Loading

பகுதி – 4

தயா ரதி தீபன் மூவரும் மூர்த்தியின் வீட்டிலேயே வசித்தனர். மூர்த்திக்கு மாலா என்ற மனைவியும் சுபத்ரா மிதிலா என இரு மகள்களும் இருந்தனர். இருவருக்கும் திருமணமாகி அவரவர் கணவன் வீட்டில் இருக்கின்றனர்.

அனைவரும் சாப்பிட அமர தீபனும் தயாவும் ரதியை முறைத்தனர்.

ரதி ” ஏன் என்ன இப்படி பாசமா பாக்குறீங்க”  கொஞ்சலாக கேட்டாள்.

தயா ” உனக்கு அறிவிருக்கா ரதி அவன்கிட்ட ஏன் தேவையில்லாம பேசுற இதுல அவனோட கார்லபோலாம்னு வேற சொல்ற”

தீபன் ” இவளுக்கு அறிவு மங்கிபோய்டுச்சி அதான் யாரு என்னனு தெரியாதவனோடலாம் போலாம்னு சொல்றா “

தாத்தா ” விடுடா பேரா வெயில்ல நிக்கிறதுக்கு வீட்டுக்காச்சும்போலான்னு நினைச்சிருப்பா “

ரதி “ஆமா ஆமா தாத்தா சொல்றதுதான் சரி “

தீபன் முறைக்க அவளோ கேவலமாய் இளித்து ” பையன் கொஞ்சம் அழகா இருந்தான் தீபா அதான் ஜஸ்டு சைட்டுதான் ” என்று ஸரன்டர் ஆகிவிட்டாள்.

தயா ” அடங்காத டி நீ ஊர்விட்டு ஊர்வந்து இந்தமாறிலாம் வேலைபண்ண நினைக்காத  இதெல்லாம் தப்பு “

ரதி ” சரி டி சரி டி இனி என்ன நாம அவனை பாக்கபோறோமா என்ன இவ்ளோ பெரிய சென்னைல அவங்க ஒரு மூளைல இருக்கபோறாங்க நாம ஒரு மூளைல இருக்கபோறோம் விடு பேபி கார்ன் ” என கன்னம் பிடித்து கொஞ்சிட அவள் சமாதானமாகிவிட்டாள்.

தீபன் முறைத்துக்கொண்டிருந்தான்.

” டேய் அதான் சொல்லிடன்ல இன்னும் ஏன் மூன்ஜிய இப்படி வெச்சிருக்க இனிமே நான் அவன் நேர்ல  வந்தாலும் பேசமாட்டன். “

அப்போதும் அப்படியே இருந்தான்.

” உனக்கு முறுகல் தோசை சுட்டுதரன்டா “

அதனை கேட்டதும் கண்கள் மின்ன  “சரி சரி நான் இந்த தடவை உன்னை மன்னிச்சிட்டன் அடுத்த தடவை இப்படி பண்ணகூடாது ” என்றான் பெருந்தன்மையாய்.

பின் மூவரும் உண்டுவிட்டு உறங்கினர்.

மூர்த்தி நடத்தும் லேப்பிற்கு சேம்பில்ஸ் அவ்வளவாக வருவதில்லை. இதனால் அவருக்கு பெரிதாய் வருமானம் என்ற ஒன்று கிடைக்கவில்லை. அதனால் அவர்மனம் சோர்த்து போனார். லேப் நடத்தவே வேண்டம் என்றுதான் முடிவு செய்தார் ஆனால் தயாதான்  அவருக்கு ஆறுதலாய்  பேசி அவர் மனதை மாற்றினாள். லோன் எடுத்து லேப்ஐ புதுப்பிக்கலாம் என்ற யோசனை வழங்கியிருந்தாள். அதன்படியே அவர்கள் செய்திட அவளுக்கு புதிதாய் ஒரு எண்ணம் தோன்றியது.

தயா ” தாத்தா எனக்கு ஒரு யோசனை தோனுது “

தாத்தா ” என்னமா “

தயா ” நாம ஏன் எல்லாரும் நடத்துற லேப் மாறி நடத்தனும் நாம ஹிஸ்டோபேத் லேப் நடத்தலாமே “

தீபன் ” மற கீது கழன்டுடுச்சா தயா உனக்கு அதுக்கெல்லாம் எவ்வளோ செலவாகும் தெரியுமா இன்ஸ்ட்ரூமென்ட்ஸே கொள்ளவிலை டி “

ரதி ” ஆமா தயா நம்மகிட்ட இப்ப இருக்க காசு வெச்சி அவ்ளோ இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் வாங்க முடியாது.”

