Loading

காதல் மனசிலாயோ! 05

“வாப்பா!” என பிரேமா அழைத்ததும், ஜனனி, மீரா இருவரும் வாயிலைத் திரும்பி பார்த்தனர்.

சௌந்தரை கடந்து சம்பத்தைப் பார்த்தவர்கள், திரும்பி பார்த்துக் கொண்டனர்.

“மீரா! நான் சௌந்தர் ஆபிஸில் தான் வொர்க் பண்றேன், அவன் என் ப்ரண்ட் ” என தானாக விளக்கினான் சம்பத்.

“சம்பத்தை தெரியுமா கண்ணு!” எனக் கேட்டார் பிரேமா.

“ம்ம்ம்! அண்ணன் வேணும், ஊருக்காரவங்க” என்றாள் அவள்.

“தம்பிக்கு சம்பத் தோதுப்புள்ள(நண்பன்) கண்ணு. ரொம்ப நல்லபுள்ள”

“ஆமா! எங்களுக்கு தெரியுமே, சம்பத் பொறுப்பான பையன்” என்றாள் ஜனனி.

“மாமி! எப்டி இருக்கீங்க…?”

“நல்லா இருக்கேன் சம்பத், உன்னைய பாத்ததுல ரொம்ப சந்தோஷம், அதைவிட மாப்பிள்ளைக்கு ப்ரண்ட் வேற, நல்லது” எனக் கணவனைப் போலவே மனதில் எண்ணி நிம்மதியானாள் ஜனனி.

கணவன், மனைவி இருவரின் பார்வைகளும் அதையே உறுதியாக்கிக் கொண்டது.

மீரா, சௌந்தர் பக்கம் திரும்பவே இல்லை, புடவையைப் பார்ப்பது போல் தலையைக் குனிந்திருந்தாள்.

“அம்மா! இங்கக் கொஞ்சம் வாங்க” என தாயை அழைத்தான் சௌந்தர்.

“என்ன தம்பி?” என எழுந்து வந்தார் அவர்.

அருகில் சுந்தரும் நின்றுக் கொண்டிருக்க,
“அம்மா! நான் மீரா கூட தனியா பேசனும்” என்றான்.

“அதான் அன்னைக்கே பேசிட்டீயேப்பா, மறுபடியும் என்ன பேசனும்” எனத் தயங்கினார் தாய்.

“அம்மா! பேசனும் அவ்ளோ தான். உங்க கிட்ட என்னனு சொல்றதுக்கு ஏன் அந்தப் பொண்ண தனியா கூப்புட போறேன்.”

“அண்ணா கேக்குறாருல, விடுங்கம்மா” என்றான் சுந்தர்.

அசோக், சம்பத் ஒதுங்கிப் பேசிக் கொண்டு நின்றனர்.

“சின்னதம்பி! அப்பாவுக்கு தெரிஞ்சா திட்டுவாருடா, இவன் பாட்டுக்கும் ஏதாவது சொல்லி கல்யாணத்துல பிரச்சனை வந்துட்டா, அவ்ளோதான் அந்த மனுசன் தாங்க மாட்டார்… ” என தலையை அசைத்தார்.

“உங்கக் கிட்ட கேக்காம எனக்கு பேச தெரியாதா…?” என முறைத்தவனை, பாவமாகப் பார்த்தார் தாய்.

“நான் தனியா எல்லாம் கூட்டிட்டுப் போகலம்மா, வெளியில் நம்ம காருல உட்காந்துப் பேசிட்டு வரேன். அதுவரை நீங்க புடவைப் பாருங்க”

“அம்மா! அதான் அண்ணன் சொல்றாருல… சரினு சொல்லுங்க” என்றான் சுந்தர்.

“ம்ம்ம்! இரு அந்தத் தம்பி கிட்ட கேட்டுட்டு வரேன்” என அசோக் நின்ற இடத்திற்கு சென்றார்.

அவனிடம் கேட்க, அவனோ சம்பத்தைப் பார்த்தான்.

“மாமா! திடீருனு பாத்த வரன், தனியா பேசட்டுமே” என்றான்.

“இல்லடா! உனக்கே மாமாவைப் பத்தி தெரியும்…” என மெல்ல இழுத்தவன்,
“சரிங்க! இங்க தானே, பேசிட்டு வரட்டும். நான் மீரா கிட்ட சொல்றேன்” என்றான்.

பிறகு சௌந்தர் வெளியில் காரினுள் காத்திருக்க, மீரா அங்குச் சென்றாள்.

