Loading

** 18 **

“இன்னும் என்ன பண்றிங்க மாமா? சீக்கிரமா வாங்க அப்பத் தான் சரியான நேரத்திற்கு திருச்சி போக முடியும்” என பரமேஸ்வரி பரபரத்தார்.

“நான் எப்பவோ ரெடி கண்ணு… உன் பொண்ணு தான் லேட் பண்றா… அப்படி என்ன தான் செய்யறாளோ தெரியலை” என்ற படி ஆடலரசன் தனது அறையிலிருந்து வெளியே வந்தார்.

தனது செல்ல மகளை குறை சொன்னதும், “ஒரு இடத்திற்கு போகும் போது வயசுப் பொண்ணுங்க ஏனோ தானோன்னு வர முடியுமா? கொஞ்சம் மெனக்கெட்டு தயாராகி தான் வருவாங்க மாமா” என்ற பரமேஸ்வரி,

“நேத்து ஜோதிடம் பார்க்க போனப்போ ஜோதிடர் குறித்துக்கொடுத்த தேதியை எடுத்துக்கிட்டிங்களா? அப்புறம் மறக்காமல் ஆதிரன் போட்டோவை எடுத்துக்கோங்க” என்றவர் தங்களின் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை பையில் அடுக்கினார்.

“நல்ல வேளையா நியாபகப்படுத்தின போட்டோ எடுத்துக்கிட்டு இந்த தேதி குறித்துக்கொடுத்த சீட்டை மறந்துட்டேன் கண்ணு” என்றவர் சீட்டை எடுத்துவர விரைந்தார்.

“நல்லா மறந்திங்க போங்க… இது இல்லாமல் எப்படி மாமா?” என கோபம் போல் கேட்டார்.

அதற்கு வடிவம்மை, “இதெல்லாம் ஒரு விஷயமா க்கா பசங்கக்கிட்ட சொன்னா அடுத்த நிமிஷமே போனில் அனுப்பிடப் போறாங்க” என வடிவம்மை கூற.

பரமேஸ்வரி, “உங்க ஐயாவை ஒரு வார்த்தை சொல்லிடக்கூடாதே உடனே கொடிபிடிச்சுக்கிட்டு வந்திடு” என்று செல்லமாக நொடித்துக்கொண்டார். 

அப்பொழுது புறப்பட்டு வந்த கஸ்தூரி, “ஐயாரை மட்டுமில்லை பரமு ம்மா உங்களை குறை சொன்னாலும் நாங்க இப்படித் தான் கொடிபிடிக்க வருவோம்” என்று புன்னகையுடன் கூற.

சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆரூரன், “சித்தி சொன்ன மாதிரி போனிலேயே தேதியை அவங்களுக்கு அனுப்புவதை விட்டுட்டு தேவையில்லாமல் வெட்டியா செலவு பண்ணிக்கிட்டு” என அலட்சியமாகக் கூறவும்.

“உன்னிடம் இங்க யாராவது கருத்து கேட்டாங்களாடா போ போய் கொட்டிக்கிற வேலையை மட்டும் பார்” என்று ஆடலரசன் கோபமாக கூறினார்.

பரமேஸ்வரி, “ரெண்டு நாளா நம்ம வீட்டில் என்ன நடக்குதுனு உனக்கு ஏதாவது தெரியுமா ஆரூ? இப்ப வரை நீயா வந்து எங்களிடம் ஆதி கல்யாணத்தைப் பற்றி எதுவும் கேட்கலை… கோயிலில் இருந்து வந்ததும் ரூமுக்குள்ள போனவன் இப்ப தான் வெளியவே வர, சாப்பாடு கூட வடிவு தான் உன்னுடைய அறைக்கு கொண்டு வந்து தருகிறாள்… இதில் நீ எங்களை குறை சொல்றது, நக்கல் பண்றதெல்லாம் வச்சுக்காத” என்று இளைய மகனை வறுத்தெடுத்தார். 