தயா ” என்ன கொஞ்சம் பேச விடுறீங்களா “

தாத்தா ” சொல்லுமா “

தயா ” தாத்தா இப்போ நம்மகிட்ட இருக்க காசு வெச்சி நம்மளால அவ்ளோ பெரிய இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்லாம் வாங்க முடியாது ஆனா  செமிஆட்டோமேட்டிக் வாங்கலாம்ல “
(semi automatic – பாதி மனித செயல்பாடும் பாதி இயந்திரத்தின் செயல்பாடும் கொண்டது)

ரதி ” தயா என்ன டி உலருற டிஸ்சு  பிராஸஸிங் (tissue prossesing)மிஷனினெல்லாம் செமி ஆட்டோமேட்டிக் வாங்கி நைட்டு பூராம் உக்காந்து நீ பிராஸஸ் பண்ணபோறியா “

தயா “ஏன் முடியாதா என்ன கொஞ்சநாள் கஷ்டமாதான் இருக்கும் நாம பொறுமையா இருந்தா நமக்கு நல்ல வருமானம் கிடைக்கும் அப்றமா நாம ஆட்டோமேட்டிக் மிஷின் வாங்கிகலாம் அத்தோட நாம ஏன் ராத்திரி பிராஸஸ் பண்ணனும் முடிஞ்சளவுக்கு பகல்லயே பண்ணிடலாம் “

தீபன் ” சரி மா டிஸ்சூ பிராஸஸிங் அப்படி பண்ணலாம் மைக்ரோடோம் அது என்ன பண்ணுவ அதை கண்டிப்பா வாங்கிதான ஆகனும் அப்றம் ஹாட் பிளேட் வேணும் ஸ்டெயினிங் பண்ண ரியேஜென்ட்ஸ் வாங்கனும் பிளாக் ரெடி பண்ண ரிங்கு மோல்டு வாக்ஸ் அதெல்லாம் வாங்கனும் இதெல்லாம் ரொம்ப விலை அதிகம் “

தயா ” நம்மகிட்ட இருக்க காசு வெச்சி நம்மளால மைக்ரோடோமும் ஹாட்பிளேட்டும் வாங்க முடியும் ரியேஜென்ட்ஸ் தயார்நிலைல இருக்கிறதை வாங்குனா காசு அதிகம் அதுவே பவுடராவாங்கி நாமளே தயார் பண்ணிகிட்டா ரொம்ப கம்மியாதான் காசாகும் பிளாக் ரெடி பண்ண நாம வுட்டன் சக் (சதுர வடிவிலான மரக்கட்டை)யூஸ் பண்ணலாம் பழைய டெக்னிக் கொஞ்சம் டெவலப் ஆனதும் காசு வந்ததும் பிளாஸ்டிக் மோல்டு பயன்படுத்தலாம்”

ரதி ” சரி டி எல்லாம் ஓகே ஆனா  நாம பண்ண ஸ்லைடை பார்க்க பெத்தாலஜிஸ்ட் வேணும்ல “

தயா ” ஏன் டி இந்த சென்னைல டாக்டருக்காடி பஞ்சம் யாராச்சும் இருப்பாங்கல்ல நாம ஏதாச்சும் ஒரு பெத்தாலஜிஸ்ட் டாக்டர்கிட்ட கேப்போம் அவருக்கு கமிஷனா இவ்ளோ பணம் தரோம்னு  சொல்லுவோம் “

தாத்தா ” பசங்களா நீங்க ரொம்ப அட்வான்ஸ் ஆ யோசிக்கிறீங்க அடிப்படையவே மறந்துட்டீங்க “

தயா “என்ன தாத்தா “

தாத்தா ” முதல்ல இந்தமாறி சின்ன லேப்ல எப்படி பயாப்ஸி சேம்பிள் தருவாங்க பெரிய ஹாஸ்பிடல் வெச்சிருக்கவங்க அங்கயே அறுவை சிகிச்சை பண்ணிடுவாங்க அவங்களே  லேப்பும் வெச்சிருப்பாங்க வெளிய எப்படி சாம்பிள் குடுப்பாங்க “

தயா ” இவ்ளோ யோசிச்ச நான் அதை யோசிச்சிருக்க மாட்டனா தாத்தா அதுக்கும் ஐடியா வெச்சிருக்கன் “

ரதி ” என்ன ஐடியா “

தயா ” நாமா பெரிய பெரிய ஹாஸ்பிடல்ஸ் ஆ குறிவெக்கபோறதில்லை சின்ன சின்ன ஹாஸ்பிடல்ஸ் அதான் குறிவெக்கபோறோம்.”

