Loading

பாரிவேந்தனின் மனதில் பயம் பரவ, அந்நேரம் அவனது அலைப்பேசி ஒலித்தது. யாரென்று கூட பார்க்காமல் அழைப்பை ஏற்று காதில் ஒற்ற, “என்ன பிரதர், பகல்லயே ரொமான்ஸ்ஸா! ஃபோன் அட்டெண்ட் பண்ண இவ்ளோ லேட் பண்றீங்கஎன காலநேரம் தெரியாமல் எதிர்முனையில் இருந்தவன் கிண்டலடிக்க, “எது, உன் ஃபிளவர கூடயா! அவள கட்டிக்கிட்டு ரொமான்ஸ் பண்றது மட்டும் தான் குறைச்சல். ஏன் டா இப்படி என் வயித்தெரிச்சல வாங்கிக் கட்டிக்கிறஎன்றான் பாரி. அவனின் வேதனை அப்பட்டமாய் அவனது குரலில் ஒலித்தது.

ராங் டைம்ல கலாய்ச்சுட்டனோ!” என ஹரிஹரன் வாய்விட்டு புலம்ப, “கலாய்ச்சது தப்பில்ல, சரியான ஆளுக்கிட்ட கேட்கக்கூடாத கேள்விய சரியான நேரத்தில கேட்ருக்கஎன்க, அவனது கூற்று புரியாமல் தலையை சொரிந்தான் ஹரிஹரன்.

என்ன பிரதர், மப்புல ஏதும் இருக்கீங்களா? பிளவர் ஏதும் திட்டி அந்த சோகத்துல ஒயின் ஷாப் போய்ருக்கீங்களாபுரியாத மாதிரியே பேசுறீங்க!” என்க, அவனது வார்த்தைகளை கேட்டவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

ஏன் டா ஏன், முடியல டாஉன் பிளவர் இப்போ தான் மன்னிப்ப பத்தி எனக்கு ஒரு பாடமே எடுத்துட்டுப் போனா, அடுத்து நீயா!” என அழாத குறையாய் அவன் கூற, எதிர்முனையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான் ஹரிஹரன்.

மன்னிப்ப பத்தி பாடமா!” என்றவன், பின், “ஏன் பிரதர், மாமா கூட பேச சொல்லி ஏதும் ரெக்கமெண்ட் பண்ணீங்களா?” என வினவினான்.

ஆமா, மாமா நம்ம வீட்டுக்கு வரவும் இவ உடனே எழுந்து ரூமுக்குப் போய்ட்டா, அதான்…” என அவன் இழுக்க, அதன்பின் என்ன நடந்திருக்கும் என்பதை ஹரிஹரன் புட்டுப் புட்டு வைத்தான்.

இங்கு பாரிக்கு வாயில் போகாத குறை தான். நேரில் பார்த்தது போல் கோயம்பத்தூரில் உள்ளவன் கூறினால் பாவம் அவனும் தான் என்ன செய்வான்.

எப்படி ஹரி அப்படியே நேர்ல பார்த்த மாதிரி சொல்ற?” என அவன் ஆச்சரியமாய் வினவ, “அய்யோ பிரதர், ஆல்ரெடி இப்படி ஒரு லெக்சர் எனக்கு அமைஞ்சுருச்சுநானும் உங்கள மாதிரி ஒருநாள் காலேஜ்ல அவக்கிட்ட கேட்கப் போய் அவ அன்னிக்கு முழுக்க லெக்சர் எடுத்தா, எங்க பிரபசர் சொட்டத் தலையன் கிளாஸ்ல கூட மனுஷன் உக்காந்துருவான். ஆனா, உங்க பொண்டாட்டி லெக்சர் அடிக்க ஆரம்பிச்சா அது அனுமார் வாலு மாதிரி போய்க்கிட்டே இருக்கும். முடிவே இருக்காதுஎன அவன் சோகப்பாட்டு பாட தற்போது சிரிப்பது பாரிவேந்தனின் முறையாயிற்று.

