20. கண்களும் காதல் பேசியதே

Loading

காதல் -20

 

மனம் ஒரு நிலையில் இல்லாமல் எக்குத்தப்பாக தவித்து கொண்டிருந்தது. வீட்டிற்கு வந்து காரில் இருந்து இறங்கியதும் மறவன் கையை இறுக்க பற்றிக் கொண்டவள்.. அதன் பின் அவர்கள் அறை செல்லும் வரை விடவில்லை..

 

வழியில் மூர்த்தி அழைத்தது எல்லாம் அவளுக்கு எங்கே கேட்க போகிறது.  மறவன் தான் அவனது தந்தைக்கு கண்ணை கட்டி விட்டு அவளை மேலே அழைத்து சென்றான்.

 

அறைக்குள் வந்தது தான் தாமதம்.. இதற்காகவே காத்திருந்ததை போல அவனை இறுக்கி அணைத்திருந்தாள் சாயாலி…

 

ஒரு நிமிடம் மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது மறவனுக்கு.. எப்படி தன்னை இத்தனை இறுக்கமாய் அணைத்து இருக்கிறாள்.. மனம் மாறி விட்டதா.. இல்லையே அவ்வளவு எளிதாக மாறும் ரகம் இல்லையே… எதையும் தாங்கும் இரும்பு இதயமும், அத்தனை சுலபமாக எந்த ஆண் மகனையும் அனுமதிக்காத பெண்ணும் கூட.. அப்படி இருக்க எப்படி இத்தகைய காரியத்தை செய்தாள் என்பது தான் அவன் சிந்தனை.

 

அவள் கட்டி அனைத்தும் இந்த நிமிடம் காதல் வரவில்லை, காமம் வரவில்லை அதற்கு பதிலாக பல குழப்பங்கள் வந்து சேர்ந்தது தான் மிச்சம்..

 

அந்த அழகான தருணத்தை ரசிக்க தவறியவன் அவன்.. . இப்படி இருப்பவன் தான் பிற்காலத்தில் அவளது இந்த அழகான தழுவலுக்காக ஒவ்வொரு நாளும் காத்துக் கிடக்க போகிறான் என்பதை அறியவில்லை.

 

” உனக்கு என்னாச்சு யாழி… என்ன இவ்வளவு தூரம் நெருங்க என்ன காரணம் ” என விறைப்பாக நின்று கொண்டு அவன் கேட்டத்தில்.. அதிர்ந்து போனாள் சாயாலி..

 

அவனது குரலில் தான் சுய உணர்வுக்கு வந்தவள், இடி இடித்ததை போல அவனை  விட்டு விலகினாள்.. அவள் முகத்தில் பதட்டம் மேலோங்கி இருக்க, கணவனது முகத்தை காண முடியாமல் பால்கனியை நோக்கி ஓடி விட்டாள் சாயாலி..

 

மருத்துவர் சொன்னது நினைவிற்கு இருந்தாலும், அதையும் தாண்டி அவளிடம் செல்ல தூண்டிய கால்களை அடக்க இயலாமல் பால்கனி சென்றான்.

 

கம்பியை இறுக்கி பிடித்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தாள் சாயா…

 

” கொஞ்சம் மனசு விட்டு பேசலாமா யாழி ”  என்றதும் திடிக்கிட்டு திரும்பியவள் , அமைதியாக அங்குள்ள குஷனில் அமர்ந்து விட்டாள்.

 

அதையே சம்மதமாக எடுத்துக் கொண்டவன்.. ” நம்ம ரெண்டு பேரோட கல்யாணம் ஒப்பந்த கல்யாணம் தானே.. ”

 

ஆம் என அவள் தலை ஆட்ட.. ” அது என்ன ஒப்பந்தம்ன்னு இன்னும் நான் சொல்லவே இல்லையே…”

 

அவளிடம் அமைதி…

 

” இன்னைக்கு காலையல நீ பார்த்த தானே என் அம்மா ” அவ்வளவு தான் உடல் நடுங்க ஆரம்பித்தது சாயாவிற்கு..

