Loading

எனதழகா – 49 ❤️

அவனின் ஓவியறைக்கு சென்ற ரியா மலைத்து விட்டாள். ஆளுயரத்திற்கு அவள் கண்கள் கலங்கி சினுங்கி கொண்டு பாவம் போல் இருக்கும் புகைப்படம் இருந்தது.

அதைச் சுற்றி அவளின் சிறு வயது முதல் இப்பொழுது வரை உள்ள அனைத்து புகைப்படங்களும் வரைப்படமாக இருந்தது.

வாட்டர் கலர், கிராபைட் பென்சில் ஷேட், சார்கோல் பென்சில் ஷேட், அக்ரிலிக், ஆயில் போன்று பலத்தரப்பட்ட பெயிண்டிங் இருந்தது.

அனைத்தையும் பார்த்துக் கொண்டே வந்தவள் “சூப்பரா இருக்குடா. அழகா தத்ரூபமா இருக்கு ” என்று கூறிக் கொண்டே சென்றாலும், அந்த ஆளுயர புகைப்படத்தை திரும்பி திரும்பி பார்த்தாள்.

அதில் உள்ளம் மகிழ்ந்து ” என்ன அது உனக்கு பிடிச்சிருக்கா? ” என்று புன்னகை முகமாக கேட்டான்.

“எவ்ளோ அழகழகா போஸ் கொடுத்திருக்கேன். அதை விட்டுட்டு இதை போய் போட்டோ எடுத்திருக்க? “என்று
முகத்தை சுளித்துக்கொண்டு கேட்டதில் அபி நெஞ்சில் கை வைத்து விட்டான்.

“ஏண்டி, போட்டோவா  அது ? ” அபி பாவமாகக் கேட்டான்.

“பின்ன இல்லையா , இதுலாம் வரைஞ்சதா? ” என்று அந்த ஃபிரேமின் அருகில் சென்று அதை தொட முயன்றாள்.

“அய்யோ ஹார்ட் அட்டாக்கா கொடுக்காதடி ! ஆமானு சொன்னா யாருனு கேட்காதே . நான் தான் வரைந்தேன். அதுவும் மனசில உன்னை நினைச்சு வரையுவேன். அதோட இதுல இப்படிலாம் கை வைக்க கூடாதுடி ” என்று அப்பிரேமில் இருந்து அவளை ஒரு அடி தள்ளி நிறுத்தினான்.

“ஓஹோ ” என்று கூறி அதையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்

“ஏண்டி, நான் உன்னை அழுதா கூட ரசிப்பேன் டி ” என்று உள்ளிருந்து கூற, “ச்சீ…. நீ என்ன சைக்கோவா ? ” என்று அவள் ஒரு மாதிரி வைத்துக் கொண்டு கேட்க, அவனுக்கு அய்யோ என்றாகி விட்டது.

ஏதேதோ காதல் மொழிகள் அபி கூறினாலும் , அதை மாற்றி மாற்றி பேசிக் கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் பொறுக்க மாட்டாமல் அபி அவளை இழுத்து கொண்டு அவ்வறையின் பால்கனிக்கு அழைத்து சென்றான்.

அவளை தன் முகம் பார்க்க வைத்து ஐந்து நிமிடத்திற்கும் மேலாக அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளும் அங்கும் இங்கும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் “நான் கிளம்புறேன் அபி . லேட் ஆகிடுச்சு ” என்று அவள் கிளம்ப , அவளை பின்னிருந்து அணைத்து அவளின் கன்னத்தில்  தனது முதல் இதழொற்றலை வைத்து  “இதேமாதிரி அறுபது வயசுலையும் இங்க நிக்கனும் ? நிற்போமா? ” என்று அவளின் தோளில் சாய்ந்து பக்கவாட்டில் இருந்து அவளின் உணர்வகளை அவளது கண்களில் ஆராய்ந்தான்.

அவளின் வதனம் அவளின் மனதை வெளிச்சம் போட்டு காட்டியது. அவள் தான் அங்கு  நிற்க முடியாமல் திணறினாள். வெளியில் காட்டிக் கொள்ளாவிடினும் அவளின் மனதில் இத்தகைய சிகிச்சை கிலியை உண்டு பண்ண தான் செய்தது.

தனது நண்பர்களிடமோ, பெற்றோரிடமோ  கூட காட்டாமல் தான் இருந்தாள். ஆனால், மனதினில் தன்னவன் என்று பதித்து விட்டதால் சுத்தமாக அவளால் முடியவில்லை. இச்சிகிச்சை வெற்றி அடையும் என்று உறுதியாக கூற முடியாத நிலையில்  இருக்க , இவனுடைய வாழ்க்கையையும் அவளால் கெடுக்க மனம் வரவில்லை.

