Loading

மௌனம் பேசும் மொழி கூட அழகடி 1

காலங்கள் எப்போதும் ஒரே போல் இருப்பதில்லை. மனித மனங்களும் அப்படி தானே. என்னவென்று சொல்வது அந்த சொக்கநாதரின் திருவிளையாடலை. எது எப்படி ஆனாலும், காலம் தான் தேவைகளை தானே நிறைவேற்றி கொள்ளும் தானே. அதனால் தான் உதித்தான் சூரியன். அவன் உதிப்பதின் அர்த்தம் என்ன, எல்லோரும் எழுந்து அவரவர் வேலைகளை தொடங்க வேண்டும் என்பது தானே, 

அதற்காக குருவிகள் பாட, காகம் கரைய, சேவலும் கூவ அழகாய் விடிந்தது அந்த காலை பொழுது. இவை அனைத்தும் கலைக்காத சூர்யாவின் உறக்கத்தை, கலைத்தது அவனவளின், தேனீர் மனம். ஏன் கலைக்காது தினமும் இம்மணம் தானே இவன் மனதை கலைத்து உறக்கத்தையும் கலைக்கிறது.

மெதுவாக கட்டிலில் அங்கும் இங்கும் புரண்டவன். கண்களைத் திறந்தான். கட்டிலை ஒட்டி இருக்கும் மேஜையில் இருந்தது, அவனுக்கான தேனீர்.

எழுந்து அமர்ந்தவன் அதை கையில் எடுத்து குடிக்க ஆரம்பித்தான். அதை பருகிய வண்ணமே தன் அறையை சுற்றி கண்களை அலய விட்டான்.

மெத்தை விரிப்புகள் எடுத்து மடித்து வைக்கப் பட்டு இருந்தது. அறை வழக்கம் போல, சுத்தம் செய்ய பட்டு இருந்தது. அந்த அறை எப்போதும் போல, தான் காட்சி அளித்தது. ஆனால் என்னவோ உறுத்தியது அவனுக்கு. மேலும் மெத்தை மீது, அவளது புடவை இருந்தது. அதை பார்த்தவனுக்கு அவள் குளிக்க சென்று விட்டாள், என்று புரிய மேலும் கண்களை சுழற்ற அது நாள் காட்டியில் நிலை குத்தியது.

அதில் தேதியை பார்த்தவன் முகம் மாறியது. ஏனோ மனதில் வலி பரவ, முயன்று தன்னை நிலைப்படுத்தி கொள்ள முயன்றான்., ஏதேதோ நினைவுகள் வந்து போக, அவனால் என்னவென்று பிரித்து அறிய முயலவில்லை. என்றாவது அனைத்தும் சரியாகும் என்ற நம்பிக்கை சிறிதாக இருக்க தான் செய்தது. அறையை விட்டு அவள் வரும் முன் வெளியே சென்றான் சூர்யா எனும் சூரியதேவ்.

வெளியே வந்தவன், தன் காலணிகள் மாட்டிக்கொண்டு உடற்பயிற்சி செய்ய சென்று விட்டான். தங்கள் வீட்டில் இருந்து, இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பார்க் வரை ஓடி அங்கு சில பயிற்சிகள் செய்து விட்டு வருவது அவன் வழக்கம்.

குளித்து முடித்து வெளியே வந்தவளுக்குத், தெரியும். அவன் சென்றிருப்பான் என்று. வந்தவள் தன் புடவை கட்டி முடித்து விட்டு, ஈரமாக இருந்த கூந்தலை, விரித்து விட்டு, காதோரம் இருந்த முடி கற்றை இருபக்கமும் எடுத்து கிளிப்பிட்டாள். காற்றில் பறந்து ஆடியது அவள் கூந்தல். நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டையும் வைத்து கொண்டாள். மிதமான ஒப்பனைகள் செய்து கொண்டாள். பார்ப்பவர்கள் ஒரு நிமிடம் நின்று பார்க்கும் அழகுதான். அதை விட, அவள் முகத்தில் இருக்கும் சாந்தம், யாரையும் அவளிடம் கடுமையாக பேச விடாது.

அவள் போன் ஒலிக்க, அதில் வந்த குறுஞ்செய்தியை பார்த்தாள்.. அதில் என்ன இருந்ததோ. அத்தனை நேரம் அவளுள் இருந்த இனிமை மறைந்து போனது. சட்டென முகத்தில் இருந்த சாந்தமும், அமைதியும் மறைந்து, கோவத்தில் சிவந்து போனது. கண்கள் சிவந்து கோபத்தில் மட்டுமா இல்லை அதில் பொங்கிவர இருந்த கண்ணீராலா என்பது அவளுக்கே வெளிச்சம்.

