34- நதியே தீராநதியே

Loading

இன்று

ஏய் குட்டி பிசாசு உள்ள வந்துட்டியா.?”

“ம்ம் வந்தாச்சு வந்தாச்சு” ஜீப்பின் பின் இருக்கையிலிருந்து நதியின் குரல் கேட்டது, அவளோ சாதாரண உடைக்கு மாறியிருந்தாள். அவள் போட்டிருந்த பேய் வேடத்தையும் களைத்திருந்தாள்.

“கீயை கொடுமா” அவன் பின்னே கைநீட்ட சாவியை அவள் கொடுத்தாள், அதன் பின் வண்டியை லாவகமாக இயக்கினான் தீரா.

“நீ தேடி போனது கிடைச்சுதா.?”

“இல்லை கிடைக்கல தீரா வேற ஒண்ணு கிடைச்சது”

“வேற ஒண்ணா..? என்னது.?”

“அந்தப் பங்களால இல்லீகலா என்ன நடந்திட்டு இருந்திச்சோ அதோட பதிவு”

“அதை வச்சு என்ன பண்ண முடியும் நதி, ஒன்னும் பண்ண முடியாது, அங்க என்ன நடந்திச்சுன்னு கூடவா தெரியாம இருப்பேன்னு நினைச்ச நதி, அங்கே என்ன நடந்துச்சோ அதற்கான ஆதாரம் எல்லாமே என் கையில இருக்கு சட்டபடி நம்ம எந்த ஆக்‌ஷனும் எடுக்க முடியாது நதி” அவன் உறுதியாய் சொல்ல,

“அப்போ என்ன தான் பண்ணுறது தீரா.? கார்த்தியை வெளிய எடுத்தாகணுமே.? அந்தச் செந்தமிழனோட முகத்திரையைக் கிழிக்க வேண்டாமா, தலைமறைவா இருக்க அகிலனை சட்டத்துக்கு முன்னாடி நிறுத்த வேண்டாமா, போலீஸா இருந்து என்னத்துக்கு, அரசியல் பின்புலத்துல இருக்கவங்களுக்குக் கும்பிடு போடதானா.?” அவள் சகட்டு மேனிக்குக் கோபத்தில் உளற,

“நதி தெரிஞ்ச மாதிரி பேசாதே, உன்னோட கார்த்திக் வாய் தொறந்து சொன்னால் தான், எதுல மாட்டிக்கிட்டு இருக்கான்னு நமக்குத் தெரியும், அவனும் வாயை திறக்க மாட்டேன்றான், செந்தமிழனும் அவன் எதோ மறைச்சு வச்சிருக்கான் அது வேணும்னு சொல்றாரு, நான் என்ன தான் சொல்ல முடியும் நதி” அவன் விசயம் தெரிந்தும் அவளிடம் மறைத்தான்.

“கார்த்திக் எதுக்குப் பயந்து போய் இருக்கான்னு உங்களுக்கு உண்மையாவே தெரியாதுல இல்ல தீரா” குதர்க்கமாய்க் கேட்டாள்.

“தெரியாது” கோபமாய்க் கத்தினான்.

“அப்போ இதுக்கு என்ன அர்த்தம் தீரா.?” அவள் காட்டிய பொருளை பார்த்து வியந்தான்.

“இதை எங்கயிருந்து எடுத்த.?”

“உங்க ரூம்ல தான், இதை முழுசா நான் பார்த்துட்டேன், அதோட இந்தப் பெண்டிரைவ் இந்தப் பங்களால காணாமல் போயிட்டதா கார்த்திக் என்கிட்ட அடிக்கடி சொல்லிட்டே இருந்தான், எங்களால இந்தப் பங்களாக்குள்ள மறுபடியும் நுழைய முடியலை, ஆனால் நீங்க எனக்கு முன்னாடியே இந்தப் பங்களாக்குள்ள வந்து இந்த ஆதாரத்தை எடுத்திருக்கீங்க.? கார்த்திக் ஏன் போய்ச் சொல்றான்னு உங்களுக்குத் தெரியும் தீரா, ஆனா நீங்க என்கிட்ட மறைக்குறீங்க” மனதில் இருந்த அனைத்தையும் கொட்டி தீர்த்தாள் நதி.

