Loading

அத்தியாயம் 14.

 

 ஆத்மார்த்தமான அழகிய கூடல் முடிந்து நெற்றியில் முத்தம் வைத்து அவளைத்தன் மார்போடு அணைத்துக் கொண்டு தட்டிக் கொடுத்தான் வி ஐ பி தூங்கும்படி..

 

 

 

 மனம் நிறைந்த சந்தோஷத்தோடு உறங்கிவிட்டாள் கண்மணி..

 

 

 

 கிடைக்குமா?.. கிடைக்குமா?.. என ஆசைப்பட்டு ஏங்கிய ஒரு விஷயம் நடந்து விட்டால் கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை..

 

 

 

 அப்படியான ஒரு நிலை தான் கண்மணிக்கு..

 

 

 அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது அவர்கள் வாழ்க்கையில்..

 

 

 ஆனால் அந்த விடியல் தினமும் அவர்களுக்கு அழகாக விடியுமா? என்பது தான் கேள்வி..

 

 காலையில் நேரத்துடன் மீரா யாதோ அனைவரையும் அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்கு வந்து விட்டார்..

 

 

 

 அனைவருக்கும் காலை உணவை மீரா சமையல்கார பெண்ணிடம் கூறி தயார் பண்ணி வைத்தார்..

 

 

 

 இரவு தாமதமாக உறங்கினாலும் கண்மணி நேரத்தோடு கண் விழித்து விட்டாள்..

 

 

 

 அவள் எழுந்து கொள்வதற்காக அசையும் போது தான் விஐபியும் கண் முழிதான்..

 

 

 

“ என்னடி அவசரம்.. கொஞ்ச நேரம் ரிலாக்ஸா படு கண்ணுமணி.. யாரும் நம்மளை எழுப்ப மாட்டாங்க.. தவறா நினைக்கவும் மாட்டாங்க.. ” என்று கூறி அவள் மேல் அவள் எழமுடியாத படி அவனது காலை போட்டு இழுத்து அணைத்துக் கொண்டான்..

 

 

 

“ ஏங்க புருஷரே.. அவங்க நாகரிகம் கருதி யாரும் எழுப்ப மாட்டாங்க.. இதுதான் சாட்டுன்னு நம்ம இப்படியே ரூமுக்குள்ள இருக்க முடியுமா என்ன?.. விடுங்க எனக்கு சங்கடமா இருக்கு எழுந்து வெளியே போகணும்..”

 

 

 விஐபி என்ன நினைத்தானோ அவளை விடுவித்தான்..

 

 

 அவளும் எழுந்து குளித்துவிட்டு அவனது மரியாதையை காப்பாற்றுவதற்காக அவன் வாங்கி அனுப்பியிருந்த புடவையில் புது புடவை ஒன்று எடுத்து அணிந்து கொண்டு தலை குனிந்தபடியே கீழே வந்தாள்..

 

 

 

 புது வீட்டில் புது சூழலில் அவளை எதுவும் கேட்டு சங்கடப்படுத்தாமல் மீராவும் யசோதாவும் அவள் வருவதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்..

 

 

 அவர்கள் எதுவும் சொல்லாமலே அவள் பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றி பூஜை செய்துவிட்டு மீண்டும் அவர்களிடம் வந்து சேர்ந்தாள்..

 

 

“ வாம்மா கண்மணி வந்து இப்படி இரு.. காபியா டீயா ம்மா குடிப்ப?..” என்று பேச்சுக் கொடுத்து அவள் தயக்கத்தை குறைத்தார் யசோதா..

 

 

 

“ காபி தான் குடிப்பேன் சித்தி.. இருங்க நானே போட்டு எடுத்துட்டு வரேன்.. ” என்றாள்..

 

 

“ அட இப்படி இருமா.. உன் கையால நாங்க ஆறுதலா காபி வாங்கி குடிச்சுக்குறோம்.. ரிலாக்ஸா இரு.. ஏன் தேவை இல்லாத இந்த பதட்டம் உனக்கு.. நாங்க உன்னை இப்பதான் புதுசா பார்க்கிறோமா என்ன?.. என அவளோடு பேசிக்கொண்டு இருந்த யசோதா எதிரே மகள் போவதை பார்த்து அவரது செல்ல மகளை அழைத்தார்..

 

 

 

“ அம்மா சீதா இங்க வா..”

