
அத்தியாயம்-18
மதி தன் நினைவுகளிலிருந்து மீள, தன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த துருவனையும் அவன் மூலமாக அலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட விஷ் மற்றும் அகநகையையும் அழைத்துக் கொண்டு ஜான்விகா மேலே வந்தாள்.
தோழியைக் கண்டு புரியாத பாவனையுடன் மூவரும் மேலே வர, “எங்க இருக்க மகி?” என்று சுற்றி முற்றித் தேடினாள்.
அவன் இழப்பை மறக்க முடியாத நிலையில் அவள் பிதற்றுகின்றாள் என்று நினைத்த தோழர்களில் விஷ் அவள் தோளில் கரம் வைத்து, “ஜான்.. எனக்கு உன் ஃபீலிங்ஸ் புரியுது. நீ மதிய உயிரா காதலிச்ச. இப்ப அவனில்லைனு உனக்கு வருத்தம் இருக்கும்தான். ஆனா புரிஞ்சுக்கோ. ஹீ இஸ் நோ மோர். முதல்ல போய் நீ ரெஸ்ட் எடு” என்றான்.
“இல்லடா அவன் சாகலை. என்கிட்ட பேசினான்” என்று அவள் கூற,
“ஜான் ஜஸ்ட் ஸ்டாபிட். நீ அவரையே நினைச்சுட்டு இப்படி பேசுற. முதல்ல வா கீழ போவோம்” என்று துருவன் கூறினான்.
“அடேய் மாங்கா மடையா. நானும் அவன் செத்துட்டான்னு தான் நினைச்சு ஃபீல் பண்ணிக்கிட்டு இருந்தேன். அந்த லூசு என் ரூம்ல விட்லாசாரியார் பட எபெக்டுல பயமுறுத்திடுச்சு” என்ற ஜான்,
“அடேய் எங்கடா இருக்க?” என்று மீண்டும் சுற்றி முற்றித் தேடினாள்.
அவள் கண்முன் வந்த மதி, “ஜானுமா இங்க தான் இருக்கேன்” என்க,
“நாயே உன்னால இதுங்க யாரும் என்னை நம்பமாட்டேங்குதுங்க” என்று அவள் காற்றோடு பேசிக் கொண்டிருக்க,
“”டேய் பாவம் அவன் நினைவுகள்ல பேசுறா போலடா” என்று அகா சோகமாகக் கூறினாள்.
“ஜான்.. இங்க வாடா.. அங்க யாருமில்லமா” என்று விஷ் அவளை இழுக்க,
“அடேய்.. எனக்குப் பைத்தியம்லாம் இல்லடா” என்றவள், மதியைப் பார்த்து “மகி இவங்க கண்ணுக்கு நீ தெரியமாட்டியா?” என்று வினவ,
“தெரிவேன்” என்றான்.
“அப்பறம் என்னத்துக்குடா வேடிக்கைப் பாக்குற? என்னை லூசுனு மெண்டல் ஆஸ்பத்ரில சேத்துட போறானுங்க. காட்சி கொடுத்துக் தொலை” என்று ஜான் கூற,
“ஓகே ஓகே கூல்” என்றவன், “டேய் ஜான் சொல்றது உண்மை தான்” என்றான்.
அந்தக் குரலில் மற்ற மூவரும் திடுக்கிட்டுப் போக, மெல்ல அவர்கள் கண்ணுக்குப் புலப்பட்டான்.
அகல விரிந்த கண்கள் மேலும் விரிந்து கொள்ள, “ஆத்தாடீ..” என அகா கத்தி முடிப்பதற்குள் அவள் வாயைப் பட்டென மூடினான்.
“டேய் கத்தி தொலைக்காதீங்கடா. எங்கப்பா அம்மா எழுந்திட போறாங்க” என்று ஜான் கூற,
அவளை ஸ்லோ மோஷனில் திரும்பிப் பார்த்த விஷ் பொத்தென மயங்கிக் கீழே விழுந்தான்.
