பகுதி – 6
தயா மூன்று முடிச்சிட்டு தயாளினியை தன் மனைவியாக்கினான்.
இருவரும் எழுந்து நின்று கடைவிரல் கோர்த்து அக்னியை வலம் வந்தனர். தயாவிற்கு மனதுக்குள் அத்தனை மகிழ்ச்சி தயாளினிக்கோ என்ன உணர்வென்றே தெரியவில்லை. சாவி கொடுத்த பொம்மைப்போல் அவன் பின்னாலேயே சென்றாள்.
திருமணம் இனிதே நிறைவடைய அமிர்தா தயாளினியை அனைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை தெரிவித்தாள்.
” அண்ணி ஐயம் சோ ஹாப்பி. வெல்கம் டூ அவர் ஃபைமலி ” என்றாள்.
தயாளினியோ அமியின் மனம் நோகக்கூடாதென்று அந்த நிலையிலும் சிரித்தாள்.
பின் அனைவரும் வீட்டிற்கு சென்றிய ஆரத்தி எடுத்து அவளை உள்ளே அழைத்துச் சென்றாள் அவள்.
ரதி , தீபன் , தாத்தா , அவர் மனைவி நால்வரும் தயாளினியிடம் வந்திட அவளோ ஒரு வார்த்தை பேசிடவில்லை கண்கள் மட்டும் கண்ணீரை சிந்தியவண்ணமே இருந்தன.
தீபன் ” அழாத தயா “
மாலா ” தயாமா இனி இதுதான் உன் வாழ்க்கைன்னு ஆகிடுச்சி அதை உனக்கேத்தமாறி மாத்திக்கோ இல்லையா அதுக்கேத்தமாறி வளைஞ்சி குடுத்து வாழப்பழகு. வாழ்க்கைல கல்யாணம்றது ஒருமுறைதான் அது உனக்கு நடந்துடுச்சி இனி அடுத்து என்னனு யோசி ” என்று தயாய் அறிவுறை வழங்கினார்.
மூர்த்தி ” தயாமா உங்க அம்மா அப்பா நினைச்சி கவலைபடாத அவங்க உன்னை புரிஞ்சிப்பாங்க நல்லதே நடக்கும் ” என்றார்.
ரதியோ ” தயா என்னாலதான் உனக்கிந்த நிலமை உன்கிட்ட மன்னிப்பு கேக்குற தகுதி கூட எனக்கில்ல டி ” என்று அழுதிட தீபன் கோவமாய் அவளை பார்த்தான்.
தீபன் ” ச்சீ பேசாத நீ பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ நீலிகண்ணீர் வடிக்காத எனக்கு உன்ன பார்த்தாலே கோவம் கோவமா வருது போடி “
தயா ” விடு தீபன் அவளை திட்டாத என் தப்புதான் எல்லாரையும் கண்மூடிதனமா நம்புனது என் தப்புதான் அதுக்குதான இவ்ளோ அனுபவிக்கிறன் ” என்றவள் கண்ணீரை துடைத்துவிட்டாள்.
மாலா ” சரி தயா நீ பாத்து இரு நாங்க கிளம்புறோம்
தயா “ம்ம்ம் “
அனைவரும் வெளியே செல்லபோக அமி அவர்களை அழைத்தாள்.
அமி ” எல்லாரும் சாப்பிட்டுபோங்க “
மூர்த்தி ” இல்லமா இருக்கட்டும் எங்களுக்கு பசியில்ல “
அமி ” தாத்தா உங்க பேத்திக்கு கல்யாணம் நடந்துருக்குன்ற சந்தோஷத்துல பசி அடைஞ்சிடுச்சா அதெல்லாம் முடியாது நீங்க சாப்பிட்டுதான் போகனும் அண்ணா அக்கா பாட்டி நீங்களும் வாங்க” என நால்வரையும் அழைத்துச் சென்றுவிட்டாள்.
தீபன் ” ஆமா இப்போ சாப்பாடு ஒன்னுதான் குறைச்சல் இந்த பொண்ணு தெரிஞ்சி பண்ணுதா தெரியாம பண்ணுதா எனக்கு அப்டியே பத்திகிட்டு வருது “
தாத்தா ” அவளுக்கு ஏதும் தெரியாதுபோல அதனால்தான் இப்படி நடந்துக்குறா நீயும் ஏதும் காட்டிக்காத “
தீபன் ” ஏன் தாத்தா அவன் நமக்கு எவ்ளோ பண்ணிர்கான் அது அவன் ஆசை தங்கச்சிக்கு தெரியவேணாமா அவன் செய்றது தப்புன்னு அவனுக்கு தெரிஞ்சிருக்கு அதான் தங்கச்சிகிட்டருந்து மறைச்சிருக்கான் நாம ஏன் அவனை காப்பாத்தனும்.”
