Loading

அதியை பங்களாவின் பின்புறம் புதைக்கத் தூக்கி சென்ற அகிலன், அங்குக் குழி தொண்ட துவங்கியிருந்தான். இரவு நேர கோட்டான் உறுத்து விழித்துக்கொண்டிருந்தது, தென்னைமர தோப்பின் நடுவில் ஆறடி குழியை ஒற்றை ஆளாய் தோண்டி முடித்தவன் அகரநதியை அந்தக் குழிக்குள் தள்ளவிட்டான், மண்வெட்டியை வைத்து மண்ணை அள்ளி அவள் மீது வீசிய சமயம் அங்குக் கார்த்தி வருவான் என்று அகிலன் எதிர்பார்த்திருக்கவில்லை. மலருக்காக கார்த்திக் சமயம் பார்த்து வந்திருந்தான்.

“டேய் அகிலன் என்னடா பண்ணுற.?” கோபமாய்க் கேட்டவன் பட்டெனக் குழிக்குள் குதித்துத் தன் தோழியைத் தூக்க முயன்றான்.

“சாவுங்க ரெண்டு பேரும் ஒன்னா சாவுங்க, ஃப்ரெண்ட்ஸ் தானே ஒண்ணா போய்ச் சேருங்க” என்றவன் மண்ணை அள்ளி வேகமாய்க் குழிக்குள் வீச ஆரம்பித்தான். அவன் மண்ணை அள்ளி வீசியதில் தன் தோழியைத் தூக்கி மேல வர முடியாமல் தவித்தவன், சுயநினைவின்றிக் கிடந்த தோழியை அங்கேயே கிடத்தி விட்டு அகிலனை நோக்கி கோபமாய் மேல வந்தான்.

“டேய் அகிலு அவ உனக்கு என்னடா பண்ணினா.? எதுக்காகடா கொலை செஞ்ச?” எனக் கேட்டவன் அகிலனின் மூக்கில் ஒரு குத்து வைக்க, குபுக்கென்று ரத்தம் வடிய ஆரம்பித்தது.

“அவ எங்கேடா செத்தா.? யூஸ் பண்ணின வேஸ்ட்டு பேப்பர்டா அவ, இனி இருந்து என்ன பண்ணப்போறா.? சாவட்டும் என்ன ஆட்டம் ஆடினா.? அந்த ஷார்ட் பிலிமை இன்னும் கையில வச்சிட்டு தான் சுத்திருக்கா, கௌதம் என்னோட ஆளுடா, சொல்ல போனா நீங்க வொர்க் பண்ணுறது எங்களோட பினாமி சேனல்டா” எனப் பேசியவன் மண்ணை அள்ளி வேகமாய்ப் போட, தன் தோழியின் வாழ்க்கையையும் அழித்து விட்டான், மலரின் கனவை சிதைத்து அவளைப் பாழும் கிணற்றில் தள்ளியது போல் அவள் வாழ்க்கையும் சிதைத்துவிட்டான், இவனை உயிரோடு விட்டாள் இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையை அழிப்பான் என்ற கோபம், அதியை எப்படியாவது காப்பாற்றி ஆக வேண்டும் என்ற துடுக்கும் வர, அவன் கையில் இருந்த மண்வெட்டியை பிடுங்கி அகிலனின் தலையில் ஒரு போடு போட்டான், குருதி வழிந்தாலும் அப்படியே தான் நின்றான் அவன்.

“சொல்லுடா என் மலரை எங்கேடா வச்சிருக்க.? எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையைத் தான் அழிப்ப.?” எனக் கேட்டவன் மீண்டும் அவனை மூர்க்க தனமாகத் தாக்கினான்.

“உனக்கென்னடா இப்போ மலர் தானே வேணும், சரி நான் மலரை விட்டுறேன், ஆனா இவளை சரி பண்ணி நான் அதுல இறக்கி விட்டுடவா.? நீ வெளிய இதைபத்தி வாயை திறக்க கூடாது, என்னடா சொல்லுற டீல் ஓகேவா.?” குருதி வழிந்தோடிய அந்த நேரத்திலும் அவன் வெறி அடங்காது பேச, கண்மண் தெரியாமல் கோபம் வந்த கார்த்தி அவனை மீண்டும் வேகமாய்த் தாக்கினான், அவனின் தாக்குதலை தாங்கி கொள்ள முடியாமல் சுருண்டு விழுந்தவனைக் கண்டு இறந்துவிட்டதாய் நினைத்தான். முதலில் தன் தோழியை கடினப்பட்டு குழிக்குள் இருந்து தூக்கி மீட்டிருந்தான். அகிலனை அதே குழியில் போட்டு புதைத்தவன் அங்கிருந்த கோடி கணக்கிலான போதை மருந்துகளை அவனுடனே சேர்த்து புதைத்திருந்தான் கார்த்திக்.

