Loading

 

 என் வாழ்வின் வண்ணம்       

                              நீயே !!!

 

அத்தியாயம் – 1…..

 

                        பறவைகளின் சத்தமும் அருவியின் சத்தமும் அந்த இடத்தை நிறைந்து இருக்க

சுற்றி மரங்கள் இருக்க நடுவே இருந்த நீர்வீழ்ச்சியை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தவளின் கையை யாரோ இழுக்க

பேலன்ஸ் இல்லாமல் திரும்பி இழுத்தவனின் நெஞ்சில் மொத

“யாரு இது இவ்ளோ ஹார்ஷா இழுத்தது “என்று நினைத்தவள்

அவனின் முகத்தை பார்க்க நிமிர அவளின் கன்னத்தை தாங்கியவன் அவளின் கண்களை பார்த்துக் கொண்டே அவளின் இதழில் ஆழமாக முத்தமிட

முத்தமிடுவான் என்று எதிர்ப்பார்க்காதவள் அதிர்ந்து போய் பார்த்தது முத்தத்தில் கிறங்கிக் கொண்டு இருந்த நில நிற கண்களை தான்….

அவனின் நிலநிற கண்கள் அவளை கடலுக்குள் இழுப்பது போல மாயவளைக்குள் இழுத்து சென்றது…

அவனின் முகம் அவளுக்கு தெரியவில்லை அவனிடம் இருந்து விலகி அவனின் முகத்தை பார்த்து விட வேண்டும் என்று நினைத்து அவனிடம் இருந்து அவள் விலக பார்க்க

அவனோ அவளின் விலகலை முறியடித்தவன் மீண்டும் மீண்டும் அவளின் இதழில் முத்தமிட்டுக் கொண்டே இருக்க

ஒரு கட்டத்தில் மூச்சுவிட முடியாமல் தவித்தவளை வேறு வழி இல்லாமல் அவளிடம் இருந்து விலக

ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டவள் அவன் முகத்தை பார்க்க முயல

அப்போது அவளின் காதருகில் ஏதோ சத்தம் கேட்ட

முதலில் அதை சட்டை செய்யாதவள் அவளின் முகத்தை பார்க்க அதற்குள் மீண்டும் மீண்டும் அந்த சத்தம் அவள் அருகில் கேட்கவும்

எழுந்து பார்த்தால் அலாரம் அடித்துக் கொண்டு இருந்தது

அதை எடுத்து ஆப் செய்தவள் ஒருமுறை அவள் இருந்த அறையை சுத்திபார்த்து ” இன்னைக்கும் அதே கனவா ச்சே இன்னைக்கும் அவன் முகத்தை பார்க்க முடியல “என்று புலம்பியவள்

“யாரா இருப்பான் தினமும் கனவுல வரான் ஆனா முகத்தை காட்ட மாட்டேங்கறான் “என்று எண்ணியவளுக்கு அவனின் கண்கள் மட்டுமே நினைவில் இருந்தது…..

அவளின் கனவில் வந்தவனை நினைத்துக் கொண்டு இருந்தவளை மற்றொரு அலாரம் கலைக்க

அதை எடுத்து ஆப் செய்தவள் நேரத்தை பார்க்க

அது ஏழு மணியை தாண்டி இருந்தது

அதை பார்த்தவள் “போச்சு லேட் ஆகிருச்சு சீக்கரம் கிழ போகணும் இல்ல ஹில்டர் என்ன தொங்க விட்ரும் “என்று நினைத்து வேகமாக குளிக்க சென்றாள் சக்தி…

நம் கதையின் நாயகி ..

சக்தி சராசரி பெண் போல ஒல்லியும் இல்லாமல் பூசினார் போலும் இல்லாமல் இருப்பவள்…

அவளின் வாய் பேசுவதை விட அவளின் கண்கள் தான் அதிகம் பேசும்…

அவளிடம் பேசுபவர்கள் எல்லாரும் அவளின் கண்களை தான் பார்ப்பார்கள்….

சட்ரென்று அனைவரிடமும் நட்பாகி விடுவாள்….

