Loading

ஹாய் டியர் ஃப்ரெண்ட்ஸ்…

After long time ud potuten. Katha maranthu pochu nu feel பண்றவங்க பிளீஸ் முன்னாடி uds படிச்சுட்டு இத படிங்க drs… Regular aa ilanalum wkly 3 uds poda try panen. ❤️ Happy reading 🤩

அத்தியாயம் 16:

வினோதினியின் கூற்றை உள்வாங்கவே சில நொடிகள் பிடித்தது தீரஜ் ஆத்ரேயனுக்கு.

எதற்காக தீரன் இவளிடம், நான் அவளை திருமணம் செய்து கொள்வதாக கூறினான்? எனக் குழம்பியவன், கண்ணை இறுக மூடி சிந்தித்து விட்டு, உணர்ச்சித் துடைத்த முகத்துடன் விழி திறந்தான்.

அவன் அமைதியை தனக்கு சாதகமாக பயன்படுத்திய வினோதினி,

“உன் பிரதர்கிட்ட என்னை கல்யாணம் செஞ்சுப்பேன்னு சொல்லிட்டு, இப்ப மாத்தி பேசுற ரேயன். அவன் உயிரோட வர முடியாதுன்னு இப்படி நாடகம் ஆடுறியா?” என்றே தைரியத்தை வரவழைத்து பொரிந்தாள்.

அவனுக்கு மட்டும் நெற்றிக்கண் இருந்திருந்தால் அவளை அங்கேயே எரித்திருப்பான்.

“இதே கேள்வியை நானும் உன்கிட்ட கேட்கலாம் வினோதினி. அவன் செத்துப்போய்ட்ட தைரியத்துல, பொய்யை உண்மையாக்கலாம்ன்னு பாத்தியா. ஏற்கனவே நானும் நீயும் காதலிச்சு இருக்கோம்ன்னு உளறி இருக்க. இப்ப இதை உண்மைன்னு நான் எப்படி நம்புறது?” கர்ஜனையுடன் தீரஜ் கேட்க, ஒரு கணம் அதிர்ந்த வினோதினி, பின் சட்டென தன்னை மீட்டுக் கொண்டாள்.

“ஆமா நீயும் நானும் லவ் பண்ணுனோம்ன்னு நான் பொய் சொன்னேன் தான். ஆனா, தீரன் சொன்னது உண்மை. அதை என்னால நிரூபிக்கவும் முடியும்.” என தீர்க்கமாக கூறியவளை கூர்ந்து பார்த்தான்.

சஹஸ்ரா இவர்களின் வாக்குவாதத்தை புரியாமல் பார்த்திருந்தாள். தீரஜ் அவளை விரும்பவே இல்லை என்ற உண்மை உயிர் வரை ஊடுருவி ஒரு இதத்தை தந்ததை அவளால் தடுக்க இயலவில்லை. அதே நேரம், தன் தமையனிடம் அவன் எதற்காக வினோதினியை நிச்சயம் செய்ய ஒப்புக்கொண்டான் என்ற கேள்விக்கும் விடை புரியவில்லை.

மீண்டும் வினோதினி பொய்யுறைக்கிறாளோ என்ற சந்தேகம் எழுந்தாலும், அவள் நிரூபிக்க முடியும் எனக் கூறியது உறுத்தியது.

சொன்னது போன்றே, வினோதினி அவளது கைபேசியை எடுத்து, சில நாட்களுக்கு முன்பு தீரனிடம் பேசிய பதிவு செய்யப்பட்ட உரையாடலை இருவருக்கும் ஒலித்து காண்பித்தாள்.

அதில் இருந்த சாரம்சம் இது தான்.

தீரஜ் திருமணத்திற்கு சம்மதம் உரைத்து விட்டதாகவும், இந்தியா திரும்பும்  நாளிலேயே நிச்சயத்தை வைத்துக் கொள்ளலாம் எனக் கூறியதாகவும், வேலைப்பளு காரணமாக வினோதினியை தொடர்பு கொள்ள இயலாமல் போனதால், அவனையே வினோதினியிடம் பேச சொன்னதாகவும் தீரனின் குரல் ஆணித்தரமாக ஒலித்தது.

