
அத்தியாயம் -26
செழியனோ புன்னகை மட்டும் சிந்தியவாறு அவளை பிடித்துக் கொண்டு குளியலறையில் விட்டான்.அங்கே அவளுக்கு ஒரு நாற்காலியும் ஏற்கனவே போடப்பட்டு இருந்தது.
அதைப் பார்த்து அவனைப் பார்த்து சிரித்தவள் “எல்லாம் நீதான் எனக்காக ரெடி பண்ணி வைச்சியா?” என்றதற்கு ஆமாம் என்று தலையசைத்தான்.
எல்லாவற்றையும் அவள் எட்டும் தூரத்திலே எடுத்து வைத்து வைத்திருந்தான்.
“ரொம்ப தாங்ஸ்” என்று சொன்னாள்.உடனே அவனோ “தாங்ஸ் எல்லாம் வேண்டாம் நீயே உன்னை பார்த்து கொண்டால் அது போதும்” என்றான்.அதைக் கேட்டதும் அவள் முகத்திலும் புன்னகை நிறைந்து இருந்தது.
அவளை உள்ளே அனுப்பி விட்டு வெளியே வந்தான் செழியன்.அவனைப் பார்த்து பூர்ணா கவலையோடு “செழியன் இப்பவும் சொல்றேன் ரொம்ப எதிர்பார்ப்பு வைக்காதே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது கண்ணு” என்று கவலையோடு சொன்னார்.
அவரும் ஒரு பெண் தானே. பெண்ணின் மனம் எப்போது எங்கே எவ்விதம் மாறும் என்று அவரும் அந்த வயதினை தாண்டி வந்தவர் அல்லவா! அதனால் ஒருவித பயமும் அவரிடம் இருந்தது.
“அம்மா சிற்பிக்கு என்னை ஒரு காதலான பிடிக்காமல் போனாலும் ஒரு தோழனாக எப்பவும் அவ மனசுல நான் நிறைஞ்சு இருப்பேன் அது போதும். ஏன்னா அந்த உறவுல எப்போ வேண்டுமானாலும் பிரிவும் கோபமும் வெறுப்பும் நிறைந்து போகலாம்.ஆனால் அவளுக்காக எப்பவும் வெறுத்துப் போகாத உறவா நான் இருப்பேன்ல அது போதும் அதனால அவளோட முடிவு எதுவாக இருந்தாலும் எனக்கு ஓகே தான்ம்மா” என்று முடிவாகச் சொன்னான் செழியன்.
அதைக் கேட்டு அதிர்ச்சியான பூர்ணா “என்ன சொல்ற செழியன்? அப்போ நீ வாழ்க்கை முழுவதும் இப்படியே இருந்து விடுவியா?” என்று கவலையும் ஆதங்கமுமாக கேட்டார்.
அவனோ சிரித்துக் கொண்டே “இல்லை சரியாக கொஞ்சம் நாட்கள் ஆகலாம்.ஆனால் அப்படியே இருந்து விடப் போவதில்லை. காலம் தான் காயத்தை ஆற்றும் சிற்பியை விரும்புற மாதிரி என்னையும் விரும்பும் அன்பு கிடைக்குதான்னு பார்க்கலாம்” என்றான்.
பூர்ணாவால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.காரணம் அவனும் கொஞ்சம் நேரம் கேட்கத் தானே செய்கிறான்.அதனால் யோசனையில் அப்படியே இருந்து விட்டார்.
செழியனுக்கு சிற்பியிடம் கேட்க விருப்பமில்லை.
எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கின்ற அன்பை அதை ஒரு பெயர் சொல்லி கெடுத்து விடும் எண்ணம் அவனுக்கு இல்லை.அதனால் அதனை அதன் போக்கிலேயே விட்டு விட்டான்.
இங்கே நிறைய காதலும் அன்பும் சொல்லாமல் தானே இருக்கிறது.அப்படித் தான் அவனுடையதும்.அதன் முடிவை ஏற்பவர்கள் எதிர்த்து சொல்லி விடுகிறார்கள்.ஏற்றுக் கொள்ள மனம் இல்லாதவர்கள் அதன் போக்கிலே விட்டுவிடுறார்கள்.இதில் செழியன் இரண்டாவது ரகம்.