அவள் ஒரு புரியாத புதிர் போல

என்ன நினைக்கிறாள் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது …

குளித்து முடித்து கீழே சென்றவளை வரவேற்றது அவளின் அத்தை ராதையின் பாடல் தான்..

 

” துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்

பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்

நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்

கந்தர் சஷ்டி கவசம் தனை

அமரரிடர் தீர அமரம் புரிந்த

குமரனடி நெஞ்சே குறி…

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்

சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாடக் கிண்கிணி யாட “

 

             என கண்மூடி பக்திமயமாக பாடிக் கொண்டு இருக்க

அவரின் குரலை ரசித்துக் கொண்டு இருந்தவளை

“க்கும் “என்று குரல் அவள் பின்னால் கேட்க

அது யார் என்று தெரிந்தவள் “போச்சு கரெக்ட்ஆ மாட்டிகிட்டேன் “என்று மனதில் நினைத்துக் கொண்டே அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல்

திரும்பி பார்க்க

அங்கே அவளை முறைத்துக் கொண்டு இருந்த அகிலாண்டஸ்வரி இவளை பார்த்து விட்டு கடிகாரத்தை பார்க்க

“சிம்பாளிக்க நா லேட்டா வந்துட்டேன்னு சொல்லறாங்கலாம் “என்று மனதில் நினைத்து

வெளியில் ஒன்னும் தெரியாதவள் போல் முகத்தை பாவமாக வைத்துக் கொள்ள

“நேரம் என்ன இப்போ தான் வரியா பொட்டபுள்ளைங்க இப்படி இருந்தா வீடு வெளங்கிரும் “என்று திட்ட

அவர் பேச ஆரம்பித்தவுடன் “ஸ்டார்ட் பண்ணிட்டாங்களா “என்று நினைத்தவள்

“அப்படியே நேரமா எழுந்தா மட்டும் விண்வெளிக்கா போக போறேன் “என்று மனதுக்குள் கிண்டல் அடித்துக் கொண்டவள்

வெளியில் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொள்ள

இவளை திட்டிக் கொண்டு இருந்தவர் “தினமும் நா உன்னை திட்டிக் கிட்டு இருக்கேன் நீ எப்போவும் இப்டியே நின்னுகிட்டு இருக்க “என்று குறைப்பட்டு சொல்ல

“அதான் தெரியுதுல அப்புறம் எதுக்கு தினமும் சொல்லி எனர்ஜிய வேஸ்ட் பண்றாங்க”என்று நினைத்தவள்

வெளியில் “இனி நேரமா எழுந்தறேன் பாட்டி “என்று பவ்யமாக சொல்ல

அவள் சொன்னதை கேட்டு “சரி சரி போ “என்று சொல்ல

“விடு ஜூட் “என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு

கிச்சன் செல்ல

பூஜையை முடித்த ராதை சக்தி அகிலாண்டஸ்வரியிடம் திட்டு வாங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து விட்டு

எப்படியும் காபி கேட்டு வருவாள் என்று தெரிந்து அவளுக்காக காபி போடவர்

அவள் வந்தவுடன் கையில் கொடுக்க

அதை வாங்கிக் கொண்டவள் “அத்தைனா அத்தை தான் “என்று அவளை செல்லம் கொஞ்சி விட்டு காபியை குடிக்க

அவள் செல்லம் கொஞ்சியதில் சிரித்தவர் அவளின் அழகை ஒரு நிமிடம் கண்ணில் நிரப்பிக் கொண்டு

“இன்னைக்கு என்ன சமைக்கட்டும் டா “என்று வாஞ்சையாக கேட்க

“பூரி பண்ணுங்க அத்தை சாப்பிடணும் போல இருக்கு “என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது

“ஏன் அவளுக்கு பிடிச்சதை தான் பண்ணுவீங்களா? “என்று கேட்டுக் கொண்டே அங்கு இருந்த சமையல் மேடையில் அமர்ந்து அருகில் இருந்த கேரடை கடித்துக் கொண்டே சாத்விகா கேட்க