 

 

 

 ஆட்கள் அதிகம் இருக்கிறார்கள்.. இது தங்கள் வீடு இல்லை.. என்பதை அறிந்து அவளும் எதுவும் பேசாமல் எதிரே வந்து நின்றாள்..

 

 

 

“ சமையல்கார அம்மாகிட்ட சொல்லி காபி போட்டு எல்லாருக்குமே எடுத்துட்டு வா சீதா… ” என்றார்..

 

 

 அவளுக்கு யாரும் வேலை சொன்னால் பிடிக்காது.. சக்தி இருந்தால் தாயை பார்த்த பார்வைக்கு எரித்து இருப்பாள்..

 

 

 

 இப்படி நேரங்களில் தான் மகளை குடும்பப் பெண்ணாக மாற்றும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நினைத்து யசோதாவும் அவளை பொறுப்பாக மாற்ற வேலை ஏவினார்..

 

 

 

 அவள் காபி எடுக்க செல்லும் பொழுது எதிராக வந்த ராம் மீது மோதி விட்டாள்..

 

 

 தாய் மீது இருந்த கோபத்தை காட்டவே ஒரு அடிமை சிக்கியது போல் வைத்து செய்து விட்டாள்..

 

 

“ ஏன்டா வளர்ந்துகெட்டவனே..! எதிரில் ஆள் வர்றது தெரியாமத் தான் மேல வந்து மோதுவியா?.. கண்ணு என்ன முதுகுலயா இருக்கு?.. சீ பே.. எப்ப திட்டினாலும் எதிர்த்து பேசாமல் இருக்க.. நீ என்ன மனுசனோ தெரியல.. சூடு சொரணை எதுவும் இல்லையா?. எருமை மாட்டுல மழை பேஞ்ச மாதிரி நான் திட்டும் போது எல்லாம் எதிர்வினை ஆற்றாமல் இருக்க.. இவன் என்ன வகை ஜந்தோ எனக்கு தெரியல..” என்று அப்பாவி பிள்ளையை ஒரு வழி பண்ணி விட்டு சென்றாள்..

 

 

 சமையல் அறையில் கனகா அனைவருக்கும் காபி தயாரித்து கப்பில் ஊற்றி தட்டில் அழகாக அடுக்கி வைத்திருந்தாள்.. அதை எடுத்துக்கொண்டு வந்து அங்கு இருப்பவர்களுக்கு கொடுப்பதற்கு தான் இந்த அம்மையாருக்கு இவ்வளவு நோவு..

 

 

 அவளே காபி தயாரித்து அதை எடுத்து வந்து கொடுப்பது போல் சலித்துக் கொண்டாள்..

 

 

 

 கண்மணி எழுந்ததும் அவனும் எழுந்து குளித்துவிட்டு தயாராகி இதோ வி ஐ பி யும் அங்கே வந்து விட்டான்..

 

 

 அவனுக்கு சந்தோஷமாக சிரித்துக் கொண்டே காபி கொடுத்தாள் சீதா..

 

 

 ராமுக்கு முறைத்துக் கொண்டு காபி கொடுத்தாள்.. அதை பார்த்து அவனும் அவளை முதல் முதலாக முறைத்துப் பார்த்தான்..

 

 

 

 இவ்வளவு ஆட்களுக்கு நடுவில் கணவன் தன் அருகே வந்து இருந்ததை அசௌகரியமாக உணர்ந்தாள் கண்மணி..

 

 

 இதற்கிடையில் அவன் எதுவும் சில்மிஷம் செய்யாமல் அமைதியாக தான் அங்கு இருப்பவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தான்..

 

 

 அவள் நெளிந்து அவனைப் தூண்டி விட்டாள்..

 

 

 

 அமைதியாக இருந்த விஜய் போய் காதல் கள்வன் விஐபி வந்து விட்டான்..

 

 

 யாரும் அறியா வண்ணம் நெளிந்து கொண்டிருக்கும் அவள் இடையில் கைவைத்து வருடினான்..

 

 

 அவளோ கரண்ட் ஷாக் அடித்தது போல் துள்ளி எழுந்து கொண்டாள்..

 

 

 இப்படியே காலை நேரம் சுவாரசியமாக சென்றது..

