Loading

ரவு இரண்டு மணிக்கு கரிசல்பட்டியை நெருங்கி இருந்தனர். உறக்கத்தில் இருந்து விழித்தவள் தான் சாய்ந்திருப்பது யார்மேல் என நிமிர்ந்துப் பார்த்தாள் மலர்விழி.

அவனது நெஞ்சினோரம் அவளைத் தாங்கி, ஒரு கையால் அவளது தோள்களை அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தான் பாரிவேந்தன். அவனின் முகத்தைப் பார்த்தவள், விலக மனமில்லாமல் மீண்டும் அவள் நெஞ்சத்தில் தஞ்சமடைய, அவனது அணைப்பு இறுகியது.

காரில் ஏசி அவளுக்கு குளிரை உண்டாக்கி இருக்க, அவனின் வெப்பம் அதனை தணிக்க முயன்று கொண்டிருந்தது. கண்களை இறுக மூடி அந்த தருணத்தை அவள் ரசித்துக் கொண்டிருக்க, “மலர், வீட்டுக்கு பக்கத்துல வந்துட்டோம் டி, எந்திரிஎன்ற இந்திராவின் குரல் கேட்டு பாரிவேந்தன் முழித்தவன் அவள் முழிப்பதற்குள் தன் கரங்களை எடுத்திருந்தான்.

அவள் அப்பொழுது தான் முழிப்பதுபோல் எழுந்துக் கொள்ள, செந்திலும் சிலம்புவும் ஆழ்ந்த உறக்கத்திலேயே இருந்தனர். அவர்களைத் தட்டி எழுப்பினாள் மலர். இந்திராவிடம், “ஏன் டி, நீ நைட் தூங்கவே இல்லயா?” என கொட்டாவி விட்டபடி வினவ, “தூக்கம் வரல டிஎன்றவளை ஒரு மார்க்கமாக பார்த்தான் சண்முகம்.

அவளோ வெளியே வேடிக்கை பார்ப்பது போல் பார்க்க, “மேடம்க்கு இருட்டுல அப்படி என்ன தெரியுதாம்?” என அவளுக்கு மட்டும் கேட்கும்படி கிசுகிசுத்தான்.

அவளோ பதிலளிக்காமல், காரில் பாடலை ப்ளே செய்ய, அதுவோ காதல் பாடலை ஒலித்தது. “எல்லாம் நேரங்கெட்ட நேரத்துல என் கால வார்றதுலயே குறியா இருக்குங்க!” என முணுமுணுத்தப்படி அதனை ஆப் செய்தாள் இந்திரா.

அதற்குள் வீடு வந்திருக்க, நண்பர்கள் மூவரும் இறங்கிக் கொண்டனர். “நானும் இங்கயே இறங்கிக்கவா?” என தன் கணவனிடம் அனுமதி கேட்க, “சரி, போய் எல்லாரும் நல்லா ரெஸ்ட் எடுங்க. காலைல வந்து கேம்ப்க்கு அழைச்சுட்டுப் போறேன்என்றவன், அவர்களை விட்டுவிட்டு பாரிவேந்தனும் சண்முகமும் அங்கிருந்து ஊருக்குள் சென்றனர்.

வீட்டிற்குள் வந்தவுடனே ஹாலிலேயே மூவரும் மட்டையாகிவிட, “உள்ள போய் படுக்காம இங்கயே உருளுதுங்க பாருஎன தலையில் அடித்துக் கொண்ட இந்திரா, அனைவரையும் ஒழுங்காக படுக்க வைத்துவிட்டு போர்வையை எடுத்து வந்து போர்த்தி விட்டாள்.

பின் மலரின் அருகில் அவளும் படுத்துறங்க, பயணக் களைப்பில் நன்றாக உறங்கினர் நால்வரும். காலை எட்டு மணிக்கு அங்கு வந்த பாரிவேந்தன், கதவு ஒழுங்காக சாற்றாமல் இருக்க, எழுந்து விட்டார்கள் போல என்றெண்ணி கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தவன் அதிர்ந்தான்.

நால்வரும் இன்னும் நித்திராதேவியின் ஆளுமையின் கட்டுப்பாட்டில் தான் இருந்தனர். “கதவ தொறந்து போட்டுட்டு இப்படி பட்டாசாலைலயே எப்படி தூங்குதுங்க பாரு!” என தலையில் அடித்துக் கொண்டவன், செந்திலை முதலில் எழுப்பிவிட்டு அவனிடம் மற்றவர்களை எழுப்ப சொல்லிவிட்டு சமையல்கட்டிற்குள் புகுந்தான்.