அவளின் அருகில் வந்த சக்தி “அதெல்லாம் முடியாது அத்தை எப்போவும் எனக்கு பிடிச்சதை தான் செய்வாங்க “என்று அவளுக்கு போட்டியாக கேரட்டை கடிக்க

இருவரும் விளையாட்டாக பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து சிரித்து விட்டு பூரிக்கு மாவு பிசைய ஆரம்பிக்க

“எங்க அம்மா எதுக்கு உனக்கு பிடிச்சதை செய்யணும்? “என்று கோவமாக கேட்டுக் கொண்டு ஆத்மிகா வர

அவளை பார்த்த சக்தி “ஐயோ வந்துட்டாள “என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாலும்

வெளியில் அவள் பேசியதற்கு பதில் அளிக்காமல் இருக்க

“ஏ அவ விளையாட்டுக்கு அப்படி சொல்ற “என்று சாத்வி சொல்ல

சாத்வியை முறைத்த ஆத்மி “நீ அவளுக்கு சப்போர்ட் செய்யாத “என்று சொல்லி விட்டு

ராதையிடம் திரும்பியவள் “இன்னைக்கு கிச்சடி செயிங்க பூரி சுடக் கூடாது “என்று கட்டளை போல் சொல்ல

ராதை சக்தியை திரும்பி பார்த்தார்

ஏன்என்றால் சக்திக்கு கிச்சடி பிடிக்காது அதை தெரிந்துக் கொண்டே ஆத்மி அதை சொல்ல

என்ன செய்வது என்பது போல் ராதை பார்க்கவும்

அதை பார்த்த ஆத்மி “நா சொன்னா அவளை எதுக்கு பார்க்கறீங்க அப்போ இந்த வீட்ல எதுக்கு நடந்தாலும் அவளை தான் கேட்கணுமா “என்று கோவமாக சொல்லியவள்

“பாட்டி “என்று சத்தமாக அழைக்க

அவள் அழைப்பதை கேட்ட சாத்வி அவசரமாக “இப்போ எதுக்கு அவங்களை கூப்பிடற “என்று கடிய

“அவங்க வந்தா உனக்கு என்ன “என்று கேட்டு விட்டு சக்தியை பார்க்க

அவளோ “ஆரம்பிச்சுட்டா “என்று நினைத்து அமைதியாக இருக்க

ராதைக்கு தான் பயமாக இருந்தது அகிலாண்டஸ்வரி வந்து என்ன பேசுவார் என்று அவருக்கு தெரியுமே அதனால் கையை பிசைந்துக் கொண்டு நிற்க

அங்கு வந்த அகிலாண்டஸ்வரி “என்ன ஆத்மி எதுக்கு கூப்பிட? “என்று கேட்டுக் கொண்டே

அங்கு இருந்த சக்தியின் முகத்தையும் ராதையின் முகத்தையும் பார்க்க

“பாருங்க பாட்டி இவ சொன்னானு அம்மா பூரி சுடறாங்க எனக்கு பூரி பிடிக்காதுனு தெரிஞ்சும் அதுனால நா கிச்சடி செய்ய சொன்னா அதுக்கு இவ முகத்தை பார்க்கறாங்க இந்த வீட்ல எனக்கு பிடிச்சது எதுவும் நா கேட்க கூடாதா?”என்று குறைப்பட

அதை கேட்ட அகிலாண்டஸ்வரி ராதையை பார்த்து “என்ன என் பேத்திக்கு பிடிச்சது செய்ய சொன்னா செய்ய மாட்டியா உன் அண்ணன் பொண்ணு சொன்னதை தான் செய்வியா “என்று கேட்க

கையை பிசைந்துக் கொண்டே “இல்ல அத்தை சக்திக்கு கிச்சடி பிடிக்காது “என்று மெதுவாக சொல்ல

“பூரி ஆத்மிக்கும் தான் பிடிக்காது அது தெரிஞ்சும் அவ கேட்கறனு செய்ய போனதான “என்று கேட்க

இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்றார்

அவர் கேட்பதும் நியாயம் தானே மகளுக்கு பிடிக்காது என்று தெரிந்தும் செய்ய போனவர் இப்போது சக்திக்கு புடிக்காது என்று பார்த்தால் கோவம் வரும் தானே….