முன் பக்கம் அவன் அமர்ந்திருக்க, கார் அருகில் சென்று நின்றவளைக் கண்டவன், “உள்ள வந்து ஏறு, சொல்லனுமா..?” என வேகமாக கேட்டான்.

மீரா, முன் பக்கமாக உள்ளுக்குள் ஏறி அமர்ந்தாள்.

“உன் கிட்ட ஒரு விசயத்தைச் சொல்லனும்” எனப் பார்வையை நேராக சாலையில் பதித்தப்படி கூறினான்.

‘என்ன?’ எனக் கேட்க தோன்றினாலும், அவன் முகத்தையே பார்த்தாள்.

அவளின் பதில் வராததால் திரும்பியவன்
“என்னனு கேக்க மாட்டீயா…? ஏன் பேச வராதா என்ன..? அன்னைக்கு நல்லா தான் பேசின” என்றான் வேகமாக.

“என்ன சொல்லனும்…?” என மெல்ல கேட்டாள்.

“இங்கப் பாரு, எனக்கு கல்யாணம், குடும்பம், பொண்டாட்டி இந்த விசயத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை, விருப்பமும் இல்லை” என்றவனைப் புரியாமல் பார்த்தாள் மீரா.

அவள் முகத்தைக் கண்டவன் “என்ன புரியலையா..?”

“ம்ம்ம்!” எனத் தலையை ஆட்டினாள்.

மீராவிற்கு குண்டுக் கன்னங்கள், அதில் இருப்பக்கமும் குழி அழகாக விழும். அவளுமே பூசினாற் போல உடல்வாகு என்பதால் அன்று புடவையில் பெரிய பெண்ணாக தெரிந்தவள், இன்று சுடிதாரில் சிறுப் பெண்ணாக காட்சியளித்தாள்.

சௌந்தரும் அன்று வேஷ்டியில் விரைப்பாக இருந்தவன், இன்று பேண்ட் சட்டையில் ஸ்டைலிஷாக தெரிந்தான்.

“எனக்கு ஏற்கனவே கல்யாணம் மேடை வரைப் போய் பிரேக் ஆச்சு.”

“அப்பா சொன்னாங்க”

“ம்ம்ம்! வேற என்ன சொன்னாரு…?”

“அவ்ளோதான்” என்றாள் தலையை அசைத்து, கண்கள் சிமிட்டி வார்த்தைகள் தடுமாறியவாறு, ஏனோ அவனிடம் பேசுவதற்கு தயக்கமாகியது.

“அந்தப் பொண்ணு பேரு அர்ச்சனா, நான் கல்யாணம் பண்ணிக்க வீட்டில் பார்த்த பொண்ணு, எங்களுக்கு ஃபர்ஸ்ட் மீட்டிங்லயே புடிச்சுப் போச்சு, அதுக்கு அப்புறம் ஃபோனில் நிறைய பேசினோம், கல்யாணத்திற்குத் தேவையானதை நாங்களே சேந்துப் போய் வாங்கி காதலிக்க தொடங்கியாச்சு, அவளுக்கு நான், எனக்கு அவளுனு எழுதி தானே நாங்க பேசவே தொடங்கினோம்.

திடீருனு என் கூடப் பொறந்தவ போனதால எல்லாமே தலைகீழா மாறிடுச்சு, நான் யோசிக்கவே இல்லை அப்டி மாறுமுனு. தாலிக் கட்டுவது மட்டும் தான் பாக்கி, ஆனா அது நடக்கல, நான் அர்ச்சனா கிட்ட எவ்வளோ கேட்டுப்பாத்தேன், அவ அப்பா முடிவுனு மறுத்துட்டா.

அவ ஈஸியா மனசை மாத்திட்டு வேற கல்யாணம் பண்ணிக் குழந்தையே பெத்துட்டா, ஆனா என்னால அப்டி யோசிச்சு மனசை மாத்த முடியல.” என நிறுத்தினான்.

பதிலின்றி அவனைப் பார்த்தவளை நோக்கியவன், “என்ன…?” என்றான்.

“ஒன்னுமில்ல!”

“ஒன்னுமில்லைனா, இதை எல்லாம் உன் கிட்ட ஏன் சொல்றேனு யோசிக்கலையா..?”

“ம்ம்ம்! இல்ல!” என மாறி மாறி தலையை அசைத்தாள்.

