதிர்பார்த்த முல்லையின் காதல், இதோ இதிலேயே அவனிற்கு தெரிந்து விட்டதல்லா??

எடுத்ததை அந்த இடத்திலேயே வைத்து விட்டு கீழிறங்கி சென்றவன் “அவ்வளவு சொல்லியும் என்னை விட்டு போனாள இருக்கு இன்னைக்கு” என பல்லை கடித்தவன், முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு சமையலறை வாயிலில் நின்று விட்டான்.

அவள் திரும்புவாள் என நினைத்து நின்றவனுக்கு, அவள் இப்போது திரும்புவது போல் இல்லாததும் “ம்ஹீம், முடிஞ்சிடுச்சுன்னா கொஞ்சம் நகருங்களேன்” என வாய் விட,

சட்டென கேட்ட கதிரின் குரலில் துள்ளி குதித்தவள், அவனை கண்டதும் முகம் பிரகாசமாக “கதிர்!!” என்றவாறு அவன்‌ அருகில் செல்ல முயல,

தன்னை கண்டதும் பூவாய் மலர்ந்து விகாசித்த அவளின் முகத்தினை கண்டு உள்ளுக்குள் ரசித்தவன், அவள் அழைத்தது கேட்காதது போல் முகத்தை திருப்பி கொண்டு, அவள் அருகே சென்றவன் அவளின் வயிற்றில் தன் விரலை குத்தி, நகர சொன்னவன் அவள் ஏற்கனவே செய்து வைத்திருந்த பாதர்த்தங்களை, இரண்டு கைகளிலும் எடுத்து கொண்டு சென்று விட்டான்.

அவன் செய்கையில் சிரித்தவள் கடைசியாக அடுப்பில் இருந்ததையும், இறக்கி பாத்திரத்தில் மாற்றி விட்டு அதனையும் எடுத்து செல்ல, அதற்கு முன்பே அவன் உண்ண ஆரம்பித்திருந்தான்.

அவன் ஏதாவது பேசுவான் என எதிர்பார்த்து அவனின் முகத்தையே பார்த்தவாறு நின்றிருந்தவள், அது நடக்காது கடுகடுப்பில் தானும் சேரினை இழுத்து போட்டு உண்ண ஆரம்பித்தவளின் செய்கையில், அவனது இதழ் கடையோரம் கள்ளப் புன்னகை தோன்றியது.

சரி, உண்டு முடித்துவிட்டு பேசலாம் என அவள் நினைத்தால், ஆளுக்கு முன் அவள் செய்து வைத்ததை வக்கணையாக மொக்கி விட்டு எழுந்து விட்டான்.

இவளும் அவசர அவசரமாக உண்டு விட்டு அவன் பின் செல்ல, சிங்கினில் தட்டினை போட்டவன் அவள் முகம் பாராது மேலேறி சென்றுவிட,

“என்னடா!” என்றானது இவளுக்கு.

பின் சிங்கில் இருந்த பாத்திரங்களை கழுவி வைத்தவளிற்கு, அவள் மாலை செய்து கொண்டிருந்த வேலை நினைவு வர வேகவேகமாக கழுவியவள் “சிலையை பாரத்திருப்பாரா? எப்புடி ரியாக்ட் பண்ணுவாரு” என்ற ஆர்வத்தில் பாலை எடுத்து கொண்டு, கதவினை பூட்டி விட்டு அவள் மேலேறினாள்‌.

உள்ளே சென்ற நேரம் அத்வியுடன் அவன் பேசி கொண்டிருக்க, அவனின் முகத்தினில் எதையோ தேடியவள், அது இல்லாத போகவும் அவன் அருகில் சென்றவள் “என்னங்க பால் எடுத்துக்கோங்க” என அவனிடம் பதில் இல்லை.

சரியாக கேட்கவில்லையோ, என நினைத்து இவள் மீண்டும் இருமுறை கூற, அப்போதும் பதிலில்லை.

வேண்டுமென்றே செய்கிறான் என புரிய “கதிர் பால் எடுத்துங்கோங்க” என பல்லை கடிக்க, அவள் முகம் பாராது “அங்க வச்சிடு” என அருகே இருந்த ஸ்டூலினை கைகாட்டியவன், மீண்டும் அத்வியிடன் பேச ஆரம்பித்து விட்டான்.

சிலையினை அவள் எங்கு வைத்தாளோ அங்கயே இருக்க, “பாக்கலையோ??” என் நினைத்தவள் கட்டிலில் அவனருகே வந்து அமர்ந்து கொண்டவள், அவளும் அத்வியிடம் பேச ஆரம்பித்தாள்.

அவளின் நெருக்கம் அவளை தடுமாற செய்ய “அதி கண்ணா டைம் ஆயிடுச்சு தூங்கு” என்னறதோடு அழைப்பை துண்டித்தவன், எதுவும் பேசாது பாலை எடுக்க அப்போது தான் இரண்டு டம்ளர்கள் இருப்பதை கவனித்தவன், கண்டும் காணாதது போல் ஒன்றை மட்டும் எடுத்து குடிக்க ஆரம்பித்து விட்டான்.

