Loading

நான் ஒரு லேப் டெக்னீஷியன். அதனால எனக்கு தெரிஞ்ச நான் வேலைசெய்ற முறைய வைத்து ஒரு கதை எழுதனும்னு ஆசைபட்டன் அதான் இந்த புதிய முயற்சி.

எல்லாரும் நோயை குணபடுத்துற மருத்துவரைத்தான் கடவுளா பாக்குறாங்க. ஆனா அந்த மருத்துவதுறையோட முதுகெலும்பா இயங்குற ஆய்வுகூடங்களையும் அதுல வேலைசெய்யுற யாரையுமே நம்மில் பலருக்கு தெரிவதில்லை.  முதுகெலும்பு பின்னாடி இருக்கனாலயோ என்னவோ நாம அதைபெருசா கருத்தில் வைத்துக்கொள்வதில்லை. ஆனா முதுகெலும்பில்லனா ஒன்னுமே முடியாதுன்றத மறந்திடுறோம்.

எனவே மருத்துவதுறையோட முதுகெலும்பான ஆய்வகர்களையும்  அவங்க உழைப்பையும் தெரியபடுத்தவே இந்த முயற்சி.

அதற்கு முன்னாடி நான் சில தகவல்களை சொல்லவிரும்புறன். இதை கண்டிப்பா படிங்க ஏன்னா கதை முழுக்க நீங்க மருத்துவதுறையோட பயணிக்க வேண்டிவரும். அதனால இந்த தகவல்கள் எல்லாம் கதையோட போக்கிற்கு ரொம்ப அவசியம்.

என்னாடா இது நான்லாம் பாடபுத்தகத்தையே ஒரு வருஷமா தொடலை இதுல நீவேறவந்து பாடம் எடுக்கபோறியான்னு கடுப்பாகதீங்க என்னோட எல்லாகதைய போலவும்தான் இதுவும் லவ் ரொமான்ஸ் fight னு எல்லாம் இருக்கும். ரொம்ப போர் அடிக்கமாட்டன்.

மற்றகதைமாதிரி ஹீரோ ஒரு மாணவராகவோ இல்லை தொழிலதிபராகவோ இருந்தா நாம கதைய எளிதா புரிஞ்சிக்கலாம் ஆனா மருத்துவதுறைன்றனால விளக்கங்கள் அவசியம் பிளீஸ் படிங்க.

முதலில் ஆய்வுகூடம்னா என்னனு நம்மில்ல பலருக்கும் தெரிந்திருக்கும். சிலருக்கு தெரியாது. தெரியாதவங்களுக்காக இந்த தகவல்.

நமக்கு ஏதாவது ஒரு நோய்வந்து மருத்துவர்கிட்டபோனா அவர் என்ன ஏதுன்னு விசாரிப்பாரு ஊசிபோடுவாரு மருந்து மாத்திரை கொடுப்பாரு உடம்பு சரியாபோய்டும்.

சிலவேலைகள்ல அப்படி ஆகாது தொடர்ந்து ஒரு பிரச்சனை இருக்கும். அது என்னனு மிகச்சரியா கண்டறியறதுக்கு நமக்கு ஆய்வாளர்களோட உதவி தேவை.

ஆய்வகத்தில  ரத்தம் , சளி,  சிறுநீர் , மலம் , விந்து திரவம் போன்றவற்றை பரிசோதிப்பாங்க. நம்மில்ல பலரும் நேரடியா சென்று இந்த சாம்பிள்ஸ் ஐ கொடுத்திருப்போம்.  ஆனா இது மட்டுமில்ல நம்ம உடலிலுள்ள அனைத்தையுமே நாம பரிசோதிக்கலாம்.

இதயத்தில் இருக்கும் பெரிகார்டியல் மற்றும் பெரிடோனியல்  திரவம் நுரையீரலில் இருக்கும் புளூரல் திரவம் மூளையிலிருக்கும் செரிபுரோஸ்பைனல் (csf )எனும் திரவம் முட்டியில் இருக்கும் சைனோவியல் பிரசவத்தின்போது எடுக்கப்படும் பனிக்குட திரவம் (amniotic fluid) இன்னும் பல.  எல்லாவற்றையும் பரிசோதித்து அந்த பகுதியிலுள்ள பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கேற்றார்போல் சிகிச்சை வழங்கலாம்.

