Loading

நிலவை வெறித்துக் கொண்டிருந்த நிலவுப் பெண்ணவளின் விழிகள் தன் வாழ்க்கையை எண்ணிக் கண்ணீர் சிந்தின.

சகுந்தலாவுக்கு இன்னுமே ரிஷிகேஷின் துரோகத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதனைப் பற்றி நினைக்க நினைக்க உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

ஆனால் தன் மகனுக்காக‌ மட்டுமே மூச்சைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டு இருந்தாள்.

எந்தப் பிடிமானமும் இன்றி வாழ்க்கையையே வெறுத்துப் போய் நிராதரவாக நின்றவளின் வாழ்வில் ஒளியாய் வந்த வரம் பரத்.

இந்த ஒரு வாரத்தில் நடந்தவற்றை எல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை.

போதாக்குறைக்கு துஷ்யந்தின் கோபமான முகம் கூட அவளின் நினைவில் வந்து மனதை அழுத்தியது.

இவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருந்தால் தன் மன அமைதி தான் கெடும் என்பதால் அனைத்துதையும் தள்ளி வைத்து விட்டு இரவு உணவைச் சமைப்பதில் கவனம் செலுத்தினாள் சகுந்தலா.

பரத்தை எழுப்பி அவனுக்கு ஊட்டி விட்டு விட்டு, மருந்து மாத்திரைகளையும் கொடுத்து விட்டு உறங்க வைப்பதற்குள் நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது.

வீட்டை ஒதுங்க வைத்து விட்டு உறங்க வரலாம் என்று அறையைப் பூட்டிக் கொண்டு வெளிய வந்தவளின் முன் திடீரென வந்து நின்றான் ரிஷிகேஷ்.

அதுவும் ரிஷிகேஷிடம் இருந்து கும்மென ஒரு வாசம் வந்து சகுந்தலாவுக்கு குமட்டச் செய்தது.

மூக்கு முட்டக் குடித்து விட்டு வந்திருந்தவனின் பார்வை சகுந்தலாவின் முதுகுத்தண்டைச் சில்லிடச் செய்தது.

சகுந்தல்வோ தன் பயத்தை வெளிக்காட்டாது ரிஷிகேஷைக் கண்டுகொள்ளாது அங்கிருந்து அகல முயன்றாள்.

சட்டென அவளின் மணிக்கட்டைப் பிடித்து இழுத்தான் ரிஷிகேஷ்.

ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்த சகுந்தலா ரிஷிகேஷின் பிடியில் இருந்து தன் கரத்தை விடுவிக்கப் போராடினாள்.

ஆனால் ரிஷிகேஷின் பிடியோ இரும்புப் பிடியாக இருந்தது.

ரிஷிகேஷின் முகத்திலோ விஷமப் புன்னகை.

“எ…என்ன பண்ணுற? விடு என் கைய.” என்றவாறு தன் கரத்தை இழுத்தாள் சகுந்தலா.

“அது எப்படி செல்லம் அவ்வளவு ஈஸியா உன்ன விடுறது? இந்த அஞ்சு வருஷமா என் கண்ணுலயே விரல விட்டு ஆட்டிட்டியே. என்னைப் போலீஸ்ல வேற பிடிச்சு கொடுத்த. அதுக்கெல்லாம் சேர்த்து உன்ன பழி வாங்க வேணாமா?” எனக் கேட்டான் ரிஷிகேஷ் வன்மமாக.

“ச்சீ விடுடா… உன்ன பார்க்குறதையே அசிங்கமா நினைக்கிறேன் நான். மரியாதையா கைய விடு.” என்றாள் சகுந்தலா கோபமாக.

அதனைக் கேட்டு அவ் அறையே அதிரச் சிரித்த ரிஷிகேஷ், “ப்ச்… என்ன பேபி நீ? உனக்கு என்ன ஷார்ட் டைம் மெமரி லாஸா? நான் சொன்னது எல்லாம் அதுக்குள்ள மறந்துடுச்சா? இப்போ நினைச்சா கூட என்னால உன்னையும் உன் பையனையும் பிரிக்க முடியும். அதுக்கப்புறம் ட்ரீட்மென்ட் கூட இல்லாம உன் பையன் அநாதை ஆசிரமத்துல தான் இருக்கணும். எப்படியும் கொஞ்ச நாள்ல ட்ரீட்மென்ட் இல்லாம போய் சேர்ந்துடுவான். அப்படியே பிழைச்சிட்டா கூட ட்ராஃபிக்ல பிச்சை தான் எடுக்க வேண்டி வரும்.” என மிரட்டவும் சகுந்தலா மூச்சு விட மறந்து போனாள்.