சிற்பி குளித்து முடித்து வரும் வரை காத்திருந்தவன் அவளுக்கு உதவி செய்து விட்டு அவனும் அவளோடு சாப்பிட்டு முடித்தவன் தன் வேலையைப் பார்க்க கிளம்பி இருந்தான்.
சிற்பி தன்னுடைய கைப்பேசியைப் பார்த்தாள்.அதில் நிரஞ்சன் அவளுக்கு காலை வணக்கம் அனுப்பி இருந்தான்.எல்லாம் அவளுக்கு புதிதாக இருந்தது.இப்படியே நாட்கள் நகர்ந்தது.அவளாக இன்னும் நன்றாக நடப்பதற்கு கூடுதலாக நான்கு நாட்கள் தேவைப்பட்டது.இதில் சாம்பவியும் வந்து அவளை சந்தித்து விசாரித்து விட்டு அவளுக்கு உடல்நிலையினால் இன்னும் சில நாட்கள் விடுப்பு கொடுத்தாள்.
இதற்கிடையில் ஊரில் உள்ள தன் பெற்றோரிடம் கைப்பேசியில் பேசி இருந்தாள்.தனது அக்காவான கனிகா தன் கணவனோடு பெங்களூரைச் சுற்றிப் பார்ப்பதற்காக வர எண்ணம் இருப்பதாகச் சொன்னாள்.
ஆனால் அவள் அதை உறுதிப்படுத்தவில்லை.இதற்கிடையில் சிற்பி ஓரளவு குணமாகவும் முதலில் நேராக சாம்பவியை சந்தித்து பேசினாள்.திரும்பவும் அவள் வேலையில் சேருவதற்காகக் கேட்டாள்.அவளும் ஒத்துக் கொண்டாள்.அதனால் இவர்கள் நால்வருக்கும் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களை சந்திக்க அடுக்குமாடி குடியிருப்புச் சென்றாள் சிற்பிகா.
அங்கே எப்போதும் அலார மணியை அழுத்தச் சென்றவளுக்கு கதவு லேசாக திறந்து இருந்தது தெரிய வந்தது.அதனால் அலார மணியை அழுத்தாமல் நேராக உள்ளேச் சென்றாள்.
அங்கே சமையறையில் சென்றவளுக்கு யாரும் இல்லை.மெதுவாக முதலில் நிரஞ்சனின் அறையை எட்டிப் பார்க்க அங்கே அவனும் இல்லை.
‘எல்லோரும் எங்கே போய்ட்டாங்க?’ என்று யோசித்தவள் அங்கே ஓரமாக நிரஞ்சனுடைய கைப்பேசி இருந்தது.அதைப் பார்த்தவளுக்கு ஒரு எண்ணம் தன்னுடைய பெயரை எப்படி அவனுடைய கைப்பேசியில் வைத்திருக்கிறான் என்று பார்க்கும் ஆவலில் அவள் எடுக்கவும் அப்போது குளியலறையில் இருந்து சரியாக வெளியே வந்தான் நிரஞ்சன்.
அவன் உள்ளே இருக்கிறானா? என்று அவள் பார்க்காமல் இருந்து விட இவனும் அப்பொழுது தான் குழாயை வேற மூடியதால் தண்ணீர் சத்தமும் கேட்கவில்லை.
இவள் திரும்பி நின்றவள் சரியாக திரும்பும் நேரம் இவன் தலையில் டவலைப் போட்டு மூடியபடி வரவும் இருவருமாக முட்டிக் கொள்ள கால் பிடறி மெத்தையில் சிற்பியின் மேல் விழுந்தான் நிரஞ்சன்.அவன் வேகமாக முகத்தில் இருந்த துணியை விலக்கவும் இருவரின் விழிகளும் ரொம்ப நெருக்கமாக இருந்தது.
சிற்பியின் மனது வேகமாக துடிக்க ஆரம்பித்தது.ஒருவித பதற்றமும் பயமும் தொற்றிக் கொண்டது.நிரஞ்சனும் அந்த நிலைமையில் தான் இருந்தான்.
அப்படியே சில வினாடிகள் தொடரவும் அப்பொழுது சரியாக உள்ளே வந்த சஹா இவர்கள் இருவரும் இருக்கும் நிலைமையை பார்த்து “இங்கே என்ன நடக்குது?” என்று கத்தவும் நிரஞ்சன் சுதாகரித்து எழுந்து நின்றான்.
