Loading

பகுதி – 11

அமிர்த்தா லேப்ஸ்……

யாழி : என்ன திமிருடா அந்த தீபனுக்கு வக்கில்லாத நாய்ங்க நம்மளை எதிர்த்து பேசிடுச்சீங்க

அஜ்ஜூ : அந்த தயாளினிக்கு என்ன ஒரு தலைகணம் நம்ம தயாவையே சுண்டி கூப்பிடுறா

வசீ : டேய் நம்ம மேலயும் தப்பு இருக்கு அது ஏன் உங்க புத்திக்கு உரைக்க மாட்டிக்கிது

யாழி: மூடிட்டு இரு உன் ஃபிலாசபிய ஆரமிக்காத அவங்க எப்படி நம்மளை எதிர்த்து பேசலாம்

அஜ்ஜூ : அவன் காந்தியோட சித்தப்பா பையன் தெரியாதா அகிம்சைனு சொல்லி இம்சை பண்ணிட்டு இருப்பான் விட்டு தள்ளு

தயா : டேய் இதுக்கெல்லாம் காரணம் அந்த ஆனந்த்தான்டா அவனை முதல்ல ஒரு வழி பண்ணனும் அப்றம் நம்மளை ஏன்டா எதிர்த்து நின்னோம்னு அந்த நாலுபேரையும் துடிக்க வைக்கனும்

வசீம்: தயா பிளீஸ் நான் சொல்றதை கேளு நீ கோவபடுறது நியாயம்தான் அந்த ஆனந்தை ஒன்னுமில்லாம ஆக்கனும் ஆனா பாவம் அந்த நாலுபேர் விஷியம் தெரியாம நம்மகிட்ட பிரச்சனை பண்ணிடாங்க

தயா : இல்லைடா அவ தெரியாம பண்ணலை என்னை அலட்சிய படுத்தனும்னு பண்ணா எப்படி அசராம நின்னா பாத்தல்ல என்னையே சுண்டிகூப்பிடுறா அதன் தீபன் என் கைய தட்டிவிடுறான் அவங்ளுக்கு நான் யாருனு காட்றன் என்றவன் கோவமாய் அங்கிருந்து சென்றான்.

தயாளன் மற்ற ஊர்களிலிருந்து வரும் சேம்பிள்களை உடனடியாக பிராஸஸ் செய்து மறுநாளே ரிப்போர்ட் கொடுத்தான்.

ஆனந்தனின் ஹாஸ்பிடலுக்கு போகும் குளுக்கோஸ் ஊசி மாத்திரை போன்ற ஸ்டாக்குகளை நிறுத்தினான் அவனுடைய பணபலத்தை உபயோகித்து.

ஆனந்தோ வர வேண்டிய ஸ்டாக் வராததால் அதித விலை கொடுத்து மற்ற இடங்களில் அதனை வாங்க படாதபாடு பட்டுக் கொண்டிருந்தான். அவனது மருத்துமனையில் உள்ள நோயாளிகள் அவஸ்தைக்குள்ளாகி இருந்தனர்.

அப்போது தயா அவனை அழைத்தான்.

தயா: என்ன ஆனந்த் சௌக்கியமா பதில் சொல்ல முடியாத அளவுக்கு ஹாப்பியா இருக்கீங்க போல இட்ஸ் ஜஸ்ட் டரைலர் தயாவை எதிர்த்தா என்ன நடக்கனும்னு தெரியனும்ல வெயிட் வெயிட் இன்னும் நிறையா இருக்கு

ஆனந்த் : பல்லை கடித்து டேய் தயா நீ தப்பு பண்ற என்றான்.

தயா:சிறந்த கண்டுபிடிப்பு அவார்டை அனுப்பி வெக்கிறன் வாங்கி மாட்டிக்க என கால் ஐ கட் செய்தான்.

அவனுடைய மருத்துவமனைக்கு NABH (National Accreditation Board for Hospitals & Healthcare Providers)  சோதரை இட வந்திருந்தனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் இவர்களின் சான்றிதழோடுதான் இயங்க வேண்டும். மருத்துவமனை நடத்துவதெற்கென பல வரைமுறைகள் உள்ளன அந்த  வரைமுறைகளை பின் பற்றுகிறார்களா என அவ்வப்போது சோதனை நடத்தப்படும் அந்த சோதனைக்காகதான் இவர்கள் வந்துள்ளனர்.

ஆனந்தன் சட்டென பதறித்தான் போனான். சோதனை என்றால் முன்னதாகவே தயாராகி இருப்பார்கர் திடுதிப்பென வந்திறங்கினாள் என்ன செய்வான்.