அப்போ இதுக்கு ஒரு முடிவே இல்லையா!” என்றவனின் குரலில் சோகம் படர்ந்திருக்க, “அப்படிலாம் இல்ல பிரதர், அவ நம்மகிட்ட சாக்குபோக்கு சொல்ல தான் இப்படி பண்றாஉண்மைலயே மாமா மேல அவளுக்கு கோபம் இருக்கு தான், ஆனா நான் மன்னிக்கவே மாட்டேனு பிடிவாதம் பிடிக்கிறா. இந்த பிடிவாதம் தான் உங்க விசயத்திலயும் நடந்துச்சு, அவக்கிட்ட இருக்கிற ஒரே கெட்ட குணம் பிடிவாதம் தான். ஆனா, அக்காளும் தங்கச்சியும் இந்த விசயத்துல மட்டும் ஒற்றுமையா இருக்காளுங்க. நம்ம பாடு தான் திண்டாட்டம்என்றான் ஹரிஹரன்.

யாழு எப்படி இருக்கிறா ஹரி?” என்றான் குற்றவுணர்வோடு. “அவளுக்கென்ன பிரதர், என்ன எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணலாம்னு இருபத்தி நாலு மணி நேரமும் யோசிச்சுக்கிட்டே இருக்கிறாஎன்றவன், “சரி, அதை விடுங்க பிரதர்வர்ற சன்டே இங்க சின்னதா ரிசப்ஷன் வைக்கிறதா அப்பா ஏற்பாடு பண்ணி இருக்காரு, ஊர்ல இருந்து எல்லாரையும் இங்க அழைச்சுட்டு வர ஏற்பாடு பண்ணனும் பிரதர்என்றான் ஹரிஹரன்.

அப்பாகிட்டயும் மாமாகிட்டயும் இதப் பத்தி பேசிட்டு சொல்றேன் ஹரிஎன்றவன் சிறிது நேரம் பேசிவிட்டு அலைப்பேசியை வைத்தவன் அறையை விட்டு வெளியே வர, நடுகூடத்தில் தன் அத்தையுடன் கீரை ஆய்ந்து கொண்டே ஏதோ வளவளத்துக் கொண்டிருந்தாள் மலர்விழி.

அம்மா பின்னாடி ஏதோ மாடு கத்தற மாதிரி இருக்குஎன்க, “எனக்கு எதுவும் சத்தம் கேட்கலயே டாஇப்போ தான் தண்ணி காட்டிட்டு தொழுவத்துல கட்டிப் போட்டு வந்தேன்என்றவாறே, “அம்மாடி மலரு, இரு நான் போய் அத என்னனு பார்த்துட்டு வந்தறேன்என்றவர் எழுந்து வீட்டின் கொல்லைப் புறத்திற்கு சென்றார்.

தன் அன்னை சற்று அந்த பக்கம் நகர்ந்தவுடன் தனது மனைவியின் எதிரில் அமர்ந்தான் பாரிவேந்தன். “என்ன புள்ள பண்ற?” என வினவ, “பார்த்தா தெரியலயாக்கும்என்றாள் அவள் கடுப்புடன்.

நான் வேணும்னா ஒத்தாசை பண்ணட்டுமா புள்ளஎன்றான் பாரிவேந்தன். அவளோ அவன் முகம் பார்த்து, “இப்போ உங்களுக்கு என்ன வேணும்?” என்க, அவளின் நேரடி கேள்வியால் புன்னகைத்தவாறே, “அது…” என்றவாறே காலை நீட்டி அமர்ந்து, “உடம்புலாம் ரொம்ப அசதியா இருக்கு புள்ள…” என்றவாறே, கைகளை நீட்டி முறுக்கெடுத்தவாறே, “எண்ணெய் தேய்ச்சு குளிச்சா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன், அதப்பத்தி நீ என்ன புள்ள நினைக்கிறஎன்றவாறே விரல்களில் சொடக்கெடுக்க, அவனை ஏகத்துக்கும் முறைத்து வைத்தாள் மலர்விழி.