 

 

 

 நேரம் காலை 8 மணி ஆனதும்.. மூன்று வகையான காலை உணவு செய்திருந்தார்கள்.. அது அனைத்தையும் கனகாவுடன் சேர்ந்து சீதாவை தான் எடுத்து வைத்து பரிமாறக் கூறினார் யசோதா..

 

 

 

அத்தானின் கல்யாண வீடு என்பதால் அவளும் எதுவும் பேசாமல் தாய் சொன்னது அனைத்தையும் செய்தாள்..

 

 

 

 விஐபிக்கு கண்மணிக்கு என அனைவருக்கும் பார்த்து பார்த்து உணவு பரிமாறியவள். ராமிற்கு வந்ததும் வேண்டுமென்றே இரண்டு இட்லியை வைத்து விட்டு அதற்கு எதுவும் சட்னி சாம்பார் வைக்காமல் அவனைக் கடந்து அருகில் இருந்த அவனது நண்பனுக்கு அனைத்தையும் வைத்து விட்டு சென்றாள்..

 

 

 

 மகளைக் கவனிப்பதே வேலையாக வைத்துக் கொண்டிருந்த யசோதா “ அம்மாடி சீதா அங்க பாரு மாப்பிள்ளை தட்டுல எதுவுமில்லை.. என்றார்..

 

 

 ஏதோ தாய் சொல்லை தட்டாத நல்ல பிள்ளை போல் “ இதோ அம்மா நான் பார்க்கிறேன்.. ” என்று அவன் அருகே சென்றாள்..

 

 

 

 அவனது இயற்கையான வாசம் அவளை ஏதோ செய்தது..

 

 

 

சேர்ந்தார் போல் ஐந்து நிமிடம் அவன் அருகே நின்றாலும் அவளுக்கு உடலில் பல ரசாயன மாற்றங்கள் ஏற்படுகிறது..

 

 

 போகப்போக அதை உணர்ந்து கொண்டு தான் அவன் அருகே நிற்காமல் தவிர்த்து வந்தாள்..

 

 அவனிடம் என்ன வேண்டும் என்று எதுவும் கேட்காமல் அவனது தட்டில் அனைத்து உணவுகளையும் வைத்து சாம்பார் சட்னி என அனைத்து வகைகளையும் வைத்து விட்டாள்..

 

 

 

 நீ என்னை இனி எதற்கும் கூப்பிடாதே என்பது தான் அதன் அர்த்தம்..

 

 

 அதை புரிந்து கொண்ட ராமும் சிரித்துக்கொண்டே அவள் வைத்ததை சாப்பிட்டான்..

 

 

 

 இப்படியே நேரம் சென்றதும் சரியாக மறு வீட்டு விருந்திற்கு அழைக்க கண்மணியின் தாய் வந்துவிட்டார்..

 

 

 

 

 அவர் வந்ததை பார்த்து மீராவும் யசோதாவும் எழுந்து சென்று அவரை அழைத்து வந்தார்கள்..

 

 

“ வாங்க சம்மந்தி.. இப்படி இருங்க..” என்றார் மீரா..

 

 

 

“ கண்மணி அம்மாவை அழைச்சிட்டு போய் அவங்களுக்கு சாப்பாடு எடுத்து குடு..” என்றார் மீரா..

 

 

“ சாப்பாடு எல்லாம் வேண்டாம் சம்மந்தி அம்மா.. நான் இப்பதான் சாப்பிட்டு வந்தேன்..” என்றார்..

 

 

 அவர் முகத்தைப் பார்த்தாலே தெரியுது அவர் காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை என்று..

 

 இங்கே தங்கும்படி கூறியும் கேட்காமல் இரவு தாமதமாக தான் வீட்டிற்கு சென்றார்.. மறு வீட்டு விருந்து என அனைத்து வேலைகளையும் தனி ஆளாக இருந்து பார்த்துவிட்டு இப்பொழுது அழைக்க வந்திருக்கிறார்.. என்றும் அவர்களுக்கு தெரிந்தது.. தனியாக இருப்பவர் எங்கே தன்னை கவனித்து பார்த்திருக்க போகிறார் .. அது கண்மணிக்கும் தெரிந்தது..

 

 

 அவர் அங்கே சாப்பிடுவதற்கு கூச்சப்படுகிறார் என்பதை உணர்ந்த வி ஐ பி..