எல்லாம் அந்த ஒரு நொடி தான். சட்டென பழைய படி மாறி விட்டாள். தனக்கே சொல்லி கொண்டாள், “இதுக்கு எல்லாம் வருத்த படுற எடத்துல நீ இல்ல..”, என்று. காலம் வலிகளை மறக்க வைத்து விடும் என்பார்கள். ஆனால் மறத்து போகவும் தான் வைக்கிறது. அவள் அறையில் இருந்து வெளியே வர, அவனும் வீட்டினுள் நுழைந்தான். அவள் படிகளில் இறங்க, அதே படியில் ஏறினான் அவன்.

ஒருவரை ஒருவர், கடந்து சென்று விட்டனர். மேலே அறைக்கு வந்தவன், குளிக்க சென்று விட்டான். காலை உணவுகளை மேஜையில் எடுத்து வைத்தாள். மேலும் இருவருக்கும் மதிய உணவை பேக் செய்து கொண்டு வந்து, அருகில் உள்ள மேஜையில் வைத்து விட்டாள்.

இருவர் தங்கும் வீடு என்று சொன்னாள், யாரும் நம்ப மாட்டார்கள், அவ்வளவு பெரிதாக இருந்தது. பெரிய வாசல், அழகான தோட்டம். சற்று விரிவான ஹால். கீழே சமையல் அறை, டைனிங் ஹால்,  மற்றும் இரண்டு அறைகள் இருந்தது. மேலே ஒரு அறை. அது தான் அவர்களது அறை. அதற்கு மேல் மொட்டை மாடி. என்று பறந்து விரித்த, வீடு அது. வீடு எவ்வளவு பறந்து விரிந்து இருந்தால் என்ன. மனிதனின் மனங்களும் அவ்வாறு இருப்பது தானே பெரிது. அது இங்கு இருக்கிறதா என்றால் சந்தேகம் தான்.

அவள் உணவை எடுத்து வைக்க, அவனும் வந்து அமர்ந்தான். அவனுக்கு தட்டில் உணவை எடுத்து வைத்தவள். மற்றொரு தட்டில் தனக்காக எடுத்து வைத்து கொண்டாள். இருவரும் உண்டு முடித்தனர்.

மணியை பார்க்க, அது 9 என காட்டியது. அவள் தனது ஸ்கூட்டியில், ஏறி அங்கிருத்து சென்று விட்டாள் அவள், தியாரதித்தி, தன் அலுவலகம் நோக்கி. அவள் சென்ற உடன் வீட்டை பூட்டிவிட்டு தானும் தனது காரில் கிளம்பினான்.

இருவரும், எதிர் எதிர் உள்ள, அழுவலகத்திற்குள் நுழைந்தனர். அவரவர் இருக்கைக்கு சென்று அமர்ந்து கொண்டனர். எதிர் எதிராக இருந்தாலும் இரண்டும் ஒரே அலுவலகத்தின் இரு கிளைகள்.

அவன் அலுவலகத்தில் நுழைந்த அடுத்த நொடி, “டேய் சூர்யா.”,. என்று அழைத்தபடி அவனிடம் வந்தான், சாய். அவனை பார்த்து லேசாக புன்னகைத்தான், “ஹப்பி செகண்ட் அண்ணிவர்சரி.. டா மச்சான்.”, என்று சிரித்த முகத்தோடு வாழ்த்து சொல்ல.. “தன்க்ஸ்.. டா”, என்று சிரித்தான் சூர்யா.

சிரிப்போடு அவன் கூறிய நன்றியை கேட்ட சாய், அவனை முறைத்தான். “எப்பா.. டேய் போதும் டா உன்னோட நடிப்பு”, என்று தலையில் அடித்து கொண்டான் சாய். அவனை அப்போதும் அதே சிரிப்பு கலந்த, பார்வை தான் பார்த்தான் சூர்யா. “எப்படி டா இப்டி இருக்க..”, என்று அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்து சொல்ல,

“எப்படி..இருக்கேன் “,, என்றான் சூர்யா. “கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகுது தான்.. ஆனா என்னமோ நல்லா வாழற மாறி புருஷனும் பொண்டாடியும் என்னமா நடிக்கறிங்க..பாக்கற என்னாலையே முடில டா, நீ எப்டி டா வாழற??”, என்று வியப்பாக சொல்லிவவன்,

