
காதல் -7
குளிர் உடலை துளைக்க அதில் மெதுவாக இமைகளை பிரித்தாள் சாயாலி.. முதலில் ஒன்றும் புரியாமல் சுற்றி முற்றி பார்த்தவள் அப்போது தான் அவளுக்கு தன் வீட்டில் இருப்பது புரிந்தது.
‘நான் எப்படி இங்க வந்தேன்,அப்போ நடந்தது எல்லாம் கனவா, இல்ல கனவு மாதிரி இல்லையே’ என்று யோசனையுடன் அமர்ந்திருக்க.. அப்போது தான் தேனு உள்ளே வந்தார் . ” என்ன டி இது புதுசா மயக்கம் போட்டுலாம் விழுகுற , உடம்புக்கு என்ன வந்துச்சு ஒரு எட்டு போய் வைத்தியர பார்த்திட்டு வர வேண்டியது தானே ” என்று மகள் அருகில் அமர்ந்து தலையை வருட ..அதிர்ந்து போனாள் சாயாலி..
‘அப்போ நடந்தது எல்லாம் நிஜம் தான், ஆனால் எப்படி நான் இங்க வந்தேன் ‘ என்று நினைத்தவள் அதையும் தேனுவிடம் செய்கையில் கேட்க .. ” நேத்து வந்தவரு தான் உன்ன தூக்கிட்டு வந்து இங்க விட்டுட்டு போனாரு, காட்டுல மயங்கிட்டன்னு சொன்னாரு ” என்று தேனு அளித்த பதிலில் உச்சகட்ட அதிர்ச்சியில் இருந்தாள் சாயாலி…
சட்டென்று அந்த இடத்தில் இருந்து எழுந்தவள் தன் உடையை சரி செய்து விட்டு , வேலைக்கு செல்வதாக தேனுவிடம் கூறி விட்டு கூடையை தூக்கி கொண்டு ஓட்டம் பிடித்தாள். மனம் நிலை கொள்ளாமல் தவித்தது , புதிதாக தமிழ் கூறிய செய்தியில் அவளுக்கு மயக்கமே வந்து விட உடனே அவனை பார்த்து விட வேண்டும் என்று நேராக அவன் அழைத்து சென்ற அவனது வீட்டிற்கு தான் ஓடினாள்.
கிட்டத்தட்ட அரை நேரமாக ஓட்டமும் நடையுமாக அவனது வீட்டை அடைந்திருந்தாள்.. இத்தனை தூரம் நடந்ததிலேயே சோர்ந்து போய் இருந்த கால்களை சிரமப்பட்டு உள்ளே நகர்த்தி சென்றாள்.
” வாங்க மிஸ் சாயாலி , நீங்க இங்க தான் வருவீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் ” என்று நடுகூடத்தில் தோரணையாக அமர்ந்திருந்த மறவன் நல்லாக கேட்க சாயாலி அதிர்ந்து போய் உள்ளே நுழைந்தாள்.
அமைதியாகவே அவனையே வெறித்து பார்த்தவள் தொய்ந்து போனவளாய் அப்படியே கீழே அமர்ந்தாள். ” எதுக்காக என்ன தேடி வந்தீங்க ” என்று அவன் அழுத்தமாக கேட்க…
‘ உனக்கு தெரியாதா ‘ என்பதை போல பார்த்து வைத்தாள்.
” ஓகே கொலை தான் விஷயம் , அதான் நீங்க கொலை பண்ணி தப்பிச்சாச்சே இனிமே இங்க வந்து என்ன ஆக போகுது ”
அவன் முன் கைகூப்பி அமர்ந்தவள் ‘ இந்த விஷயம் வெளியே தெரிய வேணாம் பிளீஸ் ‘ என்று சைகையில் கேட்க ..
” நான் இந்த விஷயத்தை வெளியே சொல்ல மாட்டேன் சாயாலி, ஆனால் இப்போ அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போயிருக்காங்க பாரு அவன் சொல்லுவான், அப்போ நீ உள்ள போக போறது உறுதி ” என நிதானமாக கூறினான்.
அவள் கூற்றில் அதிர்ந்த சாயாலி கண்ணீர் மல்க அங்கேயே மடிந்த அமர்ந்து அழுதாள். “வாய் பேச முடியாத பொண்ணு ரொம்பவே வெகுளி அப்படின்னு தப்பா நினைச்சுட்டேன், ஆனால் எப்படி ஒரு கொலையை ஆசால்ட்டா பண்ணிட்டு அமைதியா இருந்திருக்க ” என்று மறவன் பேச அவனை அடிபட்ட பார்வை பார்த்து வைத்தாள்.
