Loading

 அத்தியாயம் -02

      டாக்ஸியில் வந்து அந்த மாளிகையில் இறங்கியவளுக்கு வீட்டை பார்த்ததும் பயத்தில் ஒரு நொடி உடல் அதிர்ந்து அடங்கியது. இருந்தாலும் அனைத்தையும் தாங்கிக் கொள்ள தானே வேண்டும் என்றும் மனதிற்குள் தைரியத்தை வரவைத்து கொண்டே அந்த மாளிகைக்குள் நுழைந்தாள்.

   அதற்குள் அங்கிருந்த வேலையாட்கள் அனைவரும் தலையை நிமிர்த்தி ஒரு நொடி வந்திருந்த புதியவளை பார்த்துவிட்டு மீண்டும் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார்கள்.தன்னை வர சொன்னவரை மனதில் சபித்தபடியே வலது பாதம் எடுத்து அந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த உடன் கேட்ட குழந்தைகளின் அழுகுரலில் இவ்வளவு நேரம் உள்ளுக்குள் இருந்த பயம் பதட்டம் எல்லாம் போயிருக்க கையில் கொண்டு வந்திருந்த பயண பொதியை அப்படியே போட்டுவிட்டு குரல் வந்த திசையை நோக்கி சென்றாள்.

    குழந்தைகளின் குரல் தேம்பலுக்கு செல்வதை உணர்ந்து தாமதிக்க முடியாமல் கதவை கூட தட்டாமல் குழந்தைகளின் குரல் கேட்ட அறைக்குள் நுழைந்தாள்.அந்த அறைக்குள் குழந்தையை கையில் வைத்திருந்த நடுத்தர பெண் குழந்தையை சமாதானமும் படுத்த முடியாமல் தவிக்க கொண்டிருந்தார்.

   பெட்டில் சோர்வாக அமர்ந்த இருந்த இன்னொரு இளம் பெண்ணோ குழந்தைக்கு பால் கூட புகட்ட முடியாமல் கண்கள் கலங்கி மடியில் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கும் குழந்தையை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று தெரியாமலும் பார்த்துக் கண் கலங்கியபடி அமர்ந்திருந்தாள். அதை கண்டதும் மனம் உருகி போக அவள் மடியில் இருந்த குழந்தையை   கைகளில் அள்ளிக்கொண்டாள்.

   பெட்டில் அமர்ந்திருந்த இளம் பெண்  வந்திருந்த மதுவதனியை அதிர்ந்து பார்த்தவள்.தன் மேலே பெட் ஷீட்டை போட்டு மூடியவுடன் அவளின் முகம் ஆனது கோபத்தில் சிவந்து திட்ட வாயை திறந்தவள். இவ்வளவு நேரம் அழுது கரைந்து கொண்டிருந்த குழந்தை அமைதியாக வந்த புது பெண்ணின் தோளில் படுத்ததும் ஆச்சரியத்தில் விழிகளை விரித்து படி அவர்கள் இருவரையும் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்

    இன்னொரு குழந்தையை சமாதானப்படுத்த முடியாமல் திணறிய அந்த பெண்ணோ வந்த புதியவளை ஏதோ விரோதி போல் பார்த்து வைத்தாள். குழந்தை தேம்பி கொண்டே இருக்க அதன் முதுகில் நன்றாக தட்டி விட்டபடியே ஏசியை முழுவதும் ஆப் செய்து விட்டு பேனை மெல்லிய வேகத்தில் வைத்து விட்டாள்.

   அப்படியே அறையை பார்வையால் அளந்தவள். டேபிள் டாயரில் குழந்தைகளுக்கான மருந்து இருக்கும் இடத்தில் சளி மருந்தை கொடுத்து விட்டு மூக்கடைப்பிற்கு நாசல் ட்ராப்சை விட்டு சிறிது நேரம் அப்படியே வைத்திருந்தவள். மீண்டும் தோளில் போடவும் தான் குழந்தை சீராக மூச்சு விட ஆரம்பித்தது.

  அடுத்த நிமிடமே சிணுங்க ஆரம்பிக்க இவ்வளவு நேரம் விழி விரித்த பார்த்துக் கொண்டிருந்த அந்த இளம் பெண்ணின் மடியில் குழந்தையை போட்டதும் குழந்தையும் தாயின் பரிசத்தத்தை உணர்ந்து பசியாற ஆரம்பித்தது.