தாத்தா ” தீபா முதல்லை மாப்ளைய மரியாதையில்லாம பேசுறதை நிறுத்து அவர் தயாவோட புருஷன் புரிஞ்சிதா. அவர் தங்கச்சிகிட்ட இப்ப நீ உண்மைய சொல்லி ஏதாச்சும் பிரச்சனைவந்தா அந்த கோவத்த அவர் தயாகிட்டதான் காட்டுவாறு பேசாம இரு “
தீபனால் அதற்குமேல் ஒன்றும் பேச முடியவில்லை அவன் தோழி அவனிடம் அவன் வீட்டில் இனி இருக்கபோகிறாளே அவளுக்கு எந்த பிரச்சனையும் வரகூடாதென அமைதியாக இருந்துவிட்டான்.
” நீங்க சாப்பிடுங்க ” என அமிர்தா மற்றவர்களுக்கு பரிமாறிட யாழி ,வசீ , அஜ்ஜூ மூவரும் வந்தமர்ந்தனர்.
அஜ்ஜூ ரதியின் எதிரே அமர அவளுக்குதான் கண்ணீர் கரையை உடைத்துக்கொண்டு வந்தது.
வஞ்சியவள் வஞ்சிக்கப்பட்டதை எண்ணி வருந்திட அவனோ துளியும் குற்றவுணர்வின்றி சாதாரணமாக இருந்தான்.
வசீம் ” தயா எங்க தீபன் “
தீபன் ” உங்க பிரண்டு தயா எங்கனு என்கிட்ட கேட்டா எனக்கெப்படி தெரியும் ” எரிச்சலாய் பதிலுரைத்தான்.
அமிர்தாவிற்கு ஏன் இவர் இவ்ளோ கோவபடுறாரு என்று தோன்றியது.
அஜ்ஜூ ” டேய் அவன்கிட்ட எதுக்கு நீ கேக்குற தயாக்கு கால் பண்ணு இல்ல அமிகிட்ட கேளு “
வசீ ” நான் உங்க பிரண்டு தயாளினி எங்கன்னு கேட்டன் நாமல்லாம் சாப்பிடுறோம் அவளை காணோமேன்னு கேட்டன்.”
யாழி ” அவ சாப்பிட்டா என்ன சாப்பிடலனா உனக்கென்ன அவங்கவங்களுக்கு பசிச்சா அவங்கவங்க வந்து சாப்பிடுவாங்க நீ பேசாம சாப்பிடு “
அப்போது தயா அங்கு வந்தான்.
அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள
தயா ” அவ வரலயா “
” அண்ணி படுத்திருக்காங்க “
” சாப்பிட கூப்பிடு “
அமி தயாளினியை சாப்பிட அழைத்தாள்.
” அண்ணி சாப்டவாங்க அண்ணா உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கான் உங்களை கூப்பிடுறான் “
” இல்ல எனக்கு பசிக்கலை அமி நான் அப்றம் சாப்பிட்டுகிறன்.”
அமியும் சரியென அங்கிருந்து சென்று தயாவிடம் கூறிட அவன் எழுந்து ” நான்போய் கூப்பிட்டுவரன் ” என்று சொல்லிட யாழியோ ” டேய் நீ ஏன்போற அவளுக்கு பசிச்சா அவ சாப்பிடுவா “
மாலாவிற்கு சுறுசுறுவென கோபம் வந்தது யாழியை பார்த்து அவரே நம்ம பொண்ணுமேல ஏதோ கொஞ்சமா அக்கரை படுறாரு அதையும் இந்த ராங்கி பிடிச்சவ கெடுத்துவிடுறாளே என்று மனதில் அவரால் கருவிக்கொள்ள மட்டுமே முடிந்தது.
வீட்டில் பெரியவர்கள் உறவுக்காரர்கள் இருந்தால் அவர்களிடம் கேட்டு முறையிடலாம் இங்கோ அப்படி ஒன்றுக்கும் வழியில்லை.
அவர்கள் பேசுவதே பேச்சு எடுப்பதே முடிவு என்ன செய்திட தயாவின் வாழ்க்கையாயிற்றே அமைதியாய் சாப்பிட்டார்.
தயா அவன் பாட்டுக்கு சென்றுவிட்டான்.