“அதுவும் இல்லாம இந்த அழக அனுபவிச்சு ரொம்ப வருஷம் ஆகிடுச்சு. நீ வேற முன்ன இருந்தத விட நச்சுன்னு இருக்க. அழகை ஆராதிக்கலன்னா தப்பாகிடும்ல.” என்றான் ரிஷிகேஷ் நக்கலாக.

சகுந்தலாவின் அதிர்ச்சியைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய ரிஷிகேஷோ சகுந்தலாவின் இரண்டு கரங்களையும் ஒரு‌ கையால் பிடித்து பின்னால் வளைத்தான்.

மறு நொடியே சகுந்தலா எதிர்த்துப் பேச வாய் திறக்க முன் அவளின் இதழ்களைக் கொய்தவன் நொடியும் தாமதிக்காது மறு கையால் சகுந்தலா அணிந்திருந்த உடையைக் கிழித்து வீசினான்.

“ம்ம்… ம்ம்ம்…” என இதழ்களைப் பிரிக்க முடியாமல் ரிஷிகேஷின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் போராடிய சகுந்தலாவின் விழிகளில் இருந்து தன் இயலாமையை எண்ணி கண்ணீர் கொட்டியது.

இந்த சில நாட்களில் கிடைத்த அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியால் அம் மனித மிருகத்திடம் போராடும் அளவுக்கு பெண்ணவளின் உடலில் வலுவற்று அப்படியே மயங்கித் தொய்ந்து கீழே சரிந்தாள்.

போதையின் பிடியில் இருந்தவனுக்கோ அவை எவையும் கருத்தில் படவில்லை.

அப்படியே தெரிந்து‌ இருந்தாலும் நிச்சயம் அதனைப் பெரிதாகக் கண்டு கொள்ள மாட்டான்.

ரிஷிகேஷின் தேவையாக இருந்தது எல்லாம் பெண்ணவளின் சதைப் பிண்டம் மட்டும் தான்.

முதல் முறை போலவே விடிய விடிய சகுந்தலாவைச் சீரழித்து விட்டே உறங்கினான் ரிஷிகேஷ்.

இங்கோ மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் வந்த துஷ்யந்திற்கு மனம் நிலை கொள்ளவே இல்லை.

என்ன தான் வீம்பாக இருக்க முயன்றாலும் மீண்டும் மீண்டும் சகுந்தலாவின் வார்த்தைகள் தான் அவனைப் போட்டு அரித்தது.

அதுவும் ரிஷிகேஷைப் பற்றி நினைக்கும் போதே துஷ்யந்தின் கழுத்து நரம்புகள் கோபத்தில் புடைத்தன.

ஹாலிலேயே வெகுநேரம் அங்கும் இங்கும் நடந்தும் அவன் மனம் அமைதி அடைய மறுத்தது.

இதற்கு மேல் பொறுக்க முடியாது என உடனே கார் சாவியை எடுத்துக் கொண்டு வாசல் வரை சென்றவனை சந்திரசேகரனின் குரல் தடுத்து நிறுத்தியது.

“எங்க கண்ணா இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்ட?” எனக் கேட்ட தந்தையின் பக்கம் திரும்பி, “அது அப்பா… நான்… நான்… அது…” என வார்த்தைகள் வராமல் தடுமாறினான்.

“என்னாச்சு துஷ்யந்த்? இவ்வளவு லேட் ஆகி எங்க கிளம்பிட்டன்னு தானே கேட்டேன். அதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற?” எனக் கேட்டார் சந்திரசேகரன் சந்தேகமாக.

தந்தையின் அழுத்தமான பார்வையில் துஷ்யந்தால் அவரிடம் பொய் ஒன்றைக் கூறக் கூட முடியவில்லை.

“ப…பரத்த பார்த்துட்ட வரலாம்னு கிளம்பினேன் ப்பா.” என்றான் துஷ்யந்த் அவசரமாக.

“அதுக்கு இப்போ என்ன அவசரம்? காலைல போய் இருக்கலாமே.” என்ற சந்திரசேகரனின் பார்வை இன்னுமே துஷ்யந்தின் மீது அழுத்தமாகப் படிந்தது.

இதற்கு என்ன பதில் கூறிச் சமாளிக்க எனத் தெரியாமல் துஷ்யந்த் விழிக்க, “இங்க வந்து கொஞ்சம் உட்கார் கண்ணா. உன் கூட கொஞ்சம் பேசணும்.” என்றவாறு சோஃபாவைக் காட்டினார்.

“இல்லப்பா அது… நான் வந்து… போய்ட்டு…” என துஷ்யந்த் தடுமாற, சந்திரசேகரனின் பார்வை கடுமையானது.

