Loading

இந்த நேரத்துல எதுக்கு பார்ட்டி?”என்று எழுந்து அவனருகில் வந்தார் வீரமதி. 

“மாம்… பார்ட்டினா இந்த நேரத்துல தான் இருக்கும். ஃப்ரெண்ட்க்கு நாளைக்கு பெர்த்டே அவனுக்கு சப்ரைஸ் வைக்கத் தான் இந்த நைட் பார்ட்டி. நான் போய் தான் ஆகணும்” என்றான்.

“சப்ரைஸ் பார்ட்டியா?  அப்போ பன்னிரெண்டு மணி வரைக்கும் அங்க தான் இருக்கப் போறீயா???”

“அதுக்கு மேலயும் ஆகலாம் மாம்…”என்றான் தெனாவெட்டாக,

“அதுக்கு மேலயும் ஆகலாமா??? இவங்களை பார்த்தா உனக்கு மனுசங்களா தெரியலியா??  எந்நேரமும் உன் பின்னாடி சுத்துறாங்கன்றனால எப்பயும் உன் கூட வரணும்னு இல்ல. அவங்களுக்கும் ஃபேமலிஸ்  கமிட்மெண்ட்ஸ்னு இருக்கும். அவங்களுக்கும் வீடுனு ஒன்னு இருக்கு புரியுதா? பார்ட்டிக்கு எல்லாம் போக வேணாம் ரூம்க்கு போ !!”என்று கர்ஜித்தார்.

“ஓ.. சிட் இதுக்கு தான் நான் பாடிகார்ட்ஸ் வேணாம் சொன்னேன் கேட்டீங்களா??? இப்போ நீங்க அவங்களுக்காக என்னை கண்டரோல் பண்ணிறீங்க, வாட் இஸ் திஸ் மாம்???”

“இங்க இருக்கற வரைக்கும் நீ சரியா இருந்த. எப்போ நீ ஃபாரின் போனீயோ,  யூ ஆர் டோட்டலி சேஞ்சிடு. இது நல்லதுக்கு இல்ல. இங்க நீ ஒழுக்கமா இருக்கணும். எனக்கு அதுதான் வேணும், இல்ல தோளுக்கு மேல வளர்ந்த பையன் பார்க்க மாட்டேன் , அடி வெளுத்திடுவேன் அம்மா பத்தி தெரியும்ல உனக்கு”

“மாம்… சின்ன பையன போல ட்ரீட் பண்ணாதீங்க என்னை. நம்ம ஸ்டேட்டஸ் இருக்கற  பசங்க’லாம் எப்படி லைஃப்ப என்ஜாய் பண்றாங்க. நீங்க ஏன்மா இன்னும் என்னை கண்ட்ரோல் பண்றீங்க??”

“மத்தவங்கள பத்தி எனக்கு எந்தக் கவலையும் இல்ல. என் பசங்க  எனக்கு ஒழுக்கமா இருக்கணும். முக்கியமா பொண்ணுங்க விஷயத்துல என் பசங்க சரியில்லனு தெரிஞ்சது, கொன்னு போட கூட தயங்க மாட்டேன் மைண்ட் இட் “என்று எச்சரித்தார்.

“மாம்…  திஸ் இஸ் ரெடிக்குலஸ். எந்தப் பொண்ணு கிட்ட நான் தப்பா நடந்தத நீங்க பார்த்தீங்க? இல்ல எந்த பொண்ணாவது உங்க புள்ள என்னை ஏமாத்திட்டான் வந்து நின்றிருக்காளா??  பார்ட்டிக்கு போனா பொண்ணுங்களோட கூத்தடிக்க தான் போறேன் அர்த்தமா?? ஏன் பசங்க கூட எஞ்சாய் பண்ண மாட்டோமா? நீங்க  என்னை என்ன நினைச்சிட்டு இருக்கீங்க புரியல. ஆனா கேவலமாக நினைச்சி வச்சுருக்கீங்க மட்டும் புரியுது மாம். நான் பார்ட்டிக்கு போகல. ஆனா நான் நாளைக்கே லண்டன் போறேன் . இனி இந்தியா பக்கமே திரும்பி வரப்போறது இல்ல… உங்களுக்கு என்னை பார்க்கணும்னா வந்து பாருங்க…” என்று மேலே செல்ல இருந்தவனை தடுத்தார்.

