
“என்னோட அகில்..! என்கிட்ட திருப்பிக் கொடுத்திரு.?” எனக் கேட்ட தாரா தீரேந்திரனை முறைத்து பார்த்தாள்.
“தாரா, உன்னோட அகில் உயிரோட உனக்கு கிடைக்கிறதும், இல்லை பிணமாக வந்து சேர்றதும் உன் கையில தான் இருக்கு” என மர்மமாய்ச் சிரித்தான் தீரா.
“நீ என்ன டிமெண்ட் பண்ணுவன்னு எனக்குத் தெரியும் தீரேந்திரன், மலரை விட்டுடனும் அதானே? ஆமா இந்த மலர் எங்க கிட்ட இருக்கான்னு எப்படி மோப்பம் பிடிச்ச?
“ஹாஹா..! மலரை விடுறதுக்குத் தான் நான் இவ்ளோ ரிஸ்க் எடுத்திருக்கேன்னு நினைச்சா நீ முட்டாள் தான் தாரா.. கார்த்திக் பத்தி விசாரிக்கும் போது அவனுடைய காதலியை பத்தி எப்படி விசாரிக்காமல் இருப்பேன் தாரா? அதோட சத்யா?” அவன் கேட்ட போது,
“சத்யாவா எந்த சத்யா?”
“நடிக்காதே தாரா.. உன்னை பத்தி எனக்கு எல்லாமே தெரியும்”
“வாட்” என அதிர்வுடன் கேட்டாள்.
“என்ன வாட் நீ அனுப்பின மொட்டை கடுதாசியும், நதியோட துப்பட்டாவும், அந்த வெள்ளை தாள்ல இருந்த உன்னோட கையெழுத்தும், உன்னைக் கண்டுபிடிக்குறதுக்காக, நதியோட துப்பட்டால நீ ஸ்பேர பண்ணியிருந்த பர்ஃப்யூமும் என்னோட தேடுதலை எளிதாக்கிருச்சு, ஆனால் உன்னை நீயே வெளிபடுத்திக்கக் காரணம், அகிலன் என்கிட்ட இருக்கானன்ற சந்தேகத்துல இதெல்லாம் பண்ணியிருக்க, ஐ யெம் ஐ கரெக்ட்” எனப் பேசியவனைப் பார்த்து அதிர்ந்து போனாள் தாரா.
“என்ன தாரா ஷாக்கா.? மலரை மட்டும் மீட்டுகுறது என்னோட குறிக்கோளா இருந்திருந்தா.? உன்னை அன்னைக்கே பிடிச்சுருப்பேன், பட் என்னோட குறிக்கோள் அது இல்லை, நீ இதுவரைக்கும் கடத்தின பொண்ணுங்க, இனி கடத்தப்போற பொண்ணுங்க எல்லாத்தையும் இன்னும் பைவ் மினிட்ஸ்ல ரீலீஸ் பண்ணணும், உனக்கு இங்கே பதினைஞ்சு பப் இருக்கு, ஒவ்வொரு பொண்ணையும் சுழற்சி முறையில அனுப்புற, ஒரு பொண்ண மறுபடியும் வெர்ஜினாக்கி அவ ரெக்கவர் ஆகக் கொறைஞ்சது பதினைஞ்சு நாள் ஆகும், அதுக்காக நீ நிறைய ஆதரவு இல்லாத பொண்ணுங்களை வெளிநாட்டு வேலைன்னு பொய் சொல்லி கடத்தி, ஒரு பொண்ண பொருள் மாதிரி ரீசெல் பண்ணுற, அவங்க உன் பேச்சை கேட்க வைக்கிறதுகாக அவங்களை ட்ரக்ஸ்கு அடிமையாக்குற, நீயும் பொண்ணு தானே தாரா.? உனக்குக் கொஞ்சம் கூட இறக்கமே இல்லையா.? இதில் நீ டாக்டர் வேற” எனப் பேசியவன் தாராவை துரிதமாய்ப் பிடித்து அங்கிருந்த நாற்காலியோடு அவள் கைகளை விலங்கிட்டு பூட்டினான்.