இந்த திரவங்களை மருத்துவர்கள் நோயாளியிடமிருந்து எடுப்பர். நோயாளிகளை மயக்க நிலையில் வைத்து இந்த திரவங்கள் எல்லாம் எடுப்பர். இந்த திரவங்கள் மட்டும்தான் உடலிலிருந்து எடுத்து பரிசோதிக்கபடுகின்றனவா எனக்கேட்டால் இல்லை. நம் உடலிலுள்ள உறுப்புகளையும் எடுத்து பரிசோதிக்கலாம். 

இது இரண்டு வகைப்படும் large biopsy and small biopsy என்பது ஆகும்.

லார்ஜ் பாயாப்சி என்றால் ஒரு உறுப்பிலுள்ள பெரும்பகுதியை நீக்கிவிடுவர். சுமால் பயாப்சி என்றால் சிறுபகுதியை மட்டும் எண்டோஸ்கோபி  மூலம் எடுப்பர்.

உறுப்பின் பெருபகுதியை நீங்கி அதனை அதை formalin என்ற ரசாயணத்தில்போட்டு ஆய்வகத்திற்கு அனுப்புவர்.

ஆய்வகத்திலுள்ள மருத்துவர் ஆய்வகரின் உதவியுடன் அதனை சிறு துண்டாகுவர். இதுவே லார்ஜ் பாயாப்ஸி.

சுமால் பயாப்ஸி என்றால் எடுத்துக்காட்டாக ஒரு நோயாளிக்கு புற்றுநோய் இருப்பதாக மருத்துவர் சந்தேகித்தால் எந்த பகுதியில் புற்றுநோய்க்கான அறிகுறி உள்ளதோ அந்த பகுதியிலிருந்து ஒரு சிறிய துண்டை எண்டோஸ்கோபி மூலம் எடுப்பர். அதனை  ஒரு குப்பியில்போட்டு formalin என்ற இரசாயணத்தையிட்டு ஆய்வகத்திற்கு இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் அனுப்புவர்.

ஆய்வகர்கள் அந்த சுமால்பாயாப்ஸி என்று சொல்லக்கூடிய சிறிய திசுக்களையும் பெரிய உறுப்பிலிருந்து சிறிய துண்டாக்கிய  திசுக்களையும் பதப்படுத்துவர்.

பின் அந்த திசுக்களை மெழுகில் வைத்து கட்டியாக்குவர். அந்த செய்முறைக்கு எம்பட்டிங் (embedding )என்று பெயர்.

பின் மைக்ரொடோம் என சொல்லக்கூடிய  உபகரணம்  கொண்டு அதனை வெட்டுவர். 0.5 -3 microns வரை நம்முடைய திசுக்களை வெட்டலாம். மிகவும் மெல்லிய இழையாக திசுக்களை வெட்டவேண்டும்  அதனை  ஸ்லைடில் வைத்து பல இரசாயணங்களில் போடுவர். அந்த செய்முறைக்கு ஸ்டெயினிங் staining என்று பெயர்.

அந்த ஸ்டென் செய்த ஸ்லைட்ஸ் ஐ பெத்தாலஜிஸ்ட்(pathologist) என்று சொல்லக்கூடிய நோய்குறியியல் நிபுணரிடம் அனுப்பவர். அந்த ஸ்லைடிலுள்ள நோயாளியின் செல்லை பார்த்து புற்றுநோயின் வகையை கண்டறிந்து ரிப்போர்ட்கொடுப்பார்.

நோயாளியின் மருத்தவர் நோயாளிக்கு

புற்றுநோயின் வகையை பொருத்து மருந்து வழங்குவார். இல்லையெனில் அப்பகுதியையே வெட்டி எடுப்பார்.