“துருவா!!! நில்லு. எதுக்கு இப்ப நீ லண்டன் போறேன் சொல்லிட்டு இருக்க?”

“பின்ன எனக்கு ! ஃப்ரிடம்  இல்லாத இடத்தில நான் ஏன் இருக்கணும்?? என்னை நீங்க மகனா பார்க்கல. பொறுக்கிய தான் பார்க்கிறீங்க எனக்கு இங்க இருக்க பிடிக்கல மாம் நான் போறேன்”என்று மேலே ஏறியவனை  மீண்டும் தடுத்தார்.

“ஓகே… பார்ட்டிக்குப் போ !! ஆனா பதினொரு மணிக்கு எல்லாம்  நீ இங்க இருக்கணும்…”

“ஸாரி மாம் எனக்கு தேவை இல்ல… நான் எங்கயும் போல… ஆனா நாளைக்கு லண்டன் போறது கன்ஃபாரம்”மேலே ஏறிக் கொண்டே சொன்னான்.

“சரிரி பார்ட்டிக்கு போயிட்டுவா !! நான் எதுவும் சொல்லல “என மகனுக்காக முதல் முறையாக  இறங்கி வந்தார். 

ஏறும் கால்கள் நின்றன .உதடுகள் வெற்றி களிப்பில் விரிந்தன. அவர் புறம் திரும்பியவன், ஆனாலும் காட்டிக் கொள்ளாது”வேணாம் மாம் நான் ஊருக்கே போறேன். இங்க எனக்கு ப்ரீடம் இல்ல… நான் அங்கே போறது தான் எனக்கு நல்லது”என்று தன் நடிப்பைப் போட்டான்.

“ஒன்னும் வேணாம் இங்கயும் உனக்கு ப்ரீடம் இருக்கு. அதே நேரம் சில லிமிடேசன்ஸ்ஸும் இருக்கு. நீ ஃபலோ பண்ணித்தான் ஆகணும்.  இப்போ பார்ட்டிக்கு போ ! மீதி நாளைக்கு பேசிக்கலாம்”என்று முடித்துக் கொண்டார்.

‘மாம் உங்களை மடக்க இப்படி ஒரு டிரம்ப் கார்ட் கிடைக்கும் நான் எதிர்பார்க்கல, இனி  இஷ்டத்துக்கு இருக்க வேண்டியது தான் ‘என எண்ணிக் கொண்டு திரும்பினான் .

“ஆர்  யூ சூர் !! நான் போலாம்ல…”என  நம்பாமல் கேட்டான். 

” சூர் . பட் ஆல்கஹால் லிமிட்ல தான் இருக்கணும்… எந்த பிரச்சினையும் பண்ணக் கூடாது” என்று மிரட்டிட அவை எல்லாம்  அவன் காதில் எட்டிடவில்லை.

“ஓகே மாம்” என்று வாயெல்லாம் பல்லாக கீழே இறங்கி  வந்தான்.

அவர்கள் இருவருக்கும் நடக்கும் உரையாடலைக் கேட்க சலிப்பாக  இருந்தது ஜெஸிக்கு ‘கட்டுப்பாடோடு இவர் இருந்தாலும் இந்தப் பொறுக்கி என்றும் திருந்தவே திருந்தாது’ என்று தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக சலித்துக் கொண்டாள். 

“ஜெஸி !!!  இவங்க மூணு பேரும் துருவ் கூட போகட்டும் நீ வீட்டுக்கு போ. நீங்க மூணு பேரும் மேனேஜ் பண்ணிப்பீங்க தான?” என பெண்ணாக ஜெஸியின்   நலனையும் எண்ணியவள் ரவியை பார்த்து கேட்டார். 