“தீரேந்திரன் நான் அகில்காக எல்லாத்தையும் விட்டுருவேன்னு நினைச்சு நீ இங்கே வந்திருக்கனா, நீ தான் முட்டாள், மலரை வச்சு நாங்க உனக்கு வச்ச ட்ராப் தான் இது, மலரை வெளிநாட்டுக்குக் கை மாத்த போறதா உனக்குத் தகவல் சொன்னது கஜேந்திரன் தானே, அவன் எங்களோட ஆள், இந்தக் கேஸ்ல உன்னோட ஒவ்வொரு மூவ்வும் எங்களுக்கு அத்துபடி, அகிலனை தான் எங்க வச்சிருக்கன்னு தெரியலை, உன்ன வச்சு அகிலனை எப்படி வெளிய கொண்டு வரணும்னு எனக்குத் தெரியும்” எனத் தாரா பேசிக்கொண்டிருந்த போதே கதவை திறந்துக்கொண்டு அறையினுள் கம்பீரமாய் நுழைந்தார் செந்தமிழன். தாராவின் கைகளில் மாட்டபட்டிருந்த கைவிலங்கை பார்த்துக் கோபம் கொண்டவர்.
“என்ன நடக்குது தாரா இங்கே.? நீ அவனைக் கட்டிப்போட்டு வச்சிருப்பன்னு பார்த்தா.? நீ அவன்கிட்ட மாட்டியிருக்க மா.? தீரேந்திரன் தாராவோட கைவிலங்கை அவிழ்த்து விடு” கோபமாய்க் கத்தினார்.
“இது எனக்கும் தாராவுக்கு இருக்கிற டீலிங், அவ பிடிச்சு வச்சிருக்க எல்லாப் பொண்ணுங்களும் இப்போவே என் கூட அனுப்பி வைக்கணும், ப்ரெஸ் மீடியான்னு எதிலையும் ஒரு துண்டு செய்தி வராமல், உங்க அரசியலுக்கு எந்தக் கெட்ட பேரும் வராமல் இந்தப் பிரச்சனைய சால்வ் பண்ணிக்கலாம், என்ன சொல்லுறீங்க செந்தமிழன்.?”
“தாரா என்னமா பண்ணலாம்.?”
“அங்கிள் அவன் சொல்லுறதை நம்பாதீங்க, அகிலனை இப்போ வரைக்கும் அவன் என் கண்ணுல காட்டலை எதை நம்பி எல்லாப் பொண்ணுங்களையும் ரீலிஸ் பண்ணுறது.? இவன் எதோ கேம் ப்ளே பண்ணுறான்” எனச் சொன்னவள் விலங்கில் இருந்து தன்னை விடுவிக்க முயன்றுக்கொண்டிருந்தாள்.
“சொல்லு தீரேந்திரன்.? இத்தனை நாள் என்னோட பையன் அகிலன் சரக்கோட தலைமறைவாகிட்டான்னு சொன்ன, அப்பறம் எல்லாமே கார்த்திக்கு தான் தெரியும் சொன்ன.? சொல்லு இப்போ என்ன பொய் சொல்லப் போற? உன்னை நம்பி உன்னைக் கடத்தல் பிரிவு அதிகாரியா வேற ப்ரோமோட் பண்ணுறதுக்குச் சிபாரிசு செஞ்சேன், இத்தனை நாள் என் பையனை நீ தான் மறைச்சு வச்சிருக்கன்னு தாரா சொல்லுறா, நீ சொன்னதில் எது தான் உண்மை, அரசியலுக்காகச் சொந்த பொண்டாட்டிய கொன்னவன், உன்னை கொல்ல அரை நிமிசம் ஆகாது தீரேந்திரன்” என வெறிக்கொண்டு பேசியவரின் கையில் புதிதாய் துப்பாக்கி முளைத்திருந்தது.
“இங்க இரண்டு பேர் இருக்கீங்க, இரண்டு துப்பாக்கி இருக்குது, மூணாவதா என்கிட்டையும் துப்பாக்கி இருக்குது, யாரோட புல்லட்டுக்கு யார் இறையாகப் போறாங்கன்னு தெரியாது, எனக்குத் தெரிஞ்ச ஒரு விசயத்தைச் சொல்லுறேன், இங்கே இருக்கற ஒருத்தருக்கு சரக்கு வேணும், இன்னொருத்தருக்கு அகிலன் வேணும்” எனப் பேசியவன் அங்க போடப்பட்டிருந்த நீள் சோபாவில் தோரணையாய் அமர்ந்து கால் மேல் கால் போட்டான், காக்கி சட்டை அணியவில்லை என்றாலும் அவனின் கம்பீரமும், கூர்மையான பார்வையும், அவனின் கையில் முளைத்திருந்த பிஸ்டலும் அவனைக் காவலன் என்று பறைசாற்ற, நிமிர்ந்து இருவரையும் பார்த்துச் சொன்னான்.