அதற்குள், “சும்மா தான் மாடு கத்திருக்கும் போலகொஞ்சம் கூளம் போட்டுட்டு வந்துருக்கேன்என்றவாறே ரேவதி உள்ளே வர, தனது அன்னையைக் கண்டவன் சமத்து பையனாய் கால்களை மடக்கி உட்கார்ந்துக் கொண்டான் பாரிவேந்தன்.

ரேவதி விட்ட பணியை மீண்டும் தொடர, தனது தாயின் முன் எதுவும் பேச முடியாததால், “அம்மா நம்ம தோட்டத்து வரைக்கும் போய்ட்டு வந்தறேன்என்றவன், சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு, “போய்ட்டு வரேன் புள்ளஎன்றவாறே கிளம்ப, ரேவதி அவளையே பார்த்துக்கொண்டிருக்க, “ம்சரிங்கஎன்றாள்.

அவளின் அவஸ்தையை உணர்ந்தவன், புன்னகையுடன் வெளியே கிளம்ப, திண்ணையில் அமர்ந்திருந்த ராமாயி பாட்டியோ, “ஏன் டா பேராண்டி, ஏதோ எண்ணெய் தேய்ச்சு குளிக்கணும்னு சொன்ன! அதுக்குள்ள வெளிய கிளம்பிட்டஎன மொக்கை வாய் தெரிய சிரித்து வைத்தார்.

இத மறந்துட்டனேஎன அவன் நொந்தவாறே, அவரை பார்க்க, “உன் அம்மாகாரி தான் டா மாட்ட பார்க்க போனாநான் எங்கயும் போகலஎன்க, அசட்டு சிரிப்பை சிந்தியவன், வேகமாக வண்டியை இயக்கினான் பாரிவேந்தன்.

மருத்துவ முகாம் முடிந்து வீட்டிற்கு வந்த நண்பர்கள், சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு மலர்விழியை பார்க்க ஊருக்குள் சென்றனர். திண்ணையில் அமர்ந்து பாட்டியுடன் கதையளந்துக் கொண்டிருந்தாள் மலர்விழி.

இந்திராவும் சிலம்புவும் வருவதைக் கண்டவள், “நானே இப்போ அங்க வரலாம்னு நினைச்சேன் டி, அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்கஎன்றவள், “குடிக்க காஃபி போடட்டுமா?” என வரவேற்கும் விதமாய் கேட்க,

நீ போட்ட காஃபிய குடிக்க முடியாதே மலர், கீழ தான ஊத்த முடியும். இப்போ நாங்க என்ன பண்றது!” என தாடையில் கைவைத்து யோசிக்கத் தொடங்க, அவளின் கிண்டலில் கோபமுற்றவள், “உங்கள போய் கேட்டேன் பாருஎன தலையில் அடித்துக் கொண்டவள், தங்கள் அறைக்குச் செல்ல, பாட்டியிடம் சிறிது நேரம் கதைத்துவிட்டு தோழிகள் இருவரும் மலரின் அறைக்குச் சென்றனர்.

ஹேய் சும்மா வம்பிழுத்தேன் டி, இதுக்கெல்லாமா கோவிச்சுக்குவாங்கஎன்றவாறே தன் தோழியின் கழுத்தில் கரங்களை மாலையாய் போட்டவள், அவள் தலையில் இடிக்க, “ஆமா, சண்முகம் அண்ணாகிட்ட நீ என்ன பேசிட்டு இருந்த இந்து?” என்றாள் மலர்விழி.

இவ எப்போ பார்த்தா!’ என அவள் அதிர, “பால்வாடிய விட்டு நாங்க வெளிய வரும்போது சண்முகம் அண்ணா உன்கிட்ட பேசிட்டு கிளம்புனாங்க. அதான் கேட்டேன்என்றவள் தன் தோழியின் முகத்தை பார்க்க, இந்திராவின் முகமோ அவனின் ஞாபகத்தில் செம்மையுற்றது.