“எஸ் மேம் வீ கேன் மேனேஜ் ! நாங்க சார்ர பார்த்துக்கிறோம். நீங்க போங்க மேம்” என்று ஜெஸியிடம் சொல்ல, அவளும்”ஓகே… பீ கேர்ஃபுல். எதுனாலும் போன் பண்ணுங்க “என்றவள் வீரமதியின் புறம் திரும்பி,

“தேங்கியு மேம் பசங்க பார்த்துப்பாங்க… நாங்க கிளம்புறேன்”என்று கிளம்ப இருந்தவளை தடுத்தான் துருவன்.

“ஹலோ எங்க கிளம்பிட்டிங்க??? நீங்க தான என்னோட சீஃப் பாடிகார்ட், நீங்க இல்லாம நான் பார்ட்டிக்கு போய் எங்க அம்மாவோட எதிரியும் என் சித்தப்பாவோட எதிரியும்  என்னை போட்டு தள்ளவா?? அதெல்லாம் முடியாது நீங்களும் என் கூட வரணும் வந்தே ஆகணும்…” என்று பிடிவாதமாகச் சொன்னான்.

“ஜெஸி எதுக்கு? இவங்க போதாதா??? ஒரு பொண்ணு அன்டைம் வரைக்கும் வெளிய இருக்கணுமா?? அதுவும் குடி கூத்துனு இருக்க  பப்புல, ஜெஸிய உன் கூட அனுப்பி வைக்கணுமா??? முடியாது நான் மாட்டேன். இவங்க மட்டும் போதும் நீ போ”

“மாம், என்ன பேசறீங்க?? நீங்க தானே எனக்கு ஒரு பொண்ண பாடிகார்டா  அப்பாய்ண்ட் பண்ணீங்க. ஏன் நீங்க இதெல்லாம் அப்ப யோசிக்கல?? அப்பவே சொன்னேன் ஒரு பொண்ணால  பாடிகார்டா  24/7 கூடவே இருக்க முடியும்?? இதெல்லாம் நீங்க யோசிக்க மாட்டீங்களா? நான் உன் கிட்ட பாடிகார்ட் வேணும் கேட்கல. அப்படி கண்டிப்பா எனக்கு பாதுகாப்பு கொடுக்கணும்னா எப்பையும் என் கூட இருக்கிறது போல ஒரு மேல் பாடிகார்டா வைங்க…  ஒரு பொண்ணால எல்லாம் முடியும் இனி சொல்லிட்டு இருக்காதீங்க…” ஜெஸியை இளக்காரமாய் பார்த்து விட்டு ரவியை பார்த்து’ வாங்க ‘என்று முன்னே நடந்தான்.

வீரமதிக்கு அடிவாங்கியது போல் இருந்தது. ஜெஸிக்கு மறுபடியும் அவனது திமிரை அடக்க வேண்டும் என்று இருந்தது.  

“ஒரு நிமிஷம்…” முன்னே செல்ல இருந்தவர்களை தடுத்தவள், “நானும் வர்றேன்”என்றாள். 

கண் இமைக்கும் கணத்தில் அவனது உதடுகள் கேலியாக வளைந்து மீண்டன அதை அவள் காணாமலும் இல்லை.உள்ளுக்குள் எழுந்த சினத்தை அடக்கிக் கொண்டு “போலாம்”என்றவளைத் தடுத்தார் வீரமதி.

“நீ போகணும் அவசியம் இல்ல… நான் சொல்றேன் நீ போக வேணாம்”என்றார்.

“பொறுப்ப ஏத்துக்கிட்டது அப்றம். பின் வாங்கக் கூடாது மேம். தன்மானத்தையும் விட்டுக் கொடுக்கவும் கூடாது . அதுவும் பொண்ண குறைவா மதிப்பிடு செய்ற உங்க புள்ளைக்கு பொண்ணோட மதிப்பு என்ன பதிலடி தரவேணாம்?… நான் வர்றேன் மேம்”என்று முன்னே நடக்க, அவருக்கும் அவள் சொன்னதில் பெண்ணாகக்  கர்வமாக தோன்றியது.