“இது என்னோட பிஸ்டல் இதை நான் இங்கே வைக்கிறேன், உங்கள்ல யாருக்கு எது வேணும்னு நீங்களே முடிவு பண்ணி சொல்லுங்க. எனக்கு அன்டவுடட்லி எல்லாப் பொண்ணுங்களையும் மீட்கணும் தெட்ஸ் ஆல், நான் சரக்கையும் அகிலனையும் ஒப்படைச்சிட்டு போயிட்டே இருப்பேன்” எனச் சொல்லி மர்மமாய்ச் சிரித்தான் தீரேந்திரன்.
செந்தமிழனும் தாராவும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக்கொண்டனர்,
“ஆமா இத்தனை நாள் ஆகியும், இவ என் பையனை பத்தி வருத்தபட்டதை விடச் சரக்கு போயிருச்சேன்னு வருத்தபட்டது தான் அதிகம், இவளுக்கு என் பையனை விடக் கோடி கணக்கிலான சரக்கு தான் முக்கியம், பணத்துகாகத் தான் என் பையனை இவ காதலிச்சிருப்பா” என வாய்விட்டுப் புலம்பிக்கொண்டிருக்க, தாராவின் கை விலங்கை அவிழ்த்து விட்டான் தீரேந்திரன்.
“அங்கிள் அவன் சொல்லுற எதையும் காதில் வாங்காதீங்க, அவன் மைண்ட் ப்ளே பண்ணுறான், அவன் சொல்லுறது தான் சரின்னு நம்ப வைக்கிறான்” எனப் பேசியபடி தாரா செந்தமிழனின் அருகில் வந்தாள்.
“உனக்கு என் பையன் முக்கியம் தானே, அப்போ அவன் சொல்லுற மாதிரி எல்லாப் பொண்ணுங்களையும் ரிலீஸ் பண்ணு, எனக்கு என்னோட பையன் தான் முக்கியம், என் பையன் வந்தால் எனக்கு கோடி கணக்கில் சம்பாரிச்சுத் தருவான் எனக்கு அதுவே போதும். எனக்கு அந்தச் சரக்கு தேவையே இல்லை” தன் மகன் மேல் உள்ள அதீத பாசத்தில் பிதற்றிக்கொண்டிருந்தார் செந்தமிழன்.
“அங்கிள் முதலில் அவனை, அகிலனை கண்ணுல காட்ட சொல்லுங்க, நான் சொல்றது உங்களுக்கு ஏன் புரிய மாட்டேன்து, அகிலன் காணாமல் போய் அஞ்சு மாசம் ஆகுது, அதெப்படி அவன் இவன்கிட்ட இருந்து தப்பிக்க முயற்சி பண்ணாமல் இருப்பான்.? அப்படி எங்கே அவன் மறைச்சு வச்சிருக்கான், அப்படி அவன் தப்பிக்க முயற்சி பண்ணலைனா, அகில் உயிரோட தான் இருக்கானா.? அகிலை பார்க்காமல் நான் எந்த முடிவையும் எடுக்க மாட்டேன்” என உறுதியாய் நின்றவளை பார்த்து தீரேந்திரனின் இதழ் கோணலாய் வளைந்தது.
“அகிலனை இப்போ என்னோட கண்ணு முன்ன காட்டு அப்பறம் மத்ததெல்லாம் பேசிக்கலாம்” மேலும் உறுதியாய் சொன்னார் செந்தமிழன்.
“ஓகே, அப்பறம் உங்க விஷ்” என்றவன் தன் தொடுதிரைப் பேசியில் சில காட்சி படங்களைக் காண்பிக்க, அதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தே போயினர் தாராவும் செந்தமிழனும்.
“தீரேந்திரன் என் பையனை என்ன பண்ணி வச்சிருக்க.? அவன் ஏன் இப்படிக் கிடக்குறான்.?” அறையே அதிரும் அளவிற்குக் கத்தினார் செந்தமிழன்.
“அவனை என்ன பண்ணின.? சரக்கு எங்கே” எனச் தீரேந்திரனின் சட்டை காலரை பிடித்து உலுக்கிய தாராவை, பளார் என அவளின் கன்னத்தில் அறைந்திருந்தான் தீரா. பொத்தெனக் கீழே விழுந்தாள் தாரா.
