Loading

பகுதி -10

கோவா சென்றவர்கள் ஒருவாரம் மதுவை குடித்து கடலில் குளித்து சந்தோஷத்தில் திளைத்து வந்தனர் சோர்வாய்.

வந்தவர்கள் நால்வரும் கவுந்தடித்து படுத்துவிட்டனர் ஆளுக்கொரு பக்கமாய்.

மறுநாள் வேகமாக கிளம்பி லேப் சென்றனர்.

அங்கோ அவர்கள் பார்க்க வேண்டிய ஸ்லைடுகள் எக்கசக்கமாக இருந்ததும்.

பரபரவென பார்க்க ஆரமித்தனர். வேகமாக பார்த்தாலும் அவர்களின் முன்அனுபவம் அவர்களை கைவிடவில்லை எல்லா ரிப்போர்ட்டையும் சரியான அறிக்கையோட அனுப்பினர்.

மாலைக்குள் அனைத்து ரிப்போர்களும் கொடுக்கப்பட்டுவிட்டது.

ஆசுவாசமாய் அப்போதுதான் நிமிர்ந்தனர் நால்வரும்.

ஒருவாரம் சுற்றிய அலைச்சல் ஒருநாள் முழுவதும் கண்ணிமைக்காமல் நுண்ணோக்கியை பார்த்தன் விளைவு நால்வருக்குமே கண்ணெரிச்சல் கொடுத்தது அத்தோடு தலைவலியும்.

யாழி அப்படியே டெஸ்கில் தலைவைத்து விட்டாள். அவள் மீது அஜ்ஜூவும் தலைசாய்த்துவிட்டான்.

வசீ அங்குள்ள பணியாளரை அழைத்து ஒரு காஃப்பி என்றான்.

தயா வசீயிடம் மச்சி எனக்கும் காஃப்பி வேணும்டா ரொம்ப தலை வலிக்குது

அந்த பணியாள் தலையாட்டிட வசீமோ ஒன்னு வாங்கிட்டுவாங்க போதும் என்றான்.

தயா முறைத்தான் பதிலுக்கு அவனும் முறைத்து மோந்து பார்த்திட்டுதான தரப்போற அதுக்கெதுக்கு உனக்கு தனியா காஃப்பி. அந்தாள் வாங்கிட்டு வந்ததும் ஸ்மெலா பண்ணிட்டு  கொடு.

அஜ்ஜூ ஆமா டா ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட் அது என்ன தலைவலி வந்தா காஃப்பி குடிக்காம மோர்ந்து பாக்குற உலகத்திலயே யாருகிட்டயும் இல்லாத பழக்கம்.

தயா குடிக்கிறதை விட ஸ்மெல் பண்றது நம்ம மூளைய இன்னும் ஆக்டிவாக்கும் வேகமா ரிலீஃப் கிடைக்கும் டா அதுவும் ஒரு வகை போதைடா

அதற்குள் காஃப்பி வர தயா அதனை வாங்கி ஆழ்ந்த மூச்செடுத்து முகர்ந்தான். அந்த மணத்தை அவன் நாசியில் நிறைத்துக் கொண்டான்.

அதன்பின் அதனை வசீயிடம் கொடுக்க அவன் அதனை குடிக்க ஆரமித்தான்.

தயா மனு (அங்கு வேலை செய்யும் ஒரு பணியாள்) அழைத்தான்.

எத்தனை சாம்பிள்ஸ் வந்திருக்கு மனு

ஐந்நூறு வந்திருக்கு ஸார்

வாட் என நால்வருமே அதிர்ந்தனர்.

யாழி வெறும் ஐநூறா என்ன சொல்ற

மனு ஆமா மேம் நமக்கு தொடர்ந்தா சாம்பிள் அனுப்புற நிறைய பேர் அனுப்பலை

வசீ ஏன்

மனு தெரியலை  ஸார் அனுப்பலை ஒரு வேலை சர்ஜரி நடந்திருக்காதோ என்னவோ

தயா அஜ்ஜூ வசீ யாழி ஆளுக்கொரு ஹாஸ்பிடல்க்கு  கால்பண்ணுங்க விசாரிங்க

அவர்கள் கால் செய்து விசாரிக்க ஆரமித்தனர்.