ஏய், எந்திரிங்க டிஎல்லாரும் பன்னி மாதிரி தூங்குதுங்க பாருஎன இந்நேரம் வரை தானும் உறங்கியதை கண்டுகொள்ளாமல் தன் தோழியர்களை எழுப்பி விட்டான்.

ஒரு நீண்ட போராட்டத்திற்கு பின் மூவரும் எழுந்திரிக்க, சோம்பல் முறித்துக் கொண்டே சமையற்கட்டை நோக்கி நடந்தாள் மலர்விழி. மற்றவர்கள் முகம் கழுவ பின்பக்க கொல்லைப்புறத்துக்கு சென்றிருக்க, கொட்டாவி விட்ட வண்ணம் சமையற்கட்டுக்குள் நுழைந்தவள் அதிர்ந்தாள்.

அங்கு காஃபி போட்டுக் கொண்டிருந்த பாரிவேந்தனைக் கண்டவள், அவசர அவசரமாக தன் கோலத்தைப் பார்க்க அதுவோ அலங்கோலமாக இருந்தது. வேகவேகமாக சரிசெய்ய முயல, அவள் கையில் காஃபி டம்பளரை திணித்தவன், “இதுலயும் செமயா இருக்க டி பொண்டாட்டிஎன காதோரம் கிசுகிசுத்துவிட்டு வெளியே மற்றவர்களுக்கு காஃபி எடுத்துக் கொண்டு செல்ல, அவனின் கிசுகிசுப்பான குரல் இன்னும் அவள் காதோரம் ஒலித்துக் கொண்டிருந்தது.

முகம் கழுவி விட்டு, அங்கு வந்த நண்பர்கள் பாரி காஃபியுடன் தயாராக நிற்பதைக் கண்டு காலை வணக்கம் கூறிக் கொண்டே ஆளுக்கொரு டம்பளரை எடுத்துக் கொண்டு அமர்ந்தனர்.

தன் கையில் இருந்த காஃபி டம்பளரை பிடித்த வண்ணம் ஹாலிற்கு வந்தாள் மலர்விழி. “மலர் நீ ரொம்ப லக்கி டிலேட்டா எந்திரிச்சாலும் இப்படி சுடச்சுட அருமையான காஃபி போட்டுக் கொடுக்கிற ஹஸ்பண்ட் எத்தனை பேருக்கு வாய்க்கும்என இந்திரா புகழ, அவளை முறைத்தவள், “சீக்கிரம் கிளம்புங்க, லேட்டாச்சுஎன்றவாறே தன் அறைக்குச் சென்றாள்.

சிலம்புவோ, “இதெல்லாம் கத்துக்கோ டா, எதிர்காலத்துல யூஸ் ஆகும்என்க, “விட்டா உங்களுக்கு சோறே ஆக்கிப் போட சொல்லுவீங்க டி எங்களைய!” என முறைத்தான் செந்தில்.

அதுல என்ன தப்பு, ஒருநாள் என் சமையல்னா ஒருநாள் நீ தான் சமைக்கணும்என்றவாறே சிலம்பு எழுந்திரிக்க, தலையில் கைவைத்த வண்ணம் அமர்ந்திருந்தான் செந்தில்.

இதெல்லாம் வாழ்க்கைல சகஜம் டா நண்பாஎன அவன் தோளில் இந்திரா கைப்போட்டவாறே கூற, “பிரதர்…” என பாரியை சோகமாக பார்த்தான்.

அவனோ கேலியாக புன்னகைக்க, “யூ டூ புரூட்டஸ்!” என்றான் செந்தில் அழாத குறையாய். “போய் கிளம்பு டா மொதஎன அவனை அவனது அறைக்குள் தள்ளிவிட்ட இந்திரா தானும் தயாராகச் சென்றாள்.

அரை மணிநேரத்தில் அனைவரும் தயாராகி வந்திருக்க, மலர்விழி சமையல் அறையில் ஏதோ உருட்டிக் கொண்டிருந்தாள். இவர்களை எழுப்பி காஃபி கொடுத்து விட்டு பாரிவேந்தன் தோட்டத்திற்குச் சென்றிருக்க, அவன் வருவதற்குள் காலை உணவை சமைத்திருந்தாள் மலர்விழி.

