
வெகுநேரம் ஒருவர் மற்றொருவரின் அணைப்பில் கண்ணீர் சிந்தி தம் மனதில் இருந்த பாரங்களைக் குறைத்தனர்.
சகுந்தலாவின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக கேவலாக மாற, துஷ்யந்தினால் தன்னவள் படும் வேதனையை சகிக்க முடியவில்லை.
அழுது கொண்டு இருந்த மனைவியை தன்னை விட்டுப் பிரித்த துஷ்யந்த் சகுந்தலாவின் முகத்தை இரு கரங்களாலும் ஏந்தி தன் பெருவிரலால் அவளின் கண்ணீரை அழுத்தமாகத் துடைத்து விட்டான்.
“போதும் டா. இதுக்கு மேல அழாதே. இதுக்கப்புறம் உன் கண்ணுல இருந்து வர ஒரு துளி கண்ணீரும் கூட சந்தோஷக் கண்ணீரா மட்டும் தான் இருக்கணும்.” என்றான் துஷ்யந்த் ஆறுதலாக.
“எனக்கு கஷ்டமா இருக்கு துஷ்யந்த். முன்னாடி இவ்வளவு தூரம் தெரியல. ஆனா இப்போ நம்ம சுயநலத்துக்காக நிரஞ்சனா வாழ்க்கைய கேள்விக்குறி ஆக்கிட்டோமோன்னு வருத்தமா இருக்கு.” என்றாள் சகுந்தலா வேதனையுடன்.
“அப்படி இல்லடா. நிரஞ்சனாவோட நல்ல மனசுக்கு அவளுக்கு பெட்டரான ஒரு வாழ்க்கை அமையும். என்ன தான் இருந்தாலும் எனக்கு கிடைச்ச ஃபர்ஸ்ட் ஃப்ரெண்ட் அவ. சோ கண்டிப்பா அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய என்னால ஆன எல்லா முயற்சியும் எடுப்பேன் நான். நீ இதுல எந்தத் தப்பும் பண்ணல. தப்பு எல்லாம் என் மேல தான். நான் என் காதலுக்காக உறுதியா நின்னு இருக்கணும். என்ன பிரச்சினை வந்தாலும் எதிர்த்துப் போராடி இருக்கணும்.” என்ற துஷ்யந்தின் குரலில் அவ்வளவு குற்றவுணர்ச்சி.
தன் மீதே மொத்தப் பழியையும் போட்டுக் கொண்ட கணவனின் வாயில் கை வைத்து அவனது பேச்சை நிறுத்திய சகுந்தா மறுப்பாகத் தலை அசைத்தாள்.
துஷ்யந்தின் விழிகள் சகுந்தலாவின் விழிகளில் ஆழமாகப் படிய, சகுந்தலாவும் துஷ்யந்தின் விழிகளில் தான் கட்டுண்டு இருந்தாள்.
தம் இணைகளின் அணைப்பில் மனம் விட்டு தம் வலிகளையும் வேதனையையும் வெளிப்படுத்தியதாலோ என்னவோ இருவரின் மனமும் லேசானது போல் இருந்தது.
சகுந்தலாவின் விழிகளில் பதிந்து இருந்த துஷ்யந்தின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மாறி விழிகளின் நிறம் மாறின.
துஷ்யந்தின் பார்வை மாற்றத்தைப் புரிந்து கொண்ட சகுந்தலா துஷ்யந்தின் இதழ்களை மூடி இருந்த தன் கரத்தை விலக்க முயல, சகுந்தலாவின் கரத்தைப் பற்றி அவளின் முயற்சியைத் தடுத்த துஷ்யந்த் சகுந்தலாவின் உள்ளங்கையில் அழுத்தமாக முத்தமிட்டான்.
அதில் கைகள் குறுகுறுக்க, சட்டென தன் உள்ளங்கையை மடக்கினாள் சகுந்தலா.
தன்னவளின் தடுமாற்றத்தை ரசித்துப் பார்த்த துஷ்யந்த் மெதுவாக அவனின் பிடியைத் தளர்த்த, சகுந்தலா அதற்காகவே காத்திருந்தது போல அவசரமாக எழுந்தாள்.
ஆனால் மறு நொடியே முதல் இருந்ததை விட நெருக்கமாக துஷ்யந்த்தின் மடி மீது விழுந்து அவனின் கரங்களுக்கு இடையில் சிறைப்பட்டாள்.
சகுந்தலாவை வெட்கம் பிடுங்கித் தின்றது.