     அடுத்த குழந்தையும் சினுங்க ஆரம்பிக்கவும் நடுத்தர வயது பெண்ணிடம் இருந்த குழந்தையை வாங்கி முழுதாக ஆராய்ந்தவள். முந்தைய குழந்தைக்கு செய்தது போலவே இந்த குழந்தைக்கும் செய்து சிறிது நேரம் தோளில் போட்டு தட்டி கொடுத்தாள். சிறிது நேரத்தில் தோளில் இருந்த குழந்தை சினுங்க ஆரம்பிக்க 

    பசியாறிக் கொண்டிருந்த குழந்தையை எடுக்க வரவும் அந்த இளம் பெண் கேள்வியாக பார்க்க கன்னங்குழி விழ மெலிதாக புன்னகைத்தவள்.

” ட்வின்ஸ் பேபிக்கு ஒரே நேரத்தில் பசியாற்றலாம். குழந்தை ரொம்ப நேரம் அழுததற்கு பசி தாங்க மாட்டாங்க.குழந்தைக்கு ஒன்றரை மாசம் தான் ஆயிருக்கு. சோ வாட்டர் ஏதும் கொடுக்க முடியாது. இப்ப குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம்  பயப்படாதீங்க நான் பாத்துக்குறேன் “என்று கூறியபடியே குழந்தைகளை அவளின் மடியில் சரியாக படுக்க வைத்தவள்.மறுபுறம் அவர்களின் காலுக்கு தலையனையை வைத்து சமமாக படுக்க வைத்ததும் இரு குழந்தைகளும் ஒரே நேரத்தில் பசியாறினார்கள்.

   அதே நேரத்தில் அந்த இளம் பெண்ணின் முதுகிலும் வாகாக தலகாணியை வைக்க அப்பொழுதுதான் சௌகரியமாக அமர்ந்த அப்பெண்ணும் இலகுவாக குழந்தைகளுக்கு பாலை கொடுத்தாள்.

  ஒவ்வொரு தடவையும் இரண்டு குழந்தைகளுக்கு மூன்று மணி நேரங்களுக்கு பால் கொடுக்கும் போது முதுகு தண்டில் வலி உயிர் போகும். இவ்வாறு ஒரே நேரத்தில் பால் கொடுக்கும் போது இலகுவாக இருந்தது.

   அதில் இவ்வளவு நேரம் கண்கள் கலங்கி இருந்த அந்த இளம் பெண் சிரிக்கவும் அதைப் பார்த்து மதிவதினிக்கும் சிறு புன்னகை உதயமானது.கள்ளம் கபடம் இல்லாத முகபாவம். ஏனோ பார்த்த ஒன்னும் உடனே அந்த இளம் தாயை மதிக்கு பிடித்துவிட்டது.

  மதிவதனி கீழே கிடந்த துணிகளை அடிக்க வைக்க ஆரம்பித்ததும் அதை அந்த இளம் பெண்தடுக்க பார்க்க அதற்கு ஒரு புன்னகையே பதிலாக கொடுத்துவிட்டு அனைத்தையும் சீராக அடுக்கி வைத்தாள்.

   அதற்குள் அந்த நடுத்தர வயது பெண்மணி மதியை முறைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள். மதிவதனிக்கு அப்போதுதான் பேக்கை ஹாலிலே போட்டது நினைவு வர செல்ல போனவளை அந்த இளம் பெண் தடுக்கவும் அவள் கண்களில் இருந்த கலக்கம் உணர்ந்து அங்கிருந்த ஒரு மர நாற்காலியே  அருகில் போட்டு அமர்ந்து விட்டாள்.

    குழந்தைகள்  கத்திக்கொண்டே இருந்ததில் விரைவில் தூங்கி விடவே பெட்டை ஒட்டி போடப்பட்டிருந்த இரண்டு தொட்டிலில் இருந்த மெத்தைகள் ஈரமாக  இருப்பதை போல தோன்றவே அந்த பெண்ணிடம் கேட்டு புது மெத்தைகளை மாற்றி குழந்தைகளை அதில் படுக்க வைத்தாள்.

  குழந்தைகளும் சமத்தாக தூங்க ஆரம்பிக்கவும் அப்போதுதான் இவ்வளவு நேரம் அந்த பெண்ணை பற்றி கேட்கவில்லை என்பது புரிந்த அந்த இளம் பெண்ணும் மதிவதனிவை பார்க்க “நான் மதிவதனி குழந்தைகளை டேக் அப் பண்ண வந்திருக்க புது நர்ஸ்” எனக் கூறியதும் யாகவிக்கு மிகுந்த நிம்மதியாக இருந்தது.

