Loading

10.🌺🌺 தாழம்பூவே வாசம் வீசு🌺🌺

இரவு பதினொன்றரை  மணிக்குவீட்டிற்கு வந்தவன் கை,  கால் முகம் கழுவிக்கொண்டு உடைமாற்றி வந்ததும் அவளை கட்டி அணைத்து அவளது நெற்றியில் முத்தமிட்டான். 

வீட்டிலிருக்க போரடிக்குது இல்ல என்றான். ஹாசினிமா நாளைக்கு ஃபுல் டே  உன் கூட தான் இருக்கப் போறேன் என்று கூறினான்  உண்மையாவா என ஆமாண்டா என்றான்.

இருவரும் தங்களது அறைக்கு வந்தனர். வந்த பிறகு ஜீவா  ஒரு விஷயம்என  சொல்லுடா என்று கேட்க சொல்லுடா என்ன வேண்டும் என்று அவளை அமரவைத்து அவனது மடியில் படுத்துக் கொண்டான்.

அவனது தலையை கோதிக்கொண்டே  இங்க வேண்டாம்  ஜீவா ஹாசினிக்குப் பிடித்த இடம் என்பதால் தானே  இங்க வந்தோம்  என்று கூறினான்.

எனக்கு இங்க ரொம்ப பிடிக்கும்  அப்ப  உன்னோட ஞாபகம் வரும்போதெல்லாம் இங்கே ஓடி வருவேன் ஜீவா,  அதனாலேயே இந்த கிராமம் பிடிச்சது இப்பதான் நீ என் கூட இருக்கிற அப்புறம் என்ன என்றாள்.

அவள் தான் கூட இல்லை என்பதை  நினைத்து  ஏங்குகிறாள் என்று உணர்ந்தவன் அவளது  மடியில் இருந்து எழுந்து அவளை அழைத்து தனது மடியில் அமர வைத்துக் கொண்டான்.

கூட இல்லாது ரொம்ப பீல் பண்றியாடா ?   என்று கேட்டான் ஜீவா.

  ரொமான்ஸ்  பண்ணலாம் உனக்கு டைம் இருக்கா ஜீவா என்னறாள்.

என்ன குட்டிமா மேரேஜ் ஆகி மூனு மாசம்தான் ஆகுது அதுக்குள்ள இப்படி சொல்லிட்டியே என்றான் .

உனக்குதான் டைமே  இருக்காதே என கண்களில் வழிந்த கண்ணீரை மறைத்தாள்.

செல்லம்  எதுக்குடா இப்படி எல்லாம் பேசுற என்று கேட்க இங்கே இருந்து ஆபீஸ்க்கு போறதுக்கு முக்கால் மணி நேரம் திரும்பி வர முக்கால் மணி நேரம் ஆகுது.

ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் வேஸ்ட் ஆகுது ஜீவா என் கூட அந்த ஒன்றரை மணி நேரம் இருக்கலாம் இல்ல அதனால   ஆபீஸ் பக்கத்திலேயே வீடு பாரு என்று கூறினாள்.

ஜீவா போன்  எடுத்து ராஜீவுக்கு போன்  செய்தான். ஆபீஸ் பக்கத்திலே ஏதாவது பிளாட் கிடைக்குதான்னு பாருடா  ஃபேமிலி அங்குச் ஷிபிட் பண்ணலாம்னு இருக்கேன் என்று கூறினான்.

உன்னோட தங்கச்சிக்கு  இங்க  இருக்க முடியலையாம்  ரொம்ப ஃபீல் பண்றா  என்று கூறினான்.

சேப்டி முக்கியம்  மச்சி  கரெக்டான வீடா  பாரு என்று கூறி போனை வைத்தான்.

காலையில் எழுந்தவுடன் அவசரமாக அவனுக்கு காபி கலந்து கொண்டு வர டைமாயிடுச்சு என்று ஜீவாவை எழுப்ப இன்னைக்கு போல ஹாசினிமா இங்க  வா என்று அவளை அழைத்து தனது கைக்குள் படுக்கவைத்துக் கொண்டான்.

அப்படியே தூங்கினர்  இருவரும்.  ஏழு மணிக்கு எழுந்து  வந்தவன்,  தன் தாயாரிடம் கூற கோயம்புத்தூர் போலாமா என்று கூற,

  நானே சொல்லணும்னு இருந்தேன் ஜீவா இங்கு அப்பா  நியாபகம் ரொம்ப அதிகமா இருக்கு நான் அங்க வீட்டுக்கு போறன் ஜீவா.

பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ்  அப்படின்னு சொல்லுவாங்க நான் நம்ம கடைக்கு போறேன் கூட தான் துணைக்கு ஆள் இருக்காங்க நீங்க  கோயம்புத்தூர் வீடு போங்க என்று கூறினார்.

ஒரு வாரத்தில் பிளாட் ஹாசினியின் பெயரிலேயே வாங்கினான்.  பால் காய்ச்சும் போது வீட்டுக்கு வந்தனர் ஹாசினியின் வீட்டிலுள்ள அனைவரும். ஜீவா அம்மா ஊருக்கு கிளம்பினார்கள்.

ஜீவா இப்போது அடிக்கடி வீட்டிற்கு வந்து விடுவது ஹாசினினுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

ஒரு 11 மணி இருக்க ஒரு கேஸ் விஷயமாக ஆலோசனை செய்வதற்காக ஒரு மருத்துவமனைக்கு உள்ளே நுழைந்தான்.

அங்கே மனநல மருத்துவரின் அறையில்இருந்து  வெளியே ஹாசினி அமர்ந்திருப்பதைப் பார்த்த உடன் சுவரொட்டி நின்றான்.

ஹாசினி வெளியே வந்து வீட்டிற்கு கிளம்பியதும் மருத்துவரை காண உள்ளே நுழைந்தான் ஜீவா.

ஹாய் ஹாய் ஜீவா  என்று கூற

இப்ப வந்துட்டு போனாங்க ஹாசினி  அவங்களோட ஹஸ்பண்ட் என்று கூற அவங்ககளுக்கு என்ன மேடம் பிரச்சனை என்று கேட்க  ஒன்றும் இல்லை சார் சும்மா ஒரு ஜெனரல் கவுன்ஸில் என்று கூறினார்.

கவுன்சிலிங் பண்ற அளவுக்கு என்ன பிரச்சனை வந்தது என்று கேட்க.

உங்களால தான் பிரச்சினை என்று கூற என்னது நானா என்று அதிர்ந்து அமர்ந்தான்.

ஒன்னும் இல்ல சார்  உங்கள நினைச்சு தான் ரொம்ப பீல் பண்றாங்க அவங்க உங்கள ரொம்ப லவ் பண்றாங்க.

ஒரு குழந்தைக்கு ரொம்ப பிடிச்ச பொம்மை அந்த குழந்தை கிட்ட இருக்கு ஆனா அந்த குழந்தை கெஞ்ச கெஞ்ச கேட்காமல் அந்த குழந்தை கிட்டருந்து பொம்மையை பிடுக்கிட்டு போயிட்டாங்க ரொம்ப நாள் கழிச்சு அந்த குழந்தைக்கு அந்த பொம்மை கிடைக்குது அந்த குழந்தை என்ன பண்ணும்? என்று கேட்க,,,,,

அவனோ  அந்த பொம்மையை எங்க போனாலும் எடுத்துட்டு போகும் கூடவே வைத்து  கொள்ள போராடும் யாராவது  எடுத்துட்டு பிடுங்கிட்டு போயிடுவாங்க  என்ற பயம் இருக்கும் என்று கூறினான்.

போகாத ஜீவா என்ன விட்டு போகாதஜீவா என்று ஹாசினி  சிறுவயதில் கெஞ்சியது அவன்  நினைவிற்கு வந்தது.

அதுதான் ரொம்ப நாள்  ரெண்டுபேரும் பிரிஞ்சுடீங்க   இப்ப சேர்ந்து இருக்கிறீங்களா அதனால நீங்க அவங்க கூடவே இருக்கணும்னு நினைக்கிறாங்க வேற ஒன்னும் இல்ல என்றார் மருத்துவர்.

இப்போ எவ்ளோ பரவால்ல ஆரம்பத்திலேயே பேசி பேசி கன்வின்ஸ் பண்றதுக்குள்ள எனக்கு  போதும் போதும்னு ஆயிடுச்சு   ரொம்ப நல்லா கோவாப்ரெட் பண்ணாங்க.