அவன் தலைமுடியில் இருந்த நீர்ச்சொட்டு எல்லாம் இப்போது சிற்பியின் முகத்திலும் அவள் துணியிலும் பட்டு இருந்தது.அங்கே சஹா நிரஞ்சன் ஏதோ ஒருவரின் மேல் இருப்பதாக நினைத்தவனுக்கு அங்கே சிற்பியை காணவும் இதை மறந்து “சிற்பி வந்துட்டியா?” என்று அவனையும் மறந்து மகிழ்ச்சியின் மிகுதியில் கைகளை விரித்தப்படி அவளை அணைத்துக் கொள்ள போனான்.
சஹாவைப் பார்த்து அதிர்ச்சியான நிரஞ்சன் “சஹா ஒரு நிமிசம் சிற்பி வந்திருக்கான்னு மத்தவங்க கிட்டயும் சொல்லு” என்றான்.நிரஞ்சன் மேலாக வெற்று உடம்பில் நின்றதால் சிற்பி தலையைக் குனிந்துக் கொண்டு நிற்க அதைப் பார்த்தவன் ஒரு துண்டை போட்டு தன் மேல் மூடிக் கொண்டான்.சிற்பியோ சிந்தியிருந்த நீர்த்துளிகளை துடைத்து விட்டாள்.
சஹாவோ “மு…முதல்ல நான் தானே சிற்பியை பார்த்தேன் அதனால அவளை நானே இன்வைட் பண்ணுறேன்” என்று நிரஞ்சன் சொல்வதைக் கேட்காமல் கொஞ்சம் இடைவெளி விட்டு அவளை கட்டியணைத்தவன் “வெல்கம் சிற்பி எ…எல்லோரும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணோம் தெரியுமா? முக்கியமா நான்தான்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.
சிற்பியோ இன்னும் பதற்ற நிலைமையில் தான் நின்றுக் கொண்டிருந்தான்.அதனால் அவளும் அதை ஏற்றுக் கொண்டது போல இருந்தாள்.
அதைக் கேட்டு கோபமானதை விட அவன் நட்பாக கட்டியணைத்து நிற்பதைப் பார்த்து முறைத்தபடி நிரஞ்சன் “அவன் மட்டும் இல்ல நாங்க எல்லாரும் தான் மிஸ் பண்ணோம்” என்று சிறுபிள்ளைபோல் சொன்னான்.
இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு உள்ளே வந்த பார்த்தி சிற்பியைக் கண்டு “ஹேய் எப்போ வந்தே?” என்று அவனும் அதே போல் அணைத்துக் கொண்டான்.சஹாவைப் போல அவனும் அப்படியே சொன்னான்.
வெளியே சென்றிருந்த காந்தன் உள்ளே வந்தவன் இவர்கள் இருவரையும் நகற்றி விட்டு “சிற்பி இங்கே வரேன்னு எங்கிட்ட சொல்லவே இல்லை நேத்து தானே கால் பண்ணேன் அப்போ ஏன் சொல்லலை?” என்று உரிமையாகக் கேட்டான்.
இதைக் கேட்டு அதிர்ச்சியான நிரஞ்சன் காந்தனிடம் “நீ சிற்பி கிட்ட போன் போட்டு பேசுவியா?” என்று கேட்டான். அதற்கு காந்தன் சாதாரணமாக “ஹா எப்பவும் நானும் சிற்பியும் பேசுவோமே நான் சொல்ற மொக்க ஜோக்கு எல்லாம் சிரிப்பா தெரியுமா?” என்று அவள் தோள்மீது இடித்தான்.
உடனே பார்த்தியும் சகாவும் “சிற்பி நாங்க பண்ற பார்வோர்டு மெஸேஜ்க்கும் நீ சிரிப்பே தானே ஏன்னா ஸ்டிக்கர்ஸ் அனுப்புவல்ல” என்றான்.
இவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு நிரஞ்சனுக்கு தலைசுற்றாத குறை தான்.
சஹா சொன்னதைக் கேட்டு காந்தன் “நீ என்றைக்கு இருந்து சிற்பி கிட்ட பேசுற? ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல?” என்று காந்தன் சிற்பியைப் பார்த்தான்.
