Loading

விசித்திர மனிதர்கள் என்பது சிறப்பானவர்கள் , புதுமையானவர்கள் என்றெல்லாம் பெயர் உள்ளது… நாம் புதுமையான மனிதர்களை காணும் போது நமக்கே ஓர் ஆச்சரியமாக இருக்கும்.

பள்ளிக்கூடத்தில் தனது தோழிகளோடு வளர்ப்பு பிராணிகளைப் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தாள் அபிலாஷினி… அவளுக்கு ஒரு நினைவு வந்தது…

ஏய்,.. நீலவேனி உங்க வீட்டுப்பக்கத்துல தான் வயதான முதியவர் இருக்காங்களே. அவங்க வீட்டில் அணில் வளர்ப்பதைப் பத்தி சொல்லும்மா!.

 

நீயே சொல்லும்மா…

நீலவேனி வீட்டுக்கு அருகில் ஒரு வயதான முதியவர் அணில் குஞ்சு வளர்ப்பதை நீலவேனி என்னை அழைத்து சென்று காட்டினாள்… அப்போது தான் முதன்முதலில் பார்த்தேன்…

எனக்கே அந்த முதியவரை பார்க்கும் போது விசித்திரமாக இருந்தது அவருடைய கையாலேயே அந்த அணில் குஞ்சை மடியினில் வைத்திருந்தார்… அணில் குஞ்சாக பார்க்கும் போது அவ்வளவு அழகாக இருந்தது. அந்தக் காட்சியை தொலைவில் ரசித்தபடியே வந்து விட்டேன்…

ஹேய்.. அபிலாஷினி இன்னொரு விஷயம் தெரியுமா?.. அந்த முதியவர் அணில் வளர்ந்ததும் வெளியே விட்டு விடுவார்.. அணிலோ எங்கேயும் போகாமல் வீட்டையே சுற்றி சுற்றி தாவி தாவி அங்குமிங்குமாக ஓடும் ..

இப்படியொரு புதுமையான மனிதர்களும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என நினைத்து வியப்பானாள்…

அபிலாஷினிக்கும் வீட்டில் கிளி வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்டு விருப்பத்தைப் பெற்றோர்களிடம் கூறினாள்..அவளின் விருப்பத்திற்கு ஏற்ப அவங்க தந்தை கிளி கூண்டோடு வாங்கி வந்து கொடுத்தார்.

கூண்டுக்குள் உள்ள கிளிகளைப் பார்த்து மகிழ்ச்சியோடு விளையாடினாள்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. deiyamma

    வித்தியாசமான எதார்த்தமான கதை.. வாழ்த்துக்கள்..

  2. அணில் குஞ்சை மடியில வைச்சு வளர்த்திய அந்த முதியவர் நிஜமாலுமே விசித்திரமானவர்தான்..நைஸ் சிஸ்