ரதியோ சாப்பிடாமல் கண்ணீர் கொட்டிட அமி அவளிடம் கேட்டாள்.
” அக்கா சாப்பாடு ரொம்ப காரமா கண்ணுல தண்ணீ வருது நான் வேணும்னா வேற ஆர்டர் பண்ணவா”
ரதி | இல்ல பரவால்ல ” என்றிட அஜ்ஜூவோ மிகச் சாதாரணமாய் “ரதி உனக்குதான் காரம்னா ரொம்ப பிடிக்குமே ஏன் கண் கலங்குற வேணும்னா நான் காரத்தை குறைச்சிவிடவா ” என்று கேட்டு கண்ணடித்திட அவளுக்கோ சாப்பாடு விஷமாய் மாறியது.
அவனோடான நாட்களை நினைத்தாள்.
ரதியும் அஜ்ஜூவும் அவன் வீட்டில்…….
அஜ்ஜூ டீஷர்ட் டிராக்ஸ் அணிந்துக்கொண்டு தலையில் துண்டோடு கேஸிலிருந்த எதையோ கலக்கிக் கொண்டிருந்தான்.
” என்ன பண்றீங்க பபிள் “
அவன் தலையை அவள் மீது சாயத்து ” என் ஏன்ஜல்க்கு பிடிச்ச நாட்டுக்கோழி குழம்பு செஞ்சிட்டு இருக்கன் ” என்றவன் அவளை முன்னிழுத்து இடைவளைத்துக்கொண்டான்.
அதில் நெளிந்தவள் ” விடுடா” என்று விலகி ” நிஜமாவா எனக்காதான் செய்றியா “
” பின்ன வேற யாருக்கு டி செய்யபோறன் உனக்காக பாரு நான் சமைக்கலாம் செய்றன் என்றவன் இந்தா டேஸ்ட் பாரு ” என்று அவள் உள்ளங்கையில் ஊதி ஊற்றினான்.
ரதியும் அதனை நக்கி ருசி பார்த்திட காரம் தாங்கவில்லை.
” ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆஆஆஆஸ்ஸ்ஸ் பபிள் காரம் டா ரொம்ப காருது “
” அய்யோ உனக்கு காரம் பிடிக்குமே கொஞ்சம் எக்ஸ்ட்ரா போட்ட இந்தா இதை குடி ” என்று ஒரு டம்ளரை நீட்டிட அதிலோ மிளகு ரசம் இருந்தது. அவளுக்கு பிடிக்குமென ஏற்கனவே செய்து அதில் வைத்திருக்க தண்ணீரென நினைத்து தவறுதலாய் கொடுத்திட்டான்.
காரம் தாங்காமல் அவன் கொடுத்த கிளாஸை பார்க்காமல் அவளும் பருகிட இன்னும் காரமேறியது.
” டேய் இதுவும் காருது இது தண்ணி இல்ல ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆஆஆஆ” என்று குதித்தாள்.
அஜ்ஜூ ” ஸாரி ஸாரி இந்தா தண்ணீ” என்று தண்ணீர் பாட்டிலை நீட்டிட அதை குடித்தும் அவள் காரம் அடங்கிடவிட்டலை.
ஏற்கனவே சிவந்திருக்கும் செவ்விதழ் இன்னும் ரத்தசிவப்பாய் மாறிட கண்களெல்லாம் எரிந்து கண்ணமெல்லாம் சிவந்துவிட்டது அவளுக்கு காரத்தில்.
அஜ்ஜூவோ அவளுக்கு காரம் குறையாததால் இழுத்து இதழோடு இதழ் சேர்த்துவிட்டான்.
அவளோ அதிர்ந்து நின்றிட அவனோ அவள் இதழினை சுவைக்காது அவன் அவள் நாவினை ருசித்து அவன் எச்சிலால் அவளுக்கு காரத்தை போக்கினான்.
அவன் விலகி அவள் முகம் பாராது அவள் காது மடலில் கிசுகிசுத்தான்
” காரம்போச்சா ஏஞ்சல் “என்று.
அவளோ அவன் முத்திலும் அவள் மூச்சுக்காற்றிலும் விதிர்விதிர்த்து நின்றிருந்தாள்.
முதல் முத்தம்
சித்தம் கலங்கடித்து அவளை பித்தமாக்கிய இதழ் யுத்தம்.
பெண்ணவளின் கால்கள் தள்ளாளிட கைகள் நடுங்கிட கிறங்கி நின்றிருந்தாள்.
தீபன் அவளை தட்டிட நிகழ் காலத்திற்கு வந்தாள்.