 

அதையும் கவனித்து கொண்டு தான் இருந்தான்.. மேலும் தொடர்ந்தவன்.. ” என் அம்மா கோமாவுக்கு போய் வருஷம் ஆச்சு.. நாங்களும் பழைய நினைப்பு எல்லாம் இப்போ வரும் அப்போ வரும்னு காத்திருந்து எல்லாம் வீணானது தான் மிச்சம்.. அப்படி ஒரு நாள் நான் அம்மா கிட்ட உட்கார்ந்து பேசிட்டு இருக்கும் போது தான் ‘இனிமே கல்யாணம் வேணாம் மா எனக்கு வாழ்க்கையே வெறுத்து போச்சு, அப்பா என்ன கல்யாணம் பண்ணா சொல்லி டார்சல் பண்ணுறாரு.. நீங்க இல்லாத இந்த வாழ்க்கையும்.. இந்த உலகம் என்ன ஏமாத்துனதை எல்லாம் என்னால தாங்க முடியல மா ‘ அப்படினு அழுதேன் சாயா.

 

திடீர்னு அம்மா கிட்ட ஏதோ ஒரு அசைவு.. வேகமா நேத்து காட்டுன என் பிரென்ட் டாக்டர் அவன்தான் வந்து பார்த்தான். அம்மா கிட்ட நல்ல இம்ப்புரூவ்மெண்ட் தெரிஞ்சதா சொன்னான்.. அவனது நினைவுகளும் அந்த நாட்களுக்கு சென்றது.

 

” அப்படி என்ன டா அம்மா கிட்ட பேசுன.. என்ன நடந்துச்சு.. இவ்வளவு தூரம் அவங்க ரிகெயின் ஆகி வந்திருக்காங்க ”

 

யோசனையுடன் அமர்ந்த மறவன்.. ” அது என் கல்யாணத்தை பத்தி பேசினேன் டா.. ”

 

கண்களை விரித்தவன்.. ” டேய் கல்யாணம் பண்ணிக்க போறியா டா ” என ஆனந்தில் கேட்டவனை வெட்டும் பார்வை பார்த்தவன்… ” முட்டாள் மாதிரி பேசாத டா.. இந்த உலகத்திலேயே என்னைய மாதிரி ஒரு ஏமாளி யாரும் கிடையாது. நாளைக்கு என்ன கட்டிட்டு வந்தவளுக்கு என் விஷயம் தெரிஞ்சா என்ன விட்டு மொத்தமா போயிடுவா .. என் வாழ்க்கையில கல்யாணம்ன்ற பேச்சுக்கே இடம் இல்லை ”  என பிடிவாதமாக பேசுபவனிடம் என்ன பேசுவது என தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தான் அவனது நண்பன் குமரன்.

 

அப்போது மீண்டும் சிந்தாமணிக்கு அசைவு வர… ஆக மறவன் திருமணத்தை பற்றி பேசினால் இவருக்கு அசைவு வருகிறது என்பதை துல்லியமாக கண்டு கொண்டான்.

 

” டேய் உனக்கு உன் அம்மா பழைய படி வேணுமா வேணாமா ” என குமரன் முடிவாக கேட்க.. பரிதாபமாக தலை ஆட்டினான் மறவன்.

 

” அப்போ உடனே கல்யாணம் பண்ணிட்டு வா , வந்து இவங்க முன்னாடி நில்லு ”

 

” லூசு மாதிரி பேசாதடா ”

 

” யாரு லூசு.. உன் கல்யாண பேச்சு அவங்களை இந்த அளவுக்கு மாத்தி இருக்கு.. இதுக்கெல்லாம் யாரு காரணம் … ” புருவத்தை சுருக்கியவன் முன்பு.. ” நீதான் காரணம்.. நீ மட்டும் கல்யாணம் பண்ணிட்டு வந்து அவங்க முன்னாடி நில்லு, அப்பறம் பாரு உன் பழைய அம்மா உன்கிட்ட நிச்சயம் வருவாங்க ”

 

சிறிது நேரம் சிந்தித்தவன்.. “அதெல்லாம் ஓகே டா… ஆனால் யாரு எனக்கு ஓகே சொல்லுவா ”

 

” பைத்தியமா டா நீ.. உன்ன போய் யாருடா ரிஜெக்ட் பண்ணுவா ”

 

” இல்ல டா என் கண்டிஷனுக்கு ஓகே சொல்லனும்ல”

 

” என்ன உன் கண்டிசன் ”

 

” அக்ரீமெண்ட் கல்யாணம் டா ”

 

” வாட்……. ” என அதிர்ந்தே போனான் குமரன்.