சொல்லி வைத்தார் போல ஒரே பதிலே வந்தது நீங்க ரிப்போர்ட் லேட் பண்றீங்க பொறுப்பில்லை உங்ககிட்ட சேம்பிள் கொடுக்க விருப்பமில்ல என்று.

தயாவிற்கு இருந்த தலைவலி இன்னும் அதிகமாகியது.

வசீ ஏன்டா போன தடவை கூட ரெண்டு வாரம் லேட் பண்ணி ரிப்போர்ட்ஸ் கொடுத்தோமே அப்போலாம் அமைதியாக தான இருந்தாங்க இப்ப என்ன புதுசா

தயா எவனோ இடையில புகுந்து விளையாடிருக்கான்

யாழி யாரு

தயா நமக்கு சேம்பிள் அனுப்பாதவங்க எந்த லேப்க்கு அனுப்பிருக்காங்க

அஜ்ஜூ ஏதோ மூர்த்தி லேப்னு சொல்றாங்க அந்த பேரை நான் கேள்வி பட்டதுகூட இல்லை

தயா அங்க போலாம்

வசீ போய்

செட்டில்மெண்ட் தான் வேற ஏதுவுமில்லை நம்மளை பகைச்சி கிட்டவனுங்களுக்கும் நம்பளை அவமரியாதையா பேசுனவனுங்களுக்கும் பதிலடி கொடுக்கனும் நம்மளை தேடி நாய்மாறி ஓடிவரனும்

அஜ்ஜூ ஆமாடா வரனும் என்ன பேச்சு பேசுறானுங்க இந்த ஐநூறு சேம்பிளும் வெளியருந்து வந்தது சென்னைலருந்து ஒன்னு கூட வரலை

யாழி வேற ஏதோ நடந்திருக்கு டா

தயா அவன் நண்பர்களோடு மூர்த்தி லேப்ஸ்க்கு சென்றான்.

அவர்களின் லேப்பில் கால் சதவீதம் கூட இல்ல அந்த இடம். உள்ளே நுழைந்தனர் நால்வரும்.

தயாளினி காஃப்பியை முகர்ந்துக் கொண்டிருந்தாள்.

ரதி உலகத்திலயே யார்கிட்டயும் இல்லாத பழக்கம் டி இது தலைவலி வந்தா காஃப்பிய மோர்ந்து பாக்கிறது

தயாளினி  குடிக்கிறதை விட ஸ்மெல் பண்றது நம்ம மூளைய இன்னும் ஆக்டிவாக்கும் வேகமா ரிலீஃப் கிடைக்கும் டி இதுவும் ஒரு வகை போதைடி

தயா அவளை பார்த்தான் அவனுக்குள் ஏதேதோ உணர்வு இருந்த தலைவலி நீங்கி இருந்தது. இதழில் சிரிப்பு உண்டானது. அவளை பார்த்த சந்திப்புக்கள் நினைவடுக்கில் உண்டானது.  அடுத்த கணமே மறைந்தும் போனது தலைகனம் வந்து அமர்ந்துக் கொண்டது நடு மண்டையில்.

அஜ்ஜூவோ ரதியை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். அவளும் ஓரப்பார்வையால்.

நேராக வந்து தயாளினியின் முன் நின்றான்.

அவளோ மருத்துவர்கள்தான் தங்களின் லேப்க்கு புதிதாக சேம்பிள் தர வந்திருக்கின்றனர் என்று நினைத்து வாங்க ஸார் என்ன வேணும் என்றாள். அவள் அவன் முகத்தை மறந்திருந்தாள் வேலை பளுவில்.

தயா நேரடியாக இந்த லேப் வேணும் மொத்தமா எவ்ளோ வேணும்

தயாளினி ஸார்

தமிழ் புரியலையா இந்த லேப் எனக்கு வேணும்

தீபன் ஹலோ யார் நீங்க வேலை செய்ற இடத்துலவந்து பிரச்சனை பண்றமாறி பேசுறீங்க

தி கிரேட் அமிர்த்தா லேப்ஸ் ஓட ஹெட் என்ற குரல் கேட்க அனைவரும் வாசலை பார்த்தனர். ஆனந்தன் அப்போது உள்ளே வந்தான்.

தயாக்கு புரிந்துவிட்டது அனைத்திற்கும் காரணகர்த்தா யாரென்று.

