Loading

பாட்டி எதுக்கு இப்படி கதவை தட்டிக்கொண்டு இருக்க…. 

 உள்ளே நீ இல்லயா…? அப்ப உள்ள எந்த எடுவட்ட சிறுக்கு பையன் இருக்கான்டா ?…. உள்ள ராமு தான் துணி மாத்திக்கொண்டு இருக்கான்…. அந்த கிறுக்கு ஏன்டா கதவை பூட்டிட்டு துணி மாத்துறான்….? “நீ எல்லாம் உள்ள போயிட்டா , அவனுடைய மானம் கப்பல் ஏறிடாது”? ஆமா அவரு பெரிய மன்மதன் நாங்க அப்படியே அவருடைய அழகுல மயங்கி தொப்புனு விழுந்து விடுவோம் பாரு அந்த கருவா பையனைப் பார்த்து போடா ….

     வாசு உள்ளிருந்து “நல்லா என்னுடைய மானத்தை கப்பல்ல ஏத்துறீங்க பேரனும் பாட்டியும் சேர்ந்து “…… இம்புட்டு நேரமா துணி மாத்துறான் அவன் , சீக்கிரம் கதவை திறக்க சொல்லுடா….? நீ எதுக்கு இப்ப வந்த பாட்டி ….? ஐயர் அங்க தாலியை கொண்டு வர சொன்னாரு, அந்த தாலி உன்னுடைய ரூம்ல தான் இருக்கு…. “டேய் “கருவா பையலே சீக்கிரம் கதவை திறடா உள்ள வந்தேன் , அப்படியே மிதிச்சி தரைமட்டமாக்கிவிடுவேன்…. ராமு, கதவை திறந்து விட்டு , பாட்டிப்பார்த்து “அப்படியே நீங்க எலிசபெத் மகாராணி “. நீங்க என்னை கருவா பையன்னு சொல்றீங்க …? அடேய் நான் அந்த எலிராணியா இல்லாமல் இருக்கலாம் ஆனால் உங்க தாத்தாவுக்கு நான்தான் டா மகாராணி , அவனின் குமட்டிலே குத்த…. “ஆ” வலிக்கிறது பாட்டி…. – 

மாப்பிள்ளை கூட இருடானா , அவனை வெளியே விட்டுட்டு நீ என்ன …? கதவை பூட்டிக்கிட்டு அடைகாக்கிறையா …? ராமு என்ன சொல்வது ?.. இந்த பாட்டி சரியான ரவுடியா இருக்கும் போலயே….? என்னடா யோசிக்கிற அடுத்த பொய் என்ன சொல்லலாம்னு…”ஆ” பாட்டி கண்டுபிடித்து விட்டதே…! 

 நான்தான் பாட்டி மா வெளியே போனேன். என்னுடைய போனுக்கு சிக்கல் கிடைக்கவில்லை….. நான் தான் அவனை கதவை லாக் பண்ணிட்டு இருடா இல்லையினா யாராவது சும்மா …. சும்மா உள்ள வருவாங்கனு சொன்னேன்…. ஆமா நீங்க தாலி வேணும் தானே வந்தீங்க …? ஐயர் அப்பறம் உங்களை திட்ட போறாரு , பாட்டி தாலியை எடுத்துக்கொண்டு , ராமுவைப் பார்த்து “டேய் கருவா பையலே உம்மேல எனக்கு சந்தேகமா தான் இருக்கு … கல்யாணம் முடியட்டும் உன்னை ரசத்துக்கு புளியா கரைத்துவிடுறேன்… – சரிங்க எலிராணி அவர்களே….! நீங்க போங்க….. பாட்டி மறுபடியும் ராமுவைப் பார்த்து முறைத்துவிட்டு சென்றுவிட்டார்….