இவ்வளவு நேரமும் அழுது சிவந்து இருந்த முகமோ இப்போது வெட்கத்தில் தக்காளிச் சிவப்பாக, தன் பெருவிரலால் தன்னவளின் நெற்றி, புருவம், விழிகள், நாசி, இதழ்கள் என்பவற்றில் ஓவியம் வரைந்தான் துஷ்யந்த்.
உணர்வுகள் பெருக்கெடுக்க, இமைகளை அழுத்தமாக மூடிக் கொண்டாள் சகுந்தலா.
அதற்காகவே காத்திருந்தது போல் சகுந்தலாவின் முகத்தை நோக்கிக் குனிந்த துஷ்யந்த் அவளின் நெற்றியில் அழுத்தமாக தன் முத்த அச்சாரத்தைப் பதிக்க, தன்னவனின் மீசை முடி உரசல் சகுந்தலாவிற்கு குறுகுறுப்பூட்டியது.
சகுந்தலா வெட்கத்தில் நெளிய, நெற்றியில் இருந்த துஷ்யந்தின் இதழ்கள் அடுத்து இரண்டு இமைகளிலும் அழுத்தமாகப் பதிந்தன.
தொடர்ந்து கன்னங்கள், நாசி, தாடை என மாறி மாறி முத்தமிட்டான் துஷ்யந்த்.
அடுத்து அவன் எங்கு வருவான் என்பதை உணர்ந்த சகுந்தலாவின் இதழ்கள் பேராசையுடன் பிரிய, அக் குறும்புக்காரனோ வேண்டும் என்றே அசையாமல் இருந்தான் தன்னவளின் முகத்தின் மீது பார்வையைப் பதித்தவாறு.
சில நொடிகளுக்கு எந்த சத்தமும் இல்லாமல் போகவும் சகுந்தலா சட்டென இமைகளைப் பிரித்துப் பார்க்க, மறு நொடியே அவளது இதழ்கள் தம் இணையிடம் சிறைப்பட்டன.
சகுந்தலா துஷ்யந்தை அதிர்ச்சியுடன் விழி விரித்துப் பார்க்க, ஒற்றைக் கண் அடித்த துஷ்யந்த் தன்னவளின் இதழ்களில் இருந்து தேனை உறிஞ்சினான்.
வெகுநேரம் நீடித்த இதழ் முத்தத்தை சகுந்தலா மூச்சு விட சிரமப்படவும் துஷ்யந்தே மனமே இன்றி முடித்து வைத்தான்.
கணவன் மனைவி இருவரும் பெரு மூச்சுகளாக வாங்க, இருவரின் இதழ்களிலும் புன்னகை.
“ஐ லவ் யூ சகுந்தலா… நான் இழந்த நொடிகள் எல்லாத்தையும் மீட்டு எடுக்க எனக்கு ஒரு வாய்ப்பு தருவியா?” எனக் கேட்டான் துஷ்யந்த் ஏக்கமாக.
உடனே ஆமோதிப்பாகத் தலை அசைத்த சகுந்தலா துஷ்யந்தை அணைத்தவாறு, “ஐ லவ் யூ டூ துஷ்யந்த்… எப்பவும் என் கைய விட்டுடாதீங்க. இதுக்கு மேல ஒரு கஷ்டத்த அனுபவிக்கிற சக்தி சத்தியமா இல்ல எனக்கு.” என்றாள் கண்ணீருடன்.
அவளைப் பதிலுக்கு இறுக்கமாக அணைத்துக் கொண்ட துஷ்யந்த் எதுவும் பேசாது அறையின் விளக்குகளை அணைத்து விட்டான்.
வெறும் வார்த்தைகளால் கொடுக்க முடியாத தன் அரவணைப்பையும் ஆறுதலையும் தன் நெருக்கத்தினால் தன்னவளுக்கு வழங்கத் தொடங்கினான் துஷ்யந்த்.
அன்றே இருவருக்கும் இனிதாக இல்லறம் மலர்ந்தது.
மறுநாள் காலையில் முதலில் கண் விழித்தது என்னவோ சகுந்தலா.
முன் தினம் மருத்துவமனையில் இருந்து வந்ததுமே வெளியே சென்றதும் இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததும் என எல்லாம் சேர்ந்து துஷ்யந்த் களைப்பு மிகுதியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
அவன் மார்பில் முகம் புதைத்துப் படுத்திருந்த சகுந்தலாவை துஷ்யந்தின் கரங்கள் சிறையிட்டு இருந்தன.
இமைகளைப் பிரித்த சகுந்தலாவிற்கு அவ்வளவு நெருக்கத்தில் தன்னவனின் முகத்தைக கண்டதும் அக் காலை நேரத்திலேயே அவ்வளவு புத்துணர்ச்சியாக இருந்தது.