‘ பிளீஸ் இதுல இருந்து என்ன காப்பாத்துங்க, என் அம்மா என்னைய நம்பி தான் இருக்காங்க ‘ என்று சைகையில் மன்றாட..
” உன்ன காப்பாத்தனுமா ” என்று தாடியை நீவி கொண்டே சற்று யோசித்தவன் ” சரி உன்னையா காப்பாத்துனா அதுக்கு பதிலா நீ எனக்கு என்ன தருவ ” என்று முடிவாக கேட்க…
சாயாலி சற்று சிந்தித்து ‘ என்கிட்ட கொடுக்க ஒன்னுமே இல்ல ‘ என்று கையை விரித்தாள்.
” நான் உன்கிட்ட இருக்கிறதை தான் கேட்பேன் ”
” ஓகே” என்பதை போல கட்டை விரலை உயர்த்தி காட்ட..
” அடுத்த வாரம் உனக்கு எனக்கும் கல்யாணம் , நீ அதுக்கு சம்மதிக்கனும் ” என்று இடியாக விழுந்த அவனது வார்த்தையில் அதிர்ந்து போனாள் சாயாலி..
எல்லாம் தெரிந்து தான் கேட்கிறானா , நான் ஒரு கொலைகாரி அதை விட ஒரு ஊமை என்னை போய் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறான், இதற்கு பின் ஏதோ உள்ளது சாயா என்று அவள் மனம் எச்சரிக்கை விடுக்க … மறவனை முறைத்து பார்த்தாள்.
” கரெக்ட் கொலைகாரி தான் , ஊமை தான், ஆனால் நீதான் வேணும் ” என்று விரல்களால் அவளை சுட்டி காட்டி அழுத்தமாக கேட்க , சாயாலி அவனை சந்தேக பார்வை பார்த்து வைத்தாள்..
” புரியுது சாயாலி நீ நினைக்கிறது தான் , கல்யாணம் பண்ணி என் வேலை முடியவும் உன்ன நான் விட்டிடுவேன், என்ன நம்பலாம் உன்னோட சேப்டிக்கு நான் கேரண்டி” என்று அலட்டல் இல்லாமல் கூறுபவனை இமை வெட்டாமல் பார்த்து வைத்தாள்.
‘ எத்தனை வருஷம் ‘ என்று சளைக்காமல் அவளும் சைகையில் கேட்டு வைக்க.. அவளை வியந்து பார்த்தான் மறவன். எப்படியும் அவள் இந்த விஷயத்திற்கு முரண்டு பிடிப்பாள் என்று அவன் நினைத்திருக்க, அவளோ அவனுக்கு மிஞ்சிய சூறாவளியாக இருந்தாள்.
” அப்போ உனக்கு ஓகே ”
கண்களை ஒரு முறை அழுந்த மூடி திறந்தவள் ‘ ஆம்’ என்று தலை அசைத்தாள்.
” என்னோட வேலையை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்கிறேன் , அதுவரைக்கும் நீ என் கூட இருந்தா போதும் ” என்று மறவன் அவள் முகத்தை ஆராய்ந்த வண்ணம் கூற , அடுத்த நிமிடமே போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் அவனை எப்படி வெளியே எடுப்பது என்று கேட்டு வைத்தாள்.
‘காரியக்காரியா தான் இருக்கா ‘ என்று மனதிற்குள் நினைத்தவன் , ” இப்போவே ” என்று தொலைபேசியில் ஒருவரை தொடர்பு கொண்டு அவனை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடு பாட்டான் மறவன்.
பேசி முடித்தவன் ” நம்ம கல்யாணத்தை பற்றி நானே உங்க அம்மா கிட்ட வந்து பேசுறேன் , அதுவரைக்கும் மூச்சு விட கூடாது ” என்று எச்சரித்து வைத்தான்.
அனைத்திற்கும் அமைதியாக இருந்தவள் கூடையை தூக்கி கொண்டு அங்கிருந்து செல்ல பார்க்க ” கடைசி வரைக்கும் எதுக்காக கொலை பண்ணன்னு சொல்லாமலே போற ” என்ற மறவனது கேள்வியில் அடுத்த அடியை எடுத்து வைக்காமல் அவனை வெட்டும் பார்வை பார்த்து வைத்தவளை பார்த்து, மறவன் சிரித்து கொண்டே உள்ளே சென்று விட்டான்.
தன் இயாலாமையை நொந்து விட்டு வீடு வந்து சேர்ந்தாள் சாயாலி. ” என்ன டி போன வேகத்துல வந்துட்ட திரும்ப உடம்பு எதுவும் முடியலையா ” என்று தேனு அக்கறையாக விசாரிக்க, இந்த சிறு அன்பிற்காக தானே இந்த வாழ்க்கையை பணயம் வைத்து வந்திருக்கிறாள்.
