
காதல் -13
டிஞ்சர் எடுத்து வந்து அவன் முன் வைத்து விட்டு குளியலறைக்குள் சென்ற மனைவியை அதிர்ந்து பார்த்தான் மறவன்.
பின் பேசிய பேச்சிற்கு எல்லாம் சும்மா விடும் ரகம் இல்லையே அவள்… சாயாலியின் ஒரு ரூபத்தை மட்டுமே பார்த்து வந்தவன்… இன்று அவளது மொத்த அவதாரத்தையும் பார்த்து விட அதிர்ந்து போவதை தவிர்த்து என்ன செய்ய முடியும் அவனால்.
‘ அது சரி கொலையே பண்ணிட்டா… இதெல்லாம் அவளுக்கு சாதாரணம் ‘ என காலம் கடந்த ஞான உதயம் அவனுக்கு…
சற்று முன் நடந்த நிகழ்வை நினைத்து பார்த்தவன் முகத்தில் மெல்லிய புன்னகை கீற்று… உரிமை இல்லையா என கேட்டது தான் அவன் பேசிய கடைசி வார்த்தை… அடுத்த நொடி டிரெஸ்ஸிங் டேபிளில் இருக்கும் சென்ட் பாட்டிலை எடுத்து அவனை நோக்கி எரிந்து விட.. பறந்த வேகத்ததில் நெற்றியில் தட்டி ரத்தகளரி ஆனது.
இவள் இப்படி ஒரு காரியத்தை செய்வாள் என சற்றும் நினைக்காதவன் சுதாரிக்க எண்ணம் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருக்க… குறி தப்பாமல் வந்து விழுந்தது அந்த பாட்டில்…
அவனை அடித்தும் சற்றும் சலனமில்லாமல் அவனை நேருக்கு நேராக பார்த்தவள்… ‘ இன்னொரு முறை என்கிட்ட இப்படி நடந்துக்கனும் நினைச்சா ‘ என விரல் நீட்டி சைகையில் எச்சரிக்கை செய்தவள்… அதே இடத்தில் இருந்த டிஞ்சரை எடுத்து வந்து அவன் முன் வைத்து விட்டு குளியலறை உள்ளே சென்று விட்டாள்.
” நான் கூட இவ தான் கொலை பண்ணானு சொல்லும் போது நம்பல.. ஆனால் உஷாரா இருந்துக்கடா மறவா.. இப்படியே பண்ணிகிட்டு இருந்தீன்னா உன் சாவும் அவ கையில தான் ” என மனதிற்குள் புலம்புவதாய் நினைத்து வாய் விட்டே புலம்பி வைத்தான்.
அடுத்த இரண்டு நிமிடத்தில் கதவை திறந்து வெளியே வந்தாள் சாயாலி… தூக்கி போட்ட கொண்டையில்.. முகத்தில் நீர் சொட்ட… எளிமையான இயற்கை அழகில் அவன் வாங்கி கொடுத்த பர்பில் வண்ண சுடிதாரை அணிந்து கொண்டு வெளியே வந்தவளை பார்க்க பார்க்க திகட்டவில்லை மறவனுக்கு…
‘ நீ அவளை அக்ரீமெண்ட் கல்யாணம் பண்ணிருக்க அது உனக்கு நியாபகம் இருக்கா..?? அப்போ அப்போ மறந்து போயிடுற ‘ என அவனது மனசாட்சி நினைவு படுத்த .. முயன்றும் தன்னை அடக்கி கொண்டு பால்கனி பக்கம் சென்று நின்று விட்டான்.
குளித்து விட்டு நேராக தேனுவை பார்க்க தன் வீட்டிற்கு சென்றாள் மூர்த்தியின் அனுமதியுடன்
கதவை தட்டி கொண்டு உள்ளே வந்தாள் சாயா ..
” வா மா… உங்க வீட்டுக்கு வரதுக்கு தான் நான் கிளம்பிட்டு இருக்கேன் டி ” என வெளிவந்தார் தேனு.
” அதை சொல்ல தான் நானும் இவ்வளவு தூரம் வந்தேன்… அங்க எல்லாம் எனக்கு ஓகே தான் நீ இப்போ வர வேணாம்… நாளைக்கு பார்த்துக்கலாம் ” என சைகையில் கூற..
” அறிவு கேட்டவளா நீ… புரிஞ்சு தான் பேசுறியா.. அங்க வீட்ல பொம்பள ஆளுங்க யாரும் இல்ல .. நானும் வரலேனா நீ என்ன பண்ணுவ ”
” ஏன் நீ வந்து என்ன பண்ண போற ”
” அடியே நீ புரிஞ்சு தான் பேசுறியா ”
” என்ன மா ”
” உனக்கு சாந்தி முகூர்த்தம் ரெடி பண்ண வேணாமா ??” என தேனு கேட்ட கேள்வியில் அதிர்ந்து போனாள் சாயாலி..
