
தாரா அகிலனின் அணைப்பில் இருந்து விடுபட முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
“விடு அகில் இப்போ இதுக்கெல்லாம் நேரமே இல்லை., பொண்ணா அவ ஆயிரெத்தெட்டுக் கேள்வி கேட்கிறா.? அவ இன்டர்வீயூ வந்தாளா.? இல்லை என்னை இன்டர்வீயூ எடுக்க வந்தாளா தெரியலை” எனப் புலம்பிய படி அகிலனை உதறித் தள்ளினாள் தாரா.
“ஏய் பேபி என்ன உதறி தள்ளுர” என்றவன் மீண்டும் அவளை இறுக அணைத்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்கப் போனவனைத் தடுத்தவள்,
“முதலில் அவ ஜூஸை குடிக்குறாளா பார்க்கணும்” என்றவள் அந்த அறையிலிருந்த கணினி முன் அமர்ந்துக்கொண்டு, மலரை அமர வைத்துவிட்டு வந்த அறையைக் கேமரா மூலம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“அந்தப் பொண்ணு அழகா இருக்காள்ல தாரா.?” எனப் பேசியவனின் கரங்கள் அவள் பின்னே நின்றபடி அவள் அங்கங்களை அளவெடுத்துக் கொண்டிருந்தது, தன் தேகத்தில் உலாவி கொண்டிருந்த அகிலனின் கரங்களை வெடுக்கெனத் தட்டிவிட்டவள்.
“இப்போ இதுக்கு நேரம் இல்லை அகில், இந்த மலர் பொண்ண செக் பண்ண வேண்டாமா.?”
“அதான் டாக்டர் நீ இருக்கியே பேபி”
“அகில் அவ இன்னும் ஜூஸை குடிக்கலை பாரு, இப்போ என்னடா பண்ணுறது” எனக் கேள்வியாய் அவனை நோக்கினாள். மலரோ பயத்தில் அந்த அறையை மிரட்சியாய் பார்த்துக்கொண்டிருந்தாள். என்ன நினைத்தாளோ மெல்ல ஜூஸை கையிலெடுத்தாள்,
“குடிக்கப் போறா பாரு” எனச் சந்தோசமாய்ச் சொன்னான் அகிலன். அவன் சொன்னதைப் போல் ஒரு துளி மீதமின்றிக் குடித்தவள், யாரும் வரவில்லை என்று அந்த அறையிலிருந்து வெளியே புறப்பட்டாள், மெல்ல எட்டுகளை எடுத்து வைத்தவள், தாராவை தேடினாள் ஆனால் அவளை காணவில்லை,
மீண்டும் பயந்துபடி அந்த அறையிலே சென்று அமர்ந்தவள் சில மணி நிமிடங்களில் மயங்கி சரிந்தாள்.
“மயக்கம் ஆகிட்டா, இப்போ டெஸ்டை ஆரம்பிக்கலாமா பேபி.?” புன்னகைத்தான் அகிலன்.
“பல்லைக் காட்டாதே, அது ப்ராடெக்ட்டு (product) உனக்கு இல்லை, அவளைத் தயார்படுத்தி விக்கணும்” எனப் பேசியவள், சில மருத்துவ ஊழியர்களுக்கு அழைப்பெடுத்து வரவழைத்தாள்.
அடுத்தச் சில மணி நேரத்தில் மலர்விழி தனியாக அறைக்குள் ஸடெர்ச்சரில் வைத்து அழைத்துச் செல்லபட்டாள்,
சுயநினைவின்றி இருந்தவளுக்கு எதுவும் தெரியவில்லை பாவம், இப்படிப் பெண்களை வைத்துப் பணம் பார்க்கும் கும்பல் இங்கு ஏராளம் இருக்கிறது, அரசியல் சாயத்தைப் பூசிக்கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மமதை பிடித்தவர்கள், பெண்களை மதிக்கத் தெரியாதவர்கள் எப்படி மக்களுக்குச் சாதகமாய் இருப்பார்கள். பிராச்சாரத்தில் வீர வசனம் பேசி தங்களின் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளும் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் இத்தகைய பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்கிறார்கள். பெண்ணை மதிக்காத சமுதாயம், மண்ணாகி போகும் என்ற கூற்றை நிரூபிக்கும் வகையில் நம் சமுதாயம் மண்ணாகி போய்கொண்டிருக்கறிது.
அவளின் துகில் உறித்து அவளின் தேகம் முழுவதும் ஆராய்ந்து அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டனர், ரத்த பரிசோதனையும் எடுக்கபட்டது, அவளுக்கு எச்ஐவி இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக.
அவளுக்கு அறைகுறை அடை அணிவிக்கபட்டு அதையும் புகைப்படமும் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டார்கள்.