பின்னே அதை யோசிக்காமல் இருக்க முடியுமா..? ஆனால் அவனிடம் எப்படி கேட்பது என அமைதியாகினாள், மீராவிற்குப் பேசுவதற்கு தெரியாமல் இல்லை. ஏதாவது பேசி தன் அப்பாவின் அதிருப்தியை வாங்கிக்கட்டிட கூடாதென்ற அப்பாவின் மேல் பயம்.

“ஏதாவது ஒரு பக்கம் ஆட்டு, உன் கிட்ட தனியா பேச வந்தது இதைச் சொல்ல தான். சோ! சொல்லிடுறேன், என்னால புருசனா எல்லாம் வாழ முடியாது, ஆனா என் அப்பா, அம்மாக்காக நான் கல்யாணம் பண்ணி தான் ஆகனும், என் மனசுல வேறப் பொண்ணை நினைக்க விருப்பமில்லை.

அப்கோர்ஸ்! அர்ச்சனா மேரிடு. அது எனக்கு அவசியமில்லை. நான் இப்டி தான் இருப்பேன். உனக்கு இஷ்டமில்லைனா சொல்லிடு, ஏனா!” என. நிறுத்தித் தொடர்ந்தான்.

“அப்பா, அம்மாக்காக உன் கூட வாழ்வேன், நீ என் பொண்டாட்டி, நான் உன் புருசன், குழந்தைகள் எல்லாமே….. ஆனா என் மனசுல நீ இருக்க மாட்ட, என் குடும்பத்துக்காக மட்டுமே பொண்டாட்டியா இருப்ப, நமக்கான வாரிசுகளும் வரும். பட்! யூ ஆர் நாட் கம் டு மை ஹார்ட்” என்றவனை வினோதமாக பார்த்தாள் மீரா.

“உனக்கு இஷ்டமில்லைனா சொல்லு!”

“என்னனு சொல்ல…?” என அமைதியாக கேட்டாள்.

“என்னைய புடிக்கலைனு”

“சொல்லிட்டா, என்ன நடக்கும்..?”

“கல்யாணம் கேன்சல் ஆகிடும், யூ வில் கெட் அனெதர் குட் சாய்ஸ்.”

“எனக்கும் இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை” என நிறுத்தினாள் மீரா.

சௌந்தர் அவளைக் கேள்வியாக நோக்கிட, “எனக்கு எந்த லவ் அஃப்யரும் இல்ல, நான் படிக்கனும் அவ்ளோதான், ஆனா அப்பா அதை நிறுத்திட்டார்.”

“நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல படிக்க விருப்பம் இருந்தா உன் அப்பா கிட்ட சொல்லிடுனு, எல்லாரு முன்னாடியும் சொல்லி இருந்தா நான் அப்பவே கிளம்பி இருப்பேன்ல”

“சொன்னா மட்டும் அப்பா என்ன செய்வார், நீங்கப் போனதும் வேற மாப்பிள்ளை பாத்துக் கொண்டு வருவார், அதுக்கு முதல வந்த நீங்களே ஓகேனு முடிவுப் பண்ணிட்டேன், வரிசையா டீ கப் தூக்கிட்டு நிக்காம அட்லீஸ்ட் ஒன்னோட முடியுமே”

“வாட்எவர்! என் கண்டிசன் இது தான். உனக்கு ஓகேவா…? பொதுவா அர்ச்சனாக்கு அப்புறம் இதுவரை பாத்த பொண்ணுங்க அடுத்த ஸ்டெப்புக்கே போகாது, அப்பா, அம்மாவே ரிஜெக்ட் பண்ணிடுவாங்க அவங்களே ஏதோ ரீசன் சொல்லுவாங்க, எனக்குமே ஸ்டாப் ஆனா சரினு வேற எதுவும் கேக்க மாட்டேன். பட் நீ சடர்னா ஃபிக்ஸ் ஆகிட்ட, என் மனசு உனக்கு புருசனா என்னால சந்தோஷமா வாழ முடியாதுனு சொல்லுது சோ! இதான் என் முடிவு…”

மீரா என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் யோசிக்க, ஏனோ சௌந்தர் தன் நிலையை விளக்கியது பரவாயில்லை என்று தோன்றியது.

இதுவே, மனதில் உள்ளவளை மறந்துவிட்டு என் கூட வாழ்வதாக கூறி நடிக்கலாம், யாரு கேட்கப் போறா..? ஆனால் அவனோ நான் இதுதான், இப்படி தான் எனக் கூறியது, ஓகே! எனச் சொல்ல யோசனை வந்தது.

