Loading

கல்யாண வானில்  5

 

கைப்பேசியை  காதில்  வைத்தபடியே,என்னது வருகிற  வழியிலே ஆக்ஸிடண்டா?நாங்க உள்ளே  போய்  படம் பார்த்துட்டு இருக்கவா ,நீ  வந்துருவீயா, என தோழிகள். முன்பு. பேசுவது போல  நடித்தாள். 

 

“என்னாச்சு ,யாருக்கு  ஆக்ஸிடண்டா? சொல்லும்மா  ,

 

ஆகாஷ்  வருகிற  வழியில்  எவனோ  வண்டியை  உள்ளே  விட்டுட்டானா?, அதான்  வர  தாமதம்  ஆகலாம். நீங்க  எல்லாரும் போய்  பாருங்க என சொல்லி விட்டான். 

 

இத தானே  நாங்க  அப்போதிலிருந்து சொல்லிட்டு இருக்குறோம். நீ தான் கேட்கலயே, 

 

சரிடி,இப்ப நானே சொல்றேன். வாங்க என அழைத்து சென்றாள். ஹாசினியின் கவனம் முழுவதும் படத்தில் இல்லாமல்  ஆகாஷின் நினைப்பிலேயே இருந்தது. அவனுக்கு ஏதாவது பிரச்சினையாக இருக்கும்மா?என்ற பதற்றத்திலேயே இருந்தாள். 

 

ஆகாஷிற்கு திரும்பவும் போன் செய்து “டேய்  எங்கடா  இருக்குற”உன்னை இப்பவே பார்க்கனும்  .

 

“நம்ம கல்லூரி  ஹாஸ்டலில் தான்  இருக்கிறேன்.”

 

ம்ம்ம்.. அங்கேயே இரு நானும்  வந்துட்டேன் என்றவளோ  கடுங்கோபமாக வந்தவளோ  ஆகாஷை  பார்த்து  அதிர்ச்சியுற்றாள். 

 

ஏய்!என்னடா இது? கையுல  எப்படி அடிப்பட்டது. எங்கிட்ட போனில்  எதுவுமே சொல்ல வில்லை. 

 

நான்  சொன்னா நீ  உடனே  தியேட்டரில் படம் பார்க்காமல் பதற்றமாக ஓடி வந்துருப்ப, அதான் உண்மையைச்  சொல்ல வில்லை. 

 

மார்பில் சாய்ந்தபடியே “ஸாரி டா” ஆகாஷ்  உனக்கு உம்  மேல  சந்தேகம்  இருந்துச்சு. நீ  எப்போதும் இப்படி சொல்ல மாட்டீயே, என்று நினைத்தேன் என  வருத்தமாக… 

 

“அடியேய் கை வலிக்குது”என்றவனோ டப்பென்று  எழுந்தவள்  .மன்னிச்சுரு  கொஞ்சம்  உணர்ச்சி வசப்பட்டுட்டேன் எனச் சொல்லி விடைபெற்றாள். 

 

தன்னுடைய ஹாஸ்டலுக்குச் சென்று கொண்டிருந்த ஹாசினி சின்ன தூக்கம் தூங்கினாள். அதற்குள்ளும் அவளுடைய உறக்கத்தை கலைத்தது கைப்பேசியின் அழைப்பு. தெரியாத நம்பரிலிருந்து  போன்  வர, அழுத்தி பேசியவள், சட்டென்று  ஆகாஷிற்கு  போன்  செய்தாள்.

 

 

ஆகாஷ்  நீ  எங்கே இருக்குற?, யாரோ  போன் பண்ணி  நம்ம இரண்டு பேரும் லவ் பண்ற விஷயத்தை வீட்டுல சொல்லப் போறானா?, எனக்கு ரொம்ப பயமாக இருக்குது.

 

அதெல்லாம் இருக்காது டி, எனக்கும்  இப்போது தான் போன் வந்துச்சு, ந சொல்ற அதே விஷயத்தைத் தான்  சொன்னாங்க, எனக்கு என்னம்மோ  நமக்கு தெரிஞ்சவங்க தான் விளையாடுறாங்கன்னு தோணுது. நீயும் வா  யாரென்று பார்க்கலாம் என. அழைப்பைத் துண்டித்தான். 

 

இருவரும்  பூங்காவில் காத்துக் கொண்டிருக்க, அவர்களுடைய  நண்பர்கள்  எல்லாரும்  ஒன்று திரண்டனர். 