தப்பி வெளியே வர முயன்ற போது காவலர்கள் அங்கு வந்திருந்தனர். அப்போது அங்கு வந்த கஜேந்திரன் செந்தமிழனின் ஆள் என்பதால் அகிலன் மீது தவறு இல்லாதது போல் வழக்கு ஜோடிக்கபட்டது, அவன் குற்றத்தை ஒத்துக்கொள்ள வைக்கப்ட்டான், கார்த்திக்கை அடித்து வாக்குமூலம் வாங்கிவிட்டு, கார்த்திக்கே குற்றத்தை ஒத்துக்கொண்டதாய் போய்ச் சொல்லி விட்டார்கள் காவல் உடையில் இருந்த கையவர்கள்.

கார்த்திக் சரணடைந்த பின்னும் அகிலன் வீடு திரும்பாததும், கோடி கணக்கிலான போதை மருந்துகளும் எங்கே சென்றது என்று தெரியாமல் கார்த்திக்கை வந்து மிரட்டிய செந்தமிழனிடம், மலரை திருப்பிக் கொடுத்தால் தான் சரக்கு உங்கள் கை வந்து சேரும் என்ற பொய்யை சொல்லி வைத்ததோடு, அகரநதிக்கு மட்டும் தான் கார்த்திக்கும் சரக்கும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியும் என்று மாற்றிச் சொன்னதுக்குக் காரணம், தன் தோழி அதியின் உயிருக்கு எதுவும் ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தான் சொன்னான்.

அதே போல் அமைச்சர் செந்தமிழனும்., அதியை பாலியல் ரீதியாகக் கொடுமை செய்தது அகிலன் தான் என்ற தகவல் துளியளவுக் கூடக் கசியக் கூடாது, மீறி நீ யாரிடமாவது உளறினாள் மலரும், அகரநதியும் உயிரோடு இருக்க மாட்டார்கள் என்று மிரட்டியதால் தான் கார்த்தி யாரிடமும் சொல்லாமல் தவிர்த்து வந்தான். ஆனால் கார்த்திக்குத் தெரியாது தீரேந்திரன் அந்த நெட்வொர்க்கின் ஆணிவேரையே கண்டறிந்துவிட்டான் என்பது.

செந்தமிழனுக்கு ஆதரவாய் இருப்பது போல் நடித்து, அகிலனை அந்தக் குழிக்குள் இருந்து மீட்டு அவனுடைய பாதுக்காப்பில் வைத்திருக்கிறான் தீரேந்திரேன், அவனுடன் இருந்த சரக்கையும் பறிமுதல் செய்து பத்திரபடுத்தி வைத்திருக்கிறான் தீரேந்திரன். இத்தனையும் அவன் செய்தது, அந்த நெட்வொர்க்கின் திமிங்கலத்தைக் கண்டுபிடிக்கத் தான், செந்தமிழனை பயன்படுத்தியே ஹூமன் ட்ராப்பிக்கிங் சிறப்புப் பிரிவு அதிகாரியாய் ப்ரமோஷன் வாங்கிக்கொண்டான் தீரேந்திரன், அதியின் கற்பு பறிபோனது அவளுக்குத் தெரியக் கூடாது என்பதற்காகவே போலியாய் சான்றிதழ் உருவாக்கினான் தீரேந்திரன்.

