Loading

 

 

 

 

    நீது பேச ஆரம்பித்தாள் . 

 

” உனக்கு ஆசிரமத்தில் இடம் கிடைத்தது . ஆனா எனக்கு கல்யாணி அம்மா வீட்டுல இடம் கிடைத்தது . உனக்கு இந்த வீட்டுல குழந்தை இல்ல னு இடம் கிடைத்தது . எனக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருந்தும் இடம் கிடைத்தது . ” நீது 

 

   ” புரியலியே … ” பிரபஞ்சன் 

 

   ” என்னோட பெயர் வெறும் நீதுதான் . நான் சின்ன பொண்ணு . சரியா பேச தெரியாம தத்தக்க பித்தக்க னு தான் இருந்தேன் ‌. எங்கேயோ எல்லாரும் கார் ல போனோம் . அங்க இருந்து எங்கேயோ விழுந்தோம் . மயங்கினேன் . முழிக்கும்போது ஆம்பளைங்க சுற்றி நின்று பாத்துட்டு இருக்க யாரும் உதவல . தலை வலி ல அழுதேன் . அந்த பக்கமா கல்யாணி அம்மா கோயிலுக்கு தன்னோட பெண் குழந்தையோடு வந்தாங்க . என்னோட சத்தம் கேட்டு என்னைத் தூக்கி எடுத்து கொஞ்சி ஆற்றி தேற்றுனாங்க . பக்கத்துல எல்லாரும் ரொம்ப கார் ல எல்லாரும் இறந்துட்டாங்க னு சொன்னாங்க . என்ன கவர்மெண்ட் வழி தத்து எடுத்தாங்க . சந்தோஷமா வாழ்ந்தேன் . 

 

  எனக்கு நீது கிருஷ்ணா னு பெயர் வச்சு அந்த கிருஷ்ணன் தான் உனக்குத் துணை னு சொல்லி தந்து வளர்த்தாங்க . கல்யாணி அம்மாவும் மித்ரா அக்காவும் தான் என்னோட உலகம் . வேற எதுவும் பெருசா தெரியாது . நான் 12வது படிக்கும்போது மித்ரா அக்காவுக்கு கல்யாணம் . எல்லா ஏற்பாடும் நடந்துச்சு . எனக்கும் அம்மா மித்ரா அக்காவுக்கு எடுத்தது போல் பட்டுப்புடவை , தங்க ஆபரணங்கள் போட்டு அழகு பாத்தாங்த ‌ . கல்யாண நேரம் அக்கா இறங்கி போய்ட்டா . எல்லாம் நின்னுடுச்சு . பையன் வீட்டுக்காரங்க அம்மாவ கேவலப்படுத்துனாங்க . ஆசையா ஏற்பாடுகள் பண்ணுன கல்யாணம் நின்னது ல அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சு . எப்படியோ காப்பாத்துனோம் . 

 

    அம்மா எப்பயும் சொல்லுவாங்க . ஒரு பொண்ணு வீட்டுக்குள்ள முடங்கிடக் கூடாது . வெளிய வந்து இந்த பரந்து விரிந்து கிடக்கும் உலகைத் தெரிஞ்சுக்கணும் . எனக்கு வெளியூர் போய் படிக்க ரொம்ப ஆசை . அது அம்மாவுக்கும் தெரியும் ‌ . ஆனா அக்கா இறங்கி போனதுனால அப்பாவோட சொந்தங்கள் என்னை அனுமதிக்காம இருந்துச்சு . நான் கேக்கவும் இல்ல . ஆனா அம்மா நான் ஆசைப்பட்ட காலேஜ் லயே அட்மிஷன் ஃபார்ம் ஃபில் பண்ணி குடுத்தாங்க . என்னால் ஆச்சரியம் தாங்கல . அம்மா சில நேரங்கள் அக்கா நினைவு வந்து அழுவாங்க . பாக்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கும் . அக்கா னா எனக்கு உசுரு . அம்மா கிட்ட சொல்லி இருந்தா அம்மாவே அவ ஆசையை நிறைவேற்றி வச்சுருக்காங்க ‌ ஆனா எனக்குத் தெரியும் . அந்த நேரத்தில் கண்டிப்பா ஒரு பொண்ணுக்கு நடக்குமோ நடக்காதோ னு பயம் வரும் . 

 

     எனக்காக இவ்வளவு செஞ்ச என்னோட அம்மாக்கு நான் அவங்க இஷ்டப்படுறது போல அவங்க பொண்ணா இருக்கணும் னு நினைச்சேன் . அதனால் எனக்கு ஆசை வரும்போது அதை மூட்டை போட்டு ஓரம் ஒதுக்குனேன் ‌ . ஆனால் கடைசி வரை எங்க அம்மா என் இஷ்டப்படி தான் வாழ வச்சாங்க . 