“இதுல பெரிய விஷயம் என்னன்னா எல்லாம் தெரிஞ்ச என்கிட்டேயே தன்க்ஸ் சொல்லற, எதோ பெரிய இவன் மாதிரி.. அங்க உன் பொண்டாட்டி என்னடான்னா விஷ் பண்ற எல்லாருக்கும் அப்டியே முப்பத்தி ரெண்டு பல்லும் தெரிகிற மாதிரி சிரிச்சு சிரிச்சு நன்றி சொல்லிக்கிட்டு இருக்கா… இங்கே நீயும் அதையே தான் பண்ற. அனா ஒன்னு, நல்லா வாழற கணவன் மனைவி கூட உங்களை பார்த்து கேட்டு விடுவார்களேடா “, என்று வடிவேல் பாநிஉஇல் சொன்னாலும்  அவனும் நொந்து தான் போனான்.

“நீ தியா ஆபீஸ் போனியா?”, என்று கேட்டான் சூர்யா. தான் கூறுவதை கேட்காமல் அவன் வினவுவது கடுப்பனாலும் அவனுக்கு பதில் சொன்னான்.”ஆமா போனேன் ஒரு பைல் கொடுத்துட்டு அப்டியே என் ஆளா  பாத்துட்டு வரலாம்னு போனேன்.. அப்போதான் பார்த்தேன் எல்லாரும் தியாக்கு விஷ் பண்ணிட்டு இருந்தாங்க அவளும் சிரிச்சு சிரிச்ச தாங்ஸ் சொல்லிக்கிட்டு இருந்தா.. போதுமா”, என்று அவன் உதடை வளைத்து சொல்ல..

அவன் முக கோணலாய் போவடஹி கண்டவன். “என்னென்மோ புதுசா பார்க்கிற மாதிரி சொல்ற, எல்லாம் தெரியும் தான உனக்கு அப்றம்.. என்ன  டா.. விடு விடு”, என்றான் சூர்யா தன் வலியை மறைத்து கொண்டு. “டேய்.. என்ன எல்லாம் தெரியுமா.. அப்டிலாம் இல்ல ராசா.. இங்க இருக்க எல்லாருக்கும் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிருச்சுன்னு தெரியும்.. அப்றம் நீங்க தான் சோ கால்டு ஐடியல் காப்புல்ன்னு நினைச்சுட்டு இருக்காங்க.. இது எல்லாருக்கும் தெரியும். இது இல்லாம எனக்கு வேற என்ன தெரியும்”, என்று யோசனை செய்தவன்,

“ஹான்.. இதெல்லாம் பொய்.. நீங்க ரெண்டு பேரும் நடிச்சு ஊர ஏமாதிட்டு இருக்கீங்க.. உண்மைல, நீங்க ரெண்டு பேரும் இதுவரைக்கும் அப்டி வாழல சும்மா சோசைட்டிகாக ஒண்ணா இருக்க மாதிரி காமிச்சுகிறீங்க.. இந்த ரெண்டு வருஷத்துல ஒரு வாட்டி கூட தியா உன்கிட்ட வாய தொறந்து பேசுனது இல்ல..அவ்ளோதான் பா எனக்கு தெரியும். இது இல்லாம நீ என்கிட்ட எதாச்சும் மறைச்சா அது எனக்கு தெரியாது. பா”, என்று நல்ல பிள்ளையாக சொல்ல..

“அதான் எல்லாம் சொல்றியே அப்றம் என்ன டா..”,, என்று சூர்யா கேட்க.. “சரி பா இதுக்கு மேல நீங்க என் இப்டி இருக்கீங்கன்னு சொல்லமாட்ட.. இட்ஸ் ஓகே..நீ பேச முயற்சி பண்ணலாம்ல. நீ இது வரைக்கும் பேச முயற்சி பண்ணவே இல்லயா இணைக்கு கூட?..”, என்று அவனை பார்க்க..

“பண்ணுனேன்..”, என்றவனை உறுத்துவிழித்தான் சாய். “நீ முயற்சி பண்ணுன சரி.. தியா பேசுனாலா?’, என்று கேட்க, ‘இல்லை என்பது போல , தலையை ஆட்டினான்.