“கல்யாணம் பண்ணி பொண்டாட்டிய மயங்கி விழ வைக்க வேண்டிய நேரத்துல இப்படி என் ஃப்ரண்ட மயங்கி விழ வச்சுட்டீங்களேடா” என்று பதறிய துருவன்,
“விஷ்வேஷு.. அடேய் விஷுவேஷு” என்று அவன் கன்னம் தட்டினான்.
ஜான் டேங்கின் மீது ஏறி ஒரு கப்பில் தண்ணீர் கொண்டு வர, அதை வாங்கித் தெளித்தவன் விஷ்வேஷை எழுப்பினான்.
“அடேய்.. என்னடா நடக்குது இங்க? எனக்குக் காச்சலே வந்துடும் போல. விடுங்கடா நான் வீட்டுக்குப் போறேன்.. பயமா இருக்கு” என்று அவன் பாவமாகக் கூற, மதியின் முகமும் வாடிவிட்டது.
“சாரி விஷ்.. உன்னைப் பயமுறுத்தணும்னு பண்ணலை. என்னோட நிலமை இப்படி இருக்கு. நீங்க தான் எனக்கு உதவி பண்ணனும்” என்று மதி கூற,
“சரி சரி ஃபீலிங்க நிறுத்திட்டு இப்ப என்ன பண்ணனும்னு சொல்லு” என்று அகா கூறினாள்.
இன்னமும் நம்ப முடியாத பாவனையில் தான் அவர்கள் இருந்தனர் என்றாலும் இந்த அளவிற்கு இறங்கி வந்துவிட்டனரே என்ற நிலையில்,
“என்னோட உடம்பை காப்பாத்தணும். சீ (பார்) நேத்து ஈவ்னிங் தலை சுத்துற மாதிரி இருந்தது. முகம் கழுவிட்டு வரலாம்னு எழுந்தா திடீர்னு என்னைச் சுற்றி ஒருவிதமான வாசனை. என்மேல தங்க துகள்கள் மாதிரி ஏதோ விழுந்தது. அது என்னனு நான் கிரகிக்குறதுக்குள்ள விழுந்துட்டேன். அடுத்த சில செகெண்ட்ஸ்லயே என் கண்ணு முன்னால என் உயிரற்ற உடம்பு” என்றான்.
“யூ மீன்..?” என்று துருவன் கேள்வியாக நிறுத்த,
ஒரு பெருமூச்சுடன் “எஸ்.. என் சோலும் (உயிர்) என் பாடியும் (உடம்பு) பிரிஞ்சுடுச்சு. என்னால திரும்ப என் பாடிக்குள்ள போக முடியலை. அதுக்கு எதும் வழி இருக்கும் ஆனா அதைக் கண்டுபிடிக்குறதுக்குள்ள என் உடம்பை இவங்க அடக்கம் பண்ணிடுவாங்க. எதாவது செஞ்சு நீங்க தான் என் உடம்பை காப்பாத்தணும். இல்லைனா காலம் பூரா நான் இப்படிதான் இருப்பேன்” என்று கூறினான்.
“என்னடா இது? இந்திரலோகத்தில் மூ.அழகப்பன் படத்த ரீமிக்ஸ் பண்ற மாதிரி சொல்ற” என்று விஷ்வேஷ் தன் தலையில் கைவைக்க,
துருவன் முகம் யோசனையைத் தத்தெடுத்தது.
“மதி டெத்கு முன்னாடி நாள் நைட்டு நம்ம பேசிட்டு இருந்தப்போ யாரோ டெத் ஆன அரைமணி நேரம் கழிச்சு பிழைச்சார்னு மதி சொன்னான். அதை ஜான் கேட்டதுக்கு பார்டைமா செத்து பார்த்துட்டா வர முடியுமானு மதி கேட்டது இப்ப நடந்திருக்கு” என்று துருவன் கூற,
மதியைத் தவிர மற்ற மூவர் முகமும் ஆச்சரியத்தைத் தத்தெடுத்தது.