 

” எஸ் டா அம்மாவுக்காக தானே கல்யாணம் பண்ணிக்க போறேன் ”

 

” உன்னைய எல்லாம் திருத்தவே முடியாது என்னமும் பண்ணி தொல ” என சிந்தாமணியை பரிசோதித்து விட்டு கிளம்பினான் குமரன்.

 

ஒப்பந்தக் கல்யாணம் என்றால் பல சிக்கல் உள்ளது.. தற்போதைக்கு சரி என்று கூறி விட்டு பின் சொத்துக்காக இங்கேயே அவள் தங்கிவிட்டாள் என்ன செய்வது.. முதலில் இதற்கெல்லாம் ஒத்து வருவதை போல ஒரு பெண்ணை கண்டு பிடிக்க வேண்டும்..  என தீர்க்கமாக முடிவெடுத்தான்.

 

அவன் நினைத்ததை போல சாயாலி அவனது வாழ்க்கையில் வந்து சிக்கினாள்..

 

அனைத்தையும் கேட்டவள் வெறுமையான பார்வையை அவன் மீது செலுத்தினாள். ‘ அப்போ என்ன பிடிச்சு கல்யாணம் பண்ணலையா ‘ என அவள் மனம் ஒரு பக்கம் போராட்டம் செய்தாலும்… ‘ இது எனக்கு நிரந்தரம் இல்லை ‘ என மற்றொரு பக்கம் சொல்லிக் கொண்டே இருந்தது.

 

” நம்ம ஒப்பந்தம் கல்யாணம் தான் பண்ணிக்கிட்டோம் .. ஆனால் இப்போ அப்படி இல்லையே” என்றதும் புருவத்தை சுருக்கி புரியாத பார்வை பார்த்து வைத்தாள் சாயா..

 

” உனக்கும் இந்த வீட்டுக்கும்… அதை விட முக்கியமா எங்க அம்மாவுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்குறது போல தோணுது , அப்படி எதுவும் இருக்கா யாழி” நிதானமாக தான் கேட்டான்.. ஆனால் அவனது வார்த்தைகளில் அத்தனை உறுதி.. கண்டிப்பாக சம்மந்தம் உள்ளது.. அதுவும் நீ இப்போதே கூற வேண்டும் என்ற மறைமுக மிரட்டல் இருந்ததோ என்னவோ..

 

மூச்சு விடவும் மறந்து அவன் முன் பயத்தில் நடுங்கி கொண்டிருந்தாள் சாயா. எப்படி அவனுக்கு புரிய வைப்பாள்… புரிந்தாலும் உண்மையை ஏற்றுக் கொள்வானா என்பது சந்தேகம் தான்

 

” என்னமோ தெரியலை சாயா.. எங்க அம்மா அப்பாவை தாண்டி நான் யாரையும் நம்புனது இல்லை.. உன்மேல நம்பிக்கை வச்சு தான் உன்ன கல்யாணம் பண்ணி்கிட்டேன்.. ”

 

அவள் ஒரு மார்க்கமாக பார்க்க.. ” சரி மிரட்டி தான் கல்யாணம் பண்ணி்கிட்டேன்.. ஆனால் இந்த ஒப்பந்தம் முடியவும் நீ என்ன விட்டு நிரந்தரமா போகனும் .. நீ காசுக்கு ஆசை படாத பொண்ணு கண்டிப்பா என்ன விட்டு போயிடுவ.. இதெல்லாம் யோசிச்சு தான் உன்ன சூஸ் பண்ணேன்.. ஆனால் நீ அவ்வளவு சீக்கிரம் ஓகே சொல்ல மாட்டேன்னு தெரிஞ்சு தான் உன்ன மிரட்டி கல்யாணம் பண்ணி்கிட்டேன்.. அப்போ உன்ன பத்தி விசாரிச்சதில தான் நீ கொலை பண்ணிருக்கது தெரிஞ்சது .. ” என்றதும் விலுகென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் சாயா…

 