ஆனந்தன் தீபன் நான் சொன்னன்ல சேம்பிள்ஸ் கொடுத்தா ரொம்ப சீக்கிரமா ரிப்போர்ட் கொடுத்திடுவாங்க  கால் பண்ணி கேட்டா ரொம்ப பொலைட்டா பதில் பேசிடுவாங்கனு அந்த நல்லவங்க இவங்கதான்.

ரதி தயாளினி தீபன் முவருக்கும் இவர்களின் கதை தெரியும் ஆனந்தன் மூலமாக.

எள்ளலாக ஓஓஓஓ அந்த இர்ரெஸ்பான்ஸிபிள் இடியட்ஸா என்றாள் தயாளினி.

வந்ததே நால்வருக்கும் கோபம் ஏய் என்று டேபிளை ஒரு தட்டு தட்டினான்  தயா கோபத்தோடு.

தயாளினி அசையாது அவனைப் பார்த்தாள். 

ரதி நான் போலீஸ்க்கு ஃபோன் பண்ற
அப்போது மூர்த்தி வந்தார்.

என்னமா என்ன பிரச்சனை ஸார் யார் நீங்க என்ன வேணும்.

தீபன் நம்ம லேப் வேணுமா இருக்குற ஒரு லேபையே ஒழுங்கா வெச்சி நடத்த துப்பில்ல

யாழி ஏய் ஓவரா பேசுன வாயை கிழிச்சிடுவன்

தீபன் அய்யோ நாங்க பயந்துட்டோம் நக்கல் செய்தான்.

தயா மூர்த்தியிடம்………

இவன் உங்களுக்கு எவ்ளோ கொடுத்தான்.

ஆனந்தன் ஏய் மரியாதையா பேசு நான் ஏன் பணம் கொடுக்கனும் இவங்களுக்கு

மூர்த்தி ஸார் இங்க பாருங்க உங்க லேப்க்கு இவர் சேம்பிள் அனுப்பிருக்காரு நீங்க லேட் பண்ணிருக்கீங்க அதனால இவர் எங்ககிட்ட கொடுத்தாரு. எங்க வேலை பிடிச்சிபோய் எங்கள்ட்டயே கொடுக்கிறாரு நாங்களும் கவர்மெண்ட் அப்ரூவலோடதான் எல்லாம் செய்றோம் நீங்க ஏன் வந்து வம்பு பண்றீங்க

தயா இந்தாளோட சேம்பிள் வந்தா என்ன வரலைனா என்ன எல்லா ஹாஸ்பிட்டல்லயும் எங்களை பத்தி தப்பா சொல்லிருக்கான் எங்கருந்தும் எங்களுங்கு சேம்பிள் வரலை. கண்ட நாய்ங்களெல்லாம் எங்களை கேள்வி கேக்குது.

அஜ்ஜூ உங்க லேப் இருக்கபோய்தான இந்த  பிரச்சனை அதான் இந்த லேபை நாங்களே வாங்கிகரதா முடிவு பண்ணிட்டோம்.

ஹலோ மிஸ்டர் என்று சுண்டினாள் தயாளினி.

தயாவிற்கு கோபம் சுள்ளென ஏறியது.

அவள் விரலை பிடித்து சுண்டுன அவ்ளோதான் மிரட்டினான்.

தீபன் அவன் கையை தட்டிவிட அஜ்ஜூ தீபனின் சட்டையை பிடித்தான்.

ரதி விடுங்க என்று பதறினாள்.

தயா திமிராக பேசினாள். ஏய் இங்க பாருங்க நீங்க உங்க வேலை சுத்தமா நேர்மையா இருந்துருந்தா இவர் இல்லை கடவுளே வந்து சொல்லிருந்தாலும் உங்க லேப்க்கு சேம்பிள் அனுப்பிருப்பாங்க தப்பு உங்ங மேல இருந்தாலதான் உங்க பொழப்பு சிரிப்பா சிரிச்சி நிக்கிது. தப்பை திருத்த பாருங்க அதைவிட்டு வந்து அராஜகம் பண்ணிட்டு இருக்காதீங்க

யாழி ஏய் ஒரு டப்பா லேப் ஐ வெச்சிட்டு எங்களை எதிர்த்து பேசுறியா உரு தெரியாம அழிச்சிடுவோம்