இந்த முறையில் நோயாளியிலுக்கு உடலில் எந்த குறைபாடு இருந்தாலும் அதனை கண்டறிந்துவிடலாம். அவர்களின் ஒவ்வொரு செல்லையும் ஆராயலாம். புற்றுநோய் உறுப்பு செயழிலப்பு உள் உறுப்பு அழுகள் உறுப்புகளின் செயலிலுள்ள கோளாறு போன்றவைகள் இம்முறைமூலமாகத்தான் கண்டறியப்படுகின்றன.

பதப்படுத்தலில் ஆரம்மித்து அதனை மெல்லிழையாக்கி இரசாயணமிட்டு செல்களுக்கு வண்ணங்கள் கொடுத்து சரியாக எந்த ஸ்லைடு எந்த நோயாளியுடையது என்று குறிப்பிட்டு மருத்துவரிடம் அனுப்பவதுவரை ஆய்வகர்கள் செய்வர்.

மருத்துவர் அதனை நுண்ணோக்கியில் பார்த்து ஆய்வரிக்கை என சொல்லக்கூடிய ரிப்போர்ட் கொடுப்பார்.

இப்போது படிப்பதற்கு இந்த செய்முறைகள் எளிதாக இருக்கலாம் ஆனால் இதில் ஒரு சிறு தவறு நடந்துவிட்டாலும் நோயாளிக்கு சரியான ஆய்வறிக்கையை வழங்க இயலாமல்போய்விடும். எனவே இந்த செய்முறைகளை மிகவும் கவனமாக கையாளவேண்டும்.

ஆய்வகத்தில் ஏகப்பட்ட பிரிவுகள் உள்ளன நுண்ணுயிரியல் (microbiology )உயிரிவேதியியல் (biochemistry) நோய்க்குறியியல் (pathology) என மூன்று பெரும்பகுதிகளும் ஒவ்வொரு பகுதிக்கு கீழ் நான்கு ஐந்து சிறு பகுதிகளும் இயங்குகின்றன.

நான் இப்போது கதைக்காக விளக்கியது நோய்க்குறியியல் துறைபற்றி மட்டுமே இன்னும் இரண்டு துறைகள் கதைக்கு தேவையில்லாததால் நான் விளக்கவில்லை. ஒவ்வொரு துறையிலும் மருத்துவருக்கு நிகராக ஆய்வகரின் பங்களிப்பும் இருக்கும். எனவே மருத்துவருக்கு கொடுக்கும் மரியாதையை மருத்துவதுறையிலுள்ள அனைவருக்கும் கொடுங்கள். மருத்துவமனையை சுத்தம் செய்யும் தொழிலாளிக்கும் கொடுக்கள். அவர்கள் இல்லையென்றால் நோயாளிகளும் உடனிருப்பவர்களும் நோய்தொற்று ஏற்பட்டு மாண்டுதான் போகவேண்டும்.

மருத்துவனாக பலர் வரிசையில் நிற்பர் ஆனால் தரையைகூட்டி பெருக்க யாரும் முன்வருவதில்லை. எனவே அந்த தொழில் செய்பவர்களை இழிவாக பார்க்கவேண்டாம்.

மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள் தேவர்களென்றால் செவிலியர்கள் தேவதைகள் ஆய்வகர்கள் அவர்களின் கண்கள் போன்றவர்கள். 

இதெல்லாம் ஏன் சொல்றன்னு நினைக்கிறீங்களா ஒரு விழிப்புணர்வுகாகதான். நீட் எழுதி மருத்துவம் படிக்க முடியலைன்னு தற்கொலைவரை போறாங்க அதெல்லாம் வேணா. மக்களுக்கு சேவை செய்ய மருத்துவதுறையில் எத்தனையோ பிரிவுகள் இருக்கின்றன. அதையெல்லாம் படித்து மக்களுக்கு தொண்டாற்றலாம்.

நம்ம நாயகன் ஒரு பெத்தாலஜிஸ்ட். சென்னையிலேயே  மிகச்சிறந்த ஒரு ஆய்வத்தை நடத்திட்டுவராறு அவரோட நண்பர்களோட.

நாயகி லேப் டெக்னீஷியன்.

அதனாலதான் இந்த விளக்கங்களை கொடுத்தன்.  