சாப்பிட்டு கிளம்பலாம் இந்துஎன்றவள், அவர்களை சாப்பிட அழைக்க மூவரும் சாப்பிட அமர்ந்தனர். “அவரு எங்க போனாரு!” என மலரின் கண்கள் தன் கணவனைத் தேட, அதனைக் கண்ட இந்திரா, “யார தேடற மலர், அண்ணாவயா?” என்றாள்.

அது, ஆமாவந்தாருன்னா அவருக்கும் சேர்த்து பரிமாறிருவேன்லஎன்க, “அண்ணா தோட்டத்துக்குப் போய்ருப்பாருன்னு நினைக்கிறேன்என அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே பாரிவேந்தன் வீட்டினுள் நுழைந்தான்.

அதோ அண்ணாவே வந்துட்டாங்கஎன்க, அவனைக் கண்டவள், “சாப்பிடுங்கஎன்றாள். “இல்ல, அங்க சண்முகம் வேற சாப்பிடாம இருப்பான். நானும் அவனும் வெளிய சாப்பிட்டுக்கிறோம், நீங்க சாப்ட்டு கிளம்புங்கஎன்றவனிடம் தன் நண்பர்களுக்கு பரிமாறிக் கொண்டே, “அவருக்கும் சேர்த்து தான் சமைச்சேன், ரெண்டு பேருக்கும் கேரியர்ல எடுத்து வைக்கிறேன். ஒன்னா சாப்பிட்டுக்கோங்கஎன்றவாறே, டிபன் கேரியரையும் எடுத்து வந்து வைத்தாள்

சண்முகம் சாப்பிடுவானா என்ற சந்தேகம் பாரிவேந்தனுக்கு இருந்தாலும் அதைக் கூறி தன் மனைவியின் மனதை கஷ்டப்படுத்த விரும்பாமல் அவள் கூறியதற்கு சரியென தலையாட்டினான்.

சாப்பிட்ட பின் நால்வரும் மருத்துவ முகாமிற்கு கிளம்ப அவர்களை காரில் கொண்டு போய் விட்டுவிட்டு உணவுடன் தன் வீட்டிற்குச் சென்றான். இரவு உறங்காததால் இன்னும் சண்முகம் உறங்கிக் கொண்டிருக்க, அவனை எழுப்பி விட்டவன் உணவருந்த அழைத்தான்.

காலைக் கடன்களை முடித்து விட்டு சாப்பிட அமர்ந்தவன், “ஹோட்டல்ல வாங்குன மாதிரி தெரியலயே மாப்பிள்ளை, வீட்ல செஞ்ச மாதிரி இருக்குஎன உணவை தட்டில் போட்டுக்கொண்டே கூற, “அதுமலர் தான் கொடுத்து விட்டாஎன தயங்கியவாறே கூறினான் பாரிவேந்தன்.

அவன் ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, பாரிவேந்தனும் அமைதி காத்தான். அவனும் உண்ணாமல் அமர்ந்திருப்பதைக் கண்ட சண்முகம், “சாப்பிடுங்க மாப்பிள்ளைஎன்றவன் தானும் சாப்பிட ஆரம்பிக்க, பாரிவேந்தனும் சாப்பிட ஆரம்பித்தான். சண்முகத்தின் மனதில் என்ன ஓடுகின்றது என அவனால் அறிந்திட முடியவில்லை. எதையும் முகத்தில் காட்டாமல் அவன் மிக கவனமாக செயல்பட பாரிவேந்தனின் ஆராய்ச்சி பார்வையும் அவனைத் தொடர்ந்துக் கொண்டே தான் இருந்தது.

கோவை மாநகர்

காலை உணவை முடித்துவிட்டு கரிசல்பட்டி சொந்தங்கள் ஊர் திரும்ப தயாராகினர். அப்பொழுது ஹரிஹரன் பத்மாவிடம், “அம்மா நாங்களும் ஊருக்கு கிளம்புறோம்என்க, அவருக்கு மட்டுமல்ல அதனைக் கேட்ட யாழினிக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது.

என்ன டா சொல்ற? நேத்து தான் ரிசப்ஷன் முடிஞ்சுது, உனக்கு தான் இங்கேயே வேலைய டிரான்ஸ்பர் பண்ணிக்கலாம்னு அப்பா சொன்னாரே டாஎன்றார் பத்மா அதிர்ச்சியுடன்.