“உனக்கு என் மேல எந்த இன்டர்ஸ்டும் இல்லாம தான், அவன்கிட்ட என்கேஜ்மெண்ட்க்கு ஓகே சொன்னியா?”  வினோதினி காட்டமாக கேட்க, அவன் அசையாமல் நின்றான்.

“சொல்லு ரேயன்… இப்ப என்ன சொல்ற? உன் பிரதர் உயிரோட இல்லாததுனாள இதுல அவரு பேசுனது பொய்ன்னு சொல்ல போறியா? என அவள் மீண்டும் சாட, உள்ளங்கையை இறுக்கி மூடிக் கொண்ட தீரஜ், சஹஸ்ராவை அழுத்தமாக ஏறிட்டான்.

தீரன் குரலைக் கேட்டதும் சஹஸ்ராவிற்கு ஒரு வித குற்ற உணர்வு ஆர்ப்பரிக்க, கூடவே இத்தனை நேரம் உணர்ந்த இதம் இடம் தெரியாமல் தொலைந்து போனது.

‘ஏமாத்துக்காரன்… எதுக்காக இப்படி டபிள் கேம் ஆடி இருக்கான். இவனுக்கு ஏன் என்மேல இவளோ வன்மம். ச்சே!’ என முகத்தை சுளித்தவளின் பாவனைகளை அச்சு பிசகாமல் படித்த தீரஜ், அவள் மீது கொண்ட பார்வையை மட்டும் மாற்றினான் இல்லை.

அப்பார்வை அவளுக்கு கோபத்தை கிளற, “உனக்கு மனசாட்சியே இல்லையா? அதான் இவளை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டீல. அப்பறம் எதுக்குடா உனக்கு எல்லாம் ஞாபகம் வந்தும் என்கிட்ட சொல்லாம மறைச்ச?” ஆதங்கத்துடன் சஹஸ்ரா கேட்க, அவனது ஒரு புருவம் மட்டும் ஏளனமாக உயர்ந்து வளைந்தது.

‘உனக்கு ஏனென்று தெரியாதா?’ என்ற பதில் ஆடவனின் சிறு அசைவில் வெளிப்பட, பெண்ணவளின் முகம் சிறுத்தது.

‘என்னமோ என்னை உருகி உருகி காதலிச்ச மாதிரி, இந்த பார்வையை வேற அப்ப அப்ப பாக்குறான்.’ எனக் கடுகடுத்தவளுக்கு, பற்றிக் கொண்டு வந்தது.

தங்கையின் சினத்தில் வினோதினிக்கு நிம்மதி பிறந்தாலும், அவள் மீதான தீரஜின் உரிமைப் பார்வை எரிச்சலைக் கொடுத்தது. 

அதனைக் காட்டும் விதமாக, “அதெப்படி சஹா உன்ன விட முடியும்? ஏற்கனவே, நீ செய்ற பிசினஸ் மேல ரேயனுக்கு ஒரு கண்ணு. தீரன் இருக்கும் போது, அவருகிட்டயே உன் பிசினஸை டேக் ஓவர் பண்றது பத்தி பேசி இருக்காரு. இதையும் தீரன் தான் எனக்கு சொன்னாரு. அது உண்மையா பொய்யான்னு நீயே கேளு…” என்றவளின் இதழ்களில் கேலி நகை.

இதனைக் கேட்டதும், சஹஸ்ராவிற்கு ஆத்திரம் பொங்கியது. என்னதான், தொழில் சுமாராக நடந்தாலும், அது அவள் தந்தையால் பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்டது. சரியாக வழி நடத்தினால், லட்சக் கணக்கில் லாபமும் வரும். தீரன் இருக்கும் போதே, அந்த மாற்றத்தை கண்கூடாகக் கண்டாள்.