தீபன் ” சாப்பிடு வேணானா ஏந்திரிச்சிபோ உக்காரந்து கனவு கண்டிட்டு இருக்காத எரிச்சலா வருது”
அஜ்ஜூ ” ஏய் தீபன் நீ ஏன் அவளை அதட்டுற கையில போட்ருக்க கட்டு பத்தாதா உனக்கு வாய்ல ஒரு கட்டுபோடனுமா “
தீபன் ஏதும் பேசிடவில்லை.
ரதி கண்களை துடைதிட்டு எழுந்து சென்றிட அஜ்ஜூவோ தோளை குலுக்கிவிட்டு அமர்ந்திருந்தான்.
தயா அறையில்……..
தயாளினி கட்டலின் கீழே அமர்ந்திருந்து முகத்தி மெத்தையில் வைத்திருந்தாள்.
தயாளன் “சாப்பிட வா “
தயாளினி ” எனக்கு வேணா “
” ஏன் “
…….
” கேக்குறன்ல ஏன் ” இந்த முறை அதட்டலாய் கேட்டான்
” தூக்கம் வருது ” என்று கண்ணை மூடிக்கொண்டாள்.
தயா நக்கலாக சிரித்து சொன்னான். ” ம்ம்ம் இப்போவே நல்லா தூங்கிக்க நைட் நீ ஒரு செகன்ட்கூட தூங்க முடியாது ஃபுள் நைட் எனக்கு கம்பெனி குடுக்கனும்ல “
அவள் பட்டென கண் திறந்துவிட்டாள். இதயம் தாறுமாறாய் துடித்தது. அவள் அவளருகில் நெருங்கி வர அவள் பதறி எழுந்து நகர்ந்தாள்.
அவன் இன்னும் அருகில் சென்றிட அவளுக்குதான் பயத்தில் நெஞ்சடைத்தது. திருமணம் நடந்துவிட்டதுதான். அவன் நெருங்குவது அவள் மீது முழு உரிமையுள்ள அவள் கணவன்தான். ஆனால் அவளால் அவனுக்கு இப்போதைக்கு இசைந்திட முடியாது மனதளவில் அவள் அதற்கு தயாராய் இல்லை.
அவன் இன்னும் நெருங்கிவந்தான். அவள் பீரோவில் சாய்திட்டாள் அதற்குமேல் அவளால் நகர்ந்திட முடியவில்லை.
அவன் இரு கைகளால் அவளை அனைகட்டி அவளையே பார்த்திருந்தான்.
அவள் தலையை குனிந்து படபடப்பாய் நின்றிருந்தாள்.
அவள் காதில் கிசுகிசுத்தான்.
” என்ன டி சொன்ன என்கிட்ட அடங்கிபோக மாட்டியா இப்போ பாத்தியா எப்படி நிக்கிறன்னு இதுதான் டி தயா. உன்னை எப்படி நிக்க வெச்சிருக்கன் பாத்தியா ” என்று அவளை அணைத்திடபோக அவளோ வேகமாய் அவனை தள்ளிவிட்டு வெளியே ஓடிவந்துவிட்டாள். தயா சிரித்துக்கொண்டே வெளியில் வந்தமர்ந்தான்.
அமி ” என்ன அண்ணி நான் கூப்பிட்டா தூக்கம்வருதுன்னு சொன்னீங்க அண்ணா கூப்பிட்டதும் சாப்பிடவன்டீங்க “
தயாளினி ” அது நான்… எனக்கு “
தயாளன் ” ஆமா அமி உங்க அண்ணிக்கு இப்போ பசி வந்துடுச்சி வேற ஒன்னுமில்லை நீ சாப்பாடுபோடு “
அவளே எடுத்துபோட்டு சாப்பிட ஆரமித்தாள். இனி இந்த தலைகணம் பிடித்தவனோடுதான் தன் வாழ்க்கையை வாழ்ந்திட வேண்டுமா என்று அவள் மனம் கூப்பாடு போட்டு அழுதது.
அனைவரும் சாப்பிட்டுவிட்டு அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.