“என்னடா இது இஸ்டரி ரிவீல்ஸ் மாதிரி.. மறுபடியும் ஒரு மாயமா?” என்று அகா பதற,
“என்ன பேசுறீங்க? எனக்கு ஒன்னும் புரியலை” என்று மதி கூறினான்.
‘இவனுக்கு என்னவென்று கூற?’ என்பதைப் போன்ற பாவனையுடன் நால்வரும் பார்க்க,
“சொன்னா நம்புவியானு தெரியலையே” என்று ஜான் கூறினாள்.
“அடியே.. இப்ப எனக்கு நடந்ததே அதிசயமா இருக்கு. இதையே ஏத்துக்கிட்டேன். இதுல நீ சொல்றத நம்பாம இருக்க என்ன இருக்கு?” என்று மதி கூற,
“நாங்க ஒரு ரெண்டு வருஷம் முன்ன நியூ இயர்கு முன்னாடி நாள் இப்படிதான் மாடியில உக்கார்ந்து பேசிட்டு இருந்தப்போ ஊழல், வன்கொடுமை இதுபத்திலாம் பேசிட்டு இருந்தோம். இன்னும் அம்பது வருஷம் ஆனாலும் இதெல்லாம் மாறாதுனு பேசிக்கிட்டு போய்ப் படுத்தா மறுநாள் நாங்க அம்பது வருஷம் கழிச்சு இருந்த காலகட்டத்தில் டைம் டிரேவல் பண்ணியிருந்தோம்” என்று அகா கூறினாள்.
“டைம் டிராவலா?” என்று மதி ஆச்சரியமாக வினவ,
“இன்னுமே எங்களுக்கு அது ஒரு அதிர்ச்சியாத் தான் இருக்கு. அது கனவில்ல நிஜம்னு நாங்க அங்கிருந்து வந்த பிறகும் உணர்ந்தது அகாவோட நிலமையால தான்” என்று மூவரும் அகாவைப் பார்க்க, அவள் முகத்தில் மென்மையாய் ஒரு புன்னகை.
“சரி இப்ப அதை விளக்க நேரமில்லை. மதியோட பாடிய (உடலை) எப்படி பாதுகாக்கன்னு யோசிக்கணும். அடக்கம் பண்ணாம நம்ம தடுத்திட்டாலும் அடுத்து அதை ப்ரிசர்வ் பண்ணி வைக்க நமக்கு ஒரு இடம் வேணும்” என்று அகா கூற,
“இவ லவ்வர் தான? இவ வீட்டு பிரிஜ்ஜுக்குள்ள வெச்சுக்க சொல்லு” என்று விஷ் கூறினான்.
“எங்கப்பா ஏற்கனவே ஹார்ட் பேசெண்டு. இதுல அவர ஒரேடியா போட்டுத் தள்ளணுமாடா உனக்கு?” என்று ஜான் பொறிய,
“காய்ஸ் ஷட் அப்” என்று கூறிய துருவன் தனது அலைபேசியை எடுத்துக் கொண்டு யாருக்கோ அழைத்தபடி நகர்ந்து சென்றான்.
“அந்தப் பக்கம் போய்ப் பேசுறதுக்கு இங்க நம்மள ஏன்டா இவன் அமைதியா இருக்க சொன்னான்?” என்று விஷ் வினவ,
“நான் கேட்டுட்டு வந்து சொல்லவா?” என்று மதி கேட்டான்.
“வேணாம் வேணாம். அவன் ஏதோ ஐடியா பண்றான். திடீர்னு போய் நின்னு பயமுறுத்திறாத” என்று ஜான் கூற,
“போ ஜானுமா. உனக்கு எப்போமே விளையாட்டு” என்றான்.
அங்கு சில நிமிடங்கள் பேசிவிட்டு வந்த துருவன், தன் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்க மற்ற மூவரும்.. சாரி சாரி மதியின் ஆவியையும் சேர்த்து நால்வரும் துருவனையே குறுகுறுவெனப் பார்த்தனர்.