அவர் வந்து அவனிடம் அறிமுகம் செய்துவிட்டு மருத்துவமனையை சோதரை இட ஆரமித்தனர்.

எல்லாம் குலறபடியாக இருந்தது.

அதிகாரி:  என்ன டாக்டர் இது பெட்ல பேஷண்ட்ஸே இல்லை நீங்க இவ்ளோ பேஷண்ட் இருக்காங்கனு  பொய் கணக்கு காட்டிருக்கீங்க

ஒரு மருத்துவமனைக்கென குறிப்பிட்ட அளவு நோயாளிகள் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே அந்த மருத்துவமனைக்கு அரசிடமிருந்து மருந்துகளும் தேவையான சில பொருட்கள் உபகரணங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும் தனியார் மருத்துவமனையாக இருந்தாலும் அரசு அறிவிக்கும் நலதிட்டகளில் மக்கள் பயன்பெற அந்த மருத்துவமனைக்கு அரசு தேவையான பொருட்களையும் வழங்கும் அல்லது அந்த சிகிச்சைக்கு உண்டான பணத்தை கொடுக்கும்.

எடுத்துக்காட்டாக நமது முதல்வர் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கொரானா சிகிச்சைக்கான படுக்கை வசதிகள்  அனைத்து மருத்துவமனைகளிலும் வழங்கப்பட வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகான செலவை அரசு ஏற்கும் என்ற அறிவிப்பை வழங்கி அதனை முறையாக நடத்திக் காட்டிவருகிறார். அதுபோன்ற சில திட்டங்களுக்காக தனியார் மருத்துவமனைகள் பொய் கணக்கை காட்டி அரசிடமிருந்து பணம் பறிக்கும்.

ஆனந்தன் ஸார் அது என தடுமாறினான்.

இன்னொரு பக்கம் ஒரு நோயாளி யூரீன் டியூப் அகற்ற படாமல் துன்பபட்டு கொண்டிருந்தார்.

இவர்கள் அந்த பக்கம் செல்லவும் ஒரு பெண்மணி டாக்டர் ஸார் ஒரு வாராமா  இந்த டியூபை மாத்தவே இல்லை அவருக்கு இன்ஃபக்ஷனாகி அரிப்பு எடுக்குதுனு சொன்றாங்க எத்தனை தடவை நர்ஸ்கிட்ட சொல்லிட்டோம் ஏன் இப்படி பண்றீங்க என தைரியமாக முறையிட்டாள் சோதனைக்காக வந்தவர்களிடம்.

அந்த அதிகாரி ஆனந்தனை காச்சு காச்சென்று காச்சிவிட்டார்.

“என்ன மேன் என்ன ஹாஸ்பிடல் நடத்துற இதுதான் நீ ஹாஸ்பிடல் நடத்துற லட்சனமா நீயெல்லாம் ஒரு டாக்டார ” திட்டி தீர்த்தார்.

ஆனந்தன் உடனடியாக அந்த நோயாளியை கவனிக்க சொன்னான்.

“என்ன எங்க முன்னாடி டிராமா பண்றீங்களா

இதுபோல் பல இடத்தில் ஆனந்தன் மீது தவறு இருந்தது.

தயாக்கு இதெல்லாம் ஏற்கவே தெரியும் அது அவர்கள் மருத்துவமனை பிரச்சனை என கண்டும் காணம்ல் இருத்திடுவான். இன்று அவனை எதிர்க்கவும்தான் இப்படி சோதனன வரச்செய்தான். அவர்கள் மேல் உள்ள தவறை சரிசெய்யாமல் பிறரின் தவறை சுட்டி காட்ட கூடாதல்லவா.

ஆனந்தன் திண்டாடிக்கொண்டு இருந்தான். அதிகாரிகள் கேட்கும் கேள்விகளை சமாளிக்க முடியாமல்.

அவன் அதிகாரிகளிடம் ஸார் நாம பாத்து பண்ணிக்கலாம் நீங்க கொஞ்சம் வாங்க என்றான் தன்மையாய்.

அவரோ நேர்மையான அதிகாரி உடனே லஞ்ச ஒழிப்புதுறைக்கு அழைத்துவிட்டார்.

மருத்துவமனை நிர்வாகம் சரியில்லை என்றும் அதனை மறைக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டதாகவும் அவன்மீது புகார் பதிவு செய்யப்பட்டது.

ஒருவாரம் கழிந்த நிலையில் தயாளியின் லேப்பில்.