“எனக்குமே கல்யாணம் வாழ்க்கைப்பற்றி ஆசையில்லை, படிக்கனும் அது தான்…” எனப் பேச தொடங்கியவளை நிறுத்தியவன்,

“அதுக்கு வாய்ப்பில்லை, என் குடும்பத்தில் அது முடியாது, ஒத்து வராது. நான் உன்னைய படிக்க வைக்கனுமுனு ஆசைப்படாத, அப்டினா சொல்லு நானே இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுறேன், எனக்காக அத பண்ணு, உனக்காக இதைப் பண்றேனு டீல் எல்லாம் பேச வரல.

நான் இப்டி தான், என் கிட்ட எதிர்பார்ப்பு வச்சுக்காதனு சொல்ல வந்தேன். அப்டி இல்லைனா கெட் அவுட் ப்ரம் மே வே, அவ்வளவுதான்” என்றான் அழுத்தமாக.

“உங்க வழியில் இருந்து வேற வழியில் போனாலும் நான் மாட்டி தான் ஆகனும், அதைவிட இப்ப நான் போய் அப்பா கிட்ட நீங்க சொன்ன ரீசனை சொன்னாலும் அது வேஸ்ட். ஏனா! நீங்க கல்யாணம் பண்ண முடியாதுனு சொல்லலையே, காதல் அது முடியாதுனு சொல்றீங்க, ஒன்லி பொண்டாட்டி வொர்க்… இட்ஸ் ஓகே! எனக்குமே காதல் கத்தரிக்காய் மேல விருப்பமில்ல, அந்தக் காதலால் தான் என் படிப்பே போச்சு, என் அக்கா காதல்… ” என நிறுத்தியவள், வேறெதுவும் பேசவில்லை.

“அப்ப, ஓகே ஃபார் மேரெஜ்?”

“ம்ம்ம்!” என்றாள்.

“நீ போ, நான் வரேன்” என்றான்.

மீரா இறங்கி கடைக்குள் சென்றாள், சிறிது இடைவெளியில் சௌந்தர் சென்றான்.

அவர்கள் வந்ததும் தான் பிரேமாவிற்கு உயிரே திரும்பியது, மகன் ஏதாவது இடக்காகப் பேசி மீராவை கல்யாணத்திற்கு ஒத்துவராதென்று சொல்ல வைத்துவிட்டால், விருமாவிடம் யார் வாங்கிகட்டுவது…? என்ற பயம்.

அதையும் மீறி, பிரேமாவிற்கு மீராவை ஏனோ மிகவும் பிடித்திருந்தது.

“வா கண்ணு! இந்தப் புடவை எல்லாம் மேலாப்ல வச்சுப் பாரு” என எடுத்துக் கொடுத்தார், அவளின் முகத்தை நோட்டமிட்டவாறு.

மீரா மெல்லிய நகையுடன்”ம்ம்ம்!” என வாங்கி மேல் வைத்து, ஜனனியிடம் காட்டினாள்.

‘மங்கம்மா தாயே! இந்தப் புள்ள முகத்துல ஒன்னும் தெரியல. எப்டியாச்சும் இந்தக் கல்யாணத்தை முடிச்சு வச்சுடு..’ என அவர்களின் வீட்டுத் தெய்வத்தை வேண்டிக்கொண்டார் பிரேமா.

அவர்கள் பேச சென்ற இடைவளியில் அசோக், சம்பத் கிட்ட சௌந்தரைப் பற்றி விசாரிக்க, நண்பனின் காதல் மனம் இன்னும் மாறவில்லை என்பதை மட்டும் மறைத்து உண்மையைக் கூறினான் அவன்.

“ஓ! அப்ப நல்ல பையன், பிரச்சனையில்லையே?”

“இல்ல மாமா! அப்ப நடந்த மனஅழுத்தம் அதான் இப்டி இருக்கான், நம்ம மீராவைக் கல்யாணம் பண்ணா மாறிடுவான்”

“ம்ம்ம்! மாமா அவசரமா பாத்து முடிவுப் பண்ணிட்டார். அதான் எனக்கு மனசு கேக்கலை… இப்ப நீ சொன்னதும் நிம்மதியா இருக்குடா” என்றான்.

நண்பன் கல்யாணத்திற்குப் பிறகு மாறி விடுவான் என்ற நம்பிக்கையுடன், அசோக்விடம் உறுதி அளித்தான் சம்பத்.

கல்யாணப் புடவையை எடுத்துக் கொண்டு அவரவர் வீட்டிற்குப் புறப்பட்டனர்.

காதல் மனசிலாயோ!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்