அது என்னவோ பெற்றோருக்குக் கீழ்படிந்து நடந்தே வளர்ந்தால் என்னவோ இவ்வளவு வளர்ந்தும் விஷேட வைத்திய நிபுணர் ஆகியும் கூட தந்தையின் ஒற்றைப் பார்வைக்கே கட்டுப்பட்டு விட்டான் துஷ்யந்த்.

சோஃபாவில் வந்து அமர்ந்த துஷ்யந்தோ ஒருவித அலைப்புறுதலுடன் பார்வையை அங்கும் இங்கும் அலைபாய விட, மகனின் பதட்டத்தைக் கணித்த தந்தையோ அவனின் கரத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டான்.

உடேன திரும்பி தந்தையின் முகம் பார்த்த துஷ்யந்தின் விழிகள் சட்டென ஈரமாகின.

துஷ்யந்தின் கரத்தை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்த சந்திரசேகரன், “துஷ்யந்த்… ஒரு விஷயத்த நான் திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் இல்லன்னு நினைக்கிறேன். எதையும் யோசிச்சு சுயமா முடிவு எடுக்குற வயசும் பக்குவமும் உன் கிட்ட இருக்கு. எல்லாத்துக்கும் மேல பேரென்ட்ஸா நாங்க உனக்காக பண்ணுற எல்லாமே உன் நல்லதுக்காக மட்டும் தான்னு நீ புரிஞ்சிக்கணும்.” என்கவும் துஷ்யந்திடம் பெரும் அமைதி.

“ஹ்ம்ம்… நான் உன்ன பரத்தையோ அந்தப் பொண்ணு சகுந்தலாவையோ சந்திக்க வேணாம்னு சொல்லல. ஆனா இப்படி வேணாம். நீ இப்படி நைட்டெல்லாம் யெஸ்ட்லெஸ்ஸா அங்கேயும் இங்கேயும் நடக்குறதும் இப்படி மிட் நைட்ல எதைப் பத்தியும் யோசிக்காம அங்க போறதும் நல்லா இல்ல கண்ணா. முன்ன நீ தனி ஆள். இப்போ உன்ன நம்பி ஒரு பொண்ணு தன்னோட வாழ்க்கையையே ஒப்படைக்க போறா. அப்போ அந்தப் பொண்ணுக்கு நீ உண்மையா இருக்கணும்ல.” என்றார் சந்திரசேகரன்.

“அப்பா நீங்க என்னவோ தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க. நான் வந்து…” என ஏதோ கூற விழைந்தவனை இடையிட்டுத் தடுத்த சந்திரசேகரன், “நான் உன் அப்பா துஷ்யந்த். உன்ன விட ரெண்டு மடங்கு வயசும் அனுபவமும் எனக்கு இருக்கு. நீ சங்கடப்படக் கூடாதுன்னு தான் இவ்வளவு நாளும் நான் நேரடியா இதைப் பத்தி உன் கிட்ட எதையும் பேசல. ஆனா உன் அம்மாவுக்கு தெரியலன்னாலும் ஒரு அப்பாவா, ஒரு ஆணா உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும். ஆமா நான் சுயநலமா தான் நடந்துக்குறேன். அதை நான் ஓபன்னா ஒத்துக்குறேன். எந்த பேரென்ட்ஸா இருந்தாலும் தன்னோட புள்ளன்னு வரும் போது செல்ஃபிஷா தான் இருப்பாங்க. அதுவும் இல்லாம நான் அந்தப் பொண்ணோட வாழ்க்கைக்கும் சேர்த்து தான் யோசிச்சு சொல்றேன். இந்தக் காலத்துல சிங்கிள் மதர் அப்படிங்குறது சாதாராணமா இருந்தாலும், ஏன் பாரின்ல எல்லாம் அது ஒரு ட்ரெண்ட் போல நினைக்கிறாங்க. இன்னும் எத்தனை வருஷம் போனாலும் நம்ம நாட்டுல, நம்ம சமூகத்துல சிங்கிள் மதர்ஸ் அனுபவிக்கிற வலியும் வேதனையும் சொல்லிமாளாது. ஆண், பெண் பேதம் இல்லாம எல்லாருமே அந்த சிங்கிள் மதர வார்த்தையாலயே உயிரோட கொன்னு மென்டல் டார்ச்சர் பண்ணுவாங்க. அவங்க கஷ்டத்த முழுசா எடுத்துக்க முடியலன்னாலும் அதை அதிகரிக்கிற மாதிரி நாம எதுவும் பண்ணக் கூடாது கண்ணா. நீ இப்படி மிட் நைட்ல அந்தப் பொண்ணு வீட்டுக்கு போறதால இப்போவே சுத்தியும் எத்தனை பேர் அந்தப் பொண்ண தப்பா பேசுறாங்களா இருக்கும். நம்ம ஈசியா சொல்விடலாம் நாழு பேர் சொல்றதுக்காக அதெல்லாம் உண்மை ஆகிடாது அன்ட் அதெல்லாம் காதுல வாங்காம போய்ட்டே இருக்கணும்னு. ஆனா அனுபவிக்கிறவங்களுக்கு மட்டும் தான் அந்தக் கஷ்டம் தெரியும். நீயே சொல்லி இருக்க பரத்துக்கு அப்பா இல்லன்னு அந்தச் சின்னப் பையன அவனோட‌ சேம் ஏஜ் பசங்களே எப்படி எல்லாம் பேசி இருக்காங்கன்னு. சின்னப் பசங்களே இப்படின்னா பெரியவங்கள சொல்லவா வேணும்? அதனால தான் சொல்றேன் ஒரு விஷயம் பண்ண முன்னாடி ஒன்னுக்கு நாழு தடவை யோசிச்சு ஆராய்ஞ்சு முடிவு பண்ணணும். என்ன? நான் சொன்னது புரிஞ்சதா?”எனக் கேட்ட சந்திரசேகரனிடம் ஆம் எனத் தலை அசைத்தான் துஷ்யந்த்.