“இப்போ பேசு மொத்தம் எத்தனை பொண்ணுங்களை ஏமாத்தி இந்த ஊர்ல வச்சிருக்க.?” மிரட்டலாய் கேட்டான் தீரேந்திரன்.
“மொத்தமா ஆயிரம் பொண்ணுங்க”
“வாட்.? ஆயிரமா..?”
“ஆமா சென்னையில ஐநூறு பொண்ணுங்களைத் தேத்தி வச்சிருக்கோம், இங்கே ஐநூறு பேர் இருக்காங்க” என வார்த்தைகளை உதிர்த்தாள் தாரா.
“இப்போவே சென்னையில இருக்கிற பொண்ணுங்களை இங்கே வர விடாமல் பண்ணு, கோவால இருக்கிற ஐநூறு பொண்ணுங்களும் உடனே நீ ரிலீஸ் செய்யணும் உன்னோட பதினைஞ்சு பப் வாசல்லையும் எங்க ஆளுங்களோட வண்டி நிக்கும் அதுல எல்லாப் பொண்ணுங்களையும் நீ அனுப்பி வைக்கணும், நான் சொல்ற மாதிரி நடந்தால் விசயத்தைக் காதும் காதும் வச்ச மாதிரி முடிச்சுக்கலாம், இல்லைனா..?” அவன் புருவம் உயர்த்தி மர்மமாய்ச் சிரித்த தீரேந்திரனை பார்த்து முறைத்துக்கொண்டிருந்த தாராவை தள்ளி முன் வந்த செந்தமிழன்,
“என் அரசியல் வாரிசை ஒன்னும் பண்ணிராதப்பா, அவன் தான் நாளைய தமிழகம், நீ சொன்னது எல்லாத்தையும் இப்போ நான் செய்யுறேன் எல்லாப் பொண்ணுங்களையும் ரிலீஸ் செய்யுறேன்” எனக் கெஞ்சாத குறையாய் கேட்டார் அமைச்சர் செந்தமிழன்.
“எனக்குச் சரக்கும் வேணும் அகிலும் வேணும்” தாரா மீண்டும் சரக்கை குறி வைத்து பேசுவது ஏனோ எரிச்சல் உணர்வை செந்தமிழனுக்குக் கொடுத்தது.
“உங்களோட சரக்கு மொத்தம் இரண்டு கோடி வேல்யூ, அதுல ஒரு கோடி மதிப்புள்ள சரக்கு தான் இருக்கு” எனத் தீரேந்திரன் விவரித்தான்
“என்னது ஒரு கோடி சரக்கு தான் இருக்கா.? மிச்சம் ஒரு கோடி சரக்கு எங்கே போச்சு.?” கோபத்துடன் கேட்டாள் தாரா.
“சரக்கு சரக்கு, இது மட்டும் தான் உன் மைண்ட்ல இருக்கா தாரா? மரியாதையா எல்லாப் பொண்ணுங்களையும் தீரேந்திரன் சொன்ன மாதிரி அனுப்பி வை, ஏன் பையனே கிறங்கி சுருண்டு போய் இருக்கான், அவனைக் காப்பத்தணும், நான் மீட்டிங் கூடப் போகாமல் என் மகனுக்காக இங்கே வந்திருக்கேன், எல்லாத்தையும் விட என் மகன் தான் எனக்குப் பெருசு, உனக்கு அந்தச் சரக்கு தான் பெருசுனா சாவுடி” எனத் தீரேந்திரனின் துப்பாக்கியை எடுத்துத் தாரா புறம் நீட்டி படபடவென டிரிக்கரை அழுத்திய நொடி பிஸ்டலில் இருந்து புல்லட் வராததைப் பார்த்து மருண்டு விழித்தார் செந்தமிழன். தாராவோ உயிர் பயத்தில் அலறியிருந்தாள்.
“அங்கிள் அதில் புல்லட் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்”
“ம்ம் உன் உயிர் போயிருக்கும்” எனச் சொன்னவர்.
“இப்போ எல்லா பொண்ணுங்களையும் விடுவிச்சு என் பையனை மீட்டு கொடுக்க வேண்டியது உன் பொறுப்பு” என மிரட்டலாய் சொன்னார்.
