Loading

தியாவின் அறையில் இருந்து வெளியே வந்த மருத்துவர், சூர்யாவை அழைத்தார். “நீ போடா.. பயப்படாமா”, என்று சொன்ன ஜெய்யை முறைத்துவிட்டு உள்ளே சென்றான்.

சூர்யாவை பார்த்து கொண்டு இருந்த ஜெய் திரும்ப, அங்கு ஸ்வாதி அவனை முறைத்து கொண்டு இருந்தாள். “என்ன இது ஆளாளுக்கு முறைக்கறாங்க”, என்று நினைத்தவன், ஸ்வாதி பார்த்து பல்லை காட்டினான்.

அவனை முறைத்து கொண்டே அவன் அருகில் வந்தவள், “உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா. எதுக்கு தேவை இல்லாம இப்டி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க. சூர்யா தான் எதுவும் பண்ண வேணாம்ன்னு சொல்றாருல. அப்றம் ஏன் இப்டிலாம் பண்ணிட்டு இருக்கீங்க”, என்று கோபமாக அவள் கேட்க,

“சும்மா கத்தாத ஸ்வா. எனக்கு நிஜமாவே ஞாபகமே இல்ல தியாவோட பிரச்சனை பத்தி. இல்லனா நானே சூர்யாவ அனுப்பி இருப்பேன். அப்றம் நான் தேவை இல்லாமல் பண்ணல நீ தான் பண்ணுனா.”, என்று அவனும் கோவமாக சொல்ல,

“நானா.. நான் என்ன பண்ணேன்”, என்று புரியாமல் கேட்டாள் ஸ்வாதி. “தியாவ பாத்து நீ பேசுன தான. அது எதுக்கு பண்ண? நான் உன்னை அவ கிட்ட பேச சொன்னனா.. பேசி சரி பண்ண முடியும்ன்னு தோனுன நான் பேசி இருக்க மாட்டேனா.

சரி அவ உன்னோட பிரன்டும் தான். அவ கிட்ட பேசுனத நீ என்கிட்ட சொன்னியா.. அதுக்கு மறைச்ச? அப்போ நீ பண்ணா அது நல்லது. நான் பண்ணா கெட்டது. அப்டிதான?”, என்று அவன் பொரிந்து தள்ள பதில் சொல்லாமல் நின்றாள் ஸ்வாதி.

“இவ்ளோ நேரம் என்ன பேச்சு பேசுன இப்போ பேசு.”, என்று நக்கல் செய்வது ஜெய் சொல்ல, அவள் பதில் கூறும் முன் சூர்யா அங்கு வந்து விட்டான்.

“தியாவ கூட்டிட்டு போக சொல்லிட்டாங்க. அவளுக்கு ஒன்னும் இல்லையாம். இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சுடுவாலாம். அப்றம் நம்ம போலாம்.”, என்று பொதுவாக சொல்லிவிட்டு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

ஸ்வாதியும் ஜெய்யும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு நின்றனர். சிறிது நேரம் கடந்த பிறகு செவிலியர் வந்து தியா கண்விழித்து விட்டதாக கூற, ஜெய் முதலில் உள்ளே சென்றான். அவன் பின் ஸ்வாதியும் சூர்யாவும் சென்றனர்.

கண்விழித்த தியா கதவை தான் பார்த்து கொண்டு இருந்தாள். முதலில் ஜெய் உள்ளே வர, அவள் கண்களோ சூர்யாவை தான் தேடியது.

சூர்யா உள்ளே வருவதை பார்த்தவள், சட்டென பார்வையை மாற்றி கொள்ள முயன்றாள். அதை அறிந்த சூர்யாவின் மனம் குதுகளித்தது.

“என்ன.. தியாமா நீ.. ஏதாவதுனா ஒரு போன் பண்ணலாம்ல. அவனுக்கு வேணாம். எனக்கு பண்ணலாம்ல. நான் கூட வேண்டாதவனா போயிட்டனா உனக்கு.”, என்று கேட்டவனின் கண்கள் கலங்கியது.