தயா முதலில் ஆனந்தனின் கொட்டத்தை அடக்கிட எண்ணினான் எனவே தயாளினியை ஏதும் சீண்டவில்லை ஆனால் அவர்களை கண்காணிக்க அவர்கள் அறியாமலே அவர்களின் லேப்பில் சீசிடீவி கேமராவை பதித்திது இருந்தான்.

அதைத்தான் இப்போது அஜ்ஜூவும் தயாவும் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

தயாளினி ஸ்லைடுகளை ஸ்டெயின் போட்டுக்கொண்டு இருந்தாள். தயா அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் ரசித்துக்கொண்டு இருந்தான். அவனுக்கே தெரியும் இது தவறான செயல் என்று ஏனோ மனம் அதை கேட்கவில்லை.

அவனின் கருகருவிழியில் தொலைந்துதான் போனான். அதிலும் அவனின் இமைமேல் இருக்கும் அந்த மச்சம் அழகின் உச்சமாய் தெரிந்தது அவனுக்கு.

அப்போது ரதி ஓடிவந்தாள்.

“என்னடி என்ன ஆச்சி” அவள் கதவை சாத்தினாள்.

அவளோ “தெரியலை டி ஏதோ ஊறுறமாறி இருக்கு உடம்புல” என்றவள் மேல் டாப்ஸ்ஸை கழட்டிடப்போக தயா பட்டென அனைத்தான் கணினியை.

“டேய் ஏன்டா செம்ம சீன்டா ” என்றான் அஜ்ஜூ

தயா அவனை முறைத்தான்.

“ஆமா இவர் முழிய அங்குட்டும் இங்குட்டும் உருட்டி உருட்டி அவளை பார்ப்பாராம் நாம பார்த்தா தப்பாமா “

“உன்னை கொல்றதுக்கு முன்னாடி இங்கருந்து போய்டு”.

அஜ்ஜூ “அநியாயம் டா இதெல்லாம்” என்றிட வசீம் அவன் முதுகிலேயே சப்பென்று ஒரு அடி அடித்தான்.

“இந்த கேவலமான ஐடியா வேணானு நான் முன்னயே சொன்ன உன்னோட குறுக்கு புத்தி இப்படிலாம் பாக்கும் தெரிஞ்சிதான்”

யாழி “ஆரமிச்சிட்டான் டா “

அஜ்ஜூ “டேய் நீங்கதான டா அவங்க பண்றதெல்லாம் நமக்கு தெரியனும் அவங்களை க்ளோஸா வாட்ச் பண்ணனும்னு சொன்னீங்க அதான் இந்த ஐடியா கொடுத்தன்”.

வசீ “அதுக்காக இப்படிதான் பாக்கனுமா வேற வழியே இல்லையா அவங்களை  கண்காணிக்க”

தயா “மச்சி ஆனந்த பத்தி நமக்கு தெரியும். அவனை லாக் பண்ண நாம பெரிசா திங்க் பண்ண வேணா ஆனா இவங்களை லாக் பண்ண நமக்கு இவங்களை பத்தி தெரியனும்ல “

வசீ “நீயே சொல்லு அவங்க வேலைல எவ்ளோ டெடிகேஷனா இருக்காங்க அதும் அந்த தயா பொண்ணு எல்லாத்தையும் ரொம்ப பர்பெக்ட்டா பண்றா அந்த ஆனந்த் தப்பு செய்ஞ்சா அவனை மாட்டிவிட்டோம் இவங்க கரெக்டாதான இருக்காங்க இன்னும் என்ன விட்டுடலாம்டா பாவம் “

யாழி “அடிங்கு டெடிகேஷன் டீ டிகாஷன்னு ச்சீ பே நம்மளை எதுக்க துணிஞ்சவங்களை எப்படி சும்மா விடுறது”

தயா “ம்ம்ம் அவளோட திமிரை அடக்கனும் அவதான் தி பெஸ்ட் டெக்னீஷன்ற நினைப்புல இருக்கா அதை இல்லாம ஆக்கனும்”

அஜ்ஜூ” நீ ஏன் அந்த தயாமேல இவ்ளோ கடுப்புல இருக்க”

வசீ “அவனைமாறியே ஒருத்தரை பாக்குறான்ல அதான். Opposite poles attract பண்ணும் same poles ஒன்னுக்கு ஒன்னு விலகிதான் போகும்”

அஜ்ஜூ “இவன் பாக்குறதை பார்த்தா விலகுறமாறி எல்லாம் இல்லையே”