அகிலாண்டஸ்வரி ராதையை கேள்வி கேட்பதை பார்த்த சக்தி “அத்தை கிச்சடி செய்வாங்க நா சாப்டுக்கறேன் “என்று சொல்ல

அவளை திரும்பி பார்த்தவர் ஒன்னும் சொல்லாமல்

ராதையை பார்த்து “இதுக்கு தான் நா ஆரம்பத்துல இவள இங்க கூட்டிகிட்டு வரும் போதே கேட்டேன் உன் பொண்ணுங்களுக்கு தான் முதல முக்கியதுவம் குடுக்கணும்னு இப்போ பாரு “என்று சொல்ல

அதை கேட்ட ராதை கண்ணில் கண்ணீருடன் நிற்க

இதற்குள் மேல் எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு அகிலாண்டஸ்வரி செல்ல

அங்கு இருந்தவர்களை மிதப்பாக ஒரு பார்வை பார்த்து விட்டு ஆத்மி செல்ல

அவளை முறைத்து பார்த்த சாத்வி “சின்ன விஷயத்தை எப்படி பெருசக்கறா “என்று சொல்லி

சக்தியின் தோளில் கை வைத்தவள் “அவளை பத்தி தான் தெரியுமே விடு “என்று ஆறுதல் சொல்லியவள்

“அம்மா சீக்கரம் செய்யுங்க இல்ல அதுக்கும் பஞ்சாயத்தை கூட்டுவா “என்று சொல்லிவிட்டு செல்ல

ராதையின் கை பிடித்த சக்தி “சாரி அத்தை என்னால தான “என்று வருத்தமாக கேட்க

“அத்தைகிட்ட சாரி கேட்பியா “என்று செல்லமாக கடிந்துக் கொண்டவர்

சக்தி கேட்ட பூரிக்காக மாவு பிசைய

அதை பார்த்த சக்தி “வேண்டாம் அத்தை கிச்சடி செயிங்க “என்க

அவளின் கையை பிடுத்தவர் “நா செஞ்சுக்கறேன் நீ போ “என்று அவளை வெளியில் அனுப்பிவிட்டு வேலையை தொடர

அவரை பார்த்தவள் “நீங்க இருக்கறதால தான் நா இவ்ளோ தூரம் இருக்கேன் “என்று நினைத்துக் கொண்டாள்…..

ராதையின் அண்ணன் பாண்டியன் விவாசாய குடும்பத்தை சேர்த்தவர்கள்…

சிறு வயதிலேயே அவர்களின் பெற்றோர் இறந்து விட

பாண்டியன் தான் ராதாவை தாய் தந்தையாக பார்த்துக் கொண்டார்….

ராதையின் இளம் வயதில் அவரின் அழகை பார்த்து கிருஷ்ணன் அவரை பெண் கேட்டு வர

தங்கைக்கு பெரிய இடத்தில் சமந்தம் வரவும் மிக யோசித்தவர் பின் கிருஷ்ணனின் நல்ல மனதை பார்த்து திருமணம் செய்து வைத்தார்…

என்ன தான் கிருஷ்ணன் ராதையை திருமணம் செய்துகொள்ளும் போது வராதட்சணை வேண்டாம் என்று சொல்லி மறுத்த போதிலும்

பாண்டியன் அவரால் முடிந்த அளவுக்கு ராதைக்கு செய்தார்….

கிருஷ்ணனின் ஆசைக்கு அகிலாண்டஸ்வரியும் மறுப்பு தெரிவிக்க வில்லை….

ராதைக்கு முதல் குழந்தை பிறந்த பின்

பாண்டியன் அவர் ஊரிலே சாந்தியை திருமணம் செய்துக் கொண்டார்…

திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் பின் தான் பாண்டியனுக்கும் சாந்திக்கு சக்தி பிறந்தாள்….