 ஏன்டா உன்னை பாட்டி இப்படி கழுவி … கழுவி ஊத்துது… உங்க எலிராணிக்கு எம் மேல என்ன காண்டோ தெரியலடா…! ஆனா மச்சான் என்னை நல்லா கலாய்குதுனு மட்டும் தெரியுது…… இந்த வயசிலும் இப்படி வாயாடுது இன்னும் சின்ன வயசுல எப்படி இருந்திருக்குமோ…? இந்த ஆராய்ச்சி உனக்கு ரொம்ப முக்கியமா …? முக்கியம்னா சொல்லு நான் பாட்டியை கூப்பிடுறேன் நீ அவங்ககிட்டையே கேட்டுக்கோ…. என்னடா வாயி உன்னது…? பாட்டினு சொல்லி முடிக்கல அதுக்குள்ள மறுபடியும் வந்துட்டாங்க….. உதிரன் அமைதியாக சிரிக்க…. 

    ரெண்டு பேரும் இன்னும் எவ்வளவு நேரம் நின்னுகிட்டே கதை பேசுறதா உத்தேசம் ….? அது ஒன்னும் இல்லை பாட்டி உதிரனுக்கு கல்யாணத்துக்கு அப்புறமா எப்படி இருக்க வேண்டும்னு சொல்லிக்கொண்டு இருந்தேன்….!

   ராமுவைப் பார்த்து நக்கலாக சிரித்துவிட்டு , என்னது கல்யாணம் ஆகாத மொட்டைப் பையன் நீ , எம் பேரனுக்கு கல்யாண வாழ்க்கை பத்தி சொல்லிக்குடுக்கிறையா…..? போய் நீ முதல்ல கல்யாணம் பண்ணுடா…..! சரிங்க எலிராணி … உங்க தலைமையிலே இல்ல …. இல்ல தலையிலேயே கல்யாணம் பண்றேன்…. 

  அட கருவா பயலே எம்புட்டு கொழுப்பு உனக்கு என்னுடைய தலையில கல்யாணம் பண்றையா….? இருடா உன்னை …. உன்னை என்ன பண்றேனு பாரு….? …. பாருங்க ….. பாருங்க ….நல்லா பாருங்க….

 ரெண்டு பேரும் இப்ப அமைதியா இருக்கீங்களா இல்லையா….? பாட்டிமா இப்ப எதுக்கு வந்தீங்க….? ஐயர் உன்னை கூட்டி வர சொன்னாரு டா… – சரி வாங்க போகலாம்…. மூவரும் ஒன்றாக செல்ல….. ஐயர் ஒவ்வொரு மந்திரமாக கூறிக்கொண்டே ஓம குண்டத்தில் குச்சிகளை போட்டு அந்த இடத்தையே புகைமண்டலமாக மாற்றிக்கொண்டு இருந்தார்…… மணமேடையில் உதிரன் உட்கார்ந்துக் கொண்டு , ஐயர் கூறும் மந்திரங்களை திரும்ப கூறிக்கொண்டே இருந்தான்….. சிறிது நேரத்தில் ஐயர் பொண்ணைக்கூட்டி வர சொல்ல , தன்னுடைய கவனத்தை சிதற விடாமல் ஓமகுண்டத்தில் நெய் ஊற்றிக்கொண்டு இருந்தான்…. அவனின் கவனத்தை சிதறவைக்கவே நுவாலி அழகு தேராய் ஆடி அசைந்துக்கொண்டு வந்து அவனின் அருகில் உட்கார்ந்தாள்…… 

