Loading

 

அத்தியாயம் 27

இப்போதும் மஹிமாவிடம் வசமாக மாட்டிக் கொண்டோம் என்று தனக்குள்ளேயே முனங்கிக் கொண்டாள் தீக்ஷிதா. 

” ப்ச் ! இவ எதுக்கு தினமும் என் கண்ணுல சிக்கிட்டே இருக்கா  ? நானே கார்த்திக் சஸ்பெண்ட் ஆனது எனனால தான் – னு யாருக்கும் தெரியக் கூடாதுன்னு, பர்ஃபார்மன்ஸ் பண்ணிட்டு இருக்கேன். அதைக் கலைச்சு விட்டு மாதிரி வந்து நிக்கிறா “

என்று மனதினுள் அவளை நிந்தித்துக் கொண்டு, வெளியில் தேர்ந்த நடிப்பைக் காட்டிக் கொண்டும் இருந்தாள் தீக்ஷிதா. 

‘ நேத்து மாதிரியே இன்னைக்கும் அவனைத் தேடிட்டு இருக்கா இந்தப் பொண்ணு. நம்ம என்னடான்னா இவ தான் அவனை மாட்டி விட்டாளோ – ன்னு சந்தேகப்பட்டுட்டு இருக்கோம் ‘

தீக்ஷிதா இவளைக் கண்டும் காணாது போக நினைத்தாலும், 

‘ இவளிடமும் ஒரு நடிப்பைப் போட்டு விடலாம் அப்போது தான் இவளுக்குச் சந்தேகம் வராது ‘ என்று அவளிடம் சென்றாள். 

” மஹிமா ! ஒரே கேள்வியை ,

டெய்லி – யும் கேட்குறாளே  ! அப்படின்னுக் கோபப்படாத ப்ளீஸ் ! கார்த்திக்கைப் பாத்தியா ? முன்னாடியே க்ளாஸூக்குப் போய்ட்டானா  ? “

மஹிமாவிற்கும் ஒன்றும் புரியவில்லை. இவளை நம்புவது கடினமாகத் தான் இருந்தது. 

” இல்லை தீக்ஷிதா. அவனை நான் பார்க்கல “

என்று கூறியவள் உன்னிப்பாக தீக்ஷிதாவின் முகத்தை ஆராய்ந்தாள். 

கள்ளத்தனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அமைதியாக அங்கிருந்து விலகிச் சென்றாள். 

” நல்லா செக் பண்றா ! நம்ம 

ஆக்ட்டிங் – ஐ கண்டுபிடிக்க முடியுமா என்ன ? ” 

தன்னை நினைத்துப் பெருமை பேசிக் கொண்டே , 

” கார்த்திக்  ஃப்ரண்ட்டும் இன்னும் வரலயே  ? “

நோட்டமிட்டவாறே தீக்ஷிதா நின்று விட, 

” நமக்கெதுக்கு இது ! ” என்ற எண்ணப் போக்குடன் மஹிமா சென்று விட்டாள். 

விடுதியில் தனது பையில் இருக்கும் பொருட்களைச் சரிபார்த்த ஸ்ரீதேவி, 

” மஹி சீக்கிரமே கிளம்பி காலேஜ் போய்ட்டா போலயே  ? “

யோசித்துக் கொண்டு இருந்தவள்,

செல்பேசியை ஆராய, 

அரை மணி நேரத்திற்கு முன்பாக மஹிமா ‘ தான் விரைவாக கல்லூரிக்குச் செல்வதைப் பற்றி இவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள். 

‘ அதான நினைச்சேன் ! அவ சொல்லாம கிளம்ப மாட்டாளே ! ‘

திவ்யாவும் கிளம்பித் தயாராகி இருக்க, 

” ஸ்ரீ ! நான் ரெடி. கிளம்பலாம் ” இவளை அழைத்தாள். 

” ஓகே திவ்யா. வா ” 

” நான் வராமல் இருந்தா நீ லேட் ஆக போகலாம்ன்றது , ரூல் இல்லை குமரா ! ” நண்பனைக் கண்டித்தான் கார்த்திக்.

 

குமரன், ” ரூல் இல்லை தான் டா. நீ இல்லாமல், எனக்குப் போகப் பிடிக்கல “

இத்துடன் நிறைய தரம் இதைக் கூறி விட்டான். 