 

  அப்புறம் என்னால … ஹ்ம்ம் ‌… ” நீயின்றி நானில்லையே ” னு தான் சொல்லணும் … நீயில்லாம என்னால் இருக்க முடியல . உன்னோட ஒவ்வொரு இமெயில் ம் பாத்து ரொம்ப நேரம் டாய்லெட் ல போய் அழுவேன் . உன் கல்யாணம் பத்தி கடைசியாக போட்ட மெயில் பாத்து சுக்கு நூறா உடைஞ்சுட்டேன் . 

 

நீயில்லாம நான் இல்லவே இல்ல . கடாரம் கொண்டான் படத்தில் ஒரு பாட்டு வருமே …. ஹான் … 

 

     வேறெதுவும் தேவையில்லை

 

     நீ மட்டும் போதும் ‌… 

 

அது தான் . நீ மட்டும் போதும் ” நீது . 

 

    ” அப்படியா … 🤔 அங்க பாரு . யாரோ நம்மள குறுகுறு னு பாக்குறாங்க ” பிரபஞ்சன் . 

 

   நீது திரும்பிப் பார்க்க அவளது உலகமாய் இருந்த அன்பு அக்கா நெற்றியில் குங்குமம் , கழுத்தில் தாலி , காலில் மெட்டி போட்டு வயிற்றில் அழகிய 8 மாத கருவை ஏந்தியவளாய் நிற்க முடியாமல் தனது கணவனின் பிடியில் தாங்கித் தாங்கி நின்று கொண்டிருந்தாள் மித்ரா . 

 

      நீதுவிற்கு அளவு கடந்த சந்தோஷம் . ஓடிச் சென்று கட்டி அணைத்துக் கொண்டாள் ‌‌. மித்ராவினை முத்த மழையினால் திணறடித்தாள் . அவளது செய்கையிலே நீது மித்ராவைப் பிரிந்து எவ்வளவு வேதனையுற்றிருக்கிறாள் என்பது புரிந்தது . அளவுகடந்த அன்பின் வெளிப்பாடு . மித்ராவின் மேடுற்ற வயிற்றைத் தொட்டும் பார்த்து மகிழ்ந்தாள் . 

 

     ” ரொம்ப ஏங்காத . கொஞ்சம் நாள் ல உன்னோட வயிறும் இப்படி தான் இருக்கும் . ” மித்ரா . 

 

   வெட்கம் பிடுங்க , ” போ அக்கா நீ வேற ” நீது . 

 

     ” உங்க எல்லாதுக்ம் பாப்பா மத்ம் தான் பிக்குதூ . எந்ன யாலுக்கிமே பிக்கல . ஏங் ” என்று குழறி குழறி பேசியபடி ஒரு குட்டிப் பையன் வந்து நின்றான் .  

 

      ” தொடங்கிட்டியா . ஹைய்யோ … தர்ஷா உன்னோட என்னால் முடியல டா ” மித்ரா . 

 

      ” யாரு இந்த பாப்பா இவ்வளவு க்யூட்டாக இருக்கான் ‌. பட் உன்னோட இல்லையே ” நீது .

 

     ” இவன் தான் என் மூத்த பையன் அஷ்வின் . எனக்கு மட்டும் அவன் தர்ஷன். அப்படியே அவரோட சாயல் . ” மித்ரா . 

 

     ” வாவ் … வாங்க அஷ்வின் சார் .‌ உங்கள யாருக்கும் பிடிக்கலயா . இனி என்னோட உலகமே நீதான் ‌ . வாங்க வாங்க ” நீது . 

 

    அஸ்வினை தூக்கிக் கொண்டு பிரபஞ்சனிடம் வந்தாள் ‌ . பிரபஞ்சனை பார்த்த உடன் துள்ளிக் குதித்து அஸ்வின் சென்றான்‌. 

 

    கல்யாணி அம்மா முகத்தில் மாறாத புன்னகையோடு நின்றார் . நீது பயந்து கொண்டே கல்யாணி நீதுவின் அருகில் வந்து , ” பாப்பா … கல்யாணம் ஒவ்வொருத்தரோட தனி உரிமை . அதை தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது . தன்னோட துணையைத் தவறாகத் தேர்வு செய்கையில் பெற்றோர் தடுக்கணும் ‌. நீ அந்த உரிமையை எங்களுக்குத் தந்த . நாங்க சஜெஸ்ட் மட்டும் தான் பண்ணுவோம் .