தீபன் அந்த டப்பா லேப்தான் உங்க ஹைடெக் லேப் ஐ விட பெஸ்ட்டு பேர் வாங்கிருக்கு ஒன் வீக்ல

தயா இந்த டப்பா லேப் அ பார்த்து பயந்துதான் நீங்க இங்க நிக்கிறீங்க

வசீம் இங்கபாருங்க நாம பொறுமையா பேசி தீர்த்துக்கலாம் இந்த ஆனந்தோட சதிதான் இங்க நடக்குறதெல்லாம்

அஜ்ஜூ ஏய் இவங்ககிட்ட என்னடா நீ கெஞ்சிகிட்டு ஏய் உனக்கு எவ்ளோ பணம் வேணும் சொல்லு ஒரே பேமண்ட்ல தரோம் என்றான் மூர்த்தியை பார்த்து.

தயாளினி டேய் மரியாதையா இல்லாம பேசுன அவ்ளோதான் மிரட்டினாள் அஜ்ஜூவை.

ரதிக்கோ நடப்பதை பார்த்து பயமாக இருந்தது.

தயா கண்ணை இறுக்க மூடி திறந்து தன்னை சமன் படுத்தினான்.

தயாளினியிடம் பேசினான்.

இங்கபாரு ஒரு சாம்பிள் ரெண்டு சாம்பிள் இல்லை ஆயிரக்கணக்குல சேம்பிள் வரும் அதை பிராசஸ் பண்ணி ரிப்போர்ட் கொடுக்க லேட் ஆகதான் செய்யும் புரிஞ்சிதா எங்களை எதிர்த்து இதுவரை யாரும் நின்னதில்லை உங்களை பார்த்தா பாவமா இருக்கு சும்மா விடுறன் இரண்டு கோடி தரன் இந்த லேப் ஐ மூட்டிட்டு பேசாம போய் வேற வேலைய பாருங்கள் எங்க லேப்க்கே கூட வாங்க வேலைபோட்டு தரன் இந்த லேப் ஐ மூடிடுங்க என்றான் அழுத்தம் திருத்தமாய்.

மூர்த்தி தம்பி என பேச வர

தயாளினியோ நீ சொல்றை கேக்கலைனா அலட்சியமாக கேட்டாள்.

தயாவும் அலட்சியமாய் பதில் உரைத்தான்.

கேக்க வைப்பன்

தீபன் உன்னால ஆனதை பார்த்துக்கோ

தயா நல்லா யோசிச்சிக்கோங்க பின்னாடி வருத்த படக்கூடாது நான் ஒன் டைம் ஆஃப்பர்தான் தருவன்.

தயா உங்க பிக் சேல் ஆஃப்பர் எங்களுக்கு வேணா மிஸ்டர் தயாளன்.

தயா உங்க தலை எழுத்து அழனும்னு இருந்தா நாங்க என்ன பண்றது. ஆல் த பெஸ்ட் நாங்க பண்ண போற கொடுமைய அனுபவிக்க போறதுக்கு.
என சொல்லி வெளியில் சென்றிட மற்றவர்களும் அவர்களை முறைத்துவிட்டு சென்றனர்.

தயாளன் நின்று முழுதாய் ஒரு நிமிடம் தயாளினியை பார்த்துவிட்டு சென்றான்.

அவர்கள் சென்றதும் ஆனந்தன் பேசினார்.

நான் சொன்னல அப்போ நீங்க நம்பலை இப்ப பாத்தீங்களா

தீபன் ஆமா ஸார் தலைகணம் பிடிச்ச கூட்டமா இருக்கும்போல

தயா ஆமா தலைகணத்துக்கு உருவம் கொடுத்தா இவங்க மூன்ஜிதான் வரும்

ரதி ஆனாலும் நீங்க ரெண்டுபேரும் ஏன்தான் இப்படி இருக்கீங்க அவங்கதான்  செட்டில்மெண்ட் பண்றங்குறாங்கள பேசாம காசை வாங்கிட்டு நாம வேற வேலைய பார்த்திட்டு போலாம் ஏன் வம்பு இவங்ஙளோட