ரதி ” தெளிவா சொல்லு டி “

தயா ” இப்போ சின்ன ஹாஸ்பிடல் வெச்சிருக்கவங்க அறுவை சிகிச்சை பண்ணமாட்டாங்க ஏன்னா போதிய வசதி அவங்ககிட்ட இருக்காது அப்படியே அறுவை சிகிச்சை பண்ணாலும் சாம்பிள் அனுப்புறது கொஞ்சம் கஷ்டமான விஷியம்னு அவங்க அதை  பண்ணாம இருப்பாங்க இப்போ நம்ம என்ன பண்றோம்னா ஓர் அளவுக்கு மீடியமா இருக்க ஹாஸ்பிடல் டாக்டர்ஸ்கிட்ட பேசுறோம் இந்தமாறி நீங்க ஆப்ரேஷன் தியேட்டர் மட்டும் உங்க ஹாஸ்பிடல்ல ரெடி பண்ணிகோங்க சர்ஜெரி பண்ணும்போது சொல்லுங்க நாங்களேவந்து சேம்பில வாங்கிட்டுபோறோம் இதுல உங்களுக்கும் லாபம்தான் எங்களுக்கும் லாபம்தானு சொல்லுவோம்.  “

தீபன் ” நீ சொல்றது கேக்க நல்லாதான் இருக்கு தயா ஆனா பிராக்டிகலா வர்க் ஆகுமா நாம சொல்றதை கேட்டு யாராச்சும் ஆப்ரேஷன் தியேட்டர் கட்டுவாங்களா “

தயா ” டேய் நாம சொல்ற விஷியம் அவங்களுக்கும் லாபம் தரகூடியதுடா கண்டிப்பா வர்க் ஆகும் அப்றம் ஒரு விஷியம் இது சரியா வருமா வருமான்னு யோசிக்கிறதைவிட சரியா வருதான்னு இறங்கி செஞ்சி பாத்திடனும். “

ரதி ” ஆமா டா எனக்குகூட இது சரியா வருமோன்னுதான் தோனுது “

தாத்தா யோசித்தார். தயா அவரிடம் “என்ன தாத்தா யோசிக்கிறீங்க உங்களுக்கு இதுல விருப்பமில்லையா.”

” இல்லடாமா விருப்பமில்லனு இல்ல ஆனா சரியா வருமான்னுதான் யோசிக்கிறன்.”

தீபன் ” தாத்தா நாம வேணும்னா இப்படி பண்ணலாம் முதல்ல சில டாக்டர்ஸ்கிட்ட பேசலாம் அவங்க இதுக்கு சம்மதிக்கிறாங்களான்னு பாக்கலாம் அவங்க சரின்னு சொன்னா நாம ஒரு பெத்தாலஜிஸ்ட்கிட்ட பேசிபாக்கலாம் ரெண்டும் ஒத்துவந்துச்சினா நாம மிஷின்ஸ் வாங்கலாம் இல்லனா நார்மல் லேப்யே நடத்தலாம்  கொஞ்ச கொஞ்சமா நம்ம பேஷன்டுகளை பிடிச்சி கஸ்டமராக்கிடலாம் “

தயா ” அடேய் என்னடா கஸ்டமராக்கிடலாம்னு சொல்ற “

தீபன் ” பின்ன என்னடி வீட்டுக்கொரு டயபெடிக் பேஷன்ட் ஒரு பிபி பேஷன்ட் ஒரு தைராய்டு பேஷன்ட்னு இருக்காங்களே அப்றம் என்ன கவலை அதுமில்லாம திருட்டு நடந்தாதான் போலீஸ்க்கு வேலை நோய்வந்தாதான் நமக்கு வேலை “

ரதி ” அப்போ பணம்தான் அதுக்காகத்தான் நீ படிச்ச மக்களுக்கு சேவை செய்ய இல்லை உன்கிட்டவரவன் நோய் தீர்ந்து போககூடாது உன்கிட்ட கஸ்டமராகிடனும் அப்படிதான “

