Loading

KKEN-21

அவன் அப்படி கட்டிலில் வீரத்தை காட்டி வீழ்த்திய பெண்கள் பலர். அந்த பெண்கள் இஷ்டப்பட்டாலும் சரி கஷ்டப்பட்டாலும் சரி அவன் எடுப்பது தான் முடிவு.

அப்படி அவன் கஷ்டப் படுத்தியதில் நம் மதுவும் ஒருத்தி.

பெண்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் காவல் அதிகாரி தான். பல பயிற்சிகளை பெற்றவர் தான் இருந்தும் நரியின் தந்திரத்தில் மாட்டிக் கொண்டுவிட்டார். மதுதான் அந்த கல்லூரிப் பெண்ணின் கேஸை விசாரிக்கிறாள் என்பது அதிபனுக்குத் தெரிந்து விட்டது. அதிலும் அந்தப் பெண்ணின் அன்னைக்காக இவளே இன்னும் கூடுதல் ஆர்வம் காட்டி விசாரிப்பதும் அவள் தன்னைப் பற்றிய பல விஷயங்களை தெரிந்து கொள்வதும் கூட அவன் அறிந்தது தான் . அவன் அறியாத விஷயம் அர்ஜுன் தான். மற்றபடி அவளைப் பற்றிய அத்தனை விஷயங்களும் அவன் உள்ளங்கையில் இல்லை. அவன் மூளையில். அவளே அவன் மூளையில் நடுநாயகமாக இருந்துப் படுத்தி எடுத்தாள் . குடும்பத்தை காட்டி மிரட்ட முடியாது. குடும்பம் இல்லை. அவள் அன்று பாதுகாப்பு பணியில் இருந்தபோதே அவளின் அழகு அவன் கவனம் ஈர்த்தது. வித்யா விஷயத்தினால் இவளைப் பற்றி பெரியதாக அவன் அப்போது சிந்திக்கவில்லை . இப்போது அவளை என்ன செய்யலாம்? சிந்திக்கத் தொடங்கினான்.

என்னதான் செய்ய? தெரிந்த பல வழிகளில் இதுவும் ஒன்று. போதை மருந்து கொடுத்து அவளை அசிங்கப் படுத்தி இருந்தார்கள். ஒரு முறை அல்ல . பல முறை. வீட்டில் கொண்டு வந்து தள்ளி விட்டு போனார்கள். அடுத்த இரு தினங்களுக்கு அவள் எழும்பவில்லை. வீட்டில் வநது பார்த்த காவலர்கள்தான் அவளை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அவளின் நிலை கண்டு ஆண் பெண் வேறுபாடு இன்றி கண்ணீர் வடித்தார்கள். அத்துடன் அவள் விஷயம் வெளியில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். இப்படிப்பட்ட காவலர்களை பார்த்த மருத்துவருக்கும் மனதிற்கு நிறைவாகவே இருந்தது. அவரும் விஷயத்தை வெளியில் யாருக்கும் சொல்ல மாட்டேன் என்று வாக்களித்தார். ஹை பீவர் . விடுப்பில் இருந்தாள் ஒரு வாரம். உடலில் இருந்து முழுவதுமாக போதை பொருள் அகற்றப்பட்டது.

எப்படிப்பட்ட பெண் அவள்! ஆணுக்கு ஆணாக பெண்ணுக்கு பெண்ணாக, உடன் வேலைப் பார்ப்பவர்களுக்கு அக்காவாக, அன்னையாக, தோழியாக. அவளைப்  போன்றவளைப்   பார்ப்பது மிகவும் அபூர்வம். சில தினங்கள் கழித்து அவளுடன் வேலை செய்யும் பெண் காவலர் வந்தார்.

“எப்படி இருக்கீங்க. மேடம்?”

“இருக்கேன். ஏதோ இன்னும் உயிரோட இருக்கேன்.”

சிறு மௌனம்.

மதுவே  தொடர்ந்தாள்.

“என்ன விஷயம் ரூபா? ஸ்டேஷன்ல எல்லாம் எப்படி போகுது?”

