Loading

பகுதி – 7

தன் இமையில் முத்தம் வைத்து உறங்கும் அவனை கண்டவளுக்கு அவன் மனதில் என்னதான் நினைக்கிறான் என்றுதான் தெரியவில்லை.

அவளை அவன் எந்த அளவிற்கு வெறுத்தான் என்பதை கண்கூடாக பார்த்தவள். அவன் ஒவ்வொரு செயலிலும் உணர்ந்தவள் ஆனால் இன்றோ மாங்கல்யம் சூட்டி மணவாளினியாக்கி உரிமையோடு இதழ் ஒற்றிவிட்டு படுத்திருக்கிறான் என்னவென புரிந்துகொள்வது இவனை என்று அவள் வாழ்க்கையின் போக்கை சிந்தித்தவள் அவள் கடந்துவந்திட்ட பாதையை நினைவுக்கு கொண்டுவந்தாள்.

இரண்டு  மாதங்களுக்கு முன்…….

அந்த மருத்துவமனையில் அமரந்திருந்தனர் தாத்தா மூர்த்தியும் தயாளினியும்.

தன் திட்டங்களை அவள் கூறிட அந்த மருத்துவரும் யோசித்து அவர்களுக்கு பச்சை கொடியை காட்டினார்.

மகிழ்ச்சியில் இருவரும் இன்னும் நான்கைந்து மருத்துவமனைகளுக்கு சென்றுவர இரண்டுபேர் ஒத்து கொண்டிட மூவர் யோசித்து சொல்கிறோம் என்று கூறி அனுப்பினர்.

தீபனும் ரதியும் சென்ற இரண்டு இடத்திலும் அவர்களுக்கு வெற்றிகிட்டவில்லை. சோர்வோடு இருவரும் வீடுவந்து சேர்ந்தனர்.

தாத்தா ” என்டா பேரா மூன்ஜி ஏன் இப்படி வெச்சிட்டுவர “

தீபன் ” அடபோங்க தாத்தா மூன்ஞில அடிஞ்சமாறி முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டாங்க ஒரே ஷேமா போச்சு எங்களுக்கு “

ரதி ” நீங்க போன இடத்தில என்ன ஆச்சி”

தயா ” தயாபோனா சக்ஸஸ் ஆகாம இருக்குமா எல்லாம் சுபமேஏஏஏஏஏஏ”

தீபம் ” ரதி ஏய் நிஜமாவா……? “

தீபன் ” எல்லாம் சக்ஸஸா எத்தனை ஹாஸ்பிடல்ல ஒத்துகிட்டாங்க? “

தாத்தா ” இப்போதைக்கு மூனு ஹாஸ்பிடல்ல ஓகே சொல்லிருக்காங்க”

ரதி ” சூப்பர் தாத்தா இப்ப நாம ஏதாச்சும் பேத்தாலஜிஸ்ட்ட பிடிக்கனும் அவங்க மட்டும் கிடைச்சிட்டாபோதும் நாம லேப்ஐ ஆரமிச்சிடலாம்.”

தீபன் ” தாத்தா நான் படிச்சப்போ என்னோட பிரண்டு ஒருத்தன் டாக்டர் படிச்சிட்டு இருந்தான் நான் அவனுக்கு யாராவது பெத்தாலஜிஸ்ட் சென்னைல தெரியுமான்னு கேட்டுபாக்குறன் “

தயா ” சீக்கிரம் இப்பவே கால்பண்ணி கேட்டுபாரு டா “

தீபனும் அவன் நண்பனுக்கு அழைத்திட அவன் ஒருவன் பெயரை சொல்லி நம்பர் தர அவனுக்கு அழைத்து பேசிட அவன் ஒருவன் நம்பர்தர என்று வலை பெரிதாகிக்கொண்டே சென்றது. இறுதியாய்  வசுந்தரா என்ற பெத்தாலஜிஸ்ட் கிடைத்தார். இப்போதுதான் கல்லூரி முடித்து சிறியதாய் ஒரு கிளினிக் நடத்திவரும் இளம் மருத்துவர். சென்னையிலேயே வசிப்பவர்.