மலர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்த தீரேந்திரன், மலர் இருக்கும் நிலையையும் அவளின் தற்போதைய புகைப்படத்தையும் கார்த்திக்கிடம் காட்டியிருந்தான்,அகிலன் தன்னிடம் உயிருடன் பத்திரமாக இருக்கிறான் என்பதையும் சொன்ன பிறகே, கார்த்திக் வாய் திறந்து உண்மையைச் சொன்னான், மீண்டும் செந்தமிழனை வைத்தே கார்த்திக்கை வெளியே எடுத்தான், தீரேந்திரன் நினைத்திருந்தால் கார்த்திக்கை எளிதாக வெளியே எடுத்திருக்க முடியும் ஆனால் செந்தமிழனுக்குக் கோபம் வந்து மலரை எதாவது செய்துவிடுவரோ என்ற சந்தேகம், ஒட்டு மொத்த கும்பலையும் கூண்டோடு பிடிக்கப் பொறுமை காத்தான் தீரேந்திரன். அங்கிருக்கும் பெண்களுக்கு எந்த ஆபத்தும் நேராது காப்பாற்றி ஆக வேண்டும் என்ற உறுதி மொழியைத் தனக்குள் எடுத்துக் கொண்டான். ஒரு நல்ல காவலன் தான் வகுக்கும் திட்டங்களை, தனக்குள் வைத்துக் கொள்வான், உண்மையைக் கண்டறிய பொறுமையைக் கையாள வேண்டும், எடுத்தோம் கவிழ்த்தோம் எனத் துப்பாக்கியை தூக்கி சுட்டுக் கொள்ள எந்தக் காவல அதிகாரிக்கும் எந்தச் சட்டத்திலும் அனுமதி கொடுக்கபடவில்லை, தண்டனை காவலர்களே கொடுக்கலாம் என்றால் நீதிமன்றம் எதற்கு.? சட்டம் எதற்கு.? நீதியையும் சட்டத்தையும் மதிக்கும் காவலனாய் தீரேந்திரன் என்றும் விளங்குவான், மனித உடல்களை விலைப்பேசி ஏலத்தில் விடும் கூட்டத்தைக் கண்டறிய கோவா நோக்கிய பயணத்தைத் துவங்கியிருந்தான் தீரேந்திரன்.

*************

கண்ணைக் கவரும் மின்விளக்குகளின் ஒளியில் அழகாய் பிரகாசித்துக் கொண்டிருந்தது கோவா, அங்கிருந்த பப்களில் ஆட்டம் களைக்கட்ட துவங்கியிருந்தது, அன்று போல் இன்றும் ஏலம் ஆரம்பித்திருந்தது. ஒரு மேஜை மீது கை வைத்திருந்தவனின் கரங்களில் மதுகோப்பை ஒய்யாரமாய் அமரந்திருந்தது, தீரேந்திரன் மலரின் வரவுக்காகக் காத்திருந்தான், அங்கு வேறு பெண் ஆடிக்கொண்டிருந்தாள். தலைக் கவிழ்ந்தபடி அணிந்திருந்த தொப்பியை சரி செய்த தீரேந்திரன்.

“கார்த்திக் ரெடியா இருங்க எப்போ வேணும்னாலும் மலரை அவங்க ஏலம் விடலாம்” எனத் தீரேந்திரன் சொல்ல,

“தீரா சார் ரொம்பப் பயமா இருக்கு, மலருக்கு எதுவும் ஆகிருக்காதுல.?” கண்ணீர் குளமாகிய விழிகளுடன் கேட்க,

“கார்த்திக் முதல்ல கண்ணைத் துடைச்சுக்கங்க, மலரை இந்தச் சிறையில இருந்து காப்பாத்தணும் அது மட்டும் தான் நம்மளோட குறிக்கோளா இருக்கணும்” எனத் தீரா சொன்னான்.

“அகிலன் நிஜமாவே உயிரோட தான் இருக்கானா.? நீங்க எப்படி அன்னைக்கி அந்தப் பீச் பங்களாக்கு வந்தீங்க.?”

“கார்த்திக் உங்களுக்குச் சில சீக்ரெட் ஆப்ரேசன்ஸ் இருக்கிற மாதிரி, எங்க டிபார்ட்மென்ட்லையும் சில சீக்ரெட் ஆப்ரேசன் இருக்கு, அதை எல்லார்கிட்டையும் சொல்லுற ரைட்ஸ் எந்தப் போலீஸ்காரனுக்கும் இல்லை, திஸ் இஸ் ஹைலி கான்பிடென்சியல்” எனச் சொல்லியவன் பப்லிருந்த அனைவரின் மீதும் பார்வையைப் பதிய வைத்தான். அதில் ஒரு பவுன்சர் இவனைக் கண்காணிப்பதை பார்வையிலே குறிப்பெடுத்துக்கொண்டான்.

தீரேந்திரனும் அன்று இரவு அந்தச் சீக்ரெட் பார்ட்டிக்கு வந்திருந்தான் ஆனால் அவன் காவலனாக வரவில்லை நூற்றில் ஒருவராய் வந்திருந்தான், அவன் நோக்கம் என்னவோ அந்தப் போதை மருந்துகளைக் கைபற்றுவது தான், ஆனால் அங்கு அவன் கார்த்திக் போதை மருந்துகளைப் புதைப்பதை மட்டும் தான் பார்த்தான், போதை மருந்துகளைப் பறிமுதல் செய்யவே அந்தக் குழியைத் தோண்டினான், ஆனால் அங்கு அவன் கண்டது அகிலன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் காட்சியைப் தான், போதை மருந்துகளைக் கைபற்றி அகிலனையும் மீட்டு இருந்தான் நம் நாயகன் தீரேந்திரன். அவன் தன்னவளை சிதைத்திருக்கிறான் என தெரிந்திருந்தால் அன்றே அவனை கொன்றிருப்பான். அதியை பற்றி எதுவும் அவன் அறிந்திருக்கவில்லை.ஆனால் அகிலனை மீட்டு தன் கட்டுபாட்டில் வைத்திருப்பதை ரகசியமாக வைத்திருந்தான்.