” போய்ட்டு வா டா . உன்னை நம்பி தான் நான் எக்ஸாம்க்குப் ப்ரிபேர் ஆகனும் ” 

இதைச் சொன்னதும் , 

தமிழ்க்குமரனும் சமத்தாக கல்லூரிக்குக் கிளம்பினான். 

” இந்த வருண் என்ன ஆனான் டா  ? அவங்க அப்பா ஹெல்த் எப்படி இருக்கு ? காலேஜ் வருவானா  ? ஒரு இன்ஃபர்மேஷனும் கிடைக்கல. கால் பண்ணிக் கேக்கனும் டா “

” அவனே கூப்பிட்றேன் – னு சொன்னான் டா. எதுக்கும் நாம கூப்பிட்டுப் பார்ப்போம் . நான் போய்ட்டு வரேன் ” 

என்று அவன் சென்று விட,

” ஒரு நாளே தாங்க முடியாது போலயே ! எப்படித்தான் பத்து நாளை சமாளிச்சு , சும்மா இருக்கப் போறேனோ !!!! “

புலம்பல் மயமாகத் தான் இருந்தது அவனுக்கு. 

தமிழ்க் குமரன் உள்ளே நுழைவதைக் கண்டு கொண்ட தீக்ஷிதா, உடனே அவன் புறம் சென்றாள். 

” ஹாய் ப்ரோ ! “

என்று அவனை அழைத்தாள். 

” இந்தப் பொண்ணு அதிசயமா நம்ம கிட்ட பேச வாங்க ” என்று அவளிடம், 

” ஹாய் ” மட்டும் சொன்னான். 

” கார்த்திக் எங்க காணோம்  ? நீங்க மட்டும் வர்றீங்க  ? ” எதுவும் அறியாச் சிறுமி போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள். 

” அவன் பத்து நாள் லீவ் ங்க. ” 

இவளிடம் அவன் சஸ்பெண்ட் ஆனதைக் கூற மனம் வரவில்லை குமரனுக்கு.

அதனால் கார்த்திக் விடுமுறை எடுத்துக் கொண்டான் எனக் கூறினான். 

உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள், ‘அவனை மாட்டி விட்டதே நான் தான் ! இதுல இந்த பையன் வேற காமெடி பண்ணிட்டு இருக்கான்! ‘

“அச்சோ ! பத்து நாள் லீவா ? என்ன ஆச்சு அவருக்கு ? உடம்பு சரியில்லையா ? ரொம்ப முடியலையா ? ” 

” இல்லங்க. அவனுக்கு பர்சனல் வொர்க். அதுனால தான் லீவ். ஹெல்த் பிராப்ளம் லாம் இல்லை. நீங்கள் பதறாதீங்க ”  

” ஓஹோ ! நல்லவேளை சொன்னீங்க. இல்லனா அவரை இன்னைக்கு முழுக்கத் தேடிக்கிட்டே இருந்துருப்பேன் ” 

என்று கூறியவளிடம், 

” பத்து நாளைக்கு அவனைத் தேடாதீங்க. காலேஜ் பக்கமே வர மாட்டான் ” 

” சரிங்க. மொபைல் நம்பராவது குடுங்க. நான் கால் பண்ணிக் பேசிக்கிறேன்”

கேட்டதும் விழி பிதுங்கிப் போனவன், 

” நீங்க அப்போவே அவன்கிட்டயே  கேட்டு இருக்கலாமே ? அவன் சொல்லாமல் என்னால நம்பர் குடுக்க முடியாதே – ங்க “

” நான் முதல்லயே கேட்கலாம்னு தான் இருந்தேன்ங்க. ஆனா எனக்குக் கேட்க நர்வஸாக இருந்துச்சு. அதான் கேட்கல. இப்போ வேற அவர் லீவ் எடுத்துட்டாரு.அட்லீஸ்ட் கால் பண்ணியாச்சும் பேசலாம்னு இருந்தேன். ப்ச்! ” 

தன் மேல் அனுதாபம் ஏற்பட்டால் ஆவது கார்த்திக்கின் செல்பேசி எண்ணைத் தர வாய்ப்புண்டு என்று பாவமாக நின்றாள் தீக்ஷிதா. 

” ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட். பட் சாரி ங்க. அவன்கிட்ட கேட்ட பிறகு நாளைக்குக் கண்டிப்பாக நம்பர் தர்றேன். ” என்று இவன் சொல்லி விட்டு, 

” ஏற்கனவே நான் லேட் – ங்க. க்ளாஸூக்குப் போறேன் ” என்று விலகி நடந்தான். 