ஆனால், இதெல்லாம் எதற்காக? ஏன் தன்னை இவன் சுழலில் சிக்க வைத்துள்ளான்…? என்ற கேள்விகளை தனக்குள் கேட்டுக் கொண்டாலும், விடை புரியவில்லை.

தனக்குள்ளேயே கேட்டுக்கொண்ட கேள்விகளை எல்லாம் எதிரில் இருப்பவனிடம் கேட்க மனம் வரவில்லை. பிடிக்கவும் இல்லை.

இந்த குற்றச் சாட்டிற்கெல்லாம் அசராதவன் போல, அசட்டையாக பார்த்த தீரஜ், வினோதினியின் கூற்றுகளை ஆமோதிப்பது போல, தோளைக் குலுக்கி விட்டு நகர்ந்தான்.

சஹஸ்ராவிற்கு தான் அழுகை முட்டியது. சமாளிப்பதற்காகவாவது அவள் கூறுவது பொய்யென உரைப்பான் என ஒரு நொடி எதிர்பார்த்தவளுக்கு சப்பென ஆனது.

இத்தனை பட்டும், மீண்டும் மீண்டும் அவனிடமே உருகி நிற்கும் மனதை எதை கொண்டு அடிப்பது என்று புரியவில்லை அவளுக்கு. இந்த அளவு அவளுக்குள் ஆழமாக இறங்கி இருப்பவனை வெளியில் எறிந்து விடும் வித்தையும் தெரியவில்லை.

வெறுப்பின் உட்சத்தில் அவளுக்கு நாட்கள் நகர, அதற்கு நேர்மாறாக, இயல்புடன் வலம் வந்தான் தீரஜ்.

அன்று சஹஸ்ராவின் அலுவலகத்திற்கு வந்தவன், அனுமதி கேளாமல் அவள் அறைக்குள் நுழைந்தான்.

வேலையில் கவனமாக இருந்தவள், நிமிர்ந்து அவனை முறைத்து, “கதவை தட்டிட்டு வரணும்ன்ற மேனர்ஸ் தெரியாதா?” என காட்டமாகக் கூற,

அவள் முன்னே அதிகாரமாக அமர்ந்தவன், “மேனர்ஸ் தெரியும் மிஸஸ் சஹஸ்ரா தீரஜ். ஆனா, அத இங்க யூஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்லையே!” என்று விழியுயர்த்தியதில் அவள் ஏனென்று பார்த்தாள்.

“நான் இந்த கம்பெனியோட பார்ட்னர், சோ இங்க வர்றதுக்கு உன் பெர்மிஷன் தேவை இல்ல. உனக்கும் சேர்த்து பார்ட்னர் ஆனதுனால உன் லைஃப்க்குள்ள வரவும் உன் பெர்மிஷன் தேவை இல்ல…” என்றவன் கண் சிமிட்டிட, கோபத்தை அடக்குவது தான் அவளுக்கு பெரும்பாடாக இருந்தது.

“இப்ப எதுக்கு இங்க வந்து இருக்க?” அடக்கப்பட்ட சினத்துடன் அவள் வினவ,

“இங்க எல்லா இடத்துலயும் சிசிடிவி இருக்கா மிசஸ் சஹஸ்ரா தீ…” என ஆரம்பிக்கும் போதே, அவனை தடுத்தாள்.

“போதும் ஒவ்வொரு தடவையும் என் பேரை ஏலம் விடாத.” என்றாள் எரிச்சலாக.

“ப்ச்… ப்ச்” என தலையாட்டி மறுத்தவன், “ஒவ்வொரு தடவையும் நான் சொன்னாவாவது ரியாலிட்டி இதான்னு உன் குட்டி மண்டைக்குள்ள ஏறும்ல பிரின்சஸ்… அதான், உன் பேருக்கு பின்னாடி வர வேண்டிய உரிமையான பேரை அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டியதா இருக்கு.” என்று குறும்பாக சிரித்தான்.

பதில் கூற பிடிக்காமல், முகத்தில் எரிச்சலை தேக்கியவளிடம், “கமிங் டூ த பாய்ண்ட். நான் கேட்டதுக்கு பதில்…?” என நினைவு படுத்த,

“தேவ் ரூம், கேன்டீன் தவிர எல்லா இடத்துலயும் கேமரா இருக்கு.” என்றாள் பட்டும் படாமல்.