‘என்ன பதிலடி தர்றேன் நானும் பார்க்கிறேன்டி’ என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டு காரில் ஏறினான். அவளும் முன் பக்கம் ஏறினாள். ரவி , ஸ்ரீக்கு நடுவே துருவனும் பின் சீட்டில் தன்யா அசோக் அமர்ந்து கொண்டனர்.

தாமதமாக வருவேன் என்று ஆப்ரஹாமிற்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு வெளியே வேடிக்கைப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் தீ பற்றி எரிந்தது. ‘பெண்ணை எப்படி அவன்  குறைவாகப் பேசலாம்? அவர்கள் படும் பாட்டை அவன் அறிந்திருந்தால் அவனால் அவ்வாறு பேச முடியுமா? சாதிக்கும் பெண்கள் எல்லாம் அவன் நினைவில் இல்லையா? கண் முன்னே சாதனையாளராக நிற்கும் தாய் நினைவிற்கு வரவில்லையா?  அதென்ன பெண்ணால் முடியாது ?என்று கேட்டு அவன் கன்னத்தில் பளார்’ என்று வைக்க தோன்றியது. வீரமதி இருந்ததால் பொறுத்து போனாள் .

பெண்கள் ஆண்கள் பேதமின்றி அறைகுறை ஆடைகளுடன் மங்கிய விளக்கு ஒளியில் ஆங்கிலம், தமிழ் , ஹிந்தி என பல மொழிகளில் பாடல்கள் இசைக்க, அதற்கேற்ப உடலை வளைத்து நடனமாடிக் கொண்டிருந்தனர்.

ஒரு சிலர் மட்டும் அமர்ந்த வாக்கிலே சிறு சிறு குப்பியிலும் பெரிய பெரிய  கோப்பையிலும் கவிழ்ந்து கிடந்தனர். இவ்வாறாக அந்த இடமே குடியும் கூத்துமாக நிறைந்திருந்தது. 

பவுன்சர் பப்பின் கதவைத் திறக்க,  முதலில் ஆடியவாறே உள்ளே நுழைந்தான் துருவன். அவனைத் தொடர்ந்து அவன் பின்னே அவனது மெய்க்காப்பாளர்கள் ஐவரும் நுழைந்தார்கள்.

துருவனின் நண்பர்கள் கூட்டம்  மேசையில் கையை ஊண்டி ஆடும் அழகிகளை வெறித்தனர். 

இரண்டு மூன்று என தன்னுடன் ஜோடி சேர்த்து ஆடும் ஆண்களைக் கண்டு பெருமூச்சு விட்டபடி வித்யாசாகர், ரிஷி,  அஜய், அஜீர்  என அவனது நெருங்கிய  நண்பர்கள் மட்டுமே வந்தமர்ந்திருந்தனர்.

“ஹாய் மச்சி!!! “என அழைத்தப்படி வந்தவனை அந்த நால்வரும் அணைத்து வரவேற்றவர்கள் அவன் பின்னே வந்து நின்ற ஐவரையும் கண்டு கலவரமானர்கள்.

“டேய் மச்சி,  இங்கயும் இவங்களா?? ஆத்தி நான் வீட்டுக்கு போறேன் டா” வித்யாசாகர் பயம் கொண்டு விலகிச் செல்ல, “இப்ப எதுக்கு பயப்படற?, அவங்க என் பாதுகாப்புக்கு வந்திருக்காங்க.  உன்னை எதுவும் செய்யமாட்டாங்க அமைதியா இரு!! ”  என்றவன் தன் அருகே நின்றிருந்த ஜெஸியிடம் ” நான் ஒன்னும் கிட் இல்ல, இந்தக் கூட்டத்தில தொலைஞ்சு போக. உன் கண் பட நானும் என் கண் பட நீயும் இருந்தா போதும். சும்மா என்னையே சுத்தி நின்னுட்டு நகர விடாம பண்ணாத, போ போய் அங்குட்டு நில்லு” என்று கடுப்பில் கத்த, 