 ‘ இவன் இல்லனா , வேற யார் கிட்டயுமே கார்த்திக் நம்பர் இருக்காதா என்ன ? ‘ 

என்று அவர்களுடைய சக தோழன் ஒருவனிடத்தில் கேட்டு , கார்த்திக் உடைய செல் நம்பரைப் பெற்றுக் கொண்டாள். 

இது தமிழ் குமரனுக்குத் தெரியாமல் இருக்கட்டும். கார்த்திக்கிற்கு அழைத்துப் பேசும் போது அவனும் தெரிந்து கொள்ளட்டும் என்று நினைத்தாள். 

மாலை அல்லது இரவு அவனுக்கு அழைத்து ஆறுதல் அளிக்கும் விதமாக பேச வேண்டும் என்று எண்ணினாள். 

🌺🌺🌺🌺🌺🌺

” நீ வர வர காலைல சீக்கிரம் கிளம்பிட்ற மஹிமா.என் கூட காலேஜ் வர்றதுல உனக்கு எதுவும் சங்கடமா? ” ஸ்ரீதேவி கேட்க, 

” என்ன ஸ்ரீ  ! இப்படி கேட்கிற ? எனக்குத் தான் மார்னிங் சீக்கிரம் எழுந்து கிளம்புறது ரொம்ப பிடிச்ச விஷயமாச்சே ! அதுவும் இல்லாம உன்னோட தூக்கத்தைக் கெடுக்க விரும்பலை.அதான் கிளம்பி வந்துட்டேன் உனக்கு மெசேஜ் பண்ணி இருந்தேனே  ? ” 

” மெசேஜ் பாத்தேன் மஹி. ஆனா இனிமேல் நீ தனியா வர்றதா இருந்தால், நான் வேற ரூம் மாத்திட்டுப் போய்டுவேன்.” என்று மிரட்டல் விட, 

” ஸ்ரீ  ! ” கம்மிய குரலில் அழைத்தவளிடம், 

” இதுதான் என்னோட ரிக்வஸ்ட் மஹி. உன்னை கொஞ்சம் தனிமையில் இரு – ன்னு விட்டா , அதையே ஃபாலோவ் பண்ணிட்டு இருக்க. நீ டென்த் வரைக்கும் ரொம்ப சுட்டித்தனம் பண்ற ஸ்டூடண்ட் – ன்னு நீயே ஒரு தடவை சொல்லி இருக்க. அதுக்கப்புறம் லெவன்த் – ல அப்படியே ஆப்போசிட் ஆக இருந்திருக்க ன்னுத் தெரிஞ்சது. அப்போவே உன்னைப் பத்தி எனக்கு அரை குறையா தான் தெரியும். இப்போவும் இதையே செஞ்சிட்டு இருந்தா என்னப் பண்றது ? “

” சாரி ஸ்ரீ ! ரொம்ப டிஸ்டர்ப்ட் ஆக இருக்கேன். அதான் எதுவுமே பிடிக்க மாட்டேங்குது ” என்று கூற, 

” அம்மாகிட்ட ஃபோன் பண்ணி பேசலயா இன்னும்  ? “

” பேசல ” தாயின் ஞாபகம் அடிக்கடி வந்து கொண்டே தான் இருக்கிறது அவளுக்கு. 

” பேசிடு மஹி. அவங்களும் உன் ஃபோன் கால் – க்காக வெய்ட் பண்ணுவாங்க தான ? ” 

” ஆமா ஸ்ரீ. இன்னைக்கு அவங்க கிட்ட பேசியே ஆகனும்”

“அப்பறம் நான் சொன்னதும் ஞாபகத்துல இருக்கட்டும் ” என்று கறாராக கூறி விட்டாள். 

இதைக் கேட்டுக் கொண்டிருந்த திவ்யா, 

” சண்டே வெளியே சாப்பிடப் போகவும் வந்துரு மஹிமா ” என்றாள். 

” வர்றேன் திவ்யா . பாடத்தை கவனி ” என்றாள் மஹிமா. 

முந்தைய நாள் இரவு திவ்யா பேசியதைக் கேட்டாலும், மஹிமா அவளிடம் பேதமின்றி புன்னகையுடன் பதிலளித்ததைப் பார்க்கவும் ஸ்ரீ க்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனாலும், திவ்யாவின் இந்தத் துடுக்குத்தனமானப் பேச்சை குறைத்துக் கொள் என்று  வலியுறுத்த நினைத்தாள்.

 – தொடரும் 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்