“சொல்லுங்க தீரா.? உங்களுக்கும் அந்த அகிலனுக்கும் என்ன சம்மந்தம்.? எதுக்காக அவனைக் காப்பாத்தணும் நினைக்கிறீங்க.? நீங்க எல்லா ஆதாரத்தையும் மறைக்கிறது அஸ் ஏ ப்ரெஸ் ரீப்போர்டரா அந்த அகிலனுக்கு ஃபேவரா பண்ணுற மாதிரி தோணுது தீரா.? என அவள் எழுப்பிய அத்தனை கேள்விகளுக்கும் அவன் நினைத்தால் நொடியில் பதில் சொல்லியிருக்கலாம் அவன் அமைதி காத்தான். தன்னவளின் நலனுக்காக.

“இதெல்லாம் சொன்னா நீ தாங்கமாட்ட நதி” தனக்குள் பேசிக்கொண்டான் தீரேந்திரன்.

“எனக்காகத் தான் எல்லாமே பண்ணுறேன்னு சொல்லிறாதீங்க தீரா, அதை என்னால நம்ப முடியாது, எல்லா ஆதாரத்தையும் உங்க கையில வச்சிக்கிட்டு கார்த்திக் நிரபராதின்னு தெரிஞ்சும் உங்களால ஆக்சன் எடுக்க முடியலைன்னு சொல்றதெல்லாம் சுத்த பொய் தீரா” எனக் கோபமாய்ப் பேசினாள் நதி, ஆனாலும் அந்த விசயத்தைப் பத்தி அவன் மூச்சு கூட விடவேயில்லை.

“எனக்கு மலரை பார்க்கணும் உங்களை நம்புறதுக்கு மலரை நம்பலாம், அவ என்கிட்ட ஃபேக்கா நடந்துக்க மாட்டா” என அவள் சொன்ன வார்த்தையில் வண்டியை நிறுத்தியவன், கோபம் பொங்க அவளைப் பார்த்தான்.

“நதி வாய்க்கு வந்தெல்லாம் பேசாதே, மலர் என்ன நிலைமையில இருக்கான்னு உனக்குத் தெரியுமா.? அட்லீஸ்ட் எங்க இருக்கானவது உனக்குத் தெரியுமா.? ஃப்ரெண்டு ப்ரெண்ட்ஷிப்னு சொல்லுற அவ என்ன கஸ்டத்துல இருந்தான்னு கூடத் தெரியாத அளவுக்கு ப்ரெண்ட்ஷிப், அவ வெளிநாடு போனாளே, உனக்கு அவ போன் பண்ணி பேசினாளா.? இல்லை நீ தான் பேசினியா.?”

“தீரா என்ன சொல்லுறீங்க.? மலருக்கு என்ன ஆச்சு.?”

“நதி அன்னைக்கி நீ மலரை தேடி அவ வீட்டுக்கு போனீயே அப்ப கூட எனக்குத் தெரியும் அவ அங்க இல்லைன்னு அதனால தான் நான் உன் கூட வரலை, உன் மனசு வருத்தபடக் கூடாது, இப்போ தான் கோமால இருந்து சரி ஆகிருக்க, அதிர்ச்சியான செய்தி எதுவும் சொல்ல வேண்டாமேன்னு பொறுமையா இருக்கேன் நதி, என் பொறுமையைச் சோதிக்காதே” எனச் சொன்னவன் வண்டியின் வேகத்தைக் கூட்டியிருந்தான்.

“தீரா மெதுவா போங்க பயமா இருக்கு” பயந்து போனாள் நதி.

அவளின் பதட்டமான குரலில், அவனுடைய மனம் இயல்பை தத்தெடுத்தது, வண்டியும் சீரான வேகத்தில் பயணிக்கத் துவங்கியது. ஆனால் நதியின் இதயம் இயல்பை தொலைத்து வேகமாய்த் துடிக்க ஆரம்பித்தது, மலருக்கு என்ன தான் ஆனது.? என்ற கேள்வி பாவையவள் மனதில் குடிகொள்ள,

“மூன்றாம் கண் (third eye) ” தீரா சொன்ன வார்த்தைகள் அவள் முதுதண்டு சில்லிட்டது, அந்த வார்த்தையைக் கேட்ட நொடியில் அவள் மனம் நடுக்கம் கொண்டது. இந்த ரகசியம் தீராவுக்கு எப்படித் தெரிந்தது நதியின் விழி பயத்தைச் சுமந்தது. அவளின் பயம் அறிந்தவனாக அவன் இதழ் மர்ம்மாய் வளைந்தது “என்ன பார்க்கிற நதி மூன்றாவது கண் பத்தி எனக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கிறியா.? நான் போலீஸ்காரன் நதி நினைவு இருக்கா.?” எனக் கேட்டவன் அவளை ஆழமாக நோக்கினான்.