‘ ஒன்னும் இல்ல மா ‘ என்று சைகை செய்து விட்டு அமைதியாக குளியலறை சென்று கை கால்களை சுத்தப்படுத்தி கொண்டு, கூடையில் இருந்த உணவை உண்டு விட்டு வந்தவளின் கால்கள் தானாக அந்த புத்தக அறையை நோக்கி சென்றது
சிறு மனசுனக்கம் என்றாலே அந்த புத்தகத்தை நாடுபவள் இன்றோ வாழ்க்கையில் பெரிய முடிவை நொடி பொழுதில் எடுத்து விட்டு வந்திருக்கிறாள். இன்றோ மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவிக்க தொடங்கியது.
கையில் எடுத்த தமிழ் காதலன் புத்தகத்தை பிரிக்க மனம் இல்லை. ஏனோ இப்போது கவிதை படிக்கும் மனநிலையில் அவள் இல்லை, புத்தகத்தை தன் முன் இருக்கும் மேஜை மீது வைத்து விட்டு மலைகளை வெறிக்க, அவள் கண் முன் வந்து போனது அந்த காட்டு சம்பவம்.
தமிழ் அந்த கயவனிடன் இருந்து காப்பாற்றியது , அதன் பின் அவன் சட்டையை அளித்தது, பின் அவளை பாதுகாப்பாக அழைத்து வந்தது என ஒவ்வொன்றாக அவள் கண் முன் ஓட ஏனோ அவள் மனம் தமிழ் பின்னே செல்வதை போல தோன்றியது.
‘இது என்ன பைத்தியக்கார தனம் காப்பாற்றி விட்டால் அவன் பின்னே மனம் செல்லுமா ஒருவேளை அவன் கிழவனாக இருந்திருந்தால் தன் மனம் சென்றிக்குமோ ‘ என்று சிந்தனையில் இருந்தவனை கலைத்தது தேனுவின் குரல்.
” சாயா அம்மா உன்கிட்ட ஒரு விஷயம் பேசனும் ” என்று மெதுவாக அவள் அருகில் அமர்ந்தார் , அவளும் சிந்தனைகளை ஒதுக்கி விட்டு அவரை கூர்ந்து பார்த்து வைத்தாள்.
” உனக்குன்னு சேர்த்து வச்சதுல அஞ்சு பவன் நகை இருக்கு ”
‘ அதுக்கு ‘ என்பதை போல அவள் பார்க்க…
” இல்ல சாயா நம்ம மாரியம்மா மகன் இருக்கான்ல பழனி , அவனை உனக்கு கட்டி கொடுக்க பேசி வச்சிருக்கேன் ” என்று தேனு அவள் தலையில் குண்டை இறக்க.. பாவம் எத்தனை அதிர்வை தான் அந்த அப்பாவி ஜீவன் தாங்கும்..
அதிர்ந்து அமர்ந்திருந்த தன் மகளை உலுக்கியவர் ” சாயா பதில் சொல்லு டி உனக்கு சரி தானே , எப்படியும் நான் சொன்னா நீ மறு பேச்சு பேச மாட்ட அந்த நம்பிக்கையில தான் பேசிட்டு வந்தேன் ” என்று தன் மகள் மேல் உள்ள நம்பிக்கையில் கூறி விட சாயாலி உணர்வற்று அமர்ந்திருந்தாள்.
‘இப்போது பழனியுடனான திருமணத்திற்கு சம்மதம் சொன்னால் கொலைகாரியாக தன் வாழ்க்கையே அழிந்து விடும், மறவனுக்கு சம்மதம் கூறினால் தேனுவின் ஆசை நிராசையாக போயிவிடும் ‘ என்று ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் தன் மகளை பார்த்து அவரும் குழம்பி போனவர்..
“இங்க பாரு சாயா ஊருக்குள்ள ஏற்கனவே பேச்சு எல்லாம் தப்பா இருக்கு, அதுக்குள்ள உன்ன ஒரு நல்ல இடத்தில பிடிச்சு கொடுத்தா தான் நானும் நிம்மதியா போய் சேருவேன் , எத்தனை நாளைக்கு தான் நீயும் என்ன தாங்குவ , வேணாம் டி ” என்று தேனு தன் மகளின் நல்வாழ்க்கைக்கு வழி வகுக்க.. சாயாலி தான் இரு மன நிலையில் தத்தளித்தாள்.