“சரி சொல்லு. என்ன பிரச்சினை? ஏன் ஒரு மாதிரியா இருக்க?” எனக் கேட்ட தந்தையிடம் இன்று நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்பித்து விட்டான் தனையன்.

அதனைக் கேட்டதும் சந்திரசேகரனிடம் ஒரு நீண்ட பெருமூச்சு.

“அந்த ரிஷிகேஷ் எவ்வளவு கேடு கெட்டவன்னு தெரிஞ்சும் நான் எப்படிப்பா பார்த்துட்டு சும்மா இருக்க முடியும்?” எனக் கேட்டான் துஷ்யந்த் ஆதங்கமாக.

“அவன் கேடுகெட்டவன்னு அவன் கூட வாழ்ந்த அந்தப் பொண்ணுக்கு தெரியாதா?” எனச் சந்திரசேகரன் கேட்கவும், “அப்பா…” என அதிர்ந்தான் துஷ்யந்த்.

“அப்படி இருந்தும் அந்தப் பொண்ணு அவ வாழ்க்கைல திரும்ப அவனுக்கு இடம் கொடுக்குறான்னா அதுக்கு ஏதாவது தகுந்த காரணம் இல்லாம இருக்காதே.” என்றார் சந்திரசேகரன்.

“அதுக்காக என்னை சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருக்க சொல்றீங்களா?” எனக் கேட்டான் துஷ்யந்த் லேசாகக் துளிர்ந்த கோபத்தோடு.

“ஆமா… ஏன்னா அது தான் உன்னோட லிமிட் துஷ்யந்த். அந்தப் பொண்ணே தெளிவா சொல்லிட்டா உன் டியூட்டி தவிர்த்து வேற எந்த விஷயத்திலும் உன்ன தலையிட வேணாம்னு. அதைக் காப்பாத்துறது தான் உன்னோட மரியாதை. உன் மரியாதைல தான் உன்னோட அப்பா, அம்மா ரெண்டு பேரோட மரியாதையும் தங்கி இருக்கு.” என்றார் சந்திரசேகரன்.

“எப்படிப்பா என்னால சும்மா இருக்க முடியும்? அதுவும் இல்லாம பரத்…” எற என ஏதோ சொல்ல வந்த துஷ்யந்தின் முன் கரம் நீட்டி அவன் பேச்சைத் தடுத்த சந்திரசேகரன், “இதை நல்லா மைன்ட்ல ஏத்திக்கோ துஷ்யந்த். பரத் இஸ் யுவர் பேஷன்ட். ஜஸ்ட் யுவர் பேஷன்ட். வேற எந்தத் தொடர்பும் உங்க ரெண்டு பேருக்கும் இடைல இல்ல. அதை நல்லா புரிஞ்சிக்கோ. இதுக்கு மேல நான் இதைப் பத்தி பேச மாட்டேன். ஒழுங்கா உன் வாழ்க்கைய சரியா அமைச்சிக்கிற வழிய பாரு.” என அழுத்தமாகக் கூறி விட்டு துஷ்யந்தின் பதிலைக் கூட எதிர்ப்பாராமல் அங்கிருந்து கிளம்பினார் அவர்.

அவர் சென்ற வழியையே வெறித்து நோக்கினான் துஷ்யந்த்.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
12
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்