சொன்னாரு தான் ம்மாஆனா, மொதல்லயும் அப்பாவோட உதவியால தான் எங்களுக்கு போஸ்ட்டிங் ஃபிளவர் ஊர்ல வாங்குனோம். போய் ஒரு மாசம் கூட ஆகாத நிலைல திரும்ப மாத்த சொல்லி கேட்கிறது நல்லா இருக்காது ம்மாஅப்பா கேட்டா மாட்டேனு சொல்ல மாட்டாங்க தான், ஆனா வேண்டாம் ம்மா

நாங்க ஆறு மாசம் கிராமத்துல வொர்க் பண்ணனுங்கிற ஆசைல தான் அங்க போனோம். இப்போ நான் மட்டும் தனியா வர்றது கஷ்டமா இருக்கு, அதான். அதுவும் இல்லாம யாழினிக்கும் கொஞ்சம் நாள் அவங்க ஊர்ல இருந்தா அவளுக்கும் ஒரு மனமாற்றத்துக்கு நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்என்றான் ஹரிஹரன்.

நீ போயே ஆகணும்னா நீ மட்டும் போய்ட்டு வா டா. யாழினி இங்கயே இருக்கட்டும், அவள நாங்க பார்த்துக்க மாட்டமா!” என்க, அவரது கன்னத்தைப் பிடித்து, “நீங்க நல்லா பார்த்துக்குவீங்க ம்மா, அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல. ஆனா, எங்க கல்யாணம் எப்படி ஒரு சூழ்நிலைல நடந்துச்சுனு உங்களுக்கு தெரியும். அவளால கண்டிப்பா நான் இல்லாம இங்க தனியா இருக்க முடியாது ம்மா, உங்களுக்கும் அவளுக்கும் கொஞ்சம் நாள் இந்த கால அவகாசம் தேவைன்னு நினைக்கிறேன். அடுத்த முறை நாங்க இங்க வரும்போது அவள உங்க மனபூர்வமா மருமகளா ஏத்துக்கணும். எங்களுக்குள்ளயும் ஒரு புரிதல் வேணும்ல ம்மா, அதான் இந்த முடிவு எடுத்தேன்என்றவனிடம் என்ன சொல்வது எனத் தெரியாமல் தவித்தார் பத்மா.

இதனை யாழினியும் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள். தனக்காக தன் கணவன் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வது புரிந்து தான் இருந்தது. இதுவே பழைய மனநிலையில் இருந்தால் இதனையும் தவறாக தான் எண்ணி இருப்பாள். ஏனோ நேற்றைய சம்பவத்தால் இன்று அவள் மனம் கொஞ்சமே கொஞ்சமே அவனை மனதார நம்பியது.

நீ முடிவு பண்ணிட்டு என்கிட்ட சொல்ற, இதுக்குமேல நான் எதுவும் சொல்றதுக்கு இல்ல. சரி கிளம்புங்க, ஆனா அங்க போய் எங்க தங்குவீங்க?” என்றார் பத்மா. தன் மகன் மாமனார் வீட்டில் தங்குவானா அல்லது தோழியின் வீட்டில் தங்குவானா என்ற குழப்பம்.

அவனோ, “ஊர்ல ஒரு வீடு பார்த்துருக்கேன் ம்மா. ஏற்கெனவே வீட்டுக்கு சொல்லி வச்சுட்டேன், இப்போ ஏற்பாடும் ஆகிருச்சுஎன்க, பத்மாவிற்கு மட்டுமல்ல யாழினிக்கும் ஆச்சரியம் தான். “நீ போய் தேவையானத எடுத்து வை யாழுஎன தன் மனைவியை அறைக்கு அனுப்பி வைத்தான் ஹரிஹரன்.