அதற்கு ஆரூரன், “நான் ஒன்னும் குறை சொல்லலை ம்மா உண்மையைத்  தான் சொன்னேன்… சொல்லப்போனால் நீங்க தான் இன்னும் அப்டேட் ஆகாமல் பழைய பஞ்சாங்கமாவே இருக்கிங்க” என்றவன்,

“இத்தனை நாள் இல்லாமல் இப்ப தங்கச்சினு வந்தாங்க… ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டு பாசத்தை பொழிஞ்சாங்க, நீங்களும் அதில் உருகிப் போய் கொஞ்சம் கூட யோசிக்காமல் கல்யாணம் அது இதுனு பேசுறிங்க, இதில் நானும் வேற வரணுமா?” என இளக்காரமாகக் கேட்டான். 

மகனின் நக்கலான குரலில் ஆடலரசனின் கோபம் எல்லையைத் தொடவே பரமேஸ்வரி கணவனின் கையை அழுத்தி பிடித்து சாந்தப்படுத்தினார், “உன்னை மாதிரி மனுஷங்களை மதிக்காமல் இருப்பதை விட நாங்க பழைய பஞ்சாங்கமாவே இருந்துட்டுப் போறோம் அதில் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை பிரச்சனையும் இல்லைடா” என மகனுக்கு குட்டு வைத்தவர்,

“சில விஷயங்கள் வார்த்தையால் சொன்னா புரியாது ஆரூ மனதால் உணரணும், அப்பத்தான் அதனுடைய புனிதமும் மகத்துவமும் தெரியுது… எத்தனை சண்டை சச்சரவு வந்தாலும் சில உறவுகளை அறவே வேண்டாம்னு வெட்டி விட்டுட முடியாது, அந்த மாதிரியான பந்தம் தான் இதுவும்” என அழுத்தமாக கூறினார்.

“சும்மா டயலாக் விடாதிங்க ம்மா… என்ன சொந்தம்? பதினைந்து வருடங்களா எங்க போனாங்க? இப்ப வந்து அண்ணன் ஆட்டுக்குட்டினுக்கிட்டு” என ஆரூரன் கடுப்பாக கேட்கவும்.

“நீ ரொம்ப பேசற ஆரூ கொஞ்சம் வாயை அடக்கிப் பழகிக்கோ” என்று கூறிய பரமேஸ்வரி,

“பதினைந்து வருடங்களா சொந்தம் விட்டுப்போக காரணம் இளவரசி இல்லைடா அவளுடைய மாமியார் தான்” என்று ஆடலரசன் கூறினார்.

அதுவரை அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஆதிரன், “என்ன மாமாவுடைய அம்மாவா? ஏன் ப்பா? அதில் அவங்களுக்கு என்ன வந்திடப்போகுது?” என புரியாமல் கேட்டான். 

“அவங்க அப்படித்தான்… ரொம்பவே கெடுபிடியானவங்க… அதையும் விட கறாரானவங்க” என்றார் பரமேஸ்வரி.

“பையனை பெத்தவங்க கொஞ்சம் கெத்துக் காட்டத் தான செய்வாங்க இதில் என்ன இருக்கிறது?” என கஸ்தூரி புரியாமல் கேட்டாள். 

“இந்த அம்மா அதையும் தாண்டி கஸ்தூரி… எப்படினா பேரன் பேத்திகளை இங்க வரவே விடமாட்டாங்க… எனக்கு தெரிந்து ஶ்ரீயும் அவள் அண்ணனும் இங்க வந்ததே உங்க பாட்டி இறந்தப்ப தான்… அப்ப இவனுங்க ரெண்டு பேரும் குழந்தைங்க நீ பிறக்கவே இல்லை… அதைவிட கொடுமை என்னன்னா ஜவஹர் அண்ணா இங்க கூட வந்ததும் உடனே கிளம்பிடுவார்… அவ்வளவு ஏன் நாம அங்க போனால் கூட வாங்கனு கூப்பிடமாட்டாங்க, மூஞ்சில் அடிச்ச மாதிரி ரூம்க்கு போய் கதவை சாத்திப்பாங்க… அதனாலேயே நாங்க அங்க போகமாட்டோம்… உங்களுக்கும் சொந்தபந்தம் தெரியாமல் போயிடுச்சு… அப்புறம் சில மனஸ்தாபத்தால் உறவுகளுக்கு இடையில் ஏற்பட்ட விரிசலால் மொத்தமா விலகவேண்டிய சூழல் வந்திடுச்சு” என்று காரணத்தைக் கூறினார்.