சிறிதாக முளைத்த தாடியை தடவியவன், :ஓகே… இன்னைக்கே ரெண்டு இடத்துலயும் கேமரா ஃபிக்ஸ் பண்ண சொல்றேன்.: என்னும் போதே, நிக்கி உள்ளே வந்து, “எல்லா இடத்துலயும் செக் பண்ணிட்டேன் தீரஜ். பார்க்கிங்ல கேமரா இல்ல.” என்றதும், தீரஜின் பார்வை அனலாக பாவையை சுட்டது.

“நான் கேட்கும் போது ஏன் சொல்லல?” அவன் முறைப்பாக கேட்க,

‘ஆமா பெரிய நக்கீரர் நெற்றிக்கண்ணை திறக்குறாரு…’ என அவனுக்கு கேட்கும் வண்ணம் முணுமுணுத்தவள், “இப்ப எதுக்கு எல்லா இடத்துலயும் கேமரா?” என்றாள் கடுப்பாக.

அப்போது நிக்கோலஸ், “மச்சி இந்த ரூம்லயும் கேமரா இல்ல” என சுற்றி முற்றி பார்த்து கூறி விட்டு சஹஸ்ராவை பார்க்க, அவளோ பார்வையாலேயே அவனை எரித்துக் கொண்டிருந்தாள்.

அவளைக் கண்டு அசட்டு சிரிப்பை உதித்தவன், “இங்க கேமரா இருந்தா என்ன இல்லைன்னா என்ன… ஒரு ஃபுளோல சொன்னேன் சஹா…” என்றதில்,

“உங்க பாஸ்க்கும் நீங்க உண்மையா இருக்கல. தங்கச்சிக்கும் நல்ல அண்ணனா இருக்கல. இப்போ இந்த ப்ராடுக்கு இவ்ளோ பெர்ஃபக்ட்டா வேலை பாக்குறீங்கள்ல?” கண்ணை சுருக்கி சஹஸ்ரா கோபத்தை பொழிய, நிக்கியின் முகம் சிறுத்து விட்டது.

பொங்கி எழுந்த சீற்றத்தை உள்ளங்கையை மடக்கி அடக்கிய தீரஜ், நக்கல் தொனியை மாற்றாமல், “எல்லாரும் எல்லாருக்கும் உண்மையா இருக்க முடியாது மிஸஸ் சஹஸ்ரா தீரஜ். நீ கூட தான் உண்மையா இல்ல. ஆதுவை அக்ரிமெண்ட் மேரேஜ் பண்ணிட்டு, பிடிச்சு கல்யாணம் பண்ணுனதா உன் வீட்டையும் உன் பிரெண்டையும் ஏமாத்தி இருக்க.நம்ம லவ் மேரேஜ் பண்ணுனோம்ன்னு சொல்லி ஆதுன்னு நினைச்சு என்னை ஏமாத்தி இருக்க.

இப்போ, இதான் நிஜம்ன்னு புருஞ்சும் அதை ஏத்துக்காம, முடிஞ்சு போன அக்ரிமெண்ட் மேரேஜையும் ஆதுவையும் மனசுல வச்சுக்கிட்டு, என்னை அவாய்ட் பண்ணி ஏமாத்துற. இதெல்லாம் நான் கேட்டுக்கிட்டா இருக்கேன்…” என தெள்ளந்தெளிவாக வார்த்தைகளை அள்ளி வீசினான்.

“டேய்…” நிக்கி அவனை அதட்டலாக நிறுத்த, அதனை கண்டுகொள்ளாத தீரஜ், “இங்க எல்லா இடத்துலயும் கேமரா ஃபிக்ஸ் பண்ணனும் இந்த ரூமையும் சேர்த்து. கோ அஹெட்!” என உத்தரவிட, அவனுக்குத் தான் சங்கடமாகி விட்டது.