” யாரு , என்ன, எதுக்காக நீ கொலை பண்ண இந்த விஷயம் எல்லாம் எனக்கு தேவையில்லை… ஆனால் உன்கிட்ட இப்படி ஒரு அதிரடியை நான் எதிர்பார்க்கலை.. ரொம்ப போல்ட் தான் நீ.. ”

 

அவள் ஏதோ சொல்ல வந்து அதை முழுங்கி கொண்டிருப்பது நன்றாக தெரிந்தது. ” நீ எங்கிட்ட ஏதோ சொல்ல வர, ஆனால் உன்னால சொல்ல முடியல ரைட்,.. இட்ஸ் ஓகே உனக்கு எப்போ தோணுதோ சொல்லு.. அண்ட் இன்னொரு விஷயம்.. இப்போ எல்லாம் உன்கிட்ட என்னால நார்மலா இருக்க முடில.. புதுசா ஏதோ ஃபீல் ஆகுது.. உனக்கு அப்படி ஏதாவது சிம்ப்டம்ஸ் தெரியுதா ” அவளையே திருப்ப.. பாஷை புரியாத குழந்தை போல முழித்து வைத்தாள் சாயாலி..

 

மறவன் கூறுவதும் உண்மை தான்.. திருமணம் ஆனதில் இருந்து அவள் மீது அவனையும் அறியாமல் சிறு ஈர்ப்பு வருவதை அவனாலும் தடுக்க முடியவில்லை… ஒப்பந்த திருமணம் செய்து கொண்டு நானே அவளை இம்மாதிரியாக நினைப்பது எல்லாம் தவறு என்று மனம் எடுத்துரைத்தாலும் அதை கேட்கும் மனநிலையில் தான் அவன் இல்லை.. அவனையும் மீறி அல்லவா அவன் மனம் மனைவியின் புறம் சாய்கிறது.

 

பாஷையில்ல அவளது இதழ்கள் செய்த மாயமோ.. இல்லை கண்களால் கவி நயம் புரியும் அவளது கரு விழிகளோ, அல்லது கிட்ட வரும் ஆண்களை எட்ட நிறுத்தும் குணமோ, பயந்த சுபாவம் என நினைத்தவன் மனதில் கொலைகாரி என பட்டம் பெற்றதும் ஒரு மனம் அதிர்ந்தாலும் மறுபக்கம் சிரிப்பு தான் வந்தது..

 

வாய் திறந்து பேசாமலே அவனது காதலை மறைக்க வைத்து அவனை அல்லவா ஊமையக்கி விட்டாள் பேதை.. திடிகிட்ட இதயத்தை இறுக்கி பிடித்துக் கொண்டு அவள் முன்பு ஒப்பந்த கணவனாக நடிக்க வேண்டிய சூழல்.

 

அவளுக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது.. தன்னை விட்டு அவள் போவதற்குள் அவளுடைய பிரச்சனைகளை சரி செய்து அனுப்ப வேண்டும் என அவன் நினைத்திருக்க.. விதி அவனை பார்த்து கை கொட்டி சிரித்தது.

 

இதற்கு மேல் இவனிடம் உண்மையை மறைக்க வேண்டாம் .. இப்பொழுதே அனைத்தையும் கூறி விடலாம் என்ற முடிவோடு சாயாலி தன் கணவனிடம் பேச போக.. சரியாக அவனது அலைபேசி சிணுங்கியது.

 

” ஒரு நிமிஷம் யாழி வரேன் ” என திரையில் தெரிந்த எண்ணை பார்த்து வேகமாக எடுத்து பேச ஆரம்பித்தான்.

 

என்ன பேசினானோ தெரியவில்லை… ஒவ்வொரு நிமிடமும் அவனது முகம் இறுகி கொண்டே போக .. இதற்குமேல் முடியாது என்பதை போல காதில் இருந்த போனை எடுத்து சுக்கு நூறாக உடைத்தவன்… அடுத்த நிமிடம் சாயாலியின் கழுத்தை நெறித்து சுவரோடு தூக்கி பிடித்திருந்தான் மறவன்.

 

கரு விழிகள் மேலே சென்று மரணிக்கும் தருவாயில் நின்று கொண்டிருந்தாள் அவனின் யாழி..

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்