வெகு நாட்கள் பின் ராதையின் இரட்டை குழந்தைகள் பிறந்தநாள் விழாவுக்கு வந்த பாண்டியனும் சாந்தியும் வீடு திரும்பும் போது அச்சிடேன்ட்டில் இறந்து விட

அண்ணன் அண்ணியின் இறப்பை கேட்டு துடித்து போன ராதை அவர்களின் வீட்டுக்கு சென்று இறுதி காரியங்களை முடித்த பின்

பாண்டியன் சாந்தியின் மகள் சக்தியை யார் பார்த்துக் கொள்ளவது என்ற கேள்வி வர

சாந்தியின் உறவினர்கள் எல்லாம் மௌனமாக ஒதுங்கி விட

தன் அண்ணனின் மகளை தானே பார்த்துக் கொள்ளவதாக சொல்லி தன்னுடனே அழைத்து வந்து விட்டார்….

சக்தியை அழைத்து வந்தது கிருஷ்ணனுக்கு எதும் இல்லை ஆனால் அகிலாண்டஸ்வரிக்கு தான் பிடிக்க வில்லை அவளை ஹாஸ்டலில் சேர்த்து விடலாம் என்று சொன்னதிற்கு ராதையின் முகம் கவலை பட

அதை பார்த்த கிருஷ்ணன் சக்தி தங்களுடனே வைத்து கொள்ளலாம் என்று முடிவாக சொல்லிவிட்டார்…

அதில் அகிலாண்டஸ்வரிக்கு சிறிது பிடித்தம் இல்லை

ராதையிடம் அவர் சொல்லியது ஒன்றை தான் “உன் அண்ணன் மகள் இங்கையே இருந்துக்கட்டும் ஆனா இவளால உன் பொண்ணுங்க மேல உன்னோட கவனம் குறைய கூடாது “என்று சொல்லிவிட

ராதை எல்லாரையும் ஒரே மாதிரி பார்த்து கொள்வேன் என்று சொல்லி சக்தி தங்களுடன் வைத்துக் கொண்டார்…

சக்தியின் நான்கு வயதில் அத்தையுடனே இருந்துக் கொண்டாள்….

சக்திக்கு தாய் தந்தையின் ஏக்கம் வந்து விடகூடாது என்று ராதை அவளை நன்றாக பார்த்துக் கொள்ள

நாளாக நாளாக அம்மாவின் மேல் ஓவர் possessiveness ஆக இருக்கும் ஆத்மிக்கு சக்தியை பிடிக்காமல் போனது…

எப்போதும் ராதை இவள் தான் செல்லம் என்ற எண்ணமே அவளை பிடிக்காமல் செய்து விட்டது…

சாத்விகாவுக்கு சக்தியை பிடிக்கும் அவள் பின்னாலே சுத்திக் கொண்டு இருப்பாள்..

ஆத்மிக்கு சக்தி பிடிக்காததால் அடிக்கடி அகிலாண்டஸ்வரியிடம் சக்தியை மாட்டி விட்டு திட்டு வாங்க வைப்பாள்…

இதை ஒரு முறை ராதை கண்டிக்க அதில் மேலும் சக்தியை பிடிக்காமல் போய்விட்டது…

கிருஷ்ணன் எல்லாரையும் ஒன்றாக தான் பார்ப்பார் இருந்தாலும் அவரின் மகள்களுக்கு தான் முதல் உரிமை…

இதனால் ராதை சக்தியை அதிகம் யாரிடமும் திட்டுவாங்காமல் பார்த்துக் கொள்வார்..

இன்று நடந்தது போல் எப்போதும் நடப்பது தான் என்று சக்திக்கு புரிந்தாலும் தன்னால் தான் அத்தை திட்டு வாங்குகிறார் என்று நினைத்து வருந்தியவள் பின் ஹாஸ்பிடல் கிளம்ப சென்றாள்….

                         வண்ணமாகும்…

     

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்