“ஸாரி…  ஆனா, இங்கயும் என்னை பழிவாங்க எனக்கு எதிரா உன் கேவலமான , மட்டமான ஐடியாவ யூஸ் பண்ணி, உனக்கு நீயே ஆப்பு எதுவும் வச்சிக்காத. உன் மேல இருக்க கோவத்துல உன்னையும்  போட்டு தள்ளிட்டு போயிட்டேன் இருப்பேன் பீ கேர்ஃபுல் “என்று மிரட்டி எச்சரித்து விட்டுத் தான் சென்றாள்.

அவள் சென்றதும் தலையில் அடித்துக் கொண்டவன்’எல்லாம் என் அம்மாவை சொல்லணும், தப்பே பண்ணாலும் என் புள்ள நல்லவனு சொல்ற தாய் எங்க? மத்தவங்க முன்னாடி விட்டுக் கொடுக்கற என் தாயும் தான் எங்க?? இவ முன்னாடி  என்னை திட்டுனா அப்றம் இவ  எப்படி என்னை மதிப்பா?? ஆனாலும்  உன்னை துரத்துறேன்டி . உன்ன ஓட வைக்கிறேன் நான் எடுத்துக்கிட்ட என்னோட சபதத்தை நிறைவேத்தாம ஓயமாட்டான்டி இந்த துருவன் ‘அவள் சென்ற திசையை பார்த்து புலம்பியவன், நண்பர்களின் அழைப்பில் தன்னிலை வந்தான்.

“என்ன மச்சி ஆச்சி  உனக்கு??? வயசுக்கு எதுவும் வந்துட்டியா??? உன்னை பிடிச்சி ஓலைக் கட்டி அதுக்குள்ள அடச்சி போட்டாங்களா?? வீட்டுக்குள்ள இரு போகாதனு எதுவும் சொல்லி அடச்சி  வச்சிட்டாங்களா??? வீட்டுக்குள்ளே இருக்கீயே மச்சி என்ன விசேஷம்?”என அவனை கலாய்த்தனர்.

“டேய் அடங்குங்கடா !! நானே இந்த பாடிகார்ட்ஸால என் ஃப்ரீடம் போச்சினு பீல் பண்ணிட்டு இருக்கேன் நீ வேற. என்னைக்கு அவளை நான் பார்த்தேனோ அன்னைக்கி பிடிச்சது எனக்கு சனி. எதுவும் எனக்கு சார்பா நடக்கவே மாட்டிக்கிதுடா!! 

அவளை எப்படியாவது துரத்தி விடலாம் பார்க்கிறேன் ச்ச.. ஸ்மார்ட்டா வேலை பார்த்து எஸ் ஆகிடுறா !! ஆனா நான் விடமாட்டேன் நான் நினைச்சப்படி  எங்க அம்மா வாயாலே  அவளை துரத்த வைக்கிறேன்” என்று தன் நண்பர்களிடன் தன் மனதிலுள்ள பகையைப் பகிர, அவர்கள் ஒருவரை ஒருவர் கலக்கமாகப் பார்த்துக் கொண்டனர்.

“மச்சி சொல்றேன் தப்பா எடுத்துக்காத, இந்த ரிவஞ்ச் எடுக்கறதெல்லாம் நமக்கு தேவையா??  ஆன்ட்டி உனக்கு பாடிகார்ட்ஸ வச்சதே உன் பாதுகாப்புக்கு தான்.  அவங்களை துரத்தணும்  நினைக்கிறீயே ! உனக்கு எதுவும்  ஆபத்து வந்தால் என்ன பண்றது? பழிவாங்கறேனு அவங்களை துரத்துறேன் அது இது னு யோசிக்காத மச்சி. உயிர் விஷயம் கொஞ்சம் ஜாக்கிறதையா இரு !!!’நண்பர்களாக அவன் மேல் அக்கறை கொள்ள,  அதெல்லாம் அவன் மூளையில் ஏற்றிக் கொள்ளவில்லை என்று அவனது அலட்சிய பார்வையிலே கண்டுண்டார்கள்.