“என்னங்கடா அப்படி பாக்குறீங்க?” என்று துருவன் வினவ,
“நீ தான மச்சி சீரியெஸ்ஸா இருக்க. அதான் நாங்களும் உன்னைச் சீரியஸா பாக்குறோம்” என்று விஷ் கூறினான்.
“நாசமா போச்சு” என்று தலையில் அடித்துக் கொண்டவன், “நாலுபேரும் சிரிச்சுட்டு இருந்தா அங்க இவன் பாடிக்கு சங்கூதிடுவாங்க” என்று கூற,
“அடேய்.. ஏன்டா பீதி ஏத்துற?” என்று ஜான் கூறினாள்.
“ஜானுமா.. என்மேல அம்புட்டு பாசமா?” என்று மதி சிவாஜி கணேசன் மாடுலேஷனில் வினவ,
“பின்ன.. சொன்னது போல போறச்ச நீ என்னையும் கூட்டிட்டு போயிட்டா என்ன செய்ய?” என்றாள்.
அதில் மற்ற யாவரும் சிரிக்க, “போதும் போதும்” என்ற மதி, “சரி என்ன ப்ளான் பண்ணிருக்க துரு?” என்று கேட்டான்.
“என் ஃப்ரண்டு ஒருத்தன் ஆஸ்பிடல்ல வார்ட் பாயா வர்க் பண்றான். ஆர்பனேஜ் டெட் பாடி ஒன்னு கிடைக்குமானு கேட்டேன். இப்ப உடனே வேணும்னா எப்படினு கேட்டான்” என்று துரு கூற,
“பின்ன கேட்டதும் கொடுக்க அதென்ன பஞ்சுமிட்டாயா? பொணம்டா” என்று அகா கூறினாள்.
“அப்ப கிடைக்கலையா?” என்று மதி பீதியோடு வினவ,
“தெரிஞ்ச ஆஸ்பிடல்ஸ்ல கேட்குறேன்னு சொல்லிருக்கான்” என்றான்.
“சரி பொணத்த வச்சு என்ன பண்ண போற?” என்று ஜான் வினவ,
“பிணம் மாறாட்டம்” என்றான்.
“ஏதே?” என்று நால்வரும் வினவ, துருவனுக்கு ஒரு அழைப்பு வந்தது. சென்று பத்து நிமிடம் பேசிவிட்டு வந்தவன் முகத்தில் பளிச்சென்ற பிரகாசம் இருந்தது.
“என்னடா தௌசென்ட் வாட்ஸ் பல்ப் மாதிரி இளிக்குற?” என்று விஷ் வினவ,
“சரி ப்ளான சொல்றேன் எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க” என்றான்.
“சொல்லித் தொலைடா பீபி ஏறுது” என்று மதி கூற,
“நீ தான் செத்துட்டல? அப்றம் என்ன கவலை? நாங்க தான் ஃபீல் பண்ணனும். கம்முனு இருடா” என்று ஜான் அவனை அடக்கினாள்.
“ஒரு ஆம்புலென்ஸ் சொல்லிருக்கேன்” என்று துருவன் கூற,
“அதான் செத்துட்டான்லடா? அப்றம் எதுக்கு?” என்று விஷ் வினவினான்.
“டேய் சும்மா செத்துட்டான் செத்துட்டான்னு சொல்லாதீங்கடா. பயந்து வருது” என்று மதி கூற,
“தோடா.. செத்தவன் முன்னாடி வந்தா நாங்க தான் பயப்படணும். இங்க பேய் எங்களைப் பார்த்துப் பயப்படுது. ஃபன்னி பேய்” என்று அகா கூறினாள்.
“டேய்.. விடியப் போகுது. ப்ளான கேளுங்கடா” என்ற துருவன், நால்வரும் அவன் பேச்சைக் கேட்க ஆயத்தமானதும் பேசத் துவங்கினான்.
