Loading

ரோமியோ-5

அவன் தண்ணீரில் குதித்த மறு நிமிடம்…. அமிர்தாவுக்கு பயம் சுழல…எதை பற்றியும் சிந்திக்காமல் குதித்துவிட்டாள் தண்ணீரில்…

ஹேய்… பிளேட்டி இடியட்… என்று தரையில் காலை உதைத்த தவான்… செத்தால் சாகட்டும் என்று நிற்க… பின் தண்ணீரில் இருந்து பாய் வந்து அவள் எங்கே என்று கேட்டாள் நான் என்ன கூறுவேன்…என்று அவனும் குதிப்பதற்க்கு ஜாக்கெட்டை கழற்றி குதிக்க போக…

அதற்க்குள் தண்ணீரில் இருந்து அவளை தூக்கி கொண்டு வெளியே வந்தான் சாம்பல் விழியான்… அவளை கரையில் படுக்க வைத்து விட்டு தவானை அழுத்தமாக ஒரு பார்வை பார்க்க… அவனோ குனிந்து கொண்டே அந்த இடத்தை விட்டு விட்டால் போதும் என்று ஓடி விட்டான்….

அதன் பின்… மயங்கிய நிலையில் இருக்கும் அமிர்தாவை பார்த்தவன்… அவள் அருகில் சென்று…அவள் வயிற்றில் கை வைத்து அமுக்க…. அவள் குடித்த தண்ணீர் சிறிது சிறிதாக வெளியே வந்தது…

ஆனால் மயக்கம் இன்னும் தெளியாமல் இருக்க… அவள் முகத்தருத்தில் நெருகியவன்… அவள் கன்னத்தை இருபுறமும் அழுந்த தட்ட…அதற்கும் பயன் இல்லாமல் போனது… அவள் கன்னத்தை பற்றி ஒரு நிமிடம் ஆழ மூச்செடுத்தவன்… பின் எதை பற்றியும் யோசிக்காது அவள் இதழோடு இதழ் சேர்த்தான் அந்த கள்வன்..

அவள் இதழ் வழியே தண்ணீரை வெளியே எடுத்தவன்… அவள் முகம் பார்க்க… பெரிய பெரிய இருமலுடன் கண் விழித்தாள் அமிர்தா..

இருமல் கொஞ்சம் கொஞ்சமாக நிற்க…. அவள் நடுங்கும் உடலுடன் அவனை நிமிர்ந்து பார்த்த மறுநிமிடம் அவள் வாயில் பிஸ்டலை வைத்து அழுத்தினான் சம்பால் விழியான்….

அமிர்தா அதிர்ந்து போய் அவனையே பார்த்தாள்…

ஏய்……. என்று கர்ஜனையாக வெளி வந்தது அவனின் குரல்… நடுங்கி போனாள் அமிர்தா… இது என்னோட சாம்ராஜ்ஜியம்.. இங்க வாழுறதும் சாகுறதும் நான் மட்டும் தான் முடிவு பண்ணுனும்… மீறி இங்க எதாவது நடந்தது என்று பிஸ்டலை அவள் வாயில் வைத்து அழுத்த… மிரண்ட விழிகளுடன் அவனை பார்த்து… மாட்டேன் என்பதை போல் தலை அசைக்க…. அதன் பின்னே அவள் வாயில் இருந்து பிஸ்டலை எடுத்தான் அந்த சாம்பல் விழியனுக்கு சொந்தக்காரன்…

உடல் நடுங்க அவள் நிற்க… அவளுடைய துப்பட்டாவை அவன் முகத்தில் இருந்து விலக்கியவன்… அவளிடம் திருப்பி கொடுப்பான் என்று அவள் எதிர்பார்க்க… அவனோ அதை அவன் மேல் சுற்றி கொண்டு அந்த இடத்தை விட்டு நகர….. அவனையே பே வென பார்த்துக் கொண்டு அவன் பின்னே சென்றாள் அமிர்தா…

வரும் பொழுது அவளை தூக்கி கொண்டு வந்ததால் அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை… இப்போது அந்த பாதையில் நடக்கவே அவளுக்கு சிரமமாக இருந்தது…. அவன் அவளை விட்டு தூரம் சென்று விட… அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அவன் பின்னே ஓடினாள் அமிர்தா….