‘அப்றம் என்ன பண்ணுனா உன்ன அடிச்சுட்டாளா..”, என்று  கேட்க அதற்கும் இல்லை என்று சொன்னான். “வேற என்ன திட்டுனாலா” என்று கேட்க, அதற்கும் இல்லை என்றான். “டேய்.. என்னோட பொறுமைய ரொம்ப சோதிக்கற.. ஒழுங்கா இப்போ சொல்ல போறியா இல்லையா”,, என்று அவன் கத்த,

‘போதும் சாய்.. நா உன்னோட எம்.டி.. அத நியாபகம் வச்சுக்கோ.. இப்போ நீ போகலாம்’,  என்று கடுமையாக சொல்ல..’ஓ.. சாரி எம்.டி சார்.. என்னோட நண்பன் ஒருத்தன் இருந்தான் இப்போ அவன் அந்நியான மாறிட்டான். அவன் திரும்ப அம்பியா வந்து என்ன கேட்டா.. மறக்கமாக என்ன கூப்புடுங்க அவன நான் வந்து துக்கி போட்டு மிதிகறேன்”, என்று சொல்லி விட்டு சென்றான்.

அவன் சென்ற, பின்னும் ‘பேச முயற்சி பண்ணியா’, என்ற அவன் கேள்வி அவனை கொல்லாமல் கொல்ல, பழைய நினைவில் மூழ்கினான்.

அப்போது, சூரியதேவ் மற்றும் தியாரதித்தியின் திருமணம் முடிந்து, மூன்று மாதங்கள் கடந்து இருந்தது. இதுவரை அவள் அவனிடம் ஓர் வார்த்தை கூட பேச வில்லை. அவனும் அவள் கோபம் குறையும் என்று காத்து கொண்டு இருந்தான். அப்போது தெரியவில்லை போலும் அவள் மனதை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல என்று.

அந்த நாட்களில், அவன் பொறுமையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டு இருந்த நேரம் அது. ஒரு நாள், அவனுக்குகாக தோசை ஊற்றி கொடுத்து கொண்டு இருந்தாள். அவன் ‘ரதி நா பன்னது தப்பு தான்.. இன்னும் எவ்ளோ நாள் பேசாம இருப்ப.’, என்று கெஞ்ச அவள் கண்டுகொள்ளாமல் சமையல் அறைக்கு சென்று விட்டாள்.

தானும் எழுந்து உள்ளே சென்றான். ‘ரதி உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்..”, என்று கோவமாக சொல்ல, அவள் அவனை மதிக்க வில்லை தோசை உற்றுவதிலேயே கவனமாக இருந்தாள்.

பொறுமை இழந்தவன், சட்டென அவள் கையை பிடித்து இழுக்க.. அவன் புறம் திரும்பினாள். அவனையும் அவன் பிடியில் இருக்கும் கையையும் மாறி மாறி பார்த்தாள். ஆனால் கையை உருவ முயல வில்லை. அவள் பார்வையில் என்ன இருந்ததோ அவனே விட்டு விட்டான்.

மெதுவாக தன் கையை ஏடுத்தவள், அவன் தடுக்கும் முன் அடுப்பில் இருந்த தோசை கல்லின் மீது வைத்து விட்டாள். அதில் பதறி அவன் அருகில் ஓட, அவளின் ஒற்றை பார்வையில் நின்று விட்டான். என்ன பார்வை அது? அந்த பார்வையில் இருந்தது,. “என்ன நெருங்க முயன்றாள்.. மொத்தமாக எரித்து கொள்ளவும் யோசிக்க மாட்டேன்”, என்பது தான் .

அது அவனுக்கும் நன்றாக புரிந்தது, எனவே தான் இன்று வரை அதற்கு மேல் அவன் முயற்சி செய்யவில்லை.கரணம் அதா காயம் சரி ஆகும் வரை அவள் பட்ட கஷ்டங்களை கண் எதிரே பார்த்து கொண்டு தானே இருந்தான். அவனையும் உதவி செய்ய விட மாட்டாள். அதனாலே  பேசாமல் இறுந்தாலும் சரி அவள் தன்னை தானே காய பாடுத்தி கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறான்.

அங்கு தியாவும் தன் கையில் இருந்த அதே தழும்பை தான் பார்த்து கொண்டு இருந்தாள். அவள் செவியில் கேட்டதெல்லாம், “ரதி ஓடாத நில்லு டி.. நா சொல்றத கேளு..”, என்ற சூர்யாவின் குரல் தான். அவன் குரல் கேட்க கூடாது என காதுகள் இரண்டையும் மூடி கொண்டாள்.