“ஏதோ போகுது மேடம். நீங்க  இருக்கும்போது இருந்த மாதிரி இல்ல மேடம். புது எஸ் பீ வேற மாதிரி இருக்காரு மேடம். ஆளும் பாக்கற பார்வையும் அருவருப்பா  இருக்கு மேடம். பேண்ட தாண்டி உள்ள பாக்கற மாதிரி” பல்லிடுக்கில் வார்த்தைகளை துப்பினாள் .

“ம்! இது எல்லா இடங்களிலேயும் நடக்கறது தானே”

“இருக்கலாம் மேடம். அது எல்லாம் தட்டி கேக்கறதுக்குத்தானே நாம? நமக்கே இப்டி ஒரு நிலைமைன்னா  மத்த பொண்ணுங்க?”

“எனக்கு இதை பத்தி எல்லாம் பேசுற தகுதியே கிடையாது ரூபா. என்னையே என்னால காப்பாத்திக்க முடியல. நான் எப்படி மத்த பொண்ணுங்கள காப்பாத்துவேன்?”

கண்ணில் கண்ணீர் வரவில்லை. ஆனால்  விரக்தி இருந்தது.

“நோ மேடம்! நீங்க தைரியத்தை விடக்  கூடாது. இந்தாங்க. இது உங்களுக்காக.” அவள் கொடுத்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டாள் .

“புக் மட்டும் வெய்ட் இல்ல மேடம். உள்ள இருக்கற விஷயங்களும்தான்.”

புது புத்தகத்தின் வாசம்  அவளுக்கு மிகவும் பிடிக்கும்.

‘புது பணக்கட்டின்  வாசம் மட்டும்தான் உசத்தியா?  இது அதையும் தாண்டி. நிச்சயம் வேற லெவல். இவள் பேசுவதை குறு புன்னகையுடன் ரசித்து கேட்டவன் இப்போது எங்கே?” மதுவின் மனம் அவனைத் தான் தேடியாது. எங்கோ ஒரு மூலையில் மக்களை பாதுகாக்க வேலை செய்துக் கொண்டிருப்பவன். அப்படி என்றால் இவள் பாதுகாப்பு?

அது பெண் காவல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட புத்தகம். அதில் அவர்கள் எப்படி எல்லாம் கடினங்களை சந்தித்து முன்னேறி இருக்கிறார்கள் என்று அவர்கள் வாயாலே சொல்லக் கேட்டு எழுதிய புத்தகம். யாரும் எளியதாக எந்த விஷயத்தையும்  அடைந்து விடுவதில்லை. இருந்தாலும், இழந்த இழப்புகளை இந்த புத்தகம் திருப்பி தந்து விடுமா? மனதில் நினைக்கவில்லை. வாயினால் கேட்டே  விட்டாள் .

“ஏன் மேடம் கொடுக்காது? நீங்க  என்ன இழந்துருக்கீங்க? கற்பா? இப்ப நாம வெளில படி இறங்கறதுலேர்ந்து ரோட்டுல போக ஒவ்வொருத்தனும் நம்மள கண்ணாலேயே மேட்டர் முடிச்சிடறாங்க மேடம். வேலை போச்சுன்னு சொல்லப் போறீங்களா? அன்னிக்கு செத்து போன  பொண்ணோட  அம்மா தன்னோட பொண்ணுக்கு நியாயம் கிடைக்குன்னு நம்பிகிட்டு இருக்காங்க மேடம். அவங்க சட்டத்தை நம்பல. உங்கள நம்புறாங்க”

“நல்லா  பேசற ரூபா”

“ஸ்கூல்ல பேச்சுப் போட்டில நான்தான்  மேடம் பர்ஸ்ட்”

மௌனம்…..

“மேடம்! உங்களோட இந்த நிலைமைக்கு யாரு காரணம்னு தெரிஞ்சு போச்சு”

“அதான் எனக்கே தெரியுமே?அதான் அவனே சொன்னானே. அதிபன் அருணாச்சலம்.”