” என்ன டி சத்ததையே காணோம் ”
” அது வந்து மா… அது இப்ப நீ வர வேணாம் மா ” என முயன்ற அளவிற்கு அவள் தேனுவை தடுக்க பார்க்க… ” நீ உன் வாய மூடு சாயா… எல்லாம் அப்போ அப்போ நடக்குற நேரத்துல சரியா நடக்கனும்… நான் வரேன் நீ மொத வீட்டுக்கு போ.. இது ஒன்னும் விளையாட்டு காரியம் இல்ல ” என மகள் மறு மொழி கூறுவதற்கு முன் வீட்டை பூட்டி விட்டு அவளுடன் வெளியேறினார் தேனு.
பதட்டத்துடன் வீட்டை நோக்கி தன் அன்னையை அழைத்து கொண்டு சென்றாள் சாயா… சரியாக பதினைந்து நிமிடத்தில் அதற்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி கொண்டு தேனு வீட்டிற்குள் வர… இவர்கள் வரவுக்காக காத்திருந்த மூர்த்தி அவரை வரவேற்றார்.
” வாங்க தேனு மா ”
” ஆமா அண்ணே… நைட் விசேஷம் இருக்குல்ல அதான் வந்தேன் ” என அவர் சங்கட்டமாக கூற.. அதை புரிந்து கொண்டவர்… ” நல்ல நேரத்துல என் மகன் மருமகள் வாழ்க்கையை தொடங்கனும்… ஆக வேண்டியதை பாருங்க ” என அவரும் அறைக்குள் சென்று விட… தன் மகளை கீழே உள்ள அறையில் அலங்காரம் செய்ய தொடங்கினார் தேனு….
” மா இப்போ எதுக்கு மா இதெல்லாம் ” என இயலாமையின் கையை ஆட்ட…
” எனக்கு ஒரு உண்மையை மட்டும் சொல்லு… இந்த தம்பி வந்து உன்ன கட்டிக்கிறேன்னு சொன்னப்ப நீ உடனே சம்மதம் சொன்ன… சொன்னியா இல்லையா ” என குரலை உயர்த்தி கேட்க… தானாக தலை ஆம் என ஆடியது..
“அப்பறம் இந்த வாழ்க்கையை தொடங்க உனக்கு என்ன டி தயக்கம்…. இல்ல என்ன ஏமாத்தி எதுவும் இந்த கல்யாணம் பண்ணியா ” என மகளை சரியாக புரிந்து கொண்டவராய் அவர் கேட்க… அதிர்ந்து போனாள் சாயாலி…
தன் அன்னைக்கு அனைத்தும் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் தயாராக தொடங்கினாள் சாயா… தன் மகள் அமைதியாக தயாரவதை நமட்டு சிரிப்புடன் பார்த்தவர்… புடவை கட்டி அலங்காரம் செய்து… தலையில் மல்லிகை மலர்களை சூடி விட்டு தயார் செய்தார்.
அனைத்தும் தயார் ஆகவும்… தன் அன்னை கொண்டு வந்த கட்டப் பையில் அவசரமாக தேடி வீட்டில் இருந்து எடுத்து வந்த தமிழ் காதலன் புத்தகத்தை எடுத்து அமர்ந்தாள்.
“இப்போ கூட உனக்கு இந்த பூக் படிக்கனுமா டி ” என தேனு கூறியது எல்லாம் அவள் காதில் விழவில்லை.. ஆசையாக அதை வருடி முத்தம் பதித்து கண்களை மூடி ஒரு பக்கத்தை திறந்தாள் சாயாலி…
அதில் என்ன வாசகம் எழுதி இருக்குமோ என்ற பயம் இருந்தாலும்… இப்போதைக்கு அவளுக்கான ஆறுதல் அந்த புத்தகம் மட்டுமே என்பது உறுதியாக தெரிந்ததால் தான் வீட்டில் தேனுவை அழைத்துக் கொண்டு வரும் பொழுது அதையும் எடுத்துக் கொண்டு வந்தது.
பக்கம் என் 244.. அதில் இருந்த வாசகம்…
காணக்கிடைக்காத பொக்கிஷம்
அவன் என்றால்!
காத்திருந்து கைப்பற்றிய
அதிர்ஷ்டசாலி நீ !
இயற்கை அழைத்து செல்லும்
பாதையில் அழகாய் பயணி..
வெற்றி உனதே..!