“காலைல மதியோட அண்ணா வர்றதுக்குள்ள ஒரு ஆம்புலென்ஸ் வந்துடும். அதுலருந்து ஒருத்தன் வந்து மதியோட பாடிய கேட்பான். அதாவது மதி ஆர்கன் டொனேஷனுக்கு எழுதிக் கொடுத்திருக்கான். மதி செத்தது தெரிஞ்சு அவன் பாடிய வாங்க வந்திருக்கான்” என்று துருவன் கூற,
“ஆனா நான் தான் அப்படி எதுக்குமே எழுதிக் கொடுக்கலையேடா” என்று மதி கூறினான்.
“மகி.. காத்தோட காத்தா இருக்கியேனு பாக்குறேன்.. மவனே உசுரு பொழச்சுவா.. உன்னை ரூமுக்குள்ள விட்டு..” என்று ஜான் முடிப்பதற்குள், “விட்டு..” என்று கண்கள் மின்ன ஆர்வமாக வினவினான்.
“தே ச்சி.. சொல்றத கேளுங்கடா” என்று விஷ்வேஷ் கூற துருவன் தன் தலையில் அடித்துக் கொண்டான்.
“அவன் வந்து மதி பாடிய வாங்கிட்டு *** ஆஸ்பிடலுக்குப் போவான். அங்க என் ஃப்ரண்ட் அந்த வார்ட் பாய் சொன்னேனே அவனும் இருப்பான். அங்கருந்து தான் நம்ம பாடிய மாத்தப் போறோம். அதாவது நம்ம கொண்டு போற மதியோட பாடிக்கு பதிலா அவன் கொடுக்குற அநாதை பிணத்தை மாற்றிக் கொண்டு வரப்போறோம். அங்க லீகலா போய் முதல்ல நானும் அகாவும் பாடிய சைன் பண்ணி வாங்கிடுறோம். வண்டில மதி அப்பா அம்மானு யாரையும் ஏத்திட்டு வராம கொண்டு வர்றது உன் வேலை” என்று ஜான்வியைக் கை காட்டினான்.
“சரிடா நம்ம மதியோட பாடிய என்ன பண்ண?” என்று விஷ் வினவ,
“அங்கயே மார்சுரில வைக்கச் சொல்லிக் கேட்டிருக்கேன். அது கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் கொஞ்ச நாள் பாத்துக்குறேன்னு அவன் சொல்லிருக்கான். அதுக்குள்ள திரும்ப இவனையும் இவன் உடம்பையும் சேர்க்குறதுக்கான வழிய கண்டுபிடிக்கணும்” என்று துருவன் கூறினான்.
மதியை ஏற இறங்க பார்த்த ஜான், “உசுரு பொழச்சா முதல்ல நல்லா குளிச்சுட்டு வந்துடு. பத்து கட்டி சோப்புனாலும் வாங்கி தந்திடுறேன்” என்று கூற,
“அடிங்கு.. நானே எனக்கு என்ன ஆகுமோனு பயத்துல இருக்கேன். இதுல உனக்கு உன் கவலை” என்று மதி நொந்து கொண்டான்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

Rightu. செத்தும் என்னமா தொல்லை பண்றான் இவன்.🤣
சட்டுனு அவங்களுக்கு காட்சி கொடுத்து தொலையாம அவள மனநல மருத்துவமனையில அனுமதிக்க வெச்சிருப்பான் போல கொஞ்ச நேரத்துல.
காதலியா இருந்தது ஒரு குத்தமாடா. 😯 அவ வீட்டு fridge என்ன பிணவறையா dead body store செய்ய?
பிண மாறாட்டம் புதுசா இருக்கே
மகி உனக்கு ஏன்பா பீலிங் அவங்களுக்கு தான் பீலிங் உன்கூட குப்பை கொட்டறாங்க பாரு.
Funny பேய் 🤣🤣🤣🤣