இவர்கள் அவளிடம் பேசிட அவளும் ஒத்துக்கொண்டாள். காலையில் வந்து உறுப்புக்களை அறுத்து துண்டுகளாக்கி தந்துவிட்டு அவள் சென்றுவிடுவாள் என்றும் மாலையில் அவள் நடத்தும் கிளினிக்கிற்கே வந்து ஸ்லைடை கொடுத்து அவர்களே வாங்கிக்கொண்டு போக வேண்டும் என அவள்  சொல்லிட அவர்களுக்கும் வசதியாய்போனது  சரி என்றனர்.

தயா ” நாம வேலைய ஆரமிக்கலாம் மிஷின்லாம் வாங்கி ரியேஜென்ட்லா தயார்பண்ணலாம் போகபோக பிக் அப் ஆகிடும். “

அதன்பின் வேலைகள் துரிதமாய் நடந்திட தாத்தாவின் பழைய இடத்தை சீரமைக்கும் பொறுப்பை அவர் ஏற்றிட மிஷின் வாங்குவது மற்றும் ஆய்வகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கும் பொறுப்பை இளையவர்கள் மூவரும் ஏற்றனர்.

ஒன்றிரண்டு வாரங்கள் கடந்திட திட்டமிட்டபடி அனைத்தையும் தயார் செய்தனர் நால்வரும்.

அவர்கள் பேசி வைத்த மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது அறுவை சிகிச்சை செய்தாகிவிட்டது வந்து சேம்பிள்ஸ் ஐ பெற்றுக்கொள்ளும் படி.

தீபனும் தயாவும் சென்று வாங்கிவந்தனர்.

முதல் நாளில் வெறும் நான்கு சாம்பிள் மட்டுமே வந்திருந்தது அவர்களுக்கு.

வசுந்தராவிற்கு அழைத்தாள் தயா….

” ஹலோ வசு….மேடம்”

” ஹாய் தயா சொல்லுங்க “

” வசு நாலு சாம்பிள் வந்திருக்கு நீங்க வரீங்களா கிராஸிங் பண்ண”

” வரேன் தயா எல்லாம் ரெடி பண்ணி வைங்க அறைமணி நேரத்துல வந்திடுவ”

தயா எல்லாம் தயார் படுத்தி வைத்திட்டாள்.

வசு வந்து மடமடவென வேலைகளை செய்த்தாள். நாலு சேம்பிள் மட்டுமே என்பதால் கால்மணி நேரத்திலே வசுவிற்கான வேலை முடிந்திட அவள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அங்கிருந்து சென்றாள்.

தயாவும் தாத்தாவும் உறுப்புகளை பிராஸஸிங் செய்தனர். Tissue possessing செய்வதற்கு அவர்கள் மிஷன் வாங்கவில்லை அதற்கான ரியேஜன்ட் மட்டுமே வாங்கியிருக்க ஒவ்வொரு ரியேஜென்ட்டையும் சில்வர் குடுவையில் ஊற்றி இவர்களே கையால் மாற்றினர்.

அதற்கே  அன்றைய நாள் ஓடிவிட்டது.
மறுநாள் புதியதாய் இரண்டு சாம்பிஸ் வந்தன. அதனை ரதி பிராஸஸ் செய்ய
ஏற்கனவே பிராஸஸ் செய்த திசுவை எடுத்து மெழுகால் கட்டம் கட்டி மெல்லிழையாக வெட்டி ஸ்லைடில் எடுத்தான் தீபன்.

தாத்தா ஸ்லைடை ரசாயனக்கலவைகளில் போட்டு எடுக்க
தயா வசுந்தராவோடு உறுப்புகளை அறுக்கும் இடத்தில் நின்று அவள் சொல்லும் குறிப்புகளை எழுதிக்கொண்டாள்.

அன்று மாலை தயார் செய்த ஸ்லைடுகளை வசுந்தாரா பார்வையிட்டு ஆய்வறிக்கை வழங்கிட அதனை அன்றே மருத்துவமனைக்கு மின்னஞ்சல் செய்துவிட்டாள் தயா.