“மச்சி!!!  நீ  சொல்றது எல்லாம் ஓகே தான். ஆனா எனக்கு ஒரு பொண்ணு பாடிகார்டா வந்தது பிடிக்கல… அந்த இடத்துல வேற யாரும் இருந்திருந்தா நான் என் இஷ்டம் போல இருந்திருப்பேன்.

இவ காட்டுற ஆட்டியூட் எனக்கு சுத்தமா பிடிக்கல. வந்த அன்னைக்கே என் நெத்தில கன் வச்சிட்டா??  ஒன்னு இவளை அடக்கணும் இல்ல இவளை ஓட வைக்கணும் ரெண்டுல ஏதாவது நான் செஞ்சே தீர்வேன்” என பேசிக் கொண்டிருக்க நண்பர்கள் பார்வை ஜெஸியை தான் அளந்தது .

பப்பின் மூலை முடுக்கெல்லாம் அலசி எடுக்கும் தீவிரமான பார்வை.  விறைப்பாக நிற்கும் அவளது தோரனை அதில் பிரதிபலித்த அவளது கம்பீரம். தன்னை போதையுடன் நெருங்கும் ஆடவனை எல்லாம் எட்ட நிற்கவைக்கும் வேள்விழியாளைப் பார்க்க மரியாதை ஒரு பக்கம் கூடினாலும் இவளுடன் மோத நினைக்கும் தன் நண்பனின் நிலையை  எண்ணிக் கலக்கமாக இருந்தது.

‘இவளிடம் மாட்டி என்ன கதியாகப் போறானோ’என்று உள்ளுக்குள் புலம்பிக் கொண்டனர். இவன் இருக்கும் நிலையில் சொல்லும் அறிவுரை எல்லாம் வீண் என்று உணர்ந்து கொண்டவர்கள்  அமைதியாக வந்த வேலையை மட்டும் பார்த்தனர்.

****

நன்றாகச் சென்று கொண்டிருந்த பப்பில் சிறு சிறு சலசலப்பு ஏற்பட, என்னவென்று அனைவரும் திரும்பி பார்த்தனர்.

கொரில்லாவை போல நான்கு ஐந்து மெய்க்காப்பாளர்கள் உள்ளே வந்து அந்தக் கூட்டத்தை ஒதுக்கி விட்டு தனக்கு பின்னே வருபவர்களுக்கு வழி விட்டனர். 

ஐம்பது வயது மிக்க, பாதி கிழவனாக இருப்பவனின் கைவளைவுக்குள் அவன் வயதுக்கு பாதி இருக்கும் ஒருத்தியை வைத்துக் கொண்டு நடந்து வந்தான். அனைவரது பார்வையும் அவர்கள் மேல் தான் இருந்தது. 

அந்தக் கிழவனின் கையை குலுக்கிவிட்டு அவரை வரவேற்று அவர்கள் அமர இருக்கையை காட்டினார்கள். அவர்களுக்கு அரணாக அவர்களுடன் வந்த மெய்க்காப்பாளர்கள் சுற்றி நின்று கொண்டனர். 

அவர்கள் அமரும் வரை இருந்த அமைதி, மறைந்து பின் மீண்டும் இசையொலிக்க கூத்துக்கள் தொடங்கின. 

“யார் மச்சி அது??? வரவேற்பெல்லாம் பயங்கரமா இருக்கு???” துருவன் மது அருந்தியவாறே கேட்டான்.

“தெரில மச்சி நீ சொன்னதுனால தான் இங்க வந்தோம். இல்லேன்னா எங்க இடமே வேற !”என்றான் அஜீர். 

“அப்போ நீங்க இங்க வந்ததே இல்லையா???”

