Loading

           நெஞ்சத்தில்.       தஞ்சமானவளே -01

அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அந்த  ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அறையில் தன்னை பட்டு வேஷ்டி சட்டையில் கண்ணாடியில் பார்த்து கொண்டிருந்தான்.

“ம்ம்ம்….  நாட் பேட்  கிருஷ்….  அழகா தான் இருக்க…. இந்த தமிழ் நாட்டு பசங்களுக்கே வேஷ்டி கட்டினா அழகு கொஞ்சம் தூக்கலா தான் இருக்குப்பா….  நீ அழகன் டா….!!”  என தனக்கு தானே தன்னை பற்றியே  பெருமை பேசிக் கொண்டிருந்தான்….. முகில்கிருஷ்ணா.

“ஹாய்….  நான் தாங்க அட இங்கப் பாருங்க….  மை செல்ஃப்  முகில் கிருஷ்ணா…  ம்ம்ம் இன்னைக்கு எனக்கு கல்யாணம்…. யார் கூட ….. அதை சீக்கிரம் சொல்லிடுறேன்….  அப்புறம் நான் என்ன பண்றேன் னு கேட்கலையே….  நான் எம்கே கம்ப்யூட்டர் சென்டர்  வச்சு நடத்திட்டு வரேன்…  அப்படின்னு பொய் சொல்ல மாட்டேன்….   அதோட பிராஞ்சஸ்  தமிழ்நாடு  ஃபுல்லா இருக்கு…  அதுல நான் கவுன்செலிங் கோ ஆர்டினேட்டர்…  இது என்ன டா  புது பதவியா இருக்குனு கேட்கறீங்களா  …. ஒண்ணுமில்லங்க….  ப்ரண்ட் ஆபிஸ் ல உட்கார்ந்து இருப்பாங்களே கேர்ள்ஸ் அவங்களுக்கு டிரெயினிங் தரவேண்டும் அது தான் என் வேலை….  அதாவது என்னன்னா எங்க சென்டர் ல என்னென்ன கோர்ஸ் இருக்கு அதை எப்படி ஸ்டூடன்ஸ்க்கு விளக்கி சொல்லனும் அவங்களை எப்படி  கோர்ஸ் ல ஜாயின் பண்ண வைக்கனும் அதை பத்தி  அவங்களுக்கு சொல்லி தர்றது தான் எனக்கு வேலை … மாசம்  பத்தாயிரம் ரூபாய் சம்பளம்…  அதை வச்சு தான்  மேனேஜ் பண்ணனும்… எனக்கு ஒரு அண்ணா அகில் கிருஷ்ணா ஒரு அக்கா… மஞ்சரி அவளோட ஹஸ்பண்ட் சந்தோஷ்…  அவங்களுக்கு ஒரு குட்டிப் பொண்ணு பேரு ஸ்வஸ்திகா…  மூணு வயசு ஆகுது…  மை ஸ்வீட் லவ்வபிள் அக்கா பொண்ணு  மை க்ரைம் பார்ட்னர்…  ” 

 என் அறிமுகம் முடிஞ்சது இனி வாங்க கதைக்கு போகலாம். கொஞ்சம் ப்ளாஸ்பேக் சொல்றேன்… அப்புறமா என் மேரேஜ் பத்தி பேசுவோம் 

😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

“கிருஷ்ணா எல்லாம் தயார் தானே….   மீட்டீங் அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம் ரெடி தானே….   பசங்க பொண்ணுங்க எல்லாரும் வந்து தங்கற மாதிரி அரேஞ்ச் பண்ணிடுங்க …. “என மேனேஜர் கூறி விட்டு பின்னர் அவரே .,

“ஒரு ரூமிற்கு இரண்டு பேர் தங்குற மாதிரி இருக்கட்டும் ஏன்னா மொத்தம்  ஐம்பது பேர்  வர்றாங்க  இருபத்தி எட்டு ரூம் தான் இருக்கு…  நாமளும் தங்க வேண்டும் ஸோ கவனம்” என மேனேஜர் சொல்லி விட்டு சென்றார். கொடைக்கானலில் டிரெயினிங்  போடப் பட்டு இருந்தது.

கவுன்சலிங்  டிரெயினிங் கொடுக்க வேண்டிய அனைவரும் அன்று இரவே  வந்து விட்டனர். 

ஒவ்வொருவராக அறிமுகப் படுத்தி கொண்டு இருக்க தூக்கம் கலையாமல் ஒருத்தி தள்ளாடியபடி நின்றாள். 

