
அத்தியாயம் 5
அவள் வந்து அமர்ந்ததிலிருந்து, தன் வகுப்பிருக்கும் 3rd ப்ளோரிலிருந்து இவளைத்தான் கவனித்திருந்தான் ப்ரகலத்தன். முகத்தில் ஆயிரம் வாட்ஸ் உடன் தான் எப்போதும் சுற்றி வருவாள். ஆனால் இப்பொழுது அவள் இப்படி இருப்பதற்கு காரணம் தான் தானோ எனத் தோன்ற இறங்கிவிட்டான் அவளை நோக்கி. அதற்குள் கண் சிவந்து மூஞ்சை வீங்க வைத்திருந்தாள். தன் முன் யாரோ வந்து நிற்கும் நிழல் தெரியவும் கண்ணை யூனிபார்ம் சாலெடுத்து துடைத்துக்கொண்டு நிமிர, ப்ரலத்தனை கண்டவுடன் மறுபடியும் கண்ணீர் வந்து விட. அதை கண்டதும் அவன் தலை கோதி சுற்றி ஒரு முறை பார்த்தான். லஞ்ச் பிரேக் என்பதால் எல்லோரும் கிரவுண்டில் தான் இருந்தனர். திரும்பி லட்சுவைப் பார்க்க, அவள் பேவென விழித்துக் கொண்டிருக்க, “அவள பீ.டி ரூம்க்கு கூட்டிட்டு வா” என்று சென்று விட்டான்.
ஆறெழிலிடம் திரும்பியவள், “உனக்கு இந்த அண்ணன் தான் பிரச்சனைனா தெளிவா பேசிட்டு வந்துரு. எனக்கு என்னவோ நீ பேசிட்டனா கிளியர் ஆகிடுவன்னு தோணுது” என எழுப்பிவிட்டாள்.
நேராக ரெஸ்ட் ரூம் சென்று தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வர, பீ.டி ரூம் நோக்கி இருவரும் சென்றனர். லட்சுவும் தனியே அனுப்ப மனமின்றி உடன் சென்றாள். அங்கு அவனோ சிதறிக்கிடந்த ஸ்போர்ட்ஸ் திங்க்ஸை அதனதன் பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
இவர்கள் நுழையவும் திரும்பி ஒரு முறை பார்த்துவிட்டு ரிங் பாலை எடுத்து அடுக்கி வைத்தவாறு, “என்ன பிரச்சன உனக்கு?” எனக் கேட்க.
அவள் அமைதியாக நிற்க, “சீக்கிரமா பேசி முடிச்சா நாம கிளாஸ் போக ஈஸியா இருக்கும், டைம் வேஸ்ட் பண்ணாம என்னன்னு சொல்லு” ௭ன்றான் அதட்டலாக.
அவனை முறைத்து பார்த்தாள். அவள் முறைப்பதைக் கண்டு அவனுக்கு சிரிப்பு வர, அதை அடக்கி “கமான்” என்றான்.
“எனக்கு பிரச்சனைன்னு நா எப்போ உங்கட்ட சொன்னேன்”.
“சோ பிரச்சன இல்ல, நீ ரிவிஷன் ௭க்ஸாம்ஸ்ல ஃபெயிலாகக் காரணம் நா இல்ல ரைட்” என்றான்.
“டிடைல்ஸ் கலெக்ட் பண்ணிருக்கீங்க. அப்ப நா ஃபெயில் ஆயிட்டேன்றதால தான் வந்து என்னன்னு கேக்கறீங்களா”.
“அப்கோர்ஸ், 6த் ரேங்க் எடுத்துட்டுருந்த பொண்ணு இந்த ரிவிஷன் டெஸ்ட்ல பெயிலாகிருக்கான்னா எவ்வளவு ஸ்ட்ரஸ்ல இருக்கணும். அதுக்கு நாம தான் காரணம்னா அத சரி பண்ணிடலாம்னு தோணுச்சு வந்தேன். ஸ்பீக் அவுட். நா ரீசன் இல்லன்னு சொல்லிடு, உன் பெர்சனல்ல தலையிட எனக்கு ரைட்ஸ் இல்ல, கிளம்பிடலாம்” என்க.
சற்று நேரம் அமைதியாக நின்றவள், பின் பொறுமையாக “நீங்க ரீசன் இல்ல. நாந்தா ரீசன், நானா உங்கள பாத்தேன், சைட் அடிச்சேன், டிஸ்டர்ப் ஆனேன், குழப்பிக்கிட்டேன், பெயிலானேன். இதுல நீங்க காரணம்னு நா எப்படி சொல்ல முடியும்” என்றாள்.