“யார் மச்சி வருவா இங்க எல்லாம்? நமக்கு எல்லாம் லோக்கல் தான். ஏதோ இன்னைக்கி உன் புண்ணியத்துல  இதெல்லாம்…” என்று கையில் இருந்த கோப்பையை காட்டி சொன்னான் வித்யா. 

அவர்கள் பேசிக் கொள்வதை கேட்டுக் கொண்டே அவர்களை நோட்டம் விட்டான். அவர்கள் பேசிக் கொள்வது பிஸ்னஸ் டீல்லைப் போல் இருந்தது. 

அந்தக் கிழவன் பக்கத்திலிருக்கும் பெண்ணைச் சிறிதும் விலகாது, அவள் இடையே  இறுக்கியப்படியே தன்னெதிரே அமர்ந்தவர்களிடம் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார். துருவனைப் போல ரிஷியும் அவர்களை தான் பார்த்தான்.

“என்னடா, அங்கே பார்த்திட்டு இருக்க??? என்ன மேட்டர்???” அஜய் ரிஷயிடம்  கேட்க, அனைவரின் கவனமும் அவர்கள் மீது தான் சென்றது.

“அந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா?? ஆனா அவன்… ஸாரி அவர் படு கேவலம். ரெண்டு பேருக்கும் என்ன ரிலேஷன் யோசிக்கிறேன் டா” என்று ரிஷி சொல்ல, 

“என்கென்னமோ அந்தாளோட செட்டப்பா தான் இருக்கும் நினைக்கிறேன்.  அந்த பட்சி பறந்திடுமோனு கெட்டியா பிடிச்சிருக்கான் பாரு அந்தக் கிழவன்”என்று வித்யாசாகர் சொல்லிச் சிரிக்க மற்றவர்களும் சிரித்தனர். 

அவர்கள் பேசிக் கொண்டு இருப்பதை கேட்டுக் கொண்டிருந்த பணியாள் ஒருவன் அவர்களிடம், “சார் கொஞ்சம் பார்த்து பேசுங்க, அவங்களுக்கு கேட்டுச்சி போட்டு தள்ளிடுவாங்க. அந்தம்மா அவரோட மனைவி, அவங்களை பார்த்தாலே டெத் தான்…  கொஞ்சம் பெரிய இடம் அடக்கி வாசிங்க” என எச்சரிக்கை விடுத்து செல்ல, மீண்டும் நால்வரின் கண்கள் அவர்கள் மீது தான் சென்றது. 

மிக தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தவரிடம் காதில் ஏதோ கிசுகிசுத்தாள் அந்த மங்கை. அவரும் தலையை அசைக்க எழுந்து அவரை கடந்த வெளியே வந்தவளின் மீது தெரியாமல் மோதி விட்டான்  பணியாள் ஒருவன்.  

அவ்வளவு தான் அடுத்த நொடியே அங்கே ஒரு களேபிரம் உருவானது. அந்தப் பணியாளனைச் சுற்றி வளைத்தனர் அந்த மெய்க்காப்பாளர்கள். 

அவனது தலையைச் சுற்றி துப்பாக்கிக்களே இருக்க, அவன் பயத்தில் வெடவெடத்து போனான். “சார் சார் மேடம் வர்றத பார்க்கல சார். பார்த்திருந்தா ஒதுங்கி போய் இருப்பேன் சார். என்னை விட்டுடுங்க நிஜமா மேடமை நான் பார்க்கல” காலில் விழுகாத குறையாக கெஞ்ச, அவளோ அதை கண்டு கொள்ளாதது போல கடந்து போனாள். அந்தக் கிழவனோ, கையை அசைக்க, அவனை தூக்கிக் கொண்டு போய்விட்டனர். 

அனைவரின் கண்களும் பயத்தில் விரிந்திருந்தன. சிலைப் போல நின்று விட்டனர் வேலைச் செய்யும் பணியாட்கள் அனைவரும். அந்தக் கிழவனின் பார்வை அனைவரையும் வட்ட மடிக்க மீண்டும் இயங்கியது அந்த இடம்.