இரண்டே நாளில் ஆய்வறிக்கை வந்திட சேம்பில் கொடுத்த மருத்துவர்களுக்கு மகிழ்ச்சியே. விரைவாகவே நோயாளிக்கான நோயை அறிந்து மருந்துகள் வழங்கிட ஆரமித்தனர்.

இப்படியே இரண்டு மாதங்கள் கழிந்திட இவர்களுக்கு வரும் சேம்பில்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒருநாளைக்கே ஐம்பது அறுபது சேம்பில்கள் வந்தன.

எந்நேரமும் வேலை இருந்தது. நல்ல வருமானமும் வந்தது அவர்களுக்கு.

தயாளனின்  ஆய்வகம்……

தயா கிராஸிங்கில் இருக்க ரெய்ச்சல் அவன் சொல்லும் குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தாள்.

தயா வேகவேகமாக சொல்லாட ரெய்ச்சலால் குறிப்புகளை சரிவர எழுதிடமுடியவில்லை. அவன் வேகத்திற்கு அவளால் ஈடு கொடுத்திட முடியவில்லை.

ரெய்ச்சல்  “ஸார் நீங்க இப்போ சொன்னதை மறுபடியும் சொல்லுங்களேன் நான் பாதிதான் எழுதின”

தயா ” பச்……இதைகூட ஒழுங்கா எழுத தெரியலை நீ எல்லாம் என்ன டெக்னீஷியனோ ச்சை ” என்று சளித்துக்கொண்டு மீண்டும் வேகமாய் கூறினான்.

அவள் தவறாக எழுதிட தயா கத்திவிட்டான்.

” ஏய் அறிவில்லை நான் என்ன சொல்றன் நீ என்ன எழுதுற”

” ஸார் நீங்க வேகமா சொல்றீங்க”  பம்மிக்கொண்டு சொன்னாள்.

” அதை கூட எழுத முடியலை என்னத்த படிச்சி கிழிச்சியோ”  திட்டிவிட்டு பொறுமையாய் கூறினான்.

அவன் கிராஸிங் முடித்துவர அஜ்ஜூ ஒரு பெண்ணோடு அமரந்திருந்தான்.

தயா ” யாரு டா இது?”

” டேய் அதான் சொன்னல என் தங்கச்சி டா இங்க வேலைக்கு சேர்த்துக்க சொல்லி “

” ஓஓஓ அதுவா”  என்றவன் அவளது சர்ட்டிபிகேட்களை வாங்கி பார்த்தான்.

” என்ன டிப்ளமோதான் முடிச்சிருக்கா அதுவும் ரொம்ப கம்மியாதான் மார்க் எடுத்திருக்கா எக்ஸ்பீரியான்சும் இல்ல எப்படிடா வேலைக்கு சேர்த்துக்க “

அந்த பெண்ணோ விதியே என்று அமர்ந்திருந்தாள் கடுப்பில்.

அஜ்ஜூ ” என்ன சுஜா இவ்ளோ லோ மார்க்ஸ் வாங்கியிருக்க இப்படியிருந்தா எப்படி வேலைக்கு எடுத்துப்பாங்க”

……

” எது கேட்டாலும் இப்படியே வாயை மூடிக்க என்று கடுகடுத்துவிட்டு தயாவிடம் திரும்பி ஒரு ஒன்யியர் வேலை பாக்கட்டும்டா அப்போதான அவளும் கத்துப்பா “

தயா ” சரிபோ சேர்ந்து வேலை பாக்கட்டும் எதனா தப்பா ஆச்சி அவ்வளோதான் அப்போவே வேலையவிட்டு தூக்கிடுவன் ” என்று சொல்லி சுஜாவை வேலைக்கு எடுத்துக்கொண்டான்.

நாட்கள் இப்படியே நகர்ந்திட பிரச்சனைக்கான நாளும் வந்தது.

தயாளன் ஆய்வகம்……..

தயாவிற்கு சாம்பிள் அனுப்பும் ஒரு மருத்துவர் அழைத்தார்.