“தாரா இவ செம்ம ரேட்டுக்கு போவான்னு தோணுது, வெர்ஜினா வேற இருக்கா, இவ கார்த்திகை காதலிக்கிறா கூடப் போயிருப்பான்னு நினைச்சேன், அதனால தான் வெர்ஜின் டெஸ்ட் எடுக்கணும்னு சொன்னேன்” என அகிலன் பேசிக்கொண்டிருந்தான்.
“அகில்.! வெர்ஜினா இல்லாட்டியும் என்னடா நான் எதுக்கு இருக்குறேன், சரி பண்ணி தந்திட மாட்டேனா.?”
“என் செல்லமே” என்றவன் அவளைத் தன் கைவளைவிற்குள் இழுத்தான்.
“தாரா.! நான் எத்தனை பொண்ணுகிட்ட போனாலும் நான் காதலிக்குற ஒரே பொண்ணு நீ தான்டி, எந்தப் பொண்ணும் இவ்ளோ சக்ரீஃபைஸ் பண்ண மாட்டாடி.?” எனப் பெருமிதமாய்ச் சொன்னான் அகிலன்.
“உனக்கு இதைச் சொல்லிகிறதில் பெருமையா இருக்கலாம் அகில், ஆனால் இதையே நான் சொன்னால் எனக்கு வேற பேரு வச்சிருவ, அப்படித் தானே அகில்.?”
“ஏய் தாரா, நீ என் தர்ம பத்தினிடி அப்படியெல்லாம் நீ பேசாதே, எதோ எங்க அப்பன் பழக்கம் எனக்கும் கொஞ்சம் ஒட்டிகிச்சு அவ்ளோ தான், மத்தபடி ஐ லவ் யூ டி” என்றவன் அவளின் இதழை நோக்கி மெல்ல நெருங்கியவனை ஒற்றை விரல் வைத்து தடுத்தவள்.
“இது ஆபிஸ்டா, அந்தப் பொண்ண மயக்கம் தெளியவச்சு வீட்டுக்கு போகச் சொல்லணும்” எனச் சொன்னவள் அவனை விட்டு விலகி நடந்தாள் தாரா.
பெண்கள் கடத்தபடும் சந்தையில், அந்தப் பெண்ணை வாங்குபவர்கள், பெண்ணின் கன்னி தன்மைக்கு ஏற்ப விலை பேசுவார்கள், மீண்டும் மீண்டும் அந்தப் பெண்ணைப் பாலியல் தொழிலில் கன்னி தன்மையாய் காட்டுவதற்காக, அவர்கள் மேற்கொள்ளும் சிகிச்சை முறை, உயிரையே குத்திக் கிழிக்கும் அளவிற்குக் கொடுமையானது.
இதற்காகவே மருத்துவச் சிகிச்சைகளும் இருக்கிறது. ஹைமனோபிளாஸ்டி என்ற சிகிச்சையின் மூலம் இழந்த கன்னி தன்மையை மீண்டும் உருவாக்கம் செய்ய முடியும். மருத்துவ உலகில் இழந்த கன்னி தன்மையை மீட்டெடுக்கும் வரபிரசாதமாகக் கருதுகின்றனர், ஆனால் சில பெண்கள் சிக்கக் கூடாத கும்பலிடம் சிக்கி, மீண்டும் மீண்டும் இந்த அறுவை சிகிச்சை செய்து, கன்னி தன்மை உடைய பெண் என்று ஏலம் பேசி விற்கபடுகிறார்கள். வார்த்தைகளால் வர்ணிக்க இயலா துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் சில பெண்களை மறந்து தான் சுதந்திரமாய் இருப்பதாய் நினைத்துப் பெண்கள் தினம் கொண்டாடி கொண்டிருக்கிறோம்.
**************************
தனக்கு என்ன நேர்ந்தது என்று அறியாத பேதை பெண்ணோ,வேலைக்குத் தயாராகத் தன் பயணப் பொதிகளைத் தயார் செய்துக்கொண்டிருந்தாள். அவளின் மனம் முழுக்க அவன் காதலன் கார்த்திக் மீது தான் இருந்தது. தன்னை விட்டு எப்போதும் பிரிய மனமில்லாதவன், எவ்வாறு இனி சமாளிக்கப் போகிறான். என அவள் நினைத்த போது.,
‘அடியே கூறுகெட்டவளே அவனை நினைச்சு வருத்தப்படுறீயே., அவன் இல்லாம நீ என்னடி செய்யப்போற, தகப்பனுக்குத் தகப்பனாய், தாய்க்கு தாயாய் இருந்தவனைப் பிரிந்து உன்னால் இருக்க முடியுமா.?’ மலர்விழி நினைக்கும் போதே அழுகை அவள் தொண்டையை அடைக்க, எல்லாமே குடும்பதுக்காகத் தானே.? தன்னைத் தானே தேற்றிக்கொண்டவளின் அலைப்பேசி அலறி அவளின் சிந்தனையைக் களைக்க, அதை எடுத்து பார்த்தாள் அகரநதி தான் அழைத்திருந்தாள்.
