Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 4

ஆதியின் கார் வீட்டிற்கு செல்லும் வழியில் செல்லாமல் அவனின் கல்லூரிக்கு சென்றது…..

ஆதி சென்ற பின்பு கண்களில் குரோதத்துடன் இருந்த ரோஹனின் எண்ணம் எல்லாம் ஆதியை எப்படி பழிவாங்குவது என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது. இதனால் அவனின் காயம் கூட பெரிதாக தெரியவில்லை. ஆதியின் மேல் கோவமும், வெறுப்பும் அனைவரின் முன்பும் அடி வாங்கிய அவமானமும் அவனை ஏதுவும் சிந்திக்க விடவில்லை. அவனது நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும் அதே இடத்தில் காயத்துடன், கரங்களில் வழியும் இரத்தத்தை பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தான். மனதில், ‘என்மேலையே கைவெச்சுட்டல, அதுவும் அந்த அனாதைக்காக, உன்னையும் அவனையும் துடிக்க துடிக்க கதற வைக்கல என் பெரு ரோஹன் இல்லை’, என்று சபதம் எடுத்துக்கொண்டான் தனக்குள்ளே. அதற்கான திட்டத்தையும் யோசித்தவன் உதட்டில் ஒரு புன்முறுவல் தோன்றி மறைந்தது….. (என்னவா இருக்கும்……? சத்தியமா எனக்கும் தெரியல பா…..)

அப்போது அங்கே வந்த ஆதியின் கண்களில் அவ்வளவும் கோபம் இருந்தது. அவனை பார்த்ததும் ரோஹனின் நண்பர்கள் சிதறி விட்டனர். பின்ன கூட நின்ன குத்ததுக்கு நம்மள அடுச்சு தொவச்சுட்டா…. என்ற எண்ணம் தான். (அதெல்லாம் அவங்க கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா…. அதான் எஸ்கேப் ஆயிட்டானுங்க…) ரோஹனை பார்த்ததும் இருக்கும் கோவம், இயலாமை தன் ஆருயிர் நண்பனின் கண்ணீர் எல்லாம் சேர்ந்து இன்னும் அவனை கோவத்தின் உச்சிற்கே கொண்டு சென்றது. பெரும்பாலும் நிறைய நபர்கள் கிளம்பி விட்டதால் ஒரு சிலர் மட்டுமே இருந்தனர். அது ஆதிக்கு இன்னும் வசதியாக போய்விட்டது.

ரோஹனை தனியாக இழுத்து சென்று அவனின் எலும்புகளை எண்ணி கொண்டு இருந்தான். அவனின் கோபம் அணைகளை உடைத்து வெளி வரும் வெள்ளத்தை போல் இருந்தது. அதை யாரால் தான் கட்டுப்படுத்த முடியம். ரோஹனும் முடிந்த அளவுக்கு எதிர்த்தான். ஆனால் ஏற்கனவே ஏற்பட்ட காயம் சோர்வு எல்லாம் சேர்ந்து அவனை பலவீனபடுத்தி இருந்தது. அவனாலும் சிறிது நேரம் கூட தாக்கு புடிக்க முடியவில்லை. ஆதியின் கோவமும் வேகமும் அப்படி இருந்தது…. இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் அவனுக்கு சங்க ஊதியிருப்பான். அதற்குள் ரோஹனின் அலறலை கேட்டு சில பேர் வந்து ஆதியை அவனிடம் இருந்து பிரித்து விட்டனர்.

ஆதியின் கோவம் தணியும் முன் ரோஹானை அங்கே இருந்து கூட்டி சென்று விட்டனர். ஆதியும் கோவம் தணியாமல் அந்த கோவத்தை காரில் காட்டி ஒரு வழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தான். தன்னிடம் உள்ள சாவியை வைத்து கதவை திறந்து அறைக்குள் அடைந்து கொண்டான். அப்போது தான் பார்த்தான் ரோஹனால் ஏற்பட்ட சில கீறல்களும், காயங்களும் இருந்தது. குளித்து விட்டு பெட்டில் படுத்தவனுக்கு தூக்கம் என்பது தூரமாகி போனது. தன் நண்பனை நினைத்து, கோவம் மட்டுமே இருந்த அந்த கண்களில் சில கண்ணீர் துளிகளும் நானும் இருக்கிறேன் என்று எட்டி பார்த்தது. ஆதி பெரும்பாலும் தன் உணர்வுகளை யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான். தனிமையில் மட்டுமே சில நேரம் வெளிப்படும்….. இப்படி தன் நண்பனை நினைத்து கொண்டே விடியும் தருவாயில் தான் தூக்கம் அவனை தழுவியது.