தயா “பச் நிறுத்துறீங்களா அப்படிலாம்  எதுவுமே இல்லை என்னை பொறுத்தவரை அவளை அடக்கனும் அவ திமிரை குறைக்ககனும் என்னை சுண்டி கூப்பிட்டவ என் கிட்ட மன்னிப்பு கேக்கனும் அவ்ளோதான்”

யாழி “சரி விடுங்க எதுக்கு தேவையில்லாத டாக் இவங்களை என்ன பண்ண போற டா. பேசாம நைட்டோட நைட்டா லேப் ஐ எரிச்சி விட்டுடலாமா”

தயா “அரக்கி அரக்கி மாறி பேசாத பேஷண்டோட உயிர் சம்மந்த பட்டது நம்ம பிரச்சனை அவங்களோட லேப் ஐ எரிச்சா சேம்பிள்ஸ் என்னாகுறது மெண்டல்”

அஜ்ஜூ “வேற என்ன பண்ணலாம்”

தயா : அவங்க இந்த வேலையே வேணானு ஓடனும்

வசீ : அவங்களோட மிஷின்ல பிராப்லம் பண்ணுங்க சேம்பிளை பிராஸஸ் லேட் பண்ணுங்க எல்லாரும் ரிப்பேர்ட் கேப்பாங்க ரிப்போர்ட் லேட்டான ஆட்டோமேட்டிகா சேம்பிள் கொடுக்கிறதை ஸ்டாப் பண்ணிடுவாங்க

யாழி : வசீ நீயா நீயா இந்த ஐடியா கொடுக்கிற நியாயம்டா நீதிடா நேர்மைடானு பேசுவ

வசீ : உங்க குறுக்கு புத்தி இதைவிட மோசமா யோசிச்சி எதுவும் தப்பா நடந்திட கூடாதுல அதான்

தயா : அதான் சொல்லிட்டாரு ல நல்லவரு அப்படியே பண்ணிடுவோம்

அதன்படி அவர்களின் டிஷ்ஷூ பிராஸஸ் மிஷினில் கோளாரு ஏற்படும்மாறு செய்தனர்.

மறுநாள் தயாளினி தீபன் ரதி மூவரும் வந்து பார்க்க டிஷ்ஷூ எதுவுமே சரியாக பிராஸஸ் ஆகவில்லை.

மீண்டும் கையாலேயே ஒவ்வொன்றையும் பிராஸஸ் செய்ய ஆரமித்திட ரிப்போர்ட் கேட்டு மருத்துவமனையிலிருந்து கால் செய்ய ஆரமித்தனர்.

அவர்களுக்கு பதில் சொல்லியே போதும் போதும் என்றானது மூர்த்திக்கு.

மறுநாள் அதனை சரி செய்திட அடுத்தாக மைக்ரோடேம் கோளாரு செய்தது. அவர்கள் வாங்கும் ரியேஜன்ட்கள் எப்போதும் வாங்கும் கடையில் கிடைக்காமல் போனது. மற்ற கடையில் கொள்ளை விலை கேட்கபட்டது.

மூர்த்திக்கு மன உளைச்சலானது. தயா தீபன் ரதி மூவருக்குமே என்ன செய்வதென தெரியவில்லை.

தீபன் தயா இருவரும் ரியேஜன்ட் தேடி அலைந்துக்கொண்டு இருந்திட அப்போது தயா அவர்கள் முன் வந்து வண்டியை நிறுத்தினான்.

இருவருக்கும் எரிச்சல் மண்டிக்கொண்டு வந்தது. இதுக்கெல்லாம் இவன்தான் காரணம் போல என்று நொடியில் புரிந்துக்கொண்டனர்.

தயாவும் யாழியும் அதிலிருந்து இறங்கினர்.

தயா நக்கலாக “என்ன மிஸ் தயாளினி வேலை எல்லாம் எப்படி போகுது ரியேஜென்ட் தேடி அலையிறீங்க போல”

அவளோ கடுப்பில் சொன்னாள் “உங்களை மாறி அளுங்கெல்லாம் இருந்தா எப்படி போகும் விளங்காமதான் போகும் மிஸ்டர் தயாளன்”

“தெரியுதுல இந்த லேப்ஐ இழுத்து மூடிடுங்க மிஸ் தயாளினி.நானே உங்களுக்கு நல்ல சம்பளத்துல வேலை தரன்”

“நான் பிச்சை எடுத்தாலும் எடுப்பன் மிஸ்டர் உங்க லேப்ல வந்து உங்களுக்கு கீழ கைகட்டி வேலை செய்யமாட்டன்”.