அதை இவனிடம் கூறினால் ஒத்துக்கொள்ள மாட்டான் என்பதால் சிரித்துக் கொண்டே அவனின் காதலை கண்டு கொள்ளாதவாறு இருக்க முயற்சித்தாள். அதனின் பலன் என்னவோ பூஜ்யம் தான்.

அவன் தான் மனதைப் படித்தவன் ஆயிற்றே. அதான் கண்டு கொண்டான். ஒன்றும் கூறாமல் அமைதியாக அங்கு உள்ள சேரில் அமர்ந்து கொண்டான். அவளை ஒரு தொந்தரவும் செய்யவில்லை.

இவளும் எதிர்பார்த்தது அது தான் என்பது போல் கடலை வெறித்துக் கொண்டிருந்தாள். வெகு நேரமாகியாகும் இருவரும் கீழே வரவில்லையே என்று நினைத்து நிவான் மேலே வந்தான். இவர்கள் இருவரும் இருக்கும் நிலைக் கருதி அபியை தொலைபேசியில் அழைத்தான்.

அவனை கீழே வரச் சொல்லி , கிளம்புவதாகக் கூறி அவளிடமும் சொல்லும் படி கூறிவிட்டு வெளியேறி விட்டான்.அபி கதவை லாக் செய்து விட்டு மேலே வர , கதவை லாக் செய்யும் பொழுது இருந்த கார்ட்ஸையே நினைத்துக் கொண்டு மேலே வர, ரியா யாருடனோ போனில் கதைத்துக் கொண்டிருந்தாள்.

எதார்த்தமாக அவளின் அருகில் செல்ல , ” இல்லைடா, சாப்பிட்டேன் நிவான் கிளம்பிட்டான் போல. நானும் அபியும் தான் இருக்கோம்……… அப்பாக்கிட்ட நீயே சொல்லு. அப்பா திட்டும் …… காட்ஸோடையா சரி…. ” என்று எதிர்பக்கத்தின் கேள்விக்கு ஏற்றவாறு பதிலளித்தான்.

அபிக்கு தான் குழம்பியது. காட்ஸையும் நிற்க சொல்கிறான். ஆனால், நாங்கள் தனியாக இருக்கிறோம் என்று கூறுகிறாள். அதற்கு ஒன்றுமே கூறாமல் இருக்கிறான். நம் மேல் அத்துனை நம்பிகையா என்று சேரில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கையில் சடாரென்று அவனின் மடியில் அமர்ந்து, அபி சுதாரிக்கும் முன் அவனின் இதழைக் கவ்வினாள்.

அவனுக்கு தான் மேனி சிலிர்த்தது. முதன் முதலாக ஒரு பாவை, அதுவும் தனக்கு பிடித்தமானவள் அதுவும் அவளே கொடுப்பது ஒரு வகையான போதையைக் கொடுத்தது அவனுக்கு. அதில் அவன் கொஞ்சம் சுயம் இழக்க ஆரம்பித்தான்.

அவளின் இதழை இவன் கவ்வினான். அவனின் ஒரு கை அவளது இடையையும், இன்னொரு கை அவளின் அடர்ந்த கேசத்தையும் அழுத்தி பிடித்துக் கொண்டிருந்தது. இவளும் அவனுக்கு ஈடாக அவளின் இரு கைகளால் அவனுக்கு பிரத்யேகமாக உள்ள அவனின் கோரை மூடியை இறுக்கி கொண்டாள்.

மூச்சு விடுவதற்கு கூட அவளுக்கு இடம் கொடுக்காமல் அவனின் முத்தம் நீடித்துக் கொண்டேயிருந்தது. அடுத்த கட்டமாக அவன் அவளை உள்ளே அழைத்து சென்று படுக்கையில் கிடத்தி இவன் அருகில் சென்றான்.