    அவள் வேலை திறமையை தான் இவ்வளவு நேரம் கண்டாலே. தான் யாகவி என்று அறிமுகப்படுத்திக் கொள்ள மதிவதனி இடம் இருந்து மெல்லிய புன்னகை உதயமானது. யாகவி அவள் புன்னகையை கண்டு  நீங்க ரொம்ப அழகா சிரிக்கிறீங்க என்று கூறியதும் மதியின் இதழ்கள் இன்னும் நன்றாக சிரிப்பில் விரிந்தது.

    அதற்குள் அறைக்கதவு மெலிதாக தட்டப்பட உள் நுழைந்தவரை கண்டு யாகவியின் முகம் இறுக்கியது. மதி யாகவின் முகம் மாற்றம் கண்டு ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் போதே வந்திருந்தவரை கண்டு தானாக எழுந்து நின்றாள்.

   55யை தொடும் வயதில் சிறிய கரை வைத்த பட்டு புடவை, தங்க பிரேம் உடைய கண்ணாடியும் அணிந்திருந்தவரின் ஆடை  அணிகலன்களே அவரின் செல்வ செழிப்பை பறைசாற்றியது. அவரின் கண்களில் கூர்மையுடன் இருந்தாலும் அதில் ஒருவித வலியும் சோகமும் இருந்தது.

    பார்த்தவுடன் மரியாதை தோன்றும் அவரின் தோற்றத்தில் அவளும் தன்னிச்சையாக எழுந்து நிற்க வந்த அம்சவள்ளி அம்மாளோ தொட்டிலை பார்த்தவர். அடுத்த நிமிடமே அங்கு நின்று கொண்டிருக்கும் மதி வதனியை புருவம் சுருக்கி யோசித்தவர். கேள்வியாக யாகவியை பார்க்க அவளோ முகத்தை திருப்பிக் கொண்டாள்.

  மகளின் கோபம் புரிந்த அவரும்  பெருமூச்சி எடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர் மது வதணியை காண அவர் முகத்தில் இருந்த சோர்வை கண்டு அவளை தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

    யாகவியின் முகம் திருப்தியாக இருப்பதே கண்ட அவருக்கும் இப்பொழுதுதான் சிறு நிம்மதி பிறந்து இருக்க தொட்டில் அருகில் பேரன் பேத்தி இருவரையும் பார்த்து விட்டு வந்தார். மதியை அழைத்தவர் முன்பு யாகவியும் குழந்தைகளையும்  பார்த்துக் கொண்டிருந்த சாந்தி என்ற நடுத்தர பெண்ணை தன் மகளின் அறைக்கு அனுப்பி வைத்தார்.

    அந்த பெண்ணின் முகத்திலோ கடுகடுப்புக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது. அது எதனால் என்பதை தெரிந்தது போல் மதுவதனியும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

   யாகவியின் அறைக்கு பக்க அறையே மதிவதனிக்கு அறை ஒதுக்கப்பட்டது.அத்துடன் சம்பளம் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் முறை அனைத்தையும் தெளிவாக   கூறியவர். குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள் என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார். ஹாலுக்கு வந்தவளின் விழிகளோ அந்த வீட்டை ஒரு முறை கூர்மையாக சுற்றி பார்த்தது.

  தான் தேடிய பொருள் எங்கு கிடைக்கும் என யோசித்துக் கொண்டிருந்தவள்.யாரும்மா நீ என்று முதுகின் பின்னால் கேட்ட அதட்டல் குரலில் பயந்தபடி திரும்பினாள்.தன் முன்னால் நின்றிருந்தவரை கேள்வியாக பார்த்தவள். அவர் முகத்தில் இருந்த கேள்வி புரிய உடனே வீட்டுக்கு வந்த புது நர்ஸ் எனக் கூறியதும் அவர் முகத்தில் இன்னும் கடுப்பு அதிகரித்தது.

  அவர் உடையிலே அந்த வீட்டின் தலைமை குக் என்பது புரிய தன்னை  ஏன் முறைக்கிறார் என்று தெரியாமல் அவரை விழிவிரித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

   அந்த அம்மாளும் அவள் முகத்தில் இருந்து என்ன கண்டாரோ சிறிது நேரத்தில் முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல் அவளை டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்று உணவை பரிமாறினார்.

  அவளும் ஏதேதோ நினைவில் காலையிலிருந்து உண்ணாமல் இருந்ததற்கு பசி அப்போது தான் உறைக்க அவர் தட்டில் வைத்து அனைத்து உணவையும் காலி செய்தாள்.