அவன் தனக்கும் எடுத்து தருவான் அதை வைத்து பேச்சை ஆரம்பிக்கலாம், என நினைத்த முல்லை அமர்ந்திருக்க ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தும் வீம்பாக அவள் அமர்ந்து கொள்ள அவனும் விட்டு விட்டான்.

அவனின் செய்கையில் ‘நிஜமா கோவமா இருக்காங்களோ’ என நினைத்தவள் மீண்டும் அவளாகவே பேச்சை ஆரம்பிக்க நினைத்து அந்த சிலையினை கையில் எடுத்தவள் “கதிர் இதை பாத்தீங்களா” என அவனிடம் காட்ட,

அதற்குள் குடித்து முடித்திருந்தவன் டம்ளரை வைத்து விட்டு, அவள் காட்டியதை இம்மியும் மதிக்காது படுத்து போர்வையை போர்த்தி கொண்டான்.

அவனின் செயல் முகத்திலடிப்பது போல் இருந்ததில் அவள் கண்கள் கலங்கி விட, சிலையினை எடுத்த இடத்திலேயே வைத்தவள் லைட்டினை அணைத்து விட்டு அவளும் படுத்து விட்டாள்.

அவனின் கோபம் அவளை பாதிக்க கண்களில் நீர் பெருகியது. இருள் சூழ்ந்திருந்த அறையில், திடீரென மெல்லிய வெளிச்சம் பரவி அவள் முகத்தில் அடிக்க, கண்களை சுருக்கி மெதுவாக திறந்தவள், திரும்பி வெளிச்சம் வந்த இடத்தினை பார்க்க,

அவளிற்கு நேர் எதிரே இருந்த சுவற்றில், கருப்பு நிறத்தில் சில்வரால் ஆன பெரிய இதயமும், அதனுள் கதிர் என்ற பெரிய எழுத்துகளில் அவனது பெயரும், கீழே முல்லை என்ற அவளது பெயரும், இருவருது பெயரையும் குட்டி இதயம் இணைக்க, அதில் அத்வி என்ற பெயரும் இருக்க அந்த இதயத்தை சுற்றி சிறு சிறு அலங்கார விளக்குகள் எரிய, அதனுள் இருந்த அவர்களின் பெயர்கள் வெள்ளை நிறத்தில் பளீச்சென எரிந்து அந்த அறையை பிரகாசமாக்கி கொண்டிருக்க,

பார்த்துவிட்டு கண்கள் விரிய அமர்ந்திருந்தவள், திரும்பி கதிரை பார்க்க இன்னமும் போர்வையை போர்த்திய படி தான் இருந்தான்.

ஆனால் அவன் உறங்கவில்லை என அவனின் அசைவுகளில் தெரிந்து கொண்டவள் “யூ….சீட்டர்!!!” என்ற வார்த்தைகளோடு அவனின் மேல் பாய்ந்தவள் அவனை அடிக்க ஆரம்பித்திருந்தாள்.

அவளின் தாக்குதல்களை சிரிப்புடன் வாங்கி கொண்டு, சிறிது நேரம் அவளை அடிக்க விட்டு வேடிக்கை பார்த்து, பின் மொத்தமாக அவளை வளைத்து பிடித்தவன்,

“கொஞ்ச நேரம் மூஞ்சி காட்டுனா அதை தாங்க முடியாம அம்மணிக்கு கண்ணுல தண்ணி வந்திருச்சு” என இமையோரம் தேங்கி நின்ற நீரினை சுண்டி விட்டவாறு‌ அவன் கூற,

“தெரிஞ்சே என்னை அலைய விட்டுறுகீங்கள்ள” என அவள் முகத்தை சுருக்க,

“கொஞ்ச நேரமே உன்னால தாங்க முடியலையே, என்னை ஒரு வாராமா இப்புடி தான அலைய விட்ட” என அவளின் கன்னம் கிள்ள,

“நானா உங்களை பாக்க வேண்டாம்னு சொன்னேன்??”

“அப்புடி நான் இருந்ததால தானே, நீ இன்னைக்கு என்னை தேடி வந்துருக்க. இதேது நான் வந்து பார்த்திருந்தா வந்துருப்பியா??” என

பதிலின்றி அமைதியானாள்.

“என்னவாம் சிலை எல்லாம் பயங்கரமா இருக்கு” என அவன் திசை திருப்ப

“பாத்துட்டீங்களா??” என ஆர்வமானாள்.

‘பாத்தாச்சு பார்த்தாச்சு மொதல்லயே பார்த்துட்டேன்”

“பிடிச்சிருக்கா??”