அதனை மலரின் கண்கள் ஆராய்ந்தன. அங்கு நடந்தவற்றைக் கூறியவள், “உங்க அண்ணாவ பார்த்தோனே ஹெல்ப் கேட்கணும்னு தோணுச்சு, அதான் அங்கேயே கேட்டேன்என்க, அவளை நம்பாத பார்வை பார்த்த மலர்விழி, “இத எங்க அண்ணன் கிட்ட கேட்கிறத விட உங்க அண்ணன் கிட்ட கேட்ருக்கலாமேமேடம் தான் இங்க என்ன நடக்குது, எது ஓடுது, எது பறக்குதுனு லைவ் டெலிக்காஸ்ட் பண்றீங்களேஎன ஒற்றைப் புருவம் உயர்த்தியவாறே வினவினாள்.

அட ஆமால்ல, நான் வேணும்னா இப்போ போய் எங்க அண்ணன் கிட்ட ஹெல்ப் கேட்டுட்டு வரவா!” என்றவள், ‘எங்க அண்ணன் கிட்டஎன்ற வார்த்தையில் சற்று அழுத்தம் கொடுத்தவாறே அங்கிருந்து நழுவ இதனை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு எழப் போனவளை கைப் பற்றி அமர வைத்தாள் மலர்விழி.

இங்கு நடக்கும் சம்பாஷணைகள் எதுவும் ஒருத்தியின் மனதில் என்ன காதில் கூட ஏறவில்லை. அலைப்பேசியில் மூழ்கிப் போய் இருக்க, “உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன்என்றவாறே, சிலம்புவின் கையில் இருந்த அலைப்பேசியை பிடுங்க, “ஏய்…” என்றவாறே பதறிப் போனாள் சிலம்பு.

ஏன் டி பொழுதன்னிக்கும் தான் கடலை போடுறீங்க, இந்த கொஞ்ச நேரமாவது எங்க கூட ஸ்பெண்ட் பண்ணாம அப்படி என்ன ஃபோன்ல ரொமான்ஸ்ஸு?” என்றாள் மலர்விழி.

அவளின் நோக்கம் முழுவதும் மலர் கையில் பற்றி இருந்த அலைப்பேசியிலேயே இருக்க, மலரோ அவள் கையில் எட்டாதவண்ணம் மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டே அறைக்குள் வலம்வர, “ப்ளீஸ் டி, ஃபோன கொடுத்துரு டிஎன கெஞ்சியவாறே அவளிடமிருந்து அலைப்பேசியை பிடுங்க முயற்சித்தாள் சிலம்பு.

இருவரும் அந்த அறைக்குள்ளேயே ஓடிக் கொண்டிருக்க, திடீரென அறைக்கதவு திறக்கப்பட, அதன் அருகில் நின்றிருந்த மலர்விழி சற்று தடுமாறி கீழே விழச் சென்றாள்.

அதற்குள் பாரிவேந்தனின் வலிய கரங்கள் அவளைத் தாங்கிப் பிடித்திருக்க, பயத்தில் முகத்தை இறுக மூடியிருந்தவள் மெல்ல மெல்ல கண்களைத் திறந்து அவனின் முகத்தைப் பார்த்தாள்.

பார்த்து வரலாம்ல புள்ளஎன்றவாறே அவள் எழுந்து நிற்க உதவ, தோழிகளோ அவர்களுக்கு தனிமைக் கொடுக்க எண்ணி அறையை விட்டு வெளியேறினர். “தேங்க்ஸ்என்றவள், இந்துவையும் சிலம்புவையும் தேட, அவர்கள் அதற்குள் வெளியே சென்றிருந்தனர்.