      அவளின் சேலை கட்டிய அழகில் மயங்கி தான் போனான்…. இந்தனை நாட்களாக பார்க்கும் போது “என்ன இவ சின்னப் பொண்ணு மாதிரி நடந்துக்கொள்கிறா ….? ஒருவேளை நாம சின்னப் பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கப்போறோமா….? இந்த கல்யாணம் நமக்கு கண்டிப்பா வேனுமா…? அவனின் எண்ணங்களுக்கு பதில் அளிக்காமல் , அவனின் வயதினை காரணம் காட்டி கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கி விட்டனர் ,அவனின் வீட்டினர்…….. இன்றோ அவனின் எண்ணங்களை உடைத்து இருந்தாள் இந்த மாது….. கொஞ்ச நேரத்திற்கு முன்பும் அவனின் நெஞ்சில் ஓர் நெருடல் ஆனால் இப்பொழுது முற்றிலும் மறைந்து ,”அவளை வம்பிழுக்கவே தோன்றியது அவனுக்கு….. இப்பொழுது அவளைப் பார்க்க அவனுக்கு சற்று பெரிய பெண்ணாக தோன்றியது”…! அவளை கிண்டலடிக்க துடிக்கும் அவனின் ஹார்மோன்களை அரும்பாடுபட்டு அடக்க வைத்திருந்தான்…. ஐயர் கூறும் மந்திரங்களை இருவரும் திருப்பி கூறிக்கொண்டே “அவளுக்கு தூக்கம் கண்ணை கட்டியது”…. எங்கையாவது நமக்கு தான் கல்யாணம் என்ற நினைப்பு இருக்கா ….? இந்த சத்தத்திலும் இவளுக்கு எப்படிதான் தூக்கம் வருதோ ….? ஈஸ்வரா …! நான் உனக்கு என்னப் பண்ணேன் …? எனக்கு ஏன் இம்புட்டு பெரிய தண்டனை. — இல்ல …. இல்ல அவ தண்டனை இல்லை என்னுடைய பரிசு….. “டேய் இப்படி தனியா புலம்புவது விட்டுட்டு அவளை எதாவது பண்ணுடா …! இல்லனா நீ தாலி கட்டுவதற்கு முன்னாடியே தூங்கிவிடுவா போல…'” யாரது பேசுறது….? அடேய் நான் தான் டா உன்னுடைய மூளை……. “ஓ” நீங்க தானா ….! சரி ….சரி நான் பார்த்துக்கொள்கிறேன்……. யாருக்கும் தெரியாமல் அவளின் வெற்றிடையை நறுக்கென்று கிள்ளி வைத்து விட்டு , ஐயரை மட்டுமே இப்பொழுது சைட் அடுத்துக் கொண்டு இருந்தான்……. 

   தன்னுடைய மனதிற்குள் அவனை கழுவி … கழுவி ஊத்த வெளியே அமைதியாக இருந்தாள்……. ஐயர் தாலியை அனைவரிடமும் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கி வரச்சொல்ல ….. ராமுவின் அத்தை பொண்ணு சுமதி தான் அனைவரிடமும் சென்று தாலிக்கு ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு வந்தாள்…. என்னுடைய அத்தப் பொண்ணு புடவையில எம்புட்டு அழகா இருக்கா” …. இப்படியே அவளை கண்ணாலம் கட்டிக்க சொன்னா நான் கட்டிப்பேன்……. “கல்யாணம் தானே அறுபதாம் கல்யாணம் நடக்கும் கவலை வேண்டாம் என் நண்பா ” இப்ப எனக்கு கல்யாணம் புரிந்ததா….? ஈ… ஈ மச்சான் அவ என்னோட அத்தப் பொண்ணுடா , வருங்கால என் பொண்டாட்டி டா…. “த்து முடியல ” பாட்டி எங்க இருக்கீங்க …? ராமுக்கு கல்யாணம் பண்ணனுமா…’

   ஏன்டா ….ஏன் நான் நல்லாயிருக்கிறது உனக்கு பிடிக்கவில்லையா….? நானே எங்க அத்தை கால்ல விழுந்தாவது என்னுடைய சுமதியை கல்யாணம் கட்டிப்பேன் ….. இடையில் நீயும் உன் பாட்டியும் வந்து குழப்பி விட்டுறாதீங்க டா..உங்களுக்கு புண்ணியமா போகும்…. 

   இந்தாங்க மாப்பிள்ளை தாலியை பொண்ணு கழுத்துல கட்டுங்கோ……! பேசிக்கொண்டே உன்னுடைய நண்பன் கழுத்துல கட்டிவிடாதீங்க…’கூறிவிட்டு ஐயர் சிரிக்க… பாருடா மச்சான் இந்த ஐயர் கூட கிண்டல் பண்றாரு….