சஹஸ்ரா கண்ணில் நீர் தேங்க அமர்ந்திருந்த விதம் வேறு மனதை பிசைந்தாலும், நண்பனை மீறி ஒன்றும் செய்ய இயலாத நிலை. அதில் அவன் வெளியில் சென்று விட, சஹஸ்ராவிற்கு தான் கண்ணீரை அடக்க இயலவில்லை.

முதலில் சொன்ன விஷயம் கூட சரி தான். ஆனால், அவனிடம் ஏன் காதல் திருமணம் செய்தோம் என கூறினோம் என்று இன்றளவும் அவளுக்கு புரியவில்லை. அவளின் எண்ணமெல்லாம், அவன் உடல் நிலையில் தானே இருந்தது. அதனை கூறினால், நிச்சயம் புரிந்து கொள்ள மாட்டான்.

இதையும் கூட ஜீரணித்துக் கொள்ள முடிந்தவளால், இறுதியாக அவன் கூறியதை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.

இன்னும் என் மனதில் தீரனா? தீரனென எண்ணி இவனுடன் வாழ்ந்திருந்தாலும், தன்னை இந்நிலைக்கு தள்ளியது இவன் தானே! முதலிலேயே உண்மையை கூறி இருந்தாலேனும் சூழ்நிலையை புரிந்து கொண்டு, காதலை காட்டி இருக்கலாம். ஆனால்… என தனக்குள் மருகும் போதே, சுள்ளென ஓர் உண்மை சுட்டது.

காதலா? இவன் மீதா? அப்படியா நான் நினைத்தேன். தீரனை திருமணம் செய்து விட்டு, இவனை காதலிக்கும் மனதை என்ன செய்து அடக்குவது. உண்மையை முன்னமே கூறி இருந்தால் அவனை ஏற்று இருப்பேனா? என்றே குழம்பித் தீர்த்தவளுக்கு, அவன் முன் அமரக் கூட பிடிக்கவில்லை. கண்ணீரை மறைத்துக் கொண்டு எழுந்தவள்,

“என் ரூம்ல கேமரா ஃபிக்ஸ் பண்ண கூடாது…” என சிறிய குரலில் கூறி விட்டு அகன்று விட, தீரஜ் அவள் செல்லும் திசையையே பார்த்திருந்தான்.

சிசிடிவி கேமராவை பொருத்தும் பொருட்டு தேவிகாவின் அறைக்கு ஆட்களை அழைத்து விளக்கம் கூறி அனுப்பி விட்ட நிக்கோலஸை புரியாமல் ஏறிட்டாள் தேவிகா.

அவன் விவரம் கூறியதும், சற்று முறைத்தவள், “ஏன் இப்ப திடீர்ன்னு கேமரா பிக்ஸ் பண்ணனும்? எல்லாம் கரெக்ட் – ஆ தான போயிட்டு இருக்கு” என்றாள்.

“கரெக்ட் – ஆ தான் போகுது. ஆனா, இங்க உப்புக்கு சப்பாணியா வேலை பாக்காம நிறைய பேர் சுத்துறதா உளவு செய்தி பரவுது. அதான், அதெல்லாம் யாருன்னு கண்டுபிடிக்க இந்த வழியை கண்டுபிடிச்சு இருக்கோம்” என்று நக்கலாக கூறியதில், இன்னும் பாவையின் விழிகள் கோபத்தில் சுருங்கியது.

“மூஞ்சியும் மொகரையும் பாரு!” என சிலுப்பிக்கொண்டு எழுந்தவளிடம், “உன் பிரெண்டு அக்ரிமெண்ட் மேரேஜ் தான் பண்ணான்னு இப்பவாவது புருஞ்சுதா இல்லையா?” என மீண்டும் அவளை சீண்ட,

“எல்லாம் புரிஞ்சுது. ஆனா, அதுக்காக நீங்க பண்ணுனதை சரின்னு என்னால ஒத்துக்க முடியாது. அதுவும் தீரஜ் பத்தி நாங்க கேள்விப்பட்டது எதுவுமே சரியா இல்ல. உன் தங்கச்சியா இருந்தா இப்படி பண்ணிருப்பியா?” காட்டத்துடன் கேட்டாள் தேவிகா.