 

ஹேய்,மச்சி   நீ  எப்போது  ஊருல  இருந்து வந்தாய். எங்களை எதுக்காக இப்படி பயமுறுத்திட்டள,நாங்க இரண்டு பேரும்  லவ் பண்ற  விஷயம்  உனக்கு எப்படி தெரிஞ்சது.நம்ம கூடவே இருக்குறானே நரேஷ்  அவன்  தான்  என்னிடம் தகவலைச்  சொன்னான். அதான்  இன்னும்  ஒரு வாரத்திற்கு  லீவு விட்டுருக்காங்க, அதான்  உன்னை  பார்த்துட்டு போகலாம்னு தான் வந்தேன். 

 

நான் தான் சொன்னேன்ல  ஹாசினி  இவனோட வேலை தான் .

 

ம்ம்ம்.. “இருக்கட்டும் என சலிப்பாக கூற, 

 

டேய்  ஆனந்த், வந்த  பதற்றத்துல  இவளை அறிமுகப்படுத்தாமல்  விட்டுட்டேன். ஏய், ஹாசினி  இங்க  வாம்மா என  அழைத்தான். 

 

இவன்  தான்  என்னோட  கிளாஸ்மேட். சின்னப்புள்ளையாக இருக்கும் போது ரொம்ப  நெருக்கமாக தான் இருப்போம்.

 

ஓ. இப்ப நீங்க  நெருக்கமாக இல்லையே,அதாவது நீங்க இங்க படிக்கிறீங்க , உங்க நண்பன்  வெளியூரில் இருக்கிறார்களே என நக்கலாக கேட்டாள். 

 

சிரித்துக் கொண்டிருந்த ஆனந்த்   ஹாசினி நக்கலாக பேசியதை கேட்டு, திரும்பவும் சிரிக்க ஆரம்பித்தான். 

 

ஹலோ  அந்த  அளவுக்கு காமெடி இல்லடா என  தோள்பட்டையைத் தட்டி விட்டான் ஆகாஷ். 

 

ஹாசினியை  எதுக்காக பயமுறுத்துன, அவளும்  ரொம்ப பயந்து போய் எனக்கு போன்  பண்ணுனா, 

 

டேய், மச்சி  இந்த  மாதிரி  ஒருத்தரை  பயமுறுத்தி அதில் இன்பம் கொள்வதில் இருக்கும் சந்தோஷமே  வேற என  மேலே  பார்த்தபடியே கூறினான் ஆனந்த். 

 

டேய் மாங்காய்  மடையா, எனக்கு போன் பண்ணி உங்க லவ்  மேட்டரை   வீட்டுல சொல்லிடுவேனு மிரட்டுன, நானும்  பயந்து போய் ஓடி வந்தா, சும்மா தானே  விளையாட்டுக்கென்று  சொல்றீயா?, மவனே  உனக்கு இருக்குது டா என்று  மனசுக்குள்ளே கருமியபடி இருந்தாள். 

 

மச்சி, சிஸ்டருக்கு எம் மேல  ரொம்ப கோபமா இருக்குற மாதிரி தெரியுதே?, 

 

ஆமா, செம கோபத்துல இருக்குறேன்.. என்னை யாருமே பயமுறுத்தியதே இல்லை. இன்னிக்கு நீ பயமுறுத்தி என்னை அலைய வைச்சுட்ட, என  வெளிப்படையாக கூறினாள். 

 

சிஸ்டர்.. சும்மா விளையாட்டுக்குத்  தான்  செய்தேன் .இந்த சம்பவம் உங்க மனசை காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னிச்சுருங்க, என கெஞ்சலாக சொல்ல. 

 

ஏய், அப்படியெல்லாம் இல்லப்பா, நானும் சும்மா கோபப்படுகிற மாதிரி நடிச்சேன் என்று மாறி மாறி குறும்புத்தனமாக பேசினாள் ஹாசினி. 

 

ஓ. கே ஆனந்த்,நம்ம  நாளைக்கு சந்திக்கலாம். இவளுக்கு நேரமாயிடுச்சு, ஹாஸ்டலுக்கு சரியான நேரத்தில் உள்ளே போகனும்.அப்படி  தாமதம் ஆகினால் இவுக மேடம் கையுல வேப்பிலை இல்லைனாலும் ஆடிடுவாங்க என கேலி செய்தான். 

 

ஹேய், எங்க மேடத்தை நீ கிண்டல் பண்ற, நான் தான் பண்ணுவேன். 