இப்போ உங்களுக்கு  வித்தியாசம் தெரிந்து இருக்குமே என்று கூற டேப்லெட் ஏதாவது சாப்பிடறாங்களா டாக்டர் என்று கேட்க  அதெல்லாம் ஒன்னும் இல்ல சும்மா ஜெனரல் கவுன்ஸிலிங்க்  மட்டும்தான் என்று கூறினார்கள்.

ஒன்னும் கிடையாது வீட்டிலேயே தனியா இருக்கிறார்களே அது தான் ப்ராப்ளம் என்று கூற என்னோட வேலை பிடிக்கலை என்று சொன்னாலா?  என்று கேட்க,

உங்க வேலை  பிடித்து இருக்கு உங்க  வேலைய உங்களுடைய அங்கீகாரமா நினைக்கிறார்கள். அத கௌரவமா  நினைக்குறாங்க என.

கொஞ்ச நாள்  கூடவே  இருந்தீங்கன்னா உங்களுக்குன்னு ஒரு குழந்தை வந்துருச்சுன்னா சரியா போயிடும் என்று மனநல மருத்துவர் கூறினர்.

பெண் மருத்துவராக இருந்ததால் சார் நான் கைனகாலஜிஸ்ட் இன்னொரு விஷயம் சொல்றேன் பீரியட்ஸ்  ஆன  பத்து நாள் ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தீங்கன்னா தான்  சீக்கிரமாக கன்சீவ் ஆக முடியும்  அந்த பத்து நாட்களில்தான் கருமுட்டை வளரும் என்று கூறினார்.

ஓகே மேடம் நான் அவளை பார்த்துக்கறேன்  என்று விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான். 

அரைநாள் விடுப்பு சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தான்  ஹாசினி அறையில் படுத்திருந்தாள்.

    ஏன் ஹாசினி மா    உடம்பு சரி இல்லையா என்று  கேட்க ஜீவா இந்த மாதமும் பீரியட்ஸ்  ஆகிட்டேன் என்று அழ ஆரம்பித்தாள்.  கல்யாணம் ஆகி மூனு மாசம்தான் ஆகுது அதுக்குள்ள என்ன என்று அவளுடைய கண்களைத் துடைத்தான்.

செல்லக்குட்டி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா டென்ஷனாகவே கரு தங்காது,  மைண்ட் ப்ரீயா வெச்சுக்கணும் ராஜுவ்க்கு போன் பண்றேன் உங்க அம்மா வீட்டுக்கு  போயி அங்க ஒரு ரெண்டுநாள்   இருந்துட்டு வாங்க கொஞ்சம் ஃப்ரீயா ஆகும் என்று கூற வேண்டாம் ஜீவா நான் உன் கூடவே இருக்கிறேன் என்று கூறினாள்.

இரவு உணவினை தயார் செய்தவன்  ஊட்டி விட இவள் அவனுக்கு ஊட்டி விட்டாள்  பிறகு தன் அவளை தன் மார்போடு தட்டி தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

எழுந்து அமர்ந்தவாறு ஜீவா எனக்கு ஒரு சின்னதா கடை ஓபன் பண்ணி குடு சாரீஸ் அந்த கடைல இருந்து  அனுப்பிச்சு விட சொல்லு,,  ஹாசினி ப்பட்டு மகளை விட பெரியதாகனும்  ஜீவா பட்டு மஹால் என்று கூறியவள்.

தான் போட்டு வைத்திருக்கும் அணைத்து டிசைனையும் கீழே கலர் காம்பினேஷன் முதல் எழுதி வைத்திருந்த நோட்டை எடுத்து வந்து காமிக்க ஹாசினிமா செமையா இருக்குடா  என்று கூறினான்.

எப்ப பண்ண என்று கேட்க உன்னை நினைசிக்கிட்டு நான் ஃப்ரீயா இருக்கும்போது எவ்வளவு நேரம்தான் ஜீவா நான் டிவி பார்ப்பேன் என்று கூறினாள்.

ஓகே ஹாசினிமா அதற்கான ஏற்பாட்டை நான் பண்றேன் நீ ரெஸ்ட் எடு என்று அவளை படுக்க வைத்தான்.

என்னவளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்து தனது கடையில் உள்ள மேனேஜருக்கு போன் செய்தான்  அடுத்த நாள் ஆபீஸ்க்கு வரச்சொன்னான்.

காலையில் எழுந்து அவள் தலை குளித்து காபி போட்டு கொண்டிருந்த அவளை பின்னாலிருந்து அணைக்க பின்பக்கமாய் குனிந்து அவளின் கன்னத்தில் முத்தமிட்டு காபி பெற்றுக் கொண்டான்.