“என் தங்கச்சியா நினைச்சதுனால தான் இப்படி பண்ணுனேன் தேவிகா. மைண்ட் யுவர் வர்டஸ்!” என்றான் கோபத்தை அடக்கியபடி.

“ஓ! உன் கூட பிறந்த தங்கச்சியா இருந்தாலும் அந்த பொறுக்கிக்கு கல்யாணம் பண்ணி வச்சுருப்ப அப்படி தான?” எனப் பல்லைக்கடிக்க, அவனை மீறி அவளை அடித்திருந்தான் நிக்கோலஸ்.

“அவனை பத்தி இன்னொரு வார்த்தை தப்பா பேசுன, அடிச்சு பல்லை பேத்துருவேன்.” கோபத்தில் பொறிந்தவன், விறுவிறுவென வெளியில் செல்ல, அவளோ வலியில் கன்னத்தை பற்றியபடி திகைத்து நின்றாள்.

அன்று இதே கன்னத்தில் தானே முத்தமிட்டான்… என கசப்பாக எண்ணினாலும், அவனது கோபம் வலியை தந்தது.

வெளியில் சென்ற வேகத்தில் அவளிடம் வந்திருந்தான் நிக்கோலஸ். அவனையே உதடு பிதுங்க பார்த்திருந்தவளை, யோசியாமல் அணைத்திருந்தவன், “சாரி தேவ். எக்ஸ்ட்ரீம்லி சாரி.” என்றான் உணர்ந்து.

அவனை வெடுக்கென தள்ளி விட்டவள், “என்னடா நினைச்சுட்டு இருக்க நீ? உன் இஷ்டத்துக்கு அடிக்கிற உன் இஷ்டத்துக்கு முத்தம் குடுக்குற உன் இஷ்டத்துக்கு கட்டிப்பிடிக்கிற…? என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது. ம்ம்?” என கடுப்பாக கேட்க,

அவளை மேலும் கீழும் பார்வையால் அளந்தவன், “நைஸ் ஃபிகர் மாதிரி தெரியுது.” என்றதில், அவள் மேலும் முறைத்தாள்.

“கூல் கூல்… அடிக்கிற கை தான் அணைக்கும்ன்னு நீ கேள்விப்பட்டது இல்லையா தேவ்…” என மீண்டும் குறும்பாக கூற, “ஓ அப்டியா?” என்றவள், அவன் கன்னத்தில் அடித்து விட்டு, “இப்ப நான் அடிச்சுட்டேன். இதே கை அணைக்குமா என்ன?” என்றாள் இளக்காரமாக.

“கண்டிப்பா அணைக்குமே!” என்றவன், அவள் கண் இமைக்கும் நேரம், அவளது கரங்களை பற்றி அவன் மீது பூமாலை ஆக்கி இருந்தான். ஒரு நொடி திடுக்கிட்டவளுக்கு, அவனது அருகாமை இதம் தந்தாலும் கோபமும் தந்தது.

அதில் பட்டென நகர்ந்தவள், ஆதங்கத்துடன் அவனைப் பார்க்க, அப்பார்வையை தாங்க இயலாதவன், பெருமூச்சுடன் “நான் சொல்றதை ஒரு அஞ்சு நிமிஷம் பொறுமையா கேளு…” என்று விட்டு, சில விஷயங்களை பகிர, அவளோ பேந்த பேந்த விழித்தாள்.

நாட்கள் வேக வேகமாக கரையத் தொடங்கிட, தீரஜிற்கும் சஹஸ்ராவிற்கும் இடையேயான மௌனமும் கோபமும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. அதன் பிறகு, தீரஜும் அவளிடம் பேச்சு வார்த்தை வைத்துக்கொள்ளவில்லை.

வெகு அமைதியுடன் நாட்கள் நகர, அவள் அத்தனை தூரம் கூறியும் அவளது அறையில் கேமரா வைத்ததில் எரிச்சலுற்றாள்.