தீரேந்திரன் செய்ய வேண்டிய வேலையை,செந்தமிழனே சிறப்பாகச் செய்து முடித்திருந்தார் என்று சொல்வதைக் காட்டிலும், அவன் நினைத்ததைச் செந்தமிழனை செய்ய வைத்தான் என்றே சொல்லலாம்.
“நான் பொண்ணுங்களை விடுவிக்கிறேன்” எனத் தாரா ஒத்துக்கொண்ட பிறகு அவள் அடுத்த நொடி செய்த செயலால் அனைத்து பெண்களும் சுதந்திர காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்திருந்தனர், நரகத்தில் இருந்து இன்று தான் விடுதலை கிடைத்தது போல் இருந்தாலும் பாதிக்குப் பாதிப் பேர் போதை மயக்கத்தில் இருந்தனர். அவர்கள் விடுதலை ஆனது கூட அறியாமல், அடுத்து எந்த ஊருக்கு கடத்தி செல்கிறார்களோ என்ற நினைப்பில், அவர்களின் விடுதலைக்கான பயணம் தொடங்கியிருந்தது, ஐநூறு பெண்களும் வந்துவிட்டதாய் தகவல் வந்த பின் தான் தீரேந்திரன் உண்மையைச் சொல்ல ஆரம்பித்தான்.
“மீச்சம் இருக்கிற ஒரு கோடி போதை மருந்தும் அகிலனோட உடம்புடல தான் செலுத்தபட்டிருக்கு, கொஞ்சம் கொஞ்சம் உணவு கொடுத்தாலும், அவனின் பாதி நேர உணவும் மருந்தும், இந்த ட்ரக்ஸ் தான், அதனால தான் அவன் என்கிட்ட இருந்து தப்பிக்க முயற்சிக்கல, வெளிய ஒரு ப்ளாக் கலர் கார் நிக்கும் ட்ரைவர் இல்லாமல் அதில் தான் அகிலன் இருக்கான் முடிஞ்சா காப்பாத்திகங்க, ஏன்னா அவன் கொஞ்சம் கொஞ்சமா கோமாக்கு போயிட்டு இருக்கான், அவனோட உறுப்புகள் சில செயலிழந்து போயிருச்சு அவனால எழுந்து நடக்க முடியாது” எனச் சொல்லி தீரேந்திரன் பெருமூச்சுவிட, அதைக் கேட்ட நொடியில் அகிலனை காப்பாற்றுவதற்காக விரைந்து ஓடியவர் தன்னுடைய ப்ரைவெட் ஹெலிகாப்டரில் அங்கிருந்து கிளம்ப முடிவெடுத்தார்.
தன் மகனை முதலில் காப்பாற்றியாக வேண்டும் அதன் பின் தீரேந்திரனை கவனித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தன்னுடைய ஹெலிகாப்டரில் சுயநினைவன்றி இருந்த அகிலனையும், தாராவையும் அழைத்துச் செல்லும் முன் தீரனின் அருகே வந்தவர்.
“உன்னை சும்மா விடமாட்டேன் தீரேந்திரன், கூடவே இருந்து குழிபறிச்சுட்டல, சும்மா விடமாட்டேன்” என எச்சரித்துச் சென்ற போதும் புன்னகை முகமாய் நின்றிருந்தான் நம் நாயகன் தீரேந்திரன். பொறுத்தாற் பூமி ஆள்வார் என்ற பழமொழிக்கு ஏற்ப அவன் பொறுமையைக் கையாண்டான்.
அகிலன் செய்த கொடுமைகளை வட்டியும் முதலுமாய்க் கொடுத்த திருப்த்தியில் அங்கிருந்து அகன்றான் தீரேந்திரன். ஹெலிகாப்ட்டர் மெல்ல மேல ஏற எதையோ சாதித்தது போல் அங்கிருந்து நகர்ந்தான் நம் நாயகன்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அனைவர் வாழ்வையும் சூனியம் ஆக்கிக்கொண்டிருந்தவனுக்கு தண்டனை உணவும் நீருமாக அந்த போதை பொருளே.
மலரை மட்டும் அல்லாமல் அவர்களிடம் மாட்டிக்கொண்டு அல்லாடும் அனைத்து பெண்களுக்கும் விடுதலை அளித்தாயிற்று.
அகிலனுக்கு நல்ல முடிவு தான். தாரா பயங்கரமான ஆள் தான்