எல்லோருக்கும்  அறை ஒதுக்கப்பட்டு ஆயிற்று….  அதில் சின்ன சிக்கலும் வந்து விட்டது.  இருபத்தி ஏழு பெண்கள் வந்திருந்தனர்  ஆண்கள் இருபத்தி மூன்று பேர் வந்திருந்தனர். ஆண்கள் பிரச்சினை இல்லை ஒரு  அறையில் மூன்று பேர் தங்கி கொள்வதாக கூறி விட்டனர்.

பெண்கள் இருவருக்கு மேல் தங்க இயலாது என வாதம் செய்து கொண்டிருக்க  வேறு வழியின்றி  ஒரு  பெண்ணை  தனியாக தங்கி கொள்ள கூறினான் இன்னொரு கோ ஆர்டினேட்டர்  ராகவ் .. 

அவளோ தயங்கியபடியே தலை குனிந்து நின்றாள். “சார் எனக்கு தனியா இருந்து பழக்கம் இல்லை” என தடுமாற…. அவளின் முகம் தான் காண இயலவில்லை முகிலால். பின்னர்  அவள் மாவட்டத்தில் இருந்து வந்த பெண்கள் இருவரும் தன்னோடு தங்க வைத்து கொள்வதாக கூறி விட்டனர்.

“ப்பா ப்ராப்ளம் சால்வ்டு “என்றபடி  அவன் அறைக்குள் சென்றான்..

“என்ன ஆச்சு ராகவ்??” என்று முகில்  கேட்க .

“அது ரூம் பிரிக்கிறதுல ப்ராப்ளம் ஆயிடுச்சு முகில் இப்ப ஓகே அவங்க கிராமத்து பொண்ணு போல அதான் தனியா தங்க பயம்….  ஓகே குட் நைட் பா நாளைக்கு காலையில் எட்டு மணிக்கு எல்லாம்  மீட்டிங் இருக்கு…”  என படுத்து விட்டான் ராகவ் .

மறுநாள் பொழுது அழகாய் புலர்ந்திட   எட்டு மணிக்கு மீட்டிங் என அனைவருக்கும் தெரிவிக்கபட்டது….  அனைவரும்  ஆறு மணிக்கு எல்லாம் எழுந்து கொண்டனர்.  காலையில் அலாரம் வைத்து எழுந்தான் முகில் கிருஷ்ணா. 

  குளித்து தயார் ஆகி வந்தவன் காபியை பருக வெளியே வந்தான். அவனது  அறை முதல் தளத்தில் இருந்ததால் அந்த அறையின்  வராண்டாவில் நின்று குளிருக்கு இதமாக காபியை ருசித்து கொண்டிருந்தான் .

கீழே எனக்கு நேர் எதிராக ஒரு பிள்ளையார்  கோயில் இருக்க அங்கே ஒருத்தி மட்டும் கர்மசிரத்தையாக  பிள்ளையாரிடம் ஏதோ வேண்டுதல் வைத்து கொண்டு இருந்தாள். ” யார் யா அது இவ்வளவு காலையில் பயபக்தியா சாமி கும்பிடுறது….  போய் பார்க்கலாம்” என மனதில் நினைத்து கொண்டு வேகமாக கீழே வந்தான்.

இளஞ்சிவப்பு நிற சுடிதாரில்  அழகாக பின்னலிட்ட  நீண்ட சடை  அதில் சிறு சரமாக மல்லிகைப்பூ….  காதில் அழகான குடை  ஜிமிக்கி  கழுத்தில் இருந்து சற்று நீண்ட மெலிதாக  உரசிய  செயின் அதில் சிறு தாயத்து … இரு கரம் கூப்பி இருக்க அந்த மோதிர விரலில்  சிறு மோதிரம் தலை கீழாக  V என்றும்  நேராக பார்த்தால் A என்றும் தெரியும் இனிஷியல் போட்டது … மற்றொரு விரலில்  வளைய மோதிரம் போட்டு இருந்தாள்  .  வாய் மட்டும் முணுமுணுப்பாக எதையோ கூறிக் கொண்டிருந்தது . பார்த்த ஐந்து நிமிடத்தில் மேலிருந்து கீழாக அளந்து விட்டான்.

“ரொம்ப  பக்திமான் போல !!” என நினைத்தபடி திருநீறை பூசி கொண்டு அங்கிருந்து கிளம்பினான். ஆனாலும் கண் விழித்ததும் என்ன செய்வாள் என பார்க்க ஆசை அதனால் அங்கிருந்த அரளி செடி அருகில் நின்று கொண்டிருந்தான் .

கண் திறந்தவள் சுற்றி முற்றி பார்த்து விட்டு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி விட்டு சென்றாள். செய்வதை திருந்த செய் என்பது போல இருந்தது அவளது இந்த செயல்…. 

முகில் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றான். 