இங்கு கார்த்தி தன்னிடம் உள்ள கண்ணீர் இவ்வளவுதான் என்ற அளவிற்கு அழுது தீர்த்து விட்டான். ஆறுதல் சொல்லவும், அரவணைக்கவும், யாரும் இல்லாத இந்த தனிமையும் இன்னும் அவனை கொல்லாமல் கொன்றது. இன்னும் எத்தனை பேரிடம் தான் அவமானபடுவது என்று தெரியாமல் புலம்பி கொண்டு இருந்தான். இரவு முழுவதும் அழுது சிவந்து இருந்த அந்த கண்கள் அவனின் மனநிலையை சொல்லாமல் சொல்லியது. அழுது அழுது சோர்ந்து போய் ஒரு கட்டத்தில் தூங்கியும் விட்டான். காலையில் வெகு நேரம் கழித்து எழுந்ததும் தான் இரவு நடந்த நிகழ்வுகள் கண்முன்னே வந்து செல்ல…. இதற்கு சீக்கிரமாக ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்து தன் வேதனைகளை தனக்குள் மறைத்து இயல்பாய் இருக்க முயற்சி செய்து கொண்டு இருந்தான்.

கார்த்தி தனது அலைபேசியை எடுத்து பார்க்க அது அணைந்து இருந்தது. பவர் இல்லாமல் அணைந்தது விட்டது போல என நினைத்து அதை சார்ஜ் போட்டு விட்டு அலுவலகம் கிளம்பி கொண்டு இருந்தான். அப்போது அலைபேசி அடிக்க எடுத்து பேசினான். இரவு ஆதி செய்த அனைத்தும் ஒன்று விடாமல் சொல்லி கொண்டு இருந்தான் அவனின் நண்பன் ஒருவன். கார்த்திக்கு ஒரு பக்கம் ஆறுதலாக இருந்தாலும் இதனால் அவனுக்கு எதாவது நேர்ந்து விட்டால் என்ற பயமும் சேர அவசரமாக கிளம்பி வந்து விட்டான் நண்பனை தேடி…. (இதுக்கு மேல தான் உங்களுக்கே தெரியுமே……..)

நேற்று நடந்த நிகழ்வுகளை இருவரும் நினைத்து பார்த்து கொண்டு இருக்கும்போது, ஆதியின் நினைவுகளை நிகழ்காலத்திற்கு திருப்பி கொண்டு வந்தது ஒரு பாடல்….

என் Friend’da போல யாரு மச்சான்..
அவன் Trend’da யெல்லாம் மாத்தி வச்சான்..
நீ எங்க போன எங்க மச்சான்..
என எண்ணி எண்ணி ஏங்க வெச்சான்..
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..

என பாடல் ஒலித்து கொண்டு இருந்தது. ஆதியும் கார்த்தியும் ஒருசேர திரும்பி பார்க்க வெண்பா கையில் போன் உடன் கண்களில் கண்ணீருடன் வந்து கொண்டு இருந்தாள்…. இருவரும் அவளை புரியாமல் பார்க்க, “உங்க நட்ப பார்த்து நம்ம வீடே கண்ணீர் கடலில் மூழ்கி விட்டது கோபால்…. மூழ்கி விட்டது…. பாருங்க நான் கூட அழுதுட்ட…” என்று வராத கண்ணீரை துடைத்து கொண்டே… அவர்களை கலாய்த்து கொண்டு இருந்தாள்…. இருவரும் அவளை துரத்தி நிஜமாகவே அடி வெளுத்து விட்டனர்… அவளின் கண்களில் கண்ணீரை கண்டதும் தான் அமைதியாகினர் இருவரும். வெண்பா திரும்பி கோவமாக முறைத்து… “டேய் என்னைய அழவெச்சுட்டீங்கள்ள இருங்கடா….. நீங்க ரெண்டு பெரும் கடைசி வரைக்கு சிங்கள் தான்… இது இந்த முரட்டு சிங்கள் ஓட சாபம்…” என்று மூச்சை பிடித்து பேச, அதெற்கெல்லாம் அசருபவர்களா நம் ஹீரோஸ்…. ஆதி அவளிடம், “அடியே நீ விட்ர சாபம் எல்லாம் பலிக்காது டி குள்ள கத்திரிக்கா….. அதுவும் இல்லாம எங்களுக்கு எவ்ளோ கேர்ள்ஸ் பேன்ஸ் இருக்காங்க தெரியுமா… நாங்க-தா இப்போ அதெல்லாம் வேண்டாம் பொறுமையா பாத்துக்கலாம்னு போன போகுதுனு விட்ருக்கோம்…. என்னடா மச்சான்?…” என்று வெண்பாவிடம் ஆரம்பித்து தன் நண்பனிடம் முடித்தான். அவனும் சிறு புன்னகையுடன் ஆமாம் என்று தலை ஆட்ட… வெண்பா, “டேய் ரொம்ப பந்தா பண்ணாதீங்க…. நான் சாபம் விட்ட பலிக்கும்…” என்க அதையும் பாப்போம் என்று மாற்றி மாற்றி வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தனர்……….