நினைவுகளில் புதைய இருந்தவளை மீட்டெடுத்து அவள் தோழி வினிதாவின், “ஹப்பி அண்ணிவர்சரி..”, என்ற வாழ்த்து மொழி தான்.

வினிதாவை பார்த்து புன்னகைத்தவள், ” “தேங்க் யூ வினி”, என்று அதே சிரிப்போடு சொன்னாள். “அப்றம் இன்னைக்கு என்ன பிளான்..”, என்று வினி கண்ணாடித்து கேட்க..

“அவருக்கு ஒர்க் இருக்குன்னு சொன்னாரு. சோ எதுவும் பிளான் பண்ணல”, என்று பச்சையாக பொய் சொன்னாள் தியா.

அதை நம்பிய வினி.. “ஓ.. இன்னைக்கு கூடவா உன் ஆளு வேலை வேலைன்னு இருப்பாரு..”, என்று தியாவிற்காக வருத்த பட்டாள். “என்ன பண்றது.. வினி அவரு வேணும்ன்னு சொல்லல ஏதோ முக்கியமான வேலை இருக்காம அதான். வேற ஒன்னும் இல்லை..”, என்று சொன்னவள் தன் இருக்கைக்கு சென்று விட்டாள்.

அந்த அலுவலகத்தினுள் நுழைந்தான், ஜெய் ஆகாஷ்.. நேராக உள்ளே சென்றவன், ஒரு நிமிடம் நின்று தியாவை பார்த்து விட்டு மீண்டும் சென்று விட்டான். ஜெய் ஆகாஷ் மேனேஜிங் டைரக்டர் என்று பெயர் பொறிக்கப்பட்டு இருந்த அந்த அறைக்குள்.

சிறிது நேரம் கழித்து தியாவை அழைத்தான் ஜெய் ஆகாஷ். தியாவும் உள்ளே சென்றாள். அவளை பார்த்து சிரித்தவன், “ஹப்பி அண்ணிவர்சரி தியா பேபி..”, என்று கூற.. மற்றவர்களிடம் கூறியது போல, ஜெயிடம் அவள் நன்றி சொல்லவில்லை. அவனை முறைக்கவும் முடியாமல், அடிபட்ட பார்வை பார்த்தாள்.

இதற்கு மேல் அவனாலும் முடியுமா எழுந்து அவளிடம் ஓடி வந்தான். “ஹே.. சாரி தியா.. சும்மா தான் சொன்னேன்.. மன்னிச்சுரு டா பிலீஸ்”, என்று கெஞ்ச, தியாவின் கண்ணில் இருந்து கண்ணீரும் வந்தது..

அதை பார்த்து பதறியவன், “ஐயோ தியாமா.. நான் உன்ன அழ வச்சேன்ன்னு மட்டும் உன் புருஷனுக்கு தெரிஞ்சுது.. அவ்ளோதான் என்ன நண்பன்னு கூட பார்க்க மாட்டான்.. இந்த இடத்தலயே என்ன கொன்னு போதச்சுருவான்.”, என்று பயந்தவன் போல சொல்ல..

அவளுக்கு சிரிப்பு வரவில்லை என்றாலும் கண்ணீர் நின்றது. “எதுக்கு ஜெய் எல்லாம் தெரிஞ்ச நீயே இப்டிலாம் பேசி கஷ்ட படுத்தர..”, என்று வலியோடு அவள் கேட்க.. அவள் தோல் மீது கை போட்டவன், “இல்லடா தியா.. நீ மனசு மாறிடுவன்னு ஒரு சின்ன ஆசை தான்.”, என்று அவன் சொல்ல..

அவன் கையை தட்டி விட்டவள், “அது எப்போவும் நடக்காது ஜெய்”, என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டாள். அதில் நொந்து போனான் ஜெய். என்ன தான் விளையாட்டாக பேசினாலும் அவன் மனதில் அத்தனை வலிகளும் இருக்க தான் செய்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் அவன் ஆசை.

இறைவனிடம் அன்றும் இன்றும் இது ஒன்றை தான் பிராத்தனை செய்து கொண்டே தான் இருக்கிறான். தான் எதவாது செய்தே ஆகா வேண்டும் என்று எண்ணிய ஜெய், இவர்களை சேர்த்து வைக்க மட்டமாக பிளான் செய்து கொண்டு இருந்தான். ஆனால் அதன் விளைவை அவன் அறியவில்லை..

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்