அவசர அவசரமாக வெளியே அவள் செல்ல, அவர்களோ நடுகூடத்தில் ரேவதியிடம் பேசிக் கொண்டிருந்தனர். அவளும் பவ்யமாக அருகில் சென்று நிற்க, சிலம்பு அவள் கையில் இருந்த அலைப்பேசியை வாங்கிக் கொண்டு, “நாங்க கிளம்புறோம் மலர், கிளம்பறோம் ஆன்ட்டிஎன்றவாறே அங்கிருந்து விடைபெற, அவர்களிடம் ஒழுங்காக பேசக் கூட முடியாமல் குறுக்கே வந்து கெடுத்து விட்டானே பாரி என அவன் மேல் கோபம் கொண்டாள்.

தெருவை அடைந்தவுடன் அதுவரை பொத்தி வைத்திருந்த சிரிப்பை எல்லாம் வெளியே கொட்டினாள் இந்திரா. “எப்படி எப்படி, ஹீரோயின் ரூம்க்குள்ள ஓடுவாங்களாம், அந்த நேரம் பார்த்து நம்ம ஹீரோ கதவ திறக்க அதுல பயந்து கீழ விழப் போவாங்களாம். உடனே நம்ம ஹீரோ, அவள தாங்கிப் பிடிச்சு ரொமான்ஸ் பண்ணுவாராம். அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்…  இதுல கரடிகளா இரண்டு பிரண்ட்ஸ் வேறஎன தங்களையும் சேர்த்து நக்கலடித்தவாறே சிரிக்க, அவளின் சிரிப்பைக் கண்டு சிலம்புவும் சிரிக்க தோட்டத்தில் இருந்து வீட்டற்கு வந்துக் கொண்டிருந்த சண்முகம் சிரிப்பு சத்தம் கேட்டு, “இந்நேரத்துல யாரு டா இப்படி சிரிக்கிறதுஎன்றவாறே துழாவியவனின் கண்களில் பட்டாள் இந்திரா.

ஒரு வீட்டின் சுவற்றை ஒரு கையால் பிடித்த வண்ணம், மற்றொரு கையை வயிற்றைப் பிடித்து கொண்டே சிரித்துக் கொண்டிருந்தாள். இந்திராவின் சிரிப்பு எல்லை மீறிச் செல்ல, “ஹேய், யாராவது பார்த்திர போறாங்க டி, வா கிளம்பலாம்என சிலம்பு அவளை அழைத்துச் செல்ல முற்பட, அவளுடன் சேர்ந்து நடந்தவாறே சிரித்துக் கொண்டே வந்தவளின் கண்களில் பட்டான் சண்முகம்.

வண்டியில் அமர்ந்த வண்ணம் மார்பின் குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவனைக் கண்டவுடன் இதுவரை இருந்த சிரிப்பு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போக, அவளின் சிரிப்பு திடீரென நிற்கவும், ‘திடீர்னு என்னாச்சு இவளுக்கு!’ என நினைத்தவாறே அவள் பார்வை சென்ற திக்கைப் பார்த்தவளுக்கு அனைத்தும் புரிந்தது.

மேடமுக்கும் அண்ணனுக்கும் பத்திக்கிச்சு போலயே, அய்யோ இத உடனே யார்கிட்டயாவது சொல்லணுமேஎன சிலம்பு மனம் பரபரக்க, அந்நேரம் அவளின் அலைப்பேசி சிணுங்கியது. வெற்றி தான் அழைத்திருக்க, உடனே அழைப்பை ஏற்று, “டேய் ஒரு முக்கியமான விசயம்…” என அவள் ஒருபக்கம் ஆரம்பித்திருக்க, இதெல்லாம் கவனியாமல் அவனை எப்படி கடந்து செல்வது என்ற யோசனையிலேயே மெதுவாக நடந்துக் கொண்டிருந்தாள் இந்திரா.