“நீங்க சொல்வதைப் பார்த்தால் அத்தைக்கு கல்யாணம் ஆனதிலிருந்தே பிரச்சனை தான் போல்” என ஆதிரன் ஆயாசமாக கேட்க. 

“ஆமாம்டா!” என்று கவலை தேய்ந்த குரலில் கூறினார்.

“இன்னும் அந்த கிழவி இருக்கா பரமு ம்மா?” என கஸ்தூரி கேட்கவும்.

“இல்லடா… அங்க போய் பதினைந்து வருஷம் ஆச்சு… படுக்கையில் கிடந்த போதே நினைத்ததை சிறப்பா செஞ்சு ரெண்டு குடும்பத்தையும் பிரிச்சு வச்சுட்டு தான் செத்தாங்க” என சோகமாக பரமேஸ்வரி கூறினார்.

“நீங்க சொல்வதைப் பார்த்தால் கிழவி பெரிய கேடி போல் தெரியுது ம்மா… இதை வைத்துப் பார்த்தால் அவங்க வளர்த்த பேத்தியும் அப்படித் தான இருப்பாங்க?” என தன் சந்தேகத்தை கேட்க.

பரமேஸ்வரி, “எப்படி உன்னை மாதிரியா?” என கேட்டார்.

அதில் வாய்விட்டு சிரித்த கஸ்தூரி, “பரமு ம்மா நீங்க மனசுக்குள்ள பேசுவதா நினைச்சுக்கிட்டு சத்தமா சொல்லிட்டிங்க” என்றதும் திருதிருவென முழித்தார்.

அதைக் கண்டு ஆடலரசனின் முகத்தில் புன்னகை அரும்பியது.

சட்டென்று சுதாரித்த பரமேஸ்வரி, “நான் ஒன்னும் பொய் சொல்லடி உண்மையைத் தான் சொன்னேன்… சந்தேகம்னா உங்க ஐயாரிடமே கேட்டுக்கோடி” என்றவர்,

“வடிவு வாடி இதை எல்லாம் கொண்டு போய் காரில் வைக்கலாம்” எனக்கூறி பையுடன் வெளியே செல்ல அவரின் பின் வடிவம்மையும் விரைந்தார். 

பரமேஸ்வரியின் ஓட்டத்தைக் கண்டு கஸ்தூரி சிரிக்கவும் ஆடலரசன், “போதும் வாலு வா கிளம்பலாம்” என புன்னகையுடன் கூறியவர் மகள் மற்றும் மனைவியை அழைத்துகொண்டு திருச்சிக்கு பயணமானார்.

இவர்கள் சென்றதும் ஆரூரன், “இந்த கல்யாணத்தில் என்னென்ன நடக்கப்போகுதோ தெரியலை… நாம சொன்னா யார் கேட்கப்போறாங்க? இவங்களுக்கு எல்லாம் பட்டால் தான் புத்தி வரும்” என்றவன் தனது வேலையை பார்க்க சென்றுவிட்டான்.

தம்பியின் முணுமுணுப்பை காதில் வாங்காமல் ஆதிரன் கல்யாண கனவில் மூழ்கியிருந்தான். 

“ரெண்டு பேரும் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கிங்க? யாரை கேட்டு அவங்கக்கிட்ட ஜாதகத்தை கொடுத்திங்க?” என காட்டமாக ஶ்ரீ கேட்டாள்.

அதற்கு அவளின் அன்னை இளவரசி, “ஜாதகத்தை மட்டும் தான் கொடுத்திருக்கு ஒன்னும் நிச்சயத்தை முடிக்கலை பேசாமல் வாயை மூடிக்கிட்டு இரு” என அதட்டினார். 

“இளவரசி” என மனைவியை அழுத்தமாக அழைத்த ஜவஹர், 

மகளிடம், “நீ கோபப்படும் படி இங்க எதுவும் பெருசா நடக்கலை ஶ்ரீ, கொஞ்சம் நிதானமா பேசு… யாரிடம் ஜாதகத்த கொடுத்திருக்கு? உன்னுடைய மாமாக்கிட்ட தான பாப்பா… எங்களைவிட அவன் உன்னையும் உனது விருப்பத்தையும் தான் முக்கியமா பார்ப்பான்… அதனால் மனசைப் போட்டு அலட்டிக்காதடா” எனக்கூறி மகளை சமாதானம் செய்தார்.