  தாலியை வாங்கி நுவாலியின் கழுத்தில் மூன்று முடிச்சுகளைப் போட்டுவிட்டு , அவளின் நெற்றி வகிட்டில் குங்குமத்தை இட்டு தன்னில் பாதியாக்கிகொண்டான் உதிரன் … அனைவரும் வாழ்த்து கூறிவிட்டு ஆசிர்வாதம் செய்தனர்…… ரத்னவேலும் வசுமதியும் ஆனந்தத்தை கண்ணீராக வெளியேற்றினர்…. அனைத்து சடங்குகளும் முடிய ஒரு வழியாக சாப்பிட்டு முடித்துவிட்டு வீட்டிற்கு பெண்ணையும் மாப்பிள்ளையும் அழைத்து வந்தனர்…. 

     நுவாலியின் அறையில் உதிரன் படுத்துக்கொண்டு புத்தகம் படித்துக்கொண்டு இருக்க, நுவாலி ஒரு பெரிய சாக்லேட்டை சாப்பிட்டுக்கொண்டே அவனிடம் வந்தவள், நீங்க எந்த ஊர்ல போலிஸா வேலை செய்யுறீங்க… கவனம் முழுவதும் சாக்லேட்டின் மீதே இருக்க, பேச்சு மட்டுமே இவன் பக்கமா இருந்தது….. இவளை என்னப் பண்றது…..? சாக்லேட் … சாக்லேட் “ஓ காட்” நான் ஒன்னும் போலிஸ் வேலை செய்யல …? நான் ஒரு இராணுவ அதிகாரி….. என்னது நீங்க ராணுவ அதிகாரியா …..! கண்ணு ரெண்டும் வெளியே எட்டிப்பாக்க , அதிர்ச்சியில் அவளுடைய சாக்லேட் உள்ளே போகாமல் வாயிலே இருக்க , அதை தன்னுடைய வாய்க்குள் மாற்றிக் கொண்டான் அந்த கள்வன்….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. Oosi Pattaasu

      ‘தொலைதூர காதல் நீ’ கியூட்டான லவ் கம் ஃபேமிலி ஸ்டோரி.
      இதோட பாசிட்டிவ்ஸ்.
      1. குடும்பத்துக்குள்ள இருக்கவங்களோட எமோஷன்ஸக் காட்டுற விதம் அழகா இருக்கு.
      2. காமெடியெல்லாம் செம சிரிப்பா இருக்கு. அதுலயும் ராமு, பாட்டி ரெண்டு பேரும் போடுற சண்டை வேற லெவல்.
      3. ஹீரோயின் நுவலி ஜெனிலியா மாதிரி இருக்கது, கியூட்டா இருக்கு.
      அப்புறம் நெகட்டிவ்ஸ்,
      1. ஸ்பெல்லிங் மிஸ்டேக் நிறைய இடத்துல இருக்குப்பா.
      2. பன்க்சுவேஷன் மார்க்ஸ் எல்லாம் கரெக்டான இடத்துல வரல. ஒரு சில இடத்துல, எது யாரோட டையலாக்னே புரிய மாட்டேங்குது.
      3. பேரக்ராஃப் சரியான் இடத்துல பிரிக்காம இருக்கு.
      இந்த மிஸ்டேக்ஸ் மட்டும் சரி பண்ணிங்கன்னா, ஸ்டோரியோட ஃப்ளோ நல்லாருக்கும்னு நெனைக்கிறேன்.
      மொத்தத்துல இந்த ஸ்டோரி சிம்பிளான, அழகான லவ் ஸ்டோரி. போகப் போக லாங் டிஸ்டன்ஸ் லவ்வ எமோஷனலா கொண்டு போவீங்கன்னு நெனைக்கிறேன்.

    2. Sangusakkara vedi

      Police ah army yani teriyamale mrg pannikotiyama??? Nallathu.. rmba nallathu…. Nee chocolate sapdu athukulla aven border ku poiruvan… Sapdu ma sapdu…