ஆக, எல்லாத்தையும் செஞ்சுட்டு தான் என்கிட்ட இன்பார்ம் பண்ற!” என பத்மா முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள,

சொல்லக்கூடாதுனு இல்ல ம்மா. அங்க போய் ஃபிளவர் வீட்லயும் தங்க முடியாது, நான் மட்டும்னா பரவாயில்லை. இப்போ யாழுவ கூட்டிட்டு அங்க போறது எனக்கு சரியா படல, அதேநேரம் யாழு வீட்லயும் தங்க எனக்கு உடன்பாடு இல்ல ம்மாநீங்களும் எங்கள பார்க்க வந்தா ரெண்டு நாள் தங்கற மாதிரி வரணும், அதான் தனியா வீடு பார்த்தேன். நாங்க இப்போ போய் வீட்டுக்கு தேவையானத வாங்கி வைக்கிறோம். வர்ற வெள்ளிக்கிழமை பால் காய்ச்சலாம், நீங்களும் அப்பாவும் வந்துருங்க ம்மாஎன்க, இதுவரை விளையாட்டு பிள்ளையாய் திரிந்தவன், இன்று குடும்பஸ்தனாய் மாறி இருப்பது ஒரு தாயாய் சந்தோசப்பட்டாலும் திருமணமான கையோடு அவன் பிரிந்து செல்வது சற்று கஷ்டமாகத் தான் இருந்தது பத்மாவிற்கு.

நீ எப்பவும் நல்லா இருக்கணும் கண்ணாஎன அவன் முகத்தை வருடியவருக்கு மலரை நினைத்து ஏக்கம் உண்டாக, “யாழினி உங்களுக்கு ஒரு நல்ல மருமகளா இல்லாம மகளா இருப்பானு எனக்கு நம்பிக்கை இருக்கு ம்மா. எல்லாம் சீக்கிரமே நடக்கும்என்றவன், தங்கள் அறைக்குச் சென்றான்.

பத்மாவும் இதனைப் பற்றி தன் கணவரிடம் கூறச் சென்றார். ஊர்காரர்களுடனே கமலமும் சுந்தரபாண்டியனும் கிளம்ப, யாழினியும் ஹரிஹரனும் தங்களது லக்கேஜ்களுடன் கீழே வந்தனர்.

அவர்களை புரியாமல் நோக்க, “நாங்களும் ஊருக்கு வர்றோம் மாமா, நான் போட்ட லீவு முடியப் போகுதுஎன்க, சுந்தரபாண்டியன் ராஜனையும் பத்மாவையும் பார்த்தார்.

அவன் ஆசைப்பட்ட படி உங்க ஊர்லயே ஆறு மாசம் வேலை பார்க்கலாம்னு நினைக்கிறான் சம்பந்தி, அதான் நாங்களும் சம்மதம் சொன்னோம். உங்களுக்கும் உங்க மக பக்கத்துல இருக்கிறது சந்தோசம் தான!” என்க, அவர்கள் வந்தால் எங்கு தங்குவார்கள் என்ற சந்தேகமும் வந்தது சுந்தரபாண்டியனுக்கு.

அவரின் எண்ணவோட்டத்தை படித்தவன் போல், தான் ஏற்பாடு செய்திருப்பதைக் கூற, “நம்ம வீடு அங்க இருக்கும்போது அங்க தனி வீடு பார்க்கணுமா மாப்பிள்ளை?” என்றார் சங்கடத்துடன்.

அதற்கு அவன் பதிலளிக்கும்முன், “இல்ல ப்பா, அது சரிபட்டு வராது. அவர் பண்ணது தான் சரி ப்பா. எப்படி இருந்தாலும் நம்ம வீட்டுக்கு பக்கத்துல தான ப்பா வர போறோம்என்றாள் யாழினி.

சரி மா, உங்களுக்கு எது விருப்பமோ அதையே பண்ணுங்கஎன்றவர், “அப்போ நாங்க கிளம்புறோம் சம்மந்தி, கண்டிப்பா அடிக்கடி ஊருக்கு வந்துட்டுப் போங்கஎன்றவர், “வாங்க கிளம்பலாம்என அனைவரும் கிளம்பினர்.

போகும்போது பத்மாவிடம், “போய்ட்டு வரோம்என்றாள் யாழினி. அவள் மனதில் இன்னும் அவர்மேல் கோபம் இருக்கத் தான் செய்தது. ஆனால் அவர் மனம் அவளை ஏற்க முன்வந்திருந்தது.

சரி மா, பார்த்துப் போய்ட்டு வாங்க. அவனுக்கு லீவு கிடைச்சா ரெண்டு பேரும் இங்க வந்து இருந்துட்டுப் போங்க, நான் தனியாளா தான் இருக்கணும். நீங்க வந்தா தான் வீடே கலகலப்பா இருக்கும்என்றவர், தன் மகனுக்கு என்னென்ன பிடிக்கும் என்ற லிஸ்டையும் சேர்த்தே கூறினார்.