யாழி : இன்னும் கொஞ்ச நாள்ல அந்த நிலைமைக்குதான் வரப்போறீங்க

தீபன் : அப்போகூட உங்ககிட்ட வந்து சோத்துக்கு நிக்கமாட்டோம்

யாழி : நீயெல்லாம் வந்தாகூட உன்னை அடிச்சி தொறத்திடுவன் நானு

தயாளினி:  ஏய் மரியாதையா பேசு இல்லை பல்லு உடஞ்சிடும்

தயா: என்னடி மிரட்டுற இவ்ளோ பட்டும் உன் திமிரு அடங்குதா பாரு

“உன்கிட்ட நான் ஏன்டா அடங்கனும் உலகமே தலைகீழ பிரண்டாலும் உனக்கு கீழ என்னைக்குமே நான் இருக்கமாட்டன்”

தயா கோவமாக ” நீ என் ஈகோவ டச் பண்ணிட்ட தயாளினி இதுக்கு நீ அனுபவிப்ப இந்த வார்த்தை சொன்னதுக்கு நீ ரொம்ப கஷ்டபடுவ “

தீபன் “இவங்க கிட்ட என்னடி நமக்கு பேச்சு வா ” போலாம் என்றிட மறுவார்த்தை பேசாது அவன் பைக்கில் ஏறி அமர்ந்தாள் தயா.

தயாவிற்கோ உச்சந்தலை சூடாகியது அவன் சொல்வதை கேட்காமல் அவள் தீபன் சொல்வதை கேட்டு அமைதியடைவது அவனுக்கு பிடிக்கவில்லை.

தீபனோ “ஏய் ச்சீ போங்க நடுவழில காரை நிறுத்தி பிரச்சனை பண்ணிட்டு” என்று பைக்கை எடுக்க  தயா அவனோடு சென்றாள். அவனின் தோள் மீது அவள் கைவைத்து போக தயாவிற்கோ தீபனை அடித்துக் கொள்ளும் ஆத்திரம் வந்தது.

“யாழி இவனை சும்மா விடக்கூடாதுடி “

“ஆமாடா ரொம்ப பேசுறான் பேசுற வாய்லயே மிதிக்கனும்”

இந்த இருவர் இந்த இருவரிடம் பிரச்சனையை வளர்க்க அங்கு வசீயோ மூர்த்தியடம் சமாதானமாக பேசி பிரச்சனையை முடிக்க பார்த்தான்.

“ஸார் என் பிரண்ட்ஸ் பத்தி எனக்கு தெரியும்  அவங்க பிடிச்ச முயல்க்கு மூனுகாலுன்னு நிப்பாங்க அவங்க நினைச்சதை நடத்த நினைப்பாங்க பிரச்சனை வேண்டாம் பிளீஸ் காசை வாங்கிட்டு லேப் ஐ மூடிடுங்க நான் உங்க நல்லதுக்காகதான் பேசுறன்.”

மூர்த்தி “என்ன தம்பி நீங்க பேசுறது நியாயமா நாங்க உங்க பொழப்புல மண்ணள்ளி போட்டா எங்க பொழப்பை நடத்துறோம் ஏன் இப்படி எங்களை படுத்துறீங்க”

வசீ “நான் பேசுறது 100% அநியாயம்தான் ஆனா உங்க நல்லதுக்காக சொல்றன் “

அப்போது தீபனும் தயாவும் உள்ளே வர வசீயை பார்த்து கோபமாகி அவனோடு சண்டைக்கு வந்தனர்.

தீபன் : டேய் உங்களுக்குலாம் வேலைய இல்லையாடா ரோடு வீடுனு வந்து வம்பு பிரச்சனை பண்ணிட்டு இருக்கீங்க

வசீ:  நான் சொல்றதை கேளுங்க

தயா : எதுவும் நாங்க கேக்க வேணா மரியாதையா வெளிய போங்க இல்லை போலீசை கூப்பிடுவன் என்றால் எரிச்சலோடு

மூர்த்தி : தயாமா

“தாத்தா நீங்க சும்மா இருங்க ஏய் வெளிய போடா” என்றான் தீபன்

வசீயோ மேலும் பிரச்சனை வேண்டாம் என அமைதியாக சென்றுவிட்டான்

இங்கு இப்படி பிரச்சனை தீவிரமடைய ரதியோ அஜ்ஜூவோடு கைக்கோர்த்து கதைப்பேசிக் கொண்டு இருந்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்