அவள் ஒரு வாய் காபி குடித்தவாறு ஹாசினிமா சுகர்போடீ யா  இல்லையா இதுல என்று கேட்க போட்டேன்  ஜீவா என்று கூறியவள்.

ஒருவாய் வாங்கி குடித்து பார்த்தாள் . காபில சுகர்  இருக்கு ஜீவா  என்று கூறியளின் இன்னொரு வாய்  குடிச்சு பாரு என்று ஒரு வாய் குடித்ததும் அவள் வாயோடு வாய்வைத்து அவளது காபியை உறிஞ்சி எடுத்தான்   அவள் வெட்கத்துடன் முகம் சிவந்து திரும்பிக் கொண்டாள்.

அவன் ஆபீஸ் கிளம்பியதும் அன்றேய  நிகழ்வினை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்தவன்  என்ன ஹாசினிமா  பிரிஸ்கா  இருக்க என்று கேட்க,

நான் அப்படியா இருக்கிறேன்  என்று நினைத்தவள் காலையில் நடந்த நிகழ்வுகளை நினைத்தாள்.

இங்கே ஜீவா டாக்டர் கூறியது நினைவில் வைத்து ஒரு சின்ன தீண்டல்,  மகிழ்ச்சி,  கொஞ்சம் முத்தம்,  இவை அனைத்தும் தான்  அவளை  உங்கள் நினைவில் வைக்கும் என்று கூறி அனுப்பி இருந்தார்,   அவளை அன்பினில் மூழ்கடித்தான்  ஜீவா ஒரு வாரம் ஓடியது.

ஒரு கைனகாலஜிஸ்ட் டாக்டரை சென்று சந்தித்தான் நாட்களை குறித்துக்கொண்டான். ஆபிசுக்கு சென்றவுடன் 15 நாட்கள் மெடிக்கல் லீவு கொடுத்து விட்டு வந்தான்

குலுமணாலி போவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவன் மாலை வீட்டிற்கு வந்தான்.  ஹாசினிமா ஒரு பத்து நாள் வெளியே போக  போறோம் டிரஸ் எல்லாத்தையும் எடுத்து வை டா என்றான்.

எங்கே போரும் ஜீவா என நமது ஹனிமூன் எங்குமே போலையே குலுமணாலி போலாம் டா என எல்லாம் கல்யாணம் ஆனவுடனே போவாங்க சார் மூணு மாசம் கழிச்சு கூப்பிடுங்க நான் எவ்வளவு நாளானாலும் புது மாப்பிள்ளை தான்என்று கூறினான்

ஜீவா இந்த பத்து நாள் என் கூட இருக்க போறயா  என்று கேட்டாள். ஆமா குட்டிமா  என்று கூற அவன் நெற்றியில் முத்தமிட்டு அவள் அவனது நெற்றி முட்டினான்.

இருவருக்கும் தேவையான டிரஸ்களை ஒரே மாதிரி காலர்  எடுத்துவைத்து கொண்டிருந்தாள். ஹாசினிமா சாரி  எடுத்து வை என்று கூறினான் .

ஏன் ஜீவா சுடிதார்  வேண்டாமா  என்று கேட்க சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா

புடவை  என்னைக்குமே அழகு ஹாசினிமா  அது உன்னை புடவைல பார்த்த தான்  ரொம்ப பிடிக்கும் என்று கூறினான்.

 

ஹாசினிமா காலைல ஆறு மணிக்கு பிளைட் ஊருக்கு போறோம் போய் பத்து நாள் ஸ்டே பண்ணிட்டு அப்படியே அங்க நம்ம ஊருல  அம்மா கூட ஒரு மூணு நாள் இருந்துட்டு கோயம்புத்தூர் வறோம்  ஓகேவா என்றான்.

கோயம்புத்தூர் பிளைட் ஏறினர்.    பிளைட்டில் தேவதை போல் ஒரு பெண் பயங்கர அழகு. பெண்களையே திரும்பி பார்க்க வைக்கும் அழகு ஹாசியினின் 2 இருகைக்கு முன்பு அமர்ந்திருந்தாள்.

