Loading

அத்தியாயம் 3

 

“ஸாரி பாட்டியம்மா நீ  சொன்ன  வேலையை  செய்யாமல் இருந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள்.”நீங்க இப்படி கோபமாக பார்த்தால்  எனக்கு ரொம்ப  கஷ்டமாக இருக்குது .அதுவும் என்னம்மோ  இந்த வீட்டுல பெரிய தவறு செய்த மாதிரி நிக்க வச்சுருக்கீங்களே எனக்  கேள்விகளை எழுப்பினாள். 

 

நளினி  “ஹாசினி பாட்டியிடம்  நீ  பேசியதற்கு மன்னிப்பு கேளு என  அதட்டினாள்.” 

 

 நிறுத்து நளினி இவ  பேசியதை நினைத்து  நான்  சங்கடப்படவே இல்லை. இவளால்  இந்த  வேலையை செய்ய முடியும் என  நம்பினேன். ஆனால்  எனது  நம்பிக்கை தோற்றுப் போய் விட்டது என  கூறி விட்டு கம்பீரமாக நடந்து வெளியே பார்வையிட சென்றாள்  சொர்ணம்மாள். 

 

தோட்ட வேலைகளைக்  கண்ணும் கருத்துமாக பார்வையிட்டுக் கொண்டே சொர்ணம்மாள்  எதிரே மோத வந்தார். 

 

“என்னங்க, உங்களை  பார்வையிட சொன்னா ,நீங்க  எதிரே வந்த என்னை கூட கவனிக்காமல் மோத  வர்றீங்க “

 

“சொர்ணா, அது வந்து  தயங்கி தயங்கி குரல் நடுக்கத்துடன் பேசினார்.”

 

நீங்க  பேசுகிறத பார்த்தா  ஒன்னும் சரியில்லையே?ஏதோ  ஒரு விஷயத்தை மனசுல  போட்டு வைச்சுட்டு  குழம்பிய நிலையில் இருக்கிறது போல தெரிகிறதே சொல்லுங்க என்றாள் .

 

நீ வேற  ஒரு விஷயமும்  இல்ல, காலையிலேயே என்னை சீக்கிரமாக எழுப்பி விட்டு ஒவ்வொரு வேலையாக சொல்லிட்டு இருக்குற, இதெல்லாம் உனக்கே நியாயமா இருக்குதா என  பாவ முகத்தோடு கேட்டார். 

 

“போதும் போதும் உங்க  நடிப்பு எத்தனையோ  நடிப்பைப்  பார்த்துட்டேன். ஆனா  நீங்களும் ஹாசினியும் செய்யுற கோல்மால்  இருக்குதே அப்பப்ப்பா என்னால  முடியல என சொல்லி முடித்தாள். “

 

சொர்ணம்மாள்  சொன்னதைக் கேட்டு கொஞ்சம்  விரைவாக நடந்து சென்றார்.அவரைப் பின்தொடர்ந்தபடியே வந்தாள். 

 

இவ  நம்மிடம்  உண்மையை  வாயில் இருந்து வர வைத்து விடுவாளே  என்ற பயத்திலேயே  வீட்டுக்குள்ளேயே  சென்றார் ராஜவேல் பாண்டி .

அதற்குள்ளும்  ரத்னத்தின்  குரல்  சொர்ணம்மாளைத் தடுத்தது. 

 

டேய், ரத்னம்  வேலையை முடித்து விட்டாயா நமக்கு முன்பு யாரும். கோவிலில்  பூஜைக்குக் கொடுக்கலயே?

 

ஆமாம்  அம்மா  நானும் விசாரித்து விட்டேன். இன்னிக்கு நம்ம  பூஜை தான் எல்லாரும்  கிளம்பியாச்சா?, என்று  விறுவிறுவென்று  உள்ளே நுழைந்தான். 

 

கோவிலுக்குத் தேவையான  அனைத்து பொருள்களையும், பிரசாதங்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். 

 

லலிதா , என  அழைத்ததும் மாடியில் இருந்து கீழே  இறங்கி ரத்னத்தின்  முன்பாக  மெளனமாக  நின்றாள். 

 

நளினி, கொழுந்தனாரே ,எங்களை பார்த்தா  ஆளா  தெரியலயா?எனக் கிண்டலாக பேசி  வம்புக்கு இழுத்தாள். 

 

மதினி  அப்படியெல்லாம் இல்ல தாரணி கிளம்பிட்டாளா”

தாரணியை எங்கே?காலையில் இருந்து  நானும்  அவளைப் பார்க்கவே இல்லை. 