 

     மித்ரா அக்காவுக்கு அந்த டைம் கண்டிப்பா பயம் வந்துருக்கும் . உனக்கு இருந்த புரிதல் அவ கிட்ட கொஞ்சம் கம்மியாக இருக்கு . அவ்வளவுதான் . என்னோட அழுகை என் மகளைக் காணோமே னு தான் ‌‌. கல்யாணம் நின்னுப் போச்சே னு கிடையாது . பயத்தில் பிடிக்காத வாழ்க்கை வாழ பிடிக்காம எங்கேயோ போய்ட்டாளே னு தான் பயந்தேன் . அவ கிடைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் . ஆனா நீ எனக்கு உண்மையான அம்மா ஸ்தானம் தந்ததுல டபுள் சந்தோஷம் . ” என்று கூறி அணைத்துக் கொண்டார் . 

 

      ” அத்த ரெண்டு வருஷம் டெல்லி போறோம் . தனிமை ல இருந்தா டிப்ரஷன் கூடி கண்டிப்பா மன நோய்கள் உண்டாகும் . அதனால் தான் எனக்கு பேரன்ஸ் கல்யாணம் பண்ணி வச்சாங்க … ஆனா கண்டிப்பா ரொம்ப நேரம் நீது கூட இருக்க முடியாது ‌. அதனால … ” பிரபஞ்சன் . 

 

    ” என்ன தம்பி … யோசனையும் பீடிகையும் பலமா இருக்கு . நான் மித்ரா கிட்ட பேசியாச்சு . அஸ்வின் இனி உங்க பிள்ளை . அப்புறம் நீதுவுக்கு நான் சொன்னது போல மெடிசின் எடுக்கணும் . இல்ல னா கர்ப்பப்பை கண்டிப்பா தாங்காது . உங்க ரெண்டு பேருக்கும் இடைல நிறைய டிஸ்டன்ஸ் தெரியுது . விலகி நின்னே காதலிச்சீங்க னு இதுல தெரியுது . ஆனா கல்யாணம் ஆன பிறகு இந்த டிஸ்டன்ஸ் வாழ்க்கையைத் தான் கெடுக்கும் . அப்புறம் … இண்ணைக்கு மட்டும் நீதுவை எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகட்டுமா … ” கல்யாணி . 

 

     ” ஏன் அத்த என்னையும் எங்க சாத்தான் கூட்டத்தையும் கூட கூட்டிட்டு போக மாட்டிங்களா ‌… ” பிரபஞ்சன் . 

 

      ” என்ன இது சாத்தான் கூட்டம் னு … உங்க கிட்ட கிடைக்குற அன்பு என் பொண்ண கண்டிப்பா நல்ல வாழ்க்கை வாழ வைக்கும் . இது ஒரு அன்பான கூட்டம் ‌ . எல்லாரும் வாங்க ஆனா … தங்க … ” கல்யாணி . 

 

     ” அத்த இந்த வீட்டுல ஆளுக்கொரு பெட்ரூம் ல படுத்து வாழ்ந்து இங்க நிறைய பேர் டிப்ரஷன் ல இருக்காங்க . அதுனால தான் நான் கேட்டேன் . சேந்து இருந்து அடிதடி பண்ணி கலாட்டா வா வாழுற வாழ்க்கையோட சந்தோஷமே தனிதான் . ” பிரபஞ்சன் ‌ 

 

     ” சரி தம்பி … வாங்க ” கல்யாணி . 

 

     அனைவரும் கல்யாணி அம்மாவின் வீடு நோக்கிப் புறப்பட்டனர் . அங்கு சென்று அதிகமாக விளையாடி சந்தோஷமாகக் கழித்தனர் . கல்யாணி அம்மாவின் விருந்தில் திளைக்கவும் செய்தனர் . சந்தோஷத்தின் எல்லை அது அங்கு இல்லை ‌ . அந்த நாளில் மனம் விட்டு சிரித்து மகிழ்ந்தனர் . 

 

     மறுநாளே நீதுவும் பிரபஞ்சனும் அஸ்வினும் ஒன்றாக ஒரு காரில் டெல்லி விரைந்தனர் . ஆதிரனும் கீர்த்திகாவும் சேர்ந்து ஒரு காரில் டெல்லி சென்றனர் . நிரஞ்சன் தமிழினி அடுத்த காரில் டெல்லி விரைந்தனர் . 

 

  

 

  1.    அன்பின் சூழல் ஒன்றாக இருந்தது … 

 

 

 

முற்றும் …

 

 

 

    

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்