“உள்ளே வரவா அத்தை ” என்ற குரலில் இருவரும் திரும்பி பார்க்க.. பழனி தான் நின்று கொண்டிருந்தான்.
” வாங்க தம்பி ” என்று தேனு வரவேற்க, சாயாலி தலை அசைத்து வரவேற்றாள்.
“அது அம்மா கிட்ட பேசுனது எல்லாம் சொன்னாங்க, நான் சாயாலி கிட்ட கொஞ்சம் பேசனும் ” என்று பழனி நேரடியாக கேட்டு வைக்க.. தேனு சம்மதம் தெரிவித்து அமைதியாக வெளியே நின்று கொண்டாள்.
சாயா பழனி இருவரும் சிறு பிள்ளையில் இருந்து அறிந்தவர்களே , இருவரும் ஒன்றாக பல விளையாட்டுகளை விளையாடி சுற்றி திரிந்தவர்கள் தான்.. சாயாலி வயதிற்கு வந்த பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது நட்பு விலக தொடங்கியது. ஆனால் இன்றும் எதிர் எதிரே பார்த்து கொண்டாள் சிறு சிரிப்புடன் இருவரும் கடந்து விடுவார்கள்.
” அம்மா சொல்லி இருப்பாங்களே சாயு ”
” ஆம் ” என்று தலை அசைத்தாள்.
” உனக்கு என்ன தோணுது நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணா செட் ஆகும்னு தோணுதா ?” என்று பழனி வெளிப்படையாகவே கேட்டு வைக்க… ஒரு நொடி திகைத்த சாயா பின் மெலிதாக சிரிக்க, ” இதுல உன்னோட சம்மதம் தான் எனக்கு ரொம்ப முக்கியம் சாயு, நாளைக்கு இதே நேரத்துல இங்க வரேன் உன் முடிவை சொல்லு , நல்லா யோசி ” என்று விடைபெற்று சென்று விட்டான்.
சாயாலியின் மனம் தறிகெட்டு ஓடியது. நான் ஊமை பெண்ணாக இருந்தும் இவன் ஏன் தன்னை திருமணம் செய்ய சம்மதம் கூறினான். மறவனுக்கு ஏதோ காரியம் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக தெரிந்து விட்டது, ஆனால் பழனி ???
அவனிடம் குறை என்று கூறுவதற்கு ஒன்றும் இல்லை, ரெயில்வே துறையில் கேட் கீப்பராக இருக்கிறான். அவனுடைய வாழ்க்கை முறைக்கு அது நல்லா வருமானம் , இருக்கவே இருக்கிறது சின்னதாக ஒரு சொந்த வீடு , வீட்டிற்கு ஒரே பையன் பின் ஏன் என்னை போல் ஒரு பெண்ணை கேட்கிறான் ?? மனதில் ஆயிரம் கேள்விகள் குடைந்து எடுக்க.. எதற்கு பதில் தெரியாமல் தலை வலி வந்தது தான் மிச்சம்.
சோர்ந்து போய் மேஜையில் அமர்ந்தவள் முன்பு இருந்த தமிழ் காதலன் புத்தகம் அவளை பார்த்து சிரிப்பது போல தோன்றியது. ” உனக்காக விடை என்னிடம் உள்ளது விரைந்து ஒரு பக்கத்தை பிரித்து பார் ” என்று கூறுவது போல் தோன்ற கோபத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.
சில்லென்று காற்று சுழற்றி அடித்து சாயாலியின் வீட்டிற்குள் அனுமதி இல்லாமல் வந்ததோடு அவளது தமிழ் காதலன் புத்தகத்தையும் அனுமதியின்றி தொட்டு விட்டு செல்ல.. அதன் விளைவு அதுவாகவே ஒரு பக்கத்தை திறந்து காட்டியது. கண்களை அகல விரித்தவள் அந்த பக்கத்தையே வியப்பாக பார்த்தாள்.
பக்கம் எண் 133 அதில் இருந்த வரிகள்..
மனம் வென்றவன் மலைவேடன் என்றபொழுதும் நித்தம் நினைத்திடும் இது தான் காதலா…
இவன் மானம் காக்க வந்தவன் அல்ல உன் மனதை வென்ற மாயக்காரன்…
உன் மனம் என்னும் பாலைவனத்தில் பாலைவனத்தானே ஆட்சி செய்கிறான் இன்று…
வரிகளை படித்தவளின் கண்கள் சாசர் போல் விரிய , சட்டென்று புத்தகத்தை மூடி நெஞ்சோடு அணைத்து கொண்டாள் மறவனின் யாழி..
சனா💖
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சாயாலி தான் யாழியா???