 

அதெல்லாம்  கிளம்பியாச்சு மாமா  என்ற  புன்னகையோடு  தாரணியோடு  வந்தாள்  நிவேதிதா. 

 

ரத்னம் “மருமகளே  உன்னுடன் தான்  இருந்தாளா”

 

அப்பா  நாங்க எல்லாரும் நேற்று  ரொம்ப நேரமாக பேசிட்டு இருந்தோம். அதான் அப்படியே தூங்கிவிட்டேன். 

 

மாமா, ரவி வந்துட்டானா  ஆவலோடு கேட்டாள். 

 

அட”இன்னும்  ரவி  எப்போது வருவானு  எதிர்பார்த்துட்டு இருக்குறா” பாரேன் என  வினவினாள் லலிதா. 

 

அத்தை  “அவங்கள  பார்த்து  மூன்று நாட்கள்  ஆயிடுச்சு”  நானும்  போன்  பண்ற நேரமெல்லாம்  வேலையாக இருக்கிறேன் என்று  சொல்லி வைச்சுருவாங்க என்ற  வருத்தத்தோடு  பேசினாள். 

 

ரத்னா ஏம்மா மருமகளே  இன்னிக்கு வீட்டுக்கு வந்துடுவான். “வருத்தப்படாதே என  தலையை வருடிவிட்டு சென்றார்.” 

 

சரி வாங்க இப்படியே பேசிட்டு இருந்தா அவ்வளவு தான். நம்ம  எல்லாரும் சேர்ந்து  கோவிலுக்குப் போவதற்குத் தேவையானதை  எடுத்து வைச்சுட்டோம்மா என்று  பார்த்துட்டு வந்து விடலாம் என்றாள்  நளினி. 

 

அம்மா “நீங்க பாருங்க என்னோட  வேலை  சமீதாவைக் கவனிக்கிறது  தான். 

 

அக்கா அவளைப் பாத்தீங்களா நம்ம வேலை பார்ப்போம்னு  சொல்லிட்டா போதும்  அவ  நழுவிட்டாபாருங்களேன் என  நளினி  காதில் முணுமுணுத்தாள் லலிதா. 

 

நிவேதிதா, “ஹாசினியை எங்க  அத்தை நானும்  அப்பவே கேட்கனும்னு இருந்தேன். பாட்டி  சத்தம்  போட்டுட்டு இருந்த  மாதிரி இருந்துச்சு,” 

 

நளினி, “ஹாசினியிடம் பாட்டி ஏதோ  ஒரு வேலை  கொடுத்தாங்களாம். அத  அவ  பார்க்காமல்  காலங்காத்தால  எழுந்து  குளிச்சுட்டு கோவிலுக்குப் போயிருக்கா”

 

நிவேதிதா ,”அவளைக் கோவிலுக்குத் தானே  போகச் சொன்னாங்க” அப்புறம்  எதுக்காக திட்டுனாங்க

 

லலிதா”அடியேய் கோவிலுக்குப் போகச்  சொன்னாங்க”

 

“ஆனா  எத்தனை மணிக்குள்ள  வரச் சொன்னாங்க தெரியுமா”

 

“ஏழு மணிக்குள் வந்து பூஜை அறையை அலங்காரம்  பண்ணச்  சொன்னாங்க” அவ  வீட்டுக்கு வருவதற்கு தாமதமாகியதால் நாங்களே  செய்ய ஆரம்பிச்சுட்டோம் .

 

நிவேதிதா, “இப்ப  அவ  எங்க  இருக்குறா”

 

நளினி, மாடிக்குத்  தான்  வேகமாக சென்றாள். இன்னும் கீழ  இறங்கி வராமல் தயக்கத்தோடு இருப்பாள். 

 

அடடடடா”யாரு  ஹாசினி  பயந்த சுபாவம் உடையவளா”வாய்ப்பே  இல்ல இம்புட்டு நேரமாகியும்  கீழ  வராமல் இருக்கிறாள் என்றால்  கட்டாயம் மாடியிலேயே இல்லை. 

 

லலிதா, “என்னடி சொல்ற, அவளை நாங்க  மாடிக்குப் போகும் போது தான் பார்த்தோம் .நாங்களும்  அப்போதிலிருந்து இங்கிட்டே  தான்  வேலை பார்க்குறோம். நீ  அவ  மாடியில்  இருக்க மாட்டாள் என்று  சொல்ற,.