“என்ன ப்பா என்னை பார்ப்பார்? அப்படி என்னுடைய நல்லதை மட்டும் யோசிக்கிறவர் இத்தனை நாளா எங்க போனார்?  ஏன் நம்மை அம்போனு விட்டுட்டார்?” என கோபமாகக் கேட்டவளிடம் இளவரசி எதையோ கூற வந்தார்.

அவரைத் தடுத்த ஜவஹர், “முடிந்ததைப் பற்றி பேசி ஒன்னும் ஆகப்போவதில்லை ஶ்ரீ, இனி நடக்கப்போவதை மட்டும் பார்க்கலாம்… என்னை பொருத்தவரை உன்னுடைய அவசர புத்திக்கும் ஆத்திரத்திற்கும் இதைவிட நல்ல இடம் அமையாது… அப்படியே அமைந்தாலும் நீ சந்தோஷமா வாழ்வையானு கோட்டால் யாருக்கும் தெரியாது… ஆனால் ஆடலரசன் வீட்டிற்கு மருமகளா போனால் நீயும் நல்லா இருப்ப நாங்களும் சந்தோஷமா இருப்போம்” என உணர்ச்சி வசப்பட்டு கூறினார்.

தந்தையின் பேச்சில் சற்று அடங்கியவள், “உங்க இஷ்டத்திற்கு வேணா ஜாதகத்தை கொடுத்திருக்கலாம் ப்பா, ஆனால் கல்யாணம் நான் விருப்பப்பட்டால் தான் நடக்கும்” என்றவள் மனதில் எதையோ நினைத்து யாருக்கும் தெரியாமல் சிரித்துக்கொண்டவள் தனது வேலையை பார்க்க சென்றுவிட்டாள். 

“என்னங்க இவபாட்டுக்கு போயிட்டா?” என இளவரசி கேட்கவும். 

“சும்மா கண்டதையும் நினைத்து குழப்பிக்காமல் போய் ஆகவேண்டியதை கவனி” என மனைவியிடம் சிடுசிடுத்தார். 

“நான் என்ன பார்க்க? பொண்ணுக்கு அப்பனா நீங்க தான் அடுத்த வேலையை பார்க்கணும்” என்றார். 

“இலால்குடியிலிருந்து தகவல் வந்ததும் பார்க்கலாம்” என்றதோடு பேச்சை நிறுத்திக்கொண்டார்.

“அண்ணா… அண்ணா எழுந்திரிங்க” என்று  வீரன் தேனிசைச்செல்வனை எழுப்பினான்.

அவனோ நைட் அடித்த சரக்கின் வீரியத்தில் துளிக்கூட அசையாமல் படுத்துகிடந்தான்.

அதில் காண்டான வீரன் பாத்ரூமிற்கு சென்று வாளி நிறைய நீரை கொண்டுவந்து தேனிசைச்செல்வனின் மேல் ஊற்றினான்.

நன்றாக தூங்கிக்கொண்டிருந்தவனின் மேல் திடீரென நீர் உற்றவும் அடித்துப்பிடித்தி எழுந்தவன் ஒன்றும் புரியாமல் வீரனைப் பார்த்தான்.

“என்ன லுக்? ஒழுங்கா எழுந்து கிளம்புங்க… இன்னும் கொஞ்ச நேரத்தில் சூப்பர்வைசர் குடும்பத்தோடு இங்கே வந்திடுவார்… அவங்க முன்பு பங்கறை மாதிரி போய் நிற்காமல் ரெடியாகி வாங்க நான் போய் சமையலை கவனிக்கிறேன்” என்றவன் கீழே விரைந்தான்

எழவே மனமில்லாமல் எழுந்தவன் சிறிது நேரத்திலேயே குளித்துவிட்டு கீழே விரைந்தான்.

“வீரன் எப்படா லாரி அனுப்பின?” என கேட்டபடி சாப்பிட அமர்ந்தான்.