அவனை பார்த்து மெதுவாக புன்னகைத்தவள், “நீ என்னோட பிரன்டா இருந்தா கூப்பிட்டு இருப்பேன். நீ தான் உன் மாப்பிள்ளைக்கு மச்சானா இருக்கியே”, என்று சிரிக்காமல் சொன்னாள் தியா.

அதை புரிந்து கொள்ளாதவன், “அப்டிலாம் இல்ல தியாமா. நீ என்ன இப்டி சொல்லிட்ட..  நீ தான் எனக்கு முக்கியம். இவன எனக்கு யாருனே தெரியாது. நீ இப்டிலாம் பேசாத. எனக்கு கஷ்டமா இருக்கு.”, என்று சோகமாக  சொன்னான்.

அவனை பார்க்க தியாவிற்கு சிரிப்பு தான் வந்தது. “நீ மாறவே இல்ல ஜெய். அப்டியே இருக்க”, என்று சொன்னவளை பார்த்தவன், “நீயும் மாறாம இருந்திருக்கலாம்.”, என்று ஜெய் சொல்ல தியா பதில் பேசவில்லை.

“தியா என்ன ஆச்சு உனக்கு திடீர்னு எப்டி மயக்கம் வந்தது”, என்று ஸ்வாதி கேள்வியை கேட்க, “ஆமா தியா. நீ எதுக்கு கதவ சாத்துன. உனக்கு தான் கிளித்தரோபோபியா இருக்குல அப்றம் எதுக்கு எல்லா கதவையும் சாத்துன.”, என்று ஜெய்யும் கேட்க,

அது யாரோ வெளிய நின்ன மாதிரி இருந்துது. நிழல் கூட தெரிஞ்சுது. மணியும் ஒன்பதுக்கு மேல ஆகிடுச்சா அதான் கொஞ்சம் பயமா இருந்துது. கதவு கிட்ட போன அப்போ யாரோ வெளிய இருந்து கதவ சாத்திட்டாங்க. நான் பயத்துல மறுபடியும் உள்ளே லாக் பண்ணிட்டு ரூம்க்கு போய்ட்டேன்.

பயத்துல அங்கேயும் கதவ சாத்திட்டேன். அப்போ தான் மயங்கிட்டேன்.”, என்று நடந்ததை கூறினாள் தியா.

“இல்ல தியா வேற எதையாவது பாத்து பயந்துருப்ப.” என்று ஏதோ சொல்ல வந்த ஜெய்யை இடை மறைந்தான் சூர்யா.

“ஸ்வாதி ஹாஸ்பிட்டல இருந்து கிளம்பலாம்ன்னு சொல்லிட்டாங்க. சோ வீட்டுக்கு போலாம். தியாவ கூட்டிட்டு வா.”, என்று கூறி விட்டு அவன் முன்னே செல்ல,

அவன் பின் அனைவரும் கிளம்பி வந்தனர். ஜெய்யும் அவர்களுடன் செல்ல எத்தனிக்கும் போது அவனை தடுத்தாள் ஸ்வாதி.

“நீங்க கிளம்புங்க சூர்யா. நாங்களும் வீட்டுக்கு கிளம்பறோம். ஏற்கனவே ரொம்ப நேரம் அகிடுச்சுல”, என்று ஸ்வாதி சூர்யாவிடம் சொன்னாள்.

சரி என்று சூர்யாவும் தியாவும் கிளம்பி விட்டனர். அவர்கள் சென்ற உடன், “எதுக்கு என்ன போக விடாம தடுத்த?. நான் தியா கூட போய் வீட்டுல விட்டுட்டு வந்துருப்பேன்ல”, என்று ஸ்வாதியிடம் சண்டைக்கு சென்றான்.

அவனை மேலும் கீழும் பார்த்தவள், “அதான் சூர்யா இருக்கான்ல. அப்றம் நீங்க போகலன்னு யாரு அழுதா”, என்று நக்கலாக கேட்க,

“ஏய். நான் ஏற்கனவே செம்ம கோவத்துல இருக்கேன். ஒழுங்கா பேசு. நக்கல் பண்ணாம”, என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.