தயாளினிக்குதான் பயபந்து வயிற்றில் உருண்டுக்கொண்டிருந்தது. அவன் சொன்னானே இன்றிறவு……அய்யோ நினைக்கவே உடல் பதறியது. காதலில்லா கல்யாணம் விருப்பமில்லா கணவன் ஏன் தனக்கு மட்டும் இப்படி நடக்கிறது? நல்லது செய்ய நினைத்தது தவறா? அவனோடு மோதியது தவறா? என்னை அடக்கி ஆண்டிட அவனுக்கு இந்த மஞ்சள் கயிறு போதுமா ? இனி காலம் முழுக்க நான் அவனது கட்டுப்பாட்டிற்குள் தான் இருந்திட வேண்டுமா ?அவன் விருப்பபடிதான் நடந்திட வேண்டுமா? என்று யோசித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
சரி இனி என்ன நடந்தாலும் நாம் ஒத்துழைப்பு கொடுக்கதான் வேண்டும். அவன்தான் என் கணவன் இனி அவனோடுதான் வாழ்க்கை என்றாகிவிட்டது. அவனை ஒருமுறை எதிர்த்தற்கே இந்த நிலையில் நிற்கவைத்துவிட்டான் இனியொருமுறை ஏன் அப்படி செய்யவேண்டும் அவன் என்ன செய்தாலும் அமைதியாய் இருந்திடதான் வேண்டும்.
தீபன் ரதியின் வாழ்க்கை தாத்தாவின் உயிர் அவர்கள் மகளின் வாழ்க்கை என எல்லா பக்கமும் அவளுக்கு பிரிச்சனை. இதில் அவனோடு மீண்டும் மல்லுகட்டி வம்பு வளர்த்து ஏன் தேவையில்லாத பிரச்சனை இனி அமைதிதான் ஒரேவழி என்று முடிவெடுத்தாள்.
தயாளன் இதழில் ஏளனச்சிரிப்போடு வந்தான். அவன் வந்ததும் அவள் எழுந்து நிற்க தயா பேசினான்.
” அடடா தயாளினியா இது நான் வந்ததும் எழுந்து நின்று மரியாதையெல்லாம் குடுக்குற இது கூட நல்லாதான் இருக்கே ” என்றவன் அவள் கைப்பிடித்து இழுத்திட அவளோ பொம்மைப்போல் அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றாள்.
அவளை மெத்தையில் தள்ளி அவள் இரு பக்கமும் கைஊன்றி அவள் மீது அவனிருந்தான்.
அவன் அவள் கண்களை பார்த்திட அவளோ இறுக மூடியிருந்தாள் இமைக்கதவுகளை.
தயாளன் அவளை ரசனையாய் பார்த்திருந்தான். பேதையவள் கண்கள் மூடியிருக்க அவளெங்கு அதனை கவனித்தாள்.
அவனோ அவள் இமை மீதிருந்த மச்சத்தையை பார்த்திருந்தான்.
நெடுநேரமாகியும் அவன ஏதும் செய்யாமலிருக்க அவள் இமைக்கதவுகளை மெல்லமாய் திறந்திட்டாள்.
அவன் ஒருபுருவம் தூக்கி ” மேடம் வேற ஏதோ எக்ஸ்பெக்ட் பண்றீங்கபோல ” என்றான் கேலியாய்.
அவளோ அவனை தள்ளிவிட்டு எழுந்து கோபம் விரக்தி இயலாமையினால் கேட்டாள்.
“ஏன் இப்படி பண்ற என்னை? நான் என்ன தப்பு பண்ண ? நீயாதான் வந்து வம்பு பண்ண நான் உன்னை எதிர்த்து நின்னது தப்பா? என்னை இப்படி இந்த நிலமைக்கு கொண்டுவந்திட்ட இப்ப உனக்கு சந்தோஷமா ஆம்பளைன்ற கர்வத்தோட திருப்தியா இருக்கியா நான் ஒத்துகிறன் நான் தோத்துட்டன்தான் போதுமா பிளீஸ் என்னைவிடு இப்போ இப்படி பண்ணவேணா எனக்கு ஒருமாதிரி இருக்கு நெஞ்செல்லாம் வலிக்கிது” என்றவளுக்கு கண்ணீர் வந்தது.
அவள் கண்ணீரை துடைத்தவன் அவள் முகத்தருகே செல்ல அவளோ கண்களை மூடிக்கொண்டாள்.
ச்சை என்ன மனுஷன் இவன் ஒரு பொண்ணோட உணர்வுக்கு மரியாத குடுக்க தெரியாத ஜென்மம். என மனதில் அவனை அர்சித்திருக்க
அவனோ அவள் மச்சத்தில் முத்தமிட்டான். அவன் சூடான மூச்சுக்காற்று அவள் மேனியில் பட அவளுக்கு என்னவோபோலாகியது.
” குட் நைட் ” என்றவன் கட்டிலில் ஒரு ஓரம் சென்றுபடுத்துவிட்டான்.