Information போதும்னு நினைகிறன் கதைக்குள்ள போகலாம்.

___________________________

பகுதி – 1

காலை கதிரவன் தன் பொற்கதிர்களை வீசி அனைவரையும் துயில் எழுப்ப எல்லோரும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர்.

அந்த பெரிய கட்டிடத்தின் முன் வந்து நின்ற காரிலிருந்து இறங்கினான். ஒரு ஆறடி ஆடவன். கண்களில் அலட்சியமும் தன்னைமிஞ்ச எவருமில்லை என்ற கர்வமும் கொண்டு கம்பீரமாய் இறங்கினான் அவன்.

அவன் தயாளன். நம்கதையின் நாயகன். அவனொரு மருத்துவன்.  தமிழ்நாட்டிலேயே மிகச்சிறந்த ஆய்வுக்கூடம் என்று சொல்லகூடிய அளவிற்கு ஒரு லேப் ஐ  (lab)நடத்திவருகிறான். 

வேகநடையில் அவன் வர அவனோடு யாழினியும் வசியும் நடந்துவந்தனர்.

தயா ” வசி செங்கல்பெட்லருக்க அந்த எம்எம் ஹாஸ்பிடல்லருந்து சேம்பில் வந்திருச்சா “

வசி ” வந்துர்சி டா “

தயா ” அஜ்ஜூ எங்க போய்ருக்கான் “

வசி ” அவனோட ஹாஸ்பிடலருந்து சேம்பில் கொண்டுவரபோய்ருக்கான்”

வசி ” யாழி அந்த ராம்குமார்கிட்ட பேசிட்டாயா நமக்கே சாம்பிள் அனுப்பறதுக்கு ஒத்துகிட்டாறா “

யாழி ” கேட்டுடன் வாசு அவர் கொஞ்சம் தயங்குறாரு ஆல்ரெடி அவர் ஒரு லேப்க்கு சாம்பிள் அனுப்புறாராம் அவங்ககிட்ட எப்படி சட்டுன்னு முடியாதுன்னு சொல்றதுன்னு யோசிக்கிறாரு “

தயா ” அவருக்கு அவங்க எவ்ளோ கமிஷன் தராங்களாம் “

யாழி ” ஒரு பேஷன்ட்க்கு இருநூறு ரூபா”

தயா ” ஒரு பேஷண்ட்க்கு நாம ஐநூறு ரூபா தரோம்னு சொல்லு நாளைக்கே சாம்பிள் அனுப்புவாறு “

வசி ” தயா அவங்களுக்கே ஐநூறு ரூபா குடுத்தா நமக்கு அதுல என்ன லாபம் கிடைக்கும் “

தயா ” நாம பேஷண்ட்கிட்ட ரேட்ட ஏத்திபோட்டுகலாம்டா “

யாழி ” தயா  நாம ஒரு லார்ஜ் பாயாப்சிக்கே  1500 சார்ஜ் பண்றோம் அதுக்கும்மேல சொன்னா எல்லாரும் யோசிப்பாங்க டா “

” யாழி  இந்த நோயாளிங்களோட மைண்ட் செட்ட நீ முதல்ல புரிஞ்சிக்கனும் எடுத்ததும் 1500  ரூபானா  யாரா இருந்தாலும் யோசிப்பாங்க அதுவே சாம்பிள் குடுக்க ஆயிரம் ரூபா  ரிப்போர்ட் வாங்க ஐநூறுபா சொன்னா அவங்களுக்கு வேற வழியில்ல ரிப்போர்ட் வேணும்றதுக்காக வாங்கிட்டுபோய்தான் ஆகனும் சிம்பிள். “

யாழி ” உனக்கு மட்டும் எப்படி டா இப்படிலாம் தோனுது எனக்கு இந்த ஐடியா வரலையே “

தயா ” ஏன்னா நான் தயா டி ” என்று அவள் தலையில் தட்டினான்.

தயா  தன் அயராத உழைப்பால் மிகச்சிறிய அளவில் ஆரமித்த அந்த ஆய்வுக்கூடம் இப்போது தமிழ்நாட்டிலேயே பெயர் சொல்லகூடிய சிறந்த ஆய்வுக்கூடமாக விளங்குகிறது. 