காலை உணவை பஃபே சிஸ்டத்தில் ஏற்பாடு செய்து இருக்க எல்லோரும் ஆங்காங்கே  தட்டை வைத்து கொண்டு உணவருந்தி கொண்டிருக்க  ., அந்த  பிங்க் சுடிதார்  மட்டும் ” இப்படி நின்னுட்டே எப்படி சாப்பிடுவது ??”என்று அங்குமிங்கும் விழிகளை அலைபாய விட்டபடி  நின்று கொண்டிருந்தாள்  .

“ஹேய் சாப்பிடு ஏன் தட்டு வச்சுட்டு நிற்கிற…. இந்த குளிருக்கு  சப்பாத்தி விரைத்து போயிடும் ” என அவள் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் அதுதான் அவள் பெயர் கூட எதுவோ சொன்னாளே….  ஹான் ரதி அவள் தான் அந்த பிங்க் சுடிதாரிடம் பேச்சு கொடுத்தாள்.

“அது நின்னுட்டே சாப்பிட கஷ்டமா இருக்கு அதான்….  !!”என்க

“அதோ அங்க சேர் இருக்கு வா போகலாம் “என அழைத்து சென்றாள் ரதி.

குளிருடன் காலை உணவை கைநடுங்கியபடி உண்டு கொண்டிருக்க…  அவளுக்கு அது பிடிக்கவில்லை என்று அவள் முகம் போன போக்கிலேயே தெரிந்தது.

“என்ன ஆச்சு  ஃபுட்  பிடிக்கலையா… ??”

“இல்ல அது வந்து….  ஆமாம்  காலையிலேயே  சப்பாத்தி சாப்பிடுறது எல்லாம் ரொம்ப கஷ்டம்….  அதனால தான்  ஒண்ணு மட்டும்  எடுத்துகிட்டேன் ஆனால் அதையே சாப்பிட முடியலை…  ஃபுட்  வேஸ்ட் பண்ண பிடிக்காது அதான் சாப்பிடுறேன்… ” என்றாள்.

அவர்கள் பேச்சை கேட்டபடி அங்கு தான் நின்றிருந்தான். முகில் கிருஷ்ணா… அவளுக்கு  தானாக ஹைபை கொடுத்து கொண்டான்.  ஏனெனில் அவனுக்கும்   சப்பாத்தி காலையில் சாப்பிட பிடிக்காது…  அது தான்  வேறொன்றுமில்லை.

மணி எட்டு ஆகி விட எல்லோரும் மீட்டிங்  ஹாலில்  அமர்ந்து இருந்தனர்.  முகிலோ தான்   பேச வேண்டிய எல்லாவற்றையும் ஒரு முறை ப்ரீஃபாக பார்த்து விட்டு ஹாலில் நுழைய ராகவ் மென்னகை புரிந்தான்.

எல்லோருக்கும் பொதுவாக வணக்கம் வைத்து விட்டு…  அவனது ஸ்பீச் கொடுத்தான் .

“ஹாய் மை செல்ஃப் முகில் கிருஷ்ணா…..  கவுன்சலிங் கோ ஆர்டினேட்டர்…. என ஆரம்பித்தவன்……  புதிய  கோர்ஸ் பற்றிய விளக்கங்களையும் அதனை எப்படி மாணவர்களிடம் விளக்க வேண்டும் என்று உரைத்தான்…. அவன் பேசுகையில் அவனது விழிகள் அந்த ஹால் முழுவதையும் அளந்தது….  அவனது தீர்க்கமான பார்வையும் தெளிவான பேச்சும் அனைவரையும் ஈர்த்து விட்டது.  அனைத்தையும் கூறி முடித்து விட்டு ஒரு சிலரிடம் கேள்விகளை கேட்க மிகச் சரியாக மாட்டிக் கொண்டாள் அந்த பிங்க் கலர் சுடிதார்.

“யூ….பிங்க் சுடி நீங்கள் தான் எழுந்திருங்க…  ஹான்…. வாட்ஸ் யுவர் நேம்… எந்த பிராஞ்ச் ??”

“ஆ…  ஆரண்ய விசாலினி… திருச்சி என்றதும் முகில் மனதில் ” நைஸ் நேம்” என விளித்து மந்தகாச புன்னகையை மனதினுள் வீசிக் கொண்டான்.