“சொல்லுடி அதி” குரலை தேற்றி சாதாரணமாய்ப் பேசுவது போல் நடித்தாள், பெண்களின் நிலை என்னவோ இது தான், தான் படும் துயரத்தை யாரிடமும் சொல்லாமல் தனக்குள்ளே புதைத்துக்கொள்ளும் குணம்.
“ஏய் மலர் வாழ்த்துக்கள்டி உனக்கு வேலை கிடைச்சிருச்சு, நீ என்கிட்ட சொல்லவே இல்லை, நாளைக்கு நம்ம ஷார்ட் பிலிம் வேற ரிலீஸ் ஆகப் போகுது எல்லாத்துக்கும் சேர்த்து இன்னைக்கி ட்ரீட் வைக்கலாம்னு ப்ளான் பண்ணியிருக்கோம், சொல்லுடி மலர் எங்கே போகலாம்” என ஆர்வமாய்க் கேட்டாள் அதி.
“அதெல்லாம் வேண்டாம் டி” குரலில் சுரத்தை இல்லாமல் பதில் கொடுத்தாள் மலர்.
“ஆமா, நீங்க எங்க கூடலாம் வருவீங்களா.? உங்க ஆள் கூப்பிட்டா ஓடி வந்திருவீங்க” எனக் கேலியாயக் கலாய்த்தாள் அதி.
“சீ போடி அதி, எப்போ பாரு கார்த்தியை வச்சு கிண்டல் பண்ணிட்டே இரு” என லேசாய் நாணப் பூக்கள் அவள் முகத்தில் உதித்தாலும் பட்டெனத் தன் குடும்பத்தின் நிலை அறிந்து மறைந்தது.
“அதி கார்த்தியை பத்திராம பார்த்துக்கோடி, எவ்ளோ மன்த்ஸ் கான்ட்டெரக்குட்டுன்னு தெரியலை” மலர் கெஞ்சலாய் கேட்டாள்.
“மலர் கண்டிப்பா பார்த்துக்குறேன்டி, கான்ட்ரக்ட்டு என்னனுகேட்டாள்ல் தான் வேலைக்குப் போறீயா லூசு.? விசா அப்ளை பண்ணியாச்சா.? உன் கம்பெனி பேர் என்ன சொல்லு.? நான் அங்க வேக்கன்ஸி இருக்கான்னு பார்த்து செக் பண்ணுறேன்” என அகரநதி கேட்ட கேள்விகளுக்கு எதற்குமே மலரிடம் பதில் இல்லை, ஆனால் தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு அதியிடம் பொய் சொன்னாள்.
“ஏய் அதி அதெல்லாம் கம்பெனியே பார்த்துக்கும்டி, சரளா மேம் சொன்னது தப்பா இருக்காது” என்ற வார்த்தை அதியின் வாயை அடைத்திருந்தது.
“சரிங்க மேடம் கிளம்பி வாங்க, நான் தான் உனக்குச் சென்ட் ஆஃப் ட்ரீட் வைக்கப் போறன், வாங்க” என அதி வற்புறுத்தி அழைத்தபின் வருவதாய்ச் சம்மதித்தாள் மலர்விழி.
*************
நண்பர்களிடம் தன் துன்பத்தையோ துயரத்தையோ பகிர்ந்துகொள்ள விரும்பாதவள் மலர்விழி. அதற்கேற்றாற் போல் அவளின் காதலன் காதல் பரிசாய் வாங்கிகொடுத்த, பிங்க நிற லெகங்கா அணிந்து, முகத்தில் புன்னகையை வாடகைக்கு வாங்கியவள், அவள் தோலுரசும் கூந்தல் அவள் நடைக்கு ஏற்ப அசைய, காண கண் போதாது போல் இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தான் கார்த்தி.
“அதி மலர் பார்க்க அழகா இருக்காள்ல.? நான் வாங்கிக் கொடுத்த ட்ரெஸ் அவ நிறத்துக்குப் பொறுத்தமா இருக்குல” தன்னையும் மறந்து அதியிடம் பேசிக்கொண்டிருந்தான் கார்த்தி.
“அந்த நிறத்தைதான் நீங்க மைதா மாவுன்னு கலாய்ச்சீங்க பாஸூ” கார்த்திக்கை சீண்டினாள் அதி.