” ஹலோ தயா”

” ஹான் சொல்லுங்க “

” தயா நான் **** ஹாஸ்பிடல்லருந்து பேசுறன் உங்க லேப்க்கு சேம்பிள் அனுப்பி அஞ்சி நாள் ஆச்சி இன்னும் ரிப்போர்ட்ஸ் வரலை என்னதான் வேலை பாக்குறீங்க”  என்று கோபமாகவே பேசனார்.

தயாவோ பொறுமையாக ஒரு நிமிஷம் நான் என்னனு பாக்குறன் என்றவன் வசீ யாழியை அழைத்து கேட்க அதிக சேம்பிள் வந்திருப்பதால் எல்லாவற்றையும் குறுகிய நேரத்தில் பார்த்திட  முடியவில்லை என்றனர். கிட்டதட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட ஸ்லைடுகள் இருக்கின்றன என்றனர்

தயா அந்த மருத்துவருக்கு அழைத்தான்.

” ஹலோ”

” ஹான் சொல்லுங்க தயா “

” இங்க நிறைய சாம்பிள்ஸ் இருக்கு சோ ரிப்போர்ட் கிடைக்க கொஞ்சம் லேட் ஆகும் நீங்க வெயிட் பண்ணி வாங்கிக்கோங்க “

” என்ன  இப்படி பொறுப்பில்லாம பதில் சொல்றீங்க இதுக்குதான் உங்களுக்கு நாங்க சேம்பிள் கொடுக்கிறோமா உங்களால கரெக்ட்டான நேரத்துக்கு ரிப்போர்ட் தரமுடியலைனா ஏன் வந்து சேம்பிள் குடுங்கன்னு கேக்குறீங்க இழுத்து மூடிட்டுபோக வேண்டியதான ” என்று கடுகடுப்பாய் பேசினார்.

அந்த வார்த்தையில் தயாவிற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது கடுகடுப்பாய் கூறினான். ” வேற என்ன ஸார் பண்றது சேம்பிள் நிறையா இருந்தா கொஞ்சம் பொறுமையாதான் ரிப்போர்ட கொடுக்க முடியும் உங்களுங்கு அவ்ளோ அவசரம்னா வேற எங்கையாவது கொடுத்து வாங்கிக்கோங்க உங்க அவசரத்துக்கு எங்களால ஆட முடியாது “

” தயா கொஞ்சம் பார்த்து பேசுங்க என்னால மட்டும் உங்களுக்கு வாரத்துக்கு ஐம்பது  சேம்பிள்ஸ் வருது எங்களை நம்பிதான் நீங்க பொழைக்கிறீங்க”  அவனது அலட்சிய பதிலில் அவரும் கோபம்கொண்டவர் அவனது தன்மானத்தை சீண்டி  பேசினார்.

” ஹலோ மிஸ்டர்……
பூனை கண்ண மூடுனா உலகமே இருண்டுடும்னு நினைக்காதீங்க உங்களால மட்டும் இந்த லேப் நடக்கலை அதுமில்லாம என்ன ஸார் சும்மாவா கொடுக்குறீங்க சொலையா நோட்டு நோட்டா காசுவாங்குறீங்கல்ல “

” காசு கொடுக்குறீங்கன்றதுக்காக இப்படிதான் லேட்டா ரிப்போர்ட் கொடுப்பீங்களா ரிபாபோர்ட் வந்தாதான டிரீட்மெண்ட் ஸ்ட்டார்ட் பண்ண முடியும். இது தெரியாம நீ என்ன லேப் நடத்துற “

அவன் ஒருமையில் பேசிவிடவும் தயாக்கும் கோபம் வந்தது அவனும் மரியாதையில்லாமல் பேசினான்.

“டேய் …..உனக்கு அவ்ளோ அவசரம்னா வேற இடம் பார்த்துக்கோ”

” ஏய் என்ன  மரியாதையில்லாம பேசுற “

” அப்படிதான் டா பேசுவன் வை டா ஃபோனை ” என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டான்.

அவரோ கடும்கோவத்தில் இருந்தார்.

“உன்னை என்ன பண்ற பாருடா”  என்றவர் கோபத்தில் பற்களை நரநரவென்று கடித்து போனை வைத்தார்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்