“ம்ம்ம்ம் ரொம்ப ” என்றவனின்‌ அணைப்பு இறுக,

“இது எப்போ வாங்குனீங்க??” என சுவற்றில் இருந்ததை காட்டி அவள் கேட்க,

“ஊருக்கு போறதுக்கு முன்னாடி ஆர்டர் போட்டது.‌ உனக்கு சர்ப்ரைஸ் தரலாம்னு நெனைச்சேன். எங்கே அதுக்குள்ள நீ தான் எனக்கு ஷாக் கொடுத்து, உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டியே” என்க,

இருளில் அழகாய் மின்னி கொண்டிருந்ததில், அவள் மீதான கதிரின் காதலும் சேர்ந்து மின்ன மெல்ல மெல்ல தன் வசம் இழந்தாள் முல்லை.

“அப்பறம் மாமன்ன அசத்த பயங்கரமா சமைச்சிருப்ப போலயே” என்றவனின் இதழ்கள் சிரிப்பில் வெடிக்க உதடு கடித்து அதனை அடக்கினான்.

அவனின் சிரிப்பில் பொய்யாக முறைத்தவள் “எப்புடி விரைப்பா சாப்பிட்டு ஓடுனீங்க ஒரு வார்த்தையாச்சும் பேசுனீங்களா??” என்றவளின் சிணுங்கலில் வாய் விட்டு அவன் சிரிக்க,

மெல்ல மெல்ல அவள் வசம் இழந்து கொண்டிருந்தவள் அவனின் இந்த சிரிப்பில் மொத்தமாக மயக்கம் கொண்டாள்.

கன்னம் வற்றி போய் கருவளையம் கண்டவனின் முகம், மகிழ்ச்சியில் பூரிப்பில் ஜொலிக்க அவனின் அந்த வசீகர சிரிப்பு அவளையும் வசீகரிக்க, அவளையும் மீறி அவனது கன்னத்தில் தனது இதழ்களை பதித்து விட

அவ்வளவு தான்! அவ்வளவே தான்! நேற்றைய இரவில் இருந்து அவன் அணையிட்டு வைத்திருந்த அவள் மீதான உணர்வுகள், அணையை உடைத்து ஆக்ரோஷமாக வெளிவர, ஒரு நொடி கண்களை இறுக மூடி தன்னை நிதானித்து கொள்ள முயன்றவன், அது முடியாமல் போகவே அடுத்த நொடி அவளை, சூறாவளியை மாறி மொத்தமாக அவளை தனக்குள் சுருட்டியிருந்தான்.

அவனிடம் சிறைபட்டிருக்ககும் அவளது இதழ்கள், நடப்பவை கனவல்ல என்பதை உணர்த்த, அவனின் ஆவேசத்தில் முதலில் திகைத்து, கரைந்து, பின் அவனில் அடங்கினால் முல்லை.

பல வருடங்களாக அவள் மேல் வைத்திருந்த காதலை, மழையென அவளின் மேல் கொட்டி தீர்க்க அத்தனையையும் தாங்கி அவனையும் தாங்கி நின்றாள்.

பெயரை போலவே தித்தித்தவளை விட மறுத்து, மேலும் மேலும் அவளில் படர்ந்து அவளினுள் மூழ்கினான் கதிர்.

“இங்க தான சிலையை வச்சு போட்டோ எடுத்த, இது எனக்கு மட்டுமேயான இடம். இனி இப்புடி பண்ணுவியா பண்ணுவியா??” என கேட்டு கேட்டு அவளது பெண்மைகளில் முகம் பதித்து அவன் செய்த அட்டகாசத்தில் தவித்து தான் போனாள்.

அவனையும் அறியாது அவளின் பல வருட காதல் உணர்வுகள் பீறிட்டு எழ, அதனை மொத்தமாக அவள் மேல் கொட்டி தீர்த்தவனின் இதழ்கள் இடை விடாது “ஹனி டால்” என பிதற்றியவாறு அவளின் இதழ்களில் ஒட்டி கிடந்தன.

அழகாய் அவளுக்கு தன்னை கொடுத்து, முற்று முழுதாக அவளை தனக்குள் பெற்று கொண்டான். கதிரின் கைவளைவில் முல்லை மலர்ந்து மணம் வீச, அதில் மயங்கி போய் நின்றான் கதிரழகன்‌.

முகம் முழுதும் சந்தோஷத்தில் மின்ன உறங்கும் அவனையே பார்த்தவளின் மனதில் தோன்றியது எல்லாம் ஒன்றே..!

‘அப்படி என்ன இருக்கிறது என்னிடம், இத்தனை தன்னை பிடிக்கும் அளவிற்கு??’ என்பது தான்.

 

“எத்தனை உள்ளது பெண்ணில்!!!!

அதில் எது மிக பிடித்தது என்னில்!!”

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
23
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. செல்லாக் குட்டி.. ரொமான்ஸ் கூட அடாவடியா பண்ணுவான். கதிர் 😜😜😜❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