அங்கே பளபளக்கும் சிகப்பு நிற அறைகுறை ஆடையில் ஆடிக்கொண்டிருந்த பெண்ணை ஏலம் எடுத்த பின், அதே மேடையில் கிறக்கத்துடன் வந்து நின்றாள் மலர், மலரை பார்த்த நொடியில் கார்த்தியின் கண்களில் காதல் எட்டி பார்க்கவில்லை ஒரு வித பரிதாப பார்வையை வீசியவன், நொடிந்து போனான்.

“நதி கெட் ரெடி, மலர் ஆன் தி ஸ்டேஜ்” என்ற தகவலை காதில் மாட்டியிருந்த எயர் பட் மூலம் கேட்டுக்கொண்டிருந்தாள் அகரநதி.

“ஓகே தீரா எவ்ரி திங் இஸ் ரெடி, நீங்க பத்திரம்” என அவன் மீது அக்கறையில் உரைத்த பெண்ணவள், தன் எதிரே அமர்ந்திருந்த சமரை பார்த்து,

“அண்ணா ரெடியா இருக்கச் சொல்லியிருக்காங்க” எனச் சொல்ல, சமரும் பெருவிரலை உயர்த்திச் சரி என்பது போல் தலையசைத்தான். சமர் தீராவின் நம்பிக்கைக்குப் பாத்திரபட்டவன் என்பதால் அவனை அழைத்து வந்திருந்தான்.

“அய்யோ தீரா சார் என் மலர் மேல எத்தனை பேர் கை வைக்குறானுக, நான் இப்போவே அவளைக் கூட்டிட்டு வரப்போறேன்”

“கார்த்திக் ஷட் அப், ப்ளான் படி தான் போய் ஆகணும் எமோஷ்னல் ஆகாதீங்க, நம்ம அந்தக் கூட்டத்தைக் கூண்டோட பிடிக்கணும், கோஆப்ரேட் பண்ணுங்க” என்றவன் கார்த்திக் கரம்தனை ஆறுதலாய் பிடிக்க, உணர்ச்சிகளைக் கட்டுபடுத்தி அமர்ந்திருந்தவன் கோப மூச்செடுத்தான்.

“நீங்க போலீஸான்னு எனக்கே டவுட்டா இருக்குத் தீரா சார், அகிலனை இத்தனை நாள் உங்க கிட்ட உயிரோட வச்சிருக்கீங்க, மலர் இங்க இருக்க விசயமும் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு, எல்லா ஆதாரமும் உங்க கையில இருக்கு, ஆனால் நீங்க எதுவும் செய்ய மாட்டீங்க, உங்களுக்கு எதுக்குத் துப்பாக்கி கொடுத்திருக்காங்க எல்லாத்தையும் சுட்டு கொண்ணுட்டு என் மலரை மீட்பீங்கன்னு பார்த்தா, அமைதியா உட்கார்ந்து சரக்கு அடிச்சிட்டு இருக்கீங்க.?” என மனதில் பட்டதைக் கேட்டுவிட்டான் கார்த்தி, அவன் கேள்வி கேட்ட ஷண பொழுதில்

“த்ரீ லக்ஸ்” எனத் தலைக் கவிழ்ந்து சொன்ன தீரேந்திரன் கை உயர்த்தி இருக்க, அவனின் கம்பீரமான குரல் கேட்டு மலரும் மருண்டு விழித்தாள், எங்கோ கேட்ட குரல் போல் தான் அவள் செவிகளைச் சென்றடைய, அங்கிருந்து ஓட அவள் உடல் தான் ஒத்துழைக்கவில்லை அந்த அளவுக்குத் தள்ளாட்டம். கார்த்திக்குக்கு இப்போது தான் புரிந்தது தீரேந்திரனின் திட்டம்.