“அடியே அதி, உனக்கு நான் சந்தோசமா இருக்குறது பொறுக்காதே, அவளுக்கு நியாபக படுத்திறாதே தெய்வமே, இப்போ தான் என்கிட்ட எதோ பேசுறா கெடுத்து விட்டுறாதே” தோழியிடம் கெஞ்சத குறையாய் கேட்டான் கார்த்திக்.
“மூஞ்சி உனக்காகத் தானே இந்தப் பார்ட்டியே அரேஞ்ச் பண்ணிருக்கேன், லூசு மாதிரி பேசாமல் அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ணு, நான் நிஹாவ கூட்டிகிட்டு கடல் காத்து வாங்க போறேன்” எனச் சிரித்தபடி அவள் பேசிக்கொண்டிருந்த போதே மலர் அவர்களை நெருங்கியிருந்தாள்.
கடற்கரையோரத்தில் அமைந்திருந்த மல்ட்டி க்யூசைன் வகை ரெஸ்டாராண்ட்டில் அமர்ந்திருந்தார்கள் நால்வரும்.அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளை உண்டு விட்டு, செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர், அவர்களுக்குத் தெரியாது அவர்கள் சந்தோஷமாக் கொண்டாடிய கடைசித் தருணம் இது தான் என்று. ட்ரீட்டின் முடிவில் கார்த்தியும் மலரும் கேக் கட் செய்து அந்த நிகழ்வை இனிதாய் முடித்து வைத்தனர்.
“நிஹா வா, நம்ம கடற்கரையில போய் நடந்திட்டு வரலாம்” அதி அழைத்தாள்.
“ஏய் போடி நான் மலரை விட்டு வரமாட்டேன்” என மலரின் தோளில் சாய்ந்துக்கொண்டாள் நிஹா.
“உனக்குக் குல்ஃபி வாங்கித் தர்றேன்டி வா” என வலுகட்டாயமாய் இழுத்துச் சென்றாள் அதி.
“அதி இப்போ ஏன்டி என்னை இழுத்திட்டு வந்த.? நாளைக்கு ஷார்ட் பிலிம் ரிலீஸ்ல அவகிட்ட பேச கூட டைம் இருக்காது, அப்பறம் அவளை எப்ப பார்க்க போறோமோ” குறைபட்டுக் கொண்டாள்.
“ஏய் நிஹா நம் ப்ரெண்ட்ஸ் தான்டி, கார்த்தி அவளோட லவ்வர்டி அவ கூடத் தனியா கொஞ்ச நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணட்டும்” என எடுத்துரைத்தாள் அகரநதி.
“இப்போ நீங்க என்ன வேலை பாக்குறீங்கன்னு தெரியுமா கோபால்.?” எனக் கேட்டே விட்டாள் நிஹா.
“மொரட்டு சிங்கிள் உனக்கு இந்தப் பீலிங்க்ஸ்லாம் புரியவா போகுது” எனத் தலையில் அடித்துக்கொண்டாள் அதி.
“அதென்னடி முரட்டு சிங்கள்னு ஈசியா சொல்லிட்ட? அப்படி இருக்கிறது எவ்ளோ கஸ்டம் தெரியுமா? கமிட்டா இருக்குற ப்ரெண்டஸா பார்த்து வருமே ஒரு காண்டு,அதெல்லாம் அணுபவிச்சா தான்டி தெரியும், ஆயிரம் லவ் லட்டர் அம்பு மாதிரி வந்து தாக்கினாலும், அசராமல் பாகுபலி மாதிரி நிக்கணும்டி, உன்னால முடியுமா? ஆயிரம் க்ரஷூ இருந்தாலும் சைட் மட்டும் அடிச்சிட்டு ஒதுங்கிறதில் இருக்க அந்த வேதனை இருக்கே அந்த வேதனை” எனப் புலம்பி தள்ளினாள் நிஹா.
“இந்தா சுண்டல் இதைச் சாப்பிட்டுகிட்டே புலம்பு, கொஞ்சம் என்டர்டெயின்மென்ட் ஆகும்ல” எனச் சுண்டல் வாங்கிக் கொடுக்க, கடற்கரையில் அமர்ந்த படி இருவரும் சுண்டலை சாப்பிட ஆரம்பித்தனர்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஆசிரியரை முழுதாய் நம்பி அனைவரும் அசால்ட்டாக இருந்துள்ளனர்.
வேலையின் எந்த பின்புலமும் சரியாக தெரியாமல், எந்த தகுதி அடிப்படையில் அவளை தேர்ந்தெடுத்தனர் என்றும் புரியாமல் வேலையில் சேரும் முனைப்பில் இருக்கிறாள் மலர்.
அவளது நண்பர்களிடம் சிறிது விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கலாம்.
படிக்கவே முடியலையே. உண்மைதான் இந்த மாதிரிலாம் நடக்கிறதை கேள்விப்படும் போது தாங்க முடியல பா