Loading

 

அத்தியாயம் 8

வேந்தனை வரவேற்ற அவன் அத்தையை அவன் துளியும் மதியாமல் அவன் கிருஷ்ணாஉடனும் குகனுடனும் விளையாட கல்யாணி தான் எங்க அந்த வேலைகார நாய காணும் எங்க போனா இந்த கழுதை பிள்ளையை தூக்கிட்டு போறேன்னு போன பிள்ளை இப்போ மருமகன் கைல இருக்கு இந்த தண்ட கழுதைய எங்க என்று அவர் ஹை டெசிபலில் கத்த அதை கேட்ட அங்குள்ளவர்களுக்கு தான் மனதிற்கு வருத்தமாக இருந்தது. அங்கு உள்ளவர்களுக்கு இந்த சிறிது நேரத்திலேயே தெரிந்து விட்டது தலைகீழாக நின்னாலும் வேந்தன் இந்த வீட்டில் உள்ள பெண்னை கட்டமாட்டான் என்று. அவர் பேச்சுக்கு சொந்தக்காரியோ அங்கே பேயடித்தது போல் நின்றுகொண்டிருந்தாள். சரி நிலாவிற்கு என்ன நடந்தது என்று பார்த்துவிட்டு வருவோம்..

  1. வேந்தன் அவனது புல்லட்டில் கிருஷ்ணாவுடன் வீட்டை நெருங்கும் போது முதலில் கிருஷ்ணா தான் நிலாவை பார்த்தான் ஐய்ய்ய்…. அக்கா என்று அவன் கத்த அவன் கத்தும் சத்தம் புல்லட் மற்றும் அவள் கைகளில் வைத்திருக்கும் குகனின் சத்தத்தை விட அதிகமாய் வெளிவந்தது. அவனின் சத்தத்தை கேட்டு வேந்தன் மற்றும் நிலா நிமிர்ந்து பார்க்க நிலாவின் பார்வைக்கு குட்டி வாண்டு தான் தெரிந்தான். ஆனால் வண்டியை ஓட்டியவனின் கண்களுக்கு அந்த அழகு பதுமை தான் தெரிந்தாள். அவளை பார்த்து கொண்டே வண்டி அவளின் அருகில் போய் கீர்ச் என்று சத்தத்துடன் நிறுத்தப்பட்டது. அந்த சத்தத்தில் பயந்து பிள்ளையை இறுக்கி அணைத்து கொண்டாள் நிலா. தன்னை சற்று நிதானித்து கொண்டு யோவ் அறிவில்லையா குழந்தையை கையில் வச்சுருக்கேன் பாக்காம வந்து இடிக்க வார என்று அவள் கோவத்துடன் கத்த அவன் தான் அவளையே பார்த்து கொண்டிருந்தான். ஏன் நம் குட்டி கிருஷ்ணாக்கும் ஆச்சுரியம் தான் அப்பத்தாவே பார்த்து பேச பயப்படும் நம் பெரியப்பாவை நிலா அக்கா கோவமா பேசுறாங்க ஆனால் நம்ம பெரியப்பா அமைதியாக இருக்காங்க என்று இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தான். ஏன் வேந்தனுக்கும் அதே தான். அதிலும் நிலாவுக்கு தான் பேசிய பிறகு அத்தனை அதிர்ச்சி பிறர் பேசினால் வாயில்லா பூச்சியாக இருக்கும் நான் இன்று இவரிடம் மட்டும் ஏன் இவ்வளவு கோவம் என்று புரியவில்லை. அனைத்து ஆசைகளும் மறந்து வாழ்பவளுக்கு இது என்ன புது மாதிரியான உணர்வு என்ற யோசனையே அவளை ஆட்கொண்டது. அந்த உணர்வுடன் அவள் நிற்க வேந்தன் அவள் கைகளில் இருந்த தன் தங்கை மகனை வாங்கும் சமயத்தில் அவள் கன்னத்துடன் கன்னம் உரசி கொண்டு ஒரு ரகசிய முத்தத்தை கொடுத்து விட்டு குழந்தயை வாங்கி கொண்டு சென்று விட்டான் வீட்டின் உள்ளே இரு குழந்தைகளுடன். உள்ளே கல்யாணியின் சத்தம் ரோட்டை அடையவே இவள் விறு விறு வென்று உள்ளே சென்றாள். வீட்டிற்குள் வந்தவளை கல்யாணி ஏண்டி புள்ளைய தூக்கிட்டு தான போன அவனையே ஏன் மருமகன் வாங்கிட்டு வந்துட்டாரு உனக்கு என்னடி வெளில வேலை பொட்டாகழுதை என்று அவர் திட்ட அவளுக்கு அது எதுவும் காதில் விழாமல் என் மருமகன் மட்டுமே விழுந்தது. அந்த வார்த்தையிலேயே விலுக்கென்று நிமிர்ந்து அவள் வேந்தனை பார்க்க அவனும் அவளை பார்த்து கண்ணாடித்தான். அவன் அப்படி செய்தது அவளுக்கு தான் திக்கென்று இருந்தது. உடனே திரும்பி கொண்டாள். கல்யாணி தான் என்ன எருமை மாட்டு மேல மழை பெஞ்ச மாதிரி நிக்கற போ போயி தம்பிக்கு ஜூஸ் எடுத்துட்டு வா என்று அவர் கூற அவளோ இதோ மேடம் உடனே போயி கொண்டுவரேன் என்று ஓடியே விட்டாள் அவள். அவள் ஓடுவதையே வேந்தன் பார்த்து கொண்டிருந்தான் மனதில் எடுத்த முடிவுடன் ஆனால் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் மற்றவரை எடை போடும் அதே தீர்க்கமான பார்வையுடன். கருணாகரனும் ஓடும் அவளை வேதனை கலந்த பார்வையுடன் பார்த்து கொண்டிருந்தார். ரேணுகா தான் வேந்தன் பார்வையை கண்டு கொண்டே அடுத்த பிட்டை போட்டாள் அந்த கூட்டத்தில், என்ன எல்லாரும் இப்டியே இருக்கீங்க போங்க போயி பொண்ண கூட்டிட்டு வாங்க பின்ன எங்க பெரிய மாமா எவ்ளோ நேரம் காத்துகிட்டு இருப்பாங்க என்று அவள் கூறிவிட்டு வேந்தனை பார்க்க அவன் ரேணுகாவை முறைத்து கொண்டிருந்தான்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
10
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்