துஷ்யந்தின் அணைப்பில் இருந்தவாறே சகுந்தலா எம்பி அவன் இதழ்களில் இதழ் பதித்து விட்டு விலக முயல, மறு நொடியே சகுந்தலாவைத் தனக்குக் கீழ் கொண்டு வந்து இதழ் யுத்தத்தைத் தொடர்ந்தான் துஷ்யந்த்.
இதனைக் கிஞ்சித்தும் எதிர்ப்பார்க்காத சகுந்தலா அதிர்ந்து விழி விரிக்க, சில மணித்துளிகள் கழித்தே தன்னவளின் இதழ்களுக்கு விடுதலை அளித்தான் துஷ்யந்த்.
துஷ்யந்த் விலகிய போது சகுந்தலாவின் முகம் வெட்கத்தால் சிவந்து போய் இருந்தது.
“அப்போ இவ்வளவு நேரமும் தூங்குற போல நடிச்சீங்களா?” என சகுந்தலா போலிக் கோபத்துடன் கேட்கவும் இல்லை எனத் தலை ஆட்டினான் துஷ்யந்த்.
“அப்போ?” எனக் கேட்ட மனைவியின் மூக்கை செல்லமாகப் பிடித்து ஆட்டிய துஷ்யந்த், “ஐம் அ டாக்டர் பேபி… தூங்கினா கூட என் சென்சஸ் எல்லாம் விழிச்சு தான் இருக்கும். அவ்வளவு அலர்ட்டா இருப்பேன்.” எனக் கூறிக் கண் அடித்தான்.
அதனைக் கேட்டு வாய் விட்டு சிரித்த சகுந்தலா திரும்பி நேரத்தைப் பார்க்க, அதுவோ மணி ஏழு என்று காட்டியது.
“அடக் கடவுளே… இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா? எல்லாம் உங்களால தான் துஷ்யந்த். பரத் என்னைத் தேடுறானா இருப்பான். அவன ஸ்கூலுக்கு ரெடி பண்ணவும் வேணும்.” என்ற சகுந்தலா அவசரமாக எழுந்து அமர்ந்தவள் தான் இருக்கும் கோலம் அப்போது தான் மூளையில் உரைக்க, சட்டென மீண்டும் போர்வைக்குள் நுழைந்து கொண்டாள்.
சகுந்தலாவின் செயலில் துஷ்யந்த் அடக்கமாட்டாமல் சிரிக்க, அவனின் புஜத்தில் ஒரு அடியை விட்ட சகுந்தலா, “என்ன சிரிப்பு வேண்டி இருக்கு? சிரிக்காதீங்க… கொடுங்க என் சேலைய.” என்றாள் துஷ்யந்த் படுத்திருந்த அவளின் சேலையைக் கை காட்டி.
துஷ்யந்த் குறும்புப் புன்னகையுடன் மறுப்பாகத் தலை அசைக்க, அவனை முறைத்துப் பார்த்த சகுந்தலா இருவரையும் போர்த்தி இருந்த போர்வையை துஷ்யந்த் எதிர்ப்பார்க்காத நேரம் இழுத்து எடுத்து தன்னை முழுதாகப் போர்த்திக் கொண்டு அவசரமாக குளியலறையை நோக்கி ஓடினாள்.
இதனை எதிர்ப்பார்க்காத துஷ்யந்த், “ஹேய்…” என அதிர்ந்து கத்தியவன் அவசரமாக சகுந்தலாவின் சேலையை எடுத்து தன்னைப் போர்த்திக் கொண்டான்.
குளியலறைக் கதவைத் திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டிய சகுந்தலா துஷ்யந்தைப் பார்த்து பழிப்புக் காட்டி விட்டு அவன் அவளை நோக்கி ஓடி வரவும் அவசரமாக கதவை அடைந்தாள்.
கணவன் மனைவி இருவரும் குளித்து உடை மாற்றி அறையை விட்டு வெளியே வந்த நேரம் பரத் ஏற்கனவே பள்ளி செல்லத் தயாராகி இருந்தான்.
“சேம்ப்… அடடா…. என் பையன் பிக் போய் ஆகிட்டானே. அவரே ஸ்கூல் போக ரெடி ஆகிட்டாரு.” எனச் சிலாகித்தவாறு மகனை அள்ளித் தூக்கிக் கொண்டான் துஷ்யந்த்.
“ஆமா டாடி… பரத்தே ட்ரெஸ், ஷூ எல்லாம் போட்டேன். பாட்டி தான் தலை வாரி விட்டாங்க.” என்றான் பரத் உற்சாகமாக.
