Loading

அன்று மட்டுமே அவளுக்கு, தான் காதலன் என்பதை அறியாமல் அவளுக்கு விடைகொடுத்தான் கேசவன், அன்று மட்டுமே அவனுக்கு, தான் காதலி என்பதை அறியாமல் அவள் அவனுக்கு விடைகொடுத்து தன் அக்காவின் திருமணத்திற்காக “கொடைக்கானல்” என்ற பெயர் பலகை கொண்ட பேருந்தில் ஏறி அமர்ந்தாள் வினுமதி.  

அன்று அவளின் “காதலி” என்ற பட்டம் மட்டும் தொலையவில்லை, அவளுக்கு புதியதாக ஒருவரின் “மனைவி” என்ற பட்டமும் கிடைக்கப்போகிறது என்பதை அறியாமல், பாவம் பேதை அவள் எப்படியோ அக்காவின் திருமணம் முடிந்து அடுத்த நாளே தன் காதலைப் பற்றி வீட்டில் சொல்லிவிட வேண்டும், தன் காதலனைக் கரம் பிடித்து விடுவோம் என்ற பல கனவுகளுடன் சென்றது அந்த பேருந்து பயணம் அவளுக்கு. இவள் கனவு ஒரு பக்கம்.

அங்கேயோ தன் தங்கை ஊரில் இருந்து வந்ததும் எப்படியாவது அவளை மணமேடையில் அமர்த்திவிட்டு நாம் தப்பித்து விடலாம் என்று வினுமதியின் அக்காவின் கனவு ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் எப்படியோ தான் வாங்கிய பல லட்சம் கடன் நாளை தன் மூத்த பெண்ணின் திருமணத்தால் தீர போகிறது என்ற வினுமதியின் தந்தையின் கனவு ஒரு பக்கம்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் மகளின் திருமணம் நல்ல படியாக முடிந்தால் போதும் என்ற அம்மாவின் கனவு ஒரு பக்கம்.

தன் மகனிற்கு இருக்கும் பிரச்சனையிற்கு பெண் கிடைத்ததே கடவுள் புண்ணியம் என்று நிம்மதியாக இருந்தார்கள் மணமகனின் பெற்றோர். இவர்களின் கனவு ஒரு பக்கம் என இருக்க , 

இதற்கிடையில் வாழ்க்கையையே வெறுத்த ஒருவன் எந்த ஒரு கனவும் இன்றி மண்டபத்தின் மணமகன் அறையில் உள்ள ஒரு ஜன்னலின் வழியே குழந்தைகள் நொண்டி விளையாடி கொண்டிருப்பதை கண் கலங்க வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் மணமகன் சந்திரன்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்