“வெரி குட். தப்பு என்னுதுன்னு ஒத்துகுற ஆட்டிடூயூட் ரியலி வெரிகுட். இவ்வளவு தெளிவா இருக்கன்னா ஏன் உன்ன சேன்ஞ் பண்ணிக்க ட்ரை பண்ணக்கூடாது”.
“சேன்ஞ் பண்ணிக்க புடிக்கல, இப்டி இருக்கத் தான் ரொம்ப புடிச்சிருக்கு. எனக்கு உங்கள பாக்க, பாத்துட்டே இருக்கப் பிடிக்குது. அது தப்புன்னு ஒதுக்கவும் முடியல, வெளிப்படையா சொல்லவும் முடியல”.
“இது ஏன் அட்டராக்ஷணா இருக்கக் கூடாது. இன்னும் 3 மந்த்ஸ், நா ஸ்கூல் முடிச்சு போயிட்டே இருப்பேன். அப்றம் நாம மீட் பண்ணுவமாங்குறதே டவுட் தான். இந்த வயசுல நமக்கு இப்டி தாட்ஸ் வர்றது யூஸூவல் தான். நாம தான் செல்ஃப் கண்ட்ரோலா இருக்கணும். எனக்குக் கூட இது மாதிரி ஒரு பொண்ணுட்ட தோணுச்சு, பட் நா, ‘நோ!, இட் மே பிரிங் யூ டு த ராங் வே’ன்னு சொல்லி சொல்லி, ஐ கண்ட்ரோல் மைசெல்ப். அத தான் உனக்கும் சொல்றேன். திஸ் இஸ் நாட் எ ஏஜ் டு டேக் டெசிஷன் அபௌட் லைஃப் அண்ட் லைஃப் பார்ட்னர். இன்னைக்கு உன் முன்னால இருக்கிறது போர்டு எக்ஸாம், தட்ஸ் ப்ரெசென்ட் அத மட்டும் கைல எடு. நாளைக்கு நா உன் ஞாபகத்துல இல்லாம கூட போகலாம். இன்னைக்கு, டே ப்ரெசென்ட் லைஃப்ல செய்ய வேண்டியத மிஸ் பண்ணுனா பண்ணுனது தான். திங்க் அபௌட் இட்”.
அவனைப் பார்த்தவாறே அவன் கண்ணசைவுகளை கண்டவாறே நின்றாள். அவள் இப்படி ரசிக்கும் போதெல்லாம் அவன் இதயம் தடம் புரளத் தான் செய்யும். அவனுக்குள் அவ்வளவு பரவசமாக இருக்கும். அவளை அப்படியே தூக்கி கொஞ்சத் தோன்றும். ஆனால் அடக்கிக் கொள்வான். தனக்கும் அவள்மீது இது ஒரு வகை அட்ரேக்ஷன் என நினைத்தான் தன்னால் ஸ்டெடியாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லாத காரணம். அதனால் இப்பொழுது எடுக்கும் முடிவு திடமானதாக இருக்காது என நம்பினான். இது வயதின் காரணமாய் ஹார்மோன்ஸ் சேன்ஜால் வரும் எண்ணங்கள் என்று நினைத்தான். அதையே அவளுக்கும் போதித்தான்.
“என்னாச்சு நா சொன்னது ஏதாவது உன் காதுல விழுந்ததா?” என்க.
“இது அட்ராக்ஷன் இல்லன்னு ப்ரூவ் பண்ணிட்டா?” ௭ன்றாள் அவன் அவ்வளவு நேரமும் சொன்னவற்றில் தனக்கு தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து.
“ஓ காட், இப்ப அப்டித்தான் தோணும். பியூச்சர்ல நினைச்சு பாத்தா உனக்கே எவ்வளவு சைல்ட்ஷா பிஹேவ் பண்ணிருக்கோம்னு ஷேமா இருக்கும்”.
“இல்ல நீங்க சொல்ற மாதிரி நா மறந்திடுவேன்னோ, மாறிடுவேன்னோ எனக்குத் தோணல, இனிமே உங்கள பாக்க முடியாம போனா கூட ஏதோ ஒரு வகையில நீங்க என் ஞாபக்கத்துல இருந்துட்டே இருப்பீங்க”.
“சரி ஓகே. ஸ்வீட் மெமரீஸா அது இருக்கணும்னா இப்ப இந்த இயர நீ ஒழுங்கா முடிக்கணும். இல்லன்னா இது பேட் மெமரீயாத் தான் சேவ்வாகும்”.