தமையனுக்கு உணவினைப் பரிமாறிய படியே வீரன், “அரை மணிநேரம் தான் ண்ணா ஆகுது…  வெளியாட்களை அனுப்பலை நம்ம ஆளுங்க தான் போயிருக்காங்க” என்றான். 

“ஓ! இங்க வீட்டை கிளீன் பண்ணியாச்சா?” என கேட்க.

“ஆச்சுண்ணா” என்றவன்,

“நேத்து நீங்க என்ன பண்ணிங்கனு நியாபகம் இருக்கா? என கேட்கவும்.

“கொஞ்சம் கொஞ்சாம் நியாபகம் இருக்கு” என்றவன் பேச்சை அதோடு நிறுத்திக்கொண்டு சாப்பாட்டில் கவனமானான்.

அதில் காண்டான வீரன், “நீங்களா ண்ணா இது?  என்னால் நம்பவே முடியலை அந்த அளவுக்கு ஆளே மாறிப் போயிருக்கிங்க” என ஆச்சரியம் போல் கேட்டான். 

“என்னைக் கலாய்ப்பதை விட்டுட்டு முதலில் சாப்பிடுடா” என்றவன்,

“நம்ம புது பிராஞ்ச் எந்த நிலையில் இருக்குடா?”.

“நல்லா போகுது… இன்னும் கொஞ்ச வேலை தான் இருக்கு அதை முடிச்சுட்டா ஸ்டாக் வாங்கிடலாம்” என்று தேனிசைச்செல்வனிடம் வீரன் கூறினான். 

“நல்லது” என்றவன்,

“ஆமாம் நீ ஏன் சமைத்த?” என்று கேட்க. 

“சமையல் அண்ணாவுக்கு உடம்பு முடியலை ண்ணா, அதனால் தான் நானே வச்சுட்டேன்” என்றான்.

“வயசாகுதில்லை அதனால் தான் அடிக்கடி உடம்பு முடியாமல் போகுது” என்க.

“ஆமாங்க ண்ணா” என்றவன், 

“அவர் ஊருக்குப் போக ஆசைப்படுவது போல் தெரியுது ண்ணா… நீங்க பேசி பாருங்க போறேன் சொன்னார்னா அனுப்பி வச்சிடலாம்” என்றான். 

“அப்படியா சொல்ற? சரி நானே பேசறேன்… வீட்டுக்குப் போறேன்னு சொன்னா நாமே விட்டுட்டு வந்திடலாம்” என்ற தேனிசைச்செல்வன் காலை உணவை முடித்துவிட்டு வெளியே செல்லவும் சூப்பர்வைசரின் குடும்பம் வரவும் சரியாக இருந்தது.

வந்தவர்களை வேலையாட்கள் மூலம் அவர்களுக்கான இருப்பிடத்தில் அமர்த்தியவன் சமையல் வேலை செய்பவரை காண சென்றான். 

சிறிது நேரம் அவரிடம் பேசி அந்த வயதானவரின் ஆசையை புரிந்துகொண்டு அன்று மதியமே வீரனுடன் அவரின் பிறந்த ஊருக்கு பறந்தார்.

சமையல்காரரை அவரின் வீட்டில் விட்டவன்  செலவுக்கு சிறிது தொகையை கொடுத்துவிட்டே வந்தான்.

“இவ்வளவு பண்றையே அப்புறம் ஏன் ண்ணா இந்த பழக்கம்?” என தயக்கத்துடன் வீரன் கேட்டான்.

“என்னை பற்றி யோசனை செய்தைவிட்டுட்டு உனக்கான வாழ்க்கையை பாருடா” என்றவன்,

“எங்க போகலாம்?” என கேட்டான். 

“சினிமாவுக்கு போகலாம் ண்ணா… நாம ரெண்டு பேரும் படம் பார்க்க போய் ரொம்ப நாளாகுது” என ஆசையாக கேட்கவும்.

மறுக்கத் தோணாமல், “சரிடா” என்றவன் பிரபல தியேட்டரின் முன் காரை நிறுத்தினான்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Interesting ud sis nce aaru ellaraiyum hurt panra mariye pesuran sri enna plan panranu therilaye pakkalam