“நான் அதை  பத்தி சொல்லல மேடம். நீங்க  வேலை நேரத்துல போதை மருந்து சாப்பிட்டதால் தானே உங்கள சஸ்பென்ஷன்ல வச்சுருக்காங்க?”

“நீங்க அந்த நிலமைல இருந்த அதிர்ச்சினால் எங்க யாராலையுமே  யோசிக்க முடியல. ஆனா அந்த டாக்டர் மேடம் என்னை கூப்பிட்டு பேசினாங்க. இதுக்கு முன்னாடி இந்த மாதிரி எந்த பழக்கமும் உங்களுக்கு இருந்ததில்லை. இதுதான் பர்ஸ்ட் டைம் . அதை  ரொம்ப ஈஸியா நிரூபிக்க முடியும். அதே மாதிரி அந்த டீ குடுக்கற பையன் என்னை  ரோட்டுல பார்த்து உண்மைய சொல்லிட்டான் . அவன் நமக்கு டீ  கொண்டு வரும்போது அந்த மாஸ்டர் உங்களுக்குன்னு வேற டீ  குடுத்திருக்காரு. நீங்க  சர்க்கரை நிறைய போட வேண்டான்னு சொன்னீங்களாம். அப்டின்னு அந்த மாஸ்டர் சொல்லி இருக்கான்.சோ அவனை விசாரகிக்க வேண்டிய விதத்துல விசாரிச்சா போதும்.அதுலதான் போதை மருந்து கலந்துருக்குன்னும் நாம் ஈஸியா காட்டிடலாம். எங்களுக்கு யாருக்கும் எந்த  விஷயமும் தெரிஞ்ச மாதிரி நாங்க வெளில காட்டிக்கல. அதனால அந்த மாஸ்டரும் இங்கையேதான் கேசுவலா சுத்திகிட்டு இருக்கான். அவனையும் அமுக்கிடலாம். நீங்க  ஓகே சொல்லுங்க மேடம். எல்லா விட்னஸையும் நாங்க கலெக்ட் பண்ணறோம் “

இத்தனை நேரம் வாழ்க்கையில் எந்த நம்பிக்கையும் இல்லாது இருந்தவளுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்தாள் அவளின் வலது கை  ரூபா.

“நான் கிளம்பறேன் மேடம்” சோபாவில் இருந்து எழுந்துக் கொண்டவள் ,

“எத்தனை அழகு, கம்பீரம், படிப்பு, பணம் எல்லாம் இருந்தாலும் இராவணன் அழிஞ்சதுக்கு காரணம் அவனோட பெண்ணாசைதான் மேடம். பொண்ணுங்கள அசிங்கப் படுத்தறவங்க என்னிக்குமே நல்லா  இருக்க மாட்டாங்க மேடம். அந்த அதிபனுக்கு அழிவு காலம் வந்துடுச்சு போல. நாம அவனுக்கு ஒரு முடிவு கட்டலாம் மேடம். பழைய மதுவா  நீங்க  திரும்பி வாங்க. அதப் பார்த்து அவனே பயப்படணும்.”

அவள் கிளம்பியவுடன் மதுவுக்கு ரூபாவை பற்றி இப்படித் தோன்றியது.

 ‘இந்த ரூபாவுக்கு இத்தனை எல்லாம் பேசத்  தெரியாது. பள்ளி பேச்சுப் போட்டிக்கு அம்மாவும் ஆசிரியர்களும் எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து பரிசுகள் வாங்கி இருக்கலாம். அதே போல அவளுக்கு இப்போதும் யாராவது  எழுதிக்  கொடுத்து பேசிக்கிறாளா? இருக்கலாம். ஏன் இருக்கக் கூடாது? மதுவின் ஒவ்வொரு அசைவையும் அறிந்தவன் தான் இருக்கிறானே? இந்த புத்தகமும் அவன் தான் வாங்கி கொடுத்திருப்பான்’

