அத்தியாயம் 3 ❤
💞 ” காதலா மீண்டும்
ஜனித்தேன் உன்னால் ” 💞
கார்த்திக் வகை வகையாக தன்னை செல்ஃபி எடுத்துக் கொண்டு இருக்க அவனை நோக்கி சோக முகத்தில் வரும் தமிழை யோசனையுடன் பார்த்தான்.
கார்த்திக் ” என்னாச்சு மச்சி ? “
தமிழ் ” தியாவுக்கு என் மேல லவ் – வே வரலையாம் ” ஏதோ உலகத்தையே வெறுத்தது மாதிரி கூறினான்.
கார்த்திக் அவனைச் சமாதானப்படுத்தும் விதமாக,
” டேய் ! உன் லவ் உண்மையா இருந்தா, கண்டிப்பாக அவ ஒரு நாள் உங்கிட்ட வந்து லவ் சொல்லுவா ! நீ ஃபீல் பண்ணாத குமரா “
தோழனின் தோளில் கை போட்டுக் கொண்டு அவனை இயல்பு நிலைக்கு மாற்றிக் கொண்டு இருந்தான்.முதல் காதல் எல்லோருக்கும் மறக்க முடியாத உணர்வு தான். தமிழுக்கும் அப்படி தான் இருந்தது.ஏமாற்றத்தை அவன் மனம் ஏற்க மறுத்தது.
தமிழ் ” வீட்டுக்குப் போகலாம்டா ” தொண்டை அடைத்தது.
கார்த்திக் ” ஏன் குமரா ? “
தமிழ் ” இல்ல மச்சி. மனசு கொஞ்சம் சரி இல்லை. நாம கிளம்பலாம் “
கார்த்திக் அவனை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்து விட்டு ,
” ஏன இப்ப கப்பல் கவுந்த மாதிரி உக்காந்து இருக்க ? இங்கப் பாரு , நீ போய் புரப்போஸ் பண்ணவுடனே அவ உன்னை லவ் பண்ணிடனும்னு நினைக்கக் கூடாது . பசங்க நாம ஈசியா போய் உன்னை லவ் பண்றேன்னு சொல்லிடுவோம் .ஆனா பொண்ணுங்க அப்படி இல்லை. அவங்களுக்கு லவ் வந்தாலும் மனசுல ஒரு பயம் , பதட்டம் இருக்கும். சீக்கிரம் அவங்க மனசில இருக்க எந்த உணர்வையும் வெளிப்படுத்த மாட்டாங்க. அப்பறம் அவங்களுக்கு நம்ம மேல உடனே நம்பிக்கை வரனும்னும் நினைக்கறது தப்பு.ஃபர்ஸ்ட் தியா கூட பேசும் போது, ” நான் இப்படித்தான் ” அப்படின்ற உன்னோட உண்மையான கேர்க்டரைக் காட்டு. அதுதான் அவங்களும் எதிர்பார்ப்பாங்க.கண்ணியமா நடந்துக்கோ.இப்படி உடைஞ்சு போய் உக்காராத ! புரியுதா ? “
போதனைகளை வழங்கிக் கொண்டு இருக்க, தமிழ் அவனை விழி திறந்து இமைக்க மறந்து பார்த்துக் கொண்டு இருந்தான்.கா
ர்த்திக்,” என்னடா ! முட்டைக் கண்ணா இப்படி முழிச்சுப் பாக்குற? “
தமிழ் ” இல்லடா. லவ் பண்றவன் கூட இப்படி பேச மாட்டான். நீ லவ் பண்ணாமலே இவ்ளோ அழகா பொண்ணுங்களோட உணர்வுகளை மதிச்சுப் பேசுற ? “
கார்த்திக், ” லவ் பண்ணா தான் மத்தவங்களோட உணர்வுகளை மதிச்சுப் பேசனும்னு இல்லை “
என்று புன்னகைத்தான்.
அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண் எழுந்து இவர்களை நோக்கி வந்தாள்.
தமிழ் ” நீ பெண்ணுங்களைப் பத்தி நல்லவிதமாக தானப் பேசுன ! அப்பறம் ஏன் அந்த பொண்ணு இப்படி லுக் விட்டுட்டு வருது ? “
கார்த்திக்கின் காதுகளில் மெதுவாக கூறினான்.
கார்த்திக் பதில் கூறுவதற்குள் அவர்களிடம் ,
“உங்க பேர் என்னனு தெரிஞ்சுக்கலாமா ?”