பெண்களை நிமிர்ந்து பார்த்திட…
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே…கண்களை நேரா பாத்து தான்…
நீ பேசும் தோரணை பிடிக்குதே…

தூரத்தில் நீ வந்தாலே…
என் மனசில் மழையடிக்கும்…
மிகப்பிடித்த பாடல் ஒன்றை…
உதடுகளும் முணுமுணுக்கும்…
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்…
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்…

உனது கண்களில்…
எனது கனவினை காண போகிறேன்…

ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…
அன்பே இரவை கேட்கலாம்…
விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…

சந்தியாக் கால மேகங்கள்…
உன் வானில் ஊர்வலம் போகுதே…பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே…
உன் நடையின் சாயலே தோணுதே…

நதிகளிலே நீராடும்…
சூரியனை நான் கண்டேன்…வேர்வைகளின் துளி வழிய…
நீ வருவாய் என நின்றேன்…

உன்னால் என் நெஞ்சில் ஆணின் மனம்…நானும் சொந்தம் என்ற எண்ணம் தரும்…மகிழ்ச்சி மீறுதே வானைத் தாண்டுதே…சாகத் தோன்றுதே… தோன்றுதே…

எனதழகா – 50 ❤️

இருவரும் காதலில் மயங்கி  சோர்ந்து இருக்கும் நேரம் ரியா அபியின் தோளில் சாய்ந்து விட்டத்தில் ஓடும் ஃபேனை பார்த்துக் கொண்டு வேறு சிந்தனையில்  இருந்தாள்.

அபி கண்மூடி இருந்தான். ஆனால் உறங்கவில்லை. அதற்கு சாட்சியாக அவன் கைகள் ரியாவின் தலை முடியை கோதிக் கொண்டிருந்தது.

” என் வாழ்க்கையில் கடைசி ஆசை உன் கூட வாழனும்னு” என்று கூறி முடிக்கையில் , சடாரென்று அவளை எழுப்பி விட்டு இவனும் எழும்பி கண்கள் சிவக்க அவளை கண்டான்.

அவனின் கோபத்தைக் கண்டு அஞ்சாமல் வருத்தத்துடன் ” என் நிலைமை உனக்கு தான் தெரியுமே. அப்புறம் ஏன் கோபப்படுற ? உண்மையை தான் சொல்லுறேன். நான் ரொம்ப நாள் …. ” என்று கூறி முடிக்கும் முன்னே, அபி அறைந்ததில் பேயடித்தது போல் அதிர்ந்து விட்டாள்.

கன்னத்தில் கை வைத்து பாவமாக அவள் பார்க்க, அபி தன்னை சுத்தம் செய்து வேறு உடை உடுத்தி கீழே சென்று விட்டான். கால் மணி நேரமாக அப்படியே அமர்ந்திருந்தவளை அழைத்தது அவளது தொலைபேசி. எடுத்து பார்க்கையில் அசோக் இருபத்தி நான்காவது முறையாக அழைத்திருந்தான்.

தன்னையே கடிந்து விட்டு, அவனின் அழைப்பை எடுக்க , ” கீழே இருக்கேன் வா ” என்று கூறி விட்டு போனை வைத்து விட்டான். இவள் அவசர அவசரமாக தன்னை சுத்தம் செய்து கொண்டு உடையணிந்து கீழே செல்ல, அபி இவளுக்காக டீப்பாயில் காபி டிரேயுடன் இவளுக்காக காத்துக் கொண்டிருந்தான்.

கீழே இறங்கியவள் அவனைப் பார்த்து கொண்டே வாசற்கதவைத் திறக்க, அசோக் சடாரென்று உள்ளே வந்தான். உள்ளுக்குள் அதிர்ந்தாலும் வெளியே கெத்தாகவும் அதே சமயம் நிதானத்தோடும் கால் மேல் கால் போட்டு கொண்டு உட்கார்ந்து அசோக்கின் வருகையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் அபி.

அசோக் உள்ளே வந்து டீப்பாயில் இருக்கும் காபியை குடித்து விட்டு , ரியாவை அழைத்தான். ரியா மறுப்பேதும் சொல்லாமல் அபியைப் பார்த்துக் கொண்டே அசோக்குடன் சென்றாள்.

தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது
அன்பே போ
நான் போகும் நிமிடங்கள்
உனதாகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ

உன்னாலே உயிர் வாழ்கிறேன்
உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினால்
வாழ்வேனே பெண்ணே
இதுவரை உன்னுடன் வாழ்ந்த
என் நாட்கள் மறுமுறை வாழ்ந்திட
வழி இல்லையா
இருள் உள்ளே தேடிய
தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா!!!!

கண்மூடி அதை இத்தருணம் நினைக்க, நெஞ்சே பாரமாகியது. அதை தன் கைகளை இறுக்கி  கட்டுபடுத்த முயல, அபி அவள் கைகள் மேல்  அவன் கை வைத்து அவளின் இறுக்கத்தை தளர்வு படுத்தினான்.

கண்கள் திறந்து அவளைக் காதலாக பார்க்க , இவள் அழுதழுது சிவந்திருந்த கண்கள் இப்பொழுது கோபத்தை தத்தெடுத்திருந்தது.