என்ற வாசகத்தை பார்த்தவள் விதிவிதிர்த்து போனாள்… இந்த கவிதை என்ன சொல்ல வருது… இந்த வாழ்க்கையை நான் ஏத்துகிட்டு வாழனும்னா… நினைக்கும் போதே மூச்சடைத்தது… இது நான் அவனுக்கு செய்யும் துரோகம் அல்லவா… இது ஒரு அக்ரீமென்ட் திருமணம் தானே… மீண்டும் மீண்டும் அதையே மனதிற்குள் பதிய வைத்தாள்.
உன்னை பிரித்து பார்த்ததற்கு நன்றாக வைத்து செய்து விட்டாய் என்று தான் தோன்றியது அவளுக்கு… புத்தகத்தை மூடி மீண்டும் தேனு வைத்திருந்த பைக்குள் வைத்தவள்… ” புக் பத்தரம் மா ” என சைகை செய்ய.. சரி என்பதாய் தலை ஆட்டினார் தேனு.
அதற்குள் மூர்த்தி தன் மகனை அழைத்து விஷயத்தை கூற… அவன் எதுவும் கூறாமல் அமைதியாக தோட்டத்தில் சென்று அமர்ந்து வானத்தை வெறிக்க ஆரம்பித்தான்…
தன் மகனின் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்டவர்… ” இன்னும் உன் அம்மாவை நினைச்சு நீ அப்படியே இருக்கனும்ன்னு நினைக்காத மறவா … இப்போ உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு.. உன்ன நம்பி ஒரு பொண்ணும் இருக்கா… அதை மனசுல வச்சுட்டு நீ நடந்துக்க.. ” என மகனின் தோளை தட்டி விட்டு அவர் உள்ளே செல்ல… தேனு மகளை அழைத்து வந்து சாமி முன்பு விளக்கேற்ற வைத்தார்…
தந்தை மகன் இருவரும் அங்கு வர… ” “நீயும் தம்பியின் ஐயா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க… ” என தேனு மகளை கூற… ஒன்றும் கூற முடியாமல் இருவரும் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்.
“தேனு மா நீங்களும் நம்ம பிள்ளைங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க ” என மூர்த்தி கூற.. ” ஐயோ பரவாயில்லை யா.. என்னோட ஆசிர்வாதம் நம்ம புள்ளைங்களுக்கு எப்பவும் இருக்கும் ” என இருவரையும் மேலே அனுப்பி விட்டு தன் வீட்டிற்கு நடையை கட்டினார் தேனு.
இருவரும் அமைதியாக மாடிக்கு சென்று அறைக்குள் நுழைந்து கொண்டனர். ஏனோ சாயாவிற்கு அந்த அறைக்குள் இருப்பது மூச்சடைப்பது போல இருக்க .. பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியே சென்றவள் நிம்மதியாக மூச்சை வெளியேற்றினாள்….
அவளது மன நிலையை நன்கு உணர்ந்தவன்… அவள் அருகே இருந்த கம்பியை பிடித்து கொண்டு அவனும் வானத்தை வெறிக்க ஆரம்பித்தான்..
அவன் வருகையை உணர்ந்தாலும் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அவளும் வானத்தை வெறித்தாள்…
” உள்ள வர பயமா யாழி ” என வெளிப்படையாகவே கேட்டு விட..
புருவத்தை சுருக்கி அவனது புது விதமான அழைப்பை கண்டு குழம்பியவள்… பின் நிதானமாக அவனது கேள்விக்கு பதில் கூறாமல் அமைதியாக இருந்தாள்
” உள்ள வந்தாலும் நீ நீயா தான் இருக்க போற … நான் நானா தான் இருக்க போறேன் .. அதுக்காக இந்த குளிர்ல வந்து வெளிய நிக்காத உள்ளே வா ” என அவன் உள்ளே செல்ல போக..
அவனுக்கு குறுக்காக கைகளை நீட்டி அவன் போவதை தடை விதித்தாள்..
” உங்க அம்மா எங்க … ” என சைகையால் கேட்க..
அதை புரிந்து கொண்டவனோ … ” அது என்னோட பெர்சனல் விஷயம் சாயாலி” என்றவனது முகம் வழக்கத்திற்கு மாறாக இறுகி போனது..
அதை அமோதிப்பதாக தலை அசைத்தவள்.. ” இங்க இருந்து நான் எப்போ கிளம்புனும் ” என அவளது அடுத்த கேள்வியில் கடுப்பானான் மறவன்.
வந்து முதல் நாள் இரவே கிளம்புவது பற்றி பேசுகிறாள்… என நினைத்து கொண்டு… ” அதெல்லாம் இருக்கட்டும் … மேடம் யாரை கொலை பண்ணீங்க.. ” என நக்கலாக கேட்க..
இந்த கேள்வியை எதிர்பார்க்காத சாயா அதிர்ந்து தான் போனாள்…
சனா💖