தனது இருப்பிடம் வந்து அமர்ந்தவள் ஐ அம் சோ ஹாப்பி பத்து நாள் உன் கூட தான் இருக்கப் போறேன் என்று முகம் முழுக்க சந்தோஷத்துடன் அவளின் தோளின் மீது சாய்ந்து அவளின் இடையை  அழுத்திபேசி கொண்டிருந்தவனை  கவனியாது அந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

  நான் சொன்னது உன் காதில் விழுந்ததா என இல்ல இங்க பாரு அந்த பொண்ணு எவ்ளோ அழகா இருக்கா பாருஎன்றாள்.

நான்  பார்க்கல என கண்களை மூடி  நீ பாக்குற என என்னை தொல்லை பண்னாத என்றான்.  அந்த பெண்ணை பார்த்தவன் ஒரு கணம் ஸ்தம்பித்து தன்னை சரி செய்தான்.

முகத்தில் பெயருக்கு கூட புன்னகை இல்லை அப்படியே அமர்ந்து கண்களை மூடினான்.

ஏன் இப்படி  பண்ற  என்று கேட்க  அவனை எழுப்ப கம்முனு வாயை மூடிக்கிட்டு வா,  வாய  பொளந்துகிட்டு அவளே பாப்பையா பெரிய பேரழகி அவ தான் என்று கூறினான்.

ஏன் இப்படி டென்ஷன் ஆகுற என்று மனதிற்கு வைத்தவள் நீ ஏதாவது என்கிட்ட சொல்லு இல்ல அப்போ இருக்கு உனக்கு என்று நினைத்தாள்.

கண்களை மூடி அவர்களின் பயணம் இனிதே தொடர்ந்தது. பிளைட் லேன்ட் ஆனது  சீக்கிரமா வா என லகேஜ் எடுத்துக் கொண்டு வெளியே வர.

அவர்களுக்கு கார் வெளியே காத்திருந்த லக்கேஜை வைத்து காரில் ஏறப் போக போனவனே ஜீவா என்று அழைத்தாள்.

அந்த அழகு தேவதை அவள் ஜீவா என்று அழைத்துக் கொண்டு அவனிடம் ஓடி வர அடப்பாவி உனக்கு ஏற்கனவே தெரியுமா?  என அவள் அருகில் ஒரு அழகான ஆண் ஒரு சின்ன சிறுவன் இருந்தான் ஜீவா எப்படி இருக்கீங்க?  ஹாய்   நல்லா இருக்கியா நந்தினி என நீங்க எப்படி இருக்கீங்க என்றான்.

மீட் மைஹஸ்பண்ட்  ஆனுஜ்  என்னுடைய மகன் ஜீவானந்தம் என அறிமுகம் செய்து வைத்தாள்.
.

ஹாய் ஹாசினி   என்று கேட்டாள்.

ஜீவா ஹாசினியை  அனைத்து என்னுடைய மனைவி என்று  அறிமுகப்படுத்தினான்.

பிறகு விடைபெற ஹாசனியின் முகமே சரியில்லை அந்த குட்டி பையனுக்கு  பெயரை வைத்திருக்கிறா என்று நினைத்தவள் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தாள்.

தனது அறைக்கு வந்தவுடன் இரண்டு காபி ஆர்டர் செய்தான்.  வந்த உடன் முகம் கழுவி விட்டு வந்தவன்.

நிம்மதியா இருக்கலாம்னு வந்தா இப்படி ஆயிடுச்சு இவளை பாக்கவே கூடாதுன்னு  நினைச்சேன் என்று அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து அவன் கண்களை மூடினான்.

முகம் கழுவிக்கொண்டு உடையை மாற்றிக்கொண்டு ஹாசசினி  வர காபியும் வந்தது.

வாங்கி வைத்தவன் ஹாசினி  ஜீவா  இருவரும் காபி குடித்தனர் பிறகு  ஹாசினியை  அழைத்து அவளது மடியில் படுத்துக்கொண்டான்.

ஹாசினி     அவனது நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டாள்.  குழந்தை போல் அவளது இடையினை இறுக்கி அணைத்து படுத்திருந்தான்.

ஏதாவது பிரச்சனையா என்று கேட்க அந்த பொண்ணு நந்தினி என்னோட ஜூனியர் ஹாசினி  அழகு சில நேரங்களில் ஆபத்து தெரியுமா?  என்று கூறினான்

🌺🌺 வாசம் வீசும்🌺🌺  thanks for your comments and valuable stars🙏🙏

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்