சரியாக அவர்களது இருப்பிடத்திற்கு நுழையும் முன் அவளது சால்வையை அவன் மேனியில் இருந்து விலக்கி… கீழே வீசி விட்டு முன்னே நடக்க… அதை பார்த்த அமிர்தாவுக்கு பத்தி கொண்டு வந்தது…

திமிரு உடம்பு பூராம் திமிரு…. சரியான “வில்லன்” என்று முணு முணுத்தது கொண்டு அவளது துப்பட்டாவை எடுத்து கொண்டு அவள் மேனியில் சுற்றி கொள்ள… ஒரு நிமிடம் நின்று அந்த துப்படாவில் வரும் அவனது வாசனையை நுகர்ந்தவள் குதுகலத்துடன் உள்ளே சென்றாள்… மனசாட்சி அவளை காரி துப்பியது…

நீ எங்க வந்து மாட்டி இருக்க.. உனக்கு இது தேவையா என்று கேட்க… எப்படியும் இதை விட்டு போக முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு…அப்பறம் என்ன இருக்குற வர வில்லனை சைட் அடிச்சுட்டு சாக வேண்டியதான என்று பதில் கூற… இது திருந்தாது என்று மனசாட்சி உள்ளே சென்று விட்டது…

ஆங்காங்கே குளிர் காய விறகை மூட்டி ..அதை சுற்றி ஐந்து ஐந்து பேராக அமர்ந்திருந்தனர்…. அவளுக்கும் குளிர் எடுக்கவே… எங்கே சென்று அமர்வது என்று யோசித்து கொண்டிருக்க… ஒரு கூட்டத்தில் மூன்று பேர் மட்டும் அமர்ந்திருக்க அவர்கள் அருகில் தயங்கிய படியே வந்து அமர்ந்தாள்…

அவளை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தவர்கள்… பின் எதுவும் பேசாமல் அவர்களுக்குள் பேசிக் கொள்ள… அவளுக்கு தான் ஒரு மாதிரி ஆகி போனது… அங்கிருப்பவர்கள் அனைவரும் ஆண்கள் மட்டுமே… இவர்களுடன் தான் குப்பை கொட்ட வேண்டும் என்றபோது அவர்களிடம் பேசி தான் ஆக வேண்டும் என்று அவளே தொடங்கினாள்….

ஹலோ…. என் பேர் அமிர்தா… உங்க பேர் என்ன என்று அந்த மூவரையும் கேட்க… அவர்களோ அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு …. அமைதியாக இருக்க..

ஹலோ… நானும் உங்க கூட்டத்துல ஒருத்தி தான்… அப்படித்தான் அந்த வில்லன் சொல்லி இருக்காரு என்று சம்பால் விழியனை கை காட்ட…

அவள் காட்டிய திசையில் பார்த்தவர்கள் திகைத்து போனார்கள்… நீ பாய்ய தான் சொன்னியா…

உங்க பாய் பேர் என்ன என்று அவளும் திரும்ப கேட்க…

எங்களுக்கு அவர் எப்பவுமே பாய் மட்டும் தான்… நீயும் அவரை அப்படியே சொல்லு..

எனக்கு அவரு எப்பவுமே வில்லன் மட்டும் தான்… என்று சிலிப்பி கொண்டாள்..