தீபன் ” ரதிமா எல்லாரும் பணத்துக்காதான் ஒரு தொழில் செய்றாங்க படிக்கிற எல்லாரும் வேலைக்குபோய் சம்பாதிக்கதான் படிக்கிறாங்க நானும் அப்படிதான் ஏன்னா எனக்கும் குடும்பம்லாம் இருக்கு என்னால அஞ்சாரூவா டாக்டர்மாறி ஐஞ்சுருவாக்கி லேப் நடத்த முடியாது எனக்கும் பணதேவை இருக்கு நான் மருத்துவம் சார்த்து படிச்சிருக்கனால என் வேலையோட சேர்த்து சேவையும் பண்ணனும்னு நினைக்கிறனே தவிற அது பணமே வாங்காம பண்ணபோறன்னு இல்ல “

தயா ” கரெக்டா சொன்ன டா நம்ம குறிக்கோள் பணம்தான் ஆனா சரியான முறையில சம்பாதிக்கனும் அநியாயமா காசு வாங்க கூடாது  நியாயமான முறையில சேவையோட சேர்த்து சம்பாதிக்கவும் செய்யனும் சரியா “

தீபன்  “ரொம்ப சரி “

தயா ஓகே என்று கையை நீட்டிட ஓகே என்று தீபனும் ரதியும் அவள் கைமேல் கைவைத்திட தாத்தாவை பார்த்தனர் மூவரும். அவரும் சிரித்து ஓகே என்று கைவைத்தார்.

தாத்தா ” சரி தயாமா நீ சொல்றமாறி செய்து பார்ப்போம் ஒத்து வரலனா தீபன் சொன்னமாறி சாதாரண லேப்யே நடத்தலாம் இப்போதைக்கு எனக்கு தெரிஞ்ச ஒருசில டாக்டர்ஸ் இருக்காங்க அவங்ககிட்ட நாம இதைபத்தி பேசலாம். “

நால்வரும் ஒருமனதாய் முடிவெடுத்து சென்னையிலுள்ள சிலபல மருத்துவமனைகளின் பெயரை பட்டியலிட்டு அங்கு சென்றனர்.

தயா ” தீபன் எல்லாரும் மொத்தமா போனா வேலைக்காகாது நானும் தாத்தாவும் சில இடத்துக்கு போறோம் நீயும் ரதியும் சில இடத்துக்குபோங்க “

தீபன் ” சரி ஓகே  ” என நால்வரும் சில மருத்துவ மனைகளுக்கு சென்றனர்.

தயாவும் தாத்தாவும் முதலில் அவர்களுக்கு நன்கு பழக்கப்பட ஒரு மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள மருத்துவரிடம் உரையாடினர்.

தத்தா ” குட்மார்னிங் டாக்டர் “

மருத்துவர் ” குட்மார்னிங் மூர்த்தி வாங்க என்ன இந்த பக்கம் நல்லா இருக்கீங்களா உங்க மனைவி பொண்ணுங்கலாம் நல்லாயிருக்காங்கலா”

தாத்தா ” நல்லா இருக்காங்க டாக்டர் “

” யாரு இந்த பொண்ணு “

” என் சொந்தகாரபொண்ணுதான் டாக்டர் லேப்குதான் படிச்சிருக்கா அதான் என்கூட வேலைபாக்காக இங்க வந்திருக்கா “

” ஓஓஓ அப்படியா நல்ல விஷியம் அப்றம் என்ன இந்த பக்கம் ஏதோ பிரச்சனை லேபயே மூடிபோறன்னு சொன்னீங்க இப்ப எல்லாம் சரியாகிட்டா “

” அதை சரி பண்ணலாம்னுதான் ஒரு முடிவெடுத்தோம் அதான் உங்ககிட்ட பேசலாம்னு வந்தோம் “

” சொல்லுங்க மூர்த்தி “

” டாக்டர் நாங்க ஒரு ஹிஸ்டோபேத் லேப் நடத்தலாம்னு முடிவு பண்ணிருக்கோம் அதான் நீங்க சேம்பிள் அனுப்புரீங்களான்னு கேக்கவந்தோம் “