 

“ அத்தை இது உங்க வீடு.. இங்க நீங்க சாப்பிட எதுக்கு தயங்கணும்.. வாங்க..” என்று யாரும் எதிர்பாராத வண்ணம் மாமியார் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்..

 

 

 அவனின் அந்த செய்தியே அவருக்கு உணர்த்தியது.. உங்கள் இருவருக்கும் அனைத்தும் நான் தான் என்று..

 

 

 புரிந்து கொண்டு மருமகனை மகனாக ஏற்றுக் கொண்டு கூச்சப்படாமல் அவன் எடுத்து தட்டில் வைத்து தந்த உணவை சாப்பிட்டார்..

 

 

அவரே தேடினாலும் இப்படி தங்கமான மாப்பிள்ளையை தேடி இருக்க மாட்டார்..

 

 

 அனைவரையும் மறுவீட்டு விருந்துக்கு வருமாறு அழைத்துவிட்டு அவர் செல்ல இருந்த பொழுது

 

 

 யசோதா அவரும் மகளும் ராமும் யமுனாவும் முன்கூட்டியே செல்வதாக கூறினார்..

 

 

 

 நாங்கள் உங்களுக்கு உதவிக்கு வருகிறோம்.. என்று அவரிடம் அனுமதி கேட்கவுமில்லை.. அதை வீட்டில் சொல்லவும் இல்லை.. அவர்கள் எதற்காக செல்கிறார்கள் என்பதை அறிந்த மீராவும் தடுத்து பேசாமல் சரி என சம்மதித்தார்..

 

 

 

 அதன்படி கார் ராம் ஓட்ட அருகே சீதா பின் சீட்டில் மூவரும் இருந்து கண்மணியின் அம்மா வீட்டுக்கு சென்றார்கள்..

 

 

 

 அங்கே சென்று யமுனாவை வைத்துக்கொண்டு அனைத்து சமையல் வேலைக்கும் யசோதா அவருக்கு உதவி செய்தார்..

 

 

 பணக்காரர்களாக இருந்தாலும் அந்த பகட்டையும் பௌசையும் காட்டாமல் சாந்தமாக இருந்ததால் அவருக்கு அனைவரையும் நன்றாகவே பிடித்து விட்டது..

 

 

 

 ராமும் சீதாவும் எலியும் பூனையும் போல் சண்டை பிடித்துக் கொண்டு மற்ற வேலைகளை செய்தார்கள்..

 

 

 

 சீதாவுக்கு தன் அம்மா தன்னை முழு நேர வேலைக்காரியாக ஆக்கிவிட்டாரோ..! என தோன்றியது..

 

 

 வீட்டில் கூட அவள் சாப்பிட்ட தட்டை கழுவி எடுத்து வைக்க மாட்டாள்.. அப்படிப்பட்ட அவளை போகும் இடம் எல்லாம் வேலை செய்ய வைப்பதை பார்த்து கடுப்புதான் வந்தது..

 

 

 

 ஆனாலும் அனைத்தையும் எதிர்த்து கேட்காமல் விஐபிக்காக மட்டுமே பொறுத்துக் கொண்டாள்..

 

 

 

 சீதா திருமணம் செய்த பின்னும் இன்னும் விஐபியை வைத்து தான் யசோதா அவளை வேலை வாங்குகிறார்.

 

 

 அனைத்து வேலைகளும் முடிந்து பொண்ணு மாப்பிள்ளை வருவதற்காக காத்திருந்தார்கள்..

 

 

 

  நல்ல நேரத்திற்கு மீரா அவர்களை அழைத்துக் கொண்டு வந்தார்..

 

 

 இங்கே வந்தும் கண்மணி வீட்டில் விளக்கேற்றி வைத்துவிட்டு.. விஐபியின் அருகே உணவு உண்பதற்காக அமர்ந்தாள்..

 

 

 சம்மந்தி என்னும் பௌவுசை காட்டாமல் இருவரும் நல்ல முறையில் நடந்து கொண்டார்கள்..

 

 

 

 அனைவருக்கும் உணவு பரிமாறி முடித்ததும் அவர்கள் திருப்தியாக உணவு உண்டு விட்டு..

 

 

 இருந்து பேசிவிட்டு மாலை தேனீரும் அருந்திவிட்டு மாலை நேரத்தில் விஐபியும் கண்மணியும் அங்கே விட்டுவிட்டு அவர்கள் சென்றார்கள்..

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்