அது அவன் ஒருவனால் மட்டும் சாத்தியபடவில்லை. அவனது நண்பர்கள் நால்வர் அவனுக்கு தூணாக நின்றனர்.

தயா யாழினி அர்ஜூன் வசிம்  நால்வரும் ஒன்றாக மருத்துவம் பயின்றவர்கள். அவர்களுக்கு பணத்திற்கு குறைவேயில்லை. நால்வரும் பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

ஒரே கல்லூரியில் பயின்ற இவர்கள் நால்வரும் எல்லா மருத்துவர்களைப்போல ஒரு துறையில் நிபுணராகவேண்டும் என நினைத்தனர். எல்லோரைபோலவும் நோயளிகளுடன் அமர்ந்து பேசி ஊசி போட்டு அறுவைசிகிச்சை செய்ய இவர்களுக்கு ஒப்பவில்லை. எனவே  Pathology நோய்குறியியல் துறையை தேர்ந்தெடுத்து படித்தனர். அத்துறையை எடுத்ததன் காரணம் ஒரு பெரிய ஆய்வுகடத்தை நடத்தவேண்டும் என்பதே. படித்து முடித்ததும் அவர்கள் வீட்டிலிருந்து பணம்  வாங்கி ஓர் ஆய்வுக்கூடத்தை ஆரமித்தனர். எல்லோரும் சரிசமமாக பணத்தை போட்டனர்.

எல்லோரும் சாதாண ஆய்வுகூடத்தை நடத்துவதால் இவர்கள் வித்யாசமாக நோய்குறியியலுக்கான ஆய்வகத்தை  தொடங்கினர். நோய்குறியியலில்  நான்கு பிரிவுகள் இருந்தன.

Histopathology மனித உறுப்புகளை பரிசோதிக்கும் பகுதி

Cytology மனித உடலிலுள்ள திரவங்களை பரிசோதிக்கும் பகுதி

Heamatology மனித இரத்ததிலுள்ள செல்லையும் குறைபாடையும் பரிசோதிக்கும் பகுதி

Clinical pathology சிறுநீரை பரிசோதிக்கும் பகுதி 

( இரத்தமாதிரியும் சிறுநீர் மாதிரியும் பல ஆய்வுக்கு உட்படுத்தபடும் நோய்குறியியல் மட்டுமின்றி நுண்ணுயிரியலிலும் உயிரவேதியியலிலும்கூட இம்மாதிரிகள் பரிசோதிக்கப்படும்.)

ஆனால் இங்கு இவர்கள் நோய்குறியியல் மட்டும் ஆரமித்துள்ளனர்.

அதற்கு வேண்டிய உபகரணங்கள் அனைத்தும் விலை உயர்ந்தவை இருந்தும் அனைத்தையும் வாங்கி ஆய்வகத்தை ஆரமித்தனர். ஏனெனில் அவர்களுக்கு பணத்திற்கு பஞ்சமில்லை அல்லவா.

தங்களுடைய செல்வாக்கின் மூலம் ஏகபட்ட மருத்துவர்களிடம் தொடர்புகொண்டு அவர்களுக்கு உறுப்பு மாதிரிகள் biopsy samples ஐ அனுப்ப சொல்லி வேண்டினர்.

அவர்களும் அனுப்ப இவர்களின் ஆய்வறிக்கை  (test reportes) மிகச்சரியான முறையில் இருப்பதால் இவர்களிடமே தொடர்ந்து சேம்பில்ஸ் ஐ அனுப்பினர். 

ஆரம்பத்தில் மருத்துவமனைக்கு சென்று இவர்களே சேம்பில்ஸ் ஐ வாங்கினர். இப்போது அவர்களே வந்து கொடுத்துவிட்டு செல்கின்றனர்.

கிட்டதட்ட ஒருநாளைக்கு இவர்களிடம் சிமால் பயாப்ஸி லார்ஜ் பயாப்ஸி என ஆயிரகணக்கில் சேம்பிஸ்வரும்.