” என்ன மூர்த்தி உங்களுக்கு தெரியாதா நாம இங்க சர்ஜெரிலாம் பண்றதில்லையே “

தயா ” டாக்டர் நாங்க அதைபத்திதான் பேசவந்தோம் “

” என்னமா பேச போற “

” டாக்டர் இந்த ஹாஸ்பிடல்ல ஆல்மோஸ்ட் எல்லா வசதியும் இருக்கு நீங்க ஏன் ஒரு அப்ரேஷன் தியேட்டர் மட்டும் ரெடி பண்ணிக்க கூடாது “

” அட என்னமா சின்னபிள்ளதனமா பேசுற அதுக்கெல்லாம் எவ்ளோ செலவாகும் தெரியுமா செலவைவிட எவ்ளோ புரோசிஜர்ஸ் இருக்குன்னு தெரியுமா “

தயா ” தெரியும் டாக்டர்  நீங்கதான் ஹாஸ்பிடல் நடத்துறதுக்குண்டான எல்லா வசதியும் சரியான முறையில வெச்சிருக்கீங்களே இதுக்கும் ஒரு அனுமதி வாங்கிட்டா நீங்க இங்கயே சர்ஜெனி பண்ணலாமே “

” சரிதான் மா பணம் வேணாமா “

” டாக்டர் நீங்க மனசு வெச்சா அந்த பணம்லாம் உங்களுக்கு ஒரு மேட்டரே இல்ல நீங்க நினைச்சா ஈசியா பண்ணலாம் அப்றம் நீங்களே நல்லா யோசிச்சு பாருங்க எப்படியும் ஒரு பேஷன்ட்வந்தா மொத்தமும் நீங்கதான் பாக்குறீங்க ஆனா சர்ஜரி பண்ணனும்ற நிலமைவரப்ப அவங்க அந்த ஃபெசிலிட்டீஸ் இருக்க ஹாஸ்பிடல்குதான் போவாங்க உங்ககிட்ட எல்லா வசதியும் இருந்தாலும் சர்ஜரிக்குன்னு பெரிய ஹாஸ்பிடல்கு அனுப்புறது உங்களுக்கு லாஸ்தான் கொஞ்சம் நீங்க முயற்சி பண்ணா நீங்களும் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் நாங்களும் சம்பாதிக்கலாம். நீங்க சர்ஜெரி பண்ணி நல்ல கைராசியான டாக்டர்னு பேர் வாங்கிட்டா உங்ககிட்ட ஏகபட்ட பேஷன்ட் வர ஆரமிச்சிடுவாங்க இதோட பெரிய ஹாஸ்பிடலாவே கட்டிடலாம் என்ன சொல்றீங்க “

அவர் சிந்தனையில் யோசனை முடிச்சுக்கள் விழுந்தன.

இங்க இவர் யோசிச்சி நாளைக்கு பதில் சொல்லட்டும் நாமபோய் அமிய வசீ பிக் அப் பண்ணிட்டானான்னு பாப்போம்.

வசி அமியின் கல்லூரி வாசலில் வந்து நின்றான்.

அமியோ அவனுக்காகவே காத்திருந்தாள். ஒருவாரமாக அவன் வீட்டுபக்கம்வரவில்லை. அவளை கல்லூரியிலிருந்து அழைத்துபோகவும் வரவில்லை. அவனை பார்த்தே ஆகவேண்டும் அவனுடன் பேசவேண்டும் என்று நினைத்தவள் சரியாய் தயாளனுக்கு வேலையிருக்கிறது என்று தெரிந்தே அவளது காரை வீட்டில்விட்டுவந்தாள். மாலை எப்படியும் அவனுக்கு வேலையிருப்பதால் வசீமைத்தான் அனுப்புவான் என அவளுக்கு தெரியும்.

கார் சீரான வேகத்தில் செல்ல வசீயோ மறந்தும் அமியின் புறம் திரும்பவில்லை.

காதல் பித்து தலைக்கேறியவள் அவன் உர்ரென்ற முகத்தையும்  ரசித்துக்கொண்டு வந்தான்.

அவனை பார்த்து பாடினாள்……

மன்மதனே நீ கலைஞன்தான்
மன்மதனே நீ கவிதான்
மன்மதனே நீ காதலன்தான்
மன்மதனே நீ காவலன்தான்
என்னை உனக்குள்ளே தெலைத்தேன் ஏனோ தெரியலை
உன்னை கண்டநொடி ஏனோ
இன்னும் நகரல 
உந்தன் ரசிகையே நானும்
உனக்கேன் புரியவில்லை
எத்தனை ஆண்களை கடந்துவந்தேன் எவனையும் பிடிக்கவிலை
இருபது வருடம் உனைபோல் எவனும் என்னை மயக்கவிலை

வசீ பட்டென திரும்பி அவளை பார்த்தான். இல்லை இல்லை முறைத்தான்.