 

சரிடி.”. நீயே  பண்ணு என  வாயை மூடினான ஆகாஷ். “

 

ம்ம்ம்.. சற்று யோசித்தவளோ  இன்னிக்கு நீ பண்ணு நாளைக்கு நானே பண்றேன் என  புன்னகையிட்டாள். 

 

“ஆனந்திடம் பேசிவிட்டு இருவரும் விடைபெற்றனர்.”

 

பைக்கை  மெதுவாக அழுத்திக்கொண்டிருந்த போது  ஹாசினியும் இறுக்கமாக கட்டி அணைத்தபடி அமர்ந்திருந்தாள். 

 

ஹாசினி  ..ஹாசினி.. என  முணுமுணுத்தான் ஆகாஷ். 

 

“சொல்லுடா ,எதுக்கு இத்தனை  முறை  கூப்பிடுற  உம் பக்கத்துல  தானே. இருக்குறேன். 

 

“நீ  பக்கத்துல மட்டும் இருந்தா போதுமா?என வினவினான்.

வானில் தொடரும் .

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. Sangusakkara vedi

      1. சில பல டுவிஸ்ட் அண்ட் டேன்ர்ஸ் எதிர்பாக்குற கூட்டுக் குடும்ப கதை. கதை நடை சூப்பர்.

      2. ஹாசினி, ஆகாஷ்ன்னு கதைமாந்தர்களும் சூப்பர்.

      3. ஆகாஷ் அம்மாவும் அந்த குடும்பம் ன்னு தெரியுது. இவங்க காதலால ஆகாஷ் அம்மா சேருவாங்கன்னு தோணுது. கதை சுவாரஸ்யமா கொண்டு போற எழுத்தாளர்க்கு வாழ்த்துக்கள்..

      குறைகள்

      1. கொஞ்சம் ஸ்பெல்லிங் எரர்ஸ்

      2. நிறைய இடங்கள்ல கமா, புள்ளி, மேற்கோள் எதுவுமே இல்ல.

      3. ஹாசினி குடும்பத்த இன்னும் ஆழமா சொல்லிருக்கலாம்னு தோணுது.ஏன்னா கூட்டுக்குடும்பம் இப்போ ரொம்ப குறைவு. அவங்கள பத்தி இன்னும் ஆழமா சொல்லிருந்தா ச்சே நமக்கும் இப்படி ஒரே குடும்பம் இருந்தா எப்படி இருக்கும்னு ஃபீல் பண்ணிருக்கலாம்.

      1. veera lakshmi
        Author

        ரொம்ப நன்றி. நானும். ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் எழுத முயற்சி பண்றேன். அடுத்த அத்தியாயத்தில் பொறுமையாக பார்த்து எழுதுறேன்.

    2. Oosi Pattaasu

      ‘கல்யாண வானில்’ அழகான லவ் கம் ஃபேமிலி ஸ்டோரி.
      பாசிட்டிவ்ஸ்னு பாத்தோம்னா,
      1. ஃபேமிலி சென்டிமென்ட் நல்லாருக்கு.
      2. ஹாசினி பேருக்கேத்த மாதிரியே, செம சுட்டியா இருக்கா. இவ கேரக்டர் செமையா இருக்கு.
      3. ஆகாஷ், ஹாசினி லவ் போர்ஷன் சூப்பர். இவங்களுக்கு நடுல என்ன ஆச்சுன்னுத் தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு.
      நெகட்டிவ்ஸ்னா,
      1. ஸ்பெல்லிங் மிஸ்டேக் நிறைய இடத்துல இருக்குப்பா.
      2. பங்க்சுவேஷன் மார்க்கிங் இல்லாம இருக்கது, யாரு, எந்த டையலாக் பேசுறாங்கன்னே புரிய மாட்டேங்குது.
      3. நிறைய டையலாக்ஸ் எழுத்து வழக்குல வருது. அத கொஞ்சம் நார்மல் தமிழ்ல எழுதுனீங்கன்னா, இன்னும் நல்லாருக்கும்.
      ஓவர் ஆலா, இவங்களோட ஜாயிண்ட் ஃபேமிலிக்காகவே இந்த ஸ்டோரி படிக்கலாம். சூப்பரா இருக்கு.

      1. veera lakshmi
        Author

        கட்டாயம் படியுங்கள். இவுக இரண்டு பேரும் எதுக்காக பிரிந்தார்கள்.ஹாசினி பேமிலிக்கும் ஆகாஷ் பேமிலிக்கும் எப்படி பிரிவு ஏற்பட்டது என்பதை அடுத்த அத்தியாயத்தில படியுங்கள்.