“உங்களுக்கு இது கூடவா புரியாது. ஆண்டவா.. அதான் அவ புருஷன் கூட இருக்கார்ல அப்றம் எதுக்கு நீங்க போகணும். அவரே பத்துப்பாரு.. பாத்துக்கணும். நம்ம கிளம்பலாம்”, என்று அவளும் கோவமா சொல்லி விட்டு, காரில் எறிவிட்டாள்.

அவளை முறைத்து கொண்டே தானும் காரில் ஏறினான். வீட்டை நோக்கி சென்றனர். தியாவும் சூர்யாவும் வீட்டை அடைந்தனர்.

சற்று சோர்வாக இருந்ததால், மெதுவாக உள்ளே சென்றாள் தியா. சில மணி நேரத்திற்கு முன் நடந்தவை நினைவு வர, இப்போதும் பயந்தாள்.

ஆனால் அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாத நிலையில் தானே அவன் இருக்கிறான். சற்று தன்னை நிலை படுட்ஜி கொண்டு அறைக்குள் சென்று விட்டாள். அவளை பார்த்து கொண்டு இருந்த சூர்யாவுக்கு அவளது பயம் நன்றாகவே புரிந்தது.

அவளுக்காக உணவை எடுத்து கொண்டு உள்ளே சென்றான். கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவள் அருகில் சென்று உணவை வைத்தான். அவளும் எடுத்து கொண்டாள்.

குளுக்கோஸ் ஏற்றிய காரணத்தால் கையில் எடுத்து தியாவால் உன்ன முடியவில்லை, அதை அறிந்தவன், ஸ்பூனை அவளிடம் நீட்டினான்.

அதை வாங்கி கொண்டவள் அதில் உண்டு முடித்தாள். பிறகு மருந்து மாத்திரைகளை எடுத்து கொடுத்தான் அதையும் உண்டவள் உறங்கியே விட்டாள்.

சூர்யாவிற்கு தான் உறக்கம் வரவில்லை. அவன் நினைவு முழுவதும் முருத்துவரை சந்தித்ததிலேயே உழன்று கொண்டு இருந்தது.

“வாங்க சூர்யா”, என்று அழைத்தார் மருத்துவர்.

சூர்யா: “சொல்லுங்க டாக்டர். தியாக்கு ஒன்னும் இல்லல. அவ நார்மல் தான. இது எப்போவும் போல வந்த மயக்கம் தான” என்று பதிலுக்கு இடமே கொடுக்காமல் அவன் கேட்டுக்கொண்டே போக,

மருத்துவர்: “கொஞ்சம் கேப் குடுங்க சூர்யா பதில் சொல்ல”,. என்று சிரித்து விட்டு. “இப்போ தியா நல்லா தான் இருக்காங்க. ஆனா இனிமேல் அவங்க நல்லா இருக்கணும்னா. அது உங்க கைல தான் இருக்கு.”, என்று கூறியவரை புரியாமல் பார்த்தான்.

சூர்யா: நீங்க என்ன சொல்ல வரிங்கனு எனக்கு புரியல டாக்டர். கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.

மருத்துவர்: சொல்றேன். உங்களுக்கு கல்யாணம் ஆகி எவ்ளோ வருஷம் ஆகுது.

சூர்யா: ரெண்டு வருஷம் ஒரு மாசம் ஆகுது டாக்டர்.

மருத்துவர்: ஆனா நீங்க ரெண்டும் பேரும் இன்னும் வாழவே இல்ல சரியா?. இட்ஸ் ஓகே. அது உங்க பர்ஸ்னல் நான் எதுவும் சொல்ல விரும்பல. நான் உங்களுக்கு சொல்ல வேண்டியது ஒன்னு தான், தியா மனதளவுல ரொம்ப காய பாட்டுருக்காங்க போல. அதோட தாக்கம் இன்னும் அவங்களுக்கு இருக்கு.

அவங்க ரொம்ப டிப்ரெஸ்ஸ்ட் ஸ்டேட்ல இருக்காங்க. இப்படியே போன அது அவங்களுக்கு நல்லது இல்ல. அதுக்கு காரணம் என்னவா வேணுன்னாலும் இருக்கலாம்.

அது என்ன பாத்து அதுக்கு ஏதாவது சொல்யுசன் கண்டுபிடிங்க. எதையோ நினச்சு அவங்க ரொம்ப பயந்து போய் இருக்காங்க. இன்னைக்கு அவங்களுக்கு மயக்கம் வந்ததுக்கு அது கூட காரணமா இருக்கலாம்.

அதிகப்படியான மன அழுத்தம், உடல் ஆரோகியத்த ரோம்பவே பாதிக்கும். சோ இப்போ அவங்களோட மென்டல் ஹெல்த் ரொம்ப முக்கியம்.

தியாவுக்கு இப்போ ரெஸ்ட் தேவை. அவங்க மென்டலி ரெலக்ஸ் ஆகணும். சோ அதுக்கு ஏதாவது பண்ணுங்க. சம்டைம்ஸ் இருக்கற இடத்தை மத்தலாம். லைக் எங்காச்சும் ட்ரிப் போய்ட்டு வாங்க.

சூழ்நிலை மாறுனா மனநிலையும் மாறும். அவங்க மேல கவனம் வச்சுக்கோங்க. அப்றம் நீங்க எதுக்கும் கவலை படாதீங்க அவங்களுக்கு ஒன்னும் ஆகாது நீங்க இருக்கும் போது. சரியா.” என்று மருத்துவர் சொல்லி முடிக்க,

பேய் அறைந்தது போல இருந்தான் சூர்யா. மருத்துவர் கூறிய அனைத்தையும் நினைத்து பார்த்தவன், அருகில் தூங்கிக்கொண்டு இருக்கும் தியாவை பார்த்தான்.

“அப்டி எத நினச்சு ரதி நீ பயப்படற. எனக்கு புரியல. டாக்டர் என்னென்னமோ சொல்றாங்க. உண்மையிலேயே எனக்கு தான் இப்போ பயமா இருக்கு.

நீ என்கூட பேசமலே இருந்தாலும் பரவால. நீ இப்படியே கடைசி வரைக்கும் இரு. நான் எதுவும் சொல்ல மாட்டேன். இது நான் பண்ணத்துக்கு, நீ எனக்கு குடுத்த தண்டனைன்னு நான் நினைச்சுகறேன்.

உன்ன நீயே ஏன் கஷ்டபடுத்திக்கற. அப்போதான் எனக்கு வலிக்கும்னு இப்டி பன்றியா. நான் பண்ண எதையும் உன்னால மறக்க முடியாதுன்னு தெரியும். ஆனா நான் என்ன பன்ன முடியும். நான் ஒன்னு நினச்சு பன்னா அது வேற மாதிரி முடிஞ்சுடுச்சு.

பாஸ்ட் இஸ் பாஸ்ட். இனி என்ன பண்ணலாம்ன்னு யோசிக்கறேன்.”, என்று கூறிவிட்டு அவனும் படுத்துக்கொண்டான்.

அவனோ தியாவை எங்கே அழைத்து செல்லலாம் என்று சிந்திக்க தொடங்கினான். “நம்ம ஊருக்கு போன என்ன”, என்று நினைக்க,

“அங்க போனா தியா சந்தோஷமா இருக்க முடியுமா..”, என்று அவன் மனம் கேட்க, “இல்ல வேணாம்.. ஏதாவது வக்கேஷன் மாதிரி பாக்கலாம்”, என்று நினைத்தவனை அதற்கு மேல் சிந்திக்க விடாமல் உறக்கம் தழுவி கொண்டது.

அவன் பேசிய அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த தியாவின் மூடிய விழியில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

இங்கு வெற்றி சிரிப்பை உதிர்த்து கொண்டு இருக்கும் நரெனை புரியாமல் பார்த்து கொண்டு இருந்தான், வினய்.

வெற்றி சிரிப்பை உதிர்த்து கொண்டு இருந்த நரேனை புரியாமல் பார்த்து கொண்டு இருந்தான் வினய்.

“இப்போ எதுக்கு நீ சிரிச்சிட்டு இருக்க.. சொல்லிடு தான் சிரிச்சு தொலையேன்.” என்று சற்று எரிச்சல் கலந்த குரலில் வினய் சொல்ல, அவன் தோளில் கையைப் போட்டான், நரேன்.

“ஒன்னும் இல்ல.. நான் சும்மா ஒரு சம்பில் தான் காமிச்சேன்.. அதுக்கே அந்த தியா மேடம் ஹாஸ்பிடல இருக்காங்க.. அப்றம் நம்ம ஹீரோ சார் அவங்கள நினச்சு கவலைப்ட்டுட்டு இருக்காரு..

இதை சொல்லும் போதே எனக்கு எவ்ளோ ஹப்பியா இருக்குன்னு வார்த்தையால சொல்ல முடியாது.. அவங்க இன்னும் கஷ்ட படுவாங்க.. நம்ம அத பாக்கலாம்..”, என்று வெற்றி வாகை சூடியவன் போல பேச,

“நீ என்ன பண்ண.. தியாவுக்கு உடம்பு சரி இல்லாம போனதுக்கும் உனக்கு என்ன சம்பந்தம்?.. எனக்கு புரியல.. ஒழுங்கா சொல்லு..”, என்று குழப்பமாக வினவ,

“ஒன்னும்.. இல்ல டா. நான் நேத்து அவ வீட்டு பக்கம் போனேன்.. அங்க என்ன நடந்துதுனு தெரியுமா..”, என்று நிறுத்த

“சொல்லு.. டா.. அங்க உனக்கு என்ன வேலை”, என்று பொறுமையின் எல்லையில் கேட்டான் வினய்.

“சொல்றேன் டா.. நான் சும்மா தான் போனேன்.. அவ என் நிழலை பார்த்து பயந்து கதவ பூட்டிடா.. அப்போ தான் எனக்கு மேட்டர் ஞாபகம் வந்தது.

நம்ம காலேஜ் படிக்கும் போது ஒரு முறை அவ உள்ள இருக்கறது தெரியாம யாரோ ரூம் கதவ சாத்தி.. அவளுக்கு மூச்சு முட்டி மயங்கி விழுந்துட்டாலே உனக்கு ஞாபகம் இருக்கா.

அதே தான் கதவ வெளிய இருந்து பூட்டிடு வந்டேன் அவ்ளோதான்.. நா சும்மா அவளுக்கு பயம் காட்டலாம்னு தான் பண்ணேன்.

ஆனா அவ அதுக்கே இவ்ளோ பாதிக்க படுவானு நிஜமாவே எனக்கு தெரியாது.. ஏன் சொல்றேனா இது என் லிஸ்ட்லயே இல்ல.. அதான். ஆனா இனிமேல் தான் என்னோட கேம் ஆரம்பிக்க போகுது.”, என்றவன் அதே சிரிப்போடு சென்று விட,

அவன் சென்ற திசையை பார்த்து கொண்டு இருந்தவனுக்கு இறைவனை வேண்டி கொள்வதை தவிர எந்த வழியும் தெரியவில்லை.

இரவு ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டே வரும், ஜெய் மற்றும் ஸ்வாதியை பார்த்த ரிதன்யா குழப்பமாக அவர்களிடம் வந்தாள்.

“என்ன ஆச்சு.. எங்க போய்ட்டு வரிங்க ரெண்டு பேரும்.. ஏன் உங்க முகம் ஓருமாதிரி இருக்கு.. ஏதாவது பிரச்சனையா”, என்று அடுக்கி கொண்டே போக,

“அதெல்லாம் ஒன்னு இல்ல ரிது.. நாங்க சும்மா தான் வெளிய போய்ட்டு வறோம்.. அப்றம் நாங்க சாப்ட்டோம்.. சோ குட் நைட்”, என்று வேகமாக சொன்னாள் ஸ்வாதி.

அவள் கூறுவது பொய் என்று அவள் முகத்தை வைத்தே கண்டுகொண்டாள் ரிதன்யா. இருந்தும்  அவளாக சொல்லாத போது எப்படி கேட்பது என்று நினைத்தவள் சரி என்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

ஜெய் தன் அறைக்கு சென்று விட்டான். இவர்களை கவனித்த ஜானகி தன் கையில் இரண்டு குவளைகளுடன் ஸ்வாதி இடம் வந்தவர், “எப்படியும் வெளியே ஒழுங்கா சாப்பிடு இருக்க மாட்டீங்க இதை குடி, அப்புறம் இது ஜெயிக்கு கொடு”,  என்று அவளிடம் அந்த பால் கோப்பைகளை திணித்துவிட்டு அவரும் சென்று விட்டார்.

செல்லும் முன் ‘இவர்களுக்குள் எந்த பிரச்சனை இருந்தாலும் அதை சரி செய்து விடு’, என்று இறைவனிடம் வேண்டியபடியே தன் அறைக்குச் சென்றார் ஜானகி.

வேறு வழியில்லாமல் அந்த குவளையை எடுத்துக்கொண்டு ஜெய் அறைக்குச் சென்றாள். கதவு தாழிடாமல் இருக்க உள்ளே சென்றவள் அவன் கட்டிலில் அமர்ந்து இருப்பதை பார்த்தாள்,,

“அத்தை இதை கொடுக்க சொன்னாங்க”, என்று கூறிவிட்டு அவன் முகத்தை பார்க்காமல் அதை வைத்து விட்டு செல்ல முயன்றாள்.

அதற்கு முன் அவள் கையை பிடித்து இருந்தான் ஜெய். அவள் ‘என்ன’ என்பது போல் புருவம் உயர்த்தி கேட்க அவளை தன் அருகில் அமர்த்திக் கொண்டான்.

அவன் செயலுக்காண காரணம் புரியவில்லை என்றாலும் அமைதியாக அமர்ந்திருந்தாள். “ஸ்.. சாரி”, என்று மெதுவாக சொன்னான்.

முதலில் தான் சரியாகத்தான் கேட்டோமா என்று குழப்பமாக அவன் முகத்தைப் பார்த்தவள், “என்ன சொன்னீங்க” என்று கேட்க, “உனக்கு என்ன கேட்டுச்சோ அதான் சொன்னேன்”, என்றான்.

அவன் பதில் புன்னகைத்தவள், “சரி இந்த சாரி எதுக்கு”, என்று அவனிடம் வினவினாள்.

“அது நான் தியாவ நினச்சு ரொம்ப கவலையாக இருந்தனா.. அந்த கோவத்ல உன் கிட்டையும் சண்டை போட்டுட்டேன் அதான் சாரி”, என்றான்.

அவள் எழுந்து அவன் எதிரே நின்று தலையை வருடி விட்டாள். “எதைப் பத்தி யோசிக்காம நிம்மதியா தூங்குங்க நான் இருக்கேன்”, என்று அவன் கண்களைப் பார்த்து சொன்னாள். பிறகு அவள் சென்றுவிட ஜெய் நித்ரா தேவியிடம் சரணடைந்தான்.

அடுத்த நாள் காலை, சூர்யா தடுத்தும் எதையும் கண்டு கொள்ளாமல், அலுவலகம் கிளம்பி சென்றுவிட்டாள் தியா.

அவளுக்கு ஓய்வு தேவை என்று மருத்துவர் கூறி இருந்ததால், அவளை ஒரு வாரம் வீட்டில் இருக்க சொன்னான்.. அவள் வழக்கம் போல அப்படி ஒருவன் இருப்பதை கண்டு கொள்ளாமல் சென்று விட்டாள்.

ஏனோ இத்தனை நாள் பொறுமை இன்று காற்றில் கரைய தொடங்கியது.. “அவளோட ஆரோகியத்த விட என் மேல இருக்க கோபம் பெருசா போயிருச்சுல” என்பதே அவன் மனதின் கேள்வி..

தியா மீது சற்று கோபம் வந்தது. இருந்தும் தன்னை சமன் செய்து கொண்டு கிளம்பி சென்றான். ஜெய்யிடம் தியாவை கவனித்து கொள்ளுமாறு கூறி இருந்தான்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்