எவ்வளவு மெதுவாக நடந்தாலும் சில நொடிகளிலேயே அவனின் அருகில் சென்றிருக்க, அவளின் இதயம் வேறு படபடத்தது. ‘நம்ம சிரிச்சத பார்த்துட்டாரோ, நம்மள பத்தி என்ன நினைச்சுருப்பாரு. வேற என்ன பைத்தியம்னு முடிவே கட்டிருப்பாருஎன மனம் ஒருபக்கம் ஏகத்துக்கும் இதய துடிப்பை அதிகரிக்கச் செய்ய, அவனைக் கடக்க முயற்சித்தாள்.

மலர பார்த்துட்டு போறீங்களா?” என்றான் சண்முகம். “ம்…” என அவள் கூற, “நீ சொன்னத பத்தி அந்த ஊர்க்காரங்ககிட்ட பேசுனேன், நாளைக்கு காலைல உன்கிட்ட வந்து பேசறேன்னு சொன்னாங்கநம்ம ஐடியாவுக்கு ஒத்துக்குவாங்கனு தான் நினைக்கிறேன். அந்த குழந்தையோட அப்பன நாலு தட்டு தட்டுனா சரினு சொல்லிருவான், அத நினைச்சுட்டே இருக்க வேண்டாம்என்றான் சண்முகம்.

இந்திராவோ சரியென தலையாட்ட, அவளின் அமைதி அவனை சீண்டிப் பார்க்க எண்ணியது. “ஊரே அதிர்ற அளவுக்கு சிரிச்சுட்டு இப்போ வாய்ல இருந்து வார்த்தையே வர மாட்டேங்கிது!” என்றான் நக்கலாய்.

அச்சோ பார்த்துட்டாராஅப்போ கன்பார்ம் பைத்தியம்னு முடிவே கட்டிருப்பாரு போலயே!’ என அவள் மனதிற்குள் பயம் பரவ, முகம் வெளிறிப் போய் பார்த்தாள் இந்திரா.

அவளின் முகம் பேயறைந்ததைப் போல் மாறவும், “ஹேய், சும்மா விளையாட்டுக்குத் தான் கேட்டேன்சரி, நீங்க கிளம்புங்க. இருட்டாகப் போகுதுஎன்றவன், வண்டியை இயக்க, இதுவரை அலைப்பேசியில் இங்கு நடப்பனவற்றை லைவ் டெலிகாஸ்ட் செய்துக் கொண்டிருந்த சிலம்பு இந்திராவுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினாள்.

இப்படி சொதப்பிட்டியே இந்துஎன அவள் தன்னைத் தானே தலையில் கொட்டிக் கொள்ள, அதனை திரும்பிப் பார்த்தவன், “வலிச்சறப் போகுது ஹண்ரட் கேஜி தாஜ்மஹால், பார்த்து கொட்டுஎன சத்தமாய் கூற, அவனைத் திரும்பி பார்க்கும் திராணியற்று, கண்களை மூடிக் கொண்டவள் நாக்கை கடித்துக் கொண்டாள்.

அவனின் கூற்றில் அதிர்ந்தது சிலம்பு தான். “இது என்ன டி புதுசா ஹண்ரட் கேஜி தாஜ்மஹால்?” என்க, இந்திராவோ பதிலளிக்காமல் வேகமாக நடக்கவும், “சம்திங் ராங்…” என்றவாறே அவளின் நடைக்கு இணையாக ஓடினாள் சிலம்பு.

அடுத்த நாளும் வழக்கம்போல் காலையில் மருத்துவ முகாமிற்கு சென்றவளை, மதியம் வந்து அழைத்துக் கொண்டு போனான் பாரிவேந்தன். அவளின் வாழ்க்கையில் பெரிதான மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்திடவில்லை. தனது அன்னையின் வீட்டில் இருந்து வேலைக்குச் சென்றதைப் போலவே இப்பொழுது பாரிவேந்தனின் வீட்டில் இருந்து செல்கிறாள். அவளைப் பொறுத்தவரை அவ்வளவு தான். ஆனால் அவளின் அருகாமையில் ஒருவன் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பதைக் கவனிக்க விரும்பாமல் இருந்தாள்.