“ஓஓஓ…. சூப்பர்….  நீங்கள் சொல்லுங்க ….. கோர்ஸ் பத்தி யாராவது டீடெயில்ஸ் கேட்க வர்றாங்க…  நீங்க என்ன பண்ணுவீங்க??” என கேட்டதும்…

“வந்தவங்களை உட்கார வச்சு தண்ணீ தருவேன் “என்று சொல்ல ராகவோ .,”என்ன மிஸ். ஆரண்யவிஷாலினி அவங்க உங்கள் வீட்டுக்கு விருந்தாளியாவா வந்திருக்காங்க” என கேட்டு விட்டு சிரிக்க….  அவளோ “இல்ல….  அது வந்து…  வர்றவங்க பெரும்பாலும் ஸ்டூடண்டா இருப்பாங்க இல்ல ஏதாவது வொர்க் பண்றவங்களா இருப்பாங்க…  அவங்க என்ன சிச்சுவேசன்ல வருவாங்கனு தெரியாது…  வேலை முடிந்து அவசரமாக கேட்க வந்திருக்கலாம் இல்லை ஸ்டூடன்ட் னா வீட்டில் கம்பெல் பண்ணி சப்போஸ் திட்டு வாங்கிட்டு கூட வந்திருக்கலாம்….  அவங்க வந்ததும் நாம நம்ம கடமையேன்னு டைப் ரைட்டிங் மெசின் போல டப டபன்னு எக்ஸ்ப்ளைன் பண்ணா அதுவே அவங்களுக்கு கோர்ஸ் ல சேர்றதுக்கு இன்ட்ரெஸ்ட் இல்லாம பண்ணிடும்….  அவங்களை முதல்ல  இயல்பாக்கி விட்டு அப்புறம் பேச்சு வாக்கில் விளக்கினா கோர்ஸ் ல ஜாயின் பண்ண இன்ட்ரெஸ்ட் எடுப்பாங்க…  பட் இது எல்லோருக்கும் ஒத்து வராது… ஆனால்  மோஸ்ட் லி  இந்த டிரிக் ஒத்து வரும்” என்றாள். அனைவரும் கை தட்ட முகில் அவளை பார்த்து புன்னகைத்தான்.

இயல்பாக அமர்ந்து கொண்டாள்  ஆரண்யவிஷாலினி.

மீட்டிங் முடிந்ததும் சற்று நேரம் கொடைக்கானலை சுற்றி பார்க்க….  வேனில் கிளம்பினர். கொடைக்கானலின் குளிரை உள் வாங்கி பூக்களை ரசித்து புன்னகை முகம் மாறாமல் சுற்றி வந்தவள் மறக்காமல் தன் குடும்பத்தினருக்கு ஸ்வெட்டர், சாக்லேட், என வாங்கிக் கொண்டாள்.

இரண்டு நாட்களில் மீட்டிங் முடிந்து விட அனைவரையும்  பாதுகாப்பாக அனுப்பி வைத்து விட்டு இறுதியாக  திருச்சி மாவட்ட பெண்கள் மூவர் பின்னர் திண்டுக்கல் பெண், ஒருவர் இன்னொரு பையன் ராகவ் , முகில் இருவரும் இணைந்து ஒரு வண்டியில் கிளம்பினர்.

போகும் வழியில் கொண்டை ஊசி வளைவுகள் வரும் போது எல்லாம் ஆரண்யாவிற்கு கிறுகிறுக்க தலை கவிழ்ந்து கொண்டே வந்தவளால் ஒரு கட்டத்திற்கு மேல் தாக்கு பிடிக்க இயலாது வண்டியை நிறுத்த சொல்லி விட்டு வாமிட் செய்து விட்டாள். ஒருவர் எடுத்தால் மற்றவருக்கும் அது போல வந்து விடும் என்பது போல சிலர் எடுத்து விடுவார்கள் அதே போன்று தான்  இன்னொரு பெண்ணும் எடுத்து விட கடைசியாக எடுத்தது முகிலின் முறையாகிப் போனது.

சற்று ஆசுவாசமடைந்தவர்கள் பின்னர் கிளம்பினர் இடையில் முகில், ராகவ் இறங்கி கொள்ள., முகிலின் பார்வை ஆரண்யாவை தழுவி விட்டு வந்தது.

திண்டுககல்லில் அந்த மாவட்டத்து பெண்ணும் ஆணும் இறங்கி விட இரவு ஆன போது திருச்சியில் ஆரண்யா இறங்கினாள். மிகவும் சோர்வாக இறங்கினாள். அவளுக்காகவே அவளது அண்ணன் காத்திருந்தான்.

இறங்கிய உடனே தான் பத்திரமாக வந்த விஷயத்தை ஃபோன் செய்து ராகவிற்கு கூறி விட்டாள். ஆனால் முகிலோ அவளது உடல் நிலை பற்றி கேட்க .,”ஆரண்யாவிற்கு அழைக்கலாமா வேண்டாமா ???” என்று தவித்து கொண்டிருந்தான்.

…… தொடரும்.

😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

வணக்கம் நண்பர்களே … கதை எப்படி இருக்கிறது என்று உங்கள் விரிவான விமர்சனத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்