“இல்லை இது மீடியாவோட சீக்ரெட் மிசன், உங்களுக்கு எப்படித் தெரியும்.?” கேள்வி தாங்கிய விழிகளுடன் தீராவை பார்த்தாள்.

“இது மீடியாவோட சீக்ரெட் இல்லை நதி, உனக்கு வீசப்பட்ட வலை” என அமைதியாய் சொன்னவன் வாகனத்தை நதி வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்தான்.

“அதுக்குள்ள வந்துட்டோமா” எனச் சலித்தபடி இறங்க போனாள்.

“நான் உன்னை இறங்க சொல்லலை நதி” எனத் தீரேந்திரன் சொல்ல,

“என்ன சொல்றீங்க தீரா.?” கோபமாகப் பார்த்து வைத்தாள்.

“நதி நான் இந்தக் கேஸ்ல எல்லாத்தையும் கண்டுபிடிச்சுட்டேன், எனக்குத் தெரிய வேண்டிய விசயங்கள் உன்கிட்ட மட்டும் தான் இருக்கு”

“என்னை சந்தேகப் படுறீங்களா தீரா.?”

“சந்தேகமா.? ச்சீ ச்சீ அதெல்லாம் இல்லை”

“அப்போ நீங்க பேசுறதுக்கு என்ன அர்த்தம் தீரா.?” எனக் கேள்வி கேட்டவளின் விழிகள் கோபத்தைத் தத்தெடுத்தது.

“நீ போன ப்ராஜெக்ட் விசயம் சக்ஸ்ஸ் ஆச்சா.?”

“ஆமா சில ஆதாரங்கள் கிடைச்சுது.? ஆனால் அதுக்குள்ள எனக்கு என்ன நடந்ததுன்னு எனக்கே தெரியலை”

“இப்போ நீ எடுத்த ஆதாரங்கள் எங்கே.?”

“இதோ இதை எடுக்கத் தான் அங்க போனேன் எனத் தன் கையில் பெண்டிரவை காட்டினாள்.”

“ஓகே அப்போ சரளா மேடம்கிட்ட என்ன கொடுத்து வச்சிருந்த.?”

“சரளா மேடம்கிட்ட இருந்த ஆதாரம் அகிலனுக்கு எதிரா இருந்தது, அவன் போதை மருந்து கொடுத்து மயக்கிய பெண்களை அழைத்துச் சென்று, அவர்களை வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டியிருக்கிறான், அதில் சிலருடைய வீடியோக்கள் என்னிடம் இருந்தது, அதை என்னால் ஷார்ட் பிலிமில் ஆட் பண்ண முடியாத அளவுக்குச் சென்சார்ட்டாக இருந்தது, அதனால் தான் சரளா மேடமிடம் கொடுத்து வைத்தேன், என்னிடம் இருந்தால் நிச்சயமாக அதைப் பிடுங்கியிருப்பான் அகிலன்” எனச் சொல்லி முடித்தாள் அகரநதி.

“இப்போ நான் கீழ இறங்காலாமா.? இன்வெஸ்டிகேசன் முடிஞ்சதா ஆஃபிசர்?”

“சரி வா கார்த்தியை பார்க்க போகலாம்”

“என்ன சொல்றீங்க அவன் தான் என்ன நடந்திச்சுன்னு சொல்ல மாட்டேன்றானே” எனச் சலிப்பாய் சொன்னாள்.

“அங்கிள் ஆண்டிகிட்ட சொல்லிட்டு வா நதி, நீ என் கூடச் சேஃபா தான் இருக்கன்னு, வர்றதுக்கு த்ரீ டேஸ் ஆகும்னு சொல்லு”

“என்ன உளறிகிட்டு இருக்கீங்க, உங்க கேஸ் விசயமா நீங்களே விசாரிச்சுகோங்க என்னை எதுக்குக் கூட்டிட்டு போகணும் நினைக்குறீங்க”

“நதி கார்த்திக்கை வெளியே எடுக்கப் போறேன் நீ வர்றீயா.? இல்லையா.?” வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்துக் கேட்டான் தீரா.