ஆய்வகம் ஆரமித்த மூன்றான்டுகளிலேயே இவர்களுக்கு நல்ல வளர்ச்சி. தலைகணத்திலும் கூட நல்ல வளர்ச்சிதான்.

தயா தன்னறைக்கு வந்து அமர்ந்தான். அவனது இருப்பிடத்தில் ஏற்கனவே தயார்நிலையிலுள்ள அனைத்து ஸ்லைடுகளும் டிரேவிலிருந்தன.

நுண்ணோக்கியை ஆன் செய்தே அந்த ஸ்லைடுகளை பார்க்க ஆரமித்தான்.

ஸ்லைடில் தூசி இருப்பதால் அது சரிவர தெரியவில்லை. அந்த ஸ்லைடை தயார்செய்த டெக்னீஷியனை அழைத்தான்.

ஒரு முப்பது வயதுடை ஆண் வந்தான். அவன் வந்ததும் வசவு பாட ஆரமித்தான்.

” அறிவில்லை உனக்குலாம் காசுவாங்குறல்ல அதுக்கேத்த வேலை செய்யனும்னு தெரியாது இங்கபாரு ஸ்லைடெல்லாம் குப்ப குப்பயா இருக்கு எங்களுக்குன்னு வந்து வாய்க்கிதுங்க பாரு இந்தா இதை எடுத்துட்டுபோ மறுபடியும் ஸ்லைடு எடுத்து ஸ்டெயின் பண்ணி கொண்டுவா இரிடேடிங் இடியட் ” என்று கத்தினான். 

அந்த மனிதரோ முகத்தை ஒருமாதிரியாய் வைத்துக்கொண்டு அந்த ஸ்லைடு டிரேவை எடுத்துக்கொண்டு சென்றார்.

அவர் சென்று அவரது உடன் பணிபுரிவோரிடம் பேசினார்.

மதன் ” மனு இங்கபாருங்க ஸ்லைடுல தூசி இருக்கான் அவரு கத்துறாரு பாத்து பண்ண மாட்டீங்களா  “

மனு ” அண்ணா நான் என்னனா பண்றது இந்த ஹெமட்டாக்ஸலின் (ஒருவகை இரசாயணம் ) வடிகட்டுறதுக்கு முன்னாடியே இந்த ரெய்சல்  ஸ்லைட அதுல போட்டுடா அதான் சரியில்ல “

மதன் ” காரணம் சொல்லுங்க நீங்க பண்ற தப்புக்கு நான்தான் திட்டு வாங்குறன் மறுபடியும் போடுங்க “

ரெய்சல் ” அண்ணா மறுக்காவா அய்யோ இப்பதான் பிளாக்கெல்லாம் எடுத்து டப்பால போட்ட மறுபடியும் ஐஸ்ல வெச்சி கட் பண்ணி டிவாக்ஸ் பண்ணி ஸ்டெயின் போடனுமா நான் வேற இன்னைக்கி half கேக்கலாம்னு நினைச்சன் “

மதன் ” அந்தாளு முன்னாடிபோய் லீவுகீவுன்னு நின்னுடாத கடிச்சி குதறிடுவாரு  “

மனு ” போடி உன்னாலதான் இவ்ளோ வேலை “

ரெய்சல் ” அக்கா எனக்கென்ன தெரியும் எப்பவும் நீங்க வடிகட்டிடுவீங்க அதே நினைப்புல நானும்போட்டுட நான் என்ன பண்ண”

மதன் ” சரிபோங்க மறுபடியும் போடுங்க “

தயா  அறையில்…..

” ஹாய் மச்சான் ” என்றவாறு உள்ளே வந்தான் அர்ஜூன்.