கார்த்திக்கும், தமிழும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்க்க அந்த பெண் ,” கொஞ்ச நாளாகவே குறிப்பிட்ட ஒரு சிலர் பண்ற தப்பால , மொத்தப் பொண்ணுங்களையும் திட்டிட்டு இருந்தாங்க மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு.நீங்கப் பேசினதைக் கேட்டதுக்கு அப்பறம் நிம்மதியா இருக்கு.அதுனால தான் உங்க பேரைக் கேக்குறேன் “
கார்த்திக் அவளைக் குறுநகையுடன் நோக்கி விட்டு , ” என் பேரு கார்த்திக் ” என்றான்.
அருகில் இருந்த தமிழ் தன் பங்கிற்கு,
” என் பேர் தமிழ்க்குமரன் ” என்க,
அதற்கு அந்த பெண் ” தாங்க்யூ ஃப்ரண்ட்ஸ். நைஸ் டூ மீட் யூ ” என்று தலையசைப்புடன் நகர்ந்தாள்.
கார்த்திக் ” காஃபி ஆர்டர் பண்ணவா ? “
தமிழ் ” பண்ணுடா. எனக்கும் காஃபி குடிக்கனும் போல இருக்கு “
கார்த்திக்கும், தமிழும் காஃபி குடித்துக் கொண்டே சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது கார்த்திக்கின் செல்பேசி ஒலிக்க எடுத்துப் பார்த்தவன் நண்பன் தருணின் எண் தெரிய அட்டெண்ட் செய்து பேசினான்.
கார்த்திக் ” தருண் ! ஏன் அழுகுற மச்சி ? என்ன ஆச்சு? அழுகாம சொல்லு? “
இதைக் கேட்டதும் தமிழ் முகத்தில் வருணுக்கு என்ன ஆயிற்று ? என்ற பயம் பதட்டமாக முகத்தில் தெரிந்தது.
கார்த்திக் “அப்பாவுக்கா ? எப்போ ? நாங்க உடனே வர்றோம் “
அழைப்பைத் துண்டித்தவனிடம்,
கார்த்திக் ” அவனோட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் . அவங்க அம்மா கால் பண்ணாங்களாம்.ஊருக்கு கிளம்பறேன்னு சொன்னான் “
தமிழ் ” அச்சோ ! என்னடா ! இப்போ தான் கொஞ்ச நாள் முன்னாடி வந்து தருணைப் பாத்துட்டு நம்ம கிட்ட கூட நல்லா பேசிட்டுப் போனாரே ! பாவம்டா !எப்ப ஊருக்குப் போறானாம் ? “
கார்த்திக் ” இப்போ இரண்டு மணி ட்ரெய்னுக்குக் கிளம்பறானாம் “
தமிழ் ” அவனைப் பத்தரமா வழி அனுப்பி வைப்போம் ” என்று இவர்களும் தருணுடன் ரயில் நிலையம் செல்ல எண்ணினர்.
தருண் இவர்களின் வகுப்புத் தோழன்.ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டு இருக்கிறான்.அவன் இந்த ஒரு மாதமாக காலமாகத் தான் கார்த்திக் மற்றும் தமிழிடம் தோழமைப் பாராட்டினான்.அவர்களை தருணுக்கு மிகவும் பிடித்துப் போனது.அவ்வப் போது இவர்களுடன் வந்து பேசி விட்டுச் செல்வான்.
இடையில் வருணைப் பார்க்க வந்த அவனது தந்தைக்கும் இவர்களின் நல்ல குணங்கள் பிடித்துப் போயிற்று.
இருவரும் ஹாஸ்டலை அடைந்த போது வருண் தன்னுடைய துணிகளைப் பையில் அடுக்கிக் கொண்டு இருந்தான்.
அவனுடைய அறைக்குள் நுழைந்ததும் , கார்த்திக்கைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பிக்க , கார்த்திக் அவனைத் தேற்றினான்.
” அப்பாவுக்கு ஒன்னும் ஆகாதுடா ! அழாத ! “
தமிழ் அவனுடைய மீதி துணிகளை அடுக்கி முடித்திருக்க, மூவரும் ரயில் நிலையம் கிளம்பினர்.
அந்த மதிய நேரத்தில் , ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருக்க முடிந்த அளவு கூட்டத்தை விலக்கிக் கொண்டு தருணை ரயிலில் ஏற்றினர்.
ரயில் கிளம்ப கார்த்திக், தமிழுடன் பேசிக் கொண்டே நடந்து வர , தெரியாமல் யாரோ ஒரு பெண் மேல் தெரியாமல் மோதி விட்டான்.
கார்த்திக் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்க நிமிர்ந்தான்.
– தொடரும்