“நா குழப்பத்துல இருந்ததால தான் எக்ஸாம் ஒழுங்கா பண்ணல. இப்ப ரொம்ப தெளிவா இருக்கேன். எஸ், ஐ வாண்ட் யூ இன் மை ஹோல் லைஃப். விச் மீன்ஸ் லாங் டெர்ம் ரிலேஷன்ஷிப், அண்ட் டெஃபினிட்லி இட் மஸ்ட் பீ ஸ்வீட் மெமரி(நீங்க ௭ன்கூட, ௭ன் வாழ்க்கை மொத்தமும் வரணும்)” என்றாள்.
இப்போது அவனுக்கு சற்று கோபம் ௭ட்டிப்பார்க்க “நீ சொன்னா, நா கண்டிப்பா அக்செப்ட் பண்ணியே ஆகணும்ன்ற கட்டாயமில்லயே”.
“நிச்சயமா இல்ல உங்கள நா கட்டாயப் படுத்தவும் இல்ல. இது என்ன?, ஏன் நாம இப்படியிருக்கோம்குற குழப்பத்திலேயே இருந்தேன். நௌ ஐம் க்ளியர். ரொம்ப தெளிவா இருக்கேன். நீங்க குடுக்கலனா என்ன நா மட்டும் என் அன்பக் குடுத்துட்டுப் போறேன். இந்த மூணு வருஷமா எப்டி கண்டுக்காம போயிட்டுருந்தீங்கலோ அதுமாதிரி இனியும் இருந்துட்டு போங்க, எனக்கு அது பழக்கம் தானே. கஷ்டமா தெரியாது. ஏதோ ஒரு மூலையில உங்களுக்கு என்ன புடிச்சிருக்குன்னு என் மனசு சொல்லிட்டே இருக்கு. அதனாலதான் இவ (லட்சுமியை காட்டி) இத ஹராஸ்மெண்ட்ன்னு சொல்லியும் உங்க முன்னாடி நின்னு பேசிட்டுருக்கேன்” என்க.
மூச்சை இழுத்து பிடித்து “எனக்கும் உன்ன பிடிக்கும்மா, உன் ஆட்டிட்யூட், ஈஸி கோயிங் ரொம்பப் புடிக்கும். அந்த நேச்சர நீ ஒன் மந்த்தா தொலச்சுட்டு சுத்திவார. அதுதான் நா உனக்கு இப்போ பொறுமையா எக்ஸ்பிளைன் பண்ணிட்டுருக்கதுக்கான ரீசன். இத லவ்ன்னு நேம் பண்ணிக்க என்னால முடியல. எனக்கு என் மேல நம்பிக்க இல்லன்னு கூட வச்சுக்க. நீ நல்லா படி லைஃப்ல செட்டில் ஆகு, உன் அம்மா அப்பா அத தான் விரும்புவாங்க. நா ஜஸ்ட் வந்துட்டு போனவன், ௭ன்ன பாத்துட்டுருந்து உன் லைஃப்ப கெடுத்துக்காத. அல் த பெஸ்ட்” என சிரித்தவாறே கை நீட்டினான்.
“இவ்வளவு அக்கறைக்கு தேங்க்ஸ் ப்ரஸிடெண்ட், ஆல் தே பெஸ்ட் பார் யுவர் எக்ஸாம்ஸ் டூ” என பதிலுக்கு கைக் குலுக்கி விடை பெற்றாள்.
அவ்வளவு நேரமும் இருவரின் வாயையும் பார்த்தவாறே நின்ற லட்சு, இருவரும் பீ.டி ரூமை விட்டு வெளிவரவும், “ஏண்டி அந்த அண்ணன்ட்ட பேசி பிரச்சினைய முடிச்சு விடுன்னு சொன்னா, ப்ரொபோஸ் பண்ணிட்டு வந்துருக்குற, அறிவு இருக்கா. எதயும் யோசிச்சு பண்ண மாட்டியா?”
படபடவென லட்சு பொறிய. எக்கி லட்சுவை கட்டிக்கொண்டவள், “நா ரொம்ப ஹாப்பியா, நிம்மதியா இருக்கேன்டி. அவங்களுக்கு என்ன பிடிக்கப்போய் தான, நா ஒரு மாசமா என்னோட நேச்சர்ல இல்லன்னு தெரிஞ் வச்சுருக்காங்க. எனக்கு ரொம்ப ரிலீஃபாயிருக்கு. இனி எந்த குழப்பமும் இல்ல. அப்பா சொன்னாங்க முடிவெடுக்குற வரதான் குழப்பம். எடுத்துட்டா பீ ஸ்ட்ரோங் இன் இட்டுன்னு”.