அலுவலகத்தில் அவனைக் காண இயலாததால், அன்று இரவு வீட்டிற்கு வந்தவனிடம், “நான் தான் கேமரா ஃபிக்ஸ் பண்ண வேணாம்ன்னு சொன்னன்ல அப்பறமும் ஏன் பண்ணுன?” என முறைப்பாக கேட்க,

அவளை கண்டுகொள்ளாமல், அலைபேசியில் கவனமாக இருந்தவன், “உன் ரூம்ல இம்பார்ட்டண்ட் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் இருக்கு. நீ அதை எடுத்து பாதி விலைக்கு வித்துட்டா.” என அசட்டையாக கூற, கடுகடுப்புடன் அடுக்களைக்கு வந்து விட்டாள்.

‘இவன்கிட்ட போய் கேட்ட என் புத்தியை தான் செருப்பால அடிக்கணும்’ என தன் தலையில் தானே அடித்துக் கொண்டாள்.

அப்போதே நேரம் நள்ளிரவை கடந்திருந்தது. விளக்குகளை அணைத்து விட்டு, மாடிக்கு செல்ல எத்தனித்தவளின் பின் நிழலாக ஏதோ நிற்பது போன்ற பிரம்மை.  

நொடியில் வியர்த்து கைகள் நடுங்கத் தொடங்கி விட்டது அவளுக்கு. அந்நிழல் இன்னும் நெருங்குவது போல தோன்ற, பயத்தில் “தீரா…” எனக் கத்தினாள்.

அவளை மேலும் கத்த விடாமல், அவ்வுருவம் அவள் வாயை பொத்திக் கொள்ள, சஹஸ்ராவின் சத்தம் கேட்டு, விருட்டென கீழிறங்கி வந்தான் தீரஜ்.

அங்கு ஒருவன் அவளைப் பிடித்திருப்பதோடு கையில் கத்தி வைத்திருப்பதையும் கண்டு அதிர்ந்தவன், அவனை தடுக்க செல்ல, தீரஜை கண்டுகொண்டவனோ அவசரமாக, சஹஸ்ராவின் வயிற்றில் கத்தியை சொருக எத்தனித்தான்.

அதில் சஹஸ்ரா அரண்டு விட, தீரஜ் புயலாக அவனைத் தடுத்து, சஹஸ்ராவை அவன் புறம் இழுத்திருந்தான்.

“யாருடா நீ?” என கோபத்தில் நான்கு அறை அறைந்த தீரஜ், முகத்தை மூடி இருந்தவனின் முகமூடியை கிழிக்க போக, அவனோ அக்கத்தியை வைத்து அவனைத் தாக்க சென்றான். அதனையும் இலாவகமாக தடுத்தவன், சில நொடிகளுக்கு பிறகு,  முகமூடியை எடுத்து விட, அவனைக் கண்டு திகைத்தான். சஹஸ்ராவும் தான்.

தன்னைக் கண்டுகொண்டதில், அவன் யோசியாமல் அங்கிருந்து தப்பித்திருக்க, சஹஸ்ராவோ இன்னும் அதிர்ச்சி மீளாமல், வயிற்றைப் பற்றிக்கொண்டு, “இவன்… இவன்… தீரனோட பிரெண்டு தான. அன்னைக்கு கூட உன்னை அட்டேக் பண்ண ட்ரை பண்ணுனானே…” எனக் கேட்டாள் எச்சிலை விழுங்கியபடி.

“ம்ம்…” என்ற தீரஜ், ‘இவனை என்ன தான் பண்றதோ!’ என எரிச்சலாக எண்ணி விட்டு, சஹஸ்ராவைக் காண அவளோ இன்னும் வயிற்றைப் பிடித்தபடிதான் நின்றாள்.

அதில் பதறியவன், “உனக்கு அடி எதுவும் படலைல சஹி.” என வயிற்றில் பதிந்திருந்த அவளது கையைப் பற்ற,
பயத்தில் இருந்தவளும், “ம்ம்ஹும்” என தலையாட்டி விட்டு, வயிற்றை தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டாள்.