“ஆத்தி !!! என்னடா ஆகிருப்பான் அந்த வெயிட்டர்?”வித்யா சந்தேகமாக கேட்க, “அவனா, இந்நேரம் அண்டத்தை  தாண்டி போயிருப்பான். என்னோட ஆழ்ந்த இரங்கல் அவனுக்கு”  சிலுவை போட்டுக்  கொண்டான் ரிஷி. 

இவர்கள் இங்கே கேலிப் பேசி கலாய்த்துக் கொண்டிருக்க, துருவனின் பார்வை அந்தப் பெண்ணையே வட்டமடித்தது.

அவளோ அங்கிருக்கும் பெண் தோழிகளிடம் கதைப் பேச ஆரம்பித்தாள். அந்தக் கிழவனும் மனைவியை ஒரு புறம் பார்த்துவிட்டு  மீண்டும் பேச ஆரம்பித்தான். 

இவர்கள் இருவரையும் பார்த்தவன், ஜெஸியையும் பார்த்தான். அவள் கண்காணிப்பு வேலையை செவ்வனே என்று செய்து கொண்டிருந்தாள். 

இது தான் தக்கச் சமயம், அவளுக்கு மேலும் குடஞ்சல் கொடுக்க, அவளை’ வேலை வேண்டாம்’  என்று ஓட வைக்க தனது திட்டத்தை செயல் படுத்த  தொடங்கினான். 

அவர்கள் பேசிக் கொண்டிருக்க, இவன் மட்டும் எழுந்தான். “துருவ் எங்க போற???” ரிஷி அவனை தடுக்க, “வந்துடுறேன் டா”என்று அந்த அழகியை தேடிச் சென்றான். அவளை நெருங்க நெருங்க நண்பர்களுக்கு மீண்டும்  உயிர் பயம் வந்தது.

 ‘அடுத்த என்ன செய்ய எங்கே போகிறான்??’என்ற யோசனையுடன் தனியாகச் செல்லும் துருவனை நோட்டம் விட்டாள் ஜெஸி.  

எழுந்து சென்றவன் திரும்பி நின்றிருந்த அந்த அழகியின் கையை பிடித்து வேகமாக இழுத்து ஒரு சுத்துச்சுத்தி தன் கைகளில் வளைத்து பிடித்தவன்  கன்னத்தில் இதழ் பதித்து ஹாய் ரீனா !”என அவள் முகம் பார்த்தான். அவளும் அவன் செய்த செயலில் விழியகற்றாமல் அவனையே பார்த்திருந்தாள்.

“ஓ… ஐம் சோ ஸாரி” என அவள் இடையிலிருந்து கையெடுத்து விலகியவன்” ஸாரி ஸாரி… நான் என் கேர்ள் பிரண்ட்னு நினைச்சி உங்கள ஹக் பண்ணிட்டேன் ரியலி ரியலி ஸாரி”என்றான். 

அவனை பார்த்த நொடியிலே ஈர்த்து விட்டான். ஆனாலும் சட்டென அவன் விலகியது அவளுக்கு ஏதோ போலாகிட, முகம் வாடி விட்டது.  “வாட் பேபி??”என அவளை கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவனை வளைத்தனர் அவளது மெய்க்காப்பாளர்கள். 

துருவனை நெருங்கிய அந்தக் கிழவன் அவனது சட்டையை ஒருகையிலும் மறுகையில் துப்பாக்கியை அவன் நெற்றி பொட்டிலும் வைத்திருந்தான். துப்பாக்கியை பார்த்தவாறு எச்சில் விழுங்கியவன், ஜெஸியைப் பார்க்க, அவளோ தனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்பது போல  அசட்டையாக நின்றிருந்தாள்.

அந்தக் கிழவன் ட்ரிக்கரை அழுத்த, ‘சோலி முடிந்தது’ என்று வியர்வை வழிய கண்களை இறுக மூடினான் துருவன். குண்டு பாயும் சத்தம் கேட்டு இதயம் நின்று போனது அவனுக்கு. துருவனின் நிலை என்னவோ !!! 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்