அம்மூவரும் அவளை முறைக்க….  சரி சரி உங்க பாய் தான்… 

****

மார்க்கெட்டில் அவளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி கொண்டு மிளிர்மதி அவளது கணவனுக்கு போன் அடிக்க… ஆதர்சன் தானே வருவதாக கூறி அழைப்பை துண்டித்தான்…

வெகு நேராக காத்திருந்தாள் மிளிர்மதி… இந்த ஆளுக்கு இதே வேலையா போச்சு…வேலையினு வந்தா பொண்டாட்டியை மறந்திடுவான்… என்று தனக்குள் முனங்கி கொண்டிருக்க… அவளை நோக்கி சுர்ரென பாய்ந்தது ஒரு கத்தி….

அங்குள்ளவர்கள் அனைவரும் அதிர….. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கலவரத்தை லாவகமா தடுத்து விட்டாள் ஆதர்சனின் மனைவி …

குத்த வந்தவனின் கத்தியை இறுக்க பற்றி கொண்டாள் மிளிர்மதி…. அவள் கரங்களில் இருந்து உதிரம் வழிய…. பல்லை கடித்து கொண்டு வலியை பொறுத்துவள்…. தர்சன்ன்ன்ன்ன்……… என்று அந்த வீதியே அதிரும் அளவிற்கு கத்தினாள் …

அப்போது தான் மனைவியை தேடி அங்கு வந்தவன்… தன்னவள் இருக்கும் நிலைமையை கண்டு துடித்தவன்… நொடியும் தாமதிக்காமல் குத்த வந்தவனின் கைகளை பற்றி …கத்தியை அவன் கையில் இருந்து உருவியவன்… எட்டி உதைக்க.. பத்தடி தள்ளி சென்று விழுந்தான் அவன்….

விழுந்தவன் எழுந்து ஓட பார்க்க… அவனை விரட்டி பிடித்த தர்சன்… அவனை புரட்டி எடுக்க…அவன் உடம்பில் குருதி வழியாத இடம் இல்லை …. உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருந்தது…அவனை அப்படியே போட்டு விட்டு… தன் மனைவியின் அருகே வந்தவன்… மதி… உனக்கு ஒன்னும் ஆகளையே…சீக்கிரம் வா…ரத்தம் ரொம்ப போகுது என்று அவன் பதற…

அவளோ ஒன்றும் பேசாமல் வலியை அடக்கி கொண்டு அவனுடன் காரில் ஏறினாள்….

மருத்துவமனையில் அவளது வெட்டு காயத்திற்கு கட்டிட்டு… காயம் கொஞ்சம் ஆழமா தாம் இருக்கு மிஸ்டர் ஆதர்சன்… சோ நான் கொடுக்குற மருந்தை கரெக்டா சாப்பிட சொல்லுங்க… தையல் போட்டு இருக்ககேன்… கைக்கு ரொம்ப வேலை கொடுக்க வேணாம்…ரெஸ்ட்ல வைங்க… தண்ணி படாம பார்த்துக்கோங்க …

ஓகே டாக்டர்… எப்போ கூட்டிட்டு போகலாம்..

அவங்களுக்கு ஒகேன்னா இப்போவே கூட்டிட்டு போகலாம்…

ஓகே டாக்டர் தான்க்ஸ் என்று மிளிர்மதியை கை தாங்களாக அழைத்து சென்றான் ஆதர்சன்…

வரும் வழியிலும் அவள் பேசாமல் வர…

மதி….

ம்ம்ம்ம்

என்னாச்சு ஏன் டி ஒரு வார்த்தை கூட பேச மாட்டிற…

அவனை ஒரு பார்வை பார்த்தவள்… நீங்க மட்டும் தற்காப்பு  சொல்லி கொடுக்கலேனா… நான் இன்னைக்கு உங்க கூட வாழாமலே செத்து போயிருப்பேன் தர்சன்… என்று கண் கலங்கி கூற…

வாய மூடு மதி… நீ இன்னைக்கு பண்ணது தற்காப்பா.. உன் கையை காயம் பண்ணி வச்சுருக்க… நான் சொன்ன மாதிரி பண்ண வேண்டியதானா டி… என்று அவன் கத்த…

இல்ல அந்த இடத்துல என்னால சட்டுன்னு ஒன்னும் பண்ண முடியல…என்று அவள் பாவமாக கூறினாள்…

வீட்ல யாருக்கும் தெரிய வேணாம் … இல்லேன்னா ரொம்ப பயந்து போயிடுவாங்க… என்று ஆதர்சன் சொல்ல… அவளும் அதை அமோதித்தாள்….