ஹரிஹரனின் இல்லத்தில் அவனுக்கு திருமணமானதை தெரிந்துக் கொண்ட உறவுகள், வீடுநோக்கி படையெடுக்க ஆரம்பித்திருந்தனர்.

சிலர், “நாங்க என்னமோ நினைச்சு எதிர்பார்த்தோம், இங்க என்னமோ நடந்துருச்சுஎன்றும், “கேம்ப்க்கு போறேனு சொல்லிட்டு இப்படி கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிறான்என்றும், இன்னும் பலபல விதமாய் அவர்களின் திருமணம் பலரின் வாயிற்கு அவலாக மாறியது.

வீட்டிற்கு வரும் உறவுக்காரர்கள் முன்னிலையில் மெழுகு பொம்மை போல் தன்னை நிறுத்தப்படுவதை எண்ணி அறைக்குள் புழுங்கிக் கொண்டிருந்தாள்.

வந்தவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு தங்கள் அறைக்கு வந்தவன், “அவங்க கிளம்புற வரைக்கும் அங்க இருந்திருக்கலாம்ல பட்டர்பிளைஎன்றான் ஹரிஹரன்.

என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க, இல்ல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுலஜவுளி கடை பொம்மை மாதிரி என்னை நிக்க வைச்சு என்னை எடைப் போட்டுக்கிட்டே வாய்க்கு வந்தத பேசிக்கிட்டு இருக்காங்க வந்தவங்கஎன்னமோ உங்கள நான்தான் என் முந்தானைல முடிஞ்சுக்கிட்ட மாதிரி பேசறாங்க, ச்ச…” என தன் கோபத்தைக் கொட்டிக் கொண்டிருந்தாள் யாழினி.

முந்தானைல முடிஞ்சுக்கிறதுனா இதுவா பட்டர்பிளைஎன்றவாறே அவளின் முந்தியை எடுத்து தன் இடுப்பில் இறுக கட்டி இருக்க, பேச்சில் அவனது செயலைக் கவனிக்காமல் இருந்தவள் தற்போது அவனைக் கண்டு அதிர்ந்தாள்.

அவள் விலக முயல, அவளின் முந்தானையை இறுகக் கட்டி இருந்ததால் அவன் அவள் மேல் விழப் போக, அதனை கைகளால் தடுத்தவள், “மொத இந்த கட்ட அவுருங்கஎன்றாள் கட்டளையாய்.

ஒன் மினிட்என்றவன் தன் அலைப்பேசியில் அதே கோலத்தில் இருவரையும் செல்பி எடுக்க, யாழினியின் கோபம் உச்சியில் ஏறியது. “இல்ல, முந்தானைல முடிஞ்சுக்கிட்டதுக்கான எவிடன்ஸ் பட்டர்பிளைஎன்க, பத்ரகாளியாய் உருவெடுத்திருந்தாள் யாழினி.

அவள் கோபத்தில் விலக, இருவரும் எதிர் எதிர் பார்த்த வண்ணம் நின்றிருந்ததால் புடவையின் முந்தானை முன்பக்கமாக இருந்தது. இருவருக்குமிடையே நூலளவு இடைவெளி இருக்க, ஹரிஹரனோ அந்த இடைவெளியில் தவித்து தான் போனான். காதல் மனைவி, நூலிழை இடைவெளியில் இருந்தாலும் அங்கு காதலிற்கு பதில் கோபமே அரங்கேறிக் கொண்டிருந்ததால், தானே கட்டை அவிழ்த்து விட்டு அவளை விட்டு விலகியவன் அறையை விட்டும் வெளியேறினான்.

அவனின் திடீர் நெருக்கமும் திடீர் விலகலும் அவளை பித்துக்குள்ளாக்கியது. தலையில் கைவைத்த வண்ணம் அப்படியே தரையில் அமர்ந்தாள் யாழினி.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
7
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்