இப்படி செஞ்சா அவன் நல்லா சாப்பிடுவான் மா யாழினி, அவன நேரத்துக்கு சாப்பிட வச்சுருஎன்க, அவர் மகன்மேல் உள்ள பாசம் அவளுக்குப் புரிய தான் செய்தது. “நான் பார்த்துகிறேன் அத்தைஎன்றவள், தன் கணவனுடன் கிளம்பினாள்.

மற்றவர்கள் பேருந்தில் கிளம்ப, தங்கள் காரில் ஹரிஹரனும் யாழினியும் கிளம்பினர். அமைதியாக நீடித்திருந்த பயணத்தில், “ஏன் என்கிட்ட இத நீங்க முதல்லயே சொல்லல?” என்றாள் யாழினி.

எத பட்டர்பிளை?” என்றான் ஹரிஹரன் சாலையை பார்த்தபடி. “அதான், ஊர்ல வீடு பார்த்திருக்கிறது!” என்றாள்.

சொல்லலாம்னு தான் நினைச்சேன், ஆனா மேடம் தான் என்மேல எப்பவும் கோபமாவே சுத்திட்டு இருந்தீங்களே, அப்புறம் எப்படி சொல்ல முடியும்?” என அவளைப் பார்த்து ஒற்றைப் புருவம் உயர்த்த, அவள் எதுவும் பேசாமல் அமைதியாக தலையை குனிந்துக் கொண்டாள்.

சொல்லக் கூடாதுனுலாம் இல்ல பட்டர்பிளை, வீடு நேத்து தான் கன்பார்ம் ஆச்சுஅதுவும் உங்க ஊர்லயே வீடு கிடைக்கல, அப்புறம் தான் உன் அண்ணாகிட்ட ஹெல்ப் கேட்டேன். பாரி பிரதரும் அவரும் சேர்ந்து தான் வீடு பார்த்தாங்கஎன்றான் ஹரிஹரன்.

…” என்றவள், எதுவும் பேசாமல் வெளியே வேடிக்கைப் பார்க்க, “உனக்கு ஓகே தான பட்டர்பிளை!” என்றான் ஹரிஹரன். “என் சமையல தான் சாப்பிடணும்னு உங்க தலைல எழுதி இருக்கும்போது நான் என்ன செய்யஎன அவள் குறும்பாக வினவ, அவளின் குறும்புத் தனத்தைக் கண்டு சடென் பிரேக் போட்டான் ஹரிஹரன்.

ஏன், என்னாச்சுஎன வண்டி நின்றதால் அவசரமாய் வினவ, “ஒன்னுமில்லஎன்றவாறே வண்டியை மீண்டும் இயக்கினான். அதன்பின் மீண்டும் அமைதியே குடிகொள்ள, “ஒரு சந்தேகம், கேட்கலாமா?” என்றாள் யாழினி.

பெர்மிசன் கேட்டு பதில் சொல்றதுக்கு நான் மூணாவது மனுஷன் இல்லயே!” என்க, “இருந்தாலும்…” என அவள் தயங்கினாள்.

சரி, கேளுங்க மேடம்என்றான் மென்நகையுடன். “அதென்ன பட்டர்பிளை!” என்க, தோளைக் குலுக்கியவன், “ரீசன் தெரியல, பட் கூப்பிடணும்னு தோணுச்சுஎன்றான்.

…” என்றவள், “ஒருவேள பட்டர்பிளை பறந்துப் போய்ட்டா…” என அவள் முடிக்காமல் நிறுத்த, “இந்த பட்டர்பிளைக்கான மகரந்தச் சேர்கை இங்க மட்டும் தான்என தன்னைக் குறிப்பிட்டுக் கூறியவன், “சோ, எங்க போனாலும் தேன் எடுக்க இங்க தான வந்தாகணும்!” என அவன் விஷமமாய் கண்ணடிக்க, அவனின் மறைமுக பேச்சில் அவள்தான் பேச்சற்றுப் போனாள்.

அதன்பின் அவள் ஏதாவது சந்தேகம் கேட்பாளா என்ன! ஊர் வரும்வரை வாயைத் திறக்காமல் அமைதிக் காத்தாள் யாழினி. ஹரிஹரனின் மனமோ குதூகலத்தில் துள்ளியது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
4
+1
1
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்