தயா ” டேய் வாடா சாம்பிள் கலெக்ட் பண்ணிட்டியா  “

அஜ்ஜூ ” பண்ணிட்டன் டா அவங்க வெஜைனல் சாம்பில் எடுக்க லேட் பண்ணிட்டாங்க. “

(வெஜைனல் சாம்பிள் என்பது பெண்களின் பிறப்புறுப்பிலிருந்து எடுக்கப்படும் ஒரு திரவம். மஸ்கரா வைக்க பயண்படுத்தும் ஒரு பிரஷ்ஐ போன்று இருக்கும் அந்த உபகரணம். அதனை ஆய்வகர் ஒருவர் பெண்ணின் பிறப்புறுப்பில் விட்டு எடுத்து ஸ்லைடில் தேய்த்து அதனை ஸ்லைடில் ஒட்ட ஐசோ புரோபைல் ஆல்கஹால்  எனும் திரவத்தில் போட்டு கப்லின் ஜார் என்று சொலல்கூட ஒருகுப்பியில் போட்டு  ஆய்வகத்திற்கு அனுப்புவர். )

அஜ்ஜூ ” அங்கருக்க டெக்னீஷியன் ரொம்ப மெதுவா எடுக்கிது சட்டுபுட்டுன்னு எடுத்து குடுக்காம எனக்கு கடுப்பாய்டுச்சி “

யாழி ” நீ ஏன்டா வெயிட் பண்ண வந்திட வேண்டியதான அவங்க லெவலுக்கு நம்மலாம் காத்திருக்கவே கூடாது “

அஜ்ஜூ ” இல்ல டி பேஷன்ட்டாச்சே சரி பாவம்னு வெயிட் பண்ணி வாங்கிட்டு வந்த “

வசி  ” டேய் நல்லவனே உன்னபத்தி எனக்கு தெரியாது அங்க எவளாச்சும் பாக்க கண்ணுக்கு லட்சனமா நின்னுருப்பா அவளை பார்வையாலயே ரேப் பண்ணிட்டு இருந்துருப்ப உனக்கு நேரம்போனதே தெரிஞ்சிருக்காது “

அஜ்ஜூ ” எப்படி மச்சி கண்டுபிடிச்ச நீ பிரில்லியண்ட் டா ” என்று அவனை கொஞ்சினான். வசி அவன் கையை தட்டிவிட்டு ” நான் பொண்ணு இல்ல டா பையன் ” என்றான்.

தயா  ” எரும எரும போற இடத்துல என்ன வேலை பாத்துட்டுவர ஏதாவது ஏடாகூடம் பண்ணிட்டுவந்த தொலைச்சிடுவன் பாத்துக்க “

அஜ்ஜூ ” இது வாலிப வயசு”  என்று வடிவேல்போல் சொல்ல

யாழி அவன் கையை பிடித்து முறுக்கி “இவன்கிட்ட என்னடா பேச்சு ” என்று அடித்தாள்.

அப்போது ரெய்ச்சல் ஸ்லைடு டிரேவோடு வந்தாள்.

ரெய்சல் ” எக்ஸ்கியூஸ் மி ஸார் “

தயா ” கமின் “

” ஸார் ஸ்லைடு “

தயா முறைப்போடு வாங்கி பார்த்தான் இந்த முறை சரியாக இருந்தது. அவன் திட்டவில்லை.

ரெய்சல் தயங்கி தயங்கி நின்றாள்.

யாழி அதிகாரமாக ” என்ன வேணும் “

ரெய்சல் ” மேம் இன்னைக்கி எனக்கு half வேணும் “

யாழி ” எதுக்கு “

” மேம் அப்பாக்கு உடம்பு சரியில்ல ஹாஸ்பிடல் கூட்டிட்டுபோகனும் “

தயா ” ஏய் என்ன அப்படியே இருவத்திநாலுமணி நேரம் வேலைசெய்து கிழிச்சிட்டியா வேலசெய்றதே எட்டுமணி நேரம் இதுல half வேற அதெல்லாம் தரமுடியாது போ” என்று கத்திவிட்டான்.

ரெய்சல் சோர்ந்த முகத்தோடு சென்றுவிட்டாள்.

வசி ” ஏன்டா எல்லார்டயும் எரிஞ்சி விழற பாவம் அப்பாக்கு உடம்பு முடியலைனா என்ன பண்ணுவா “

யாழி ” நீ மூடு அவங்களுக்குலாம் ஒன்னும் வக்காலத்து வாங்காத “

அஜ்ஜூ ” ஆமா உனக்கென்ன இவங்ககிட்ட கரிசனம் பேசாம இரு இவங்களையெல்லாம் நமக்குகீழதான் வெக்கனும் “

இதுங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியாது என அவன் அமைதியாகிவிட்டான்.