   “தேங்க்ஸ் மா ரொம்ப நாள் கழிச்சு திருப்தியா சாப்பிட்டேன்” என கண்ணகுழி விழ அவள் புன்னகைக்க இவ்வளவு நேரம் அவள் மீது கடுப்பில் இருந்தவருக்கு அவளின் புன்னகையும் அம்மா என்று அழைப்பும் மனதை நெகிழ செய்தது.

   அவரும் கண்ணுக்கே தெரியாத ஒரு புன்னகை அவளை நோக்கி சிந்தினார். அதை கண்டுகொண்ட மதுவதனியும் ஒரு புன்னகையுடன் தான் உணவு உண்ட தட்டை கழுவி வைத்து விட்டு தனது ஒதுக்கி கொடுத்த அறைக்கு சென்றாள்.

  ஆச்சரியமாக அவளின் உடை பை அந்த அறையிலேயே இருக்க அனைத்தையும் அலமாரியில் அடுக்கி வைத்தவள்.கடந்த மூன்று மணி நேரம் பயணத்தில் உடலும் மனமும் சோர்ந்து போயிருந்தாலும் உண்ட மயக்கத்தில் உடனே படுக்க மனமில்லாமல் சிறிது நேரம் நடை பயின்றாள்.

   களைப்பின் காரணமாக ஒரு வெண்ணீர் குளியலை போட்டுவிட்டு  யாகவியின் அறைக்கு செல்ல மூவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள்.அறையில் வேறு யாரும் இல்லாமல் இருக்க சிறுது யோசித்தவளுக்கு அறையை சுத்தப்படுத்தும் போது பேபி மானிட்டர் இருந்தது நினைவு வர அதை ஆன் செய்து விட்டு தனது அறைக்கு சென்று அவளும் சிறிது நேரம் உறக்கத்தை தழுவினாள்.

    நல்ல உறக்கத்தில் இருக்கும்போது குழந்தையின் சிணுங்கல் குரல் கேட்கவே அடித்து பிடித்து பக்கத்து அறைக்கு சென்று பார்க்க யாகவி அசந்து தூங்கிக் கொண்டிருக்க ஒரு குழந்தை மட்டும் கை கால்களை ஆட்டி கொண்டு சிணுங்கி கொண்டிருந்தது. சிணுங்கல் கத்தலாக மாறுவதற்கு முன் குழந்தையை தூக்கி தோளில் போட்டு தட்டி கொடுக்க ஆரம்பித்தாள்.

   குழந்தையும் அப்படியே உறங்க ஆரம்பிக்க குழந்தையை தொட்டிலில் கிடத்தினாள்.அதன் பிறகு தூங்க மனம் இல்லாமல் அந்த அறையை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு பூட்டி இருந்த பால்கனி கண்ணில் பட சத்தம் வராமல் அதை திறந்து கொண்டு உள் சென்றாள்.

   சில்லென்று பனிக்காற்று முகத்தில் மோத ஊட்டியின் குளுமையை ரசித்தபடி சிறிது நேரம் நின்றிருந்தவளுக்கு தலைக்கு மேல் கேட்ட சத்தத்தில் உடல் தூக்கி போட்டது. பால்கனி கதவுகளை மூடியதால் சத்தம் உள்ளே கேட்டிருக்காது என நிம்மதி பெருமூச்சு விட்டவள்.இன்னும் விடாமல் சத்தம் கேட்கவும் அங்கிருந்தே மேலே எட்டிப் பார்த்தாள்.

   சத்தமும் நின்று விட ஒன்றும் தெரியாமல் இருக்க திடீரென்று ஒரு பூ ஜாடி அவளை நோக்கி வரவும் தலையை பின்னுக்கு இழுத்தவளுக்கு ஒரு நொடி உயிர் போய் உயிர் வந்தது. இப்படியே விட்டால் சரி வராது என பால்கனி கதவை திறந்து அறையில் இருந்து வெளியே வந்தவள்.

   சத்தம் வரும் மேல்தளத்திற்கு பதட்டத்தில் விரைந்து சென்றாள். இவ்வளவு சத்தத்திலும் ஹாலில் இருந்த அவ்வளவு வேலையாட்கள் திரும்பி கூட பார்க்கவில்லை என்பதை அறியாமல் சிங்கத்தின் குகைக்குள் நுழைந்திருந்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
17
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Indhu Mathy

      Interesting.. 🤩

      யதுவீர் தானா அங்க இருக்குறது…. 🤔🤔🤔🤔