தீபன் ரதி என்ன பேசுற இது நம்ம கனவு

ரதி நம்ம இல்ல உங்க கனவு எனக்கு நல்லா வசதியா வாழனும் அவ்ளோதான் கனவு

தயா அது உழைக்காம கிடைக்காது ரதி

ரதி இப்போ கிடைச்சிதே விட்டுடு வாய்ப்பேசிட்டு நிக்கிறீங்க ரெண்டுபேரும் ஏன் தாத்தா  நான் சொல்றதுல என்ன தப்பு உங்களுக்கே அறுவது வயசாகிடுச்சி இனி நீங்க லேப் நடத்துனா என்ன நடத்தலைனா என்ன அந்த பணத்தை வாங்கி வாங்குன லோனை அடச்சிட்டு மீதி காசை ஆளுக்கு பாதியா பிரிச்சிட்டு போய் செட்டில் ஆகிருக்கலாம்  சும்மா இல்ல ரெண்டு கோடி எவ்ளோ பெரிய தொகை

தீபன் அடிச்சி மூன்ஜிய பேத்துருவன் அந்த பணத்தை வெச்சிட்டு எவ்ளோநாள் வாழ முடியும்

ரதி  அதை வெச்சி இன்வஸ் பண்ணி நீ ஒரு தொழில் பண்ணி வாழலாம் ல

தயா அதுல பிரச்சனை வந்தா அடுத்த வேலைய பாக்க போவியா இவங்க பணம் தரன்னாங்க வேற ஒருத்தன் உன்னை கொலை பண்ணிடுவன்னுவான் பயந்திட்டு வீட்டுலயே முடங்கி இருப்பியா இவங்களை மாறி ஆளுங்களை எல்லாம் மூக்கருக்கனும் அப்போதான் தலகணம் இறங்கும்.

தீபன் சரியா சொன்ன

ஆனந்தன் என்ன நீங்க எதுவுமே பேச மாட்டீகிறீங்க மூர்த்தி

மூர்த்தி நீங்க எங்களுக்கு நல்லது பண்ண நினைச்சீங்களா இல்லை உங்க பழிய தீர்க்க எங்களை பயன்படுத்திக்கிட்டீங்களா

ஆனந்தன் என்ன என்னங்க இப்படி கேட்டுடீங்க பாவம் கஷ்டபடுறீங்களேனு சேம்பிள் கொடுத்தன். உங்க வேலை திறமைய பார்த்து வியந்து மத்தவங்களுக்கு சஜ்ஜஸ் பண்ணி அவங்களையும் சாம்பிள் கொடுக்க வெச்சன் இப்படி கேக்குறீங்க

தயா ஸார் அவர் குழப்பத்துல இருக்காரு அதான் அப்டி கேட்டுடாரு நாம அப்றம் பேசலாம்.

ஆனந்தும் இதற்குமேல் இருந்தாள் சரிவராது என அங்கிருந்து சென்றுவிட்டான்.

தயா

சொல்லுங்க தாத்தா

பிரச்சனை வேணாமா என்னைக்கும் பணக்காறங்கதான் முன்னேறனும் அவங்க ஆசைதான் நிறைவேறனும் நாமல்லாம் வளரவே கூடாது அதை தடுக்க ஒரு கூட்டமே இருக்கும் அந்த தம்பிகிட்ட பேசி பணத்தை வாங்கிட்டு போய்டலாம் அமிர்த்தா லேப்ஸ் எவ்ளோ பெரிய லேப் அங்க வேலை கிடைக்கிறது உங்க எதிர்காலத்துக்கு நல்லதுதான் என்றார்.

தயாவும் தீபனும்  ஒத்துக் கொள்ளவில்லை அவர்கள் பிடிவாதமாக மறுத்துவிட்டனர்.

மூர்த்திக்கோ தேவையில்லாத பிரச்சனையில் தலைவிட்டு விட்டோமே என தோன்றியது.

ரதி தேவையில்லாத வம்புல மாட்டாருக்கீங்க அவங்க நம்மளை தொந்ததரவு பண்ண போறாங்க

தீபன் அதெல்லாம் ஜூஜூபி மேட்டரு சும்மா வந்து படம் காட்டிடுபோறானுங்க இவனுங்கலாள ஒன்னும் பண்ண முடியாது.

அடுத்த ஒரு வாரம் ஏதும் நடக்கவில்லை அதன் பின் ஆரமித்தது தயாளினிக்கு பிரச்சினை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்