 

“தாரணி  இங்க வாம்மா”என அழைக்க 

 

“சொல்லுங்க அண்ணி “என தாரணி  கேட்க 

 

மாடிக்குப் போய்  ஹாசினி  இருக்கிறாளானு  பார்த்துட்டு அவ  இருந்தா  கூட்டிட்டு வா என நிவேதிதா சொன்னாள். 

 

மாடிக்குச் சென்றிருந்த தாரணி வேகமாக வந்து  ஹாசினி மாடியில் இல்லை. நானும் ஒவ்வொரு அறையிலும் பார்த்தேன். அவ  எங்கேயும்  இல்லை அண்ணி.

 

நளினி “அவ  எங்க தான்  போயிருப்பா” 

 

நிவேதிதா”அத்தை  அவ  எப்போதும்  இந்த  நேரத்துல  அவகூட  படிச்ச  தோழிகளைச் சந்திக்க  போயிருப்பா”அதுவும்  இன்னிக்கு  சனிக்கிழமை என்று  சொல்லி முடிப்பதற்குள்  முன்னே  நின்றாள்  சொர்ணம்மாள். 

 

ஹாசினி  “அங்க  தான்  போக போறேனு உன்னிடம்  சொன்னாளா”

 

இல்லை,எனக்கு தோணுச்சு  அதான் சொன்னேன் என  நடுங்கி பேசினாள். 

 

“நிவேதிதா அண்ணிங்கோ  கொஞ்சம்  இங்க பாருங்க”

 

பின்னால்  திரும்பி  பார்க்க  கையில்  காய்கறி பைகளோடு நின்றாள். 

 

நிவேதிதா, “இவ  காய்கறி வாங்க தான் போயிருந்தாளா “

 

நம்ம  அவளோட அறைக்குச்  செல்லும் போது இதோ  “இப்பவே வந்துடுறேன் என்று  கைப்பேசியில் யாரிடமோ  சொல்லிக் கொண்டிருந்தாளே”நம்ம தான்  தப்பா புரிஞ்சுக்கிட்டோம்மோ

 

ஹேய்  நிவேதிதா எதுக்காக அவளைப் பத்தி தேவையில்லாமல் பேசிட்டு இருக்குற “உம்முடைய வேலையை ஆரம்பிச்சுட்டீயா “

 

அப்படி எதுவும் இல்ல பாட்டி  என்றவளோ  சற்றென்று நகர்ந்து சென்றாள். 

 

ஹாசினி” நம்ம  வீட்டுக்கு புதுசா ஒரு  விருந்தாளி  வரப்போறாங்க “

 

உனக்கு சின்ன  வயசுல  பாடம்  கற்றுக் கொடுத்த  தமிழ் ஆசிரியர்  பவானி. 

 

“மிக்க மகிழ்ச்சி பாட்டியம்மா “

 

நானே  அவர்களை  பஸ் ஸடாப்பில்  போய்  அழைத்து வருகிறேன் என்று சொல்லி  ஸ்கூட்டியை எடுத்துட்டு  விரைவாக சென்றாள் .

 

அம்மா வீட்டுல  ஏகப்பட்ட  கார் இருக்கும்போது  நீ  எதுக்காக நடந்து வரனும் நினைக்கிறாய். 

 

“நம்ம  வீட்டுல  எத்தனை  கார்  இருந்தாலும்  மார்க்கெட்  போகும்போது  துணையாக நீ வரும்போது  உன்னிடம்  பேச நேரம்  கிடைக்கும்மே “

 

“என்னை  காருல  கூட்டிட்டு வந்து  என்னை மட்டும்  மார்க்கெட்டுக்குள்  அனுப்புவ “

 

அதான்  இயற்கையான  காற்றோடு மெல்லமாக நடந்து கொண்டு  நம்மை சுற்றி இருக்கும்  மக்களைப் பார்த்த படி  மார்க்கெட்  செல்வது  எம்புட்டு நல்லா இருக்குது என  சந்தோஷமாக பேசினாள் பவித்ரா. 

 

அம்மா” உன்னோட  ரசனையே  வேற” 

 

டேய்  “ஆகாஷ் அம்மாவுக்கு ஒரு சந்தேகம் என  வினவினாள். 

 

“சொல்லுங்க அம்மா “

 

சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஆகாஷின்  பாக்கெட்டில்  இருந்து  பர்ஸை  எடுத்து  அந்த  பேப்பரை  வெளியே எடுத்தாள். 

 

அந்த  “பேப்பரை  படித்து விட்டால்  அம்மா  நம்மிடம்  கேள்வி மேல் கேள்வி  கேட்பார்களே “என சற்று யோசித்தான். 

 

வானில் தொடரும். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment