Loading

எனதழகா – 57 ❤️

தீ …. தீ….. என்று அன்று மழலை சொன்னது முழுதாக புரியாவிடினும், ஏதோ விபரீதம் நடந்து உள்ளது என்று புரிந்து கொண்டு விரைந்து சென்றனர்.

ஆனால், அவர்கள் நினைத்தது ராதேவிற்கு ஆனால், மீராவின் வீடு தீப்பிடித்து இருப்பதை அறிந்து அவ்விடத்திற்கு செல்ல, ஒலச்சத்தம் காதை கிழித்தது.

அதில், ஒருவர் வசுதேவரின் அருகில் வந்து “வேற வீட்டு பிள்ளைனால தான இப்படி பண்ணிடீங்க. இதே உங்க வீட்டு பிள்ளைக்கு இப்படி நடந்தால் அமைதியா இருப்பீங்களா ? ” என்று கேட்டார்.

அவ்வாறு கேட்டது தீண வெங்கடேஷன் மனைவியின் அம்மா. அவரது மகள் அவ்வீட்டில் பொசுங்கி விட்டாள். நிவான் மற்றும் அபி அவ்வீட்டை பார்த்து அழுக, தீனா ஓரத்தில் ஆறுமுகத்தை வெளுத்து கொண்டிருந்தார். ஆருஷியை லக்ஷ்மி அம்மா வைத்துக் கொண்டு அரண்டு நிற்கும் மீராவை ஆறுதல் படுத்தினார்.

வசுதேவருக்கு அப்பொழுது தான் மூச்சே வந்தது. இருந்தும் தனது மச்சினன் அடி வாங்குவதை காண சகிக்காமல் அவனை போலீஸில் ஒப்படைத்து விட்டார்.

அனைத்தும் ஓயந்த நிலையில திடீரென்று ஒரு நாள் குணாவிடம் வசுதேவர் சென்று “உங்கள் குடும்பத்திற்கு சகல வசதிகள் செய்து வேறு ஊருக்கு அனுப்பிவிடலாம் “என்று கூற, யோசனையுடன் தனது மாமனாரை ஏறிட்டார்.

அதனை உணர்ந்து பாமாவின் தகப்பன் “அய்யா தீ வைச்சது ஆறுமுகம் இல்லை முத்தரசன். அதுவும் அவரு மீரா அம்மா நினைச்சு வச்சிருக்காரு . அதனால “என்று கூறி முடிக்கும் முன், கையை நீட்டி நிறுத்த கூறினார் குணா .

ஒரு நிமிடம் அமைதி காத்து பின்னர் ” என் அப்பாவை கொன்னுட்டாரு. ஆனால், அவரை ஜெயிலுக்கு கூட அனுப்பாம கூட்டிட்டு வந்துட்டீங்க. என் மாமாவையும் கொன்னுட்டாரு. அதுக்கும் ஒன்னும் சொல்லலை. என் அக்கா கல்யாணம் பண்ணுனதுக்கு காரணமே அவரு தான். அவரு சொல்லித் தான் இப்படி ஒரு காரியத்தையே பண்ணாரு. அதுக்கும் ஒண்ணும் சொல்லலை. ஏதோ எனக்குனு ஒரு குடும்பம் இருந்துச்சு. அதையும் தீ வைச்சு கொன்னுட்டாரு. ஒரு பிள்ளைக்கு பெத்தவங்களே இல்லை இன்னொருத்தவனுக்கு அம்மா இல்லாம போச்சு. இப்போ கூட அவரு பண்ணல. செத்துப் போனவர் எந்திரிச்சு வந்து பண்ணாரு சொல்லுறீங்க. நான் எப்பவுமே உங்களை எதிர்த்து பேசலை. இப்பவும் எதிர்த்து பேச விரும்பல. நானே என் குடும்பத்தை பாத்துக்கிறேன். அவங்க எங்க போறாங்க, எங்க இருக்க போறாங்க, எதுவும் உங்க யாருக்கும் தெரிய வேணாம் . நானே பாத்துக்குறேன் ” என்று கூறிவிட்டு, அமைதியாக ஆருஷியை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.

மறுநாள் காலை செய்தியாக வந்தது வடிவேலன் வீட்டில் யாரும் இல்லை என்று மட்டும். வசுதேவரும், லஷ்மியும் எவ்வளவோ கேட்டு பார்த்தார்கள் இன்றளவும் பதில் கூறவில்லை.

வெங்கடேஷன் பேசிய நாளிலிருந்து, ஆறுமுகம் இவ்வீட்டிற்கு வருவதில்லை. ஆனால், அவனுக்கு அனைத்து ஏற்பாடும் செய்து வேறு ஊருக்கு அனுப்பி விட்டனர்.

இடையில் தீனாவும் இறந்ததாக செய்தி வர, அந்நேரத்தில் வசுதேவர் குணாவை பிடித்துக் கொண்டார் பிள்ளைகளின் நலன் கருதி. எவ்வளவு கூறியும் இறங்கவில்லை வெங்கடேஷன்.

அதனால் வசுதேவர் “பிள்ளைகள வளரும் வரை தான் தான் அவர்களுக்குரிய செலவுகள் செய்வேன் ” என்று திட்டவட்டமாக கூறினார். அதற்கும் வெங்கடேஷன் தடை விதிக்க, இறுதியாக வசுதேவர் “பண உதவி மட்டும் செய்கிறேன். அவர்கள் இருக்கும் இடம் எங்களுக்கு தெரிய வேண்டாம் ” என்று கூறி பின்னரே வெங்கடேஷன் ஒப்புக் கொண்டார்.

ஆனால், இதில் மீராவிற்கு பிடித்தமில்லை. அதனால், ஆருஷியை அவர்களுடன் பழகவிட மாட்டார். வளர வளர தகப்பனாக ஆருஷி மற்றும் நிவானை பிரித்து வைத்தார். ஆறுமுகமும் ஒரு நாள் இரவு படுத்தவர் காலையில் எழவில்லை.

இவ்வாறு அடுத்தடுத்து நடந்து முடிந்து ஒய்ந்த நேரம் ராதே வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்ததோடு அவருடேனேயே சென்று விட்டார். இவ்வீட்டில் யாரும் காதலுக்கு எதிரானவர்கள் இல்லை. இருந்தும் ஏன் இவ்வாறு செய்தார் என்று யாருக்கும் புலப்படவில்லை. அதோடு, இவ்வீட்டில் காதல் என்றால் வெறுப்புதான். பவியும் அவ்வாறு செய்தது அனைவருக்கும் விரக்தி வந்து விட்டது. 

💭💭💭💭

காலங்கள் ஓடியது. யாரின் மேல் யாருக்கு கோபம் என்று எவருக்கும் தெரியவில்லை. இறுதியாக, ரியாவை அழைத்துக் கொண்டு தாஸ், தாமரை , அசோக், ஈஸ்வரி கொடைக்கானல் நோக்கிச் சென்றனர். ரியாவிற்காக அபியும், அபிக்காக தீணா மற்றும் நிவான் உடன் பயணித்தனர். பின்னால், லெனின் வருவதாக கூறிவிட்டு சென்று விட்டார்.

இவ்வாறு அனைவரும் கொடைக்கானலில் கூடினர். அங்கு சென்றவுடன் ரியா என்ன நினைத்தால் என்று தெரியவில்லை அர்ஜுனிடம் மன்றாடி அபியை தன்னோடு இருக்குமாறு செய்தாள்.

அதனால் அபி, நிவான் மற்றும் தீணா ரியாவுடன் ராகுலின் வீட்டிற்குள் நுழைந்தனர். உள்ளே நுழைந்தவுடன் ஒவ்வொருவரின் எதிர்வினையும் வேறுபட்டதாக இருந்தது.

குணாவிற்கு இவர்கள் மூவரின் வருகை பதைபதைப்பை உண்டு செய்தது. ஆருஷிக்கோ தனது பெரியப்பா உயிருடன் இருக்கிறார் என்பது ஆனந்தமாக இருந்தது. மீராவிற்கு கொஞ்சமே கொஞ்சம் இளகிய மனம் இருப்பதால், தனது கணவன் வீட்டின் சிறார்களை கண்டவுடன் உள்ளம் மகிழ்ந்து அவர்களின் அருகில் சென்று நலம் விசாரித்தார். அபிக்கும் நிவானிற்கும் அதுவே திருப்தியாக இருந்தமையால் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு நகன்று விட்டனர்.

குணாவின் அருகில் வந்த தீனா தோளில் தட்டி விட்டு அமைதியாக அவரின் அருகில் நின்றார். அந்நேரம் எவ்வித சலனமின்றி அன்பரசி (எ) அனு கீழே இறங்கி வந்தாள்.

தீனா வெங்கடேஷன் அவளைக் கண்டு சிரித்துக் கொண்டே அருகில் வந்து அவளின் தலையில் கைவைத்து ” அப்படியே உன் மாதிரியே இருக்கியே மா ” என்று கேட்டார்.

அவரின் கையை எடுக்காமல் மேலும் கீழும் பார்க்க, அவளின் பின்னால் கூடப் பிறந்த அண்ணன்களான இந்தர் மற்றும் ஆர்யனும், வளர்ப்பு அண்ணனான ரோஹித்தும், உற்ற தோழர்களான சந்தீப் மற்றும் துருவ் பின்னே நின்றனர் .

அதில் கொஞ்சம் அரண்டு பின்னோக்கி நடக்க, அலறும் சத்தம் கேட்டது. திரும்பி பார்க்கும் பொழுது நான்கைந்து தடியர்கள் வாசலில்  ஒருவனை அடித்து வெளுத்துக் கொண்டிருந்தனர்.

அதில் ஒருவனக்கு அந்த ஏசி ஹாலில் வியர்த்து வடிந்தது. நா வறண்டது. தொண்டை குழியில் ஒரு பந்து உருண்டது.

எனதழகா – 58 ❤️

வியர்வை வடிந்து குண வெங்கடேஷன் நிற்க, தீன வெங்கடேஷன் எவ்வித சலனமுமின்றி அமைதியாக நடப்பதை வேடிக்கைப் பார்த்தான்.

ஆனால், பெரியவர்களான வசுதேவர், லக்ஷ்மி, மீரா, கேசவர் , பாமா ஆகியவருக்கு   அவனை கண்டு அதிர்ந்தனர்.

அடிவாங்குபவனைக் கண்டு கைகளை மடிக்கி கோபத்தைக் கட்டுபடுத்த ஒருவன் முயல , அவனின் கைகளை வருடிவிட்டி அமைதிப்படுத்தினாள் ஒருத்தி .

இதை அனைத்தையும் தனது கூர் விழியில் அளவெடுத்தது இரு ஜோடி கண்கள். சிரித்துக் கொண்டே கீழே இறங்கி வந்த மலர் (எ) காவ்யா , அனுவின் கையை பிடித்து தீனாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.

ஒரு நொடி அதிர்ந்து பின்னோக்கி செல்ல, டீபாயில் இடித்து விழப் போனவரை அமர வைத்து, குண வெங்கடேஷனின் அருகில் சென்றனர். அந்நேரம் அவர்களுடன் இன்னொரு பாவையும் கீழுள்ள அறையிலிருந்து வெளியில் வந்தாள் அஞ்சலி.

அஞ்சலியை கண்டவுடன் ஈஸ்வரி வேகமாக ஓடி வந்து கட்டியனைத்து முத்தமிட்டவர் ஆகாஷின் அருகில் சென்று “ஆகாஷ், நம்ம அஞ்சு டா இவ . இவ்வளவு நாளும் இவ ராசிபுரத்தில இருக்கிற சித்தப்பா வீட்டில இருந்துருக்கா. இவளையும் காப்பாத்தி எடுத்து வளத்தது ராதே அத்தை தான் டா ” என்று படபடவென சுற்றுப்புறம் கருதாமல் உளறி விட்டார்.

அதனைக் கேட்டு பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் குணா அஞ்சலியை தாக்க வந்தார். அதற்குள் அர்ஜுன் இடையில் நுழையும் நொடி, அனு வேகமாக அவரைத் தடுத்து கீழே தள்ளினார்.

அனுவின் நண்பனான துருவ்  அவரைப் பிடித்து தீனாவின் அருகில் இருக்கையில் அமர வைத்தார். பின்பு, அடித்தவனையும் அவர்களுடேனேயே அமர வைத்தனர்.

வசுதேவர், கேசவர் மற்றும் அர்ஜுனை அவர்களின்  நேர் எதிரில் அமர சொல்லிவிட்டு, அனு அர்ஜுனின் அருகில் அமர்ந்து மூவரையும் பார்த்தாள்.

ஆருஷி பொங்கி கொண்டு முன்னே வர , முதன்முறையாக மீரா அவளின் கையை இறுகப் பற்றினார். அதே போல், ஆருஷியும் மீராவின் பார்வை வீச்சு அவளுக்கு என்ன கூறியதோ அமைதியாக நின்று கொண்டாள்.

குணாவிற்க்கு தனது மகளின் செயலினாள் நெஞ்சே வெடித்தது போன்ற உணர்வு. அப்பொழுது தான் அவருக்கு ஒரு விஷயம் புரிந்தது மீரா நன்றாக எழுந்து நடமாடுவதே. நேற்றிலிருந்து இவர்களிடம் இருந்து தப்பிக்கும் வழியையே கண்டுபிடிக்க நினைத்தவர் தனது மனைவியை கவனிக்க தவற விட்டார்.

ஆனால், வந்தவுடன் அபிக்கும், நிவானிற்கும் மீராவைக் கண்டு அதிர்ச்சி. மீரா சைகை செய்ததாலே அமைதியாக இருந்தனர். இதை அனைத்தும் நினைத்துப் பார்க்க தான் வசமாக மாட்டியது ஒவ்வொன்றாக புரிந்தது. அதனால், மீராவிடம் குசலம் விசாரிக்கவும் இல்லை, அவர் போலியாக இருந்தாரா  என்று விசாரணையும் செய்யவும் இல்லை.

அமைதியாக எழுந்து அப்புதியவனின் அருகில் வந்து அவனின் கன்னத்தில் அறைந்து “இளங்கோ ஏன்டா இப்படி பண்ண? ” என்று தன் நண்பனும் , தனது தமக்கையின் கணவனான மச்சானை குறுக்கு விசாரனை செய்தார் குணா.

இதையும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் தீனா. இளங்கோ தான் தீனாவைப் பார்த்து “நான் சொன்னேன் அல்லவா ” என்று கூறாமல் கண்களிலேயே செய்தி அனுப்பினான் தனது நண்பனான தீனாவிற்கு . தீனா அதையும் பொருட்படுத்தாமல் ஏதோ ஒரு சிந்தனையில் இருந்தார்.

உடனே குணா “என்னடா ? எங்களை பிரிக்க பாக்குறியா ? ” என்று கேட்டு அவரின் பதற்றத்தை தெரியாமல் இருக்க முயற்சித்தார். இளங்கோ, தனது சட்டையை பிடித்திருந்த குணாவின் கையை விலக்கி , மீராவின் முன் நிறுத்தி, “உனக்கு லெட்டர் கொடுத்தது, காதலிச்சது எல்லாமே தீனா தான். குணா இல்லை ” என்று கூறி முடிப்பதற்குள் குணா “என்ன பேசுற? அக்கா புருஷனு பாக்குறேன். இல்ல மரியாதை கெட்டு போய்டும். என்னென்னமோ சொல்லுற ? தாம்தூம் என்று குதித்தார் .

அதற்கு எந்த எதிர்வினையும் காட்டாமல் இளங்கோ இருப்பது ஒரு வித பயத்தைக் கொடுத்தாலும், மீராவின் அமைதியே ஒரு நடுக்கத்தைக் கொடுத்தது. அதனால் மீரா முன் நின்று அதே கேள்வியை கேட்டு தன் பக்கம் இழுக்க முயற்சித்தார்.

ஆனால், அவரை தன் பக்கம் இழுத்தி ஒரு அறையை விட்டால் காவ்யா. அதிர்ந்து பார்த்தார் குணா, கூடவே இளங்கோ,தீனா, அபி மற்றும்  நிவான் புருவம் இடுங்க பார்க்க, ஆருஷி தான் பொறுக்க மாட்டாமல் யாரை அடிக்கிற? இடியட்..”என்று கூறியதற்கு, காவ்யா பதில் பேசும் முன் அவளை தன் கை நீட்டி நிறுத்தி “அவரு தப்பே செஞ்சாலும், குறைந்தபட்சம் அவரோட வயசுக்கு மரியாதை கொடுக்கலாம். ஆயிரம் இருந்தாலும் எனக்கு அப்பாவாகிட்டாரு. அதோட என் மேல  அவரு வச்சிருந்த அன்பு உண்மையானது. அதனால என்னால பாக்க முடியல “என்று காவ்யாவிடம் கூறுவது போல் நிவானை ஒரக் கண்ணால் பார்த்தபடி கூறினாள்.

“உன் அப்பாக்காக நீ இருக்க, எனக்கு யாரு இருக்கா? இருந்தும் இல்லாம ஆக்கிட்டாரு உன் அப்பா ” காவ்யா.

“இது என்னம்மா புதுக்கதை சொல்லுற ? ” இளங்கோ சந்தேகத்துடன் கேட்டார். அப்பவும் தீனா அமைதியாக இருந்தார்.

“அட என்னய்யா நீ ? பெரிய வில்லனு நினைச்சா… மிக்சர் சாப்பிடறவன் மாதிரி உட்காந்திருக்க ” என்று லேசாக ஆகாஷிற்கு குறும்புத்தனம் எட்டிப்பார்த்து வாயை அடக்க முடியாமல் உளறிவிட்டான்.

பெரியவர்கள் அனைவரும் அவனை பார்த்து முறைக்க, சிறியவர்களில்  இந்தர், அர்ஜுன், அசோக் மற்றும் ரோஹித் முறைக்க, துருவ் “மாமா….. வாடா வாடா….. இந்த மொமண்ட்ட தான் எதிர்ப்பார்த்தேன் ” என்று அவனை கட்டிப் பிடிக்க வர, “நானா ?”என்று முப்பத்தி இரண்டு பற்களையும் காட்டி அவனும் அருகில்  செல்ல , துருவுடன் ரோஹித்தும் சேர்ந்து அவனின் முதுகில் ஒரு அடி வைத்து விரல் நீட்டி எச்சரிப்பு காட்டி விட்டு சென்றான்.

பாவமாக தனது அன்னையை காண தேவை தான் உனக்கு என்று கூறுவது போல் பார்த்து விட்டு திரும்ப, கடினப்பட்டு ரியா சிரிப்பை அடக்கி கொண்டிருக்க, அப்பொழுது தான் சுற்றி இருக்கும் அனைவரையும் கண்டான். மலர், அனு, ராகுல், ஆதிரா, அசோக் அனைவரும் அவனைக் கண்டு சிரித்துக் கொண்டிருந்தனர்.

அடுத்து அவன் பேச வாயைத் திறப்பதற்கு முன், நடு மண்டையில் சுர்ரென்று வலி ஏற்பட்டது. திரும்பாமலேயே தெரிந்தது அடித்தது லஷ்மி அம்மா தான் என்று. அதனால் வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருந்தான்.

இருந்தும் பொறுக்காமல் ஆகாஷ் மலரிடம் “யூ கண்டினியூ ! “என்று கூற, அர்ஜுன் திரும்பி முறைத்து விட்டு, மலரைப் பார்க்க, ” நான் காவ்யா தாஸ் ” என்று கூற , சிரித்துக் கொண்டிருந்த ரியாவுடன், தாமரை அவளை தாவி அணைத்தனர். ஆனால், தாஸ் அங்கேயே நிற்க  ராதே உள்ளிருந்து அவளின் தங்க பிரேஸ்லட்டை தாஸிடம் கொடுத்தார்.

அதைப் பார்த்து கண்களில் ஒத்திக் கொண்டவர், ராதேயின் கைப்பற்றி கண்கள் நீர் சுரக்க  நன்றி கூறியவர் , காவ்யாவின் தலையை வாஞ்சையாக தடவி விட்டு, ” நான் படுக்கனும் மா ” என்று கூறினார்.

அனைவரும் பதறி அவரின் அருகில் வர நினைக்கும் முன் “ஒண்ணுமில்லை , என் வயசுக்கு கொஞ்சம் அயர்ச்சியாவும் ஆனந்தமாகவும் இருக்கு. என் உடம்பை நான் தான் கவனிக்கனும். போய் படுக்குறேன் ” என்று கூற முடிக்க, இந்தரின் மனைவி கையில் மணக்கும் காபியை அவரிடம் நீட்டினாள். சிரித்துக் கொண்டே வாங்கி விட்டு செல்ல, தாமரையும் பின்னே சென்றார்.

தாஸ் படுத்துக் கொண்டு விட்டத்தை பார்க்க, தாமரை அருகில் வந்து “என்னங்க ” என்று அழைத்தார்.

தாஸ்”எனக்கு என்ன செய்யுறதுனு தெரியலை மா? “

தாமரை “நம்ம பிள்ளைங்க “

தாஸ் பதறி எழுந்து “அதுல நம்பிக்கை இல்லாம இல்ல . ரியா இப்படி இருக்கறப்போ தொலைச்ச பிள்ளை கைல கிடைக்குது ? “

“அதுனால என்னங்க ? “

“அஞ்சலி தொலைஞ்ச அப்போ தான ரியா நமக்கு வந்தாள் ” என்று கூற,

“யோவ் ” ….. என்று ஒருசேர சத்தம் வந்து, இருவரும் திரும்பி பார்த்தனர்.

கீர்த்தி ☘️

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்