“உங்க கையிலையா சட்டம் இருக்கு, நினைச்ச உடனே அவனை வெளிய எடுத்திட்டு வர”

“உன்னோட பத்திரிக்கை உலகத்துக்கு எப்படிச் சில எத்திக்ஸ் இருக்கோ, அதே மாதிரி எங்க டிபார்ட்மென்டுக்கும் சில எத்திக்ஸ் இருக்கு, சில விசயங்களை உன்கிட்ட என்னால ஓப்பனா சொல்ல முடியாது நதி” என அவன் சொல்ல, அவன் சொன்னதைப் போல் தாய் தந்தையிடம் சொல்லிவிட்டு தீராவுடன் கிளம்பியிருந்தாள் அகரநதி.

மத்திய சிறையில் கைதிகள் உடையிலிருந்து வேறு உடைக்கு மாறியிருந்தான் கார்த்திக், அவன் சிறையிலும் அடைத்து வைக்கபடவில்லை

“கார்த்திக்..?” என அழைத்தவள் மறுநொடியே அவனைக் கட்டிக்கொண்டாள் அவனின் சஹி அதி

“சொல்லு கார்த்தி நீ அப்படிச் செய்யலை தானே.? சொல்லுடா வாயை திறந்து பேசேன்டா” எனக் கேவி அழுதாள் அகரநதி.

“ஏய் அதி எமோஷ்னல் ஆகாதேடி, ஒன்னும் இல்லை சரியா” என அவள் விழி நீரை துடைத்து விட்டவன், தீரேந்திரனை ஏறிட்டான்.

“தீரா சார், உங்களை நம்பி தான் நான் வர்றேன்” எனச் சூசகமாகப் பேசினான்.

“செந்தமிழனுக்குத் தேவையான எதோ ஒன்னு நீ மறைச்சு வச்சிருக்க கார்த்தி எங்கன்னு சொன்னால் நம்ம வேலை ஈசி ஆகிரும்” என நிதர்சனம் எடுத்துச் சொன்னான் தீரேந்திரன்.

“நான் செந்தமிழன்கிட்ட பேசணும்” கார்த்திக் கேட்டான்.

“வெயிட் பண்ணுங்க” எனச் சொல்லி செந்தமிழனுக்கு அழைப்பு விடுத்தான் தீரேந்திரன்.

“மிஸ்டர் செந்தமிழன், தீரேந்திரன் பேசுறேன்”

“சொல்லுப்பா தீரேந்திரா.? என்ன விசயத்தைச் சொன்னானா அந்தப் பைய.?”

“அவன் சொல்லுறேன் சொன்னான் சார் ஆனா சில கோரிக்கைகள் வைக்கிறான்.?”

“என்ன வேணுமாம் அவனுக்கு.?”

“அவனை இந்தக் கேஸ்ல இருந்து ரீலிவ் பண்ணணுமாம்”

“அவ்வளவு தானே பண்ணிறேன், ஆனால் அவன் எனக்கு வேண்டியதை கொடுத்தாகணும்”

“மிஸ்டர் செந்தமிழன்” என்ற கார்த்திக்கின் குரல்.

“உங்களுக்காகத் தான் இந்தக் கேஸ்ல சரணடைந்தேன், இப்போ நான் இந்த ஜெயில்ல இருந்து வெளிய வந்தாதான் உங்களோட பொருள் உங்க கைக்கு வந்து சேரும், நான் சொன்னது புரிஞ்சுதா.?” வார்த்தையில் அழுத்தம் கொடுக்க, அன்றே கார்த்திக் குற்றமற்றவன் எனச் சிறையிலிருந்து வெளியே வந்திருந்தான், அவனுக்குப் பதில் வேறு கார்த்தி அங்கு மாற்றம் செய்யபட்டான். எல்லாம் அரசியலில் தான் சாத்தியம், குற்றவாளிகளுக்கு பதில் எளிதில் வேறு ஒருவரை மாற்றுவதும், சிறையிலையே மின்சார வையரை கடித்து தற்கொலை செய்வதும் அறங்கேறும் தற்கொலை கிடங்கு சிறைச்சாலைகள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு ரகசியம் சுற்றிக்கொண்டே இருக்கின்றதே.

    கார்த்திக் மறைக்கும் விஷயம் தான் என்ன? அது தீராவிற்கும் தெரிந்திருக்கிறது ஆனாலும் அகரிடம் அவளுக்கு தெரிந்தவற்றை கேட்டறிவதன் காரணம் தான் என்ன?

    அவருக்காக தான் வழக்கில் சரணடைந்திருப்பதாக சொல்கின்றான் அவருக்கு எதிரான ஆதாரம் இருப்பதாகவும் சொல்கின்றான்.

  2. விறுவிறுன்னு கதை நகருது.