அமியோ அவனை பார்த்து  மீண்டும் பாடினாள்……

பாக்காத பாக்காத ஐய்யையோ பாக்காத நீ பாத்தா பறக்குறன் பாதை மறக்குறன் பேச்ச குறைக்கிறன் சட்டுன்னுதான்

வசீம் ” இங்கபாரு நீ உன் லிமிட்ஸ்…..”  என ஆரமிக்க அமியோ  அவனை பார்த்து ஒற்றைகண் சிமிட்டினாள்.

அவன் வார்த்தை தடைபட்டது. அவள் கண்கள் அவனை தடுமாற செய்ய பட்டென முகத்தை திருப்பிக்கொண்டான்.

” உனக்கு இந்த பாட்டு பிடிக்கலையா பீம்பாய் நான் வேணா வேறபாட்டு பாடவா “

இப்படியே எங்கவேணா கூட்டிகிட்டுபோ உன் இடுப்புலதான் கீ செயினா மாட்டிகிட்டுபோ

என்று அவன் இடையில் குத்திட அவன் கூச்சப்பட்டு காரை நிறுத்தினான்.

” ஏய் இங்கபாரு அவ்ளோதான் சொல்லிட்டன் இப்படிலாம் பண்ண பிரண்டு தங்கச்சினு கூட பாக்கமாட்ட ஒரே அறை அறைஞ்சிடுவன் ” இப்படி கோவமாக சொல்லதான் நினைத்தான் ஏனோ மாடுலேஷன் மாறி திக்கி திணறி சொன்னாள் அவளது கூர்பார்வையில்.

அவளோ ” அடியேன் பீம்பாய் உனக்கில்லாத உரிமையா நீ இங்க  அடிச்சிக்கோ இங்க கடிச்சிக்கோ ” என இருபக்க கன்னத்தையும் காட்டி சிரித்தாள்.

வசீம் காரை ஓரமாக நிறுத்தி அதிலிருந்து இறங்கினான். அவளும் இறங்கிவந்தாள்.

வசீம் பேசினான் ” அமி உனக்கு எல்லாம் புரியுது நீ ரொம்ப தெளிவா யோசிக்கிற பொண்ணு உன்னோட ஒவ்வொரு நடவடிக்கைலயும் உன் மெட்சூரிட்டி லெவல்  தெரியுது ஆனா ஏன் இந்த விஷியத்துல  குழந்தமாதிரி நடந்துக்குற உனக்கு புரியலையா ஏன் என் நிலமைலருந்து யோசிக்க மாட்டிகிற நான் உன்ன லவ் பண்றது உங்க அண்ணனுக்கு செய்ற துரோகம் அவன் நம்பிக்கைய நான் உடைச்சிடுவன் நீயும் நானும் வேறவேற ஏன் புரிஞ்சிக்கமாட்டிகிற”

அமி அவனை ரசனையாய் பார்த்து “பீம்பாய் நீ வரவர ரொம்ப லெந்த்தியா டயலாக் பேசுறடா உன் வாய்ஸ் பேசுறப்பவே இவ்ளோ சுவீட்டா இருந்தா பாடுனா எவ்ளோ சூப்பரா இருக்கும் எனக்காக என்னை நினைச்சிட்டு ஒரு பாட்டுபாடேன் “

வசீம் கடுப்பாகிவிட்டான் ” ஏய் நான் என்ன சொல்றன் நீ என்ன பேசுற “

” பார்டா பீம்பாய்க்கு கோவம்லாம் ” வருதே என்றவள் பாடினாள்…..

மழையழகா வெயில் அழகா  கொஞ்சும்போது மழையழகு
கண்ணா நீ கோவபட்டாள்
வெயில் அழகு

என அவன் நாடிபிடித்து ஆட்டிட இந்த முறை அவனது கோபம் எல்லையை கடந்திட அவள் கையை பட்டென தட்டிவிட்டு அவளை தள்ளி நிறுத்ததான் நினைத்து அவளை தள்ளிவிட அவளோ பேலன்ஸ் இன்றி கால்தடுமாறி கீழேவிழேந்தாள் பொத்தென.

ஐய்யோ……..அம்மா……..என் இடுப்பு…….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்