“என்னடி ஆச்சு? ஏன் இப்படி ஷிவர் ஆகுற. கத்தி படல தான?” எனக் குழப்பத்துடன் கேட்டவனிடம், “இல்ல…” என்று மறுப்பாக தலையசைத்தாலும் அவனுக்கு நிலை கொள்ளவில்லை.

அவள் கையை எடுத்து விட்டு, அவனே வயிற்றை தடவிப் பார்த்துக் கொண்டான் சற்றே அழுத்தமாக.

அதில் பின்னால் நகர்ந்தவள், “என்ன பண்ற?” எனத் தடுமாற்றத்துடன் கேட்க, “நீ தானடி கத்தி குத்து பட்டவ மாதிரி பயந்த. அதான் என்னன்னு பார்த்தேன்.” என்றவனுக்கு அவளுக்கு அடிபடவில்லை என்றதும் தான் நிம்மதி பிறந்தது.

ஆனால், வெகு நாள் கழித்து ஏற்பட்ட நெருக்கம், அவனது குறும்பை மீட்டிருக்க, “கொஞ்சம் வெய்ட் போட்டுட்டியோ…” என கிண்டலாக கேட்டபடி, மீண்டும் வயிற்றுடன் சேர்ந்து இடையையும் தழுவ, அவள் உதட்டைக் கடித்து கொண்டு அவன் கையை தள்ளி விட முயற்சி செய்தாள்.

அவளது மற்றொரு கை தானாக அவளது வயிற்றை தொட்டுப் பார்த்துக் கொள்ள, சில நொடிகளை அவளை கூர்மையாகப் பார்த்தவன், இறுகிய குரலுடன், “ஆர் யூ ப்ரெக்னன்ட்?” எனக் கேட்டான்.

அவளோ அமைதியையே பதிலாக தர, கோபத்தை அடக்க இயலாதவன், அவளது தாடையை பற்றி நிமிர்த்தி “சொல்லுடி உன்ன தான் கேக்குறேன்.” என்றான் கர்ஜனையுடன்.

அவன் முகத்தில் கண்ட சீறலைக் கண்டு அவளுக்குள் உதறல் எடுக்க, தலையை ஆமோதிப்பாக ஆட்டினாள்.

சற்றே திகைத்தவன், “எப்போ தெரியும்?” என உணர்வுகளின்றி கேட்க, “மூணு மாசம் ஆச்சு” என்றாள் சுதியற்று.

“மூணு மாசமா? என்கிட்ட ஏண்டி சொல்லல?” தவிப்புடன் கேட்டவனுக்கு, இத்தனை நாட்களாக மறைத்து விட்டாளே என ஆதங்கமாக இருந்தது.

அவனை நிமிர்ந்து நிதானமாக பார்த்தவள், “உங்கிட்ட நான் ஏன் சொல்லணும். தீரன்னு நினைச்சு தான உன் கூட வாழ்ந்தேன். அப்போ என் மனசுல இருக்குற, செத்துப்போன அவன்கிட்டயே சொல்லிக்கிறேன்.” என்றாள் இன்னும் அன்று தீரஜ் பேசியதை மனதில் வைத்து.

அவனால் கோபத்தையும் வெறியையும் அடக்க இயலவில்லை. கண்கள் சிவந்து, முகம் ரௌத்திரத்தில் ஜொலிக்க, அவளை அடிக்க கை ஓங்கியவன் அப்படியே நிறுத்தி விட்டான்.

சாதாரணமாகவே அவளைக் காயப்படுத்த விரும்பாதவன், இப்போது தன்னுயிரை அல்லவா சுமந்து கொண்டிருக்கிறாள்… ஆனால், அதனை மூன்றாம் மனிதன் போல தன்னை கேட்க வைத்த விதியை எண்ணி மனம் வலித்தது. அவன் வலியை அவளும் உணரும் நாள் என்று வருமோ!

யாரோ இவன்(ள்)
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
30
+1
83
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்