“அப்ப முடிவே பண்ணிட்டியா?”. லட்சு அழத் தயாராக.
“எஸ் நா ப்ரெசிடெண்ட்ட லவ் பண்ணுறேன். லைப் லாங் பண்ணுவேன். அவங்க பண்ணாலும் பண்ணாட்டியும் நா லவ் பண்ணிட்டே இருப்பேன்” என்றாள் முகமெங்கும் பூரிப்பாய்.
வெளியே சென்று அழுவாளோ என ஜன்னல் வழிப் பார்க்க வந்த ப்ரகலத்தனும் அவள் கூறியதைக் கேட்டான், குனிந்து தலை கோதி சிரித்துக் கொண்டான். அவள் கான்ஃபிடன்ஸ் அவனை பயமுறுத்தினாலும் மனதிற்கு இதமாகவே இருந்தது.
லட்சு தான் “இது எங்க போய் முடியப் போகுதோ அட ஆண்டவா” என வானை நோக்கிக் கேட்க.
“என்னய பிரேயர் அட்டன்ட் பண்ண வச்சு, லவ் பண்ண வச்சுட்டு அவர்ட்ட கொஸ்டின் பண்ற”.
“அடியேய் இப்டி வெளியே சொல்லிட்டு திரியாதடி. எனக்கு அன்னைக்கு நேரம் சரியில்லன்னு நினைக்கேன். ஏதோ ப்லொவ்ல சொல்லிட்டேன், அத அப்டியே மறந்துருடி”.
“இனி எப்டி மறக்க முடியும். ஆறெழில்- ப்ரகலத்தன் வாழ்க்கை வரலாறுல முக்கிய பங்கே உனக்கு தானே லட்சு” என லட்சு தோளில் அணைத்து இழுத்துச் சென்றாள்.
அதன் பின் பழைய ஆறெழில் திரும்பி விட்டிருந்தாள். பிரயேரில் அவனை சைட் அடிப்பது. அதன் பின் படிப்பு மட்டுமே என மிக கவனமாய் படித்து பரிட்சைக்கு தயாரானாள். மனது ரிலாக்ஸாகவும் பழைய துறுதுறுப்பு வந்திருந்தது, சேட்டைக்கும் குறைவில்லை,. ௭ன்றும் ஸ்கூல் முடிந்து ஈவினிங் ஸ்டடி ஆரம்பிக்க 1/2 அன் ஹௌர் ரெஸ்ட் விடப்படும். அதில் வெளியே யாரும் செல்லக் கூடாது என்பது ரூல். இவளுக்கு தான் ரூல் என்ற ஒன்று கிடையாதே, அதனால் வெளியில் பக்கத்து தெருவில் இருக்கும் கடைக்கு லட்சுவையும் இழுத்துக்கொண்டு கேக் வாங்கி சாப்பிட சென்றுவிட, திரும்பி வருகையில் ப்ரின்ஸிஃபாலிடம் மாட்டிக் கொண்டாள். ஸ்டடி ஆரம்பித்து விட்டிருக்க , அட்டெண்டன்ஸில் இருவரையும் காணும் என்றதும் வாசலில் சென்று நின்றுகொண்டார் பிரின்சிஃபால்.
ஆடி அசைந்து வந்து மாட்டிக் கொண்டு “லட்சுமிக்கு லோ சுகர் வந்து மயங்கி விழுந்துட்டா சார், அதான் இனிப்பு வாங்கிக் கொடுக்கலாம்னு கூட்டிட்டுப் போனேன்” என்க.
“பொய் பொய் இந்த வயசுலயே எவ்வளவு பொய். அஞ்சு ரவுண்டு சுத்திட்டு வந்து ஸ்டடில உட்கார்ந்தா போதும். அவளுக்கு தான் லோ சுகராச்சே நீ மட்டும் சுத்திட்டு வா” என ஆறுவை மட்டும் ஓடவிட்டார்.
மொத்த 10, 12 வகுப்பு மாணவர்களும் அவளைக் கண்டு சிரிக்க. ப்ரகலத்தனும் “ஆறெழில் பேக் டு ஃபார்ம்” என நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டான். அவளோ அசராமல் சாப்பிட்டக் கேக் செறிக்க ஓடினாள்.
இருவரும் அந்த ஆண்டு போர்டு எக்ஸாமை சிறப்பாக முடித்தனர். ப்ரகலத்தன் பள்ளி படிப்பை முடித்து ஆறெழிலிடம் சொல்லாமலே விடை பெற்றுச் சென்றிருந்தான்.