அதற்கு சகாவோ “நீ சொன்னியா பேசுறேன்னு அதனால தான் நாங்களும் சொல்லல” என்று பார்த்தியையும் தன்னோடு சேர்த்துக் கொண்டான்.
இவர்கள் மூவரும் சண்டை போடுவதைப் பார்த்த நிரஞ்சன் மனதினுள் ‘நானும் போன் போட்டு பேசினேன்னு தெரிந்தால் அவ்வளவு தான் போல என்கிட்டயும் சண்டைக்கு வந்துடுவாங்களோ?’ என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது சிற்பி “ஏன் இப்படி தேவையில்லாமல் சண்டை போடுறீங்க? எனக்கு” என்று அவள் பேச வரும் பொழுது நிரஞ்சன் அவர்கள் மூவரும் பார்க்காத மாதிரி சைகையால் ‘நானும் பேசுனேன்னு சொல்லாதே!’ என்று அவன் கையை அசைக்க அவளோ புரியாமல் அவனைப் பார்த்தாள்.
அவனோ திரும்ப திரும்ப சைகைச் செய்ய சிற்பி புரியாததால் சத்தமாக “நிரஞ்சன் சார் என்னச் சொல்லுறீங்கன்னு சத்தியாம புரியலை வாயைத் திறந்து சொல்லுங்க” என்று அவள் சொல்ல மூவரும் இப்போது இவர்கள் இருவரையும் பார்க்கும் முறை ஆயிற்று.
காந்தன் “இங்கே தனியா என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலாமா?”
நிரஞ்சனோ “அதெல்லாம் ஒன்னுமில்லை” என்ற போது சிற்பியோ “அப்படியா! ஒன்னுமில்லையா? சரி நான் நாலு பேர்கிட்டயும் தான் பேசினேன் பாருங்க நிரஞ்சன் சார் யார்க்கிட்டேயும் சண்டை போடாமல் அமைதியா இருக்காங்க அதே மாதிரி நீங்களும் இருங்க” என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு மூவரும் நேராக அவனைப் பார்த்தார்கள்.அதைப் பார்த்த நிரஞ்சன் மனதினுள் ‘எதை சொல்லாதே சொல்லாதேன்னு இவ்வளவு நேரமா போராடுனே அதை ஒன்னுமே இல்லாமல் ஆக்கிட்டாளே!’என்று அவளைப் பார்த்தான்.
அவளோ அதே புன்னகை மாறாத முகத்தோடு அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சகா “நி…நிரஞ்சன் சிற்பிகிட்டே என்ன பேசிட்டு இருந்தே?”
“பொதுவா உடல்நிலை எப்படி இருக்குன்னு விசாரிச்சேன்”
“அவ்வளவு தானா?’’ என்று காந்தன் கேட்டான்.
“அவ்வளவு தான் வேணும்னா சிற்பிக்கிட்டேயே கேளு” என்றான்.அவனுக்கும் அவளுக்குமான அந்த தனிமையான உரையாடலை பற்றி சொல்லுகிறாளா? என்று பார்த்தான்.
அவளும் ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.
உடனே காந்தன் “இப்ப எதுக்காக நீ இவ்ளோ விசாரணை பண்றே நிரஞ்சன்? சிற்பி எல்லார்கிட்டயும் பேசுறதும் பேசாம இருக்கிறது அவளோட விருப்பம். இதுக்காக ஏன் இவ்வளவு மெனக்கடல் கேள்விகள் கேட்கிறேன் எனக்கு புரியல நாம அவளுடைய நெருங்கிய நண்பர்கள் அவ்வளவுதான்” என்று காந்தன் விளக்கம் சொன்னவாறே அவனிடம் கேள்வியும் கேட்டான்.
உடனே சகா எதையும் யோசிக்காமல் “எ…னக்கு சிற்பியை பிடிச்சிருக்கு. அதனால தான் அவ மேல ரொம்ப அக்கறையா இருக்கேன்” என்று சாதாரணமாகச் சொன்னான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
1
+1
⬅ Prev Episode
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -25
Next Episode ➡
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -27
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சிற்பியால் இவர்களுக்குள் மனஸ்தாபம் வந்து விடுமோ? அருமை 👏
செழியா சூப்பர் பா .. நீ இப்படி சொல்வன்னு நான் எதிர்பார்க்கல .. உன்னோட சொல்லாத காதல் அவ்வளவு அழகு ..