“தெட்ஸ் மை போய்…” எனப் பாராட்டியவாறு மகனை முத்தமிட்ட துஷ்யந்தின் கன்னத்தைக் கிள்ளி விட்ட பரத், “டாடி ஏன் பரத்த மட்டும் தனியா தூங்க விட்டீங்க?” எனக் கேட்டான் சிணுங்கலாக.
திருட்டு முழி முழித்த துஷ்யந்த் மகனை என்ன சொல்லி சமாதானப்படுத்த எனத் தெரியாமல் மனைவியின் முகம் பார்க்க, “பாட்டி தான் மம்மியும் டாடியுயும் டயர்டா தூங்குறாங்கன்னு உங்கள இன்னைக்கு ஒருநாள் டிஸ்டர்ப் வேணாம்னு சொன்னாங்க.” என பரத் கூறவும் சகுந்தலாவை வெட்கம் பிடுங்கித் தின்ன, கனவனைப் போலியாக முறைத்தாள்.
துஷ்யந்தோ அவளைப் பாவமாகப் பார்த்து வைத்தான்.
சகுந்தலா வேகமாக சமையலறைக்குள் நுழைய, அங்கு பரிமளம் ஏற்கனவே பரத்திற்கு மதிய உணவை தயார் செய்து டிஃபன் பாக்ஸில் அடைத்து இருந்தார்.
“சாரி அத்தை. லேட் ஆகிடுச்சு. கொடுங்க நான் எடுத்து வைக்கிறேன்.” என்ற சகுந்தலா பரிமளத்தின் கரத்தில் இருந்த காலை உணவுப் பாத்திரங்களை வாங்கிச் சென்று மேசையில் வைத்தாள்.
அவற்றை வைத்து விட்டு திரும்பி வந்த சகுந்தலாவின் முகத்தில் ஒருநாளும் இல்லாத சந்தோஷத்தைப் பார்த்தே என்ன நடந்து இருக்கும் என்று யூகித்த பரிமளம் தன் மருமகளுக்கு திருஷ்டி கழித்து முத்தமிட்டார்.
சகுந்தலா அவரைக் குழப்பமாக ஏறிட, “எப்போவும் இதே போல சந்தோஷமா இரும்மா. உன் சந்தோஷத்துலயும் நிம்மதிலயும் தான் என் பையனோட சந்தோஷம் அடங்கி இருக்கு. நான் ஒரு மடச்சி. நீ என் பையனுக்கு பொருத்தம் இல்லன்னு நினைச்சி அவன் மனசுல எந்த ஆசையும் வளர விடக்கூடாதுன்னு ஏதேதோ பண்ணிட்டேன். ஆனா நம்ம எல்லாருக்கும் மேல ஒருத்தன் இருக்கான். அவன் நினைச்சத கண்டிப்பா நடத்தி முடிப்பான்னு அப்போ எனக்கு தெரியல. அதுவும் இல்லாம நானே தேடி ஒரு வாழ்க்கைய என் பையனுக்கு அமைச்சி கொடுத்து இருந்தா கூட அவன் இந்தளவு சந்தோஷமா இருப்பான்னு கேட்டா சந்தேகம் தான். நீ என் பையனுக்கு கடவுளா கொடுத்த வரம். இதே போல எப்போவும் சந்தோஷமா இருக்கணும்.” எனக் கண் கலங்கக் கூறிய பரிமளத்தை அணைத்துக் கண்ணீர் விட்டாள் சகுந்தலா.
திருமணமான நாளில் இருந்து இன்று வரை தாய்க்கு தாயாக நின்று தன்னைத் தாங்கும் மாமியார் மீது சகுந்தலாவிற்கு பாசம் பொங்கி வழிந்தது.
பின் துஷ்யந்த் பரத்தை அழைத்துக் கொண்டு கிளம்ப, கணவனையும் மகனையும் வழி அனுப்பி வைத்து விட்டு வந்த சகுந்தலாவின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.
அடுத்து வந்த நாட்களிலும் என்ன தான் வேலையாக இருந்தாலும் மனைவிக்கும் மகனுக்கும் தன் நேரத்தை ஒதுக்கி வைக்க மறக்கவில்லை துஷ்யந்த்.
இரவானால் போதும் தன் அன்பிலும் அணைப்பிலும் சகுந்தலாவைத் திக்குமுக்காடச் செய்து விடுவான் அக் காதல் மருத்துவன்.
இவர்களது நாட்கள் இவ்வாறே சந்தோஷ ஆர்ப்பரிப்புடனும் மனநிறைவோடும் கழிந்தன அந்த ஒரு அழைப்பு வரும் வரை.