கீழே இருந்து சீதா குரல் கொடுத்ததும் தான் இவளுக்கு வந்த வேலையை நியாபகம் வந்தது…. “அடடா!! உங்களை சாப்பிட கூப்பிட்டாங்க… அத சொல்ல தான் வந்தேன்… இங்க வந்து பார்த்த ரெண்டு பெரும் அன்பை பொழிஞ்சு அதுல வீட நனைய வெச்சுட்டீங்க… முடியல… இதெல்லாம் பாக்கணும்னு இருக்கு…. எல்லாம் என் நேரம்…சரி போதும் முஸ்தபா சாங் பாடுனது… சீக்கிரமா வாங்க…” என்று கலாய்த்து விட்டு அவர்கள் அடிப்பதற்குள் ஓடி விட்டள். வெண்பாவினால் கொஞ்சம் நிலைமை இலகுவாக மாறி இருந்தது. வெண்பாவின் திட்டம் தான் இது. ஏதவது நடந்தால் தான் இவர்கள் இப்படி இருப்பார்கள் என்று வேண்டும் என்றே அவர்களிடம் வம்பு வளர்த்து நிலைமையை சரி செய்து விட்டு சென்றாள்…… இவர்களும் சிரித்து கொண்டே அவளின் பின்னாடி சென்றனர்……

**************************************

கயல் தயாராகி, அவளின் சித்தியிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டாள். சுமதிக்கு கயல் கல்லூரி செல்வது பிடிக்காது. இருந்தாலும் செல்வாவிற்காகவும், சொத்திற்காகவும் அமைதியாய் இருந்தாள்…. ஏனெனில் செல்வாவின் பெயரில் தான் அனைத்து சொத்துக்களும் இருந்தது. அதனால் பல்லை கடித்து பொறுத்து கொண்டாள். சுமதியின் திட்டம் இதுவரை யாரும் அறியவில்லை. சுமதிக்கு ஒரு தம்பி உண்டு… வெற்றிவேலன்… ஊரில் இருக்கிறான். அவனின் குணமும் சுமதியின் குணமும் கிட்டத்தட்ட ஒன்று.. சொத்து, பணம், பணம் தான் எல்லாம் என்று நினைப்பவர்கள். ஒரு முறை ஊருக்கு வந்தவனுக்கு கயலை பார்த்த உடனே பிடித்து விட்டது. அவளின் அழகில் ஈர்க்கப்பட்டு, அவளை எப்படி ஆவது மணந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை தன் அக்காவிடமும் சொல்லி விட்டான். அப்போது தான் சுமதிக்கு, ‘இத எப்படி நான் யோசிக்காம விட்டேன்… இவனுக்கு அவளை கட்டி வெச்சு சொத்து எல்லாம் புடிங்கிற வேண்டியது தான்…’ என திட்டம் தீட்டினாள்… அவனிடம் ஆசை வார்த்தைகளை கூறி நேரம் வரும் போது சொல்றேன்… அவளை உனக்கு கட்டி வைக்க வேண்டியது என் பொறுப்பு… நான் பாத்துக்குறேன்…” என்று அவனின் ஆசைகளை இன்னும் தூண்டி விட்டு இருந்தாள்… இவனும் கயலை நினைத்து அவளுக்காக காத்து கொண்டு இருக்கிறான்… ஆனால் அவனுக்காகவும் ஒரு ஜீவன் உண்மையாக உருகி கொண்டு இருப்பது அவனுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை… பணமும் அழகும் அவனின் கண்களை மறைத்து வைத்து இருந்தது…… இது தான் விதியோ…….!!!

காதல் தொடரும்.
மீயாழ் நிலா

தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
14
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. priyakutty.sw6

      எல்லாருக்கும் ஜோடி இருக்கு போலயே dr…❤

      வெண்பா நல்லா பேசினாங்க… 😊