அபி ” ஏண்டி நல்லாத்தான இருந்த? இப்போ என்ன? ” ஒரு நிமிடத்தில் மாறிய அவளின் முகப்பாவனைகளை கண்டு யோசனையோடு கேட்டான்.

ரியா”ஏண்டா, என்னை அடிச்ச?”

அபி “ஊப்பப் ……. இது தானா ? உனக்கே தெரியும் எதுக்கு அடிச்சேனு? என்று கோபத்தோடு பதில் கூறி விட்டு  எழுந்து வெளியில் சென்றான். அவன் போவதைப் பார்த்து விட்டு இவளின் வேலையை பார்க்கத் தொடங்கினாள்.

சடாரென்று உள்ளே நுழைந்து ” எப்படி டெக்னிக் யூஸ் செஞ்சாலும் உன்னை விட்டு போக மாட்டேன். எப்பவும் உன் கூட தான் இருப்பேன் “

அவன் மறுபடியும் வந்ததில் உள்ளுக்குள் கர்வம் கொண்டாலும் வெளியில் அவனை முடிந்த அளவு முறைத்தாள். ஆனால், அதை பெரிது படுத்தாமல் இவனின் லாப்டாப்பைத் திறந்து இவனின் வேலையைக் கவனிக்க ஆரம்பித்து விட்டான். இவளும் ஒன்றும் கூறாமல் இவள் வேலையை செய்யத் தொடங்கினாள்.

🌨️ஊட்டி

இரு கார்களும் அம்மாளிகையின் வாசலில் நிறுத்தினர். அதன் பிறகே, பாடலா ஒலித்த குரல் நியாபகத்திற்கு வந்தது. ஏதோ ஒன்று நடக்கப் போகின்றது என்று ஆள் மனசு வேற  அர்ஜுனின் மனதை அரித்துக் கொண்டே இருந்தது

அதே யோசனையோடு இறங்கி கீழே வர, “வாங்க சம்மந்தி வாங்க ” என்ற குரல் தான் சுயத்திற்கு அழைத்தது அவனை. நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ந்து விட்டான்

இவர்  “ராதே  அத்தையோடு குடும்பம் மாதிரி இருக்கு. போச்சுடா இவன் என்ன சொல்ல போறானு தெரியலையே ”  என்று தலையை பிய்த்துக் கொண்டே யோசனையில் கூறினான் ஆகாஷ். 

சக்தி கொடு
சக்தி கொடு
சக்தி கொடு
சக்தி கொடு
இறைவா இறைவா ” என்று மனதிற்குள்ளேயே பேசிக் கொண்டான்.

அர்ஜுன் வந்தவன் அனைவருக்கும் பொதுவாக வணக்கம் தெரிவித்து விட்டு அமைதியாக ஓரத்தில் நின்று கொண்டான்.  அவன் ராதேயை கண்டானோ இல்லையோ  அவரின் அருகில் கூட செல்லவில்லை. 

அவன் பேசவில்லை என்று ராதே தான் மருகினார் . ஆனால் பாமா, வசுதேவர் ,  மற்றும் லஷ்மி ராதேயை பற்றிக் கொண்டனர்.

இத்தனை வருடத்தில் இவர்களின் அன்பு மட்டும் மாறவேயில்லை. அதனை அங்குள்ள அனைவரும் கண்டு சந்தோஷத்தில் கண் கலங்கி நின்றனர்.

அச்சமயம் “அத்தை………… ” என்று கூவிய சத்தத்தில் அனைவரும் அரண்டு விட்டனர்.

சென்னை

அங்கு அபியும் நிவானும் ஒருவரை ஒருவர் அடித்து வெளுத்துக் கொண்டிருந்தனர். தான் வைக்கவில்லை நீதான் வைத்தாயா மருந்தை என்று கேட்டு கேட்டு அடித்துக் கொண்டிருந்தனர்.

பரத் தான் இருவரின் சண்டையை பிரிக்க இயலாவிடினும் இவர்கள் இருவரையும் ஏதோ ஏதோ செய்து தனியே தனியே அமர வைத்தான்.

“நெஜமா சொல்லுறேன் நான் பண்ணல ” என்று சத்தியம் செய்யாத குறையாக இருவரும் மாற்றி அதையே கூறிக் கொண்டிருந்தார்கள். அந்நேரம் தான் வெங்கடேஷன் உள்ளே வந்தார்.
கீர்த்தி☘️

ஐம்பதாவது பாகம் வந்துட்டேன். படித்துக்கொண்டிருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் நன்றி என்னை இவ்வளவு தூரம் செல்ல வைத்தமைக்கு !

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்