இவர்களின் தலைகணத்தை அடக்கவருவாள் நம் நாயகி தயாளினி.

அன்பையும் தைரியத்தையும் ஒன்றாய் குத்தகைக்கு எடுத்த ஐந்தரையடி சிற்பம். கண்ணகியின் கருவண்ணத்தோடு கலையரசியின் லட்சணத்தை கொண்ட மங்கையவள்.

தன்கார்குழல் காற்றில் பறக்க பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டு தான் கொடுத்த வாக்கை காக்க வருகிறாள். தன் தோழி ரதி மற்றும் தீபனுடன்.

ரதி பெயருக்கேற்ற அழகுடையவள். தீபன்  தீபம் பிறருக்கு ஒளிகொடுத்து தன்னை வருத்திக் கொள்வதைபோல தனக்கு துன்பமென்றாலும் பிறருக்கு உதவுபவன். மூவரும் ஒரே ஊர் திருச்சியை சேர்ந்தவர்கள். ஒன்றாய் bsc mlt (medical lab technician) படித்தார்கள்.

ஆறுமாதத்திற்கு முன் சென்னைக்கு ஒரு தோழி ஒருத்தியின் திருமணத்திற்காக  வந்திருந்தனர் மூவரும். அங்கே ஒரு தாத்தாவை சந்தித்தனர். அவர் ஒரு லேபை நடத்திவருபவர். தங்கள் துறையை சேர்ந்தவர் என்பதால் அவரிடம் பேச்சு கொடுத்தனர். மூவரும் கொஞ்ச நேரத்திலேயே அவரிடம் நெருக்கமாக பழகிவிட்டனர்.

அவரும் தன் முடியாத நிலைமை அவர்களிடம் சொன்னார்.

தயா ” தாத்தா இப்ப நீ ஏன் இவ்ளோ சோகமா இருக்க “

தாத்தா ” வேற என்னமா பண்றது தனியாளா  என்னால இந்த லேப் அ நடத்த முடியல ஆசையாசையா ஆரமிச்ச லேப் ஐ மூடத்தான் வேணும் தமிழ்நாட்டுலயே சிறந்த லேப் ஆ மாத்தனும்னு நினைச்ச ஆனா சென்னைலயே நல்ல லேப்ன்ற பேரகூட வாங்க முடியலை என் போறாத காலம்”

ரதி ” ஏன் தாத்தா இப்படி விரக்தியா பேசுறீங்க யாரைனா வேலைக்கு கூப்பிடுங்க “

தாத்தா ” இல்லைடா குட்டிமா என்னால இப்ப யாருக்கும் சம்பளம்னு ஒன்னு குடுக்க முடியாது ஏன்னா சாம்பில்ஸ்லாம் ரொம்ப கம்மியாத்தான் வருது என்கிட்ட இருக்க உபகரணம்லாம் ரொம்ப பழசு அதை எடைக்கிபோட்டாகூட எவனும் வாங்கமாட்டான் இந்த நிலையில நான் என்ன பண்ணுவன் எனக்கு யாரு உதவுவா “

தயா ” தாத்தா ஒரு ஆறேமாசம் பொறுத்துக்கோங்க படிச்சி முடிச்சி டிகிவாங்கிட்டு ஓடிவந்துடுறோம். உங்க கனவை நினைவாங்க தமிழ்நாட்டுலயே மிகப்பெரிய லேப் ஆ நம்ம லேப் ஐ மாத்திடுறோம் ” என்று தன் நண்பர்களை பார்க்க இருவரும் அவளோடு கைகோர்த்தனர்.

மூவரும் படித்து முடித்து பட்டம் வாங்கிய மறுநாளே கிளம்பிவிட்டனர் சென்னைக்கு.

சென்னை உங்களை அன்போடு வரவேற்கிறது என்ற பலகையை அவர்களை ஏகபட்ட பிரச்சனைகளோடு வரவேற்றது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்