வீட்டிற்கு வந்து சேர… நீங்க ஒரு காபி போட்டு கொடுங்க… நான் போய் ட்ரெஸ் மாத்திட்டு வரேன் என்று மிளிர்மதி அறைக்குள் சென்று கதவை சாற்றி கொள்ள…அவளை ஒரு நமட்டு சிரிப்புடன் பார்த்தவன்… அவளுக்கு காபி போட அடுக்களை நோக்கி சென்றான்….

அப்போது அறை கதவை திறந்த மிளிர்மதி… தர்சன்….என்று மெல்லிய குரலில் அழைக்க…இதற்காகவே காத்துக் கிடந்தவன் போல்…. என்ன பொண்டாட்டி ….உன் புருசன் உதவி வேணுமா…என்று கையை தேய்த்து கொண்டு அவள் அறையை நோக்கி சென்றான்…

*****

அப்பறம் உங்க மூணு பேருக்கு ஒரு ரகசியம் சொல்லவா என்று கிசு கிசுப்பான குரலில் கேட்க…

இவளுக்கு எதோ தெரிந்திருக்கிறது என்று அம்மூவரும் அவள் அருகே நெருங்கி என்ன விஷயம் என்று கேட்க…

அப்படி வாங்க டா வழிக்கு … என்று மனதில் நினைத்து கொண்டவள்… அந்த வில்லன் இருக்கான்ல…என்று அமிர்தா கூற…

ஹேய் மரியாதையா பேசு என்று அதில் ஒருவன் மிரட்ட.. சரி சரி உங்க பாய் இருக்காருல… என்று உதட்டை சுழித்தாள்…

ஆமா….

அவரு விழுந்துட்டாரு… என்று கூற… மூவரும் பதறி…எப்படி ஆச்சு… எங்க விழுந்தாரு… அது உனக்கு எப்படி தெரியும் என்று அவளை கேள்வி மேல் கேள்வி கேட்டனர்..

ஏன்னா அவருருரு……. என்று அமிர்தா வெட்க பட…

ஹேய் சொல்ல வந்ததை முழுசா சொல்லு..

ஏன்னா உங்க பாய் விழுந்ததே என் கிட்ட தானே என்று குண்டை போட்டாள்..

என்னதுதுதுது…….. என்று அதிர்ந்து போனார்கள் மூவரும்…

அட ஆமா ப்பா….. உங்க பாய்க்கும் எனக்கும் ஒரு இது…. என்று கூறி கண்ணாடித்து விட்டு… என் வாயில பிஸ்டல் வச்சு…என் துப்படாவையா தூக்கி போட்டுட்டா போற… உனக்கு இருக்கு டா மனதில் கருவிக் கொண்டாள்..

அவள் முன் இருந்த மூவரும் அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர…… என்ன எதுவுமே பேசாமா போறாங்க…. என்று யோசனையுடன் திரும்பியவள் நடுங்கி போனாள்…

அங்கு அவளையே முறைத்து கொண்டு ருத்ர மூர்த்தியாக நின்று கொண்டிருந்தான் சாம்பல் விழியன்… அவனது அடர்ந்த தாடியை தன் பிஸ்டளால் நீவி கொண்டு அவள் அருகில் வர… அவன் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும்…அவள் பின்னே நகர்ந்தாள்…

சனா💕

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்