மலரை ஏலத்தில் எடுத்து காப்பாற்றுவதே தீரேந்திரனின் திட்டம். உடனே ஏலத்தின் மதிப்பு அதிகரிக்க ஆரம்பித்தது, இறுதியாய் பதினைந்து லட்சத்தில் நின்றது, தீரேந்திரன் இருக்கும் நம்பிக்கையில் கை உயர்த்திச் சொன்னான் கார்த்தி

“இருபது லட்சம் என்று” தன் மலரானவளை மீட்கும் வழி பிறந்துவிட்டது எனத் தோன்றியவனாய் தீரேந்திரனை பார்க்க, இருபது லட்சம் அடங்கிய பணப்பெட்டியை கார்த்திக் பாரின் பவுன்சரிடம் செலுத்த, மலரும் தனியறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

“கார்த்திக் நதி வெளியே வெயிட் பண்ணுறா போங்க, நான் மலரை அழைச்சிட்டு வந்திடுறேன்.?” தீரேந்திரன் தீர்க்கமாய்ச் சொன்னான். அவன் விழிகளில் தெரிந்த தெளிவு மலரை மீட்டுத் தருவான் என்ற நம்பிக்கையைக் கார்த்திக்குக் கொடுக்கப் பப்பை விட்டு வெளியே வந்திருந்தான் கார்த்திக்.

அதே சமயம் தீரேந்திரன் மலர் இருக்கும் அறைக்கு அழைத்துச் செல்லபட்டான், அங்கிருந்த அறையில் கிங் சைஸ் பெட்டில் சுருண்டு கிடந்த பெண்ணைப் பார்த்தவனுக்குப் புரிந்து போனது அவள் மலர் இல்லை என்பது, நாம் ஏமாற்ற பட்டு விட்டோமா என்று அவன் நினைத்துக்கொண்டிருந்த போதே, சுருண்டு கிடந்தவள் பட்டென எழுந்து அவன் நெற்றி பொட்டில் பிஸ்டலை வைத்திருந்தாள் அந்தப் பெண்.

“என்ன தீரா மலரை காப்பாத்த வந்து, இப்போ பரிதாபமா என்கிட்ட வந்து மாட்டிகிட்டியே.?” என விகாரமாய்ச் சிரித்த பெண்ணைப் பார்த்து,

“தப்பு கணக்கு போட்டுட்டடியே தாரா” என அழகாய் புன்னகைத்தான் ஆறடி காவலன்.

“ஏய் தீரா என்ன உளறிட்டு இருக்க.?”

“பிஸ்டலை வச்சிகிட்டே இருக்க, சுடுறதா இருந்தால் சுடு தாரா, ஒரு பொண்ண காப்பத்திறதுக்கு என் உயிர் தான் உனக்கு வேணும்னா எடுத்துக்கோ, பட் உன்னோட உயிர் என் கையில இருக்கு நினைவுல வச்சிக்கோ தாரா” எனத் திமிராய் பேசியவனைப் பார்த்துக் கோபம் மூண்டது,

“திக்கு தெரியாமல் சுத்திகிட்டு இருந்தவனுக்கு நீ தானே சரளாவ கொண்ணு உன்னை வெளிபடுத்திகிட்ட, அன்னைக்கி அந்த மெடிக்கல்காரன் சொன்னது அத்தனையும் சுத்த பொய், அவனுக்குப் பக்கத்து கடையில இருந்த சிசிடிவி கேமரா தெரியலை போலப் பாவம், நீ சரளாக்கு கொடுத்த பாய்சனும், அவங்களை நீ மிரட்டிய சிசிடிவி ஆதாரமும், என்கிட்ட தான் இருக்கு, அதோட உன் உயிருக்கு உயிரான காதலுனும் என் கையில தான் இருக்கான் நினைவுல வச்சுக்கோ.?” நெற்றி பொட்டில் துப்பாக்கி வைத்தும் தைரியமாய்ப் பேசிக்கொண்டிருந்த காவலனை பார்த்து மழுங்க விழித்தவள், மெதுவாய் பிஸ்டலை கீழே இறக்கினாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ஒரு விடயத்தை செய்யும் முன்னர் எல்லா பக்கமும் கவனம் கொள்ள வேண்டும். செயலின் பலன்களை யோசித்து நிதானமாக செயல்பட வேண்டும்.

    அந்த வகையில் தீரேந்திரன் ஒரு நல்ல காவல் அதிகாரியாக செயல்பட்டுள்ளான்.

    அகரின் மனநிலையை கருத்தில் கொண்டு அவளிடம் உண்மைகளை கூறாமல் இருந்தது நன்று.

    கார்த்திக் தோழிக்காகவும் காதலிக்காகவும் நிறைய போராடி இருக்கின்றான்.

  2. அடேங்கப்பா தாரா உங்களுக்கு வந்தா ரத்தம். மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா. தீரா கேம் ஸ்டார்ட்ஸ்