அந்த நிலையிலும் அவனை நினைத்தால் மனதில் ஏதோ ஒரு தென்றல் வீசத்தான் செய்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தே பல மாதங்கள் ஆகி விட்டன. அவனைப் பற்றி இவள் நினைத்துக் கொள்வாள். அவன்? நினைப்பானா  தெரியாது.  ஒவ்வொரு நாளும் எங்கோ ஏதோ ஒரு இடத்தில் நாட்டின் பாதுகாப்பிற்காக விஷயங்களை சேகரிக்க ஓடிக் கொண்டிருப்பவன். தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் அலுவலகத்தில் அவருக்கு கீழ் நேரடியாக வேலை பார்க்கும் சில முக்கியமான  அதிகாரிகளில் இவனும்  ஒருவன். நினைத்த நேரத்தில் எல்லாம் அவனிடம் பேசிவிட முடியாது. திடீர் திடீரென்று ஏதேதோ புது எண்ணில் இருந்து ஜெய் ஹிந்த்  என்று மட்டும் எஸ் எம் எஸ் வரும். ஏதோ பெரிய விஷயம் செய்திருக்கிறார்கள் என்பதை இவள் புரிந்து கொள்வாள். இதுதான் இவர்களின் காதல் கதை. “எப்படி இருக்க? என்ன பண்ணற? சாப்பிட்டியா? தூங்கினியா?” எந்த கடலையும் வறுப்பதில்லை. உடல் பிரிந்திருந்தாலும் அவர்களின் மனம் பேசிக் கொண்டுகான் இருக்கிறது.

இங்கே  அதிபன் வீட்டில்……..

“என்னப்பா? பிசினெஸ் எல்லாம் எப்படி போகுது?

“தந்தையும் மகனும் தோட்டத்தில் அமர்ந்து நிதானமாக பேசிக் கொண்டிருந்தார்கள். பொதுவாக ஞாயிறு என்றாலும் இருவருக்குமே நேரம் இருக்காது. இருந்தாலும் சில முக்கியமான விஷயங்கள் பேச வேண்டும் என்றால் நேரம் ஒதுக்கித்தானே ஆக வேண்டும்.

இருவருக்கும் அதிபனின் அன்னை தேநீரும் பக்கோடாவும் வைத்து விட்டுப் போனார். அந்த நேரத்தில் அங்கே எந்த வேலைக்காரர்களுக்கும் அனுமதி இல்லை. தொழில் விஷயம், லாபம், நட்டம் , பினாமி விஷயங்கள், பத்திர பதிவு எல்லாம் பேசினார்கள்.

“சரிப்பா! எல்லா விஷயத்துலையும் ஒரு கண்ணு இருக்கட்டும் “

“எஸ் டாட்! “

“கொசு நம்மளையே சுத்தி சுத்தி வரும். கோபத்துல நாம அடிச்சுட்டோன்னு நினைச்சுகிட்டு இருப்போம் . ஆனா அது செத்துருக்காது. ஒனக்கு எதுவும் நான் சொல்லித் தெரிய வேணாம்.  அந்த போலீஸ் காரி விஷயத்துல எப்பவும் ஒரு கண்ணு இருக்கட்டும்” சொல்லி விட்டு இடுப்பு வேட்டியை சரி செய்து கொண்டு நகர்ந்து கொண்டார் அருணாச்சலம்.

அதிபனின்  செல்லம் ப்ளாக்கி அங்கே வந்து  மேலே தாவி தாவி அவனைக் கொஞ்சியது. வேறு யாரும் அல்ல. நம் பைரவரின் இனம் தான். அதிபனும் அதோடு கொஞ்சி விளையாடினாலும் தந்தை சொன்னது மூளையில் ஓடிக் கொண்டேதான் இருந்தது.

இங்கே இவன் யோசித்ததையே தான் அங்கே தில்லியில் அர்ஜுனும் யோசித்துக் கொண்டிருந்தான். இந்த கொசுவை ஊதினாப் போதுன்னு  நினைச்சது தப்போ?

    அந்த பெண்ணின் தற்கொலைக்குப் பிறகு மது என்ன காரணம் என்று தீவிரமாக விசாரித்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் ஒரு நாள் இரவில் அவள் வண்டியின் முன் மலர் வந்து விழுந்திருந்தாள் . என்ன நடந்தது?

காதல் தொடரும் ..

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்